திருப்பமா மீண்டும் திருகுதாளமா
அல்லது அம்மியின் நகர்ச்சியா
தீரர்தம் தீக்குளிப்புகளால்வந்த
மாற்றம் இது மட்டும்தானா?
நிலம் மடடும்தான் இழந்தார்கள்
பலம் இழக்கவில்லை என்றுணர்ந்ததாலா
தக்க தருணத்தில் தக்க அடிவிழும்
என்பதை அறிந்து கொண்டதாலா
தேர்தல் தந்திரமா ஆரியச் சூழ்ச்சியா
வார்த்தைகள்தான் மாறி நிற்கின்றனவா
கொள்கைளும் மாறுமா
மேனனின் மேலுமோர் தந்திரமா
நீங்கள் கொடுத்த பணத்திலும்
அளித்த ஆயுத பலத்திலும்
அனுப்பிய ஆறாயிரம் படையிலும்
வாழ்த்திக் கொடுத்த பயிற்ச்சியிலும்
சீறிப்பாயந்த சிங்களக் கொடியோர்
பொழிந்த குண்டு மழையில்
சிதறி செத்த பாலகர் உயிர்களை
குடியரசுத் தலைவியே உமது உரை
மீண்டும்தான் கொண்டு வருமா
ஆறுதலடைவது கோபாலபுரத்தார்தான்
கொதிக்கும் தமிழ் நெஞ்சங்கள்
குளிரும் தமிழீழத்தை
ஏற்று அங்கீகரித்தால்.
Based on news:
India changes language with measured ambiguityTamilNet, Friday, 13 February 2009, 01:30 GMT]Indian President Prathiba Patil in her address to the joint sitting of Indian Parliament on Thursday declared that India continued to support a negotiated political settlement in Sri Lanka within the framework of an undivided Sri Lanka acceptable to all the communities, including the Tamil community. Ms. Prathiba