Showing posts with label ஐநா. Show all posts
Showing posts with label ஐநா. Show all posts

Monday, 9 May 2016

அடுத்த ஐநா பொது செயலர் தேர்வும் குழறுபடிகளும்

ஐக்கிய அமெரிக்காவின் அடுத்த குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது பற்றிய செய்திகள் பெரிதாக அடிபடுவதால் ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த பொதுச் செயலர் யார் என்ற செய்தி மறைக்கப்பட்டு விட்டது. இரு பதவிகளுக்குத் தெரிவு செய்யப்படுபவர்களும் 2017--ம் ஆண்டு ஜனவரி மாதம்  பதவி ஏற்பார்கள். அமெரிக்க அதிபருக்கான தேர்தல் 2016 நவம்பர் மாதம் ஐநா பொதுச் செயலர் பதவிக்கான தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும். ஐநா உலக மக்களை சொர்க்கத்திற்கு கொண்டு செல்ல உருவாக்கப்படவில்லை ஆனால் உலக மக்கள் நரக வேதனை அனுபவிக்காமல் இருக்க உருவாக்கபட்டது என்றார் ஐநாவின் இரண்டாவது பொதுச் செயலராக இருந்தவர்.

பொதுச் செயலர் தெரிவும் பேரம் பேசலும்.
ஐக்கிய நாடுகள் சபையின் பட்டயத்தின் 97-ம் பந்தியின் படி அதன் பாதுகாப்புச் சபையின் பரிந்துரையின் பேரில் பொதுச் சபை பொதுச் செயலரைத் தெரிவு செய்யும். ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், இரசியா, சீனா ஆகிய ஐந்து வல்லரசு நாடுகளின் ஒருமித்த ஆதரவு பெற்ற ஒருவரே பொதுச் செயலராக வர முடியும். பாதுகாப்புச் சபை பொதுச் செயலரைப் பரிந்துரை செய்யும் போது எந்த ஒரு வல்லரசு நாடாவது தனது வீட்டோ எனப்படும் இரத்து அதிகாரத்தைப் பாவித்து தனக்கு வேண்டாதவர் பொதுச் செயலராக வருவதைத் தடுக்க முடியும். ஐந்து வல்லரசு நாடுகளின் ஒருமித்த ஆதரவு  பெறுவதி சிரமம் மிக்கதாகும். இதனால் வெவேறு உலக அமைப்புக்களின் முக்கிய பதவிகளை இந்த ஐந்து நாடுகளும் தமக்குள் பங்கிட்டுக் கொள்ளும். அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாட்டைச் சேர்ந்த பான் கீ மூன் ஐநா பொது செயலர் பதவிக்கு அனுமதித்தமைக்குப் பதிலாக சீனாவைச் சேர்ந்தவருக்கு உலக வங்கி அதிபர் பதவி விட்டுக் கொடுக்கப்பட்டது. இந்தியாவின் படைத்துறையில் பணிபுரிந்த சித்தார்த் சட்டர்ஜி பான் கீ மூனின் மகளைத் திருமணம் செய்தவர். இதனால் இந்தியாவின் ஆதரவும் பான் கீ மூனுக்கு இருந்தது. ஐநாவில் இரசியாவும் இந்தியாவும் பல துறைகளில் ஒத்துழைப்பதால் இரசியா பான் கீ மூனைத் தெரிவு செய்வதில் ஆட்சேபனை செய்யவில்லை. பான் கீ மூன் இரண்டாம் பதவிக் காலத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பன்னாட்டு நாணய நிதியத்தின் உச்சப் பதவி விட்டுக் கொடுக்கப்பட்டது.
பிராந்திய அடிப்படையிலான தேர்வு
ஐநா சபையின் பதவிகளுக்கு தேர்வு நடக்கும் போது பிராந்தியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு சுழற்ச்சி முறையில் வேறு வேறு பிராந்தியங்களைச் சேர்ந்தவர்களுக்கு பதவு வழங்கப்படும். பான் கீ மூன் ஆசியப் பிராந்தியத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட போது ஆபிரிக்கப் பிராந்தியத்தைச் சேர்ந்த செல்வி நவநீதம் பிள்ளைக்கு மனித உரிமைக் கழக ஆணையாளர் பதவி கொடுக்கப்பட்டது. பான் கீ மூனிற்கு முன்னர் பொதுச் செயலர் பதவியில் இருந்த கோபி அனன் நடுவண் அமெரிக்காவைச் சேர்ந்தவர். அவருக்கு முன்னர் இருந்த பௌட்ரஸ் காலி ஆபிரிக்கப் பிராந்திய நாடான எகிப்தைச் சேர்ந்தவர். கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த எவரும் இதுவரை ஐநாவின் பொதுச் செயலர் பதவிக்கு வந்ததில்லை. ஐநாவின் வரலாற்றில் இதுவரை பெண் ஒருவர் பொதுச் செயலராகாக் கடமையாற்றியதில்லை. இதனால் அடுத்த பொதுச் செயலர் கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் என்ற கருத்து இப்போது பரவலாக நிலவுகின்றது.
கோட்டை விடப்படும் திறமை
ஐநா பொதுச் செயலர் தேர்வில் பிராந்திய அடிப்படையிலும் வல்லரசு நாடுகளிடையிலான பேரம் பேசுதலும் அதிக முக்கியத்துவம் பெறும் போது திறமையும் நேர்மையும் ஓரம் கட்டப்படப்படுகின்றது என்பதற்கு பான் கீ மூனின் தேர்வு நல்ல உதாரணமாக அமைந்தது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் செயலராக பான் கீ மூன் 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க ஊடகமான போரின் பொலிசி என்னும் சஞ்சிகையில் "பான் கீ மூன் ஏன் உலகின் மிக ஆபத்தான கொரியர்" என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. அதில் பான் கீ மூன் பல அவல நிலைகளின் போது மௌனமாக இருந்தது சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இலங்கை உள் நாட்டுப் போரில் போது தமிழ் மக்கள் அல்லல் பட்டுக் கொண்டிருக்கையில் இலங்கைக்குச் செல்லாமல் போர் முடிந்த பின்னர் போனதையும் அந்தச் சஞ்சிகை சுட்டிக் காட்டி இருந்தது. திறமை மிக்க கோபி அனன் அமெரிக்காவின் சொற்படி நடக்க மறுத்த படியால் ஒரு திறமை அற்றவர் பதவிக்கு வருவதை அமெரிக்கா விரும்பியது எனவும் அந்த சஞ்சிகை சுட்டிக் காட்டியது.

