Saturday, 26 November 2011
Friday, 25 November 2011
Facebook குறள்கள் / மாவீரர் வாரக் கவிதை
ஒரு அட்டு ஃபிகரோடாவது chat அடிக்கும் பொருட்டு.
ஃபிகரொன்று ஆன்லைனில் இருக்கையில்
ஒரு pokeஆவது பண்ணாதிருப்பது நன்றன்று
வரும் பதிவுற்கெல்லாம் like போட்டுக்
comment அடிப்பான் நண்பருள் ஏறு
அட்டு ஃபிகர் டக்கர் ஃபிகர் பேதம் பாடாமல்
add பண்ணுவான் நண்பருள் தலை
மாவீரர் வாரக் கவிதை
மண்ணுக்கென மண்ணில் பிறந்து
மண் மிட்கப் போராடி மண்ணுக்கு உயிர் கொடுத்து
மண்ணோடு புதைந்த தேசப் புதல்வர்களே
உங்கள் தியாகத்தை மண்ணாக்குகிறொம்
எமக்குள் முட்டி மோதி பிளவுபட்டு
கொடுங்கோலர் ஆட்சி
அவர் மறைவுடன் முடியும்
எம்முள்ளே எம்மோடு எம்மாக
எம்மை அழிப்போர் துரோகம்
என்று முடியும் என எமக்குச்
சொல்லுங்கள் தேசப்புதல்வர்களே
நமக்கென ஒரு நாடு
தமிழீழம் அதன் பெயர்
தாயகம் தேசியம் தன்னாட்சி
எனத் தோள் தட்டி நின்றோம் - இன்று
நாயகம் சிங்களமயம் இராணுவ ஆட்சி
என்றானது எம் தமிழ் ஈழம்
விடுதலைப் போரால்
வில்லங்கப் பட்டோம்
எனக் கூறி புலம் பெயர்ந்தோம்
பலம் பெற்றோம் பலதும் பெற்றோம்
மாவீரர் நாளிற்கு முட்டி மோதுகிறோம்
தமிழினத்தை ஈனப் படுத்துகிறோம்
தமிழ் ஈழத்தை ஈன்றெடுப்போமா?
Thursday, 24 November 2011
மீண்டும் புதிய உத்தியுடன் மீசையை முறுக்கும் அல் கெய்தா/தலிபான் இயக்கங்கள்
பின் லாடன் கொல்லப்பட்ட பின்னர் இந்த ஆண்டு ஜூலையில் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏயின் முன்னாள் தலைவரும் தற்போதைய அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலருமான லியோன் இ பானெற்றா பாக்கிஸ்த்தான் பயணம் மேற் கொண்டிருந்தபோது "We are within reach of strategically defeating al-Qaeda" தந்திரோபாய ரீதியில் நாம் அல்-கெய்தாவைத் தோற்கடிக்கும் நிலையை அண்மித்து விட்டோம்" என்றார்.
அண்மைக் காலமாக தலிபான் இயக்கமும் அல் கெய்தா இயக்கமும் சந்தித்த பின்னடைவுகள்:-
1. பின் லாடன் கொலை
சிறந்த தலைமைத்துவத்தை வழங்கிக் கொண்டிருந்த பின் லாடன் கொல்லப்பட்டது அல் கெய்தாவிற் பெரும் பின்னடைவு. அத்துடன் பின் லாடனைக் கொல்லச் சென்ற அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவினர் பின் லாடன் தங்கியிருந்த மூன்று மாடி மாளிகையில் இருந்த பல கணனிகளையும் இலத்திரன் தகவல் பேழைகள் பலவற்றையும் எடுத்துச் சென்று விட்டனர். அதில் இருந்த தகவல்கள் அல் கெய்தா எதிரான போரில் அமெரிக்காவிற்கு மிக உதவியது. இது பாக்கிஸ்த்தான் அரசிலும் படைத்துறையிலும் அல் கெய்தாவிற்கும் தலிபானுக்கும் இருக்கும் ஆதரவுத் தளங்களைக் கண்டறிந்து சிதைக்கப் பெரிதும் உதவின.
2. அதியா அப் அல் ரஹ்மான் கொலை
பின் லாடனைத் தொடர்ந்து அல் கெய்தாவின் இரண்டாம் நிலைத் தலைவர்களில் ஒருவரான அதியா அப் அல் ரஹ்மான் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொல்லப்பட்டார். அதியா அப் அல் ரஹ்மான் ஈரானுடன் நல்ல உறவில் இருந்தவர். அத்துடன் சிறந்த பேச்சாளர், நிர்வாகி, பல நாடுகளில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனுபவம் மிகுந்தவர்.
