
இந்திய சிங்களக் கூட்டமைப்பிடம் தோல்வி கண்ட தமிழ்நாட்டுத் தமிழர்கள்
இந்தியாவும் சிங்களவரும் ராஜுவ் காந்தி தலைமையில் கைகோத்துக் கொண்டனர். சோனியா-மேனன் அதிகார மையத்தில் இந்தக் கூட்டமைப்பு மிக உறுதியாக உள்ளது. இலங்கையில் நடக்கும் தமிழ் இன அழிப்பை தடுத்து நிறுத்த தமிழ்நாட்டில் உள்ள தமிழ் இன உணவாளர்கள் பல முயற்சிகள் எடுத்தனர். நடிகர் சங்கம், இயக்குனர் சங்கம், சின்னத்திரையினர் மாணவர் அமைப்பு வழக்குரைஞர்கள் இப்படிப் பலரும் போராட்டம் நடாத்தினர். கொட்டும் மழையில் கைகோத்து நின்றனர். சிலர் தீக்குளித்து மாண்டனர். இவர்களால் இந்திய சிங்கள கூட்டமைப்பை அசைக்கவே முடியவில்லை.
தமிழ்நாடு சட்டசபை யுத்த நிறுத்தம் இலங்கையில் வேண்டுமென்று
இரு தீர்மானங்களை நிறைவேற்றியது. நடந்தது என்ன? பாராளமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா நாடகம் எங்கு முடிந்தது?
பொன்சேகாவின் கோமாளிகள் என்ன செய்வார்கள் என்று சோனியா-மேனன் அதிகார மையத்திற்கு நன்கு தெரியும்.
இறுதியில் நாம் கண்டது:
பார்பனன் உடலில் முட்டை உடைந்ததால் வழக்குரைஞர்கள் மண்டை உடையும்