மத்திய கிழக்கைப் பொறுத்தவரை ஐக்கிய அமெரிக்காவின் முக்கிய தோழமை நாடாக துருக்கி திகழ்கிறது. நேட்டோவின் உறுப்புரிமை பெற்ற இஸ்லாமிய நாடு துருக்கியாகும். மத்திய கிழக்கில் அமெரிக்காவின் கேந்திரோபாய நண்பனான எகிப்த்தின்
முன்னாள் அதிபர் ஹஸ்னி முபராக் பதவியில் இருந்து விரட்டப்பட்ட பின்னரும்
பாஹ்ரெயின் அமெரிக்கக் கடற்படையின் எதிர்காலம் கேள்விக்குறியான நிலையிலும்
மத்திய கிழக்குப் பிராந்திய ஆதிக்கத்திற்கு அமெரிக்காவிற்கு ஒரு புதிய
நண்பன் அவசியம் தேவைப்படுகிறான். அதற்கு துருக்கிதான் அமெரிக்காவின்
முதல்தரத் தேர்வு.
மூன்று கணடங்கள் மத்தியில் துருக்கி
பூகோள ரீதியிலும் துருக்கி ஒரு முக்கியமான இடம் வகிக்கிறது. எண்ணெய் வளம்
மிக்க மத்திய கிழக்கு, பால்க்கன் பிராந்தியம், வளைகுடாப் பிராந்தியம்,
கோக்கஸ் பிராந்தியம் ஆகியவற்றிக்கு அண்மையில் துருக்கி அமைந்துள்ளது.
மேற்குலகின் கிழக்கு வாசல் துருக்கி என விபரிக்கப்படுகிறது. அத்துடன்
ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் ஆபிரிக்காவிற்கும் இடையில் உள்ள அனட்டோலியன்
குடாப் பிராந்தியத்தில் துருக்கி இருக்கிறது. மேற்குலகிற்கும் இசுலாமிய
உலகிற்கும் ஒரு பாலமாக துருக்கி செயற்படுகிறது. கருங்கடல், மத்திய
தரைக்கடல், ஈகன் கடல் (Aegean Sea) ஆகியவற்றிடை துருக்கி அமைந்துள்ளது.
மத்திய கிழக்கில் இருந்தும் வளைகுடாவில் இருந்தும் ஐரோப்பிய நாடுகளிற்கான
எரிபொருள் விநியோகத்திற்கு துருக்கி முக்கியத்துவம் பெறுகிறது.
அமெரிக்க - துருக்கி நட்பு பல இசுலாமியத் தீவிரவாதிகளை ஆத்திரப் படுதியுள்ளது என்பதை 01-02-2013இல் துருக்கியில் உள்ள அமெரிக்கத் தூதுவரகத்தில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் உணர்த்துகிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர் தடைசெய்யப்பட்ட இயக்கமான புரட்சிகர மக்கள் விடுதலை முன்னணியில் (Revolutionary People’s Liberation Front) உறுப்பினரான 30 வயதான Ecevit Şanli, என்பவர். மார்கசிய சிந்தனையைக் கொண்டோரால் 1978இல் ஆரம்பிக்கப்பட்ட புரட்சிகர மக்கள் விடுதலை முன்னணி துருக்கி நேட்டோவில் இணைந்ததை விரும்பவில்லை. 1980களில் பல தாக்குதல்களை இந்த இயக்கம் பல மேற்கத்திய இலக்குகளுக்கு எதிராகவும் துருக்கிய படைத்துறையினருக்கும் எதிராகவும் நடத்தியிருந்தது. பின்னர் உள் மோதல்களால் பிளவு பட்டு தன் செல்வாக்கை இழந்திருந்தது. ஆனாலும் அவ்வப்போது தாக்குதல்களை நடத்துவதுண்டு. 2012 செப்டம்பர் 11-ம் திகதி இஸ்த்தன்புல்லில் ஒரு காவற்துறை நிலையகத்தின் மீது ஒரு தற்கொலைத் தாக்குதல் நடந்தது. பனிப்போர்க்காலத்தில் உருவாக்கப்பட்ட புரட்சிகர மக்கள் விடுதலை முன்னணி இப்போது பலமிழந்து இருப்பதாகவும் இதன் உறுப்பினர்கள் இப்போது சில நூற்றுக் கணக்கானவர்களே என்றும் சொல்லப்படுகிறது. 2008 அல் கெய்தா உறுப்பினர்கள் என நம்பப்படுவோர் இஸ்த்தான்புல்லில் உள்ள அமெரிக்க தூதுவரகத்தின் மீது தாக்குதல் நடாத்தினர்.
சிரியத் தொடர்பு இல்லை என்கிறது.
சிரிய உள்நாட்டுப் போரில் துருக்கிய அரசு சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிரான கடும் நிலைப்பாட்டில் துருக்கிய அரசு இருக்கிறது. லிபியாவில் செய்தது போல் நேட்டோ சிரியாவில் தலையிட வேண்டும் என்று சிரிய ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். 01-02-2013இல் நடந்த குண்டுத்தாக்குதலில் சிரியாவோ சிரியப் பிரச்சனையோ சம்பந்தப்பட்டிருக்கவில்லை என துருக்கிய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் சிரியப் பிரச்சனையில் துருக்கி அமெரிக்காவுடன் நெருங்கிச் செயற்படுவது இக் குண்டுத்தாக்குதலுக்கான உந்து காரணியாக அமைந்துள்ளது என சில அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவிற்கு தலையிடி
துருக்கியில் நடந்த தாக்குதலும் அல்ஜீரியாவில் 2013 ஜனவரியில் அமெரிக்கர் உட்படப் பலர் கொல்லப்பட்டதும் 2012 செப்டம்பரில் லிபிய பென்காஜி நகரில் உள்ள அமெரிக்கத் தூதுவர் கொல்லப்பட்டதும் அமெரிக்காவிற்கு மத்திய கிழக்கில் பெரும் தலையிடு கொடுக்கக் கூடிய சூழ்நிலை உருவாகிவிட்டது என்பதை எடுத்துக் காட்டுகிறது. அமெரிக்கா உலகெங்கும் உள்ள தனது பிரதிநிதிகளின் பாதுகாப்பை மீளாய்வு செய்கிறது.
Saturday, 2 February 2013
Friday, 1 February 2013
அல் கெய்தா வட ஆபிரிக்காவில் அமெரிக்கர் மீது தாக்குதலைத் தீவிரப்படுத்துமா?