3. அன்வர் அல் அவ்லாக்கி கொலை
அதன் பின்னர் அமெரிக்காவின் முதல் தர தீவிரவாத எதிரியாகக் கருதப்படும் அமெரிக்கக் குடியுரிமையுடைய அன்வர் அல் அவ்லாக்கி என்பவரை யேமனில் வைத்து அமெரிக்க ஆளில்லா விமானத்தில் இருந்து வீசப்பட்ட ஏவுகணையால் செப்டம்பர் 30-ம் திகதி யேமன் நேரம் காலை 9-55 அளவில் கொல்லப்பட்டார்.
4. ஆளில்லாப் போர் விமானங்கள்
ஆப்கானிஸ்தானிலும் பாக்கிஸ்த்தானிலும் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் கடந்த சில வருடங்களாக நடாத்தி வரும் தாக்குதல்கள் அல் கெய்தாவிற்கு பலத்த ஆளணி இழப்புக்களை ஏற்படுத்தியதுடன் அவர்கள ஆளணிகளையும் படைக்கலன்களை விரும்பியபடி நகர்த்த முடியாத நிலையை ஏற்படுத்தியது. அமெரிக்கப் படைத்துறையினர் தமது ஆளில்லா விமானத் தாக்குதல்கள் அல் கெய்தாவைப் பின் வாங்க வைத்தது என்கின்றனர். அது மட்டுமல்ல அமெரிக்கா இன்னும் பல புதுவித ஆளில்லா விமானங்களைக் களமிறக்க இருக்கிறது. ஆளில்லா விமானங்களை அதிகம் பயன் படுத்தலாம் என்ற துணிவுடனேயே அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆப்கானிஸ்தானில் இருந்து பாரிய அளவிலான அமெரிக்கப் படைகளை அடுத்த ஆண்டு விலக்கிக் கொள்வதாக அறிவித்தார்.
5. விலகும் உறுப்பினர்கள்
அல் கெய்தாவிலும் தலிபானிலும் உறுப்பினர்களாக இருப்பவர்கள் தமது குடும்பங்களில் இருந்து முற்றிலும் விலகி தனித்தே வாழவேண்டியவர்களாக உள்ளனர். இது பல உறுப்பினர்கள் இயக்கத்தை விட்டு வெளியேறச் செய்தது. பிரித்தானிய அரசு மேற்கொண்ட ஆய்வில் இது கண்டறியப்பட்டது.
6. பொருளாதாரப் பிரச்சனை மதப் பிரச்சனையிலும் பெரிது
அமெரிக்காவும் மேற்குலகும் இசுலாமிய மார்க்கத்திற்கு எதிரானது அதற்கு எதிராகப் போராட வேண்டும் என்ற பரப்புரையிலும் பார்க்க தாம் வாழும் நாட்டில் சிறந்த பொருளாதார நிர்வாகம் அவசியம் என்ற பரப்புரையால் படித்த பல இசுலாமிய இளைஞர்கள் கவரப் பட்டுள்ளனர் என்பதற்கு துனிசியா, எகிப்து, லிபியா, சிரியா, அல்ஜீரியா போன்ற பல நாடுகளில் ஏற்பட்ட அரபு வசந்தம்/மல்லிகை புரட்சி எடுத்துக் காட்டுகிறது. ஒரு ஊடகம் இசுலாமிய இளைஞன் ஏகே-47 துப்பாக்கி வாங்குவதிலும் பார்க்க ஐ-பாட் வாங்குவதில் அதிக அக்கறை கொண்டுள்ளான் என்று எழுதியது. இந்த பின்னணியில் அல் கெய்தாவின் ஆட் சேர்ப்பு நடவடிக்கைகள் பின்னடைவைக் கண்டது.
இத்தனை பின்னடைவுகளுக்கு மத்தியிலும் அல் கெய்தா இனித் தாக்குப் பிடிக்குமா என்பது சந்தேகம் என்று எண்ணத் தோன்றும். ஆனால் அல் கெய்தா தனது உத்திகளை மாற்றிக் கொண்டுள்ளது. அண்மைக் காலமாக அல் கெய்தா இயக்கம் தனது நடவடிக்கைகளை மட்டுப் படுத்திக் கொண்டது. ஒரு தீவிரவாத கரந்தடி இயக்கத்திற்கு எப்போது பதுங்க வேண்டும் என்று தெரியும். அல் கெய்தாவும் தலிபானும் தாம் பதுங்கிக் கொண்டு பாக்கிஸ்தானின் செல்லப் பிள்ளையாகக் கருதப்படும் ஹக்கானி இயக்கத்தை ஆப்க்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தத் இவ்விரு இயக்கங்களும் தூண்டின. ஹக்கானியை இந்தியா ஆப்கானிஸ்த்தானில் காலுன்றுவதைத் தடுக்க பாக்கிஸ்த்தான் பயன்படுத்துவதாகக் கருதப்படுகிறது.