கிழிபட்ட பான் கீ மூன்
திறமையும் நேர்மையும் அற்ற பான் கீ மூன் இரு ஐந்து ஆண்டுகாலப் பதவிக் காலத்தை நிறைவு செய்துள்ளார். பான் கீ முனிற்கு முன்னர் செயலராக இருந்த கோபி அனன் அவர்கள் சிறந்த தோற்றமும் தெளிவான பேச்சுத் திறனும் கொண்டவர். அவரைத் தொடர்ந்து வந்த பான் கீ மூன் ஒரு தெரியாத நகரத்தில் பணப்பையைத் தொலைத்த பயணி போல் எப்போதும் திரு திருவென விழித்தபடி காட்சியளிப்பார்; புன்னகைக்கவே மாட்டார். பான் கீ மூனின் பேச்சு தம்மை நித்திரை கொள்ளச் செய்வதாகப் பல ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். பான் கீ மூனின் இரண்டாவது பதவிக்காலம் தொடர்பான சர்ச்சைகள் 2012-ம் ஆண்டு சூடு பிடித்திருந்தது. பிரித்தானியக் கார்டியன் பத்திரிகை "பான் கீ மூனின் செயற்பாடுகளிற்கு எதிராக "கலையும் அமைதி" என்ற தலைப்பிட்டு 22-07-2010இல் ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் பான் கீ மூனின் மோசமான ஆங்கில அறிவும் அவரது தொடர்பாடல் திறமையின்மையும் அவரது முதற் பேச்சிலேயா வெளிப்பட்டு விட்டதாம். இதன் பின்னர் அவருக்கு ஆங்கிலப் பயிற்ச்சியும் தொடர்பாடல் பயிற்ச்சியும் வழங்கியும் போதிய முன்னேற்றம் கிடைக்கவில்லை. பின்னர் தொலைக்காட்சிகளில் தோன்றுவதை தவிர்க்குமாறு இவருக்கு ஆலோசனை வழங்கப் பட்டது. அவரும் பொது இடங்களில் தோற்றமளிப்பதை தவிர்த்துப்க் கொண்டார்.
2009 டிசம்பரில் நடந்த உலக வெப்பமயமாதல் மாநாட்டிலும் பான் கீ மூனின் தலைமைத்துவத் திறமையின்னமை நன்கு வெளிப்பட்டது. பான் கீ மூனின் இரண்டாம் பதவிக்காலத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்த சிலர் இந்த மாநாட்டின் பின்னர் தம் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர். பான் கீ மூனின் மகளின் கணவரான சித்தார்த சட்டர்ஜீக்கு பதவி உயர்வு வழங்கியது பான் கீ மூனின் நேர்மையை சந்தேகத்திற்குள்ளாக்கியது. இந்த சித்தார் சட்டர்ஜி இந்திய அமைதிப் படை தமிழர் தாயகத்தில் செய்த முதற் படை நடவடிக்கையான புலிகளின் தொலைக்காட்சி நிறுவனத்தை நிர்மூலமாக்குதலின் போது தலைமை தாங்கிச் சென்றவர். அத் தாக்குதலில் அப்போதைய இலங்கைக்கான இந்தியத் தூதுவரின் வார்த்தைகளின் படி இந்தியப் படையினர் இலையான்கள் போல் அடித்துக் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் சித்தார்த் சட்டர்ஜீ ஒரு தமிழின விரோதியாக மாறினார் எனக் கருதப்படுகின்றது.
பான் கீ மூனின் தலைமை ஆலோசகரான விஜய் நம்பியார் இலங்கையின் போர்த்துறை ஆலோசகர் சதீஸ் நம்பியாரின் சகோதரர். விஜய் நம்பியார் 2009 மே மாதம் இலங்கையில் நடந்த போரின் போது இலங்கை சென்று விட்டு வந்து பாதுகாப்புச் சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்க மறுத்து அடாவடித்தனம் செய்தவர். இதனால் இவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாக பிரித்தானியா அப்போது மிரட்டியும் இருந்தது. சரணடைந்தவர்களை சுட்டுக் கொன்றதில் விஜய் நம்பியாரின் செயற்பாடுகள் சம்பந்தப்பட்டிருந்தன என ஐயப்படப்படுகின்றது.

மோசமான செயலர்
ஐநாவைப்பற்றி பல புத்தகங்கள் எழுதிய நியூ யோர்க் பல்கலைக் கழக அரசியற் துறைப் பேராசிரியர் தோமஸ் வைஸ் அவர்கள், இதுவரை இருந்த ஐநா பொதுச் செயலர்களுள் பான் கீ முன் மிக மோச மானவர் என்று குறிப்பிட்டார்.  அவர் கண்ணுக்குப் புலப்படாதவராக இருக்கின்றார் என்றார் அந்த நூலாசிரியர். இதே வேளை பான் கீ மூனின் உதவியாளர்கள் சிலர் அவரை புகழவும் செய்தனர்  ஒரு ஜப்பானியர் அவரை யோகிக்கு ஒப்பிட்டார். யோகி எப்படிக் கதைக்கிறார் என்பதல்ல முக்கியம் அவர் எதைப் போதிக்கிறார், எப்படிச் செயற்படுகிறார் என்பதுதான் முக்கியம் என்கிறார் அவர்.
சென்று வாருங்கள் என்கிறார் ஜேம்ஸ் ரவுப்
பிரபல அமெரிக்க அரசியல் ஆய்வாளர் ஜேம்ஸ் ரவுப் அவர்கள் Good night, Ban Ki moon என்ற தலைப்பிட்டு ஒரு கட்டுரையை 22-07-2010இலன்று எழுதினார். பொதுச் செயலாளர்கள் அவர்களின் திறமையின்மைக்காகவே தெரிவு செய்யப்படுகிறார்கள் என்று அவர் கிண்டலடித்துள்ளார். பான் கீ மூனிற்கு எதிராக அவர் வைக்கும் குற்றச் சாட்டுக்களிலும் இலங்கை உள்நாட்டுப் போரை அவர் கையாண்ட விதம் முக்கிய இடம் பெறுகிறது. முன்னாள் கோபி அனனின் திறமை அமெரிக்காவிற்கு பாதகமாக அமைந்ததால் திறமையற்ற பான்கீ மூன் தேர்ந்தெடுக்கப் பட்டதாக கூறப்படுகிறது. ஐநாவை எப்போதும் ஒரு தடையாகப் பார்க்கும் சீனா அதன் பெருமையைக் குறைக்கவே பான் கீ மூனை பொதுச் செயலராக்க அனுமதித்தது என்கிறார் ஜேம்ஸ் ரவுப்.
அமெரிக்க சார்பாளரை அமெரிக்க கைவிடுமா?
இது வரை இருந்த எட்டு பொதுச் செயலாளர்களுள் பான் கீ மூன் தான் மிகத்திவீரமான அமெரிக்க ஆதரவாளர். முன்னாள் பொதுச் செயலர் கோபி அனன் அமெரிக்கா ஈராக்கில் செய்தவற்றை பகிரங்கமாக கண்டித்தவர். ஐரோப்பியாவில் நல்ல பெயரெடுத்தவர். இவரைப் பிடிக்கததால் ஜோர்ஜ் புஷ் பான் கீ மூனை பொதுச் செயலராக்கினார். ஒபாமா நிர்வாகம் இலங்கைப் போர் குற்ற விசாரணையை காரணம் காட்டி அவரை பதவியில் நீடிக்கச் செய்தது. பான் கீ மூன் ஐநா பொதுச் செயலர் பதவிக்குப் போட்டியிட்டபோது தனது வேட்பாளரைப் போட்டியில் இருந்து விலகச்செய்து அவரது வெற்றிக்கு இலங்கை பெரும் பங்காற்றியது. அது மட்டுமல்ல இலங்கையில் போர் நடந்த வேளை பான் கீமூன் அவர்களை இலங்கை "நன்கு கவனித்து" கொண்டதாகவும் பேசப்படுகிறது. இலங்கையில் தமிழ் ஐநா ஊழியர்களை இலங்கை அரசு கைது செய்து மோசமாக நடத்தியபோது ஐநா பாராமுகமாக இருந்தது.

