துருக்கி (Turkey) தனது F-4-Phantom விமானத்தை சிரியப் படையினர்22-06-2012இலன்று சுட்டு வீழ்த்தியதை ஒரு ஆக்கிரமிக்கும் செயலாக எடுத்துக் கொண்டு நேட்டோப் படைக் கூட்டமைப்பின் கூட்டத்தை அவசரமாகக் கூட்டியுள்ளது. நேட்டோவின் கூட்டம் 26/06/202இலன்று நடக்கவிருக்கிறது. துருக்கிய வெளிநாட்டமைச்சர் Ahmet Davutoglu ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர், அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர், பிரித்தானிய வெளிநாட்டமைச்சர், பிரெஞ்சு வெளிநாட்டமைச்சர், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் துறை உயர் அதிகாரி ஆகியோருடன் தனது விமானம் சுட்டு வீழ்தியதைப் பற்றி உரையாடியதுடன் நிற்கவில்லை, இரசிய, ஈரானிய வெளி நாட்டமைச்சர்களுடனும் தொடர்பு கொண்டுள்ளார்.
ஹிலரி கிளிண்டன், பிரித்தானிய வெளி நாட்டமைச்சர் வில்லியக் ஹேக் ஆகியோர் துருக்கிய விமானம் சுட்டு வீழ்த்தியமையைக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளனர்.
அமெரிக்கப் படைத்துறையின் உச்ச அதிகாரி மார்டின் டிம்ஸி துருக்கியின் படைத்துறை உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு துருக்கிய விமானம் சுட்டு வீழ்த்தியமை பற்றி கலந்துரையாடியுள்ளார்.
நேட்டோ ஒப்பந்தத்தின் நாலாம் பிரிவின் படி நேட்டோவின் கூட்டதைக் கூட்டிய துருக்கி ஒப்பந்தத்தின் ஐந்தாம் பிரிவின்படி நேட்டோ நாடுகள் ஒன்றிணைந்து சிரியாவின் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்ற நேட்டோ நாடுகளைக் கேட்கும் என்று எதிர் பார்க்கப் படுகிறது. துருக்கியப் பிரதமர் சிரியாவிற்கு ஒரு காத்திரமான பதிலடி கொடுக்க வேண்டும் என்று கருதுவதாகச் செய்திகள் வந்தன.
சிரியா மீது தாக்குதல் நடாத்துவதற்கான முன்னோடியாக சிரியா தனது மக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று மொரொக்கோ நாடு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில்2012 பெப்ரவரி மாதம் கொண்டு வந்த தீர்மானத்தை இரசியாவும் சீனாவும் தமது இரத்து (Veto) அதிகாரத்தைப் பாவித்துத் தடுத்தன. சிரியாவின் இரண்டாயிரம் மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறி ஐநா பாதுகாப்புச் சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இலங்கையில் ஒரு வாரத்தில் மட்டும் நாற்பதினாயிரம் அப்பாவிகள் கொல்லப்பட்ட போது இந்திய எதிர்ப்பின் நிமிர்த்தம் யாரும் ஐநா பாதுகாப்புச் சபையில் கொண்டு செல்லவில்லை. வில்லன் விஜய் நம்பியாரின் அறிக்கையும் நிலத்துக்கீழ் அறையில் இரகசியமாக ஆராயப்பட்டது.
தமக்குப் பிடிக்காத சர்வாதிகாரிகளைப் பதவியில் இருந்து அகற்றுவதை மேற்குலக நாடுகள் தம் தலையாய கடமையாகக் கொண்டுள்ளன. சிரியாவின் அதிபர் அல் அசாத் மேற்குலகால் வெறுக்கப்படும் ஒருவர். இவரைப் பதவியில் இருந்து அகற்ற மேற்குலக நாடுகள் விரும்புகின்றன. ஆனால் சிரியாவின் அதிபர் அல் அசாத் பதவியில் இருந்து விலக்கப்பட்டு மேற்குலகிற்கு சார்பான ஒருவர் அங்கு ஆட்சிக்கு வந்தால் அது அரபு நாடுகளில் கேந்திரோபாய சமநிலையை தமக்குச் சாதகமாக்கி விடும் என்று சீனாவும் இரசியாவும் கருதுகின்றன. இந்த பிராந்திய ஆதிக்க முரண்பாட்டின் விளைவாக அப்பாவி சிரிய மக்கள் கொல்லப் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
சிரியாவில் கிளர்ச்சிக்காரகளுக்கான பயிற்ச்சி மற்றும் படைக்கலன்கள் துருக்கியில் இருந்தே நடப்பதாக ஏற்கனவே சிரியா பலமுறை குற்றம் சுமத்தியுள்ளது. சிரிய எல்லையில் துருக்கி பல அத்து மீறல்களை நிகழ்த்தி வருவதாக சிரியா பல தடவை குற்றம் சாட்டியுள்ளது.
சிரியா தனது இன்னும் ஒரு விமானத்தில் தாக்குதல் நடாதியது என்று 25/6/2012இலன்று துருக்கி மீண்டும் அறிவித்தது
அண்மைக்காலமாக சிரியாவிற்கு எதிராக மேற்குலக நாடுகளின் இரகசியக் காய் நகர்த்தல்கள் மிகவும் தீவிரமாக நடந்து வருகின்றன என்பதை சிரிய விமானப் படை விமானிகள் ஒருவர் பின் ஒருவராக விமானங்களுடன் அமெரிக்க நேச நாடான ஜோர்தானுக்குத் தப்பிச் செல்வது எடுத்துக் காட்டுகிறது. அது மட்டுமல்ல பல சிரியப் படை உயர் அதிகாரிகள் சிரியாவில் இருந்து தப்பி துருக்கியில் தஞ்சமடைந்துள்ளனர். துருக்கி விமானச் சுட்டு வீழ்த்தலால் விமானிகள் உயிரிழக்க வில்லை. ஆனாலும் அது தீவிரமான ஒன்றாகக் கருதப்படுகிறது. சிரியா துருக்கிய விமானம் தனது கடற்பரப்பில் வந்தமையால்தான் சுட்டுவீழ்த்தப்பட்டது என்று சொல்கிறது. துருக்கிய விமானத்தைச் சாக்காக வைத்து நேட்டோப் படையினர் சிரியாவின் விமானங்களை முற்றாக அழித்து சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்த முயலலாம். சிரிய நோக்கிச் சென்ற இரசிய கப்பலை படைக் கலன்கள் ஏற்றிச் சென்றதாகக் கூறி பிரித்தானியா இடை மறித்துத் திருப்பி அனுப்பி விட்டது.
துருக்கிய விமானத்தைச் சுட்டு வீழ்த்தியமை நேட்டோவின் ஒப்பந்தத்தின் ஐந்தாம் பிரிவின் படி நேட்டோ நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து சிரியாமேல் தாக்குதல் நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப் போதுமான காரணம் அல்ல என்று சிலர் வாதாடுகின்றனர். துருக்கிய விமானச் சுட்டு வீழ்த்தலை சாட்டாக வைத்து சிரியாமீது நேட்டோ தாக்குதல் நடத்தாமல் போனாலும் சிரியாவிற்கு எதிரான ஒரு படை நடவடிக்கையை முன்னெடுக்க நேட்டோ தயாராகி வருகிறது என்பதையே இந்த விமானச் சுட்டு வீழ்த்தலைப் ஊதிப் பெரிதாக்குவது காட்டுகிறது. ஆனால் சீனாவும் இரசியாவும் லிபியாவில் விட்டுக் கொடுத்தது போல் சிரியாவிலும் விட்டுக் கொடுக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் சிரியாவில் அல் அசாத் பதவியில் இருந்து விலக்கப்பட்டால் மேற்குலக நாடுகளின் அடுத்த இலக்கு ஈரான் என்பதை சீனாவும் இரசியாவும் உணர்ந்து கொண்டுள்ளன.
Showing posts with label செய்தி. Show all posts

Tuesday, 26 June 2012
Tuesday, 29 May 2012
மஞ்சளின் மகிமை சொல்லும் அமெரிக்கப் பேராசிரியர்.
திருமணமான பெண்கள் தினமும் முகத்திற்கு மஞ்சள் பூசிக் குளிப்பது கணவனின் உதட்டால் தங்கள் முகத்திற்கு கிருமிகள் பரவாமல் இருக்க என்ற நம்பிக்க்கை காலம் காலமாக தமிழ் மக்களிடை இருந்து வருகிறது. மஞ்சள் கிருமிகளைக் கொல்லும் சாப்பாட்டில் சேர்த்தால் அது உடலில் உள்ள அதிலும் முக்கியமாகக் குடலில் உள்ள கிருமிகளைக் கொல்லும் என்று அமெரிக்க Oregon State University இன் பேராசிரியர் Adrian Gombart தெரிவித்துள்ளார்.
மஞ்சளின் இருக்கும் குர்குமின் என்னும் உட்பொருளே இந்த நல்ல காரியங்களைச் செய்கின்றது.
"Curcumin caused levels of the protein, cathelicidin anti-microbial peptide, to almost triple" என்பது Adrian Gombart என்னும் பேராசிரியரின் கருத்தாகும். அது மட்டுமல்ல Curcumin is also believed to have anti-inflammatory and antioxidant properties என்றும் சொல்கிறார் அப் பேராசிரியர்.
மஞ்சளின் இருக்கும் குர்குமின் என்னும் உட்பொருள் மூளைக்கு அமிலத்தன்மை பரவாமல் தடுக்கிறது இது ஞாபக சக்தியை அதிகரிக்கும் அத்துடன் வயோதிபர்கள் மத்தியில் வரும் மூளை அழுகல் என்னும் நோயையும் தடுக்கிறது. நல்ல பயன் பெறுவதற்கு குறைந்தது வாரத்தில் மூன்று நாட்களாவது உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக மஞ்சளை தினசரி உணவில் கலந்தும் அழகு சாதனப் பொருளாகவும் பாவித்து வருகின்றனர். அத்துடன் அதை ஒரு மங்களமான பொருளாகவும் கருதுகின்றனர்.
தமிழ் மருத்துவர்கள் மஞ்சளில் இருந்து பெறும் எண்ணெயை சிறந்த கிருமிக் கொல்லியாகப் பாவித்து வருகின்றனர். அவர்களின் கருத்துப்படி பெண்களின் பிறப்பு உறுப்பில் தோன்றும் கிரந்திப் புண்ணுக்கு, மஞ்சளை அரைத்துப் பூசினால், புண் சுகமாகும். பெண்களுக்கு பிரசவத்தின் பின்னர் ஏற்படும் வயிற்று வலி, மாதவிடாய்ச் சிக்கலுக்கு மஞ்சள் பொடி சாப்பிடுவதால், நல்ல பலன் கிடைக்கிறது.மஞ்சளைச் சுட்டு எரித்து அதில் எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால், ஜலதோஷம், கொடிய தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை குணமாகும். மஞ்சள் புகையை வாய் வழியாக இழுத்தால், மதுபோதை விலகும்.
உணவு வகைக்கள் கெட்டுப் போகாமல் இருக்கவும் மஞ்சள் உதவும். அதிலும் முக்கியமாக இறைச்சிக் கறிகள் கெட்டுப் போகாமல் இருக்க மஞ்சள் உதவும்.

Saturday, 5 May 2012
கணவன் இறப்பதை SKYPEஇல் பார்த்த மனைவி
ஆப்கானிஸ்த்தானில் நிலை கொண்டிருக்கும் ஐக்கிய அமெரிக்காவின் படையில் மருத்துவப் பிரிவில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு அதிகாரி அமெரிக்காவில் இருக்கும் தனது மனைவியுடன் SKYPEஇல் காணொளி மூலமாக உரையாடிக் கொண்டிருக்கும் போது இறந்துள்ளார். Capt. Bruce Kevin Clark என்பவருக்கே இந்த பரிதாபகர இறப்பு நடந்துள்ளது.
குடும்பத்தில் மிகுந்த அக்கறையுடையவரானவர் 43 வயதான Capt. Bruce Kevin Clarkஎன்று அவரின் மனைவியில் சகோதரர் தெரிவித்துள்ளார். படையில் சேவை செய்து கொண்டிருக்கும் போது பல விருதுகளையும் பதக்கங்களையும் Capt. Bruce Kevin Clark பெற்றிருந்தார்.
![]() |
| குடும்பத்துடன் Capt. Bruce Kevin Clark |
Capt. Bruce Kevin Clark இன் இறப்புத் தொடர்ப்பாக அமெரிக்கப் படையினர் தீவிர விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.
Monday, 30 April 2012
பிரித்தானியாவில் அதி உயர் செல்வந்தராக ஒரு இந்தியர்
பிரித்தானியாவின் செல்வந்தர்களின் பட்டியலில் முதலாவது இடத்தை ஒரு இந்தியர் பிடித்திருக்கிறார். பிரித்தானியாவில் எழுபத்து ஏழு பேர் பில்லியன் பவுண்கள் சொத்துக்களுக்கு மேல் வைத்திருக்கிறார்கள். பிரித்தானியப் பொருளாதாரம் பல நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையிலும் இவர்கள் தமது செல்வங்களைப் பெருக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
அறுபத்தி ஒரு வயதான இந்தியரான லக்ஷ்மி மிட்டல் பிரித்தானியாவின் செல்வந்தர்களில் பட்டியலில் முதலாம் இடத்தில் இருக்கிறார். கடந்த ஏழுஆண்டுகளாக லக்ஷ்மி மிட்டல் பிரித்தானியாவின் முதலாவது செல்வந்தராக இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு கடந்த ஆண்டு 27% வீழ்ச்சியடைந்த போதிலும் இவர் முதலாமிடத்தில் இருந்து அசையவில்லை.
சண்டே ரைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செல்வந்தர்கள் பட்டியலில் முதல் 10 பேர்:
1 - Lakshmi Mittal and family - £12.7bn.
2 - Alisher Usmanov - £12.3bn.
3 - Roman Abramovich - £9.5bn.
4 - Sri and Gopi Hinduja - £8.6bn.
5 - Leonard Blavatnik - £7.58bn.
6 - Ernesto and Kirsty Bertarelli - £7.4bn.
7 - The Duke of Westminster - £7.35bn.
8 - David and Simon Reuben - £7.08bn.
9 - John Fredriksen and family - £6.6bn.
10 - Galen and George Weston and family - £5.9bn.

Tuesday, 17 April 2012
ஆப்கான் தாக்குதல்கள் உணர்த்துவது என்ன?
ஏப்ரல் 15-ம் திகதி ஆப்கானிஸ்த்தானில் பல நகரங்களில் நன்கு ஒருங்கிணத்து
நடாத்திய தாக்குதல்கள் பல செய்திகளைக் கூறுவதுடன் பல சந்தேககங்களையும்
கிளப்புகின்றன. 9-11எனப்படும் 2001 செம்படம்பர் 11-ம் திகதி அமெரிக்காவில்
நடந்த இரட்டைக் கோபுரத்
தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்காவின் உளவுத் துறையான சிஐஏயில் பிஏடி(PAD)
எனப்படும் பாக்கிஸ்த்தான் ஆப்கானிஸ்தான் பிரிவு உருவாக்கப்பட்டது.
இதற்கிணங்க அமெரிக்க வெளியுறவுத்துறையும் ஆப்-பாக் கொள்கை ஒன்றை வகுத்துக்
கொண்டது. அமெரிக்கா பாக்கிஸ்த்தானுடன் தனது உறவையும் புதுப்பித்துக்
கொண்டது. சிஐஏயின் பயங்கரவாத எதிர்ப்பு நிலையமும் பிஏடியும் இணைந்து
ஆப்கானிஸ்தானில் பல அல் கெய்தா எதிர்ப்பு நடவடிக்க்கைகள வெற்றிகரமாகச்
செய்து முடித்தன.