ஐமன் அல் ஜவஹிரியும் அவரது உதவியாளருமான அபு யஹியா அல் லிபியுமே இப்போது அல் கெய்தாவின் முக்கிய தலைவர்களாகக் கருதப் படுகின்றனர். 9/11 இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் பின் லாடன் தலை மறைவாக இருந்து கொண்டு ஒரே ஒரு தொடர்பாடல் உதவியாளர் மூலமாக அல் கெய்தாவை இயக்கினார். பின் லாடனின் கொலைக்குப் பின்னர் ஐமன் அல் ஜவஹிரி தலைமைப் பொறுப்பை ஏற்றார் அவர் பின் லாடனைப் போல் அல்லாமல் கள நிலையை நேரடியாக அறிந்து களத்தில் நின்று செயற்படுகிறார். இதனால் அவரால் பின் லாடனிலும் பார்க்க சிறப்பாகச் செயற்பட முடிகிறது. அத்துடன் பாக்கிஸ்தானில் பரவலாக ஏற்பட்ட எதிர்ப்பால் அமெரிக்கா தனது ஆளில்லா விமானத் தாக்குதலை அண்மைக் காலங்களாக மட்டுப்படுத்தியுள்ளது.
அல் கெய்தாவின் புதிய உத்தி: Lone wolf
அமெரிக்காவின் நவீன கருவிகள் தனது தொடர்பாடல்கள் மூலம் தன் இருப்பிடத்தை அறிந்து விடும் என உணர்ந்த பின் லாடன் அல் கெய்தாவை பல Franchise இயக்கங்களாக மாற்றினார். அனுமதி பெற்ற(Franchise) சிறு இயக்கங்கள் பின் லாடனின் உத்தரவின்றி அல் கெய்தாவின் கொள்கைகளுக்கு ஏற்ப சுயமாகச் செயற்பட முடியும். ஐமன் அல் ஜவஹிரி இப்போது அல் கெய்தாவை தனி ஓநாய்(Lone wolf)கள் கொண்ட இயக்கமாக மாற்றியுள்ளார். அல் கெய்தாவின் உறுப்பினர்கள் தனித்து ஒரு தனி மனித இயக்கமாகச் செயற்படுவதை தனி ஓநாய்(Lone wolf) என அழைப்பர். இப் புதிய தனி ஓநாய்(Lone wolf)கள் அமெரிக்காவிற்கு இனி வரும் காலங்களி பெரும் சவாலாக அமையப் போகின்றன. இப்படிப்பட்ட ஒரு தனி ஓநாய்(Lone wolf) 21-ம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் குண்டு வைக்கச் சென்ற இடத்தில் பிடிபட்டார். 27 வயதான அமெரிக்கக் குடியுரிமை பெற்ற இவரின் நடவடிக்கை அமெரிக்காவை பெரும் அதிச்சிக்குள்ளாக்கியுள்ளது. அல் கெய்தாவின் நாட்கள் எண்ணப் படுகின்றன என்று கூறிய அமெரிக்க உளவுத் துறையினர் இப்போது அல் கெய்தாவை அழிக்க இன்னும் சில வருடங்கள் எடுக்கும் என்கின்றனர்.

Wednesday, 23 November 2011
எந்த மாவீரர் தினத்திற்குப் போவது?
2008இன் பிற்பகுதியிலும் 2009இன் முற்பகுதியிலும் இந்திய உளவுத் துறை வன்னியில் தமிழர்களின் ஆயுத போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்று அறியப் பல வழிகளில் முயன்றது. நோர்வேயின் எரிக் சொல்ஹெய்ம் ஊடாகவும் இதற்கான முயற்ச்சிகள் மேற் கொள்ளப் பட்டதாகவும் சில தகவல்கள் கூறின.
மாவீரர் தினம் தேசியப் போராட்டத்தின் உந்து சக்தியும் அளவு கோலுமாகும்
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் புலம் பெயர் நடுகளில் தமிழ்த் தேசியவாதம் மங்கிவிடும் என்று கணக்குப் போட்டிருந்தனர் இந்திய-இலங்கை இன அழிப்புவாதிகள். தமிழ்த் தேசியவாதத்திற்கு உள்ள ஆதரவிற்கான உந்து சக்தியாக மட்டுமல்ல தமிழ்த் தேசியத்திற்கான ஆதரவிற்கான அளவு கோலாகவும் திகழ்வது மாவீரர் தினம். 2009இலும் 2010இலும் உலகெங்கும் நடந்த மாவீரர் தினங்கள் முந்தைய மாவீரர் தினங்களிலும் பார்க்க உணர்ச்சி பூர்வமானதாகவே இருந்தன.
மாவீரர் தினத்திற்குச் செல்லும் ஆட்களின் தொகயைக் குறைப்பதே எதிரியின் திட்டம்.