AQIM எனப்படும் முகரெப் பிராந்திய அல்கெய்தா இயக்கம் அண்மைக்காலமாக தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. மாலி நாட்டைத் தன் வசமாக்கும் அல் கெய்தாவின் திட்டம் பாதி நிறைவேறிய நிலையில் பிரான்ஸ் அங்கு தலையிட்டு மாலியில் உள்ள புனிதப் போராளிகளுக்கு எதிராக தாக்குதல் நடாத்தி வருகிறது.
மாற்றப்பட்ட தந்திரோபாயங்கள்
அல் கெய்தாவிற்குத் தெரியாமல் அரபு வசந்தத்தம் என்னும் பெயரில் துனிசியா, லிபியா, எகிப்து ஆகிய நாடுகளில் இசுலாமியர்கள் கிளர்ந்து எழுந்து ஆட்சியாளர்கலை விரட்டினர். இந்தப் புரட்சிகளில் அல் கெய்தா ஓரங்கட்டப்பட்டிருந்தது. பின்னர் அல் கெய்தா விழித்துக் கொண்டு தனது தந்திரோபாயமான வட அமெரிக்க நாடுகளுக்கும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் எதிரான புனிதப்போரோடு மட்டும் நிற்காமல் அடைக்கு முறை ஆட்சியாளர்களுக்கு எதிரான இசுலாமிய மக்களின் எழுச்சியிலும் தன்னை இணைத்துக் கொள்கின்றது. இந்த மாற்றப்பட்ட தந்திரோபாயத்தின் ஒன்றாக சிரியாவில் ஆட்சியாளர் பஷார் அல் அசாத்திற்கு எதிரான போராளிகளுக்குள் அல் கெய்தா ஊடுருவிக் கொண்டது. மாலியில் ஆட்சியாளர்களுக்கு எதிராக துவாரெக் என்னும் சிறுபான்மை இனத்தவர் போராடி பெரும் நிலப்பரப்பைக் கைப்பற்றிய போது தானும் அதற்குள் நுழைந்து கொண்டது. அல் கெய்தாவிற்கு எதிரான போரில் வட அமெரிக்க நாடுகளும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் தமது தந்திரோபாயங்களையும் மாற்றிக் கொண்டன. தாம் நேரடியாக அல் கெய்தாவிற்கு எதிராக போர் புரிவதைத் தவிர்த்து ஆபிரிக்க நாடுகளில் தமக்கு ஆதரவான நாட்டுப் படைகளுக்கு பயிற்ச்சி அளித்து அவர்களை தமது தலைமையின் கீழ் இசுலாமியப் போராளிகளுடன் போர் புரியும் தந்திரத்தை உருவாக்கின. இந்த இரு மாற்றப்பட்ட தந்திரோபாயங்கள் மாலியில் மோதிக் கொண்டிருக்கின்றன.
மாலியில் பின் வாங்கும் புனிதப் போராளிகள்
பிரெஞ்சுப் படைகளும் மற்றும் சாட் போன்ற பல வட ஆபிரிய்க்க நாட்டுப் படைகளும் மாலியில் ஆட்சியாளர்களுக்கு எதிரான புனிதப் போராளிகளுக்கு எதிராக தமது உயர்தர விமான மற்றும் தரைப் படைகளால் தாக்கும் போது அல் கெய்தாவினது அன்சர் டைன் எனப்படும் துவாரெக் இன விடுதலைப் போராளிகளும் பின் வாங்கி வருகின்றனர். இவர்கள் பின்னர் ஒன்று திரண்டு பெரும் கரந்தடிப் போரை ஆரம்பிப்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.
அல்ஜீரியப் பணயக் கைதிகள்
பிரான்ஸ் மாலியில் தாக்குதல் தொடங்கியவுடன் அல்ஜீரியாவில் இயற்கை வாயுத் தொழிற்சாலையில் 16-01-2013இல் 132 வெளிநாட்டவர் உட்பட 600 பேர் பணயக் கைதிகளா மொக்தர் பெல்மொக்தர் தலமையிலான அல் கெய்தா பிரிவினரால் சிறை பிடிக்கப்பட்டனர். இதில் ஆச்சரியம் கொடுக்கும் அம்சம் அல் கெய்தாவின் புனித போராளிகள் இயற்கை வாயுத் தொழிற்சாலையில் பணிபுரிந்தார்கள் என்பதே. தீவிரவாதிகள் விடயத்தில் கடுமைப் போக்குடைய அல்ஜீரிய அரசு ஒரு மணித்தியாலத்திற்குள் பணயக் கைதிகளில் நாடுகளான அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானிய, ஜப்பான் ஆகியவற்றுடன் கலந்தாலோசிக்காமல் படை நடவடிக்கையை தீவிரவாதிகளுக்கு எதிராக மேற்கொண்டது.
மேலும் பல பணயக் கைதிகள் நாடகம் அரங்கேறலாம்
அல்ஜீரியாவில் செய்தது போல் மேலும் பல பணயக் கைதிகள் சிறை பிடிப்பு நாடகங்கள் பல இனி வட ஆபிரிக்காவில் அரங்கேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்ஜீரியாவில் மொக்தர் பெல்மொக்தரின் படையினரின் நடவடிக்கையைத் தொடர்ந்து அமெரிக்க உளவுத் துறையினர் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் ஆப்கானிஸ்த்தானிலும் யேமனிலும் அமெரிக்கா தனது முழுக்கவனத்தையும் வளங்களையும் குவித்து விட்டதால் அல் கெய்தாப் போராளிகள் இப்போது தமது நடவடிக்கைகளை இப்போது வட ஆபிரிக்காவிற்கு நகர்த்தியுள்ளனர். மேலும் உளவுத்தகவல்களின் படி வட் ஆபிரிக்காவில் பரந்ததும் தீர்க்கமானதுமான தீவிரவாத நடவடிக்கைகளுக்கு அல் கெய்தா திட்டம் தீட்டி வருவதாக அறியப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகன் நிகர் நாட்டில் தனது ஆளில்லாப் போர் விமானத் தளம் ஒன்றை முதலில் அமைக்கவிருக்கிறது. நிகர் நாடு மாலி மற்றும் அல்ஜீராநாடுகளின் எல்லையில் இருக்கிறது. மேலும் தருணம் வரும் போது மாலியிலும் ஆளில்லாப் போர் விமானத் தளம் அமைக்கப்படும். இனி புனிதப் போர் ஆப்கானிஸ்தானில் இருந்து வட ஆபிரிக்காவிற்கு நகரவிருக்கிறது.
சீனாவை ஓரம் கட்ட முக்தலர் பெல்முக்தர் பாவிக்கப்படுகிறாரா?