வெறும் உளவு நிறுவனமாக இருந்து கொண்டு முதலாளித்துவக் கட்டமைப்புக்கு எதிராகச் செயற்படும் அரசுகளைக் கவிழ்த்தல் ஆட்சியாளர்களைக் கொல்லுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சிஐஏ 9-11இற்குப்பின்னர் ஒரு படைப்பிரிவையும் தனக்கென அமைத்துக் கொண்டது. அமெரிக்காவின் படைத்துறையினர் அமெரிக்க சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அமெரிக்கப் பாராளமன்றத்திற்கு பொறுப்புக் கூறவும் வகை சொல்லவும் கடப்பாடுடையவர்கள். ஆனால் சிஐஏயின் படைப்பிரிவு அப்படி அல்ல. அப்படி ஒரு பிரிவு இருப்பதாக சிஐஏ பகிரங்கமாக சொல்வதுமில்லை. அமெரிக்க அரசைப் பொறுத்தவரை அப்படி ஒரு படைப்பிரிவு இல்லை என்றே கூறமுடியும். இதனால் சிஐஏயின் படைப்பிரிவு தன்னிச்சையாக பயங்கர நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. சிஐஏ உலகின் பல பாகங்களிலும் ஆளில்லாப் விமானத் தளங்களை அமைத்து தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராகத் தாக்குதல்களில் ஈடுபடுகிறது.
சிஐஏயின் ஆளில்லா விமானங்கள்
சிஐஏயின் படைப் பிரிவினர் ஆளில்லாப் போர் விமானங்கள் பலவற்றைத் தம்வசம் வைத்திருக்கின்றன. இவை உண்மையில் கொல்லும் எந்திரங்கள். ஆப்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானிலும் அல் கெய்தாவிற்கு எதிரான வெற்றியில் இந்த ஆளில்லாப் போர் விமானங்களுக்குப் பெரும் பங்கு உண்டு. சிஐஏ மேலும் நவீன மயப்படுத்தப்பட்ட ஆளில்லாப் போர் விமானங்களை உற்பத்தி செய்வதற்கான ஆராச்சிக்குப் பெரும் பணம் செலவழித்துள்ளது. ஆப்-பாக் எல்லையில் உள்ள அல் கெய்தாவினர் பற்றிய தகவல்களை அறிந்து அதை அமெரிக்கப்படியினருக்கு அறிவித்து அவர்கள் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட முன்னர் அல் கெய்தாவினர் நகர்ந்து விடுவார்கள். தாக்குதலுக்கான பெரிய விமானங்கள் தளத்தில் இருந்து கிளம்பும் தகவல் அல் கெய்தாவினருக்குச் சென்று விடும். சிஐஏ தனது சொந்த ஆளில்லா விமானங்கள் மூலம் உடனடித் தாக்குதல்களை மேற் கொள்ளலாம். சிஐஏயின் ஆளில்லாப் போர்விமானங்கள் இதுவரை இரண்டாயிரத்திற்கும் அதிகமான அல் கெய்தா உறுப்பினர்களைக் கொன்றுவிட்டன. அல் கெய்தாவில் இணைபவர்களிலும் பார்க்க அதிகமானவர்களைத் தாம் கொல்கிறோம் என்று சிஐஏ பெருமைப்பட்டுக் கொள்கிறது. கடந்த ஒரு வருடமாக யேமனிலும் சிஐஏயின் ஆளில்லா விமானங்கள் பல தாக்குதல்களை மேற் கொண்டன. ஆப்கானிஸ்த்தானிலும் பாக்கிஸ்தானிலும் சிஐஏ தளங்களை அமைத்து இந்த ஆளில்லா விமானங்களை இயக்குகின்றது. சிஐஏயின் படைப்பிரிவினர் பாக்கிஸ்தான் அரசுக்கோ படைத்துறைக்கோ தெரியாமல் அங்கு பல தாக்குதல்கள், கைதுகள், கடத்தல்கள், கொலைகள் பலவற்றைச் செய்கின்றனர். இதன் உச்சக்கட்டம்தான் பில் லாடன் கொலை. அதைத் தொடர்ந்து இன்னொரு அல் கெய்தா தலைவர் அன்வர் அல் அவ்லாக்கியும் கொல்லப்பட்டார். பின்னர் அதியா அப் அல் ரஹ்மான் என்ற ஒரு முக்கிய அல் கெயதா தலைவரும் கொல்லப்பட்டார்.
பின் லாடன் கொல்லப்பட்ட பின்னர் 2011-ம் ஆண்டு ஜூலையில் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏயின் முன்னாள் தலைவரும் தற்போதைய அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலருமான லியோன் இ பானெற்றா பாக்கிஸ்த்தான் பயணம் மேற் கொண்டிருந்தபோது "We are within reach of strategically defeating al-Qaeda" தந்திரோபாய ரீதியில் நாம் அல்-கெய்தாவைத் தோற்கடிக்கும் நிலையை அண்மித்து விட்டோம்" என்றார். ஆனால் ஏப்ரல் 15 திகதி பாக்கிஸ்தானில் நடந்த தாக்குதல்கள் அவரது கூற்றை மறுதலிக்கின்றன.
தலிபான் / ஹக்கானி கூட்டமைப்பு
ஆப்கானிஸ்த்தானில் ஏப்ரல் 15-ம் திகதி நடந்த தாக்குதல்கள் தலிபான் அமைப்பும் ஹக்கானி அமைப்பும் இணைந்து நடாத்திய தாக்குதல்கள் ஆகும். ஆப்கானிஸ்த்தானில் கட்டத் தொடங்கி பாதியில் நிற்கும் பல மாடிக் கட்டிடங்கள் பல உண்டு. அவற்றை தீவிரவாதிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். பெண்கள் போல் பார்தா அணிந்து பல நகரங்களுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவினர். ஆங்காங்கு இருக்கும் சோதனைச் சாவடிகளுக்குள் அவசரமாக போக வேண்டும் என்று ஏதாவது சாட்டுக்களைச் சொல்லி காவலாளியின் கையில் சில பண நோட்டுக்களைத் திணித்துவிட்டு ஆப்கானிஸ்தானுக்குள் எங்கும் செல்லலாம். பாதியில் நிற்கும் பல் மாடிக் கட்டிடங்களில் அவர்கள் நிலை எடுத்துக் கொண்டு உழங்கு வானூர்தித் தாக்குதல்களுக்கும் கனரகத் துப்பாக்கித் தாக்குதல்களுக்கும் எதிராக சுமார் 20 மணித்தியாலங்கள் தாக்குப் பிடித்தனர். மாடிக்கட்டிடத்தின் தூண்களுக்குப் பின்னால் மறைந்திருந்து கொண்டு எறிகணை செலுத்திகள் மூலம் rocket propelled grenades தமது தாக்குதல்களை மேற்கொண்டனர். ஞாயிறு மதியத்திற்கு முன்னர் தொடங்கிய தாக்குதல்கள் திங்கள் காலைவரை தொடர்ந்தது.
ஆப்கான் தாக்குதல்கள் உணர்த்துபவை:
1. இசுலாமியத் தீவிரவாதம் முறியடிக்கப்பட முடியாத ஒன்று. அது பாலஸ்த்தீனம் முதல் பாக்கிஸ்த்தான் வரை பல உலகப் பிரச்சனைகளைத் தன்னுள் கொண்டுள்ளது. அவை சுமூகமாகத் தீர்க்காமல் திவிரவாதம் ஒழியாது.
2. உலகின் மிகப் பெரிய உளவுத் துறையாலும் தீவிரவாதிகளின் தாக்குதலை எதிர்வு கூறமுடியாது. அல்லது இப்படி ஒரு தாக்குதல் ஆப்கானிஸ்த்தான் அரசை மேலும் மேற்குலகைச் சார்ந்து நிற்கச் செய்யும் என்பதற்காக அமெரிக்கா இத்தாக்குதல்கள் நடப்பதைத் தடுக்காமல் இருந்ததா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
3. இசுலாமியத் தீவிரவாதிகள் தாம் பலமிழந்து விடவில்லை என்பதை தமது ஆதரவாளர்களுக்கு உணர்த்த வேண்டிட அவசியம் ஏற்பட்டுள்ளது
4. பல பின்னடைவுகளுக்கு மத்தியிலும் அல் கெய்தா இனித் தாக்குப் பிடிக்குமா என்பது சந்தேகம் என்று எண்ணத் தோன்றும். ஆனால் அல் கெய்தா தனது உத்திகளை மாற்றிக் கொண்டுள்ளது. அண்மைக் காலமாக அல் கெய்தா இயக்கம் தனது நடவடிக்கைகளை மட்டுப் படுத்திக் கொண்டது. ஒரு தீவிரவாத கரந்தடி இயக்கத்திற்கு எப்போது பதுங்க வேண்டும் என்று தெரியும். அல் கெய்தாவும் தலிபானும் தாம் பதுங்கிக் கொண்டு பாக்கிஸ்தானின் செல்லப் பிள்ளையாகக் கருதப்படும் ஹக்கானி இயக்கத்தை ஆப்க்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தத் இவ்விரு இயக்கங்களும் தூண்டின. ஹக்கானியை இந்தியா ஆப்கானிஸ்த்தானில் காலுன்றுவதைத் தடுக்க பாக்கிஸ்த்தான் பயன்படுத்துவதாகக் கருதப்படுகிறது.
5. பல நேட்டோப் படைகளின் நிலைகளிலும் தூதுவரகங்களிலும் தாக்குதல்கள் நடாத்தப்பட்ட போதும் நேட்டோப் படைகளை சேர்ந்த எவரும் கொல்லப்படவில்லை. அத்துடன் பாரிய இழப்புக்கள் எதுவும் நடக்கவில்லை. இதனால் நடந்த தாக்குதல் அல் கெய்தா/ஹக்கானியின் தாக்கும் திறனில் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
6. இனிப் பாகிஸ்த்தானும் அமெரிக்காவும் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராக மேலும் நெருங்கிச் செயற்படுவார்கள்
7. ஆப்கானிஸ்த்தானுக்குள் பெருமளவு ஆயுதங்களை தீவிரவாதிகளால் கடத்திச் செல்ல முடியும்.
8. ஹக்கானி அமைப்பு பெரும் வளர்ச்சி கண்டு வருகிறது.
9. நேட்டோப் படைகள் விலகிய பின்னர் ஆப்கானிஸ்த்தானை இசுலாமியத் தீவிரவாத்கள் கைப்பற்றலாம்.
தொடர்புடைய பதிவு: மீண்டும் புதிய உத்தியுடன் மீசையை முறுக்கும் அல் கெய்தா/தலிபான் இயக்கங்கள்

Thursday, 12 April 2012
ஆழிப்பேரலை(சுனாமி) ஏன் உருவாகவில்லை?
நேற்று (11-04-2012) நடந்த பூமி அதிர்வு ஏன் சுனாமி எனப்படும் ஆழிப்பேரலைய உருவாக்கவில்லை என்பதற்கு விஞ்ஞானிகள் விளக்கம் கொடுத்துள்ளனர். 2004-ம் ஆண்டு 9.1 ரிச்சர் அளவு கோலில் நிகழ்ந்த பூமி அதிர்வு 230,000 மக்களைப் பலி கொண்டது. அதில் இந்தோனெசியாவின் ஆசே மாகாணத்தில் மட்டும் 170,000 கொல்லப்பட்டனர்.
2004இல் நடந்த அதிர்வு கடலடியின் கீழ் 14 மைல் ஆழத்தில் நிகழ்ந்தது. 2012 இல் 10 மைல் ஆழத்தில் நடந்தது. 2012 அதிர்வில் எவரும் கொல்லப்பட்டதாகத் தகவல் இதுவரை இல்லை. ஆனால் 2012 அதிர்வு பல நாடுகளில் உணரப்பட்டது.
நேற்று உள்ளூர் நேரம் பிற்பகல் 2.38 இற்கு இந்தோனொசியாவில் நிகழ்ந்த பூமி அதிர்வு 2004இல் நிகழ்ந்த பூமி அதிர்விலும் வித்தியாசமானது.
நிகழ்ந்த இடம் வித்தியாசமானது
2004-ம் ஆண்டு நிகந்த பூமி அதிர்வு subduction zoneஇல் நிகழ்ந்தது. subduction zone என்பது ஒரு பூமித் தகட்டின்(tectonic plate) ஓரம் இன்னொரு பூமித் தகட்டின் ஓரத்தின் கீழ் இருந்து அழுத்தம் கொடுக்கும் பிராந்தியம் ஆகும். 2004 அதிர்வு நடந்தஹ் subduction zoneஇன் பரப்பளவு அமெரிக்க கலிபோர்ணியா மாநிலத்திற்கு ஈடானது. கடல் நீருக்கு அடியில் கீழ்த் தகடு மேலுள்ள தகட்டை மேல் நோக்கித் தட்டும் போது ஏற்படும் அதிர்வில் கடல் நீர் பெரும் அளவில் மேல் நோக்கித் தள்ளப்படும். இப்படி மேல் நோக்கித் தள்ளப்படும் நீர் கடல் மேற்பரப்பில் பாரிய அலையை உருவாக்கும். இவ் அலை சுனாமி எனப்படும் ஆழிப் பேரலையாகும். இது கரையில் மோதும் போது பெரும் அழிவு ஏற்படும். நேற்று நிகழ்ந்த அதிர்வு subduction zoneஇல் இருந்து 100 மைல்(160கி.மீ) தொலைவில் நிகழ்ந்தது. இதனால் இது ஒரு பூமித் தகட்டுக்குள்(intraplate) நிகழ்ந்த அதிர்வாகும். இரு தடுகள் மோதுப்படுகையில் ஏற்படும் அதிர்விலும் பார்க்க ஒரு தகடு தனக்குள் ஏற்படுத்தும் அதிர்வு தாக்கம் குறைந்தது.
2004 இல் நடந்த அதிர்வு இலங்கை போன்ற நாடுகளில் உணரப்படவில்லை. அது இந்தியத் தகட்டின் ஓரத்தில் நடந்தது. 2012இல் நடந்தது இந்தியத் தகட்டிலேயே நடந்ததால் அந்தத் தகட்டில் உள்ள நாடுகளில் அதிர்வு உணரப்பட்டது.
2004இல் நடந்த அதிர்வு 2012இல் நடந்த அதிர்வுடன் ஒப்பிடுகையில் ஆறு மடங்கு சக்தியை வெளிவிட்டது.
பக்கவாட்டு உரசலால் வரும் அதிர்வு ( strike-slip event)
நேற்று நடந்த அதிர்வில் ஏற்பட்ட ஆக கூடிய அளவு அலையின் உயரம் மூன்றடி மட்டுமே. இது இந்தியத் தகட்டின் மேற்பரப்பில்(crust) உள்ள குறைபாட்டால் தகட்டில் ஒரு பக்கவாட்டு அசைவு ஏற்பட்டதால் உருவான அதிர்வே நேற்று நடந்தது. இந்த அதிர்வு 2004இல் ஏற்பட்ட அதிர்விலும் சிறியதே.