வெழுத்து வாங்கிய சுவீடன் பெண்
பான் கீ மூனின் திறமையின்மை தொடர்பாக ஒரு செய்திக் கசிவு 2012-ம் ஆண்டு வெளிவந்திருந்தது. இது பான் கீ மூனிற்கு சுவீடனைச் சேர்ந்த ஐநா உதவிப் பொதுச் செயலாளர் இங்கா பிரித் ஆலெனியஸ் (under-secretary general Inga-Britt Ahlenius) அவர்கள் எழுதிய இரகசிய உள்ளகக் கடிதம் பின்னர் அமெரிக்கத் தினசரியான வாஷிங்டன் போஸ்ற்றில் வெளிவந்தது. அப்பெண்மணி ஐநா பொதுச் செயலகம் "அழுகத்" தொடங்கிவிட்டது துண்டுகளாக் விழப் போகிறது, ஐநா தேவையற்ற ஒன்றாகப் போகிறது என்று தான் மனவருத்தத்துடன் தெரிவிக்கிறேன் என்றார். ஐநா வரலாற்றில் இங்கா பிரித் ஆலெனியஸ் போல் வேறு எவரும் அந்த அளவு மோசமாக விமர்சித்ததில்லை. இங்கா பிரித் ஆலெனியஸ் ஐநாவின் ஊழல்கள் தொடர்பாக செய்த விசாரணைக்கு பான் கீ மூன் முட்டுக் கட்டை போட்டார் என்பதால் அவர் ஆத்திரமடைந்திருந்தார்.
இஸ்ரேலின் போர்க்குற்றத்தை பான் கீ மூன் மறைத்தாரா?
2014-ம் ஆண்டு காசா நிலப்பரப்பில் ஹாமாஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதல்களை இஸ்ரேல் செய்யும் போது ஐநாவின் கட்டிடங்கள் மீது இஸ்ரேலிய விமானன் படையினர் செய்த குண்டு வீச்சுத் தாக்குதல்கள் போர்குற்றமாகும் என ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் ஓர் அறிக்கையை ஐநா சபைக்குச் சமர்ப்பித்திருந்தார். இதில் அப்பாவி மக்கள் அகதிகளாகத் தங்கியிருந்த ஏழு கட்டிடங்கள் சிதைக்கப்பட்டன. அதை பான் கீ மூடி மறைத்து ஓர் அறிக்கையை வெளிய்ட்டார். அந்த அறிக்கை இஸ்ரேலிய உளவுத் துறையான மொசாட்டால் தயாரிக்கப் பட்டதாக குற்றச் சாட்டுக்கள் வெளிவந்திருந்தன. விக்கிலீக்சும் இது பற்றி தகவல் வெளியிட்டிருந்தது.  இந்த மூடி மறைப்பு தொடர்பாக அப்போதைய அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புத் துறை ஆலோசகர் சூசன் றைஸ் நான்கு தடவைகள் தொலைபேசியில் உரையாடி இருந்தார். 
வல்லாதிக்கத் தேர்தல்
ஐநா பொதுச் செயலர் தேர்தல் என்று சொன்னாலும் அதற்கும் மக்களாட்சித் தத்துவங்களுக்கும் வெகு தூரம். இரசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் செய்யப் படும் உடன்பாட்டில்தான் இந்தத் தேர்தல் பெரிதும் தங்கியுள்ளது. வழமையாக பொதுச் செயலர் தேர்வு பாதுகாப்புச் சபையில் மூடிய அறைக்குள் நடை பெறும் ஆனால் இந்த முறை பகிரங்கமாக நடை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பகிரங்கமாக நடந்தாலும் பல திரை மறைவுப் பேரம் பேசல்கள் நிச்சயம் நடக்கும். 193 உறுப்பு நாடுகளையும், முப்பது நிறுவனங்களையும், நாற்பதினாயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்களையும் கொண்ட ஐநாவின் பொதுச் செயலர் பதவிக்குப் போட்டியிட முனைபவர் தனது விபரங்களையும் இரண்டாயிரம் சொற்களைக் கொண்ட உலகம் தொடர்பான தனது பார்வைக் கூற்றையும் சமர்ப்பிக்க வேண்டும். ஏழு பில்லியன்களுக்கு ஒன்று என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு ஐநாவில் பல சீர்திருத்தங்களை முன்வைக்கின்றது. அதில் ஒன்று ஐநா பாதுகாப்புச் சபை ஒருவரைத் தெரிவு செய்து பொதுச் சபையின் அனுமதிக்கு அனுப்புவதை விடுத்து இருவரை பரிந்துரை செய்து அவர்களில் ஒருவரை பொதுச்சபை தெரிந்து எடுக்க வேண்டும் என்பதாகும். ஆனால் இது நடக்காத காரியமாகும்.
இந்த முறை தேர்தலில் மனுத் தக்குதல் செய்துள்ளவர்கள்:
1. ஐரீனா பொக்கோவா என்னும் 63 வயதான பல்கேரிய நாட்டுப் பெண்மணி. இவர் யுனெஸ்க்கோவின் ஆளுநர் நாயகமாக இருக்கின்றார்.
2. ஹெலென் கிளார்க் என்னும் 66 வயதான நியூசிலாந்து நாட்டுப் பெண்மணி. இவர் தற்போது ஐநாவின் அபிவிருத்தித் திட்டத்தில் தலைமைப் பொறுப்பில் உள்ளார்.
3. நட்டலியா ஜேர்மன் என்னும் 47 வயதான பெண்மணி. இவர் மொல்டோவா நாட்டின் முன்னாள் துணைத் தலைமை அமைச்சர்.
4. வெஸ்னா புசிக் என்னும் 62 வயதான பெண். இவர் குரோசியா நாட்டின் துணைத் தலைமை அமைச்சர்,
5. அண்டோனியோ குடெரெஸ் என்னும் 66 வயதான ஆண். இவர் போர்த்துக்கல்லின் முன்னாள் தலைமை அமைச்சர்.
6. ஸர்ஜன் கெரிம் என்னும் 67 வயதான ஆண். இவர் மெசடோனியாவின் முன்னாள் வெளிநாட்டமைச்சர். ஐநாவின் பொதுச் சபையில் தலைமைப் பதவி வகித்தவர்.
7. டனிலோ டேர்க் என்னும் 64 வயது ஆண். இவர் ஸ்லொவெனியாவின் ஐநாவிற்கான தூதுவராகவும் ஐநாவின் துணைப் பொதுச் செயலராகவும் கடமையாற்றியவர்.
8. ஐகர் லுக்சிக் என்னும் 39 வயதான ஆண் மொண்டிநிகரோவின் முன்னாள் தலைமை அமைச்சரும் தற்போதைய வெளிநாட்டமைச்சரும் ஆவார்.
கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த பெண் என்ற நிபந்தனையை பல்கேரிய ஐரீனா பொக்கோவா, மொல்டோவாவின் நட்டலியா ஜேர்மன், குரோசியாவின் வெஸ்னா புசிக் ஆகிய மூவரும் திருப்தி செய்கின்றனர். ஆனால் இவர் யுனெஸ்க்கோவின் தலைமைப் பதவியில் இருக்கையில் அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி அதில் பலஸ்த்தீனத்திற்கு உறுப்புரிமை வழங்கப்பட்டதால் அவர் அமெரிக்காவைத் திருப்தி செய்ய மாட்டார். இந்த முறை வேட்பாளர்கள் தமது நிலை தொடர்பாக பொதுச் சபை உறுப்பினர்கள் மத்தியில் பரப்புரை செய்வதற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது. ஆனால் எட்டு வேட்பாளர்களில் நால்வர் மட்டுமே பரப்புரைக் களத்தில் இதுவரை இறங்கியுள்ளனர். மற்றவர்கள் சும்மா இருக்கும் சங்கை ஏன் ஊதிக் கெடுப்பான் என்ற எண்ணத்தில் உள்ளனர்.
எப்படித்தான் தேர்தல் நடந்தாலும் எவர் வென்றாலும் ஐநா சபை என்பது உலகிலேயே திறனற்ற ஒரு அமைப்பு, ஊழல் நிறைந்த அமைப்பு என்ற நிலையை மாற்றப்பட மாட்டாது.

