Saturday, 11 December 2010
விவரமான கேள்விகளும் வில்லங்கமான பதில்களும்.
Can you read the following? Yy u r yy u b I c u r yy 4 me.
Too wise you are, too wise you be, I see you are too wise for me.
How can you tell twin witches apart?
It's not easy to tell which witch is which.
If six children and two dogs were under an umbrella, how come none of them got wet?
Because it wasn't raining.
If you want to get rich, why should you keep your mouth shut?
Because silence is golden.
What always comes into a house through the keyhole?
A key.
What can you break without touching it?
Your promise.
What belongs to you, but is used more by others?
Your name.
What did the bee say to the flower?
"Hello, honey!"
What did the big chimney say to the little chimney?
"You are too young to smoke."
What did the big watch hand say to the little watch hand?
"Don't go away, I'll be back in an hour."
What does Brazil produce that no other country produces?
Brazilians.
What goes around a yard but doesn't move?
A fence.
What goes up and down but doesn't move?
A staircase.
What has four legs and a back but no body?
A chair.
What is the difference between here and there?
The letter T
What is the first thing you do in the morning?
You wake up.
What kind of coach has no wheels?
A football coach.
What person is always in a hurry?
A Russian. (Rush-ian)
What piece of wood is like a king?
A ruler.
Where can you always find money?
In the dictionary.
Who always goes to bed with shoes on?
A horse.
Thursday, 9 December 2010
டில்லித் திருடர்களின் திருகுதாளங்கள் தொடர்கின்றன
திகதி 28-11-2010 :- இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் புதுடில்லி திரும்புகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்ய முடியாது என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்தார்.
திகதி 07-12-2010:- இலங்கை இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் இந்தியா எந்தவித அழுத்தங்களையும் கொடுக்காது.
திகதி 07-12-2010:-"தமிழர் பிரச்சனைக்கான தீர்வு குறித்து பேசுமாறு இலங்கைக்கு வலியுறுத்தினேன்" கருணாநிதிக்கு வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கடிதம்.
இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான டில்லியின் திருகுதாளங்கள் முள்ளிவாய்க்கால் இனக்கொலையுடன் முடியவில்லை இன்றும் தொடர்கின்றன.
இப்போது டில்லித் திருடர்களின் முக்கிய பணி தமிழர்களை அவர்கள் சொந்த நிலங்களில் இருந்து விரட்டி அடித்து அங்கு சிங்களவர்களைக் குடியேற்றுவது. இதனால் இனி எந்த ஒரு காலத்திலும் தமிழர்கள் ஒரு உரிமைப் போராட்டத்தை தொடக்குவதை நிரந்தரமாகத் தடுப்பது டில்லித் திருடர்களின் நோக்கம். டில்லித் திருடர்களின் கொள்கைப்படி தமிழன் சூத்திரன். அவன் ஆளப்பட வேண்டியவன். அவன் ஆளக்கூடாது. டில்லித் திருடர்கள் தாம் இலங்கையில் தமிழர்களுக்கு 50,000 வீடுகள் கட்டிக் கொடுப்பதாக பிதற்றுகிறார்கள். இவர்கள் எத்தனை இலட்சம் வீடுகளை அழித்தார்கள் என்று சொல்வதில்லை. இந்த 50,000 வீடுகளில் எத்தன ஆயிரம் சிங்களவர்கள் குடியமர்த்தப் படுவார்கள் என்று சொல்ல மாட்டாரக்ள்.
கைது செய்யப்பட்ட விக்கிலீக் ஜுலியன் அசங்கேயிற்கு இனி என்ன நடக்கும்?
முதலில் ஜுலியன் அசங்கேயை அவர் சுவீடனில் புரிந்ததாகக் கருதப்படும் பாலியல் வன்முறைக் குற்றங்களுக்காக நாடுகடத்தும் வழக்கு பிரித்தானிய நீதிமன்றில் நடக்கும்.