ஒரு தகட்டின் மேற்பகுதியில் உள்ள பாறைகள் தொடர்ச்சியாக ஒரே சீரான உறுதியுடன் இருக்காமல் அவை வேறு வேறு உறுதிப்பாட்டுடன் இருப்பதால் தகட்டின் மேற்பகுதியில் குறைபாடு ஏற்படும் இதனால் தகட்டின் இருபகுதிகள் பக்கவாட்டாக ஒன்றுடன் ஒன்று உரசிக் கொள்ளும். இந்த உரசல் பெருமளவு கடல் நீரை மேல் நோக்கித் தள்ளாது. இதனால் பக்கவாட்டு உரசலால் பாதிப்புக் குறைவு. இந்தப் பக்கவாட்டு உரசல் தகட்டின் மேற்பகுதியில் ஒரு அதிர்வு அலையை(நீரலை அல்ல) இயக்கத்தை உருவாக்கும். இந்த அதிர்வு அலை நீண்டதூரம் வரைச் செல்லும். இது lateral movement எனப்படும். பக்கவாட்டு அசைவு.
சுனாமி உருவாகும் அதிர்வு :
மேல் நோக்கித்தள்ளப்படுவது vertical movement எனப்படும்.
சுனாமி உருவாக்காத அதிர்வு
பூமித் தகடுகளின் ஓரத்தில் நடக்காமல் தகடுகளின் மத்தியில் நடந்த பூமி அதிர்வுகளில் நேற்று நடந்த அதிர்வு இது வரை அ|றியப்பட்ட அதிர்வுகளில் பாரியது எனப்படுகிறது. இது ஒரு வித்தியாசமான அதிர்வாக இருக்கலாம் எனவும் சிலர் கருதுகின்றனர்.
நேற்று நடந்த ஒரு சில நிமிடங்களுக்குள் U.S. Pacific Tsunami Warning Center சுனாமி வருவதைக் கண்காணிக்க வேண்டும் என்று அறிவித்து விட்டது. இலங்கை இந்தியா பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள சுனாமி எச்சரிக்கைக் கருவிகள் சுனாமி எச்சரிக்கையை உணர்த்தின.
2004இல் நடந்த அதிர்வு கடலடியின் கீழ் 14 மைல் ஆழத்தில் நிகழ்ந்தது. 2012 இல் 10 மைல் ஆழத்தில் நடந்தது. 2012 அதிர்வில் எவரும் கொல்லப்பட்டதாகத் தகவல் இதுவரை இல்லை. ஆனால் 2012 அதிர்வு பல நாடுகளில் உணரப்பட்டது.
நேற்று உள்ளூர் நேரம் பிற்பகல் 2.38 இற்கு இந்தோனொசியாவில் நிகழ்ந்த பூமி அதிர்வு 2004இல் நிகழ்ந்த பூமி அதிர்விலும் வித்தியாசமானது.
நிகழ்ந்த இடம் வித்தியாசமானது
2004-ம் ஆண்டு நிகந்த பூமி அதிர்வு subduction zoneஇல் நிகழ்ந்தது. subduction zone என்பது ஒரு பூமித் தகட்டின்(tectonic plate) ஓரம் இன்னொரு பூமித் தகட்டின் ஓரத்தின் கீழ் இருந்து அழுத்தம் கொடுக்கும் பிராந்தியம் ஆகும். 2004 அதிர்வு நடந்தஹ் subduction zoneஇன் பரப்பளவு அமெரிக்க கலிபோர்ணியா மாநிலத்திற்கு ஈடானது. கடல் நீருக்கு அடியில் கீழ்த் தகடு மேலுள்ள தகட்டை மேல் நோக்கித் தட்டும் போது ஏற்படும் அதிர்வில் கடல் நீர் பெரும் அளவில் மேல் நோக்கித் தள்ளப்படும். இப்படி மேல் நோக்கித் தள்ளப்படும் நீர் கடல் மேற்பரப்பில் பாரிய அலையை உருவாக்கும். இவ் அலை சுனாமி எனப்படும் ஆழிப் பேரலையாகும். இது கரையில் மோதும் போது பெரும் அழிவு ஏற்படும். நேற்று நிகழ்ந்த அதிர்வு subduction zoneஇல் இருந்து 100 மைல்(160கி.மீ) தொலைவில் நிகழ்ந்தது. இதனால் இது ஒரு பூமித் தகட்டுக்குள்(intraplate) நிகழ்ந்த அதிர்வாகும். இரு தடுகள் மோதுப்படுகையில் ஏற்படும் அதிர்விலும் பார்க்க ஒரு தகடு தனக்குள் ஏற்படுத்தும் அதிர்வு தாக்கம் குறைந்தது.
![]() |
| 2004 அதிர்வு இந்தியத் தகடும் ஒஸ்ரேலியத் தகடும் சந்திக்கும் இடத்தில் நடந்தது. 2012 அதிர்வு இந்தியத் தகட்டில் நடந்தது. |
2004இல் நடந்த அதிர்வு 2012இல் நடந்த அதிர்வுடன் ஒப்பிடுகையில் ஆறு மடங்கு சக்தியை வெளிவிட்டது.
பக்கவாட்டு உரசலால் வரும் அதிர்வு ( strike-slip event)
நேற்று நடந்த அதிர்வில் ஏற்பட்ட ஆக கூடிய அளவு அலையின் உயரம் மூன்றடி மட்டுமே. இது இந்தியத் தகட்டின் மேற்பரப்பில்(crust) உள்ள குறைபாட்டால் தகட்டில் ஒரு பக்கவாட்டு அசைவு ஏற்பட்டதால் உருவான அதிர்வே நேற்று நடந்தது. இந்த அதிர்வு 2004இல் ஏற்பட்ட அதிர்விலும் சிறியதே.
![]() |
| பக்கவாட்டு உரசல் |
சுனாமி உருவாகும் அதிர்வு :
![]() |
| இரு தகடுகள் தண்ணீருக்குக் கீழ் சந்திக்கின்றன. |
![]() |
| ஒரு தகடு மற்றத் தக்கட்டை மேல் நோக்கி அழுத்துகிறது. அதனால் அதிர்வு உருவாகிறது |
![]() |
| அதிர்வு மேல் நோக்கி கடல் நீரைத் தள்ளுகிறது |
![]() |
| மேல் நோக்கித் தள்ளப்பட்ட நீர் ஆழிப் பேரலையாகிறது. |
மேல் நோக்கித்தள்ளப்படுவது vertical movement எனப்படும்.
சுனாமி உருவாக்காத அதிர்வு
பூமித் தகடுகளின் ஓரத்தில் நடக்காமல் தகடுகளின் மத்தியில் நடந்த பூமி அதிர்வுகளில் நேற்று நடந்த அதிர்வு இது வரை அ|றியப்பட்ட அதிர்வுகளில் பாரியது எனப்படுகிறது. இது ஒரு வித்தியாசமான அதிர்வாக இருக்கலாம் எனவும் சிலர் கருதுகின்றனர்.
நேற்று நடந்த ஒரு சில நிமிடங்களுக்குள் U.S. Pacific Tsunami Warning Center சுனாமி வருவதைக் கண்காணிக்க வேண்டும் என்று அறிவித்து விட்டது. இலங்கை இந்தியா பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள சுனாமி எச்சரிக்கைக் கருவிகள் சுனாமி எச்சரிக்கையை உணர்த்தின.
Wednesday, 11 April 2012
சுனாமிப் புரளிகளை நம்ப வேண்டாம்
பண்டா ஆசேயில் இருந்து 308மைல் தொலைவில் 20.5மைல் ஆழத்தில் ஒரு பூமி அதிர்வு ஏற்பட்டது. இதன் தாக்கம் இலங்கை வரை உணரப்பட்டது. இந்தியாவில், சென்னை மாவட்டத்தில் பல இடங்களில் இந்நில நடுக்கத்தினை
உணர்ந்ததால் அனைத்துப் பணிமனைகளும் மூடப்பட்டன.
The quake struck 308 miles (500 km) southwest of the city of Banda Aceh, on the northern tip of Indonesia's Sumatra island, at a depth of 20.5 miles (33 km), the U.S. Geological survey said.
இதைத் தொடர்ந்து பசிபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் ஒரு சுனாமியையிட்டுக் கவனமாக இருக்கும் படி அறிவிப்பு விட்டது. பல ஊடகங்கள் இதை சுனாமி எச்சரிக்கை என திரிபு படுத்தி விட்டன.
சுனாமி அவதானிப்பிற்கும் சுனாமி எச்சரிக்கைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. A tsunami watch means there is the potential for a tsunami, not that one is imminent.
முதல் வந்த செய்தி: The first 8.6-magnitude quake off Aceh province, hours earlier, spawned a wave around 30 inches (80 centimeters) high but caused no serious damage. Two hours after the quake hit, however, there was no sign of the feared wave. Damage also appeared to be minimal.
நடந்தது ஒரு பக்கவாட்டு அதிர்வே மேல் நோக்கிய அதிர்வு அல்ல என அமெரிக்காவில் இருந்து அறிவிக்கப்பட்டது. மேல் நோக்கிய அதிர்வு மட்டுமே சுனாமியைக் கொண்டு வரும்.
இந்தோனொசியாவில் 30 செண்டி மீட்டர் அலை வந்ததை பல ஊடகங்கள் இந்தோனொசியவைச் சுனாமி தாக்கியது என்று எழுதின. இதுவரை எவரும் கொல்லப்படவுமில்லை, எங்கும் கட்டிடங்கள் உடைந்ததாகச் செய்திகளும் வரவில்லை.
அந்த்மான் தீவில் வெறும் 35செண்டி மீட்டர் உயர் அலை ஒன்று வந்தது. பிலிப்பைஸ் சுனாமி இல்லை என்றது. தொடர்ந்து இந்தோனொசியாவும் சுனாமி இல்லை என்றது. இவ்விரு நாடுகளும் அதிர்வு நடந்த இடத்திற்குப் பக்கதில் உள்ள நாடுகள். இவை சுனாமி இல்லை என்று அறிவித்த பின்னரும்
இந்தியாவிலும் இலங்கையிலும் ஊடகங்கள் தொடர்ந்து சுனாமி என்று ஊளையிட்டுக் கொண்டிருந்தன. 5 மணிக்கு தமிழ்நாட்டிற்கும் 6 மணிக்கு இலங்கையையும் சுனாமி அலைகள் தாக்கும் என ஊடகங்கள் அறிவித்துக் கொண்டிருந்தன.
Latest news:
The earthquake’s movement was horizontal, not vertical, and caused no apparent movement of the sea floor, which is what triggers tsunamis, Susanne Sargeant, a seismologist with the British Geological Survey (BGS) told Agence France-Presse.“We’ve had two blocks rubbing together, it’s called a strike-slip earthquake,” Sargeant said.“That means there hasn’t been any displacement of the sea floor. Although an earthquake of this magnitude has the potential to cause a large tsunami, the fact that we haven’t seen any drop of the sea floor, which is what generates the wave, it looks like the possibility of a tsunami being generated is low.”
Kevin McCue, director of the Australian Seismological Centre, said the “predominantly strike-slip” movement suggested “any tsunami would be small and local.” The US Geological Survey (USGS) said an 8.6-magnitude earthquake struck off the coast of Sumatra at 2:38 p.m. (0838 GMT) at a depth of 33 kilometers (14.2 miles).
Mok Hing-yim, senior scientific officer at the Hong Kong Observatory, said a “minor tsunami” of 31 centimeters, or about one foot, in height had been reported at Sabang, on the coast of Indonesia.
“It’s not very significant, but we cannot ignore that there will be some higher tsunami along the coast of Indonesia. The reading indicated that a tsunami has been generated,” Mok said. Geoscience Australia specialist Daniel Jaksa said “there’s definitely tsunami signals reaching the Sumatran coast.” “Off the coast off Indonesia at the moment there’s 50 centimeters,” or 20 inches, he said.
பசுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் முன்பு வெளிவிட்ட சுனாமிக் கண்காணிப்பையும் திரும்பப் பெற்றுள்ளது: The Pacific Tsunami Warning Centre cancelled the watch for most areas of the Indian Ocean about four hours after the first quake. It was still in effect for Indonesia, India, the Maldives, Sri Lanka and the island territory of Diego Garcia.
விடுதலைப் புலிகளின் கப்பல்களின் நடமாட்டத்தை அவதானித்து இலங்கைக்குப் போட்டுக் கொடுத்த இந்தியச் செய்மதிகளால் பாரிய அலைகளை அவதானிக்க முடியாதா?

Thursday, 5 April 2012
கூகிள்: மூக்குக் கண்ணாடிக்குள் கணனித் திரை
மூக்குக் கண்ணாடிக்குள் மின்னஞ்சல், கூகிள் தேடு பொறி, காணொளி அரட்டை, வழிகாட்டி(GPS) வானிலை அறிக்கை இன்னும் பல அம்சங்களை இணைத்து அதை ஒரு கணனித் திரைபோல ஆக்குகிறது கூகிள் நிறுவனம். Google X எனப்படும் மூக்குக் கண்ணாடியைக் கூகிள் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அதில் செய்யப்பட வேண்டிய அபிவிருத்திகள் பற்றி பொது மக்களிடமிருந்து அபிப்பிராயம் கோருகிறது கூகிள்.
கூகிள் வெளியிட்டுள்ள காணொளியைக் காண கீழே சொடுக்கவும்:
![]() | ||
| கண்ணாடிக்குள் காணொளி மூலமாக உங்கள் நண்பர்களுடன் உரையாடலாம் |
![]() |
| உங்கள் நண்பர் எங்கு இருக்கிறார் என்பது உங்கள் மூக்குக் கண்ணாடியில்......தி.நகரில் கடைத்தெருக்களில் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் தொலைத்தால் தேடிப் பிடிக்க பெரிய உதவியாக இருக்கும். |
![]() |
| ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குச் செல்லும் வழிகாட்டி..... |
![]() |
| கண்ணாடிக்குள் கால நிலை. |
கூகிள் வெளியிட்டுள்ள காணொளியைக் காண கீழே சொடுக்கவும்:
Tuesday, 13 December 2011
ஈரான் கைப்பற்றிய அமெரிக்க ஆளில்லா விமானம் - அமெரிக்காவிற்கு பேரிழப்பில்லையாம்.
2011-ம் ஆண்டின் இறுதி மாதத்தை ஆக்கிரமித்த செய்தி அமெரிக்க ஆளில்லா விமானமான RQ-170 Sentinel ஈரான் கைப்பற்றியமையே. விமானம் சுட்டுவீழ்த்தப் பட்டதா அல்லது தரையிறக்கப்பட்டதா என்ற கேள்விகளுடன் இதில் சீனாவும் சம்பந்தப்பட்டுள்ளதா என்றா கேள்வியும் இணைந்து இருக்கிறது. Lockheed Martin நிறுவனத்தின் தயாரிப்பான RQ-170 Sentinel ஆளில்லா விமானத்தின் உயர் தர தொழில்நுட்பம் ஈரான் கைகளை மட்டுமல்ல அமெரிக்காவிற்கு சவாலாக விளங்கும் இரசியா சீனா போன்ற நாடுகளின் கைகளைப் போய்ச் சேரக்கூடும்.
RQ-170 Sentinel இன் சிறப்புத் தன்மைகள்:
1. தாழ அவதானிக்கும்(low observable) திறன்.
2. தாக்குதல் அணிக்கு இலக்குகள் பற்றி உடன் தகவல்கள் வழங்கும் திறன்
3. எதிரிகளின் ராடர்களிற்கு புலனாகாத திறன்(stealth)
4. உயர்தர உணரிகள்(Sensors)
5. செய்மதித் தொடர்புத் தொழில் நுட்பம்(Satcom or satellite communication)
இந்த RQ-170 Sentinel ஆளில்லா விமானங்கள் அமெரிக்க உளவுத் துறையான சிஐஏயினால் 01-09-2005இல் இருந்து பாவிக்கப்பட்டு வருகின்றன.