Wednesday, 11 April 2012

ஐநாவின் ஆலோசனைக் குழுவில் சவேந்திர சில்வா இல்லை

இலங்கைப் படையின் 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக இருந்தபோது போர்க்குற்றம் இழைத்தவராகக் கருதப்படும் சவேந்திர சில்வா தற்போது ஐக்கியநாடுகள் சபையின் அமைதி நிலைநாட்டலுக்க்கான ஆலோசனைக் குழுவின் கூட்டங்களில் கலந்து கொள்வது இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சவேந்திர சில்வா தற்போது  ஐநாவிற்கான பிரதி நிரந்தரப் பிரதிநிதியாகக் கடமையாற்றுகிறார். இவர் போர்க் குற்றம் இழைத்தமைக்கான நம்பகரமான ஆதாரங்கள் இருப்பதாக ஐநா பொதுச் செயாலர் பான் கீ மூன் இலங்கைப் போரின் போது நடந்த அத்துமீறல்கள் தொடர்பாக் விசாரிக்க நியமித்த நிபுணர்கள் குழு தெரிவித்திருந்தது.

சவேந்திர சில்வா ஆசியப்பிராந்திய நாடுகள் சார்பாக ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி நிலைநாட்டலுக்க்கான ஆலோசனைக் குழுவில் ஒரு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட போது அவரைப் போட்டியிட வேண்டாம் என ஐநாவிற்கான பங்களாதேசப் பிரதிநிதி ஆலோசனை வழங்கியிருந்தார். ஆனாலும் அவர் அப்பதவிக்குப் போட்டியிட்டதுடன் அவருக்கு எதிராகப் போட்டியிட்ட நேப்பாள தேசப் பிரதிநிதியையும் சவுதி அரேபியப் பிரதிநிதியையும் இலங்கை கெஞ்சிக் கேட்டுப் போட்டியில் இருந்து விலகச் செய்தது.

அமைதி நிலைநாட்டலுக்க்கான ஆலோசனைக் குழுக் கூட்டம் முதலில் கூடியபோது அதன் தலைவியான கனடியப் பிரதிநிதி சவேந்திர சில்வாவை வேண்டப்படாதவராக்கிவிட்டார். பின்னர் நடந்த கூட்டத்தில் சவேந்திர சில்வா பங்கு பற்றுவதில்லை. இது தொடர்பாக ஊட்கங்கள் பான் கீ மூனிடம் கேட்ட போது அது உறுப்பு நாடுகளைப் பொறுத்தது என்று தட்டிக் கழித்து விட்டார். இலங்கைப் பிரதி நிதி பாலித கொஹென்னவிடக் சவேந்திர சில்வா ஏன் அமைதி நிலைநாட்டலுக்க்கான ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பங்குபற்றவில்லை எனக் கேட்ட போது அவர் "ஊரில் இல்லை" அதனால் பங்குபற்றவில்லை எனப் பதிலளித்திருந்தார்.

கனடாவைச் சேர்ந்த Louise Frechette ஐக்கியநாடுகள் சபையின் அமைதி நிலைநாட்டலுக்க்கான ஆலோசனைக் குழுவின் தலைவியாக இருக்கிறார். இவர் சவேந்திர சில்வா தனது குழுவிற்குப் பொருத்தமற்றவர் என்று சொன்னார். ஏப்ரல் இரண்டாம் திகதி நடந்த ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் சவேந்திர சில்வா பங்குபற்றவில்லை எனக் கூறப்படுகிறது.

Saturday, 16 April 2011

இலங்கைப் போர்க் குற்றம்: நீதிபதியின் ஆசனத்தில் குற்றவாளி


இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரில் இலங்கை அரசால் இழைக்கப்பட்ட போர்க்குற்றம் பற்றிய பன்னாட்டு மட்ட விசாரணை தேவை பல தமிழர் அமைப்புக்களும் பல மனித உரிமை அமைப்புக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. நீண்ட இழுத்தடிப்புக்களுக்குப் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன் இலங்கையில் நடந்தவை தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்க ஒரு நிபுணர் குழுவை அமைத்தார். இந்தோனேசியாவைச் சேர்ந்த முன்னாள் சட்டமா அதிபர் மர்சுகி டறுஸ்மன் (Marzuki Darusman), தென்னாபிரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் சட்டவாளர், நீதியாளர் யஸ்மின் சூகா (Yasmin Sooka), அமெரிக்காவைச் சேர்ந்த சட்டத்துறைப் பேராசிரியர் ஸ்ரிவன் ரட்னர் (Steven Ratner) ஆகியோர் இந்த ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

கழுதை தேய்ந்து கட்டெறும்பானது.
இலங்கையில் நடந்தது ஒரு இனக்கொலை என்று பலரும் கருதுகிறார்கள். மனித உரிமை அமைப்புக்கள் இலங்கையில் நடந்தவற்றை போர்க் குற்றம் என்று குறிப்பிட்டன. ஐநா ஆலோசனைச் சபை போர்க் குற்றம் என்ற அடிப்படையில் அமைக்கப்படவில்லை. இலங்கையின் இறுதிப் போரில் நடந்தவை தொடர்பாக வகைசொல்லல்(Accountability) தேவை என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டது. பான் கீ மூன் அமைத்தது ஒரு விசாரணைக் குழு அல்ல ஆலோசனைக் குழுவே.
இனக்க்கொலை போர்க் குற்றமாகி, போர்க்குற்றம் வகைசொல்லலாகியுள்ளது.

பக்கிஸ்த்தானில் பெனாசிர் பூட்டோ கொலை தொடர்பாக விசாரித்த ஐக்கிய நாடுகள் சபையின் குழு விசாரணை முடிந்தபின்னர் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி அதில் ஊடகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தது. ஆனால் இலங்கை தொடர்பாக அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழு இதுவரை எந்த ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பையும் நடத்தவில்லை.

ஐநா அதிபரின் ஆலோசனைக் குழுவின் அறிக்கையை இதுவரை ஐநா தரப்பு பகிரங்கப்படுத்தவில்லை. ஐநாவின் வழமைப்படி மதிப்புரவின்(courtesy) நிமித்தம் இலங்கையிடம் அறிக்கையின் ஒரு பிரதி வழங்கப்பட்டது. அறிக்கையில் சில பகுதிகள் இலங்கையில் சில ஊடகங்களில் பகிரங்கப்படுத்தப்பட்டு அது தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஐநா அதிபரின் ஆலோசனைக் குழுவின் அறிக்கை தொடர்பாக தனது "தீர்ப்பை" இலங்கை வழங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு எதிராக அறிக்கை விடும்படி தனது நட்பு நாடுகளைத் தூண்டி வருகிறது. இந்தியாவுடன் இலங்கை இது தொடர்பாக ஆலோசித்து வருகிறது.

ஐநா அதிபரின் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அடுத்த கட்டத்திற்கான ஆரம்பம் மட்டுமே. அறிக்கைக்குப் பின்னர் ஐநா என்ன செய்யும்? ஐநாவின் பாதுகாப்புச் சபையில் சீனா, இரசியா ஆகிய இரு நிரந்தர உறுப்பினர்களும் தற்காலிக உறுப்பினரான இந்தியாவும் நிச்சயம் இலங்கைக்குச் சாதகமாக நடந்து கொள்ளும். அமெரிக்க நிலைப்பாடு இலங்கைக்கு எதிராக இல்லை. ஐநா அதிபரின் ஆலோசனைக் குழுவின் அறிக்கை இலங்கைக்கு "வகைசொல்லல்" இற்கு உதவி செய்யும் என்று அமெரிக்கா தெரிவிக்கிறது.