அடுத்த விசாரணை டிசெம்பர் 14-ம் திகதி வெஸ்ட்மின்ஸ்ரர் நகர நீதிமன்றில் நடக்கும். அங்கு அவர் தனக்கு எதிராக சுவீடனில் விசாரிப்பது அரசியல் ரீதியில் பாராபட்சமானதாக இருக்கும் என்று வாதிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுவீடன் அமெரிக்க வற்புறுத்தலின் கீழ் செயற்படுகிறது என்று ஜுலியன் அசங்கே வாதிடலாம். அதற்குரிய சாட்சியங்களை அவர் சமர்ப்பிக்க வேண்டி இருக்கும். அவரின் ஆதரவாளர்கள் வாஷிங்டனுக்கும் சுவீடனுக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தைகளின் பிரதிகளை ஏற்கனவே பெற்றிருப்பார்களோ?
ஜுலியன் அசங்கே பிரித்தானியாவில் இரு மேன் முறையீடுகளைச் செய்யலாம். அத்துடன் ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றிற்கும் மேன் முறையீடு செய்யலாம். இந்த நடவடிக்கைகள் முடிய சில ஆண்டுகள் எடுக்கும். அவர் சுவீடனுக்கு நாடுகடத்தப்படுவதை தவிர்ப்பது கடினம் என்று சட்ட வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
ஆறு ஆண்டு சிறை?
ஜுலியன் அசங்கே மீதான குற்றம் சுவீடன் நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிக பட்சம் ஆறு ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
ஜுலியன் அசங்கே மீது இன்னும் அமெரிக்காவில் முறைப்படியான குற்றச் சாட்டுகள் எந்த நீதிமன்றிலும் சமர்ப்பிக்கப்படவில்லை. அமெரிக்க சட்டவாளர் நாயகம் இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில் ஜுலியன் அசங்கே மீது எந்த குற்றத்தின் கீழ் வழக்குத் தொடர்வது என்று ஆலோசிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஜுலியன் அசங்கே பிரித்தானியாவில் இருந்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படும் சாத்தியம் மிகக் குறைவு. ஆனால் சுவீடனுக்கு நாடுகடத்தப்படுவார் என்று எதிர்பார்க்கலாம்.
அவுஸ்திரேலியாமீது அமெரிக்க அழுத்தம்?
ஜுலியன் அசங்கேயில் கடவுச் சீட்டை இரத்துச் செய்யுமாறு அமெரிக்கா அவுஸ்திரேலியாவை கேட்டுக் கொண்டதாக சில வதந்திகள் உலாவின. ஆனால் அவுஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சு வெளிவிட்ட அறிக்கையில் தகவல் கசிவிற்கு அமெரிக்காவைக் குற்றம் சாட்டியது.
சுவீடனில் இருந்து ஜுலியன் அசங்கே அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கான சாத்தியங்களும் குறைவு. சுவீடனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நாடுகடத்தும் ஏற்பாடுகள் இருக்கின்ற போதிலும் அரசியல் குற்றங்களுக்கு நாடுகடத்தப்படுவது மிக்க கடினம்.
ஜுலியன் அசங்கே மீது அமெரிக்கா புதிய வகைத்தாக்குதல்.
ஜுலியன் அசங்கே இற்கு உலகளாவிய ரீதியில் வளர்ந்து வரும் பிரபல்யத்தை குறைக்கும் வகையில் இப்போது சில செய்திகள் வெளிவருகின்றன. ஜுலியன் அசங்கே பெண்கள் பற்றி கீழ்த்தரமான சிந்தனை உடையவர் என்ற கருத்து இப்போது பரவவிடப்பட்டிருக்கின்றது.