பின் லாடனும் RQ-170 Sentinel
பின் லாடன் இருக்கும் இடத்தை அறிய அமெரிக்கா activity based intelligence என்னும் நடவடிக்கை சார் உளவறிதல் முறையைப் பாவித்தது. பின் லாடனை அவர் தங்கியிருந்த மாளிகையில் கண்டதாக எந்தவிதமான நேரடியான சாட்சியங்களும் இல்லாமல் அவர் அங்கு தங்கி இருந்தமையை சிஐஏ உறுதி செய்வதற்கு RQ-170 Sentinel ஆளில்லா விமானங்கள் பெரிதும் பயன்படுத்தப்பட்டன.
அமெரிக்க ஆளில்லா விமானம் ஈரான் கைப்பற்றியதைப்பற்றிய முந்தைய பதிவைக் காண இங்கு சொடுக்கவும்:ஈரானில் அமெரிக்க விமானம் வீழ்த்தியதில் சீனவின் பங்களிப்புண்டா?
RQ-170 Sentinel ஆளில்லா விமானத்தை தனது படைகள் அதன் கணனிப் பொறிகளை ஊடுருவிப் பொறுப்பேற்றுத் தரையிறக்கியதாக ஈரான் கூறுகிறது. கணனிப் பொறிகளில் ஈரானிய விமானத் தளத்தை சிஐஏயின் தளம் என்பது போல் உணரப்பண்ணியதாகவும் கூறுகிறது.
இப்படி RQ-170 Sentinel ஆளில்லா விமானத்தை ஊடுருவிப் பொறுப்பெற்கும் தொழில் நுட்ப அறிவு ஈரானிடம் உள்ளதா என்பது கேள்விக்குரியது. இதில் சீனா சம்பந்தப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது..
அமெரிக்க சிஐஏயின் RQ-170 Sentinel ஈரான் கைப்பற்றியதால் ஈரான் என்ன நன்மைபெறப்போகிறது?
ஈரானிய எல்லைக்குள் சென்று அமெரிக்க விமானங்கள் நுழைந்து படைத்துறைத் தகவல்கள் திரட்டுவது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. பல பறப்புக்கள் ஆப்கானிஸ்தான் - பாக்கிஸ்தான் எல்லையில் இருந்தே மேற்கொள்ளப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன்னரே ஈரான் தான் stealth வகை உளவு விமானங்களை கண்டறியக்கூடிய ரடார்களை உருவாக்கியதாகத் தெரிவித்திருந்தது. RQ-170 Sentinel இன் stealth தொழில்நுட்பத்தை ஈரான் முறியடித்ததா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. அது மட்டுமல்ல ஈரான் விரைவில் RQ-170 Sentinel பிரதிகளை reverse-engineering முறை மூலம் தான் உருவாக்கப் போவதாகவும் தெரிவிக்கிறது. ஈரான் இந்த தொழில்நுட்ப இரகசியங்களை வேறு நாடுகளுக்கு விற்பனையும் செய்யலாம். 1998இல் ஆப்கானிஸ்தானில் விழுந்து வெடிக்காமல் போன அமெரிக்க ஏவுகணையான Tomahawk cruise missiles ஐ விலை கொடுத்து வாங்கியது. 1999இல் ஆப்கானிஸ்தானில் விழுந்த அமெரிக்க விமானமான stealth F-117 Nighthawkஐயும் சீனா வாங்கியது. பின்னர் தனது J-20 stealth fighter விமானங்களை உருவாக்கியது. ஏற்கனவே சீனாவும் இரசியாவும் RQ-170 Sentinelஐப் பார்வையிடுவதற்கான அனுமதியை ஈரானிடம் கோரியுள்ளன.
ஈரான் வெளிவிட்ட படங்கள் போலியானதா?
ஈரான் வெளிவிட்ட படங்களின்படி பார்த்தால் RQ-170 Sentinel ஆளில்லா விமானம் எந்த வித சிதைவோ பாதிப்போ இன்றி தரையிறக்கப் பட்டது போல் இருக்கிறது. முதலில் ஈரான் RQ-170 Sentinelஐ சுட்டு வீழ்த்தியதாகவே தெரிவித்தது. ஈரான் வெளிவிட்ட படங்களில் அது சிதைவுற்ற விமானத்தை திருத்தி பார்வைக்கு சிதைவுறாதது போல் காட்டுவதாக ஒரு ஊடகம் தெரிவிக்கிறது.
அஞ்சிய ஈரானியர்கள்.
தனது இரகசியத்தைப் பாதுகாப்பதற்காக அமெரிக்கா ஈரானில் ஒரு கொமாண்டோத் தாக்குதலைச் செய்து RQ-170 Sentinel ஆளில்லா விமானத்தைச் அழிக்க முற்படலாம் என்ற வதந்தி ஈரானில் பரவி இருந்தது. சில ஈரானிய ஊடகங்களில் இவை செய்தியாக அடிபட்டது.
அமெரிக்காவில் இருந்து வரும் செய்திகள் வேறு விதமாக இருக்கின்றன.
அமெரிக்க சிஐஏயின் RQ-170 Sentinel ஆளில்லா விமானங்கள் 2005-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டவை. ஆறு ஆண்டுகள் என்பது கணனித் தொழில்நுட்பத் துறையில் மிக நீண்டகாலமாகும். அமெரிக்கா ஈரானுக்கு RQ-170 Sentinel ஆளில்லா விமானங்களை அனுப்பும் போது அதற்கு அது சுட்டுவீழ்த்தப்படும் அல்லது கைப்பற்றப்படும் ஆபத்து உண்டு என்பதை சிஐஏ நன்கு அறியும். இருந்தும் அந்த ஆபத்தைக் கருத்தில் கொள்ளாமல் ஈரானில் இருந்து RQ-170 Sentinel திரட்டி அனுப்பும் தகவல்கள் அதிலும் மேன்மையான பயனுள்ளது என்று கருதியே சிஐயே இந்த ஆபத்தான நடவடிக்கையை எடுத்தது. MICAH ZENKOஎன்ற படைத்துறை ஆய்வாளர் ஈரானுக்கு RQ-170 Sentinel ஆளில்லா விமானத்தை அனுப்பியதை 1960-ம் ஆண்டு இரசிய ஏவுகணைத்திட்டத்தை உளவு பார்க்க அமெரிக்கா அனுப்பிய U-2 வேவு விமானம் அனுப்பியமைக்கு ஒப்பிடுகிறார். அப்போது U-2 வேவு விமானம் Operation Grand Slam என்ற குறியீட்டுப் பெயருடன் அனுப்பும் போது அது சுட்டு வீழ்த்தும் சாத்தியம் இருக்கிறது என்று தெரிந்தும் சிஐஏ இரசியாவிற்கு U-2வை அனுப்பியமைக்கான காரணம் அமெரிக்கா U-2 விமானத்திலும் பல மடங்கு திறனுள்ள விமானங்களை குறிப்பாக A-12 OXCARTரக விமானங்களை ஏற்கனவே உருவாக்கி விட்டமையே. சுட்டு வீழ்த்தப்பட்டாலும் அமெரிக்கா தனக்குத் தேவையான தகவல்களைப் இரசியாவில் இருந்து பெற்றுவிட்டது. அதைப் போலவே ஈரானின் அணு ஆயுதத் திட்டம், ஹிஸ்புல்லா போன்ற திவிரவாத இயக்கங்களுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டம், தொலைதூர ஏவுகணைத்திட்டம், ஈரானின் விமான எதிர்ப்புத் திறன் போன்றவை தொடர்பான பல தகவல்களை RQ-170 Sentinel ஆளில்லா விமானங்கள் திரட்டிவிட்டன. 2005இல் உருவாக்கிய RQ-170 Sentinelஇலும் பார்க்க 65மடங்கு திறனுடைய ஆளில்லா விமானங்களை அமெரிக்கா ஏற்கனவே உருவாக்கிவிட்டது.

Wednesday, 7 December 2011
இலண்டனில் சீக்கியக் காதலனை மரணப் பொறிக்குள் வீழ்த்திய அழகி
ககண்டிப் சிங் Sikh TV என்னும் தொலைக்காட்சி சேவையின் உரிமையாளரான 21வயது மிடுக்கான இளைஞன். மில்லியன் பவுண்கள் பெறுமதியாளரான அவனுக்கு ஒரு மிக அழகான மருத்துவக் கல்லூரி மாணவி மஹில் மீது அளவற்ற காதல். யாரையும் கிறங்கடிக்க வைக்கும் அந்த இருபது வயது அழகி மஹில் ககண்டிப் சிங்கை திணறடித்தாள். செல்வந்தனான அவளும் கவர்ச்சீகரமான அவளும் ஒன்றாக பழகினர். காதலராகினர்.
மஹில் தங்கியிருக்கும் வீட்டிற்கு ஒரு நாள் சென்ற ககண்டிப் சிங் அவள் அழகில் போதை ஏறி வரம்பு மீறி அவளைக் கற்பழிக்க முயன்றான். அவனைப் பிடித்து வெளியே தள்ளிக் கதைவைச் சாத்தினாள் மஹில். ஏமாற்றத்தால் விரக்தியுற்ற ககண்டிப் சிங் வெளியில் நின்று தன்னை மன்னிக்கும்படி அழுதான். மஹிலின் வீட்டுக்கதவும் இதயக் கதவும் திறக்கவில்லை.
தன்னுடன் தகாத வரம்பு மீறி நடக்க முயன்றதால் ககண்டிப் சிங்மீது அதிக ஆத்திரம் கொண்டிருந்தாள் மஹில். அவளது காவாலி நண்பன்களிரிடமும் முறையிட்டாள்.
ஒரு நாள் மஹலிடமிருந்து தன்னை இரவு 11மணிக்கு வந்து தன் விஇட்டில் சந்திக்கும்படி கைப்பேசிக் குறுந்தகவல்கள் பல ககண்டிப் சிங்கிற்கு வந்தன. மிகச் சிலிர்ப்படைந்த ககண்டிப் சிங் பல வசந்த நினைவுகளோடு மஹில் வீடு சென்றான். அங்கு அவன் மஹிலின் காவாலி நண்பர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டான். தாக்கப்படும் போது மஹில் மஹில் மஹில் உதவி செய் என்று கத்தினான். அவனைத் தாக்கியவர்கள் அத்துடன் நிற்கவில்லை ஒரு பென்ஸ் காரின் பின் டிக்கிக்குள் அவனைக் கட்டிப் போட்டு அவன் மீது பெற்றோல் ஊற்றிவிட்டு மூடிப் பின்னர் காரு முழுவதும் பெற்றோல் ஊற்றி காரோடு சேர்த்து ககண்டிப் சிங்கையும் கொழுத்தினர். மஹில் மஹில் என்று அலறியபடி உயிர் விட்டான் ககண்டிப் சிங்.
மஹில் இப்போது நீதிமன்றில் நிறுத்தப் பட்டுள்ளாள்

Tuesday, 6 December 2011
ஈரானில் அமெரிக்க விமானம் வீழ்த்தியதில் சீனவின் பங்களிப்புண்டா?
அமெரிக்காவின் உளவுத் துறையான சிஐஏயின் பணிக்காக ஈரானுக்கு வேவு பார்க்கச் சென்ற ஆளில்லாப் போர்விமானம் ஒன்று காணாமற் போனதாக 2011 டிசம்பர் மாத ஆரம்பத்தில் அறிவித்தது. டிசெம்பர் 4-ம் திகதி ஈரான் அமெரிக்க ஆளில்லாப் போர்விமானமொன்றை தனது இணையவெளிப் போராளிகள் சுட்டு வீழ்த்தியதாக அறிவித்தது. இந்த முரண்பட்ட செய்தியில் அடிபடுவது அமெரிக்காவிடமுள்ள மிக நவீன வேவுபார்க்கும் ஆளில்லா விமானமான RQ-170 வகையைச் சேர்ந்தது. இது அமெரிக்காவிடம் உள்ள மிக உயர்தர உணர்திறனுடைய கருவிகளைக் கொண்டது. இந்த சம்பவம் இரு அம்சங்களை உணர்த்துகிறது: 1. எதிர்காலப் போர் முனைகளில் ஆளில்லாப் போர்விமானங்கள் முக்கிய பங்கு வகிக்கவிருக்கிறது. 2. எதிர்காலப் போர் இணையவெளியிலும் நடக்க விருக்கிறது.
இரு வகையான ஆளில்லாப் போர் விமானங்கள்
முதலில் வேவு பார்க்க மட்டும் பாவிக்கப்பட்டு வந்த ஆளில்லப் போர் விமானங்கள் இப்போது ஏவுகணைகள் வீசித் தாக்குவதற்கும் பயன் படுகின்றன. தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் மிகச் சிறந்த ஆயுதமாக ஆளில்லாப் போர்விமானங்கள் கருதப்படுகின்றன. பல நாடுகள் ஆளில்லாப் போர் விமானங்கள் தொடர்பாக புதிய ஆராச்சிகளை மேற் கொண்டு வருகின்றன. இஸ்ரேல் காஸா நிலப்பரப்பில் பலஸ்த்தீனியத் தீவிரவாதிகளுக்கு எதிராக பெருமளவில் ஆளில்லா விமானங்களைப் பாவித்து வருகிறது. சீர்வேக ஏவுகணைகள் (Cruise missiles) ஓரளவு நிலையான இலக்குக்கள் மீது தாக்குதல் நடாத்துவதற்கே பெரிதும் பயன்படும். அசைந்து கொண்டிருக்கும் தீவிர வாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஆளில்லா விமானங்களில் இருந்து வீசப்படும் ஏவுகணைகள் பெரிதும் பயன்படுகின்றன.
அமெரிக்கப் படைத்துறை வல்லுனர்களின் கருத்துப்படி அமெரிக்காவின் ஆளில்லா விமானமான RQ-170வீழ்த்தும் திறன் ஈரானிய இணைய வெளிப் போராளிகளிடம் இல்லை. யார் இந்த இணைய வெளிப் போராளிகள்? இப்போது பல நாடுகளும் கணனி வல்லுனர்களை தமது படையில் இணைத்து அவர்கள் மூலம் எதிரி நாட்டு படைத்துறையின் கணனிகளை ஊடுருவித் தகவல்களை அறிதல் எதிரி நாட்டு கணனிகளைச் செயலிழக்கச் செய்தல் போன்றவற்றைச் செய்கின்றனர். பல நாடுகளிலும் இதற்கு என கணனி வல்லுனர்களைக் கொண்ட சிறப்பு படையணிகள் உண்டு. 2011 செப்டம்பரில் அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்களில் ஒரு வகை வைரஸ் பரவியது. இதனால் அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் சில நாட்களாக ஆப்கானிஸ்த்தானிலும் சூடானிலும் செயற்பட முடியாமற் போனது.
அமெரிக்காவின் படைத்துறையினரினதும் அமெரிக்கப் படைத்துறைக்கு ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்களினதும் கணனிகள் மீது அண்மைக்காலங்களாக பல ஊடுருவல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை சீனாவில் இருந்து மேற்கொள்ளப்பட்டவை என்று நம்பப்படுகின்றன. சீனா பல அமெரிக்கத் தனியார் நிறுவனங்களின் தொழில் நுட்பத் தகவல்களைத் திருடியது என்றும் தொடர்ந்தும் திருடி வருகிறது என்றும் குற்றச் சாட்டுக்கள் பல அமெரிக்க ஊடகங்களில் முன்வைக்கப்பட்டன.