முக்தர் பெல்முக்தர் தலைமையிலான புனிதப் போராளிக் குழுக்கள் அல் கெய்தாவில் இருந்து பிளவு பட்டுவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. முக்தரின் பணயக் கைதிகல் நாடகம் மேற்குலகினரின் ஆசியுடனேயே நடத்தப்பட்டதாகவும் சில செய்திகள் தெரிவிக்கின்றன. இதைச் சாட்டாக வைத்துக் கொண்டு மேற்கு நாடுகள் தமது படைகளை வட ஆபிரிக்காவிற்கு அனுப்பி அங்கு சீனாவிற்கு சார்பான ஆட்சியாளர்கள் உருவாகாமல் தடுப்ப்தே அவர்களினந்தந்திரமாகும் என்றும் செய்திகள் கசிந்துள்ளன.

Thursday, 31 January 2013
இஸ்ரேல் விமானத் தாக்குதல்: சிரியப் போரில் திடீர்த் திருப்பம்
சிரியா "விஞ்ஞான ஆய்வு மையம்" என்று சொல்லும் நிலையத்தின் மீது இஸ்ரேலிய
விமானம் தாக்குதல் நடாத்தியது. இத்தாக்குதலை சிரியாவும் உறுதி செய்துள்ளது.
இத்தாக்குதலை அமெரிக்காவும் உறுதி செய்துள்ளது. லெபனான் தனது வான்
பரப்பினூடாக இஸ்ரேலிய விமானம் பறந்ததை உறுதி செய்துள்ளது.
பன்னாட்டுச் சமூகத்தின் பாரா முகம்
சிரியாவில் தொடரும் கடும் உள்நாட்டுப் போரில் பல அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர். நாற்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் ஏற்பட்டும் பன்னாட்டுச் சமூகம் எனத் தம்மை அழைத்துக் கொள்வோர் ஏதும் செய்யாமல் இருக்கிறார்கள். மாலியில் அல் கெய்தா பெரும் நிலப்பரப்பை கைப்பற்றிய செய்தி வந்தவுடன் விரைந்து களத்தில் இறங்கியது பிரெஞ்சுப் படை.
முரண்பட்ட செய்திகள்
இஸ்ரேலிய விமானம் சிரியாவில் இருந்து லெபனான் நோக்கி நகர்ந்து கொண்டிருந்த ஒரு பார ஊர்தியைத் தாக்கியதாக ஒரு செய்தி சொல்கிறது. இன்னொரு செய்தி சிரியாவின் "விஞ்ஞான ஆய்வு மையம்" ஒன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடாத்தியதாகச் சொல்கிறது. இஸ்ரேலிய அரசு மௌனமாக இருக்கிறது. சிரிய அரசு "விஞ்ஞான ஆய்வு மையம்" மீது குண்டுத்தாக்குதல் நடந்தது என்றும் இருவர் பலியானதுடன் ஐவர் காயம் என்றும் சொல்கிறது. 2007-ம் ஆண்டு இஸ்ரேல் சிரியா அணுக்குணு உற்பத்தியில் ஈடுபட முயன்ற போது இஸ்ரேலிய விமானங்கள் அணு ஆய்வு மையத்தின் மீது குண்டு வீசி அழித்தது.
வேதியியல்(இரசாயன) குண்டுகள் அழிக்கப்பட்டதா.
சிரியாவிடம் வேதியியல் குண்டுகள் இருக்கின்றன என்றும் அக்குண்டுகளை அதிபர் பஷார் அல் அசாத் தனக்கு எதிராகக் கிளர்ச்சி செய்பவர்கள் மீது வீசலாம் என்ற அச்சம் நீண்ட நாட்களாக இருக்கிறது. ஐக்கிய அமெரிக்கா இது தொடர்பாக சிரிய அரசைக் கடுமையாக எச்சரித்திருந்தது. சிரிய வேதியியல் படைக்கலங்களை லெபனானியப் போரளி இயக்கமான ஹிஸ்புல்லாவிற்கு சிரிய அதிபர் அசாத் கொடுத்து விடுவாரா என்றபயம் நீண்ட நாட்களாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. அது மட்டுமல்ல சிரியாவில் இருந்து ஹமாஸ் இயக்கத்திற்கு இரசியத் தயாரிப்பு SA-17 விமான எதிர்ப்பு ஏவுகணைகள் அனுப்பப்பட்டு விடுமா என்ற பயமும் இருக்கிறது. இஸ்ரேலும் ஐக்கிய அமெரிக்காவும் சிரியாவைத் தமது தீவிர கண்காணிப்பின் கீழ் வைத்துள்ளன. சிரியாவில் இருந்து ஏதாவது படைக்கலன்கள் ஹமாஸிற்குப் போய்ச் சேருகிறதா என்பதை செய்மதிகள் மூலமும் தமது உள்வாளிகள் மூலமும் கண்காணித்த படியே இரு நாடுகளும் இருக்கின்றன. சிரியாவின் அழிவு விளைவிக்கக் கூடிய படைக்கலன்கள் ஹிஸ்புல்லாவிற்கு மட்டுமல்ல சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் மத்தியில் இருக்கும் இசுலாமியப் போராளிகள் கைகளுக்குப் போவதையும் இஸ்ரேலும் அமெரிக்காவும் விரும்பவில்லை. ஹிஸ்புல்லாவிற்கும் பஷார் அல் அசாத்திற்கும் நெருங்கிய நட்பு உண்டு. இஸ்ரேலியப் பிரதமர் சில்வன் ஷலோம் சிரியப் படைக்கலன்கள் இசுலாமியத் தீவிரவாதிகள் கைகளுக்கு இடம் மாறுவது சகல ஆபத்து எல்லைகளையும் தாண்டுவதாக இருக்கும் என எச்சரித்திருந்தார். Movement of chemical weapons to Islamist rebels in Syria or to the Hezbollah guerrilla group in Lebanon would be “a crossing of all red lines that would require a different approach, including even preventive operations.