விநோதமான நீதி
பிரித்தானியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி ஷிரீன் திவானி என்ற செல்வந்தர் அனி என்கிற சுவிற்சலாந்தில் வாழ் இந்திய வம்சாவளி அழகியைத் திருமணம் செய்து தேன்நிலவிற்கு தென் ஆபிரிக்காவிற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர் பயணம் செய்கையில் அவரது மனைவி கடத்திச் செல்லப்பட்டதாக ஷிரீன் திவானி காவற்துறையிடம் முறையிட்டார். பின்னர் மனைவி அனி பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். (மனுதர்ம சாஸ்த்திரப்படி இரண்டாம் வரதட்சணை வாங்க பிரித்தானியாவில் சமையலறியில் தீவிபத்து ஏற்படுத்துவது கடினம்.) பல விசாரணையின் பின் கணவர் ஷிரின் ஏற்பாடு செய்தவர்களே அனியைக் கொன்றார்கள் என்று தென் ஆபிரிக்க காவல் துறை கருதி அவரை நாடுகடத்தும் வேண்டுகோள் பிரித்தானியாவிடம் முன் வைக்கப்பட்டது. பிரித்தானிய நீதிமன்றம் ஷிரீனிற்கு பிணை வழங்கியுள்ளது. - பிந்திய செய்தி: புதன் கிழமை ஷெரீனிற்கு வழ்ங்கிய பிணையை எதிர்த்து தென் ஆபிரிக்க அரசு மேன் முறையீடு செய்தமையைத் தொடர்ந்து அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
Wednesday, 8 December 2010
இலங்கையில் போர் குற்ற விசாரணைக்கான போதிய ஆதாரம் - பிரபல சட்ட வல்லுனர்.
பொது மக்கள் அல்ல து ஆயுதம் தரிக்காத போராளிகள் கொல்லப்படுவது ஒரு கடுமையான போர்க்குற்றம் என்றும் இப்படிப்பட்டவற்றை சிலதடவைகள் மட்டுமே பார்த்திருக்கிறேன என்று பிரித்தானியாவைச் சேர்ந்த முன்னணி போர்க்குற்ற சட்டவாளர் ஜுலியன் நவுல்ஸ் அவர்கள் சனல்-4 தொலைக்காட்சியின் செய்திக்கு அவர்களின் இலங்கையில் நடந்த போர் குற்றம் தொடர்பான காணொளி ஆதாரங்களைப் பார்த்தபின் கூறினார்.
கைகளும் கண்களும் கட்டப்பட்ட நிலையில் பொது மக்களோ அல்லது போரில் பங்கேற்றவர்களோ கொல்லப்படுவது ஜெனிவா உடன்படிக்கையை மீறும் செயல் என்றார் போர்க்குற்ற சட்டவாளர் ஜுலியன் நவுல்ஸ் அவர்கள்.
ராஜபக்ச பொறுப்பு
இப்படிப்பட்ட கொலைகள் சம்பந்தமான முடிவு படைத்துறையில் கீழ்நிலையில் எடுக்கப்படுவதில்லை. இது உயர் நிலையில் தான் எடுக்கப்படும். முப்படைத் தளபதியான மஹிந்த ராஜபக்சவும் போர்குற்றம் புரிந்ததாகக் கருதப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leading war crimes lawyer Julian Knowles, from Matrix Chambers, told Channel 4 News the video was "astonishing evidence" of a type he had only seen "a handful of times" showing the mass killing of civilians or unarmed combatants, a serious war crime.
சனல்-4இற்கு மேற்படி சட்டவாளர் வழங்கிய செவ்வியை இந்த இணைப்பில் காணலாம்: Julian Knowles
சனல்-4 தொலைக்காட்சி புதன் இரவு(08-12-2010) இலங்கை தொடர்பாக ஒரு செய்தியை ஒளிபரப்பியது. அதில் இசைப்பிரியா எனப்படும் திருமதி ஷோபாவின் இறந்த உடலையும் மற்றும் பல கொல்லப்பட்ட தமிழர்களின் உடல்களும் காண்பிக்கப் பட்டன. எல்லா உடல்களும் கைகள் கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தன.
27வயதான பாடகி, நடிகை, செய்தி வாசிப்பாளர் எனப் பல முனைகளில் செயற்பட்ட இசைப்பிரியா எனப்படும் இருதய நோயாளியான திருமதி ஷோபாவுடன் பணியாற்றிய கல்பனா என்பவர் சனல்-4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட உடல் இசைப்பிரியா எனப்படும் திருமதி ஷோபாவினது என்று உறுதிசெய்தார். அத்துடன் இசைப்பிரியா எனப்படும் திருமதி ஷோபா எந்த ஆயுத நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்றும் கூறினார். தானும் ஷோபாவும் உண்மைகளை வெளிக் கொண்டு வருவதிலேயே ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
சனல்-4இன் செய்தியை இந்த இணைப்பில் காணலாம்:சனல்-4
Tuesday, 7 December 2010
விக்கிலீக் அசங்கே பாலியல் வலையில் வீழ்த்தப்பட்டாரா?
ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் போரில் ஊடகங்களின் பங்கு பற்றி ஸ்ரொக்ஹொல்மில்(Stockholm) நடந்த மாநாட்டில் உரையாற்ற ஜுலியன் அசங்கே என்னும் அவுஸ்த்திரேலியாவில் பிறந்த முன்னாள் கணனி ஊடுருவி(computer hacker) அழைக்கப்படுகிறார். மாநாட்டை ஏற்பாடு செய்தவர்கள் மத்திய இடது சாரி சகோதரத்துவ இயக்கம். இந்த இயக்கத்திற்காக பணியாற்றிய அழகி-1 (இவர் பெயர் வெளிவிடப்படவில்லை) ஜுலியன் அசங்கேயுடன் தொடர்புகொள்கிறார். ஸ்ரொக்ஹொல்மில்(Stockholm) தனது தங்குமிடத்தைப்பற்றி அழகி-1 இடம் ஜுலியன் அசங்கே விசாரிக்கிறார். தனது வீட்டில் (Flat) தங்கலாம் மாநாடு நடக்கும் வேளையில் தான் வீட்டில் இருக்கமாட்டேன் நகரத்திற்கு வெளியில்தான் தங்குவேன் என்று அழகி-1 கூறுகிறார்.
மாநாட்டிற்கு சென்ற ஜுலியன் அசங்கே அழகி-1 இன் வீட்டிலேயே தங்குகிறார். ஆனால் அழகி-1 குறிப்பிட்ட தினத்திற்கு ஒரு நாள் முன்கூட்டியே தன் விட்டிற்கு திரும்புகிறார். ஜுலியன் அசங்கேயும் அழகி-1 இரவு ஒரு உணவகத்திற்கு சென்று உணவருந்திவிட்டு மீண்டும் வீடுவந்து இருவரும் அழகி-1 இன் சம்மதத்துடனேயே உடலுறவு கொள்கின்றனர். பாவம் ஜுலியன் அசங்கே அவர்கள் உடலுறவு கொள்ளும்போது அவர்கள் பாவித்த ஆணுறை கிழிந்து விடுகிறது. (காய்ந்த மாடோ?) மறுநாள் அழகி-1 ஜுலியன் அசங்கேஇற்கு ஒரு விருந்தும் வழங்குகிறார்(உணவுதான்).
அழகி-1 ஒரு பெண்ணுரிமைப் போராளி. பல்கலைக்கழகமொன்றில் ஆய்வு உதவியாளராகப் பணியாற்றுகிறார். பெண்ணுரிமை உட்படப் பல முற்போக்கு இயக்கங்களில் பங்கு கொள்பவர். பல நாடுகளுக்கும் சென்று வருபவர்.
ஜுலியன் அசங்கே மாநாட்டில் உரையாற்றும் போது அழகி-2 முன்வரிசையில் இருக்கிறார். அவர் அதிக புகைப்படங்கள் ஜுலியன் அசங்கே உரையாற்றும் போது எடுக்கிறார். மாநாட்டின் பின்அழகி-1 அழகி-2ஐ ஜுலியன் அசங்கேயிற்கு அறிமுகம் செய்கிறார். இருவரும் நகரத்தை சுற்றுகின்றனர். அழகி-2 இல் ஜுலியன் அசங்கே மயங்கிவிடுகிறார். நீ அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறாய் என்று ஜுலியன் அசங்கே பிதற்றவும் செய்கிறார். இங்கும் உடலுறவு நடக்கிறது. அழகி-2 இன் சம்மதத்துடன்தான். ஆனால் அழகி-2 ஆணுறை அணியும்படி வேண்டியதை ஜுலியன் அசங்கே மறுத்துவிடுகிறார். (Rain coat போட்டுக் கொண்டு குளிப்பதை யார்தான் விரும்புவர்.)