அமெரிக்க ஆளில்லாப் போர் விமானம் ஈரானில் பழுதடைந்து விழுந்ததால் அல்லது சுடப்பட்டு விழுந்ததால் அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்களில் தொழில் நுட்ப இரகசியங்கள் எதிரி கைக்குப் போய்விடுமா என்ற அச்சமும் அமெரிக்கப் படைத்துறையினரிடம் நிலவுகிறது. அமெரிக்கப் படைத் துறையினர் ஈரானிடம் தமது ஆளில்லா வேவு விமானமான RQ-170வீழ்த்தும் திறன் இல்லை என்று அடித்துச் சொல்கின்றனர். Lockheed Martin நிறுவனம் உறபத்தி செய்யும் RQ-170 ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் பல அழிவுகளை எதிரிகளுக்கு ஏற்படுத்தியதால் Beast of Kandahar என்ற பட்டப் பெயரால் அழைக்கப்படும். ஒசமா பின் லாடனைத் தேடிப் பிடிப்பதிலும் இந்த RQ-170 பெரும் பங்காற்றியது. பின் லாடனின் மளிகைமீது தாக்குதல் நடக்கும் போது அதை நேரடி ஒளிபரப்பில் வெள்ளை மாளிகையில் இருந்து பார்க்க இந்த RQ-170 ஆளில்லா விமானமே பாவிக்கப்பட்டது. எதிரிகளின் ரடார்களின் "கண்களில்" மண் தூவிவிட்டு எதிரியின் விண்பாதுகாப்புக் கட்டமைப்பிற்குத் தெரியாமல் ஊடுருவி எதிரியின் பிரதேசத்து படை நிலைகள் தொடர்பான தகவல்களைச் சேகரிக்க வல்லது RQ-170. எதிரியின் கைகளில் அகப்படாமல் தன்னைத் தானேயும் தன்னிடம் உள்ள தகவல்களையும் அழிக்கும் திறன் கொண்டது RQ-170. அமெரிக்கா இந்த RQ-170ஆளில்லா விமானங்கள் தொடர்பான தகவல்களை மிக மிக இரகசியமாகவே வைத்திருந்தது. இது ஈரானிடம் சிக்கியிருப்பது இரு பெரும் பாதகத்தை அமெரிக்கப் படைத்துறைக்கு ஏற்படுத்தும். ஒன்று அதில் உள்ள அதி உயர் உணர் கருவிகள் பற்றிய தொழில் நுட்பம் எதிரிகள் கையிச் சேர்ந்து விடும். மற்றது அதன் தகவல் திரட்டும் திறனில் இருந்து பாதுகாக்கக்கூடிய தொழில் நுட்பத்தை எதிரிகள் பெற்று விடுவர்.
அமெரிக்காவிற்கு மிக மோசமான விளைவை ஏற்படுத்தக் கூடிய சாத்தியப்பாடு: குறிப்பிட்ட ஆளில்லா விமானத்திற்கும் அதை இயக்குபவர்களுக்கும் இடையிலான தொடர்பை சீன நிபுணர்கள் குழப்பம்(jam) செய்து துண்டித்து அதை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தரையிறக்குவது. அமெரிக்காவின் ஆளில்லா வேவு விமானமான RQ-170 ஐ சீனா வீழ்த்தியாதா அல்லது அதை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தரை இறக்கியதா என்ற சந்தேகம் இங்கு எழுகிறது. அமெரிக்க ஆளில்லா விமானத்தை வீழ்த்த சீனாவிற்கு இரண்டு நோக்கங்கள் இருந்திருக்கலாம்:
1.பிராந்திய முக்கியத்துவம்.
சிரியப் புரட்சியில் பஸார் அல் அசாத் கவிழ்க்கப்படுவதையோ ஈரானுக்கு எதிராக அணு ஆயுத உறபத்தியைச் சாட்டாக வைத்துக் கொண்டு அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் ஈரான் மீது படை எடுப்பதையோ சீனா விரும்பவில்லை. அவை இரண்டும் நடந்தால் ஆபிரிக்காவும் குறிப்பாக எண்ணெய் வள அரபு நாட்டிலும் சீன நலன்களுக்குப் பெரும் பாதகம் ஏற்படும். சீன படைத்துறை வல்லுனர்கள் குறிப்பாக இணைய வெளிப் போராளிகள் ஈரானில் இருந்து செயற்படலாம்.
2. தொழில் நுட்பம் பெறுதல்
எதிர்காலப் போர்முனையில் ஆளில்லப் போர் விமானங்கள் பெரும் பங்கு வகிக்கவிருப்பதால் சீனா தனது ஆளில்லாப் போர் விமான உற்பத்தியில் பெரும் கவனம் செலுத்துகிறது. 2010இல் சீனாவில் நடந்த விமானக் கண்காட்சியில் சீனா தனது சீறும் யாளி என்னும் பெயர் கொண்ட ஆளில்லாப் போர் விமானங்களைக் காட்சிப்படுத்தியது. அதில் சீனா தனது ஆளில்லாப் போர் விமானங்கள் எப்படி தாய்வான் கரைகளில் உள்ள அமெரிக்க போர்க்கப்பல்களை இனம் கண்டு தாக்கும் நிலையங்களுக்கு தகவல்களை அனுப்புவதை தெளிவு படுத்தியது. ஆளில்லாப் போர் விமானங்கள் பாவனையில் அமெரிக்கப் படைத்துறை கண்ட வெற்றியை உணர்ந்த சீனா தான் அந்தத் துறையில் மற்றைய நாடுகளை விட முந்திச் செயற்படுகிறது அமெரிக்காவின் ஆளில்லா வேவு விமானமான RQ-170 ஐ சீனா இணைய வழி ஊடுருவினதால் அது ஈரானில் விழவேண்டிய சூழ் நிலை உருவாகி இருக்கலாம். வீழ்ந்த விமானத்தில் உள்ள தொழில் நுட்பங்களை சீனா பெற இது ஒரு வழி.
தொலைக்காட்சிப் பெட்டி என்னிடம் ரிமோட் பக்கத்து வீட்டில்?
இஸ்ரேலிய ஊடகங்கள் அமெரிக்க ஆளில்லா விமானங்களை ஈரான கைப்பற்றியதாகவே செய்தியை வெளியிட்டன. அப்படியாயின் ஒரு கட்டத்தில் RQ-170 கட்டுப் பாட்டை ஈரான் இணையவழியாகத் தன்வசமாக்கி தரையிறக்கியதா? அமெரிக்காவின் ரடார் தவிர்ப்புத் தொழில் நுட்பம் (stealth technology), காணொளிப் பதிவுத் தொழில் நுட்பம், உணரிகளின் தொழில் நுட்பம் போன்றவை சீனாவசமானதா?

Monday, 5 December 2011
வரும் காலத்தை எதிர்வு கூறும் supercomputer வருகிறது.
உலகத்தில் நடக்கப் போகும் சகல சமூக பொருளாதார நிகழ்வுகள் அனைத்தையும் எதிர்வு கூறக்கூடிய பாரிய கணனித் தொகுதிகளை உருவாக்கும் முயற்சிகளில் சுவிட்சலாந்தில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் மேற்கொள்ளப்படும் The Living Earth Simulator Project (LES) எனப் பெயரிடப்பட்டுள்ள திட்டத்தான் உருவாக்கப்படும் மிகுமேன்மைக் கணனி(supercomputer) உலகின் சகல நிகழ்வுகளையும் ஒப்புச் செயாலாக்கும் (simulate) வல்லமையுடையதாகும்.
மேற்படி மிகுமேன்மைக் கணனி(supercomputer) டுவிட்டர் பதிகளில் இருந்து அரச செலவீனங்கள் ஈறாக சகல உலகத் தகவல்களையும் திரட்டி அடுத்த பொருளாதாரச் சரிவு உட்பட பல உலக எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே அறிவிக்கும் திறனுடையது. இந்த மிகுமேன்மைக் கணனி(supercomputer)உலகப் பந்தின் நரம்பு மண்டலம் போல் செயற்படும் என்று கூறப்படுகிறது.
மிகுமேன்மைக் கணனி(supercomputer)திட்டத்தின் தலைவராகச் செயற்படும் Zurichஇல் உள்ள Swiss Federal Institute of Technology இனது பேராசிரியர் Dirk Helbing அவர்கள் தாம் உருவாக்கும் கணனி உலகின் பல தகவல்களைச் சேகரித்துப் பகுப்பாய்வு செய்து உலக நிகழ்வுகளை எதிர்வு கூறும் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பின் லாடன் தொடர்பான சகல செய்திகளையும் செய்திச் சுரங்கமிடல் - News Mining என்னும் தொழில் நுட்பம் மூலம் ஆய்வு செய்திருந்தால் அவர் இருந்த இடத்தை எளிதில் கண்டுபிடித்திருந்திருக்கலாம் என்று சில விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.
செய்திச் சுரங்கமிடல் - News Mining பற்றிய முந்தைய பதிவைக் காண இங்கு சொடுக்கவும்

Sunday, 4 December 2011
காஸாவைக் கலங்கடிக்கும் இஸ்ரேலிய ஆளில்லா விமானங்கள்
ஆரம்பத்தில் வேவு பார்க்கவும் கண்காணிக்கவும் பயன்படுத்தப்படுத்தப்பட்டு வந்த ஆளில்லாப் போர் விமானங்கள் இப்போது மேலும் நவீன மயப்படுத்தப்பட்டு தாக்குதல்களுக்கும் பயன்படுத்தப் படுகின்றன உலக நாடுகளிடையே ஆளில்லாப் போர் விமானங்களின் உற்பத்தியும் பாவனையும் அதிகரித்து வருகிறது. . ஆப்க்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானின் வட பகுதியிலும் 2006-ம் ஆண்டிலிருந்து அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளைக் கொன்றுள்ளன. பாக்கிஸ்த்தானில் அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்களால் பல அப்பாவி மக்களும் கொல்லப்பட்டுள்ளனர். பாக்கிஸ்த்தான் அமெரிக்காவிடம் பலதடவை திரை மறைவில் இந்த ஆளில்லாப் போர் விமானங்களின் பாவனையை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது. பாக்கிஸ்தானிடமும் பல ஆளில்லாப் போர் விமானங்கள் இருக்கின்றன. இப்போதுள்ள அதன் இரு ஆளில்லாப் போர் விமானங்கள் அணிகளை பாக்கிஸ்த்தான் ஆறு அணிகளாக உயர்த்த எண்ணியுள்ளது.
தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் மிகச் சிறந்த ஆயுதமாக ஆளில்லாப் போர்விமானங்கள் கருதப்படுகின்றன. பல நாடுகள் ஆளில்லாப் போர் விமானங்கள் தொடர்பாக புதிய ஆராச்சிகளை மேற் கொண்டு வருகின்றன. இஸ்ரேல் காஸா நிலப்பரப்பில் பலஸ்த்தீனியத் தீவிரவாதிகளுக்கு எதிராக பெருமளவில் ஆளில்லா விமானங்களைப் பாவித்து வருகிறது. பதினாறு இலட்சம் மக்களைக் கொண்ட காஸா நிலப்பரப்பில் இஸ்ரேலிய ஆளில்லாப் போர்விமானங்கள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காஸா வாசிகள் இஸ்ரேலிய ஆளில்லாப் போர்விமானங்களை "இரைச்சல்" என்று பெயரிட்டு அழைக்கின்றனர். இஸ்ரேலியப் படையினர் மீது தாக்குதல் நடந்தால் சில நிமிடங்களுக்குள் இஸ்ரேலிய ஆளில்லாப் போர்விமானங்கள் காஸாப் பகுதியில் தாக்குதல்களை நடத்தும்.
சீர்வேக ஏவுகணைகள் (Cruise missiles) ஓரளவு நிலையான இலக்குக்கள் மீது தாக்குதல் நடாத்துவதற்கே பெரிதும் பயன்படும். அசைந்து கொண்டிருக்கும் தீவிர வாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஆளில்லா விமானங்களில் இருந்து வீசப்படும் ஏவுகணைகள் பெரிதும் பயன்படுகின்றன. இஸ்ரேலிய ஆளில்லாப் போர்விமானங்களின் தாக்குதல்களில் பல சிறுவர்கள் உட்படப் பல அப்பாவிப் பொது மக்கள் அடிக்கடி கொல்லப்படுவதுண்டு. இதற்கு இஸ்ரேல் பலஸ்தீனிய தீவிரவாதிகள் பொது மக்கள் மத்தியில் ஒளிந்திருப்பதாக வியாக்கியானம் கூறுகிறது.
மனித உரிமை ஆர்வலர்கள் இஸ்ரேலிய ஆளில்லாப் போர்விமானங்கள் என்றால் கொலை என்று அர்த்தம் என்று கூறுகின்றனர். இஸ்ரேலின் Ben Gurion International Airportஇல பல ஆளில்லாப் போர் விமானங்கள் பல நிலை கொண்டுள்ளன. இஸ்ரேல் பல புதிய ஆளில்லாப் போர் விமானங்களை உருவாக்குவதிலும் ஈடுபட்டுள்ளது. பொதுவாக வருங்காலங்களில் போர்முனைகளில் ஆளில்லாப் போர் விமானங்கள் பெரிதளவு ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Friday, 2 December 2011
கைப்பேசிகளில் தகவல் திருடும் செயலி (application) - வழக்குத் தொடர ஆலோசனை
The Carrier IQ என்னும் அமெரிக்க நிறுவனம் Android, BlackBerry, Apple and Symbian ஆகிய smartphoneகளில் இரகசியமாக புகுத்தியுள்ள செயலி(application) படு மோசமானது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மட்டும் 140மில்லியன் கைப்பேசிகளின் இந்த The Carrier IQஇன் செயலி(application) புகுத்தப்பட்டுள்ளது.
இந்த The Carrier IQஇன் செயலி(application) நீங்கள் ஒவ்வொரு முறையும் உங்கள் கைப்பேசியை அழுத்தும் போதும் சகல தகவல்களையும் The Carrier IQ நிறுவனம் பெற்றுக் கொள்ளும். இந்தச் செயலி உங்கள் சொந்த விபரங்கள் அனைத்தையும் திருடும் வல்லமை கொண்டதுடன் உரையாடல்கள், குறுந்தகவல்கள், கடவுச்சொற்கள் போன்றவற்றை அறியும் திறனும் கொண்டது.
நொக்கியா, பிளக்பெரி ஆகிய நிறுவனங்கள் தங்கள் கைப்பேசிகளில் இந்த The Carrier IQஇன் செயலி(application) இல்லை என்று சொல்கின்றது. ஆப்பிள் நிறுவனம் தங்கள் கைப்பேசிகளில் இனி இந்தச் செயலி இருக்காது என்று கூறியுள்ளது.
Carrier IQநிறுவனம் தமது செயலி கைப்பேசிகளின் செயற்படு திறன்கள் தொடர்பான தகவல்களை மட்டுமே சேகரிக்கும். கைப்பேசிப் பாவனையாளர்களின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிப்பதில்லை என்று அறிவித்துள்ளது. ஆனால் சட்டவியலாளர்கள் Carrier IQவின் செயல் சட்ட விரோதமானது கைப்பேசிப் பாவனையாளர்கள் அவர்கள் மீது வழக்குத் தொடர முடியும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
Carrier IQ என்பது என்ன?
Carrier IQ is software that comes per-installed on certain hand-held devices. It collects usage data that mobile operators and device manufactures analyze so they can make hardware, network and service improvements, according to Carrier IQ. It runs all the time and cannot be turned off, although it can be removed by unlocking the phone and gaining administrator access, which typically voids the warranty.