லெபனானுடாக பறப்பு
சிரியா "விஞ்ஞான ஆய் மையம்" வுஎன்று சொல்லும் நிலையம் உண்மையில் வேதியியல் படைக்கலக் கிடங்கு என்று சொல்லப்படுகிறது. இதைக் கைப்பற்ற சிரியக் கிளர்ச்சியாளர்கள் கடும் முயற்ச்சியில் ஈடுபட்டும் கைப்பற்ற முடியாமம் இருக்கின்றனர். இஸ்ரேலில் இருந்து வந்த ஆளில்லா விமானம் "விஞ்ஞான ஆய் மையத்தின் மீது குண்டுகளை வீசியதாக நம்பப்ப்டுகிறது. சிரிய கதுவி(ரடார்)களுக்குள் மண்ணைத் தூவுவதற்காக அவ்விமானம் தாழப்பறந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. லெபனானினூடாகவே இஸ்ரேலிய விமானம் பறந்து சிரியாவிற்குள் புகுந்தது. 29-01-2013 செவ்வாய் கிழமை முடிவடைந்த 24 மணி நேரத்திற்குள் 12 இஸ்ரேலிய விமானங்கள் தமது வான்பரப்பிற்குள் அத்து மீறி நுழைந்ததாக லெபனானிய அரசு உறுதி செய்துள்ளது. கடைசிப் பறப்பு செவ்வாய்க் கிழமை இரவு 7.00 அளவில் நிகழ்ந்தது என்கிறது லெபனான். சியா முஸ்லிம்கள் ஒரு அணுகுண்டு தயாரிப்பில் கடந்த பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். ஈரான் இதில் கணிசமான அளவு முன்னேறியுள்ளது. ஈரான் அணு ஆய்வு மையங்களில் மீது தாக்குதல் நடத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.
இஸ்ரேலின் விமான ஆதிக்கம்
லெபனான் மீதும் பலஸ்தீனத்தின் மீதும் இஸ்ரேலிய ஆதிக்கத்தின் ஆணி வேராக இருப்பது அதன் விமானப்படையின் வலிமையும் இஸ்ரேலுக்கு எதிராக செயற்படும் ஹிஸ்புல்லாவிடமோ அலல்து ஹமாஸிடமோ தகுந்த விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இல்லாமல் இருப்பதே. சிரியாவிடம் இருக்கும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் ஹிஸ்புல்லாப் போராளிகள் கைக்குப் போனால் இஸ்ரேலிம் விமான ஆதிக்கம் பலவீனமடைந்து படைத் துறை சமநிலையை இஸ்ரேலுக்குப் பாதகமாகத் திருப்பும். சிரியாவிடம் சிறந்த விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் நீண்டதூரம் தாக்கக்கூடிய SCUD ஏவுகணைகளும் இருக்கின்றன. லிபியாவில் செய்தது போல் நேட்டோப் படைகள் சிரியாவில் தாக்குதல் நடத்துவதைத் தடுக்க இரசியா தனது சிறந்த புதிய ரக விமான எதிர்ப்பு முறைமையை சிரியாவில் நிறுவியிருந்தது. இரசியாவின் படைத்தளம் உள்ள ஒரே ஒரு நாடு சிரியா மட்டுமே. இஸ்ரேலிய விமானப் படைத் தளபதி Major General Amir Eshel இஸ்ரேலில் நடந்த பன்னாட்டு மாநாடு ஒன்றில் உரையாற்றும் போது சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போர் இறுதியில் எப்படி முடியும் என்பது யாருக்கும் தெரியாது; அங்கு பெரும் இன மோதல் உருவாகலாம்; போரின் பின்னர் சிரியாவின் பெரும் தொகையான சிறந்த படைக்கலன்கள் அவற்றில் மரபு வழிப் படைக்கலன்களும் உண்டு; அவை யார் கைகளில் போய் முடியும் என்றார்.
"Country falling apart. Nobody has any idea right now what is going to happen in Syria on the day after, and how the country is going to look. This [sectarian crisis] is happening in a place with a huge weapons arsenal, some of which are new and advanced, and some of which are not conventional."
ஹிஸ்புல்லாவும் இஸ்ரேலும் 2006-ம் ஆண்டு 34 நாட்கள் மோதிக் கொண்டன அதன்போது 1200 ஹிஸ்புல்லாவினரும் 160 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் இருதரப்பும் மோதிக் கொள்ளவில்லை. ஆனால் ஹிஸ்புல்லா போராளித் தலைவர்களை அவ்வப்போது இஸ்ரேல் இரகசியமாகக் கொன்று வருகிறது. 2012இல் ஹங்கேரியில் இஸ்ரேலிய உல்லாசப் பயணிகளை ஈரானும் ஹிஸ்புல்லாவும் இணைந்து கொலை செய்தன என்று இஸ்ரேல் குற்றம் சாட்டியது. 2006இன் பின்னர் ஹிஸ்புல்லா ஈரானின் உதவியுடன் தனது படைக்கலன்களைப் பெருக்கி வருகிறது. இஸ்ரேலின் எந்தப் பகுதியையும் தாக்கக் கூடிய ஏவுகணைகள் ஹிஸ்புல்லாவிடம் இருப்பதாக இஸ்ரேல் சொல்கிறது. இஸ்ரேல் தனது விமானத் தாக்குதல் மூலம் கடுமையான பதிலடி கொடுக்கும் என்ற படியால் ஹிஸ்புல்லா பொறுத்திருக்கிறது எனப்படுகிறது.
இஸ்ரேலியப் படைகள் தொடந்து தாக்குதல் நடாத்துமா?
பரம வைரிகளான சிரியாவும் இஸ்ரேலும் 1973-ம் ஆண்டு நடந்த அரபு - இஸ்ரேல் போருக்குப் பின்னர் மோதிக் கொண்டதில்லை. 2007-ம் ஆண்டு இஸ்ரேல் சிரியாவின் அணு ஆராய்ச்சி நிலையத்தில் தாக்குதல் நடாத்தி அழித்தது. மற்றும் படி இரு நாடுகளும் மோதிக் கொண்டதில்லை. 2007-ம் ஆண்டுத் தாக்குதலுக்கு சிரியா பதிலடி கொடுக்கப் போவதாகச் சூழுரைத்திருந்தது. ஆனால் இன்றுவரை எதுவும் செய்ததாக இல்லை. இஸ்ரேல் தனது விமான ஆதிக்கத்தை மத்திய கிழக்கில் தக்க வைத்துக் கொள்ள சிரியாவிடம் இருக்கும் வேதியியல் படைக்கலங்களையும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் நீண்ட தூரம் தாக்கக் கூடிய ஏவுகணைகளையும் அழித்தே ஆக வேண்டும் என்ற நிலையில் இருக்கின்றது. இஸ்ரேல் 29-01-2013இலன்று நடாத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் முகமாக சிரிய அதிபர் பஷார் அல் அசாத் என்ன நடவடிக்கைகளை எடுப்பார் என்ற கேள்வியும் இருக்கிறது. இஸ்ரேலின் தன்னைச் சூழ இருக்கும் இசுலாமியர் கைகளில் காத்திரமான படைக்கலன்கள் இருக்கக் கூடாது என்ற நிலைப்பாடு சிரிய உள்நாட்டுப் போரில் பெரும் திருப்பு முனையாக இருக்கப்போகிறது.