மாவீரர் தினத்திற்குச் செல்லும் ஆட்களின் தொகையைக் குறைப்பதற்கு இந்திய-இலங்கை இன அழிப்புவாதிகள் போட்ட திட்டம் மாவீரர் தினத்தை ஒழுங்கு செய்பவர்களைப் பிளவு படுத்துவதே. பிளவு படுத்தியது என்று சொல்வதிலும் பார்க்க புதிதாக ஒரு குழுவை இந்திய-இலங்கை இன அழிப்புவாதிகள் உருவாக்கியுள்ளனர். பிளவு படுத்துவதில் அவர்கள் வெற்றியும் கண்டுள்ளனர். இந்திய-இலங்கை இன அழிப்புவாதிகளுக்கு தமிழர்களைப் பிளவு படுத்துவதில் சிறந்த முன் அனுபவம் உண்டு. மாவீரர் தினம் இரு வேறுபட்ட குழுக்களால் இப்போது ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள சாத்தியப்பாடுகள்: 1. இரு குழுக்களும் உண்மையான தேசியப் பற்றாளர்கள்; 2. இரு குழுக்களுமே துரோகிகள்; 3/4. இரண்டில் ஒன்று தேசியப்பற்றாளர்களைக் கொண்டது மற்றது துரோகிகளைக் கொண்டது. இதில் நல்ல செய்தி இரு குழுக்களுமே மாவீரர் தினத்தை ஒழுங்கு செய்கின்றன. ஆனால் புலம் பெயர்ந்த நாடுகளில் சில ஊடகங்களில் வைக்கப் படும் ஒரு பிரச்சாரம் பெரும் அச்சத்தைத் தருகிறது:
மாவீரர் கவிதை
அடக்கு முறைகள் வித்தாக
முளைத்தது விடுதலைப் போர்
அட்டூழியங்கள் உரமாக
வளர்ந்தது விடுதலைப் போர்
மக்கள் விழித்தெழ
பரந்தது விடுதலைப் போர்
இளைஞர்கள் கொதித்தெழ
வீறு கொண்டது விடுதலைப் போர்
பாரதம் பாதகம் செய்ய
பலமிழந்தது விடுதலைப் போர்
துரோகிகள் பலர் கூட
துயர் கண்டது விடுதலைப் போர்
பன்னாட்டு சமூகம் எனும்
பன்னாடைக் கூட்டம்
பாடை கட்ட வந்தது
பின்னடைவுற்றது விடுதலைப் போர்
கார்த்திகைப் பூக்கள்
மலர்ந்தன உதிர்ந்தன
வித்துக்கள் பலப் பல
மீண்டும் முளையாகும்
கார்த்திகைத் தீபங்கள்
என்றும் ஒளிரும்

- மாவீரர் தினத்தை இரு குழுக்களும் ஒன்றாக ஒற்றுமையாக ஒரு இடத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படிச் செய்யாவிடில் தமிழர்கள் மாவீரர் தினத்தைப் புறக்கணித்து வீடுகளில் இருந்து மாவீரர்களுக்கு அகவணக்கம் செய்ய வேண்டும்.
மாவீரர் கவிதை
அடக்கு முறைகள் வித்தாக
முளைத்தது விடுதலைப் போர்
அட்டூழியங்கள் உரமாக
வளர்ந்தது விடுதலைப் போர்
மக்கள் விழித்தெழ
பரந்தது விடுதலைப் போர்
இளைஞர்கள் கொதித்தெழ
வீறு கொண்டது விடுதலைப் போர்
பாரதம் பாதகம் செய்ய
பலமிழந்தது விடுதலைப் போர்
துரோகிகள் பலர் கூட
துயர் கண்டது விடுதலைப் போர்
பன்னாட்டு சமூகம் எனும்
பன்னாடைக் கூட்டம்
பாடை கட்ட வந்தது
பின்னடைவுற்றது விடுதலைப் போர்
கார்த்திகைப் பூக்கள்
மலர்ந்தன உதிர்ந்தன
வித்துக்கள் பலப் பல
மீண்டும் முளையாகும்
கார்த்திகைத் தீபங்கள்
என்றும் ஒளிரும்
Tuesday, 22 November 2011
புலிகளின் பேரில் இந்தியாவில் ஒரு நாசகார நாடகம் அரங்கேறுமா?
