வி கே கிருஷ்ணமேனனின் 12வது நினைவுச் சொற்பொழிவில் உரையாற்றிய தமிழின விரோதியான இந்தியப் பாதுகாப்புத் துறை ஆலோசகர் சிவ் சங்கர் மேனன் இலங்கை இனப்பிரச்சனை தீர்க்கப்படவேண்டும் என்பதும் தமிழர்களைத் தமது தலைவிதியைத் தாமே நிர்ணயிப்பவர்கள் என்பதில் நம்பிக்கை உள்ளவர்களாகச் செய்ய வேண்டும் என்பதும் தமிழர்கள் ஒன்று பட்ட இலங்கைக்குள் தமது உரிமைகளைச் சுதந்திரமாகத் அனுபவிக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பதும் இந்தியாவின் விருப்பமாகும் என்றார்.
சிவ் சங்கர் மேனன், எம் கே நாராயணன், நிருபாம ராவ், விஜய் நம்பியார், சதீஷ் நம்பியார் ஆகியோர் இலங்கை இனக்கொலைக்கு உதவியவர்களில் முக்கியமானவர்கள் எனத் தமிழர்கள் கருதுகிறார்கள். இவர்கள் மீது போர்க்குற்ற விசாரணை செய்யப்படவேண்டும் என்றுகூட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. 2009-ம் ஆண்டு போர் முடிந்தவுடன் சிவ் சங்கர் மேனன் இலங்கை தனது பிரச்சனையைத் தானே தீர்த்துக் கொள்ளட்டும் இதில் நாம் தலையிட மாட்டோம் என்றார். ஈழத் தமிழர்களுக்கு நடக்கும் அட்டூழியங்களைக் கேட்க ஆட்களில்லை என அப்போது பல தமிழின விரோதிகள் கருதியிருந்தனர். அவர்களின் வீராப்பிற்கு இப்போது தமிழ்நாட்டு மாணவர்கள் எழுச்சி பெரும் சவாலாக அமைந்ததுடன் மாணவர்களின் எழுச்சி இந்திய தேசிய "ஒருமைப்பாட்டிற்கும்" சவாலாக உருவெடுக்குமா என்ற அச்சமும் நிலவுகிறது.
இனி இருபது தலைமுறைக்கு தமிழர்கள் எந்த ஒரு எழுச்சியையும் மேற்கொள்ளாத அளவிற்கு அவர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தி விட்டதாக மார் தட்டிக் கொண்டிருந்த தமிழின விரோதிகளுக்கு இப்போது மாணவர்களின் எழுச்சி நாளுக்கு நாள் பரவலடைவதை கண்டு சற்று அதிர்வடைந்துள்ளனர் என்பதை சிவ் சங்கர் மேனனின் உரை சுட்டிக் காட்டுகிறது. 2009-ம் ஆண்டிற்குப் பிறகு ஈழத் தமிழர்களின் பிரச்சனையைப் பற்றி மௌனமாக இருந்த இந்திய பாதுகாப்புத் துறை ஆலோசகர் சிவ் சங்கர் மேனன் இப்போது வாய் திறந்திருப்பது ஏன்?
"It is clearly in India's interest that Sri Lanka solves its ethnic problems in a manner which makes each community, particularly the Sri Lankan Tamils, confident that they are masters of their own fates, their own destiny and free to enjoy their rights within the framework of a united Sri Lanka,"
இதிலும் மேனன் ஒன்றுபட்ட இலங்கைக்குள் என்றபதத்தைப் பாவித்து தமிழர்களுக்காக ஒரு நாடு அமைவதற்கான தனது எதிர்ப்பையும் கோடிட்டுள்ளார். தமிழர்கள் சிங்களவர்களுடனான தமது நீண்டகாலப் பட்டறிவை வைத்து தமக்கு தனி நாடு ஒன்றே தீர்வைத் தரும் என்று தீர்மானித்துப் பல 40 ஆண்டுகளாகிவிட்டன. அந்தத் தீர்மானத்தில் இருந்து தமிழர்கள் விலகக் கூடியதாக இதுவரை எதுவும் நடக்கவில்லை.
மேனனின் பேச்சில் ஒன்றை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். அவரின் பேச்சில் இந்தியாவிற்கு மிகவும் பிடித்த பல்லவியான 13-ம் திருத்தத்தைக் காணவில்லை. 13வது திருத்தம் சிங்களப் பேரினவாதிகள் வெறுக்கும் ஒன்று. அத்துடன் அதைச் சிதைத்து அர்தமற்றதாக்கும் சட்டங்கள் இலங்கையில் நிறைவேற்றப்பட்டுவிட்டது.
மேனன் கூறியவற்றில் இன்னும் ஒன்று முக்கியமனது:
"Equally, it is in our interest that Sri Lanka remains a close friend and does not affect our security adversely"
இணையாக இந்தியாவின் நெருங்கிய நண்பனாக இலங்கை இருக்க வேண்டும் என்பதும் இலங்கை இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமாக இருக்கக் கூடாது என்பதும் இந்தியாவின் விருப்பம்.
இங்கு இணையாக என்பது இலங்கைத் தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் விருப்பங்களுக்கு இணையாக என்பதாகும். ஆனால் தமிழர் உரிமையும் சிங்களவர் நட்பும் ஒரு போதும் ஒன்றாகவோ அல்லது இணையாகவோ இருக்க முடியாது. இரண்டும் mutually exclusive. அதாவது ஒன்றிருந்தால் மற்றது இருக்காது. இந்தியாவின் இலங்கை தொடர்ப்பான வெளியுறவுக் கொள்கையை சில பார்ப்பன அரசியல் விமர்சகர்கள் மட்டுமே மெச்சிக்கொண்டிருக்கின்றனர். இது அவர்களின் தமிழின விரோதத் தன்மையின் வெளிப்பாடு. ஆனால் நடு நிலை ஆய்வாளர்கள் இந்தியாவின் தமிழின விரோதப் போக்கும் சிங்களவர்களுக்குச் சார்பான நிலைப்பாடும் இந்தியாவிற்கு நன்மையளிக்காது என்று அடிக்கடி சொல்லி வருகின்றனர். ஆனால் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் இருக்கும் இந்திய நிர்வாக மையம் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை. விளைவாக இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் வளர்ந்து வருகிறது. இதை விரும்பாத அமெரிக்கா இலங்கை விவகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டது. 2009-ம் ஆண்டு நடந்த ஐநா மனித உரிமைக்கழகக் கூட்டத் தொடரில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை தொடர்பாகக் கொண்டு வந்த தீர்மானத்திற்கு வாக்களிக்காமல் நடுநிலை வகித்த அமெரிக்கா போரின் பின்னர் இலங்கையில் அதிகரிக்கும் சீன ஆதிக்கத்தைக் கருத்தில் கொண்டு இலங்கை தொடர்பாக தீர்மானங்களை முன் மொழியத் தொடங்கியது.