ஐநா அதிபரின் ஆலோசனைக் குழுவின் அறிக்கை இலங்கைக்கு எதிராக அமையும் என்று நாம் எல்லோரும் கருதிக் கொண்டு இருக்கையில் அது இலங்கைக்கு ஒரு சொத்தாக அமையும் என்று அமெரிக்கப் பேச்சாளர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்:
  • I think that we believe that the Lessons Learnt commission and Reconciliation commission were good steps. But we believe also that the UN Panel of Experts is a useful asset and should be taken advantage of by the government.
அமெரிக்கா மீண்டும் இலங்கை அமைத்த கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு என்ற வெத்து வேட்டில் நம்பிக்கை கொண்டுள்ளது. பன்னாட்டு நெருக்கடிக்குழுவும் பன்னாட்டு மன்னிப்புச் சபையும் இலங்கையின் ஆணைக்குழுவை நிராகரித்து விட்டன. ஐநா அதிபரின் ஆலோசனைக் குழுவின் அறிக்கையின் மீதான அடுத்த நடவடிக்கை பன்னாட்டு அரங்கில் மேற் கொள்ளப்படாமல் அது தொடர்பான விசாரணையை மேற் கொள்ளும் பொறுப்பு இலங்கையிடம்தான் வழங்கப்படுமா?

Tuesday, 22 February 2011

போர் குற்றம்: பாலித கொஹென்னவுடன் விஜய் நம்பியாரின் பெயரும் இணைப்பு


தற்போது ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையில் நிரந்தரத் தூதுவர் பாலித கொஹென்னவுடன் இந்திய அரசதந்திரிவிஜய் நம்பியாரும் போர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றில் இலங்கை ஒரு உறுப்பினர் நாடு அல்ல. இதனால் இலங்கைக் குடிமக்கள் மீது பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றில் குற்றம் சாட்டுவது கடினம். விஜய் நம்பியார் இந்தியக் குடிமகன் என்பதாலும் பாலித கொஹென்ன இலங்கை அவுஸ்திரேலிய இரட்டைக் குடியுரிமை உள்ளவர் என்பதாலும் அவர்கள் இருவர் மீதும் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக நம்பப் படுகிறது. விஜய் நம்பியாரில் குற்றம் சுமத்திய அடிப்படை:
  • வெள்ளைக் கொடியுடன் இலங்கை அரசிடம் சரணடைபவர்கள் பாதுகாப்பு உண்டு அவர்கள் போர்க்கைதிகள் போல் நடத்தப்படுவார்கள் என்று மஹிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, பாலித கொஹென்ன ஆகியோர் தன்னிடம் உறுதியளித்தனர் என்று விஜய் நம்பியார் தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவைச் சேர்ந்த இனக்கொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு இந்த வழக்குத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

1987இல் பிரபாகரனை பேச்சு வார்த்தைக்கு வரும்படி அழைத்து அவரைக் கொன்று விடும்படி ராஜிவ் காந்தி உதரவிட்டிருந்தாராம். இதை இலங்கையில் அப்போது நிலை கொண்டிருந்த இந்திய அமைதிப்(?) படையின் உயர் அதிகாரி அது போர் குற்றத்தில் முடியும் என்று சொல்லி மறுத்திருந்தாராம்.

யார் இந்த விஜய் நம்பியார்

மும்பாய் பல்கலைக்கழகத்தில் அரசறிவியற் துறையில் பட்டப்படிப்பு படித்த விஜய் நம்பியார் இந்தியாவின் முன்னாள் பிரதிப் பாதுகாப்புத்துறை ஆலோசகர் ஆவார். அல்ஜீரியா, மலேசியா, சீனா, பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளில் விஜய் நம்பியார் இந்தியாவின் தூதுவராகவும் பணியாற்றியவர். 2002இல் இருந்து 2004ம் ஆண்டுவரை ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாகவும் பணியாற்றியவர். விஜய் நம்பியார் முன்னாள் ஐந பொதுச் செயலர் கோபி அனன் அவர்களின் ஆலோசகராகவும் கடமையாற்றியவர். இவருக்கு சதீஷ் நம்பியார் என்ற ஒரு சகோதரர் இருக்கிறார் அவர் இலங்கை அரசுக்கு படைத்துறை ஆலோசகராகப் பணியாற்றுபவர். ரனில்-பிரபா சமாதான ஒப்பந்தத்தின் படி உயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்து படைகளை ரணில் விக்கிரமசிங்க விலக்கத் தயாராக இருந்த வேளை இந்தியா சதீஷ் நம்பியாரை அனுப்பி உயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்து படைகள் விலகுவதைத் தடுத்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் உள்ளிட்டோர் சரணடைவது தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரின் தலைமைச் செயலரான விஜய் நம்பியார் இலங்கையில் இருந்தபோது இலங்கை அரசுடன் பேச்சு நடத்தியிருக்கிறார். இத்தகவலை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூனின் பேச்சாளர் மிச்சேல் மொன்டாஸ் தெரிவித்துள்ளார்.

வெள்ளைக் கொடியுடன் சரணடைவது தொடர்பான பேச்சு வார்த்தையில் விஜய் நம்பியார்.
நோர்வேயின் எரிக் சொல்ஹெய்ம் அவர்களிடமும் இது தொடர்பாக புலித்தேவன் தெரிவித்தார். விஜய் நம்பியார் இலங்கைக்குச் செல்வதற்கு முன்பாக, சரணடைதல் தொடர்
பான வேண்டுகோளுடன் பிரித்தானிய ஊடகவியலாளரான மேரி கொல்வின் அவரை முதலில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் பிரதிநிதி ஒருவரும் விஜய் நம்பியாரைத் தொடர்பு கொண்டிருக்கிறார். சரணடைவதாக இருந்தால் இலங்கை படையினரிடம்தான் சரணடைய வேண்டுமே தவிர மூன்றாவது தரப்பினரிடம் அல்ல என்பதை இலங்கை அரசு வலியுறுத்தி வருகிறது என்ற செய்தியை விஜய் நம்பியார் அவர்களிடம் தெரிவித்திருக்கிறார். சரணடைவதற்கு விரும்பிய நடேசனிடமும், புலித்தேவனிடமும் வெள்ளைக்கொடியை ஏந்தி இலங்கை படையினரிடம் காட்டினால் போதும், பாதுகாப்பாக சரணடையலாம் என்று விஜய் நம்பியார் கூறியிருக்கிறார். நடேசன், புலித்தேவன் ஆகியோரின் கடைசி வேண்டுகோள் ஊடகவியலாளர் மேரி கொல்வின் மூலமாக விஜய் நம்பியாருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது உரிய முறையில் இலங்கை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப் பட்டது. ஆனால் விடுதலைப் புலிகளின் அரசியற்துறையினர் வெள்ளைக் கொடியுடன் சரணடையச் சென்றபோது சுட்டுக் கொல்லப் பட்டனர். இதன் பின்னால் ஒரு சதி இருந்திருக்க வேண்டும். இலங்கை அரசு விடுதலைப் புலிகளை வேரோடு அழித்தொழிக்கும் எண்ணத்தையே கொண்டிருக்கிறது. அதன் இராணுவ ஆலோசகர் சதீஷ் நம்பியார் அவரின் சகோதரர் விஜய் நம்பியாரை ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கைக்குத் தூதுவராக அனுப்பியது ஒரு சதியன்றி வேறு எது? இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கும் போது அங்கு செல்லும்படி அவரிடம் வலியுறுத்திய போது அவர் அதைத் தட்டிக் கழித்து விட்டு போர் முடிந்த பின் இலங்கை சென்றார். சம்பந்தமில்லாமல் கண்டி சென்றார். மிக உயரத்தில் இருந்து வன்னி முகாம்களை பார்வையிட்டுவிட்டு அறிக்கை விட்டார். இதனால்தால் Foreign Policy இணையத்தளம் மிக ஆபத்தான கொரியர் என்று விமர்சித்தது. The Economist சஞ்சிகை இலங்கை விவகாரத்தில் அவரது செயற்பாட்டை வைத்து அவருக்கு பத்துக்கு மூன்று புள்ளிகள் வழங்கியது.