Carrier IQ நிறுவனம் தாம் மூன்று செயற்பாடுகளை மட்டுமே செய்வதாக அடித்துக் கூறுகின்றனர்.Three of the main complaints we hear from mobile device users are (1) dropped calls, (2) poor customer service, and (3) having to constantly recharge the device.
ஏற்கனவே அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ முகவேட்டின் மூலமாக பல தகவல்களைச் சேகரிப்பதாக அதிலும் குறிப்பாக எகிப்தியப் புரட்ச்சிக்குப் பின்னர், குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. எகிப்திய மக்களின் எழுச்சி அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ முன்கூட்டியே அறிந்திருக்காதது அமெரிக்க ஆட்சியாளர்களைப் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எகிப்த்தியர்களின் முகவேட்டுப் பக்கங்களை சாதாரணமாக பார்த்திருந்தாலே எகிப்தியப் புரட்சியை எதிர்வு கூறியிருக்கலாம்.

Monday, 14 November 2011
தாலி கழற்றும் இத்தாலியும் சீனாவிடம் கையேந்தும் ஐரோப்பியாவும்.
ஒரு இத்தாலியாளின் தாலி கழன்றமைக்காக இலட்சக்கணக்கான தாலிகள் இலங்கையில் அறுக்கப்பட்டன. இப்போது இத்தாலிய தேசத்தின் தாலியே கழர்கின்றது. ஒரு புறம் சர்வாதிரிகள் ஆயுதப் புரட்சிகள் மூலம் பதவியில் இருந்து விரட்டப் படும் வேளையில் மறு புறம் பணநாயகங்களின் தலைவர்கள் பண நெருக்கடியால் பதவிகளில் இருந்து விரட்டப்படுகின்றனர். இத்தாலி 17 நாடுகளைக் கொண்ட யூரோ வலய நாடுகளில் மூன்றாவது பெரிய பொருளாதாரம். முதலாம இரண்டாம் இடங்களை ஜெர்மனியும் பிரான்சும் வகிக்கின்றன. அதன் கடன்கள் 1.9டிரில்லியன் யூரோக்கள். இது இத்தாலியின் வருட மொத்த உறபத்தியுடன் ஒப்பிடுகையில் 120%.
யூரோ நாணயம் இத்தாலியின் கடன் நெருக்கடியால் தனது பெறுமதியை இழந்து வருகிறது. அயர்லாந்து, கிரேக்கம், போர்ச்சுக்கல் ஆகியவற்றின் அரசத் தலைவர்கள் ஏற்கனவே பதவியில் இருந்து விலகிவிட்டனர். இத்தாலியின் அரச கடன் முறிகளின் வட்டி வீதம் பிரச்சனைக்குரிய 7%ஐத் தாண்டிவிட்டது. ஒரு நாட்டின் அரச கடன் முறிகளின் வட்டி வீதம் பிரச்சனைக்குரிய 7%ஐத் தாண்டினால் அது தனது கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படும் என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்து. கிரேக்கத்தில் இவ்வீதம் 50ஐத் தாண்டியது. இத்தாலியின் கடன் நெருக்கடியால் அதன் பிரதம மந்திரி சில்வியோ பெல்ரொஸ்க்கோனி பதவியில் இருந்து விலகினார். மிக இளம் பெண்களை வைத்து பலான விருந்து கொடுத்து வந்த இத்தாலியப் பிரதம மந்திரி, அது அம்பலமான போது பதவி விலகவில்லை. அவரது திறமை அற்ற நிர்வாகம் எப்போதே கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அவரது நிர்வாகத்தில் ஊழல்கள் நிறைந்திருந்தன. 17 வருட அரசியல் வாழ்க்கையில் 19 தடவை நீதிமன்றத்திற்கு இழுக்கப்பட்டவர். இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியிலும் அவர் பதவியில் நிலைத்தது அவர் வத்திக்கானுக்கு வேண்டப்பட்டவர் என்பதால் என்று விமர்சனங்கள் வந்திருந்தன. இத்தாலியப் பிரதம மந்திரி சில்வியோ பெல்ரொஸ்க்கோனியின் பதவி விலகலை பல இத்தாலியியர்கள் ஹல்லலூயா எனக் கூக்குரலிட்டுக் கொண்டாடினர். பிரதம மந்திரி சில்வியோ பெல்ரொஸ்க்கோனியின் பதவி விலகலுடன் இத்தாலிய அரசு பல சிக்கன நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது ஊழியர்கள் ஓய்வி பெறும் வயதை 65இல் இருந்து 67 ஆக உயர்த்தியதுடன். பல அரச ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தாலியின் புதிய பிரதமராக ஜியோஜியோ நெப்பொலிற்றனொ பதவி ஏற்ப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பிரதமர் பொருளாதார நிபுணர் ஜியோஜியோ நெப்பொலிற்றனொ
புதிய பிரதமாராகப் பதவி ஏற்கவிருக்கும் பொருளாதார நிபுணர் ஜியோஜியோ நெப்பொலிற்றனொ அரசியல் பொருளாதாரவியலில் வல்லவர். பொக்கன் பல்கலைக் கழகத்தின் தலைவராக இருந்தவ்ர். ஐரோப்பிய ஒன்றியத்தில் வர்த்தக்த்துறையில் ஆரோக்கியமான போட்டிக்குப் பொறுப்பாக இருந்து சிறப்பாகச் செயற்பட்டவர். அப்பதவியில் இருக்கும் போது மைக்ரோசொfற் நிறுவநனத்திற்கு 650 மில்லியன் யூரோ தண்டம் விதித்தவர். பல ஜேர்மனிய வங்கிகள் ஜெர்மன் மாநில அரசுகளிடம் இருந்து பெற்ற மானியங்களை திரும்பச் செலுத்தச் செய்தவர். இத்தாலியப் பாராளமன்றத்திலோ அல்லது இத்தாலிய அரசியலிலோ முன் அனுபவம் இல்லாதவர்.
யூரோ அதிர்ச்சி - "euroquake"
பணநாயக நாடுகளில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடி டொமினோச் சரிவைப்(domino effect) போல மற்ற நாடுகளின் நிதி நிலைமையைப் பெரிதும் பாதுக்கும். இதில் முதல் பாதிக்கப்படுவது பிரான்ஸ் ஆகும். உலகின் எட்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட இத்தாலிய அரசுக்கு பிரெஞ்சு வங்கிகள் 365பில்லியன் டொலர் பெறுமதியான கடன்களை வழங்கியுள்ளன. பிரென்ஸில் கடன் நெருக்கடி ஏற்பட்டால் அதற்குக் கடன் கொடுத்த பிரித்தானிய ஜேர்மனிய நாடுகளின் வங்கிகள் பாதிக்கப்படும். பிரித்தானியாவிலும் ஜெர்மனியிலும் கடன் நெருக்கடி ஏற்பட்டால் முழு உலகத்திலும் பொருளாதரப் பிரச்சனை ஏற்ப்படும். ஐரோப்பாவில் முக்கியமக யூரோ வலயநாடுகளில் ஏற்படும் நிதி நெருக்கடி முழு உலகப் பொருளாதரத்தையும் உலுக்கும். இதை யூரோ அதிர்ச்சி - "euroquake" எனக் கூறப்படுகிறது.
கையைப் பிசைந்து கொண்டு நிற்கின்றனர்.
இத்தாலியில் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதாலோ அல்லது அரச செலவுகளைக் குறைப்பதாலேயோ இத்தாலியப் பொருளாதாரப் பிரச்சனை தணியப்போவதில்லை. இப்போதைய உலகப் பொருளாதாரப் பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பதை உலக அரசியல்வாதிகளோ பொருளாதார நிபுணர்களோ இதுவரை சரியாக குறிப்பிடவில்லை.
விழமுடியாததும் விடுவிக்க முடியாததுமான பெரிய பொருளாதாரம்,Too big to fail; too big to bail
உலகின் எட்டாவது பெரிய யூரோ நாணய வலயத்தில் முன்றாவது பொருளாதாரமான இத்தாலியப் பொருளாதாரம் விழ முடியாது என்று சொல்லி வந்தவர்கள் இப்போது கடன் நெருக்கடியில் இருந்து விடுவிக்க முடியாத பெரிய பொருளாதாரம் இத்தாலியினுடையது என்று சொல்கின்றனர். அடுத்த ஆண்டு மட்டும் இத்தாலி முன்னூறு பில்லியன்கள் பெறுமதியான புதிய கடன்களைப் பெற்று பழைய கடன்களைத் தீர்க்க வேண்டும். இதை €300 billion roll over என்பார்கள். இத்தாலியின் புதிய அரசு கடன் வழங்கும் வங்கிகளின் நம்பிக்கையைப் பெறவேண்டும்.
சீனாவிடம் கையேந்தும் ஐரோப்பா
அமெரிக்காவும் பிரித்தானியாவும் தமது நிதி நெருக்கடியைத் தீர்க்க பணத் தாள்களை(நோட்டுக்கள்) அச்சடித்தன. இதற்கு அவை Quantitative Easing (QE)என்ற கௌரவப் பெயர் கொடுத்தன. யூரோ வலய நாடுகளின் கடன் நெருக்கடிகளைத் தீர்க்க அவை அதிக பண நோட்டுக்களை ஐரோப்பிய மத்திய வங்கி அச்சடிக்க வேண்டும். அதிக பண நோட்டுக்கள் அச்சடிக்கப்படும் போது அது யூரோ வலய நாடுகளில் பணவீக்கத்தை ஏற்படுத்தும். யூரோ நாணயத்தின் பெறுமதியை இது பாதிக்கும். யூரோ நாணயத்தின் பெறுமதியும் அதன் வட்டி வீதவும் ஜெர்மனியின் பொருளாதார நலன்களுக்கு ஏற்ப தீர்மானிக்கப் படுவதை யூரோ நாணயக் கட்டமைப்பில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஜேர்மனி விரும்புகிறது. இத்தாலியின் பதவி விலகிய பிரதம மந்திரி சில்வியோ பெல்ரொஸ்க்கோனி சீனாவிடம் இருந்து கடன் பெற விரும்பினார். இதற்கான தொலைபேசிப் பேச்சு வார்த்தைகளும் நடை பெற்றன. சீனா மறுக்கவுமில்லை உடன் ஒத்துக் கொள்ளவுமில்லை. தன்னிடம் இருந்து கடன் பெறுவதாயின் ஐரோப்பிய நாடுகள் தனது நாட்டு மனித உரிமை மீறல்களைப் பற்றி கண்டுக்காமல் இருக்க வேண்டும் என்று சீனா விரும்புவதாகத் தெரிவிக்கப் படுகிறது. ஐரோப்பிய நாடுகளின் நிதி நெருக்கடியைத் தீர்க்க பன்னாட்டு நாணய நிதியம் நிதி உதவி கடன் போன்றவற்றை வழங்க வேண்டும் இதற்குத் தேவையான கடனை அது சீனாவிடம் இருந்து பெற முயற்ச்சிக்கிறது. இலண்டனில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று இப்படித் தலைப்பிட்டது: Humiliated Europe forced to beg China for bailout. யூரோ வலய நாடுகள் அக்டோபர் மாதக் கடைசியில் நடாத்திய மாநாட்டை அடுத்து பிரெஞ்சு அதிபர் நிக்கொலஸ் சார்க்கோஜி சீன அதிபர் ஹூ ஜின்ராவோவை தொடர்பு கொண்டு தமது நாடுகளுக்கு கடன் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார். 3.2 ரில்லியன் அமெரிக்க டொலர்களை வெளி நாட்டுச் செலவாணி உபரியாகக் கொண்ட சீனா ஐரோப்பிய நாடுகளுக்கு கடன் வழங்க விதிக்கும் நிபந்தனைகள்:
சீனா தனது 3.2 ரில்லியன் அமெரிக்க டொலர்களை வெளி நாட்டுச் செலவாணி உபரியை எங்காவது முதலிட்டே ஆக வேண்டும்.

- பன்னாட்டு நாணய நிதியத்தில் சீனாவிற்கு அதிக செல்வாக்கு
- உலக வர்த்தக நிலையத்தில் ( WTO) சீனாவிற்கு சந்தைப் பொருளாதார நாடாக அங்கீகாரம். 2001இல் இந்த நிலையத்தில் சீனா இணையும் போது ஒரு சந்தைப் பொருளாதார நாடாக அங்கீகரிக்கப் படாமையை சீனா ஏற்றுக் கொண்டே இருந்தது.
- ஐரோப்பிய நாடுகள் சீனாவிற்கான ஆயுத ஏற்றுமதித் தடையை நீக்க வேண்டும். 1989இல் ரினமன் சதுக்கத்தில் சீன அரசு மாணவர்களின் கிளர்ச்சிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்தமையைத் தொடர்ந்து சீனாவிற்கான ஆயுத ஏற்றுமதியை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்தது.
சீனா தனது 3.2 ரில்லியன் அமெரிக்க டொலர்களை வெளி நாட்டுச் செலவாணி உபரியை எங்காவது முதலிட்டே ஆக வேண்டும்.
Monday, 7 November 2011
அடுத்த ஆண்டு புதிய ஐ-போன், ஐ-பாட் , ஐமக்- ஆப்பிளின் புனரமைப்பு நடவடிக்கை.
![]() |
| ஆப்பிளுக்கு சவாலாகும் சம்சங் கலக்சி S II |
Stuff Magazineஇன் சிறந்த கைப்பேசிக்கான விருதை சம்சங்கின் Galaxy S II வென்றது. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இந்த விருதை ஆப்பிளின் ஐ-போன்களே வென்று வந்தன. 2011இன் மூன்றாம் காலண்டில் சம்சங்கின் Galaxy S II கைப்பேசிகளின் விற்பனை 278இலட்சத்திற்கு அதிகரித்தது. ஆப்பிளின் கைப்பேசியான ஐ-போனின் விற்பனை 171 மில்லியன்களாகக் குறைந்தன. ஆப்பிளின் ஐ-பாட் இந்த ஆண்டின் சிறந்த tablet கணனிக்கான விருதைப் பெற்ற போதும் குறைந்த விலையில் வெளிவந்த Amazon இன்Kindle ஐ-பாட்டிற்கு சவாலாக வந்துள்ளது. ஐ-போன் 4S இல் சில குறைபாடுகள் இருப்பதை ஆப்பிளே ஒத்துக் கொண்டது. ஆண்டோயிட் மென் பொருளும் ஆப்பிளிற்கு பெரும் சவாலாக அமைகிறது.
இந்தப் பின்னணியில் ஆப்பிள் தனது சகல உற்பத்திப் பொருட்களையும் மீளாய்வு செய்து வருகிறது. கைப்பேசிகள் கணனிகள் யாவற்றிலும் புதிய மாடல்களை அடுத்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்யவிருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் பணக் கையிருப்பு அமெரிக்க அரசின் கையிருப்பிலும் அதிகம். ஆப்பிளிடம் 75.87பில்லியன் டாலர்கள் நிதி இருக்கிறது அதேவேளை அமெரிக்க அரசின் கையிருப்பு நிதி 73.76டாலர்கள் மட்டுமே. இப் பெரும் நிதிக் கையிருப்புடன் ஆப்பிளால் தனது முதற்தர நிலையை மேம்படுத்த முடியும் எனப் பலரும் நம்புகின்றனர்.
![]() |
| Apple store at Newyork |
கணனிகள் ஆப்பிளின் ஐமக் கணனிகள் 2009இற்குப் பின்னர் மிளாய்வோ மீள்வடிவமைப்போ செய்ய முடியவில்லை. அடுத்த ஆண்டு ஆப்பிள் தனது ஐமக் கணனிகளை புதிதாக வடிவமைத்து சந்தைப்படுத்தவிருக்கிறது.