இந்தியாவிற்குச் சீனாவின் நேசக் கரம்
22-03-2013-ம் திகதி சீனா ஒரு எல்லை ரோந்து ஒப்பந்தம் ஒன்றை இந்தியாவுடன் செய்து கொள்ளும் தன் விருப்பத்தைத் தெரிவித்துள்ளது. அருணாச்சலப் பிரதேச்த்தில் பல பிரதேசங்களுக்குள் ஊடுருவி தனதாக்கிக் கொண்ட சீனா இப்போது இந்தியாவுடன் ஒரு மோதல் உருவாகுவதைத் தடுக்க விரும்புகிறது. சீனா செய்ய விரும்பும் ஒப்பந்தப்படி ஒரு நாட்டுப் படை எல்லை ரோந்தில் ஈடுபடும் போது மற்ற நாட்டுப்படை அதைத் தொடரக்கூடாது. எந்தச் சந்தர்ப்பத்திலும் ஒரு நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் படைமீது மற்ற நாடு தாக்குதல் நடாத்தக் கூடாது என்பன முக்கிய அமசங்களாகும்.
சீனாவின் நேசக்கரம் ஒரு மும்முனைப் போட்டியை உருவாக்குமா?
அமெரிக்கா இந்தியாவை ஆசியப் பிரந்தியத்தில் ஒரு தந்திரோபாய பங்காளியாக்க முயல்கிறது. ஆனால் இந்தியா அமெரிக்கப் பங்காளி தனனைச் சுரண்டக்கூடியவன் என சந்தேகிக்கிறது. சீனா இந்தியாவுடனான ஒரு மோதலை இப்போது விரும்பவில்லை. ஆனால் ஒரு நீண்ட கால அடிப்படையில் இந்தியாவை தனது பெருவிரலின் கீழ் வைத்திருக்கும் நோக்கத்துடன் தனது முத்து மாலைத் திட்டம் உட்படப் பல தந்திரோபாயங்களை வைத்துள்ளது. சீனாவின் கொள்கை மாற்றீடுகளில் (policy alternatives) தமிழ்நாட்டின் பிரிவினைவாதச் சிந்தனைக்கும் இடமுண்டு.
தமிழர்கள் ஒன்று பட்டு ஒரு அணியாகத் திரண்டால் சீன, இந்திய, அமெரிக்க ஆதிக்கப் போட்டியில் தமிழர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். இதை ஒட்டிய அரசியல் சிந்தனையும் சுயமரியாதையும் தமிழர்கள் மத்தியில் உள்ள அந்நிய சக்திகளை அப்புறப்படுத்தலின் முக்கியத்துவத்தி உணரும் தன்மையும் தமிழர்கள் மத்தியில் வளரவேண்டும்.
Saturday, 23 March 2013
Friday, 22 March 2013
ஜெனீவாத் தீர்மானம் தரும் படிப்பினைகளும் பயன்களும்
ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தின் 22வது கூட்டத் தொடரில் 22/03/2013-ம் திகதி நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் நேரடியாக எந்த நன்மைகளையும் ஈழத் தமிழர்களுக்கு தராவிடினும் தீர்மானத்தை ஒட்டி நடந்த நிகழ்வுகள் நீண்ட கால அடிப்படையின் நன்மை பயக்கும்.
இலக்குத் தவறிய பரப்புரையும் அதன் நன்மையும்
19வது கூட்டத் தொடரிலும் 22வது கூட்டத் தொடரிலும் அமெரிக்க அனுசரணையுடன் இலங்கை தொடர்பாகக் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை ஒட்டி இலங்கை பற்றி பல பரப்புரை நடவடிக்கைகள் பன்னாட்டு தொண்டு நிறுவனங்களும் சனல் - 4 தொலைக்காட்சியும் தமிழர் தரப்பினரும் தீவிரமாக மேற்கொண்டிருந்தனர். மனித உரிமைக் கழகத்திற்கான ஒரு நாட்டின் பிரதிநிதி இந்தப் பரப்புரைகளைப் பார்த்துவிட்டு தனது வாக்களிக்கும் தீர்மானத்தை மேற்கொள்ளமாட்டார். அவரது வாக்களிக்கும் தீர்மானம் அவரது நாட்டின் வெளிநாட்டமைச்சில் முடிவு செய்யப்பட்டிருக்கும். இப்படிப் பட்ட பரப்புரைகளைக் கேட்கும் முன்னரே எப்படி வாக்களிப்பது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கும். இலங்கையுடனான உறவும் தமக்கு எதிராக ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதற்கு இலங்கையின் ஆதரவின் தேவைப்பாடுமே வாக்களிப்பது தொடர்பான தீர்மானத்தை நிர்ணயிக்கும். இதில் நாம் படித்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால் இலங்கைக்கு எதிரானதும் எமது சுதந்திரம் தொடர்பான பிரச்சாரம் தனிப்பட்ட ரீதியில் ஒவ்வொரு நாட்டு ஆட்சியாளர்களையும் குறிப்பாக வெளிநாட்டு அமைச்சைச் சேர்ந்தவர்களையும் நோக்கி செய்யப்பட வேண்டும். தற்போது மனித உரிமைக் கழக்த்தின் பிரதிநிதியாக இருக்கும் ஒருவர் இனி வரும் காலத்தில் தனது நாட்டின் வெளிநாட்டமைச்சில் முக்கிய பதவியில் அமரும் வாய்ப்புக்கள் அதிகம். அப்போது அவருக்கு இலங்கை தொடர்பான நல்ல புரிந்துணர்வு இருக்கும்.