இலங்கையில் தமிழர்கள் நிரந்தர அடிமைகளாக இருக்க வேண்டும் என்பதில் கொழும்புப் பேரினவாதிகளிலும் பார்க்க டில்லிப் பேரினவாதிகள் அதிக அக்கறையுடனும் உறுதியுடனும் இருக்கிறார்கள். இலங்கையில் தமிழர்கள் தனி நாடு அமைத்தால் அது இந்தியாவிலும் பிரிவினை வாதத்தைத் தூண்டும் என்ற பொய்யையும் இலங்கையின் இன அழிப்புப் போருக்கு இந்தியா உதவவேண்டும் அல்லது சீனா அந்த உதவியைச் செய்து இலங்கை சீனா பக்கம் சாய்ந்துவிடும் என்ற பொய்யையும் சொல்லி டில்லிப் பேரினவாதிகள் தமிழர்கள் சுதந்திரப் போராட்டத்தை நசுக்க இலங்கைக்கு சகல உதவிகளையும் செய்து முடித்தது.
இந்தியா சிங்களவர்களுடன் இணைந்து தமிழர்களுக்கு எதிராகச் செயற்படுவது ஒன்றும் இன்று நேற்று ஆரம்பமானதல்ல. ஜவர்லால் நேரு என்னும் பேரினவாதி காலத்திலேயே ஆரம்பித்து விட்டது. இதன் விபரங்களைக் காண இங்கு சொடுக்கவும்: தமிழத் தேசியக் கூட்டமைப்பு இந்திய நிகழ்ச்சி நிரலிலா?
இலங்கை இந்திய தமிழின அழிப்புக் கூட்டணியின் செயற்பாடுகளை நாம் அண்மையில் ஒஸ்ரேலியாவில் நடந்து முடிந்த பொது நலவாய நாடுகளின் மாநாட்டில் கண்டு கொண்டோம். இந்தியாவின் இலங்கைக்கான தமிழின அழிப்பு நடவடிக்கைக்கான உதவி இந்தியாவின் மானம் கெட்ட ஆளும் கட்சியான காங்கிரசுக் கட்சி இந்த ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த சட்டசபைக்கான தேர்தலில் மண் கவ்வ வைத்தது. அடுத்து 2014இல் அல்லது அதற்கு முன்னர் வரவிருக்கும் இந்தியப் பாராளமன்றத் தேர்தல் காங்கிரசுக் கட்சியைப் பொறுத்தவரை மிக முக்கியமானது. இந்தியாவின் (தலைக்குள் மூளை குறைந்த) முடிக்குரிய இளவரசர் ராகுல் காந்தியை ஆட்சியில் அமர்த்தவிருப்பது அடுத்த இந்தியப் பாராளமன்றத் தேர்தல். இப்போது வெளியில் சொல்ல முடியாத நோயினால் பாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் இத்தாலி சோனியா காந்தி எனப்படும் மைனோ கான் தன் மகனுக்கு முடி சூட்டும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். வட இந்தியாவில் அன ஹசாரேயின் போராட்டம் காங்கிரசின் வெற்றி வாய்ப்பை பெரிதும் பாதிக்கலாம். வட இந்தியாவில் வரவிருக்கும் தோல்விகளை தென் இந்தியாவில் சரிக்கட்ட காங்கிரசுக் கட்சி எண்ணலாம். முக்கியமாக தமிழ்நாட்டில் தமிழின உணர்வாளர்களைச் சிறையிலிட்டுவிட்டால் காங்கிரசின் தோல்வியைத் தடுக்க வாய்ப்புண்டு. தமிழின உணர்வாளர்களைச் சிறையில் போடுவதற்கு காங்கிரசுக்கு ஒரு நல்ல சாட்டுத் தேவைப்படுகிறது. இந்திய உளவுத்துறை இப்போது ஒரு புதுக் கதையை அவிழ்த்து விட்டுள்ளது அது தினமணி பத்திரிகையில் இப்படிப் பிரசுரமானது:
இந்தியாவில் எங்காவது ஒரு நாசகாரச் செயலை அரங்கேற்றி அதை விடுதலைப் புலிகளின் மீது சுமத்தி இதில் தமிழின உணர்வாளர்களையும் சம்பந்தப் படுத்தினால் காங்கிரசின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்குமா?
தற்போது இந்தியாவில் இருக்கும் சட்டப்படி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக உரையாற்றியமைக்காக எவரையும் கைது செய்ய முடியாது. ஒரு நாசகார நாடகத்தை அரங்கேற்றிய பின் தமிழ்நாட்டில் உள்ள தமிழின உணர்வாளர்களை இலகுவில் கைது செய்ய வழி தேடலாம்.
விடுதலைப் புலிகளைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு புலிகளுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையில் உள்ள பகைமையைப் பற்றி நன்கு அறிவர்.