இலங்கையில் மக்கள் ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்ட போது காலத்தை இழுத்தடித்த விஜய் நம்பியார்
போர் நடந்து கொண்டிருந்த வேளை பிரித்தானியாவின் வற்புறுதலின் பேரில் ஐநாவின் விஜய் நம்பியார் என்னும் சீனாவின் நண்பர் இலங்கைக்கு அனுப்பப்பட்டார். அவர் அங்கு சென்று உடனடியாக அறிக்கை சமர்பிக்கும்படி பணிக்கப் பட்டார். அவர் அங்கு சென்று உடன் ஐநா திரும்பாமல் இந்தியா சென்றார். அவர் அங்கு தமிழின விரோதிகளான சிவ் சங்கர மேனனுடனும் நாராயணுடனும் பேச்சு வார்த்தை செய்யவா சென்றார் என்ற கேள்வியும் அப்போது எழுந்தது. காலம் தாழ்த்தி ஐநா திரும்பிய வில்லங்கமான வில்லன் நம்பியார் முதலில் தனது அறிக்கையை சமர்பிக்காமல் காலம் தாழ்த்தினார். இதற்க்காக அவர் மீது ஒழுக்காற்று நடவைக்கை எடுக்கப்படும் என்று பிரித்தானியா மிரட்டிய பின் நிலத்திற்குக்கீழ் உள்ள மூடிய அறையில் அவரது அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டது.

வில்லங்கமான வில்லன் இந்த விஜய் நம்பியார்
மியான்மர் ஜனநாயக இயக்கத்திற்கு எதிரானவர்களுக்கு ஆதரவாக விஜய் நம்பியார் செயல்படுவதாகவும் இங்கிலாந்து குற்றம் 2010 டிசம்பரில் குற்றம் சாட்டி இருந்தது. இதுகுறித்து ஐ.நா.வுக்கான இங்கிலாந்து தூதர் மார்க் லியால் கிரான்ட் கூறுகையில், மியான்மர் தூதராக விஜய் நம்பியார் தொடர்ந்து செயல்படக் கூடாது. மியான்மருக்கென தனி, நிரந்தர தூதரை ஐ.நா. நியமிக்க வேண்டும் என பான் கி மூனை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். ஆனால் இதுவரை இதை பான் கீ மூன் இழுத்தடித்து வருகிறார். மியன்மார் தொடர்ப்பாக விலங்கம் பிடித்த வில்லன் விஜய் நம்பியார் ஐநாவிற்கு சமர்ப்பித்த அறிக்கையில் சீனாவின் வேண்டுகோளிற்கு இணங்க போர் குற்றம் தொடர்பான வாசகங்களை தவிர்த்துக்கொண்டார். இந்த அசிங்கமான இந்தியர் ஐக்கிய நாடுகள் சபையில் உயர் பதவியில் இருப்பது ஐநாவிற்கு ஒரு பெரும் இழுக்காடு.

Wednesday, 28 July 2010

ஆட்டம் காணும் பான் கீ மூனின் இரண்டாம் ஆட்டக் கனவு.


2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலராகப் பதவியேற்ற தென் கொரியாவைச் சேர்ந்த பான் கீ மூனின் பதவிக்காலம் 2011-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் திகதியுடன் முடிவடைகிறது. ஐநா வின் பொதுச் செயலாளராக ஒருவர் இரண்டு தடவை பதவி வகிக்க முடியும். பான் கீ மூனின் இரண்டாவது பதவிக் காலத்திற்கு எதிரான கருத்துக்கள் சென்ற ஆண்டில் இருந்தே ஆரம்பித்துவிட்டன. இதன் முக்கிய் ஆரம்பமாக நோர்வேயின் ஐநாவிற்கான நிரந்தரப் பிரதிநிதி மோனா ஜூல் அவர்களால் சமர்பிக்கப் பட்ட இரகசிய அறிக்கை வெளிக்கசிந்தது அமைந்தது.

உலக நெருக்கடிகளிற்கு ஐநாவின் செயற்பாடுகள் தேவைப் படும் நேரங்களில் பான் கீ மூன் அமைதியாக இருப்பதாகவும், உலக நிதி நெருக்கடி ஏற்பட்ட வேளையில் தனது தலைமைத்துவத்தை வெளிக்காட்டவில்லை என்றும் நோர்வேயின் ஐநாவிற்கான நிரந்தரப் பிரதிநிதி மோனா ஜூல் குற்றம் சுமத்தியிருந்தார். ஒரு அமெரிக்க ஊடகம் இவரை உலகின் மிக ஆபத்தான கொரியநாட்டவர் என்று வர்ணித்தது.


கவர்ச்சியற்ற பான் கீ மூன்

பான் கீ முனிற்கு முன்னர் இருந்த கோபி அனன் அவர்கள் சிறந்த தோற்றமும் தெளிவான பேச்சுத் திறனும் கொண்டவர். அவரைத் தொடர்ந்து வந்த பான் கீ மூன் ஒரு தெரியாத நகரத்தில் பணப்பையைத் தொலைத்த பயணி போல் எப்போது காட்சியளிப்பார். புன்னகைக்கவே மாட்டார். பான் கீ மூனின் பேச்சு தம்மை நித்திரை கொள்ளச் செய்வதாகப் பல ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


மீண்டும் சூடு பிடிக்கிறது

பான் கீ மூனின் இரண்டாவது பதவிக்காலம் தொடர்பான சர்ச்சைகள் கடந்த சில வாரங்களாக மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. பிரித்தானியக் கார்டியன் பத்திரிகை "பான் கீ மூனின் செயற்பாடுகளிற்கு எதிராக கலையும் அமைதி" என்ற தலைப்பிட்டு 22-07-2010இல் ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் பான் கீ மூனின் மோசமான ஆங்கில அறிவும் அவரது தொடர்பாடல் திறமையின்மையும் அவரது முதற் பேச்சிலேயா வெளிப்பட்டு விட்டதாம். இதன் பின்னர் அவருக்கு ஆங்கிலப் பயிற்ச்சியும் தொடர்பாடல் பயிற்ச்சியும் வழ்ங்கியும் போதிய முன்னேற்றம் கிடைக்கவில்லை. பின்னர் தொலைக்காட்சிகளில் தோன்றுவதை தவிர்க்குமாறு இவருக்கு ஆலோசனை வழங்கப் பட்டது.


இன்னும் ஒரு செய்திக் கசிவு

பான் கீ மூனின் திறமையின்மை தொடர்பாக இன்னும் ஒரு செய்திக் கசிவு ஏற்பட்டுள்ளது. இது பான் கீ மூனிற்கு சுவீடனைச் சேர்ந்த உதவிப் பொதுச் செயலாளர் இங்கா பிரித் ஆலெனியஸ் (under-secretary general Inga-Britt Ahlenius) அவர்கள் எழுதிய இரகசிய உள்ளகக் கடிதம் இப்போது வெளிவந்துள்ளது. அப்பெண்மணி ஐநா பொதுச் செயலகம் "அழுகத்" தொடங்கிவிட்டது துண்டுகளாக் விழப் போகிறது, ஐநா தேவையற்ற ஒன்றாகப் போகிறது என்று தான் மனவருத்தத்துடன் தெரிவிக்கிறேன் என்றார். Ahlenius accuses her boss(பான் கீ மூன்) of trying to undermine the independence of her office by refusing to allow her to hire a highly regarded and pugnacious investigator and by seeking to set up an in-house investigative body, presumably in rivalry with her own. Ban has marketed himself as a hard-headed Korean reformer, but Ahlenius angrily asserts that in his administration there is "no transparency," a "lack of accountability," and, overall, "[no] signs of reform."