தமிழனுக்கு என ஒரு நாடு தேவை
நவநீதம் பிள்ளை என்று ஒரு தமிழர் மனித உரிமைக்கழக்த்தின் ஆணையாளராக இருப்பதால் அவர் தமிழர் விவகாரத்தில் நீதியாக நடந்து கொள்கிறார். அவரது இடத்தில் ஒரு சுஸ்மா சவராஜ் என்பவரோ அல்லது ஒரு சரிபாமா ராவோ என்பவரோ இருந்திருந்தால் அவர் இலங்கை சென்று ராஜபக்சே கொடுக்கும் விருந்தையும் அனுபவித்து விலையுயர்ந்த வைரங்கள் பதித்த கழுத்துச் சங்கிலியை வாங்கிக்கொண்டு இலங்கையில் எல்லாம் நல்லபடியாக இருக்கிறது என்று அறிக்கை கொடுத்திருப்பார். ஆனால் நவநீதம் பிள்ளையை இலங்கைப் பிரதிநிதி மஹிந்த சமரசிங்க கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். அமெரிக்காவின் தீர்மானத்துக்கு ஆதரவளித்த நாடுகளில் அமெரிக்கா உட்படப் பெரும்பாலான நாடுகள் இலங்கையைப் பாராட்டிப் பேசின. ஒரு நாடு கூட சமரசிங்கவின் நவி பிள்ளையைக் கடுமையாக விமர்சித்ததைச் சுட்டிக் காட்டவில்லை. தமிழனுக்கு என்று ஒரு நாடு இருந்து அப்பிரதிநிதி ஒழுங்கானவராக இருந்தால் அங்கு இலங்கையைக் காரசாரமாக விமர்சித்து நவி பிள்ளையை கடுமையாக விமர்சித்தமைக்கு கண்டனம் தெரிவித்திருப்பார். உலகின் பலநாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள் அவர்களுக்கு எதிராக அந்த நாட்டு அரசும் மக்களும் மோசமாக நடந்து கொண்டு இனவழிப்புச் செய்தால் நாம் எல்லாம் முடிந்த பின்னர் கண்டன ஊர்வலம் நடத்துவதா? இந்த இனவழிப்பு தமிழ்நாட்டிலும் நடக்கலாம்.
தமிழர்கள் ஒன்றுபட்டு ஒரு பெரும் வலுவான அமைப்பாக வேண்டும்
மனித உரிமைக் கழகத்திற்கு தீர்மானம் வந்ததை ஒட்டி தமிழ்நாட்டு மாணவர்கள் ஒன்றுபட்டு ஒரு போராட்டம் செய்து கொண்டிருப்பது கோபாலபுரத்தை கலக்கியடித்தது புது டில்லிக்கு தலையிடியானது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஒன்றுபட்டு, முக்கியமாக சாதியத்தை முதலில் ஒழித்துக்கட்டி, ஒரு பெரும் வலுவாகத் திரண்டால் தமிழர்களின் வாழ்வில் பெரு மாற்றம் ஏற்படுத்தலாம். அடம்பன் கொடிப் பழமொழியில் இருந்து நண்டுகளின் கதைவரை தமிழர்கள் நிறையக் கேட்டுவிட்டார்கள். தமிழர்கள் ஒருவரை ஒருவர் தூக்கிவிடும் செயலில் ஈடுபட வேண்டும். அனைத்துத் தமிழர்களும் பொருளாதார ரீதியில் உயர்ந்தவர்களாகவும் வரவேண்டும்.
முக்கிய பதவிகளைத் தேடி தமிழர்கள் போக வேண்டும்
நவி பிள்ளை அவர்கள் மனித உரிமைக்கழக ஆணையாளராக இருப்பதால் சில சந்தர்ப்பங்களில் எமக்கு அநீதி நடக்காமல் தடுக்கிறார். 2009-ம் ஆண்டின் போரின் போது அவர் சில நடவடிக்கைகளை எடுக்கும் படி ஐநாவின் பொதுச் செயலர் பான் கீ மூனை வேண்டிய போது அவரை பான் கீ மூனும் அவரது ஆலோசகர் விஜய் நம்பியாரும் அடக்கி விட்டனர். விஜய் நம்பியாரின் இடத்தில் ஒரு தமிழர் இருந்திருந்தால் நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும். உலகெங்கும் வாழும் தமிழர்கள் அந்த நாட்டு வெளிநாட்டமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, ஐநா போன்ற உலக மன்றங்கள் ஆகியவற்றில் முக்கிய பதவிகளில் அமரவேண்டும்.
தமிழர்கள் படைத்துறை வல்லுநர்களாக வேண்டும்
தமிழர்கள் தாம் வாழும் நாடுகளின் படைத்துறையில் இணைந்து அதில் வல்லுனர்களாக வேண்டும். இப்போது எல்லா நாடுகளும் இணையவெளிப் போரில் (Cyber warfare) அதிக கவனம் செலுத்துகின்றன. தமிழர்கள் இலகுவாக அமைக்கக் கூடிய படையணி இணையவெளிப்படையணியாகும். அத்துடன் ஆளில்லாப் போர் விமானங்களை உருவாக்கும் திறனை தமிழர்கள் பெறவேண்டும்.
அந்நிய சக்திகளை விரட்டியடிக்க வேண்டும்
மனித உரிமைக் கழகத்தின் 19வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானம் வந்த போது பாக்கிஸ்த்தான் பத்திரிகை அதற்கு ஆதரவாக ஆசிரியத் தலையங்கம் தீட்டியதுடன் பாக்கிஸ்த்தான் அரசும் அதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றது. ஆனால் இந்து பத்திரிகை? 22வது கூட்டத் தொடர் தீர்மானத்திற்கு சுப்பிரமணிய சுவாமி என்ன செய்தார்? எம்முள்ளே இருந்து கொண்டு தங்களையும் தமிழர்கள் என்று சொல்லிக் கொண்டு எமக்கு எதிராக மோசமாகச் செயற்படுபவர்கள் பலருண்டு. அவர்கள் எமக்கு பாதகங்களை இலகுவாகச் செய்யக் கூடிய அளவிற்கு திற்மையும் பலமும் மிக்கவர்களாக இருக்கிறார்கள். எம்மைச் சுரண்டியே அவர்கள் தம் வளங்களைப் பெருக்கிக் கொண்டனர். சுப்பிரமணிய சுவாமி, சோ, இந்து ராம் போன்றவர்கள் வெளிப்படையாகவே தமது தமிழின விரோதப் போக்கை துணிந்து காட்டுகிறார்கள். எமது இளிச்ச வாய்தனத்தை அவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.
வந்தாரை வாழவைத்தது போதும் ஆளவைத்ததும் போதும்.
