ஆளில்லா விமானங்கள்(Drones) படைத்துறையில் இருந்து வீட்டுக் வீடு பொருட்களை விநியோகிப்பது வரை பாவிக்கப் படும் வேளையில் படைத்துறைத் தேவைகளுக்காக நீருக்கடியில் பயணிக்கும் ஆளில்லாக் கப்பல்கள் Underwater Drones) உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சீனா தரத்திலும் தொகையிலும் வேகமாகப் பெருக்கிவரும் நீர் மூழ்கிக் கப்பல்களின் சவால்களை சமாளிக்க அமெரிக்கா நீருக்கடியில் பயணிக்கும் கப்பல்களை உருவாக்குகின்றது.
பனிப் போர்க் காலத்திலிருந்தே நீருக்கடியில் உளவு பார்க்கும் திறன் மேம்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அப்போது சோவியத் ஒன்றியத்தின் போர்க் கப்பல்களைக் கண்காணிக்க உலகெங்கும் உள்ள கடற்படுக்கைகளில் ஐக்கிய அமெரிக்கா வைத்த உணரிகள் இப்போதும் பாவனையில் உள்ளன. சோவியத்தின் கடற்படைக் கப்பல்களிலும் பார்க்க சீனக் கடற்படைக் கப்பல்கள் இரைச்சல் அதிகமானவை என்பதால் சீனக் கலன்களின் நடமாட்டங்களை இலகுவாக அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. ஆனால் சீனா தனது நீர் மூழ்கிக் கப்பல்களை மிகவும் இரகசியமாக மேம்படுத்திக் கொண்டிருக்கின்றது. அத்துடன் நீருக்கடியில் பாய்ந்து போர்க் கப்பல்களையும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் அழிக்கக் கூடிய ஏவுகணைகளையும் மேம்படுத்திக் கொண்டிருக்கின்றது. சீனாவின் இறுதி நோக்கம் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்களின் நடமாட்டத்தைக் கட்டுப் படுத்துவதாகும். சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல்களுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க விமானம் தங்கிக் கப்பல்கள் இரண்டு தலை முறை மேம்பட்டவையாகும். இதனால் சீனா தனது கடற்பாதுகாப்பிற்கு நீர் மூழ்கிக் கப்பல்களில் பெரிதும் தங்கி இருக்கின்றது. சீனாவின் முத்து மாலைத் திட்டத்தில் உள்ள துறைமுகங்கள் பெரும்பாலும் நீர் மூழ்கிக் கப்பல்களை தங்கவைக்கக் கூடியவையாகவே வடிவமைக்கப் பட்டுள்ளன.
சீனாவின் நீர் மூழ்கிக் கப்பல்களுக்கு அமெரிக்க்காவின் ஆப்பு?
ஐக்கிய அமெரிக்கா உருவாக்கும் நீருக்கடியில் ஆளில்லாமல் பயணிக்கக் கூடிய சிறுகப்பல்கள் Autonomous Continuous Trail Unmanned Vessel எனப் பெயரிடப்பட்டுள்ளன. தமிழ்ல் இவற்றை தொடர்ச்சியாகத் தடம் தேடும் ஆளில்லாத் தானியங்கிக் கலன்கள் எனக் கூறலாம். இவை நீருக்கடியில் வேவுபார்த்தலில் இருந்து கண்காணித்தல் வரை (reconnaissance to surveillance) செய்யக் கூடியவை. இவற்றின் உணரிகள் ஓசையின்றி நீருக்கடியில் பயணிக்கும் டீசலில் இயங்கும் நீர் மூழ்கிக் கப்பல்களை தூரத்தில் வைத்தே கண்டறியக் கூடியவை. அதற்கேற்ற வகையில் நெடுந்தூரம் கண்காணிக்கக் கூடிய ரடார்கள் என்னும் கதுவிகளை இவை கொண்டிருக்கின்றன. சீனாவின் பெரும்பாலான நீர் மூழ்கிக் கப்பல்கள் டீசலில் இயங்குபவையாகும்.
மனிதர்களால் இயக்கப்படும் கடற்கலன்கள் International Maritime Organizaடிஒன் என்னும் பன்னாட்டு நிறுவனத்தின் கட்டுப்பாடுகளுக்கு இணங்க செயற்படவேன்டும். ஆனால் ஆளில்லாக் கப்பல்களை அந்த நிறுவனத்தின் கட்டுப்பாடுகள் பாதிக்காது.
வெற்றீகரமான சோதனைகள்
தொடர்ந்து 42 நாட்கள் அமெரிக்காவின் Autonomous Continuous Trail Unmanned Vessel என்னும் நீருக்கடியில் ஆளில்லாமல் பயணிக்கக் கூடிய சிறுகப்பல்கள் கடலில் பரிசோதிக்கப்பட்டன. அவை தாமாகவே மற்றக் கப்பல்களுடன் மோதாமல் தமது பாதைகளை நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றிக் கொன்டு பயணித்தன. நூற்றுக்கு மேற்பட்ட வேறு வேறு சூழல்களில் இப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இச் சோதனைகளில் தானாக இயங்கும் தன்மை நன்கு செயற்படுவது அவதானிக்கப்பட்டது. நிலைமகளுக்கு ஏற்ப இந்த ஆளில்லாக் கப்பல்கள் தமது வேகங்களையும் மாற்றக் கூடியவையாக இருக்கின்றன.
2015-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கா உருவாக்கும் Autonomous Continuous Trail Unmanned Vessel என்னும் நீருக்கடியில் ஆளில்லாமல் பயணிக்கக் கூடிய சிறுகப்பல்கள் பாவனைக்கு வரவிருக்கின்றன.
Saturday, 6 December 2014
Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...