- இலங்கையில் தங்களுடைய படை பலத்தை முற்றிலுமாக இழந்து நிற்கும் புலிகள் தற்போது வெளிநாடுகளில் வசித்து வரும் இவர்களை இந்தியாவில் நுழைய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் பணித்துள்ளதாகவும், இதன் மூலம் மும்பையில் பெரும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த தகவல் மத்திய உளவுத்துறையினர் மும்பை அரசுக்கு தெரிவித்து முழு எச்சரிக்கையாக இருக்குமாறு அலர்ட் செய்துள்ளனர். இலங்கையில் பெரும் போரை நடத்தி தலைவர் முதல் அனைவரும் உயிரிழந்து விட்டாலும், இவர்களில் இருந்து தப்பிய சிலர் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தும், பணம் வசூலித்து மீண்டும் தங்கள் இயக்கத்தை உயிர்ப்பிக்க வைக்கவும் மறைமுக வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனை இலங்கை அதிபர் ராஜபக்சே சமீபத்தில் மாலத்தீவில் நடந்த சார்க் மாநாட்டில் பங்கேற்றபோது ஒரு நிருபரிடம் ஒத்துக்கொண்டார். இந்நிலையில் மத்திய உளவுத்துறையினருக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலில் பாகிஸ்தானை மையமாக வைத்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் இந்தியாவில் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்த திட்டம் வகுத்து வருகின்றனர். இவர்கள் இந்தியாவிற்குள் நுழைவதில் சிரமம் இருப்பதால் மாற்று வழியை தேடினர். ஏற்கனவே இந்திய அரசு மீது அதிருப்தியில் இருக்கும் புலிகள் மற்றும் பஞ்சாபை மையமாக கொண்டுள்ள சீக்கிய பயங்கரவாத அமைப்பனா பப்பர் கல்சா போன்ற பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்டுள்ளனர். இவர்கள் மும்பையில் குறிப்பாக கடற்படை தளம் அமைந்திருக்கும் பகுதியில் தாக்குதல் நடத்த வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம். இந்த 3 அமைப்பினரும் இது தொடர்பாக பேசி முடிவு எடுத்திருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது. இதனால் முழு எச்சரிக்கையுடன் இருக்க மும்பை போலீசார் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து ஐ.பி., அதிகாரி ஒருவர் கூறுகையில் ; செயல் இழந்து நின்ற புலிகள் இயக்கத்தினர் கடந்த 2 மாதத்தில் சற்று வளர்ந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இரு அமைப்பினரின் மறைமுக செயல்பாடுகள் கூர்ந்து கவனித்து வருகிறோம். அம்பாலாவில் ஒரு காரில் வெடிபொருட்களுடன் நின்ற கார் கண்டுபிடிக்கப்பட்டு செயல் இழக்க செய்யப்பட்டது, இந்த சம்பவத்திற்கும் இந்த அமைப்பினருக்கும் தொடர்பு இருக்குமோ என்றும் சந்தேகிக்கப்படுகிறது என்றார்.
இந்தியாவில் எங்காவது ஒரு நாசகாரச் செயலை அரங்கேற்றி அதை விடுதலைப் புலிகளின் மீது சுமத்தி இதில் தமிழின உணர்வாளர்களையும் சம்பந்தப் படுத்தினால் காங்கிரசின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்குமா?
தற்போது இந்தியாவில் இருக்கும் சட்டப்படி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக உரையாற்றியமைக்காக எவரையும் கைது செய்ய முடியாது. ஒரு நாசகார நாடகத்தை அரங்கேற்றிய பின் தமிழ்நாட்டில் உள்ள தமிழின உணர்வாளர்களை இலகுவில் கைது செய்ய வழி தேடலாம்.
விடுதலைப் புலிகளைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு புலிகளுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையில் உள்ள பகைமையைப் பற்றி நன்கு அறிவர்.
Monday, 21 November 2011
கணனி நகைச்சுவைகள் - கடைந்தெடுத்தவை
உங்கள் கணனியின் விசைப்பலகை(Keyboard) வேலை செய்யவில்லையா F1 ஐ அழுத்துங்கள்.
Man 1 : How do two programmers make money?
Man 2 : One writes viruses, the other anti-viruses
நீங்கள் திருமணம் செய்திருந்தால் இந்த செய்தியை நீங்கள் படிக்கத் தேவையில்லை. திருமணமாகாவிடின் கீழ் சென்று படிக்கவும்
<
<
<
<
<
<
<
<
<
<சுதந்திர தின வாழ்த்துக்கள்......ஹி ஹி ஹி.....
Customer: I cant get on to the internet
Tech Support: Are you sure that you type the correct password
Customer: Yes
Tech Support: What did you type as password?
Customer: five dots
Advisor: 'Press any key to continue.
Customer: I can't find the 'Any' key.
The officer said meekly, "Sure, but why?"
"Because a coffee spill could ruin the keyboard."