சென்ற ஆண்டு நண்பர் ஒருவர் கேரளாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் முதல் முறையாகச் சென்றார். கொச்சினினில் இருந்து சென்னைக்கு வந்தவருக்கு ஒரே ஆச்சரியம் கொச்சினில் இல்லாத மக்கள் நெருக்கடி சென்னையில் எல்லாச் சாலைகளிலும் இருந்தது. தனது வண்டி ஓட்டுனரிடம் ஏன் கொச்சினில் இல்லாத மக்கள் நெருக்கடி சென்னையில் இருக்கிறது என்று கேட்டதற்கு அவர் கொடுத்த பதில் "முழு மலையாளிகளும் இங்குதான் வேலைக்கு வந்திருக்கிறார்கள்". அது முழுமையாக உண்மையாக இல்லாவிடினும் அதில் உண்மை உண்டு. ஒருவன் ஏதாவது ஒரு துறையில் திறமையாகச் செயற்பட்டால் அவன் தமிழனல்லாவிடில் அவனை ரசிக்கலாம் ஆனால் அவனைத் தூக்கி தலையில் வைக்கக் கூடாது. அடுத்த தலைவன் நீதான் எனலாம். சுப்பர் ஸ்டார், தல, கப்டன் எல்லாம் தமிழரல்லாதவர்களாக இருப்பது தமிழனிடம் திறமை இல்லை என்பதைத்தானே காட்டுகிறது. வந்தாரை வாழ வைத்ததும் போதும் ஆளவைத்ததும் போதும்.
வந்தாரை வாழ வைத்தது தமிழனின் பெருமை
வந்தாரை ஆள வைத்தது தமிழனின் மடைமை
என உணர்ந்ததால் வெடித்ததங்கு மாணவர் எழுச்சி
தாய்மண் என நம்பியிருந்த பாரததேசம்
வாய்மண்ணான பாதகதேசம் மட்டுமே
என் உணர்ந்ததால் வெடித்ததங்கு மாணவர் எழுச்சி
சிங்களத்துக்கு படைக்கலனும் பயிற்ச்சியும் கொடுத்து
பல்லாயிரம் படைகளையும் பின்கதவால் அனுப்பி
எம்படை அழித்து அப்பாவிகள் உயிர்கள் குடித்து
செய்த அழிவை இன்று அறிந்ததனால் வெடித்ததங்கு மாணவர் எழுச்சி
அன்று தமிழர் அவலங்களை ஊடகங்களை அடக்கி
உண்மைகளை மூடி மறைத்து உண்ணாவிரத நாடகமாடி
மழைவிட்டது தூவானம் விடவில்லை எனச் சொன்ன பொய்
இன்றறிந்ததால் வெடித்ததங்கு மாணவர் எழுச்சி
இத்தாலி நச்சரவத்துடன் ஆரிய பேய்கள் கைகோர்த்து
வஞ்சகத் வந்தேறிய நரி எச்சத்திற்கு நாவூறநிற்க
செய்த தூரோகங்கள் இன்று பகிரங்கமானதால்
வெடித்ததங்கு மாணவர் எழுச்சி
ஈழமண்ணில் விழுந்த ஒவ்வொரு குண்டும் இந்தியத் துரோகம்
வீரமண்ணில் சிதறிய ஒவ்வொரு உடலும் இந்தியத் துரோகம்
எம் பெண்கள் உடல் சிதைத்த ஒவ்வொரு கரமும் இந்தியத் துரோகம்
இதை உணர்ந்ததால் வெடித்ததங்கு மாணவர் எழுச்சி
ஐந்தாம் ஈழப்போர் வெடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை
மீண்டும் தமிழ் ஆளும் நாள் வெகு தொலைவில் இல்லை
தமிழிழம் தனி நாடாக உதிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை
எனப் பறை சாற்றுகிறது மாணவர் எழுச்சி

Wednesday, 20 March 2013
இலங்கை இனவழிப்பில் இந்தியாவின் பங்கு உறுதிப்படுத்தப்படுகிறது!
இலங்கையில் நடந்தது ஒரு சாட்சியமற்ற இனவழிப்பு. சனல் - 4 வெளிக்கொண்டு வந்தது ஒரு மிக மிகச் சிறிய பங்கு மட்டுமே. போர் காணொளிப்பதிவுக் கருவிகள் முன்னர் நடப்பதில்லை. ஊடகங்களையும் செஞ்சிலுவைச் சங்கம் உட்பட எல்லா பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளையும் போர் முனையில் இருந்து வெளியேற்றி விட்டு இலங்கைப் படையினர் அப்பாவிகள் மீது கண் மூடித்தனமாகக் குண்டுகளை வீசிக் கொன்றனர்.
இலங்கையில் நடந்த போர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழகத்திற்கு வரும் தீர்மானங்களின் கடுமையை இந்தியா குறைத்து வருகிறது என்பது இப்போது உறுதியாகிவிட்டது. இலங்கையில் நடந்த போர்க்குற்றத்திற்கும் மானிடத்திற்கும் எதிரான குற்றத்திற்கும் நம்பகரமான ஆதாரங்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் அமைத்த நிபுணர்கள் குழு தெரிவித்ததுடன் இது தொடர்பாக ஒரு பன்னாட்டு மட்ட சுதந்திர விசாரணை எனவும் பரிந்துரை செய்தது. பின்னர் ஐநா பொதுச் செயலர் பான் கீ மூன் முதலில் இலங்கை அரசுக்கு ஒரு உள்ளக விசாரணைக்குச் சந்தர்ப்பம் கொடுப்போம் என்றார். பல நிர்பந்தங்களின் பின்னர் இலங்கை ஒரு கற்றுக் கொண்ட பாடங்களுக்கும் மீளிணக்கத்திற்குமான ஒரு ஆணைக்குழுவை போரின் போது நடந்தவை தொடர்பாக விசாரிக்க நியமித்தது. அதன் பரிந்துரைகளில் முக்கியமானவற்றை நிறைவேற்றாத இலங்கை அரசு பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுவிட்டன என்கிறது. இலங்கை அரசு ஒரு படைத்துறை விசாரணைக்குழுவை அமைத்து நாட்டில் ஒருவரும் காணாமல் போகவில்லை போரின் போது மருத்துவ மனையில் குண்டுகள் வீசப்படவில்லை என்றது. தற்போது நடந்து கொண்டிருக்கும் மனித உரிமைக் கழகத்தின் 22வது கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் அறிக்கை சமர்ப்பித்த அதன் ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கையில் நடந்ததாகக் கருதப்படும் மனித உரிமை மீறல்களுக்கு ஒரு பன்னாட்டு மட்ட விசாரணை தேவை என்றார். ஆனால் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் அந்த வாசகத்தை இந்தியா நீக்கி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டமை இப்போது சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டு விட்டது. தீர்மானத்தில் பன்னாட்டு விசாரணை தேவை என்ற வாசகம் நீக்கபப்ட்டமைக்கு இந்தியாவின் அழுத்தமே காரணம் என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்திய பிரதிநிதி அனந்த பத்மநாபன் தெரிவித்துள்ளார். இதை இந்தியா மறுக்கவில்லை
இலங்கையில் பன்னாட்டு விசாரணை செய்யப் பட்டால் இலங்கையில் நடந்த போர்க்குற்றம் மற்றும் இனவழிப்பில் இந்தியாவின் பங்களிப்பு வெளிவரும் என்ற பயமே இந்தியா இலங்கையில் பன்னாட்டு விசாரணையைத் தடுக்கக் காரணம். இதற்காக இந்திய அரசு தனது பங்காளியான திமுகாவின் சொல்லையும் கேட்கவில்லை.இதை ஏற்கனவே 27-02-2012 Times of Indiaஇல் வந்த ஒரு கட்டுரை உறுதி செய்தது. அதில்:
இலங்கையில் தமிழர்களின் சுதந்திரப் போரை அடக்கியதில் இந்தியாவின் எதிர்க்கட்சிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளன. அவையும் ராஜபக்சவை போர்க்குற்றவாளி என அறிவிக்க முடியாது என்கின்றன.