Tuesday, 29 January 2013
சேலைக் கடையில் பயங்கரவாதம் சமையலறையில் தீவிரவாதம்
ரஜனியையோ கமலையோ சல்மான் கானையோ
ரித்திக் ரோசனையோ மாதவனையோ
அஜித்தையோ விஜய்யையோ
திருமணம் முடிக்க முடியாமல் போனதால்
யாரையோ திருமணம் செய்து
திண்டாடும் மனைவிகள்
ஆயிரமாயிரம் இங்குண்டு
சேலைக் கடையில் பயங்கரவாதம்
சமையலறையில் தீவிரவாதம்
படுக்கையறையில் பணவிவகாரவாதம்
எனப் பலவாதம் புரியும் மனைவியர்
ஆயிரமாயிரம் இங்குண்டு
onlineஇல் Paypal செய்வதிலும் பார்க்க
விரைவாக offline இல் பணப்பரிமாற்றம் செய்து
மாதக் கடைசியில் வந்த சம்பளத்தை விரைவில்
ஒரு வாரத்தில் காலியாக்கும் மனைவியர்
ஆயிரமாயிரம் இங்குண்டு
இந்தச் சில ஆயிரங்களை ஒதுக்கிவிட்டால்
துன்பத்தில் தோள் கொடுக்கும் தோழனாக
சோர்வில் மடி கொடுக்கும் தாயாக
தவறினால் நல் வழிப்படுத்தும் தந்தையாக
ஐங்கணைகள் தாக்கும் போது
அணைத்துக் காக்கும் அணையாக
அனைத்திலும் நல்ல துணையாக
வந்து எம்மை மகிழ்விக்கும்
நல்ல மனைவியரும் ஆயிரமாயிரம் உண்டு
இணையவெளிப்போரில்(Cyber warfare) அமெரிக்கா அதிக அக்கறை.
வருங்காலத்தில் நாடுகளுக்கிடையிலான போர் தரை, கடல், விண்வெளி மார்க்கமாக மட்டுமல்லாமல் இணையவெளியிலும் நடக்கவிருக்கிறது. அதற்கான தாயாரிப்புக்களில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. அது மட்டுமல்ல பல போராளி இயக்கங்களும் இதில் தமது திறமையை வளர்த்து வருகின்றன.
இணையவெளிப் போர் பலவகைப்பட்டதாக இருக்கிறது. இணையவெளிமூலம் மற்றவர்களை உளவு பார்த்தல், மற்றவர்களின் சமூக வழங்கல்களை நிர்மூலமாக்குதல், முக்கிய தகவல்களை அழித்தல், பல பொறிகளை இயங்காமல் முடக்குதல், தொடர்பாடல்களை ஒற்றுக் கேட்டல், தொடர்பாடல்களை முடக்குதல், தொடர்பாடல்களை திசைதிருப்புதல் இப்படிப்பல செய்ய முடியும்.
இணையவெளி ஊடுருவல்கள் வர்த்தகரீதியாகவும் சுரண்டப்படுகின்றன. ஒரு நிறுவனம் பெரும் தொகைப் பணம் செலவழித்து கண்டுபிடித்த தொழில்நுட்பங்களை மற்ற நிறுவனங்கள் இணையவெளியூடாகத் திருடி விடுகின்றன. பல அமெரிக்க நிறுவங்களின் தொழில்நுட்ப இரகசியங்கள் பல சீனாவில் இருந்து திருடப்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
சீனாவிடம் "இணையவெளி நீலப் படைப்பிரிவு" என்ற பெயரில் இணையவெளி நிபுணர்களைக் கொண்ட ஒரு படைப் பிரிவு உண்டு. இவை "இரவு யாளி" என்னும் பெயரில் பிரித்தானியாவிற்கு எதிராக ஒரு படை நடவடிக்கையை மேற் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்கவிற்கு பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் லொக்கீட் நிறுவனத்தின் கணனிகள் தொடர் ஊடுருவல் முயற்ச்சிகளுக்கு உள்ளாகி வருகிறது. முழுக்க முழுக்க கூகிளின் இணையத் தளம் போல் போலியான ஒரு இணையத்தளத்தை சீனாவில் உருவாக்கி அதில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினர் உண்மை என நம்பி உள் நுழைந்து தமது மின்னஞ்சல்களின் கடவுச்சொற்களை பதிந்தனர். இதனால் பல இரகசியங்கள் திருடப்பட்டன. இணையவெளிப் போர்முனையில் சீனா முன்னணியில் இருக்கிறது என்று ஐக்கிய அமெரிக்கா அஞ்சுகிறது. இதனால் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை தனது இணையவெளிப் போர் முறைமைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளதாக 27-01-2013இலன்று செய்திகள் வெளிவந்தன.
அமெரிக்காவின் படையினர் இணையவெளியிலும் செய்மதித் தொடர்புகளிலும் பெரிதும் தங்கியிருக்கின்றனர் என்பதை உணர்ந்த சீனா இணைய வெளியில் தனது போர் முறைகளை வளர்த்தது. அத்துடன் செய்மதிகளை நிலத்தில் இருந்து செலுத்தும் ஏவுகணைகள் மூலம் அழிக்கும் தொழில்நுட்பத்தையும் உருவாக்கியது.
அமெரிக்காவின் Cyber-Pearl Harbor
அமெரிக்காவின் மின்வழங்கல், நீர் வழங்கல், மற்றும் அத்தியாவசியத் தேவைகள் வழங்கும் கணனிகளை இணையவெளித் தாக்குதல் மூலம் முடங்கச் செய்து அமெரிக்காவையே செயலிழக்கச் செய்ய அதன் எதிரி நாடுகளால் முடியும் என்று பல நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது ஜப்பான் இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கத் துறைமுகமான Pearl Harborஇல் தாக்குதல் செய்து பல அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களை அழித்தது போல் பேரிழப்பு விளவிக்கக் கூடியதாக இருக்கும் என அவர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்க அணுப்படைகலன்களை ஊடுருவிகள் கைப்பற்றலாம் எனவும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோபல் பரிசையும் சீனா விட்டு வைக்கவில்லை
சீன ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த சீனக் குடிமகனான லியூ சியாபோவிற்கு நோபல் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தவுடன் நோர்வேயில் உள்ள நோபல் பரிசுக் குழுவினரின் கணனிகள் சீனாவில் இருந்தது ஊடுருவி அவர்களின் இணையத் தளத்தைப் பார்ப்பவர்களின் கணனிகளில் வைரஸ் பரவும் படி செய்யப்பட்டிருந்தது. சீனாவின் இது மாதிரியான செய்கைகளைப்பற்றி ஒரு இராசதந்திரி கருத்துத் தெரிவிக்கையில் சீனா தனது நாட்டைப்பற்றியோ அல்லது ஆட்சியாளர்களைப் பற்றியோ மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று ஒரு போதும் கவலைப்படுவதில்லை.