.dic = Private eye
.fav = Boot licker
.gem = Jeweller
.ico = Office pin-up
.mam = Midwife
.mapi = Planning officer
.png = Table Tennis Champion
.pub = Alcoholic
.rat = Spy
.snd = Disk Jockey
.sys = Sister
.tiff = Marriage guidance counsellor
.wav = Cheerleader
.wiz = Magician
Writer
There was once a young man who, in his youth, professed his desire to become a great writer.
When asked to define "great" he replied, 'I want to write stuff that the whole world will read, stuff that people will react to on a truly emotional level, stuff that will make them scream, cry, howl in pain and anger!'
He now works for Microsoft, writing error messages.
Man 1 : How do two programmers make money?
Man 2 : One writes viruses, the other anti-viruses
நீங்கள் திருமணம் செய்திருந்தால் இந்த செய்தியை நீங்கள் படிக்கத் தேவையில்லை. திருமணமாகாவிடின் கீழ் சென்று படிக்கவும்
<
<
<
<
<
<
<
<
<
<சுதந்திர தின வாழ்த்துக்கள்......ஹி ஹி ஹி.....
Customer: I cant get on to the internet
Tech Support: Are you sure that you type the correct password
Customer: Yes
Tech Support: What did you type as password?
Customer: five dots
Advisor: 'Press any key to continue.
Customer: I can't find the 'Any' key.
Officers at a military installation were being lectured about a new computer. The training officer said the computer was able to withstand nuclear and chemical attacks.
Suddenly, he saw that one of the officers had a cup of coffee and yelled, "There will be no eating or drinking in this room! You'll have to get rid of that coffee." The officer said meekly, "Sure, but why?"
"Because a coffee spill could ruin the keyboard."
புவியீர்ப்பு முதலில் கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்டது
ஒரு கேரள விஞ்ஞானி தனது வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்திருக்கும் போது ஒரு தென்னை மரத்தில் இருந்து தேங்காய் விழுந்தது. அவர் உடனே புவியீர்ப்பு சக்தியைக் கண்டு பிடித்துவிட்டார். ஐயோ பாவம். தேங்காய் விழுந்தது அவர் தலையில். உடனே அவர் இறந்துவிட்டார். அவரது கண்டு பிடிப்பை அவரால் உலகிற்கு சொல்ல முடியவில்லை. Funny File Extension Linked to Occupations:
.bin = Trash collector.dic = Private eye
.fav = Boot licker
.gem = Jeweller
.ico = Office pin-up
.mam = Midwife
.mapi = Planning officer
.png = Table Tennis Champion
.pub = Alcoholic
.rat = Spy
.snd = Disk Jockey
.sys = Sister
.tiff = Marriage guidance counsellor
.wav = Cheerleader
.wiz = Magician
Writer
There was once a young man who, in his youth, professed his desire to become a great writer.
When asked to define "great" he replied, 'I want to write stuff that the whole world will read, stuff that people will react to on a truly emotional level, stuff that will make them scream, cry, howl in pain and anger!'
He now works for Microsoft, writing error messages.
Understanding a Girl is like
Downloading a 1GB file With 2 Kbps speed
& when u have downloaded 95%
u'll get an error message
Sunday, 20 November 2011
கைது செய்யப்பட்ட கடாஃபியின் மகனுக்கு என்ன நடக்கும்? இரகசியங்கள் அம்பலமாகுமா?
லிபியக் கிளர்ச்சியின் இறுதிக் கட்டமாக முன்னாள் லிபிய அதிபர் மும்மர் கடாபியின் மகன் சயிஃப் அல்-இஸ்லாம் கடாஃபி நிகர் நாட்டுக்கு தப்பி ஓட முயற்சிக்கையில் லிபியாவின் தென் பிராந்திய எண்ணெய் வள நகரான ஒபாரியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். யாரோ வழங்கிய தகவல்களை வைத்தே 39வயதான சயிஃப் அல்-இஸ்லாம் கடாஃபி கைது செய்யப்பட்டார். இலண்டனில் பிரபல பல்கலைக் கழகமான London School of Economics இல் மேற்படிப்பை மேற்கொண்ட சயிஃப் அல்-இஸ்லாம் கடாஃபி ஒரு பெண் பித்தர் என்றும் விமர்சிக்கப்பட்டவர். இவருக்கு பிரான்சில் ஓர் ஆடம்பர மாளிகை சொந்தமாக உள்ளது. சயிஃப் அல்-இஸ்லாம் கடாஃபியும் அவரது பணமும் புதிய லிபிய அரசுக்கு ஒரு பெரும் சவாலாக இருந்தது.