கொப்பெனகனில் கோட்டை விட்ட பான் கீ மூன்

2009 டிசம்பரில் நடந்த உலக வெப்பமயமாதல் மாநாட்டிலும் பான் கீ மூனின் தலைமைத்துவத் திறமையின்னமை நன்கு வெளிப்பட்டது. பான் கீ மூனின் இரண்டாம் பதவிக்காலத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்த சிலர் இந்த மாநாட்டின் பின்னர் தம் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர்.


இந்தியர் இருவர் நடுவில் பான் கீ மூன்

பான் கீ மூனின் பிரத ஆலோசகராக விஜய் நம்பியார் என்பவர் இருக்கிறார். அவரது மகளின் கணவரான சித்தார்த சட்டர்ஜீக்கு பதவி உயர்வு வழங்கியது பான் கீ மூனின் நேர்மையை சந்தேகத்திற்குள்ளாக்கியது. விஜய் நம்பியார் இலங்கையின் போர்த்துறை ஆலோசகர் சதீஸ் நம்பியாரின் சகோதரர். விஜய் நம்பியார் 2009 மே மாதம் இலங்கையில் நடந்த போரின் போது இலங்கை சென்று விட்டு வந்து பாதுகாப்புச் சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்க மறுத்து அடாவடித்தனம் செய்தவர். சரணடைந்தவர்களை சுட்டுக் கொன்றதில் விஜய் நம்பியாரின் செயற்பாடுகள் சம்பந்தப்பட்டிருந்தன. இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான சகல செயறபாடுகளிலும் இந்தியாவைன் கை சம்பந்தப் பட்டிருக்கும் என்பதற்கு இவர்கள் இருவரும் சாட்சியங்களா?


சரித்திரத்தில் மோசமான இடம் பிடித்த பான் கீ மூன்

ஐநாவைப்பற்றி பல புத்தகங்கள் எழுதிய நியூ யோர்க் பல்கலைக் கழக அரசியற் துறைப் பேராசிரியர் தோமஸ் வைஸ் அவர்கள் இதுவரை இருந்த ஐநா பொதுச் செயலர்களுள் பான் கீ முன் மிக மோச மானவர் என்று குறிப்பிடுகிறார். அவர் மேலும் தெரிவிப்பது:

"While it is perhaps unfair to compare the current secretary-general with his telegenic and charismatic predecessor, Ban Ki-moon has set a new standard for being invisible," Weiss said, adding: "I think he feels comfortable with blending into the background."


இதே வேளை பான் கீ மூனின் உதவியாளர்கள் சிலர் அவரை புகழும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். ஒரு ஜப்பானியர் அவரை யோகிக்கு ஒப்பிட்டார். யோகி எப்படிக் கதைக்கிறார் என்பதல்ல முக்கியம் அவர் எதைப் போதிக்கிறார், எப்படிச் செயற்படுகிறார் என்பதுதான் முக்கியம் என்கிறார் அவர்.


சென்று வாருங்கள் என்கிறார் ஜேம்ஸ் ரவுப்

பிரபல அமெரிக்க அரசியல் ஆய்வாளர் ஜேம்ஸ் ரவுப் அவர்கள் Good night, Ban Ki moon என்ற தலைப்பிட்டு ஒரு கட்டுரையை 22-07-2010இலன்று எழுதியுள்ளார். பொதுச் செயலாளர்கள் அவர்களின் திறமையின்மைக்காகவே தெரிவு செய்யப்படுகிறார்கள் என்று அவர் கிண்டலடித்துள்ளார். பான் கீ மூனிற்கு எதிராக அவர் வைக்கும் குற்றச் சாட்டுக்களில் இலங்கை உள்நாட்டுப் போரை அவர் கையாண்ட விதம் முக்கிய இடம் பெறுகிறது. முன்னாள் கோபி அனனின் திறமை அமெரிக்காவிற்கு பாதகமாக அமைந்ததால் திறமையற்ற பான்கீ மூன் தேர்ந்தெடுக்கப் பட்டதாக கூறப்படுகிறது. ஐநாவை எப்போதும் ஒரு தடையாகப் பார்க்கும் சீனா அதன் பெருமையைக் குறைக்கவே பான் கீ மூனை பொதுச் செயலராக்க அனுமதித்தது என்கிறார் ஜேம்ஸ் ரவுப்.

Ban Ki-moon, a colorless South Korean bureaucrat and the favored candidate of U.S. Ambassador John Bolton, was the cure for Annan's dangerous charisma. China, which exercised effective veto rights over the choice of an "Asian candidate," was equally pleased with a figure who would lower the U.N.'s profile.


இலங்கை பிரச்சனையைக் கையிலெடுத்த பான் கீ மூன்

தனது செயற்பாடுகளுக்கு எதிரான குற்றச் சாட்டுகளில் இலங்கைப் பிரச்சனை மிக முக்கிய இடம் வகிப்பதால் தனது இரண்டாவது பதவிக்கால நீடிப்பிற்கு இலங்கைப் பிரச்சனையை பான் கீ மூன் கையிலெடுத்தார். ஒரு ஆலோசனை சபையை நியமித்து அதை அடுத்த ஆண்டின் இறுதி வரை நீடித்தால் தனது பதவி நீடிப்பிற்கு சாதகமாக இருக்கலாம் என்று பான் கீ மூன் கருதுகிறார். சென்ற முறை பான் கீ மூன் தேர்வு செய்யப் பட்டபோது அவர் தேர்வு செய்யப்பட தனது வேட்பாளரை போட்டியில் இருந்து விலகச் செய்து பான் கீ மூனை வெல்லச் செய்தது இலங்கை. அவரை இந்த முறை வெற்றியடையச் செய்வதில்லை என்று இலங்கை கங்கணம் கட்டி நிற்கிறது.


அமெரிக்க சார்பாளரை அமெரிக்க கைவிடுமா?

இது வரை இருந்த எட்டு பொதுச் செயலாளர்களுள் பான் கீ மூன் தான் மிகத்திவீரமான அமெரிக்க ஆதரவாளர். முன்னாள் பொதுச் செயலர் கோபி அனன் அமெரிக்கா ஈராக்கில் செய்தவற்றை பகிரங்கமாக கண்டித்தவர். ஐரோப்பியாவில் நல்ல பெயரெடுத்தவர். இவரைப் பிடிக்காத்தால் ஜோர்ஜ் புஷ் பான் கீ மூனை பொதுச் செயலராக்கினார். இபோது ஒபாமா நிர்வாகம் இலங்கைப் போர் குற்ற விசாரணையை காரணம் காட்டி அவரை பதவியில் நீடிக்கச் செய்யுமா? இலங்கையுடன் ஏதாவது திரை மறைவு உடன்பாடு ஏற்படுமா? சீனா பான் கீ மூனின் இரண்டாம் ஆட்டத்தை ஆதரிக்குமா?

Friday, 2 July 2010

போர்க்குற்றம்: ஐநா ஆலோசனை சபை ஒரு மோசடியா?


இலங்கையில் நடந்த போர் குற்றம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் பொதுச் செயலர் பான் கீ மூன் தனக்கு ஆலோசனை வழங்க ஒரு நிபுணர் குழுவை பல இழுத்தடிப்பின் பின்னர் அமைத்துள்ளார். இதனால் இலங்கை அரசும் சிங்களப் பேரினவாதிகளும் கொதித்து எழுகிறார்கள் அல்லது இந்த ஆலோசனைச் சபையால் எந்தப் பயனும் இல்லை என்று அறிந்தும் கொதித்து எழுவது போல் நடிக்கிறார்கள். அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன இந்த ஆலோசனைச் சபையை வரவேற்றன. ரஷ்யா இந்த ஆலோசனைச் சபையை எதிர்த்துள்ளது. ரஷ்ய எதிர்ப்பின் பின்னணியில் இந்தியா இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப் படுகிறது.