அழகி-1ம் அழகி-2ம் பின்னர் சந்தித்துக் கொள்கின்றனர். ஜுலியன் அசங்கே உடன் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். பெண் உரிமைப் போராளியான அழகி-1 ஆணுறை இன்றி அழகி-2 உடன் உடலுறவு கொண்டதைக் கேள்விப்பட்டு ஆத்திரம் அடைந்தாராம். பின்னர் இருவரும் காவல் துறையில் முறையீடு செய்கின்றனர். உங்களையும் என்னையும் போலவே ஜுலியன் அசங்கே இற்கு சுவீடன் தேசத்து கற்பழிப்புச் சட்டத்தைப் பற்றித் தெரியாமல் இருந்திருக்கலாம். பெண் சம்மதத்துடன் உறவு கொண்டாலும் ஆணுறை கிழிப்பது ஆணுறை அணிய மறுத்து உறவு கொள்வது எல்லாம் அங்கு குற்றமாம்.
அழகிகள் ஜுலியன் அசங்கே நடந்த விததைப் பற்றி பத்திரிகைகளிலும் வெளியிருகின்றனர் ( தங்கள் பெயர் வெளிவராமல்தான்). தங்கள் சம்மதத்துடன் தான் ஜுலியன் அசங்கே தம்முடன் உறவு கொண்டதாகவும் பத்திரிகைகளில் ஒத்துக் கொண்டும் இருக்கிறார்கள்.
பன்னாடைக் காவல்துறை
உலகத்தில் எத்தனையோ குற்றச் செயல்கள் எல்லாம் நடக்கிறபோது ஆணுறை கிழித்த ஆணுறை அணியாத குற்றங்களுக்காக பன்னாட்டுக் காவல்துறை(Inter Pol) ஜுலியன் அசங்கேயை தனது சிவப்புப் பட்டியலில் இட்டு கைது ஆணை பிறப்பிக்கிறது. ராஜபக்சேக்களும் இலங்கையில் செயற்பட்ட அமைதிப்படையினரும் இதைக் கேள்விப்பட்டபோது நிச்சயம் விழுந்து விழுந்து சிரித்திருப்பார்கள். இலங்கையில் கற்பழித்து பெண்கள் கொல்லப்பட்டமைக்கு யார் பிடியாணை பிறப்பிப்பார்?
ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் நடந்தவற்றிற்கு நவம்பர் இறுதியில் பன்னாட்டுக் காவல்துறை(Inter Pol) பிடியாணை ஏன் பிறப்பிக்கிறது?
தேன் பொறி (Honey Trap)
சுவீடன் மக்கள் பலரும் ஜுலியன் அசங்கே திட்டமிட்டு தேன் பொறி (Honey Trap)யில் விழுத்தப்பட்டார் என்றே கருதுகிறார்களாம். ஒருவரை அழகிகளைப் பாவித்து பாலியல் வலைக்குள் விழுத்துவதை தேன் பொறி (Honey Trap) என்பார்கள். இதற்கு சிக்கலான கற்பழிப்புச் சட்டங்கள் நிறைந்த சுவீடனில் இந்தப் பொறி வைக்கப்பட்டதா?
ரவுண்டு கட்டித் தாக்கப்படும் விக்கிலீக்
பல வர்த்தக நிறுவனங்கள் விக்கிலீக் இணையத்துடன் தமது தொடர்புகளை நிறுத்திக் கொண்டன. பல இணைய வசதி வழங்குபவர்கள் கடன் அடை நிறுவனங்கள் ஈ-பே போன்றவை விக்கிலீக்குடன் தொடர்புகளைத் துண்டித்தன. விக்கிலீக்குடன் தொடர்புடையவர்கள் இணையத் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன. இந்த தாக்குதலை நெறிப்படுத்துவது யார்?