ஐ-பாட் ஆப்பிளின் ஐ-பாட்கள் இப்போது உள்ளவற்றிலிருந்து பல அபிவிருத்திகள் செய்யப்படவிருகின்றன. ஐ-பாட்-3 அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப் படவிருக்கின்றது. உடன் வெளிச்சத்துடன் (flash light) கூடிய சிறந்த ஒளிப்பதிவுக்கருவி, நீடித்த பட்டரி நேரம், மேம்படுத்தப்பட்ட தொடுதிரை, 4G, SD card slot போன்ற பல அம்சங்களுடன் ஐ-பாட்-3 வரவிருக்கிறது.
ஐ-போன்கள் ஆப்பிளின் அடுத்த ஐ-போன்களைப் பற்றிப் பல ஊகங்கள் நடமாட்டத்தில் உண்டு. லேசர் கீபோர்ட் என்னும் புரட்சிபற்றிய ஊகங்களும் நிலவுகிறது. அத்துடன் ஹொலோக்கிராஃபி முறையில் பெரிய திரையில் காணொளிகளைக் காணும் வசதிகளும் இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. இவ் எதிர்பார்ப்புக்களின் காணொளியைக் கீழே காணலாம்:
Saturday, 5 November 2011
சீனாவும் இரசியாவும் இணைய ஊடுருவிகள்(Hackers) மூலம் தகவல்கள் திருடுகின்றன - அமெரிக்கா குற்றச் சாட்டு.
சீன இரசிய அரசுகளின் ஆதரவுகளுடன் செயற்படும் இணைய ஊடுருவிகள்(Hackers) தனது நாட்டின் பொருளாதார தொழில்நுட்ப இரகசியங்களைத் திருடுகின்றன என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவைக்கு (காங்கிரஸ்) சமர்ப்பிக்கை பட்ட "Foreign Spies Stealing US Economic Secrets in Cyberspace" என்னும் தலைப்பிலான அறிக்கையிலேயே இக்குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. ஏற்கனவே பல நாடுகளிலுமிருந்து பல ஊடுருவிகள் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் கணனிகளை ஊடுருவுவதாகக் குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டது.
2009இல் சீனாவிலிருந்தும் இரசியாவில் இருந்தும் இணைய ஊடுருவிகள்(Hackers) அமெரிக்க மின்சார வழங்கல் கட்டமைப்பின் இணையங்களை ஊடுருவியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஊடுருவிகள் அமெரிக்காவுடன் ஒரு போர் நடக்குமிடத்து அமெரிக்காவின் மின் விநியோகத்தை எப்படிச் சிதைப்பது என்பது பற்றியே அறிய முற்பட்டனர்.
இணையவெளி ஊடுருவல்கள்
கணனித் துறையில் ஆர்வம் மிக்க இளைஞர்கள் இணையவெளியூடாக மற்றவர்களின் கணனிகளை ஊடுருவது வழக்கம். இது ஒரு திருட்டுத் தொழிலாகவும் மாறியது. சிலர் மற்ற நாட்டுப் படைத் துறையினரின் கணனிகளை ஊடுருவதும் உண்டு. உலகெங்கும் நடக்கும் கணனி ஊடுருவல்களில் காற்பங்கு சீனாவில் இருந்து மேற் கொள்ளப் படுகின்றன என்கிறார்கள் இணையவெளி வல்லுனர்கள். இவற்றில் பெரும் பகுதி சீனப் படைத்துறையுடன் சம்பந்தப்பட்டவை. 2007-ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் திகதி அமெரிக்கப் படைத்துறைத் தலைமையகமான பெண்டகனின் கணனிகளை சீனாவில் இருந்து ஊடுருவியமை கண்டறியப்பட்டது. ஆனால் இவை சீனப் படைத்துறையில் இருந்து மேற் கொள்ளப்பட்டதா என்பதை பெண்டகனால் உறுதி செய்ய முடியவில்லை.
இணையவெளிப் போராளிகள்
சீனாவிடம் "இணையவெளி நீலப் படைப்பிரிவு" என்ற பெயரில் இணையவெளி நிபுணர்களைக் கொண்ட ஒரு படைப் பிரிவு உண்டு. இவை "இரவு யாளி" என்னும் பெயரில் பிரித்தானியாவிற்கு எதிராக ஒரு படை நடவடிக்கையை மேற் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்கவிற்கு பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் லொக்கீட் நிறுவனத்தின் கணனிகள் தொடர் ஊடுருவல் முயற்ச்சிகளுக்கு உள்ளாகி வருகிறது.
இப்போது அமெரிகாவின் பொருளாதார மற்றும் தொழில் நுட்பம் தொடர்பான தகவல்களை சீனாவும் இரசியாவும் இணைய ஊடுருவிகள்(Hackers) திருடுகின்றன என்ற குற்றச் சாட்டு இப்போது பகிரங்கமாக முன்வைக்கப்பட்டுள்ளது. "Foreign Spies Stealing US Economic Secrets in Cyberspace" என்னும் தலைப்பிலான அறிக்கையில் இனி வரும் காலங்களில் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் தொழில் நுட்பம் தொடர்பான தகவல்களை திருடுவது இன்னும் அதிகரிக்கும் என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
கடாஃபிக்கு எதிரான் போரில் ஊடுருவலைக் கைவிட்ட அமெரிக்கா
கடாஃபிக்கு எதிரான தாக்குதல்களை நேட்டோப் படையினர் ஆரம்பிக்கும் போது அமெரிக்கா லிபியாவின் இணையக் கட்டமைப்புக்களுக்குள் ஊடுருவி லிபியாவின் விமான எதிர்ப்புக் கட்டமைப்பைச் சிதைக்கும் திட்டத்தை இறுதியில் கைவிட்டது. தான் அப்படிச் செய்தால் சீனாவும் இரசியாவும் எதிர்காலத்தில் இந்த முறையைக் கூசாமல் பின்பற்றும் என அஞ்சியே அமெரிக்கா இத் திட்டத்தைக் கைவிட்டது.
இனிவரும் காலங்களில் இணையவெளிகளி ஊடுருவுவதும் அதைத் தடுப்பாதும் பெரும் போட்டியாக பல நாடுகளிடை அமையப் போகிறது.

Thursday, 3 November 2011
ஆளில்லாப் போர் விமானங்கள்: மார் தட்டிய அமெரிக்க தலையைச் சொறிகிறது
அமெரிக்காவின் உளவுத் துறையான சிஐஏயும் அமெரிக்க சார்புப் படைத்துறை விமர்சகர்களும் அமெரிக்கா தனது ஆளில்லாத விமானங்கள் மூலம் அண்மைக்காலங்களாக தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் ஈட்டிவரும் வெற்றிகள் பற்றி மார்தட்டிப் பேசி வந்தனர். இசுலாமியத் தீவிரவாத அமைப்புக்களின் பல முக்கிய தலைவர்கள் உட்படப் பலரை அமெரிக்க ஆளில்லா விமானங்கள் கொன்றன. நவம்பர் 2-ம் திகதி சோமாலியாவில் 20 பேரை அமெரிக்க ஆளில்லா விமானங்கள் கொன்றன. கடாஃபி இறுதியாக 70இற்கு மேற்பட்ட வாகனத் தொடரணியில் தப்பி ஓட முயன்றபோது அதன் மீதான முதல் தாக்குதல் அமெரிக்க ஆளில்லா விமானங்களாற்தான் மேற் கொள்ளப்பட்டன.
பாக்கிஸ்த்தானிலும் யேமனிலும் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் பல இசுலாமியத் தீவிரவாதிகளையும் அவர்களின் முக்கிய தலைவர்களையும் கொன்றுள்ளது. அமெரிக்க உளவுத்துறையான சிஐஏயும் சொந்தமாக ஆளில்லா விமானத் தளங்களை உலகின் பலபாகங்களிலும் இரகசியமாக அமைத்துள்ளது. 2012இல் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தனது படைகளை விலக்கிக் கொள்ளும் முடிவு ஆளில்லா விமானங்கள் மூலம் எதிர்காலப் போரை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடனேயே எடுக்கப்பட்டது. ஆளில்லாப் போர் விமானங்கள் அமெரிக்காவின் மரபு வழிப்போரிலும் திரை மறைவுப் படை நடவடிக்கைகளிலும் முக்கிய இடம் வகிக்கிறது. கடற் கொள்ளையர்களுக்கு எதிராகவும் அமெரிக்கா ஆளில்லா விமானங்களை களமிறக்கியுள்ளது.
ஆளில்லாப் போர் விமானங்கள் தொடர்பான முந்தைய பதிவுகள் பற்றி அறிய கீழுள்ள இணைப்புக்களில் சொடுக்கவும்:
ஆளில்லாப் போர்விமானங்கள் -1
ஆளில்லாப் போர்விமானங்கள் -2
அமெரிக்க ஆ.இ.வி களில் வைரஸ்
அப்பாவிகள் கொலை
அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் பல அப்பாவி மக்களையும் கொன்று குவித்துள்ளன என்று இப்போது பாக்கிஸ்தானில் மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். பாக்கிஸ்த்தானின் ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பிரதேச நகரான வாரிஸ்தானில் பல அப்பாவிகளை அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் கொன்றுள்ளன. ஆளில்லாப் போர் விமானங்களில் இருந்து பார்க்கும் போது ஒரு இசுலாமியத்தீவிரவாதிக்கும் ஒரு சாதாரண இசுலாமியக் குடி மகனுக்கும் வித்தியாசம் காணமுடியாது என்கிறார் மிஸ்ரா ஷாசாத் அக்பர் என்னும் பாக்கிஸ்தானியச் சட்டவாளர்.
ஊர்ப் பிணக்கைத் தீர்க்கக் கூடியவர்கள் கொலை
வாரிஸ்த்தானில் ஒரு பகுதியில் குரோமைட் சுரங்கம் தொடர்பாக இரு குழுக்களிடை நடந்த மோதலைத் தவிர்க்க அவர்கள் பேச்சு வார்த்தைக்காக ஒரு இடத்தில் ஒன்று கூடினர். அவர்கள் கைகளில் ஆயுதங்கள் இருந்தன. அங்கு சென்ற அமெரிக்க ஆளில்லா விமானம் அவர்கள் தலிபான்கள் எனக் கருதி அவர்கள் மீது மூன்று ஏவுகணைகளை வீசியது. நாற்பது அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.
அமெரிக்க ஆளில்லா விமானங்கள் பற்றிய காணொளிப்பதிவு:
பாக்கிஸ்த்தானின் இரட்டை வேடம்
பாக்கிஸ்தானிய படைத்துறை உயர் அதிகாரியான அஷ்ஃபக் கயானி தமது நாட்டுக்குள் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் நடாத்தும் தாக்குதல்கள் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அமெரிக்க ஆளில்லா விமானங்களின் தாக்குதலுக்கு எதிராக பாக்கிஸ்த்தான் தெரிவிக்கும் எதிர்ப்பு ஒரு இரட்டை வேடமே என்றும் கருதப்படுகிறது. திரைமறைவில் பாக் அரசு அமெரிக்க விமானங்கள் தமது நாட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடாத்துவதை அனுமதித்துள்ளன என்றே கூறப்படுகிறது.
பன்னாட்டுச் மனித உரிமைச் சட்டவாளர் கிளைவ் ஸ்ரஃபோர்ட் அமெரிக்காவின் போர் ஆப்கானிஸ்தானில் மட்டுமே. அதற்கும் பாக்கிஸ்த்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடாத்தும் உரிமை கிடையாது என்கிறார். பாக்கிஸ்த்தானுக்குள் அமெரிக்கா செய்பவை அப்பட்டமான கொலைகள் என்கிறார் அவர். New America Foundation என்னும் அமெரிக்க சிந்தனைப் பெட்டக (think-tank) நிறுவனம் இந்த ஆண்டு ஜூலைவரை அமெரிக்க ஆளில்லா விமானங்கள் 2551பேர்களைக் கொன்றதாகவும் அவற்றில் 80% மானவர்கள் போராளிகள் என்கிறது.
அமெரிக்காவிற்குத் தலையிடி
உலகின் பல பகுதிகளில் தமது அமெரிக்க ஆளில்லா விமானங்கள் மூலம் தாம் பெரு வெற்றியீட்டி வந்ததாக மார்தட்டிய அமெரிக்காவிற்கு இப்போது இரு முனைப் பிரச்சனை தலை தூக்கியுள்ளது. ஒன்று பன்னாட்டுச் சட்டப் பிரச்சனை. மற்றது அமெரிக்க ஆளில்லா விமானங்கள் தாக்குதல்கள் நடாத்தும் இடங்களில் பாதிக்கப் பட்ட மக்கள் மத்தியில் அதிக அமெரிக்க எதிர்ப்புத் தீவிரவாதிகள் உருவாக்கப்படுகிறார்கள். தலிபான் பாக்கிஸ்த்தான் எல்லை நகர்களில் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் தமக்கு ஆட்களைச் சேர்க்கும் கருவிகளாகச் செயற்படுகின்றன என்கின்றது. இதன் விளைவாக இசுலாமியத் தீவிரவாத அமைப்புக்களால் பல தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tuesday, 1 November 2011
சிரியக் கிளர்ச்சியும் ஹிஸ்புல்லா இயக்கமும்
1970-ம் ஆண்டு சிரியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஹஃபீஸ் அல் அசாத் படைத்துறைப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றி அங்கு தனது படைத்துறைச் சர்வாதிகார் ஆட்சியை நிறுவினார். 1963 இல் இருந்து சிரியா அவசர காலச் சட்டத்தின் கீழ் ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவரது ஆட்சிக்கு எதிராக சிரியாவின் ஹமா நகரத்தில் 1982-ம் ஆண்டு மக்கள் கிளர்ந்தெழுந்த போது ஹஃபீஸ் அல் அசாத் தனது இரும்புக்கரத்தால் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட கிளர்ச்சியாளர்களைக் கொன்று கிளர்ச்சியை அடக்கினார். 2000இல் ஹஃபீஸ் அல் அசாத் இறந்த பின்னர் அவரது மகன் பஸார் அல் அசாத் பதவிக்கு வந்தார்.
சிரிய மக்களின் எழுச்சி
அரபு நாடுகளில் இந்த ஆண்டின் ஆரம்பப்பகுதிகளில் மல்லிகைப் புரட்சி அடக்கு முறை ஆட்சியாளர்களுக்கு எதிராக எழுந்த போது அது சிரியாவையும் விட்டு வைக்கவில்லை. மார்ச் 15-ம் திகதியை சிரிய மக்கள் முகவேட்டின் மூலமாக (Facebook) தன்மான நாளாகப் பிரகடனப்படுத்தி தலைநகர் டமஸ்கஸில் சிரிய ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். சிரியாவின் தென்பிராந்திய நகரான டராவில் நூறுக்கு மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். கிளர்ச்சி லதாக்கியா போன்ற மற்ற பிரதான நகரங்களுக்கும் பரவ மார்ச் 29-ம் திகதி அதிபர் பஸார் அல் அசாத் பதவியில் இருக்க அவரது மந்திரிகள் பதவிவிலகினர். மறுநாள் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பஸார் அல் அசாத் கிளர்ச்சி ஒரு இசுலாமியச் சதி என்று குற்றம்சாட்டினார். பின்னர் முன்னாள் விவசாய அமைச்சர் அதேல் சஃபாரை புதிய ஆட்சியை அமைக்கும்படி பணித்தார். புதிய அரசு கிளர்ச்சிக்காரர்களை திருப்திப்படுத்தவில்லை. கிளர்ச்சி மேலும் வலுப்பெறுகிறது. மாணவர்கள் உட்படப் பலர் கிளர்ச்சியில் இணைந்து கொள்கின்றனர். கிளர்ச்சிய் பரவுவதையும் தீவிரமடைவதையும் உணர்ந்த பஸார் அல் அசாத் 1963இல் இருந்து நடைமுறையில் இருந்த அவசரகாலச் சட்டத்தை ஏப்ரல் 19-ம் திகதி இரத்துச் செய்தார். கிளர்ச்சிகள் தொடர்ந்ததால் பலர் மேலும் கொல்லப்படுகின்றனர். ஏப்ரில் 29-திகதி அமெரிக்காவும் மே-15ம் திகதி ஐரோப்பிய ஒன்றியமும் சிரியாமீது பொருளாதாரத் தடையை கொண்டு வந்தன. கிளர்ச்சிகள் மேலும் தீவிரமடைய ஜூனில் பல அரச படையினர் கொல்லப்படுகின்றனர்.