இந்தியப் படைத்துறை இரகசியங்கள் சீனாவின் கையில்
சீன இணைய ஊடுருவிகள் பலதடவை இந்தியப் படைத்துறைக்குத் தெரியாமல் அவர்களின் கணனிகளை ஊடுருவி பல தகவல்களைப் பெற்றுள்ளார்கள் என நம்பப்ப்டுகிறது. இதில் எந்த அளவு தகவல்கள் பாக்கிஸ்தானுக்குப் பரிமாறப்பட்டது என்பது பெரும் கேள்வி. மும்பையைச் சேர்ந்த ஒரு இணையவெளி ஊடுருவி தான் அரச அதிகாரிகளுக்கு தனது வைரஸை இணைப்பாகக் கொண்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பினால் அதில் 75% மானவர்கள் அதைத் திறந்து பார்ப்பார்கள் என்றும் அதன் மூலம் தன்னால் பல அரச செயற்பாடுகளை மறு நாள் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்றார்.
- A Mumbai-based hacker specializing in network penetration says: “If I was attacking the Government today, I would send every email address in every government department a malicious link or attachment. I have no doubt that it would be opened by over 75% of people, and that I would have control of government systems at multiple levels by the end of tomorrow afternoon. Sadly, this is neither a sophisticated nor a novel attack.” - from the indiasite.com
ஆரம்பித்து வைத்தது அமெரிக்கா
அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏயின் கணனிகளை ஒன்றாக இணைத்து ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளச் செய்ததன் மூலம் இணையம் முதலில் கண்டறியப்பட்டது. அதே அமெரிக்காதான் இஸ்ரேலுடன் இணைந்து இணையவெளிப் போரை ஆரம்பித்து வைத்தது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது பல இணைய வெளித் தாக்குதல்களை மேற்கொண்டன.
இணையவெளி Sleeper Cells
அமெரிக்காவும் தனக்கே உரித்தான பாணியில் இணையவெளிப் போரில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அமெரிக்கா தனது எதிரி நாடுகளின் கணனிகளை இணைய வெளியூடாக ஊடுருவி அவற்றில் தனது வைரஸ்களை உட்புகுத்து வைத்துள்ளதாக நம்பப்படுகிறது. அந்த வைரஸ்கள் உறக்க நிலையில் இருக்கும். அமெரிக்காவிற்கும் அந்த நாட்டிற்கும் இடையில் போர் மூளும் போது அவை அங்கு பல கணனிகளை முடக்குதல், முக்கிய தகவல்களை அழித்தல், பல பொறிகளை இயங்காமல் முடக்குதல், தொடர்பாடல்களை ஒற்றுக் கேட்டல், தொடர்பாடல்களை முடக்குதல், தொடர்பாடல்களை திசைதிருப்புதல் இப்படிப்பலவற்றைச் செய்யும். அமெரிக்கா தற்போது 900 பேர் கொண்ட இணையவெளிப் படையணியைக் கொண்டுள்ளது. விரைவில் இது 4000ஆக உயர்த்தப்படவிருக்கிறது
பல நாடுகள் இணையப் படையனியைக் கொண்டுள்ளன.
Cyber Warriors Team எனப்படும் ஈரானிய கணனி நிபுணர்கள் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவின் கணனிகளை ஊடுருவினார்கள் என்ற செய்தி 2012 மே மாதம் வெளிவந்திருந்தது. அதுமட்டுமல்ல ஈரானில் இருந்து அமெரிக்காவின் பிரபல வங்கிகளையும் இணையவெளியூடாக ஊடுருவி தகவல் அழிப்புக்கள் செய்தாதாகவும் செய்திகள் வெளி வந்திருந்தன. பிரித்தானியா ஜேர்மனி போன்ற நாடுகள் தம்மிடம் இணையப் படையணி இருப்பதைப் பகிரங்கமாக ஒப்புக் கொண்டன. மும்மர் கடாஃபியைப் பதவியில் இருந்து நீக்கும் படை நடவடிக்கையின் போது லிபிய விமான எதிர்ப்பு முறைமைமளை இணைய வெளியில் ஊடுருவி அழிக்கும் திட்டம் நேட்டோ நாடுகளால் பரிசீலிக்கப்பட்டது. பின்னர் அதே முறையை சீனா அல்லது இரசியா வேறு இடங்களில் மேற் கொண்டு தமது செய்கைகளை நியாயப்படுத்தலாம் என்பதால் கைவிடப்பட்டது. இஸ்ரேலிடமும் மிகத் திறமையாகச் செயற்படக்கூடிய இணையவெளி ஊடுருவிப் படைகள் இருகின்றன. மரபு வழிப்படைகள் எல்லைகளைத் தாண்டுவது பெரும் சிரமம். ஆனால் இணையவெளிப்படைகள் எல்லைகளை இலகுவில் தாண்டிவிடுகின்றன.
இணைய பணயக் கைதிகளாக தரவுகள்
சி.என்.என் செய்திச் சேவை 2013-ம் ஆண்டு இணையவெளிப் போராட்டங்களுக்குரிய ஆண்டாக அமையும் என்று தெரிவித்தது.போராளி இயக்கங்கள் மட்டுமல்ல திருடர்களும் இணையத்தில் புகுந்து கணனிகளைத் தம்வசப்படுத்தி தகவல்களை பணயக் கைதிகளாக்கி தமக்கு உரிய பணம் கொடுக்காவிடில் முழுத் தகவல்களையும் அழித்து விடுவதாக மிரட்டும் சம்பவங்கள் பல இடம் பெற்றுள்ளன.
தமிழர்களுக்கும் ஒரு இணைய வெளிப் படையணி வேண்டும்
தமிழர்கள் இலகுவாக அமைக்கக் கூடிய ஒரு படைப்பிரிவு இருக்குமானால் அது இணைய வெளிப் படைப்பிரிவுதான்.