ஜுலியன் அசங்கே செவ்வாய் காலை சரண். பிணை மறுப்பு
செவ்வாய்க்கிழமை காலை பிரித்தானியக் காவல் துறையினரிடம் சரணடைந்த ஜுலியன் அசங்கே சுவீடனுக்கு தான் நாடுகடத்தப்படுவதை எதிர்த்து நீதிமன்றில் போராடப் போவதாக அறிவித்துள்ளார். அவருக்கு பிணைப் பணம் செலுத்த பாக்கிஸ்த்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் மனைவி ஜெமிமா கான் உட்பட ஆறு பேர் தயாராக நீதிமன்றம் வந்தனர். ஆனால் பிணை மறுக்கப் பட்டுவிட்டது. இத்தனைக்கும் ஆணுறைக் குற்றம். அவருக்கு பிரித்தானியாவில் ஒரு நிரந்தர விலாசம் இல்லாத படியால் பிணை வழங்க முடியாதாம். அமெரிக்காவின் பெண்டகன் றூம் போட்டுத்தான் யோசித்திருக்கிறது.
உலகின் முன்னணி மனிதராக ஜுலியன் அசங்கே
அமெரிக்காவின் ரைம்ஸ் சஞ்சிகையின் கருத்துக் கணிப்பின் படி ஜுலியன் அசங்கே இப்போது உலகின் முன்னணி மனிதராகக் கருதப்படுகிறார். அச்சஞ்சிகை 2010 ஆண்டின் சிறந்த மனிதராக ஜுலியன் அசங்கே தேர்ந்தெடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இணையப் போர்
விக்கிலீக்கிற்கு எதிரான இணையத் தளங்களும் ஆதரவான இணையத் தளங்களும் இப்போது மாறி மாறி தாக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஓயாத கசிவுகள்
ஜுலியன் அசங்கே கைது செய்யப்பட்டாலும் விக்கிலீக் தொடர்ந்து அமெரிக்க அசிங்கங்களை வெளிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Monday, 6 December 2010
தினசரி 30 நிமிட நடை 24 வகையான நோய்களைத் தடுக்க உதவும்.
நாள் தோறும் 30நிமிடம் துரிதமாக நடப்பது உங்களுக்கு 24 விதமான நோய்களைத் தடுக்கும் என விஞ்ஞானிகள் மேற் கொண்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நாள் தோறும் 30நிமிடம் துரிதமாக நடப்பது நோய்களைத் தடுப்பதுடன் வயதாவதால் உடலில் ஏற்படும் பாதிப்புக்களையும் தடுத்து இளமையாக இருக்கவும் உதவுகிறது.
நான்கு வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட நாற்பது ஆய்வுகளின் பின்னரே மேற் கண்ட முடிபுகள் எடுக்கப்பட்டன.
நல்ல உடற்பயிற்ச்சியும் புகைத்தலைத் தவிர்த்தலும் நல்ல ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இருதய நோய்கள் நீரழிவு நோய் புற்று நோய் வாதம் இரத்த அழுத்தம் மன அழுத்தம் உடல் பருமனாதால் இப்படி ஒரு நீண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது International Journal of Clinical Practice என்னும் சஞ்சிகை.
Physiotherapist Leslie Alford, a lecturer at the University of East Anglia, said: ‘It appears our bodies have evolved to function optimally on a certain level of physical activity that many of us simply do not achieve in our modern, sedentary lifestyles. ‘What is clear from the research is that men and women of all ages should be encouraged to be more physically active for the sake of their long-term health.’ He added that other factors can boost the effects of a daily walk, such as not smoking, eating healthily and not being overweight.
உடலால் வேலை செய்பவர்களிலும் பார்க்க ஓரிடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களிடை சில வகைப் புற்று நோய்கள் வரும் சாத்தியம் குறைவு என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஓரிடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் அதிக உடற்பயிற்ச்சி செய்தல் அவசியம்
விக்கிலீக் இந்திய உளவுத் துறையில் கண்மூடித்தனத்தை அம்பலப் படுத்துகிறது.
இலங்கையில் பாக்கிஸ்த்தானிய தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதென்றும் அவை இந்தியாவிற்கு எதிராகச் செயற்படும் என்றும் பத்து ஆண்டுகளுக்கு முன்பே விடுதலைப் புலிகளின் ஆலோசகர் அண்டன பாலசிங்கம் தெரிவித்திருந்தார். ஆனால் இந்திய அரசு இதை விட்டுவைத்தது. பாக்கிஸ்த்தானும் சீனாவும் இலங்கையுடன் நல்ல நெருக்கத்தை பேணுவதை இந்திய நிர்வாகத்தின் தென் மண்டலத்தினர் (South Bloc) விரும்பியிருந்தனர். இந்த பாக்கிஸ்த்தானிய சீன நெருக்கம் தமிழர்களின் தேசிய போராட்டத்தை அடக்க பெரிதும் உதவும் என்பதால் அவர்கள் இதை அனுமதித்திருந்தனர்.