ஜுலையில் ஹமா நகரில் பெரிய பேரணி நடந்தது அதில் அமெரிக்கத் தூதுவரும் பிரெஞ்சுத் தூதுவரும் ஆர்ப்பாட்டக்காரர்களைச் சந்தித்தனர். மேற்குலக சார்பு அரசுகளைக் கொண்ட சவுதி அரேபியாவும் குவைத்தும் தமது தூதுவர்களை சிரியாவில் இருந்து திருப்பி அழைத்தன. சிரிய அரசு எதிர்ப்பாளர்களை பேச்சுக்கு அழைத்தது பல எதிர்க்கட்சியினர் பேச்சு வார்த்தையைப் புறக்கணித்தனர். ஹமா நகரில் படையினர் வீடுவீடாகச் சென்று மக்களைக் கைது செய்தும் தாக்கியும் அட்டகாசம் செய்தனர். அதில் 300இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பல சிரியர்கள் துருக்கியில் தஞ்சம் புகுந்தனர். துருக்கிய அரசு சிரிய மக்களின் எழுச்சி தொடர்பாக பேச்சு வார்த்தை நடாத்த ஒரு சிறப்புத் தூதுவரை சிரியாவிற்கு அனுப்பியது. ஆகஸ்ட் 17-ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன் சிரிய அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமது கரிசனையை வெளியிட்டார். மறுநாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிரிய அதிபர் பஸார் அல் அசாத் பதவி விலக வேண்டும் எனக் கோரிக்கையை விடுத்து அமெரிக்காவில் உள்ள சிரியச் சொத்துக்களை முடக்கினார். ஆகஸ்ட் 22-ம் திகதி பஸார் அல் அசாத் சிரியாவில் 2012 பெப்ரவரியில் பாராளமன்றத் தேர்தல் நடக்கும் என்றும் அதில் பாத் கட்சியினர் பங்கு பெற முடியாது என்றும் அறிவிக்கிறார். சில அரசியல் சீர் திருத்தங்கள் செய்யப்படும் என்றும் உறுதியளித்தார். அரபு லீக்கின் தலைவர் நபீர் எலரபி சிரியத் தலைநகர் டமாஸ்கஸ் சென்று பஸார் அல் அசாத்துடன் பேச்சு வார்த்தை நடாத்தினார். செப்டம்பர் 15-ம் திகதி சிரிய எதிர்ப்பாளர்கள் துருக்கிய நகர் இஸ்த்தான்புல்லில் கூடி தமது சிரியத் தேசிய சபை சிரியாவில் மாற்று ஆட்சியை அமைக்கும் என அறிக்கை விட்டனர். மேற்குலக பொருளாதாரத் தடையால் ஏற்பட்ட வெளிநாட்டு நாட்டு நாணய நெருக்கடியைத் தவிர்க்க சிரிய அரசு பல பொருட்களின் இறக்குமதி மீது கட்டுப்பாடு விதித்தது. எதிர்க் கட்சிகளின் சிரியத் தேசிய சபை சிரிய மக்களைப் பாதுகாக்கும் படி உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தன. ஒக்டோபர் 4-ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் சிரியாவிற்கு எதிராக கொண்டு வந்த கண்டனத் தீர்மானத்தை சீனாவும் இரசியாவும் இரத்துச் செய்கின்றன. ஒக்டோபர் 14-ம் திகதி சிரியாவில் 3000இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. ஒக்டோபர் 24-ம் திகதி அமெரிக்க தனது தூதுவரை சிரியாவில் இருந்து திருப்பி அழைத்தது. அரபு லிக்கிற்கு சிரிய அதிபர் பஸார் அல் அசாத் வழங்கிய உறுதி மொழிகள் பல இன்னும் அவரால் நிறைவேற்றப் படவில்லை.
சிரியாவில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சிமீது ஈரானும் லெபனானில் செயற்படும் தீவிர இயக்கமான ஹிஸ்புல்லாவும் அதிக கரிசனை கொண்டுள்ளன. லிபியாவில் கடாஃபியின் ஆட்சி வீழ்ச்சியடந்ததைத் தொடர்ந்து ஈரான் தான் மேற்கு நாடுகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக உணர்கிறது. கடாஃபியின் வீழ்ச்சிக்குப் பின்னர் அடுத்த இலக்கு பஸார் அல் அசாத்தான் என்று பல மேற்கு நாட்டு அரசியல்வாதிகள் பகிரங்கமாகக் கூறினர். கடாஃபியின் கொலைக்குப் பின்னர் சிரிய கிளர்ச்சியாளர்கள் புதிய உத்வேகம் பெற்றுள்ளனர். சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அங்கு மேற்குலக சார்பு ஆட்சி ஏற்பட்டால் ஆபிரிக்காக் கண்டத்தில் அதிலும் முக்கியமாக அரபு நாடுகளில் ஆதிக்கச் சமநிலை மேற்கு நாடுகளுக்கு பெரும் சாதகமாக அமைந்து விடும் என்று ஈரான், சீனா, இரசியா ஆகிய நாடுகள் உறுதியாக நம்புகின்றன. மேற்கு நாடுகள் லிபியாவில் மக்களைப் பாதுகாக்க விமானப் பறப்பற்ற பிராந்தியத்தை உறுதி செய்கிறோம் என்ற போர்வையில் ஒரு ஆட்சியாளர் மாற்றத்தை வெற்றிகரமாக ஆளணி இழப்பு ஏதுமின்றி நிறைவேற்றி விட்டன. ஹிஸ்புல்லா இயக்கத்திற்கான ஆயுத விநியோகம் ஈரானில் இருந்து சிரியா ஊடாகவே நடைபெறுகிறது. இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரமடையும் போதெல்லாம் ஹிஸ்புல்லா இயக்கத்தினரும் அவர்களது குடும்பத்தினரும் சிரியாவிலேயே தஞ்சம் புகுவதுண்டு. சிரியாவில் இருந்து ஹிஸ்புல்லா நிதி ஆயுத உதவி பெறுகிறது. ஹிஸ்புல்லா இயக்கம் சிரியப் பிரச்சனையில் அரசுக்கு சார்பாக இருப்பதை அதன் இரண்டாம் மூன்றாம் நிலைத் தலைவர்கள் விரும்பவில்லை. அது ஹிஸ்புல்லாவின் சமூக நீதிக் கொள்கைக்கு எதிரானது என்று அவர்கள் கருதுகின்றனர். அத்துடன் இது மொத்த அரபு மக்களின் எதிர்ப்புக்கு ஹிஸ்புல்லா உள்ளாகலாம் என்றும் அவர்கள் கருதுகின்றனர். அவை மட்ட்டுமல்ல இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு போன்ற மக்களாட்சித் தத்துவத்தில் அதிக நம்பிக்கை உள்ள அமைப்புக்களுடன் ஹிஸ்புல்லா கைகோர்க்க வேண்டும் என்றும் பல ஹிஸ்புல்லா அமைப்பினர் கருதுகின்றனர். மேலும் சில ஹிஸ்புல்லா இயக்கத்தினர் தமது இயக்கம் அடக்கு முறை ஆட்சியாளரான அல் அசாத்தை ஆதரிப்பதை விடுத்து சிரிய மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கருதுகின்றனர். இவற்றால் ஹிஸ்புல்லாத் தலைமை தாம் சிரியக் கிளர்ச்சியை ஆதரிப்பது போல் பகிரங்கமாக அறிவித்த போதும் அவர்கள் சிரிய ஆட்சி மாற்றம் தமக்கு ஆபத்தானது என்றே நம்புகின்றனர்.

Tuesday, 25 October 2011
அடுத்து சிரிய ஆட்சியாளர்களா?
![]() |
| அமெரிக்காவால் சுற்றி வளைக்கப்படும் ஈரான் |
மேற்குலக நாடுகள் பிரித்தாளும் கொள்கையுடையவை. நாம் பிரிந்திருக்கும்போது அவை எம்மை ஆள்வது சுலபம். இப்போது சிரியா பிரிந்து நிற்கிறது. வந்து தலையிடவும் என்று மேற்குலக நாடுகளுக்கு அழைப்பு விடப்படுகிறது. அமெரிக்கக் குடியரசுக் கட்சியின் மூதவை உறுப்பினர் ஜோன் மக்கெயின் அமெரிக்காவின் நிரலில் முதலாவதாக உள்ளது சிரியா என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். 2011 ஏப்ரல் மாதத்தில் இருந்தே சிரியாவில் ஒரு "மனிதாபிமானத் தலையீடு" அவசியம் என்ற கூக்குரல் எழுப்பப்பட்டுவருகிறது. கடாஃபி கொல்லப்பட்டவுடன் பல மேற்குலக ஊடகங்கள் அடுத்தது சிரியாவின் பஷார் அல் அசாத்தான் என்று எழுதி மகிழ்ந்தன. சிரியாவில் ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடிவரும் குழுக்களும் கடாஃபியின் வீழ்ச்சியால் புது உத்வேகம் பெற்றன. லிபியாவில் நேட்டோத் தலையீட்டை முன்னின்று நடாத்திய பிரான்ஸ் சிரியாதான் அடுத்த இலக்கு என்று அக்டோபர் 5-ம் திகதியே தெரிவித்து விட்டது.
மல்லிகைப் புரட்சி
மத்திய கிழக்கிலேயே மிக மோசமான அடக்கு முறையை மக்களின் மீது பிரயோகிக்கும் நாடாக சிரியா இருக்கிறது. துனிசியாவில் படித்துவிட்டு வேலை இல்லாமல் மரக்கறிக் கடை வைத்து தன் குடும்பத்தைப் பாதுகாத்து வந்த இளைஞர் பெண் காவல் துறை அதிகாரியால் தாக்கப்பட்டு முகத்தில் காறி உமிழப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த மல்லிகைப் புரட்சி துனிசிய ஆட்சியக் கலைத்துப் பின்னர் அப்புரட்சி எகிப்திற்குப் பரவி ஹஸ்னி முபாராக்கைப் பதவியில் இருந்து விரட்டி கடாஃபியை ஆட்சியைக் கவிழ்த்து அவரைக் கொலையும் செய்தது. 2011 மார்ச் மாதத்தில் இருந்தே சிரியாவில் மக்கள் பஷார் அல் அசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்து வருகிறார்கள். 1982இல் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு சிரிய ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்தபோது இருபதினாயிரத்துக்கும் அதிகமான கிளர்ச்சிக்காரர்கள் கொல்லப்பட்டனர்.
சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்யத் தொடங்கியதில் இருந்து இதுவரை மூவாயிரத்துக்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவிலும் லிபியாவைப் போல் சிரியத் தேசிய சபை அமைக்கப்பட்டுள்ளது. சிரியாவில் மக்களைப் பாதுகாக்க மற்ற நாடுகள் தலையிட வேண்டும் என சில அரச எதிர்ப்பாளர்கள் கோருகின்றனர். சில எதிர்க் கட்சிகள் மற்ற நாடுகளின் படைகள் சிரியாவுக்குள் வருவதை விரும்பவில்லை. அன்னியப் படைகள் சிரியாவுக்குள் வந்தால் சிரியாவின் ஆட்சியாளர்கள் பலமிக்க படையணிகளைக் கொண்டிருப்பதால் பெரிய போரும் பெரிய அழிவும் தவிர்க்க முடியாததாகிவிடும் என்று இவர்கள் கருதுகிறார்கள். லிபியாவில் கடாஃபியின் விமானங்கள் பொதுமக்களைக் கொல்கின்றன என்பதால் பொதுமக்களைப் பாதுகாக்க அங்கு விமானப்பறப்பற்ற பிரதேசம் ஒன்றை ஏற்படுத்துகிறோம் என்று நேட்டோ நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு ஆணையைப் பெற்றுக் கொண்டு தமது விமானங்களை லிபியாவில் பறக்கவிட்டு லிபியாவின் பொதுக் கட்டிடங்களை குண்டு வீசித் தகர்த்தன.
சிரியாவும் ஈரானும்
லிபியாவிற்கு அடுத்ததாக சிரியா என்றால் சிரியாவிற்கு அடுத்தபடியாக ஈரான்! இதை ஈரானிய ஆட்சியாளர்கள் நன்குணர்வர். சிரியாவில் ஒரு மேற்குலகு ஆதரவு அரசு அமைவதை ஈரான் சகல விதத்திலும் எதிர்த்து வருகிறது. சிரியாவில் மேற்குலக சார்பு நாடு அமைந்தால் அது ஈரானின் இருப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்பது பல படைத்துறை ஆய்வாளர்களின் கருத்தாகும். சிரியாவில் ஆட்சியாளர்களுக்கு எதிராக நடக்கும் கிளர்ச்சிகளில் பெரும்பாலானவை அமெரிக்க ஆதரவு நாடான ஜோர்டானுடனான எல்லை நகர்களிலேயே நடக்கின்றன. சிரிய ஆட்சியாளர்களுக்கான கிளர்ச்சி ஒரு அமெரிக்க - ஈரானிப் போட்டியாகவே பார்க்கப்படுகிறது. அண்மையில் சிரியாவிற்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் போர்ட்டுக்கு ஈரானியச் சதியால் கொலை அச்சுறுத்தல் ஏற்பட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. அமெரிக்கா ரொபேர்ட் போர்ட்டை திரும்ப அழைத்தும் விட்டது. கடாஃபி கொல்லப்பட்ட விதம் அமெரிக்காவிற்கு சாதகமாக அமையாது. சிரியாவிற்கு எதிராக பொருளாதரத் தடை விதிக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் சீனாவாலும் இரசியாவாலும் இரட்டை வீட்டோவிற்கு(இரத்து) உள்ளானது. சிரியாவின் படைபலமும் ஈரான், சீனா, இரசிய உதவிகளும் மேற்குலகிற்கு சாதகமாக இல்லை. சிரியாவின் ஆட்சியாளர்கள் சில விட்டுக் கொடுப்புக்களை மேற் கொள்ள வேண்டியிருக்கும்.
Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on ...
-
போரில் இறந்த எதிரியின் உடலைப் புணரும் பேய்களின் நாட்டுடன் நட்புறவைப் பேணுகிறது ஒரு மானங் கெட்ட நாடு பாதுகாப்பு வலயத்திற்கு வாவெனச் சொல்லிக...
-
வட கொரியா , ஈரான் ஆகிய நாடுகள் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் மிகவும் துரிதமாக வளர்ந்து வருகின்றன. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் வட கொரியா உலகின் ...