NDTV தொலைக்காட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் அரசில் இருந்து வெளியேறியமை தொடர்பாக நடந்த கலந்துரையாடல்களில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் இலங்கை மனித உரிமை மீறல்களை காஷ்மீர் மனித உரிமைகளுடன் அடிக்கடி ஒப்பிட்டார். அத்துடன் இலங்கையில் நடப்பது இனக்கொலை என்றோ அல்லது போர்க்குற்றம் என்றோ இந்தியப் பாராளமன்றத்திலோ அல்லது ஒரு பன்னாட்டு அமைப்பிலோ இந்தியா தீர்மானம் கொண்டு வந்தால் அதைப்போல ஒரு தீர்மானத்தை பாக்கிஸ்த்தானும் கொண்டுவரும் என அனைவரையும் அவர் அடிக்கடி அவர் மிரட்டிக் கொண்டிருந்தார். அவரும் ஒரு தமிழின விரோதியாகவே காணப்பட்டார். ஊடகங்களில் வந்த கருத்துக்களை வைத்துப் பார்த்தால் பெரும்பாலான இந்தியர்கள் தமிழின விரோதிகளாகவே காணப்படுகின்றனர். தமிழ்நாட்டுப் பார்ப்பனக் கும்பலைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.

- "ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவி பிள்ளை மனித உரிமைக்கழகத்திற்கு சமர்பித்த அறிக்கையில் இறுதிப் போரில் பன்னாட்டுச் சட்டங்கள் மீறப்பட்டது தொடர்பாக சுதந்திரமான பன்னாட்டு விசாரணை ஒன்று வேண்டும் என்றார். இதற்காக சிறப்பு அதிகாரி இலங்கை செல்ல நியமிக்கப்பட்டால் அது இந்தியாவிற்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவதுடன் ஒரு கட்டத்தில் புது டில்லியையும் தாக்கும் என இந்தியா அஞ்சுகிறது."
இலங்கையில் தமிழர்களின் சுதந்திரப் போரை அடக்கியதில் இந்தியாவின் எதிர்க்கட்சிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளன. அவையும் ராஜபக்சவை போர்க்குற்றவாளி என அறிவிக்க முடியாது என்கின்றன.
NDTV தொலைக்காட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் அரசில் இருந்து வெளியேறியமை தொடர்பாக நடந்த கலந்துரையாடல்களில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் இலங்கை மனித உரிமை மீறல்களை காஷ்மீர் மனித உரிமைகளுடன் அடிக்கடி ஒப்பிட்டார். அத்துடன் இலங்கையில் நடப்பது இனக்கொலை என்றோ அல்லது போர்க்குற்றம் என்றோ இந்தியப் பாராளமன்றத்திலோ அல்லது ஒரு பன்னாட்டு அமைப்பிலோ இந்தியா தீர்மானம் கொண்டு வந்தால் அதைப்போல ஒரு தீர்மானத்தை பாக்கிஸ்த்தானும் கொண்டுவரும் என அனைவரையும் அவர் அடிக்கடி அவர் மிரட்டிக் கொண்டிருந்தார். அவரும் ஒரு தமிழின விரோதியாகவே காணப்பட்டார். ஊடகங்களில் வந்த கருத்துக்களை வைத்துப் பார்த்தால் பெரும்பாலான இந்தியர்கள் தமிழின விரோதிகளாகவே காணப்படுகின்றனர். தமிழ்நாட்டுப் பார்ப்பனக் கும்பலைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.
Tuesday, 19 March 2013
கருணாநிதி ஏமாற்றுகிறாரா? ஏமாற்றப்பட்டாரா?
ஜெனிவாவில் நடக்கும் மனித உரிமைக் கழகத்தின் 22வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மாணவர் எழுச்சி இந்திய அரசையே ஆட்டம் காண வைத்துள்ளது.
கருணாநிதி காங்கிரசுடனான கூட்டணியில் இருந்து விலகிக்கொண்டார். கருணாநிதியை ஏமாற்ற காங்கிரசு அரசு சில நகர்வுகளை மேற்கொண்டது.
இந்தியா தனது பிரதிநிதியை புதுடில்லிக்கு அழைத்தது.
இந்தியாவின் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்திற்கான பிரதிநிதி டிலிப் சிங்ஹா அவசரமாக புதுடில்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார். தற்போதைய தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்த நிலையில் டிலிப் சிங்ஹாவுடனான கலந்துரையாடல் அவர் ஜெனீவாவில் இருந்த படியே செய்ய முடியும். இருந்தும் அவர் புது டில்லிக்கு அழைக்கப்பட்டமைக்கு இரு காரணங்கள் இருக்கலாம். ஒன்று கலந்துரையாடப்படவிருப்பது மிகவும் இரகசியமாக வைக்க வேண்டிய அளவிற்கு தேசியப் பாதுகாப்பு அல்லது வெளியுறவுக் கொள்கை சம்பந்தமாக முக்கியமானதாக இருக்கலாம். அல்லது தமிழ்நாட்டில் எழுந்துள்ள எழுச்சி தொடர்பாக சோனியா காந்தி இந்திய பாதுகாப்புத் துறைச் செயலர் சிவ் சங்கர் மேனனை அழைத்து ஆலோசனை நடாத்த அவர் காலத்தை இழுத்தடிப்பதற்காக மனித உரிமைக் கழகத்திற்கான பிரதிநிதி டிலிப் சிங்ஹா அவசரமாக புதுடில்லிக்கு அழைத்து ஆலோசனை நடாத்த வேண்டும் என்று சொல்லியிருக்கலாம்.