தென் மண்டலத்தில் (South Bloc) உள்ள பார்ப்பனரகளின் கொள்கை தமிழன் என்பவன் சூத்திரன் அவன் ஆளப்படவேண்டியவன். இதற்காக இவர்கள் இந்தியாவின் பிராந்திய நலன்களையும் பலியிடத் தயங்கவில்லை. இலங்கையைப் பொறுத்தவரை இந்திய வெளியுறவுக் கொள்கை மகன் செத்தாலும் பரவாயில்லை மருமகள் தாலி அறட்டும் என்பதுதான்.
பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் 200க்கும் அதிகமான தீவிரவாதிகள் இலங்கையில் பதுங்கி இருப்பதாக அமெரிக்க புலனாய்வுதுறை 2010 Septemberஇல் எச்சரித்திருந்தது. இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்துக்கு அமெரிக்கா அனுப்பியுள்ள எச்சரிக்கை தகவலில் லக்சர் இ தொய்பா அமைப்பு இந்தியாவுக்குள் நுழைவதற்கு இலங்கையை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இலங்கையில் பயிற்சி பெற்றதாக கூறப்பட்ட அந்த அமைப்பின் போராளி ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இலங்கை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, ஏற்கனவே இங்கு வெளிநாட்டு தீவிரவாதிகள் அமைப்பு ஒன்றும் இல்லை என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருந்திருந்ததை மேற்கோள் காட்டியுள்ளார். இவ்வாறான எச்சரிக்கை அறிக்கை ஒன்றும் தமக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விக்கீலீக் இப்போது வெளியிட்டுள்ள தகவலில் அமெரிக்க அரச திணைக்களம் 19-06-2009இல் வெளியிட்டுள்ள குறிப்பில் பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா அமைப்பு இலங்கையில் தளம் அமைத்து செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகவலில் பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா அமைப்பு இலங்கை இந்தியா நேப்பாளம் ஆகிய இடங்களில் அபாயகரமான முறையில் வளர்ந்து வருவதாகவும் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஷபீக் கபா என்னும் பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா அமைப்புத் தலைவர் தென் இந்தியாவில் இரு குழுக்களை அமைக்க முயல்கிறார் என்றும் விக்கிலீக் தெரிவிக்கிறது. இலங்கையில் தளம் அமைத்ததை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் தமக்கு களம் அமைக்க பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா அமைப்பு முயல்வதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அண்மையில் இலங்கைக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா பயணம் மேற்கொண்டபோது ஒரு பாக்கிஸ்தானிய உயர் பீடமே இந்தியாவிற்க்கு போட்டியாக இலங்கை வந்தது. சீனாவுடன் இணைந்து எப்படி இலங்கையில் இந்திய ஆதிக்கத்தை ஒழிக்க இலங்கைக்கு உதவலாம் என்பதே அவர்களின் நோக்கம். இலங்கையில் சீனாவின் திட்டங்களுக்கான சீமேந்தை சீனா பாக்கிஸ்த்தாலில்தான் கொள்வனவு செய்கிறது. இது பாக்கிஸ்தானின் நலிவடைந்திருக்கும் பொருளாதாரத்தையும் பலப்படுத்தும். பாக்கிஸ்தானும் தன்பங்கிற்கு இலங்கைக்கு இரு நூறு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இலகு கடனை இலங்கைக்கு வழங்குகிறது. இது பாக்கிஸ்தானின் இலங்கைக்கான ஏற்றுமதியை வளர்க்கும்.