Monday, 28 January 2013
ஈரானிய அணு ஆராய்ச்சி நிலையத்தில் பெரும் வெடிப்பு ஏற்பட்டதா?
ஈரான் அணுக்குண்டு தயாரிப்பதற்கான இல்மனைற் பதனிடும் நிலையங்களை நிலத்திற்கு கீழ் அமைத்துள்ளது. அவற்றில் மிகப்பெரிய இல்மனைற் பதனிடும் நிலையம் Fordow என்னும் இடத்தில் அமைந்துள்ளது. அங்கு பெரும் வெடிப்பு ஒன்று நிகழ்ந்ததாக கடந்த வாரம் செய்திகள் பல இணையத் தளங்களில் இடம் பெற்றன. ஆனால் எந்த ஒரு செய்தி நிறுவனமும் அதை செய்தியாக வெளியிடவில்லை.
ஈரானிய அணுகுண்டையிட்டு இஸ்ரேலிலும் பார்க்கவும் அமெரிக்காவிலும் பார்க்கவும் அதிக கரிசனை கொண்ட நாடு சவுதி அரேபியா. சவுதியில் சுனி முசுலிம்கள் வாழ்கின்றார்கள். ஈரானில் சியா முசுலிம்கள் வாழ்கிறார்கள். இருவருக்கும் இடையில் பரம் விரோதம். சவுதி அரச குடும்பத்திற்கு ஈரானிய மதவாதிகளைப் பிடிக்காது.
ஈரானின் Fordowஇல் உள்ள இல்மனைற் பதனிடும் நிலையத்தில் உள்ள centrifuges எனப்படும் பெரிய சுற்றும் குழாய்கள் பல வெடித்ததாகச் செய்திகள் இணையங்களில் உலாவின. இந்த வெடிப்பு 21-01-2013 திங்கட் கிழமை காலை 11.30 மணியளவில் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது. அங்கு பணிபுரிந்த 240 பேர் உள்ளே அகப்பட்டு இருந்ததாகச் சொல்லப்பட்டது. Fordowஇல் உள்ள இல்மனைற் பதனிடும் நிலையம் ஒரு மலைத் தொடரில் நிலமட்டத்தின் கீழ் 240 அடிக்குக் கீழ் உள்ளது. இஸ்ரேலின் விமானத் தாக்குதலில் இருந்து பாதுகாக்கவே இந்த ஏற்பாடு.
ஈரானிய இல்மனைற் பதனிடும் நிலையங்களை இஸ்ரேலிய உளவுத் துறையான மொசாட், பிரித்தானிய உளவித்துறையான சிஐஏ, பிரித்தானிய உளவுத் துறையான எம் ஐ 5 ஆகியன உன்னிப்பாக அவதானித்து வருகின்றன. இவற்றை நிர்மூலப் படுத்தும் செயலில் அவை ஈடுபட்டும் வருகின்றன. 11-01-2012இலன்று பட்டப் பகலில் ஈரானிய அணு விஞ்ஞானியான முஸ்தபா அஹ்மதி றொஸானன் அவரது வாகனத்தின் அடியில் பொருத்தப்பட்ட காந்தக் குண்டு வெடித்தமையில் கொல்லப்பட்டார். இவர் கொல்லப்பட்ட மூன்றாவது ஈரானிய அணு விஞ்ஞானி. இன்னொருவர் மீதான கொலை முயற்ச்சியில் இருந்து அவர் தப்பிவிட்டார். மொத்தமாக முன்று ஈரானிய அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர்,
2010இல் Stuxnet வைரஸ் தாக்குதல்
இஸ்ரேல் உருவாக்கியதாக நம்பப்ப்டும் கணனி வைரஸ் 2010ஜூனில் தவறுதலாக வெளிவந்து உலகெங்கும் பல கணனிகளைத் தாக்கியிருந்தது. த ஈரானிய விஞ்ஞானியின் மடிக்கணனியிக்குச் செலுத்தப்பட்ட வைரஸ் அவரது மடிக்கணனியில் இருந்து உலகெங்கும் பரவியது. அந்த வைரஸ் Stuxnet என்று அழைக்கப்படிருந்தது. இந்த வைரஸ் ஜெர்மானிய எந்திரவியல் நிறுவனமான சீமன்ஸைத் தாக்கியிருந்தது. சீமன்ஸ் நிறுவனம் ஈரானிற்குத் அணுக்குண்டு உற்பத்திக்குக் தேவையான உபரகரணங்களை உற்பத்தி செய்து வருகின்றது. அத்துடன் பல ஈரானியக் கணனிகளையும் செயலிழக்கச் செய்தது. ஈரானின் Natanzஇல் இருக்கும் அணு ஆராய்ச்சி நிலையத்தில் இருந்த கண்காணிப்பு காணொளிப்பதிவுக் கருவிகளில் இருந்து கிடைத்த தகவல்களின்படி Stuxnet வைரஸ் 900முதல் 1000வரையிலான மையநீக்கிக்(centrifuges) கருவிகள் பிரித்தெடுத்து அகற்றிச் செயலிழக்கச் செய்தது. நிலமையைச் சரிவரப் புரியாத ஈரானிய ஆட்சியாளர்களுக்கு தங்கள் விஞ்ஞானிகளின் திறமை மீது ஐயம் ஏற்படவும் செய்தது.
Flamer வைரஸ் தாக்குதல்
இஸ்ரேலும் அமெரிக்காவும் தனித்தனியாகவும் இணைந்தும் ஈரானிய அணுக்குண்டு உற்பத்தி நிலையங்கள் மீது தொடர்ந்து பல கணனி வைரஸ் தாக்குதல்களை நடாத்தி வருவதாக நம்பப்படுகிறது. 2012 மே மாதம்31-ம் திகதி இன்னும் ஒரு இணையவெளித் தாக்குதல் ஈரானிய அணு ஆராய்ச்சி நிலைகள் மீது நடாத்தப்பட்டுள்ளது. Flamer என்னும் பெயர் கொண்ட இந்த வைரஸ் Stuxnet வைரஸிலும் பார்க்க 40மடங்கு வலுக்கொண்டதாக நம்பப்படுகிறது. அத்துடன் முதல் தடவையாக ஒரு வைரஸ் bluetooth capabilityஉடன் வந்துள்ளது. கணனியை இயக்குபவர்களின் உரையாடல்களையும் Flamerவைரஸ் ஒற்றுக்கேட்டு ஒளிப்பதிவு செய்துவிடும்.ஈரானின் Natanzஇல் இருக்கும் அணு ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள கணனிகள் இணைய வெளியுடன் தொடர்பற்ற முறையில் இயங்குகிறது. ஆனால் அங்கு உளவாளிகள் மூலம் Flamer வைரஸ் உட்புகுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. அது அங்கு உள்ள உபகரணங்களை வழமையான தவறுகளால் பழுதடைவது போல் பழுதடையச் செய்திருக்கிறது. அதனால் நடந்த தவறுகள் பிழையான உதிரிப்பாகங்களால் நடந்தவை என ஈரானியர்களை நம்பவைக்கப்பட்டது.