இலங்கை இந்தியப் பாதுகாப்புப் பேச்சு வார்த்தை ஒத்தி வைப்பு
2013 மார்ச் 23-ம் திகதி நடைபெறவிருந்த இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பாதுகாப்புச் செயலர் மட்டத்திலான பேச்சு வார்த்தை அடுத்த தேதி குறிக்கப்படாமலே ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்போதைய நிலையில் கோத்தபாய ராஜபக்ச புதுடில்லிக்குப் போனால் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.அமெரிக்காவின் தீர்மான வரைபை நாம் இன்னும் பார்க்கவில்லை டிலிப் சிங்ஹா அதைக் கொண்டு வருவார் அதைப்பார்தபின்னர் முடிவு எடுப்போம் என இந்தியா சொல்வது முழுப்பொய். தீர்மான வரைபை ஒரு மின்னஞ்சலிலோ அல்லது ஒரு தொலைநகலிலோ சில மணித்துளிகளில் பெற்றுக் கொள்ளலாம். தீர்மான வரைபு ஒன்றும் இரகசியப் பத்திரம் அல்ல. ஏற்கனவே ஜெனிவாவில் அமெரிக்கா கூட்டிய் கூட்டத்தில் இந்தியப் பிரதிநிதி வாய் திறக்கவே இல்லை. காலாந்தர மீளாய்வுக் கூட்டத்தில் அவர் இலங்கையைப் பாரட்டிப் பேசினார்.
கருணாநிதியைச் சந்தித்த சோனியாவின் தூதர்கள் மூவர்
கலைஞர் கருணாநிதி தான் 2014இல் நடக்கவிருக்கும் இந்தியப் பாராளமன்றத் தேர்தலில் எல்லத் தொகுதிகளிலும் தோல்வியைத் தவிர்க்க அவர் ஏதாவது காத்திரமான நடவடிக்கையை எடுத்தே ஆக வேண்டும் அல்லது ஒரு முழு ஏமாற்று நாடகம் ஒன்றை அரங்கேற்ற வேண்டும். ஈழத் தமிழர்கள் சம்பந்தமாக ஏதாவது செய்து தனது அரசியல் இருப்பை இப்போது தக்க வைத்துக் கொள்ளாவிடில் தனது அரசியல் செல்வாக்கின் முழுமையான சரிவு 2014இல் ஆரம்பமாகும் என கருணாநிதி நன்கறிவர். இதனால் அவர் சோனியா அரசுடன் முரண்டு பிடிக்கிறார். கருணாநிதி கூட்டணி ஈழத் தமிழர்கள் தொடர்பாக தானது கோரிக்கைகளை நடுவண் அரசு நிறைவேற்றாவிடில் அரசில் இருந்து வெள்யேறுவேன் என்று அறிவித்தவுடன் பல விமர்சனங்கள் எழுந்தன. கருணாநிதி அடுத்த பல்டிக்குத் தயாராகிறார்; இப்போது இப்படிச் சொல்பவர் பின்னர் மதசார்புடைய பாரதிய ஜனதாக கட்சி ஆட்சிக்கு வராமல் இருக்க தான் அரசுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று சொல்லலாம் போன்ற கிண்டல்கள் வெளிவரத் தொடங்கி விட்டன. கருணாநிதி தனது கட்சியினரை அமைச்சர் பதவியைத் துறக்கச் சொல்லிவிட்டு ஆட்சி கவிழாமல் இருக்க தொடர்ந்தும் தான் ஆதரவு வழங்குவேன் எனச் சொல்லலாம். இந்த விமர்சனங்களை முறியடித்து கருணாநிதி அரசில் இருந்து வெளியேறினார். கருணாநிதியைச் சந்திக்க சோனியா காந்தி ப. சிதம்பரம், ஏ கே அந்தோனி, குலாம் நபி அசாத் ஆகியோரை அனுப்பினார். இவர்கள் கருணாநிதியை அவரது இரண்டாவது மனைவியின் இல்லமான சிஐடி காலனியில் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடாத்தினர்.பேச்சுவார்த்தை முறிந்து விட்டது என NDTV செய்தி வெளியிட்டது: Congress ministers fail to broker peace with DMK over Sri Lanka. ஆனால் இந்து பத்திரிகை UPA buys time from DMK - ஐக்கிய மக்கள் கூட்டணி என்னும் சோனியாவின் கூட்டணி கருநாநிதியிடம் நேரம் வாங்கியுள்ளது எனச் செய்தியை வெளிவிட்டது. இலங்கை அரசும் ஜெனிவாவில் இந்தியா மூலமாக நேரம் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறது. சோனியாவும் கருணாநிதியிடம் நேரம் வாங்குகிறாராம். ஆனால் நடுவண் அரசில் இருந்து கருணாநிதி வெளியேறியது இந்துப் பத்திரிகையின் செய்தியைப் பொய்யாக்கியது.
ஆளும் காங்கிரசுக் கூட்டணியின் பாராளமன்ற உறுப்பினர்களின் தொகை 246இல் இருந்து 228ஆகக் குறைந்துள்ளது. முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜவாதக் கட்சி உட்படப் பல சிறு கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதால் ஆளும் கட்சிக்கு 286 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகக் கருதப்படுகிறது. 540 உறுப்பினர்களைக் கொண்ட பாராளமன்றத்தில் 271 உறுப்பினர்கள் தேவை. ஆனால் முலாயம் சிங் யாதம் காங்கிரசு அமைச்சர் ஒருவருடன் கடுமையாக மோதிக்கொண்டார். உருக்குத் துறை அமைச்சர் பேனி பிரசாத் முலாயம் சிங் யாதவை பயங்கரவாதி என விமர்சித்தார். முலாயம் சிங்கின் கட்சிக்கு 22 உறுப்பினர்களும் வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 21 உறுப்பினர்களும் இருக்கின்றனர். இவற்றையெல்லாம் கணக்கிட்டு சோனியாவின் தூதுவர்கள் மூவரும் கருணாநிதியும் ஒன்றுபட்டுத்தான் விலகும் தீர்மானம் எடுத்திருக்கலாம். கருணாநிதி விலகியதற்காக இதுவரை எந்த ஒரு காங்கிரசுக்காரனும் கருணாநிதியைக் கடுமையாக விமர்சிக்கவில்லை.