Sunday, 5 December 2010
ஜப்பானில் இசை கேட்டு வாழைக்காய் இனிய பழமாகிறது
ஜப்பானில் வாழைக்காய்களை Mozartஇன் இசைகளை கேட்க வைத்து இனிய பழங்களாக மாற்றிகின்றனர். Mozartஇன் String Quartet 17 and Piano Concerto 5 in D major ஆகியவற்றை பிலிப்பைன்சில் இருந்து இறக்குமதி செய்யப் பட்ட வாழைக்காய்கள் வைக்கப் பட்டிருக்கும் களஞ்சியசாலைகளில் ஒலிபரப்பி அவற்றை இனிய பழங்களாக மாற்றுகின்றனர். இந்த இசை ஒலிபரப்பாத களஞ்சிய சாலைகளில் இருக்கும் வாழைக்காய்களிலும் பார்க்க இசை ஒலிபரப்பப்படும் களஞ்சிய சாலைகளில் இருக்கும் வாழைக்காய்கள் விரைவாகவும் சுவையாகவும் பழுத்துவிடுகின்றன.
ஏற்கனவே சோயா சாஸ் உடோன் நூடில்ஸ் ஆகியவை பாரம்பரிய இசை கேட்டு சுவை பெறுகின்றன என்று ஜப்பானில் அறிந்துள்ளனர். அது மட்டுமல்ல அரிசியில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவகை மதுவும் இசை கேட்டு சுவை பெறுகிறதாம்
விஞ்ஞானிகள்: கையின் அமைப்புக்கும் குணங்களுக்கும் தொடர்பு
2D - 2nd digit
4D - 4th digit
எமது குண இயல்புகளுக்கும் எமது கையின் அமைப்பிற்கும் தொடர்பு உண்டு என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
எமது மோதிர விரலின் நீளத்திற்கும் ஆள்காட்டி விரலின் நீளத்திற்கும் இடையிலான விகிதம் எமது இயல்புகளை காட்டுகின்றன என்கின்றனர் விஞ்ஞானிகள்.
ஆள்காட்டி விரலில் மோதிர விரலிலும் பார்க்க நீளமாக இருப்பவர்கள் நோய்வாய்ப்படுவது குறைவு முக்கியமாக புற்று நோய் வாய்ப்படுவது குறைவு.
ஆய்வுகள் இப்படிக் கூறுகின்றன: A long index finger also correlates strongly with a lower risk of early heart disease and, in women, a higher risk of breast cancer and greater fertility.
People with relatively long index fingers are also more likely to suffer from schizophrenia, allergies, eczema and hay feve
ஆள்காட்டி விரல் மோதிர விரலிலும் பார்க்க குட்டையானதாக இருப்பவர்கள் சதுரங்கம், குறுக்கெழுத்து, இயந்திரவியல், படைத்துறை, எதிர்வுகூறுதல் ஆகியவற்றில் சிறந்து விளங்குகின்றனர்.
ஆள்காட்டி விரல் மோதிர விரலிலும் பார்க்க குட்டையானதாக இருப்பவர்கள் ஆண்மை மிக்கவர்களாகவும் தன்னினச் சேர்க்கையில் ஈடுபடாதவர்களாகவும் இருப்பார்கள். இந்த அமைப்புடைய பெண்கள் ஆண்தன்மை உடையவர்களாகவும் தன்னினச் சேர்கையை விரும்புவர்களாகவும் இருக்கலாம். ஆனால் வேலையில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
1700 ஆண்டளவில் எடுத்த ஆய்வின்படி அநேக ஆண்களின் ஆள்காட்டி விரல் மோதிர விரலிலும் பார்க்க குட்டையானதாக காணப்பட்டதாம்.
ஆள்காட்டி விரல் மோதிர விரலிலும் பார்க்க அதிகம் குட்டையானதாக இருப்பவர்கள் வறியவர்களாகவும் தொழிலில் மோசமானவர்களாகவும் இருப்பார்கள்.
நீண்ட மோதிர விரல் உள்ளவர்கள் இலக்குப் பார்த்து எறிவதில் வல்லவர்களாம்.
உங்கள் நகத்தின் அமைப்ப்பும் அதில் ஏற்படும் மாறுதல்களும் உங்கள் ஆரோக்கியம் பற்றி பல தகவல்கள் அறிய உதவும்.
Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...