68 வயதான மும்மர் கடாஃபிக்கு ஏழு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். இவர்களில் சயிஃப் கடாஃபியும் சாதி கடாஃபியும் தீவிரவாதத்தில் நம்பிக்கை குறைந்தவர்கள் என்று சொல்லப்பட்டது. மற்றவர்கள் தீவிரப்போக்கு உடையவர்கள் என்றும் நம்பப்படுகிறது. இவர்களுக்கிடையிலான போட்டியை மும்மர் கடாஃபியே உருவாக்கி தனது பதவி பாதுகாப்பாக இருக்கவும் மகன்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தன்னைப்பதவியில் இருந்து விலக்காமல் இருக்கவும் தந்திரமாகச் செயற்பட்டார் என்றும் சில ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்ததுண்டு. கடாஃபியின் பிள்ளைகளில் ஒரு மகளும் நான்கு மகன்களும் தப்பி ஓடி விட்டனர். இருவருக்கு என்ன நடந்தது என்று தெரியாது. இப்போது சயிஃப் அல்-இஸ்லாம் கடாஃபி உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சயிஃப் கடாஃபியைக் கையளிக்கக் கோரும் பன்னாட்டு நீதி மன்று
சயிஃப் அல்-இஸ்லாம் கடாஃபிமீது பன்னாட்டு நீதிமன்றால் ஏற்கனவே மானிடத்திற்கு எதிரான குற்றத்திற்காக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் லிபியாவின் தற்போதைய அரசு பன்னாட்டு நீதி மன்றுடன் ஒத்துழைக்க வேண்டிய கடப்பாட்டில் உள்ளது. ஆனால் சயிஃப் அல்-இஸ்லாம் கடாஃபி முதலில் லிபியாவில் நீதி விசாரணை செய்யப்பட வேண்டும் என்பதில் லிபிய அரசு உறுதியாக உள்ளதாகத் தெரிய வருகிறது. சயிஃப் அல்-இஸ்லாம் கடாஃபி லிபியாவில் கைதுகள் செய்தமை, கொலை செய்தமை, அடக்குமுறை, பொதுப் பணத்தைச் சூறையாடியமை போன்ற குற்றங்களுக்காக விசாரிக்கப்படவிருக்கிறார். அவருக்கு மரண தண்டனை கிடைப்பது நிச்சயம் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் பன்னாட்டுச் சட்ட நிபுணர்கள் சயிஃப் அல்-இஸ்லாம் கடாஃபியை லிபியாவில் விசாரிப்பதற்கு லிபிய அரசு பன்னாட்டு நீதிமன்றிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். அதன் பேரில் பன்னாட்டி நீதியாளர்கள் லிபியாவில் சயிஃப் அல்-இஸ்லாம் கடாஃபியை விசாரிக்கக் கூடிய நீதிக் கட்டமைப்பு இருக்கிறதா என்று முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறுகின்றனர். லிபிய நீதி அமைச்சர் சயிஃப் அல்-இஸ்லாம் கடாஃபி மரண தண்டனையை எதிர் நோக்குகிறார் என்கிறார்.
காடாஃபி குடும்பத்துக்குள் முடங்கி இருக்கும் இரகசியங்கள்.
பொதுவாக பெற்றோல் ஏற்றுமதி செய்யும் நாடுகள் தங்கள் வெளிநாட்டு நிதி வைப்புக்களை ஐரோப்பிய அமெரிக்க வங்கிகளில் வைப்பிலிட்டு வைப்பது வழக்கம். தேவைப்படும் நேரங்களில் அவற்றை அரசுகள் முடக்கி வைப்பதும் உண்டு. இதை முன் கூட்டியே உணர்ந்த மும்மர் கடாஃபி தனது நிதி வளத்தை தங்கங்களாக வாங்கி தனது நாட்டிலேயே குவித்து வைத்துள்ளார். மும்மர் கடாஃபியிடம் 143.8தொன் எடையுள்ள தங்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தங்கத்தையும் மற்ற கடாஃபியின் சொத்துக்களையும் கண்டு பிடிப்பதற்கு சயிஃப் அல்-இஸ்லாம் கடாஃபியின் கைது உதவி செய்யும்.
மேற்கு நாடுகளின் சதி அம்பலமாகுமா?
மும்மர் கடாஃபியுடன் மேற்கு நாடுகள் முன்னர் செய்து கொண்ட உடன்பாடுகள் மேற்கு நாட்டு அரசியல்வாதிகள் காடாஃபி குடும்பத்தினரிடம் இருந்து பெற்றுக் கொண்ட பணங்கள் போன்றவை சம்பந்தமான இரகசியங்கள் இன்னும் வெளிவரவில்லை. மும்மர் கடாஃபி பிடிபட்ட இடத்திலேயே கொல்லப் பட்டமை இந்த இரகசியங்கள் வெளிவராமல் இருப்பதற்காகவே என்றும் சிலர் கருத்துத் தெரிவித்திருந்தனர். சயிஃப் அல்-இஸ்லாம் கடாஃபியின் கைது பல வெடிக்கும் இரகசியங்களை (explosive secrets ) அம்பலமாக்கலாம்.

Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...