இலங்கையில் இனக்கொலை நடந்தது என்ற வாசகமும் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களுக்கு சுதந்திரமான பன்னாட்டு மட்ட விசாரணை தேவை என்ற வாசகமும் இலங்கை தொடர்பான அமெரிக்க கொண்டு வரும் தீர்மானத்தில் இடம்பெற வேண்டும் எனக் கருணாநிதி கேட்பதை இந்தியாவால் ஒரு போதும் நிறைவேற்ற முடியாது. இதை நிறைவேற்றினால் அது இந்தியாவின் காங்கிரசு ஆட்சியாளர்களுக்கும் அவரது ஆலோசகர்களுக்கும் பெரும் ஆபத்தாக முடியும். கருணாநிதிக்கும் இது நன்கு தெரியும். தெரிந்தும் அக்கோரிக்கைகளை முன்வைத்து கருணாநிதி கூட்டணியை முறித்ததற்கான காரணம் அவர் தேர்தல் தொகுதிகளின் நாடிகளைப் பிடித்துப் பார்ப்பத்தில் அனுபவ ரீதியான திறமைசாலிகளில் உலகத் தரம வாய்ந்தவர். காங்கிரசுடன் கூட்டணியாக அடுத்த பாராளமன்றத் தேர்ந்தலில் போட்டியிட்டால் எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைய நேரிடும் என்பதை கருணாநிதி உணர்ந்து விட்டார். இனி அவர் தன்னை காங்கிரசு ஆட்சி ஏமாற்றிவிட்டதாக பிரச்சாரம் மேற்கொள்ளப் போகிறார். தீவிர ஈழத் தமிழர்களின் விடுதலை ஆதரவாளராகத் தன்னைக் காட்டிக் கொள்ளப் போகிறார்.
ஜெனிவாவில் இருந்து பிரித்தானியத் தமிழ்த் தொலைக்காட்சியான தீபத்திற்கு சீமான் அளித்த பேட்டியில் கருணாநிதி ஏமாற்றுகிறார் என்றார். ஜீ கே வாசன் தலைமையில் சில காங்கிரசுக் கட்சியினர் கட்சியில் இருந்து வெளியேறி மீண்டும் தமிழ்நாடு மாநில காங்கிரசை உருவாக்கி அது திமுகாவுடனும் விஜயகாந்துடனும் இணைந்து அடுத்த பாராளமன்றத் தேர்தலில் போட்டியிடும் என்றார் சீமான். கருணாநிதி ஈழத் தமிழர்களுக்கான நன்மையைக் கருத்தில் கொள்பவராக இருந்தால் அவர் 2007-ம் ஆண்டே காங்கிரசுடனான உறவை முறித்திருக்க வேண்டும் என்றார் சீமான்.
கருணாநிதி தமிழர்களை ஏமாற்றவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அவரிடமே இருக்கிறது. ஏனெனில் அவர் பலதடவை தமிழர்களை ஏமாற்றி விட்டார். இனி காங்கிரசுக் கட்சியுடன் கூட்டணி இல்லை என அவர் அறிவிப்பாரா? இனி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்படும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி வைப்பேன் என அறிவிப்பாரா? ஈழத் தமிழர்களுக்கு தனி நாடு ஒன்றே தீர்வாகும் என அறிவிப்பாரா?
காங்கிரசுக்குப் பாடம் புகட்ட வேண்டும்
காங்கிரசுக் கட்சி ஈழத் தமிழர்களின் விடுதலைக்கு எதிராகச் செயற்பட்டதும் அதை மோசமாக நசுக்கியதும் இனி தமிழ்நாட்டில் எந்த ஒரு விடுதலைக் கோரிக்கையும் எழக்கூடாது என மறைமுக எச்சரிக்கை விடுக்கவே. இப்போது உலகத் தமிழர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து இனி எந்த ஒரு இந்திய ஆட்சியாளர்களும் தமிழர்களுக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட அசைத்தால் அது பேராபத்தில் முடியும் என்னும் வகையில் பல முனைகளில் தமிழின விரோதிகளுக்குப் பாடம் புகட்ட வேண்டும். இதே பாடத்தை திமுகாவிற்கும் புகட்ட வேண்டும்.
இலங்கை இனக் கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது:
வெறும் காங்கிரசு திமுக கூட்டணிப் பிரச்சனையல்ல
வெறும் இலங்கை இந்திய உறவுப் பிரச்சனையல்ல
வெறும் இலங்கையில் அதிகரிக்கும் சினாவின் ஆதிக்கப் பிரச்சனையல்ல
வெறும் அமெரிக்காவின் பிராந்திய அரசியல் பிரச்சனையல்ல
வெறும் ஈழ விடுதலைப் பிரச்சனை மட்டுமல்ல
இது உலகெங்கும் வாழும் ஒவ்வொரு மனிதாபிமானம் மிக்கவர்களினதும் கடமையாகும். இனி எந்த ஒரு நாட்டிலும் உள்நாட்டுப் போரில் மக்களை உணவின்றி, நீரின்றி, மருத்து வசதிகளின்றி வதைத்து உயிரடன் புதைத்து இனக்கொலை புரிய எவரும் முயலாமல் தடுக்க வேண்டிய எல்லோரினதும் கடமையாகும்.

Sunday, 17 March 2013
சீனா தயாரிக்கும் புத்திசாலிக் குழந்தைகள்
உலகத்தின் சீனாவின் ஆதிக்கம் வளர்ந்து கொண்டு வருகிறது என்ற அச்சம் பலரிடையே நிலவுகிறது. சீனர்களின் நடவடிக்கைகளைப் பற்றி மற்றவர்களின் விமர்சனத்தை அவர்கள் கருத்தில் எடுப்பதில்லை. இதனால் சீனாவின் ஆதிக்கம் உலகில் வளருமிடத்தி நிலை எப்படி இருக்கும் என்ற அச்சம் வளர்ந்து வருகிறது.
தனது நாட்டில் பிறக்கும் பிள்ளைகள் பிறக்க சீனா பல நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. உலகெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான புத்திசாலிகளின் DNA மாதிரிகள் பற்றிய தகவல்களை சீனா சேகரித்து. அதி்ல் புத்திசாலிகளுக்கான DNA மாதிரிகளின் பொதுத் தன்மை போன்றவற்றை அறிந்து கொண்டது சீனா. அத்துடன் எந்த DNA மாதிரிகள் புத்திசாலிகளுக்குரியது என்பதை அறிந்து கொள்வதில் சீனா பெரிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டது.
ஒரு தாயின் சூல்கள் பலவற்றையும் தந்தையின் விந்துகள் பலவற்றையும் தனித்தனி இணைத்து பல கருக்களை சோதனைக் குழாய்களில் வளர வைத்து அவற்றின் DNA மாதிரிகளை ஆய்வு செய்து அது புத்திசாலிகளுக்கான DNA மாதிரிகளுடன் ஒத்துப் போகும் கருவை மட்டும் தாயின் கர்பப்பையில் செலுத்தி விடுவார்கள். இதனால் பிறக்கும் பிள்ளை புத்திசாலியாக இருக்கும்.

