
அது ஒரு அழகிய இரவு
அது போல் இது இல்லை
.
அந்தக் கடற்கரை மணலில்
மிக இருண்ட பின்னே
சிறு குழந்தைகள் போல்
கட்டிப் புரண்ட கணங்கள்
.
அது ஒரு மறக்கமுடியாத இரவு
அது போல் இது இல்லை
.
அன்று நீ அருகில்
மிக மிக அருகில்
உன் சுவாச ஒலியை
நான் கேட்கும் படி
என் அருகில்.
.
அது ஒரு அற்புத இரவு
அது போல் இது இல்லை
.
பன்னிற விளக்குகள்
பொன்னென மின்ன
எம் முதற் சந்திப்பு
நடனத்தில் இணைந்தோம்.
.
அது ஒரு இனிய இரவு
அது போல் இது இல்லை.
.
கைகள் இணைந்தன
உதடுகள் இணைந்தன
உள்ளங்கள் மட்டும்
ஏன் இணைய மறுத்தன?
No comments:
Post a Comment