செய்தியைப் பரப்பிய சிஐஏ இன் முன்னாள் முகவர்
ஈரானின் Fordowஇல் உள்ள இல்மனைற் பதனிடும் நிலையத்தில் 21-01-2013இலன்று வெடிப்பு நிகழ்ந்ததாக செய்தியை வெளிவிட்டவர் அமெரிக்காவில் வாழும் ஈரானியக் குடிமகனான ரெஜா கஹிலிலி (Reza Kahlili) என்பவர். அமெரிக்காவில் படித்த இவர் ஈரான் திரும்பி அங்கு ஈரானியப் புரட்சியில் இணைந்தவர். பின்னர் அமெரிக்க உளவுத் துறை சிஐஏயின் முகவராகச் செயற்பட்டவர். பின்னர் மீண்டும் அமெரிக்கா சென்று அங்கு வாழ்ந்து வருகிறார். இப்போது இவர் ஈரானைப் பற்றி எழுதுவதிலும் உரைகள் நிகழ்த்துவதிலும் தனது பிழைப்பை நடாத்தி வருகிறார்.
இஸ்ரேலால் உறுதி செய்ய முடியவில்லை
ஈரானின் Fordowஇல் உள்ள இல்மனைற் பதனிடும் நிலையத்தில் வெடிப்பு நிகழ்ந்ததாக தம்மால் உறுதி செய்ய முடியவில்லை என இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் ஹாரெட்ஸ் பத்திரிகை அப்படி ஒரு வெடிப்பு நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கின்றது. இஸ்ரேலிய செய்மதிகள் தொடர்ந்து ஈரானிய இல்மனைற் பதனிடும் நிலையங்களை கண்காணித்து வருகின்றன. அவற்றின் படப்பதிவுகளின்படி Fordowஇல் உள்ள இல்மனைற் பதனிடும் நிலையத்தை நோக்கி ஈரானிய படையினரின் வாகனங்கள் பெருமளவில் நகர்ந்தமைக்கான சான்றுகள் எதுவும் இல்லை என்கிறது இஸ்ரேலின் ஹாரெட்ஸ் பத்திரிகை.
அமெரிக்கப் பத்திரிகை மேற்படி வெடிப்புத் தொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. செய்தியை மறுக்கவுமில்லை.
செய்தியை வெளியிட்ட ஈரானியக் குடிமகனான ரெஜா கஹிலிலி (Reza Kahlili)தனக்கு இப்போதும் ஈரானின் பல மட்டத்திலும் தொடர்புகள் இருக்கிறது என்று சொல்கிறார். ஈரானிய உச்சத் தலைவர் கொமெய்னியின் மாளிகையிலும் தமக்குத் தொடர்பு இருக்கிறது என்கிறார். இவர் பழி வாங்கலுக்கு அஞ்சி தன் முகத்தை ஒரு நாளும் வெளிவிட்டது இல்லை. உரைகள் நிகழ்த்தும் போது தொப்பியும் கண்ணாடியும் அணிந்து வாயையும் மூடிக் கட்டிக் கொள்வாராம். இவர் ஏன் இப்படி ஒரு செய்தியை வெளிவிட்டார் என்ற கேள்விக்கு விடை இவர் எப்போது இப்படி ஒரு செய்தியை வெளிவிட்டார் என்பதைப் பார்க்கும் போது கிடைக்கும். இவர் செய்தியை வெளிவிட்டது (21-01-2013) இஸ்ரேலின் தேர்தலின் இறுதிக்கட்டத்தின் போது.

Sunday, 27 January 2013
குவாட்டர் தத்துவங்கள்
கணவன்மார் ஏன் முட்டாள்களாக இருக்கிறார்கள்??
புத்திசாலிகள் திருமணம் செய்து கொள்வதில்லை.
ஒரு கிளாஸ் அடிச்சவுடன் நான் கிக்கின் உச்சத்திற்குப் போய்விடுவேன். ஆனால் அது நாலாவதா ஆறாவதா என்று தெரியவில்லை.
A man hath no better thing under the sun, than to eat, and to drink, and to be merry.
Bible - Ecclesiastes 8.15
கவலையா? தண்ணியடிச்சு மற. இன்பமா? தண்ணியடிச்சுக் கொண்டாடு. போரடிக்குதா? தண்ணியடிச்சு உல்லாசமாயிரு. பொழுது போகவில்லையா தண்ணியடிச்சு ஜாலியாயிருங்க. எங்கும் எப்போது அடி தண்ணி.
அமெரிக்காவில் குவாட்டர் என்னா காசு, நம்ம ஊரில் குவாட்டர் என்றால் தண்ணி. ரெண்டுமே மனிசனுக்கு தேவை மச்சி....
“The battle with the bottle is nothing so novel.”
― Elvis Costello
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தண்ணியடிப்பதை நிறுத்தினேன். அப்பப்பா......... நாலு நாட்கள் நரக வேதனை.
வாழ்க்கையிலேயே கவலையான விசயம் என்னைத் தண்ணியடிக்க வைச்சவளுக்கு ஒரு தாங்ஸ் கூட சொல்லலை.
தண்ணியடிக்கிறது கூடாது என்று ஒரு புத்தகதில் வாச்சிசேன். அன்றிலிருந்து விட்டுட்டன் புத்தகம் வாசிக்கிறதை.
தண்ணியடிச்சவுடன் தூங்கி விடுவேன். தூங்குவதால் நான் பாவங்கள் செய்வதில்லை. பாவங்கள் செய்யாததால் நான் சொர்க்கம் செல்வேன்.
ஒரு நாளில் 24 மணித்தியாலத்தையும் ஒரு பெட்டியில் 24 பியர் குவளைகளையும் வைத்தது ஏன்?
நான் தண்ணியடிப்பதில் நிறையப் பணததைச் செலவளித்தேன். மிச்சம் எல்லாம் வேஸ்டாப் போயிடுச்சு.
அநேகமான பாடல்கள் தண்ணி, பெண், கடவுள் ஆகிய மூன்றையும் பற்றித்தான்.

Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...