ராஜபக்சேவின் ஆளும் கட்சிக்குள் சந்திரிக்காவால் குத்து வெட்டு ஆரம்பம்
இலங்கை அதிபரின் மஹிந்த ராஜபக்சவின் ஆளும் கட்சிக்குள் குத்து வெட்டு ஆரம்பித்துள்ளது. இதற்கும் ஜெனிவாவில் மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என நம்பப்படுகிறது.
மஹிந்தவின் ஆளும் கட்சி 1951 இல் S. W. R. D பண்டாரநாயக்காவால் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது ஆட்சியில் இருந்த D S சேனநாயக்காவிற்குப் (ஐக்கிய தேசியக் கட்சி) பிறகு தானே இலங்கையின் தலைமை அமைச்சராவார் என நம்பியிருந்தார். ஆனால் அடுத்த பிரதமராக D S சேனநாயக்காவின் மகன் டட்லி சேனநாயக்காதான் தலைமை அமைச்சராக வருவார் என்பதை அறிந்தவுடன் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி சிறீ லங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பித்தார். இலகுவாக ஆட்சியைப் பிடிப்பதற்கு அவர் தன்னை ஒரு சோசலிஸவாதியாகக் காட்டிக் கொண்டார். அத்துடன் இலங்கையில் சிங்களம்தான் ஆட்சிமொழியாகும் என முழங்கினார். ஐக்கிய தேசியக் கட்சி கொழும்புக் கனவான்களை முன்னிறுத்தி அரசியலை நடாத்தியது. மாறாக பண்டாரநாயக்க உள்ளூர் அரசியல்வாதிகளை முன்னிறுத்தி அரசியலை முன்னெடுத்தார். இதனால் அவர் 1956 ஆட்சியைப் பிடித்தார்.
S. W. R. D பண்டாரநாயக்கா ஆரம்பித்த சிறீ லங்கா சுதந்திரக் கட்சி அவரது குடும்பச் சொத்தாகவே இருந்தது. அவருக்கும் பின்னர் அவரது மனைவி சிறிமாவோ பண்டாரநாயக்க, மகள் சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோரின் கட்டுப்பாட்டில் சிறீ லங்கா சுதந்திரக் கட்சி இருந்து வந்தது. 2004-ம் ஆண்டு தலைமை அமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்க தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இடைக்கால தன்னாட்சி அதிகாரத்தை தமிழர் வாழும் பகுதிகளில் வழங்க முன் வந்தார். அது இந்தியாவில் இருக்கும் அதிகாரப் பரவலாக்கத்திலும் பார்க்க அதிக அதிகாரங்களைக் கொண்டிருப்பதால் இந்தியா கொதித்து எழுந்தது. அப்போது சிறீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க அதிபராகவும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ரணில் விக்கிரமசிங்க தலைமை அமைச்சராகவும் இருந்தார். அப்போது கொழும்பிற்கான இந்தியத் தூதுவராக நிருபாம ராவ் இருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இடைக்கால தன்னாட்சி அதிகாரத்தை தமிழர் வாழும் பகுதிகளில் வழங்குவதை இந்தியா விரும்பாததால் அவர் உடனடியாக கொழும்பில் காரியத்தில் இறங்கினார். விளைவாக ரணில் தலைமையிலான ஆட்சியை அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க கலைத்தார். நிருபாம ராவ் சந்திரிக்காவின் சிறீ லங்கா சுதந்திரக் கட்சியையும் பேரிவாதக் கட்சியான ஜேவிபி எனப்படும் ஜனதா விமுக்தி பெரமுன கட்சியையும் கூட்டணியாக இணைத்தார். ஜேவிபியின் வேண்டுதலுக்கு இணங்க மஹிந்த ராஜபக்ச சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் முன்னிலைப் படுத்தப்பட்டார். நடந்த பொதுத் தேர்தலில் சீறிலங்கா சுதந்திரக் கட்சியினதும் ஜேவிபியினதும் கூட்டணி வெற்றி பெற்றது. மஹிந்த ராஜபக்ச இலங்கையின் பிரதம மந்திரியானார். 1994 முதல் 2005வரை இலங்கையின் அதிபராக இருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க அப்போதைய இலங்கையின் அரசியலமைப்பு யாப்பிற்கு இணங்க இரு தடவை மட்டுமே இலங்கை அதிபராக இருக்க முடிந்தது. அடுத்த அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட முடியாமல் போக 2005-ம் ஆண்டு நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மஹிந்த ராஜபக்ச போட்டியிட்டு வெற்றியீட்டினார். பின்னர் அவர் கட்சியில் தனது பிடியை இறுக்கி சந்திரிக்கா பண்டாரநாயக்காவை ஓரம் கட்டினார். இதனால் அவர் அரசியல் வாழ்வில் இருந்தே ஒதுங்கி இருந்தார்.
சனல் - 4 தொலைக்காட்சியின் ஆவணப்படங்களைப் பார்த்த தனது பிள்ளைகள் தாம் சிங்களவர்கள் என்பதில் வெட்கப்படுகிறோம் என்று சொன்னார்கள் என பகிரங்கமாக 2011இல் அறிவித்ததில் இருந்து சந்திரிக்கா பண்டாரநாயக்கா மீண்டும் அரசியல் அரங்கில் தலை காட்டினார். இப்போது மாற்றப்பட்ட இலங்கை அரசியல் அமைப்பின்படி மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட சந்திரிக்காவால் முடியும். மஹிந்தவை ஆட்சியில் இருந்து அகற்றும் முயற்ச்சியின் ஒரு அம்சமாக சந்திரிக்கா அரசியலில் முன்னிலைப் படுத்தப் படுகிறார். இதனால் சந்திரிகா சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளார் மைத்திரிபால சிறீசேனவுடன் அடிக்கடி தொடர்புகள் மேற்கொண்டதை உளவுத் துறை மூலம் ராஜபக்சே குடும்பத்தினர் அறிந்து கடும் சீற்றமடைந்துள்ளனர். விரைவில் மைத்திரிபால சிறீசேன கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலக்கப்படலாம். அதைத் தொடர்ந்து கட்சிக்குள் சில நெருக்கடிகள் ஏற்படலாம். குத்து வெட்டுக்கள் ஆரம்பமாகலாம். ராஜபக்சேக்களின் ஆட்டம் இன்னும் ஆகக் கூடியது 3 ஆண்டுகள் மட்டுமே.

Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...