இந்த குழு அமைப்பை சிங்களப் பேரினவாதியான விமல் வீரவன்ச என்னும் இலங்கை அரசின் அமைச்சர் கடுமையாக எதிர்த்ததுடன் இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் பணியகக் கட்டிடத்தை மக்கள் முற்றுகை செய்து அங்கு வேலை செய்பவர்களை ஐநா தனது ஆலோசனைச் சபையைக் கலைக்கும்வரை தடுத்து வைத்திருக்க வேண்டும் என்று முழங்கியுள்ளார். இதை இலங்கை அரசு பகிரங்கமாக இது வரை கண்டிக்கவில்லை. இந்தச் செய்தி கொழும்புப் பத்திரிகைகளில் வெளிவந்த போது அதற்கு பின்னூட்டம் எழுதியவர்களில் பெரும்பாலோனோர் விமல் விரவன்சவின் கூற்றைக் கண்டித்துள்ளனர். ஆனால் இது பற்றி ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளரிடம் இன்னர் சிற்றி பிரெஸ் என்னும் ஐநா ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது அது பத்திரிகைகளால் தவறாகப் பிரசுரித்திருக்களாம அல்லது ஒரு காந்தீய வழி ஒத்துழையாமையாக இருக்கலாம் என்றும் அதற்கு இலங்கையைப் பாராட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். எனக்குத் தெரிந்தவரை காந்தீயம் என்பது ஒரு காந்தீய வழிப்போராளி தன்னைத் தானே இம்சைக்கு உள்ளாக்குவார் அவர் மற்றவர்களை ஒரு போதும் பணயக் கைதிகளாக்க மாட்டார். இந்த ஐநாவின் பேச்சாளர் ஒரு இலங்கை அரசின் பேச்சாளர் போன் ஏன் செயற்படுகிறார்.

ஐநா ஆலோசனை தொடர்பான சந்தேகங்கள்
பான் கீ மூன் ஒரு ஆலோசனைச் சபையைத் தான் அமைத்துள்ளார் விசாரனைச் சபையை அல்ல. அதற்கு வழங்கப் பட்டுள்ள நான்கு மாதங்கள் இலங்கைப் போர் குற்றம் தொடர்பாக செவ்வனவே உண்மைகளைக் கண்டறியப் போதுமானவை அல்ல என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்த ஆலோசனை சபை நாலு மாதங்களின் பின்னர் எந்த அறிக்கையும் சமர்பிக்காமல் விடலாம் என்று ஐநா தெரிவித்தது ஏன்? இது இறுதியில் ஒரு வெற்று வேட்டாக முடியுமா?

இந்த ஆலோசனைச் சபையைத் தொடர்ந்து எடுக்கப் படவிருக்கும் அடுத்த நடவடிக்கைகள் என்ன என்றுபற்றி இதுவரை எதுவும் கூறப்படவில்லை.

இந்த ஆலோசனை சபை தொடர்பாக தமிழர்களுக்கான மனித உரிமைச் செயற்பாட்டாளராகிய பிரான்ஸ்சை சேர்ந்த கிருபாகரன் அவர்கள் தெரிவித்த கருத்து: இந்த ஆலோசனைச் சபை துருப்புச் சீட்டுக்கள் இருக்க மற்றச் சீட்டுக்கள் விளையாடி வெற்றி பெற்றது போல் அமையலாம் (புறக் கம்மாரிஸ்). அதாவது முடிவில் இலங்கை அரசிற்குப் பாராட்டுத் தெரிவித்து விட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் போர் குற்றம் புரிந்தார்கள் என்று தனது முடிவைத் தெரிவிக்கலாம்.

தமிழர்களுக்காக செயற்படும் பல அமைப்புக்கள் இலங்கையில் 1956 இல் இருந்து இனக் கொலை நடக்கிறது என்று குற்றம் சாட்டி வருகின்றன. இதற்கான ஆதாரங்களையும் அவை முன்வைக்கத் தயாராக இருக்கின்றன. ஆனால் இதற்கு பன்னாட்டு அமைப்புக்களிடமிருந்து ஆதரவு கிடைக்கவில்லை. தமிழர்கள் தாமாக வே இலங்கை அரசின் மீது போர்குற்ற வழக்குத் தொடரும் சாத்தியம் உண்டு. அதிலிருந்து இலங்கையைப் பாதுகாக்கவும் அதை திசை திருப்பவும் பன்னாட்டு மட்டத்தில் நடக்கும் சதிதான் போர் குற்றம் தொடர்பான சர்ச்சை என்று பல தமிழர்கள் கருதுகிறார்கள்.

பான் கீ மூன் ஐநா பொதுச் செயலர் பதவிக்குப் போட்டியிட்டபோது தனது வேட்பாளரைப் போட்டியில் இருந்து விலகச்செய்து அவரது வெற்றிக்கு இலங்கை பெரும் பங்காற்றியது. பான் கீ மூன் எப்போதும் இலங்கை விவகாரத்தில் பக்கச் சார்பற்றாவராக நடந்து கொண்டதில்லை. அவரது நெருங்கிய நண்பரும் ஆலோசகருமான விஜய் நம்பியார் ஒரு தமிழின விரோதி. இந்நிலையில் பான் கீ மூனின் நிர்வாகத்தில் தமிழர்களுக்கு நியாயமான எதுவும் கிடைக்காது.

Wednesday, 23 June 2010

இலங்கைக்கு வேண்டாதவர் ஐநா ஆலோசனைக் குழுவில்.


இலங்கையில் சென்ற ஆண்டு நடந்த போரின் போது இடம்பெற்றதாகக் கருதப்படும் போர்குற்றங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர பான் கீ மூனிற்கு ஆலோசனை வழங்க அமைக்கப் பட்டுள்ள குழு தொடர்பாக இலங்கை அதிர்ச்சி அடைந்துள்ளதாக அறியப்படுகிறது. இந்தக் குழு அமைக்கப்பட்டவுடன் இலங்கையில் ஓர் உயர்மட்டக் குழு கூட்டப் பட்டுள்ளது.

பான் கீ மூன் ஐநா பொதுச் செயலர் பதவிக்குப் போட்டியிடும்போது இலங்கையும் ஒரு வேட்பாளரை நிறுத்த முயன்றது. இலங்கை சார்பில் ஒருவர் போட்டியிட்டால் அது பான் கீ மூனின் வெற்றி வாய்ப்பை இழக்கச் செய்யும். இலங்கைப் பிரதிநிதி போட்டியில் இருந்து விலக திரை மறைவில் சில உடன்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். தென் கொரியரான பான் கீ மூனும் அவரது உதவியாளரான சதீஸ் நம்பியார் என்ற மலையாளியும் இலங்கை அரசிற்கு சார்பாக நடந்து கொள்வதாக பல குற்றச் சாட்டுக்கள் முன் வைக்கப் பட்டு வருகின்றன.

சர்வ தேச மன்னிப்புச் சபை, பன்னாட்டு நெருக்கடிக் குழு, சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் போன்ற அமைப்புக்கள் இலங்கையில் சென்ற ஆண்டு நடந்த போரின் போது இடம்பெற்றதாகக் கருதப்படும் போர்குற்றங்கள் தொடர்பாக ஐநா விசாரணை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன. பிரித்தானிய சனல்-4 தொலைக்காட்சி இலங்கை புரிந்த அட்டூழியங்களை பல அதிர்ச்சியூட்டும் காணொளிகள் மூலமாக வெளிக் கொணர்ந்தது. இவற்றைத் தொடர்ந்து இந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கையில் சென்ற ஆண்டு நடந்த போரின் போது இடம்பெற்றதாகக் கருதப்படும் போர்குற்றங்கள் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்க ஒரு குழுவை அமைக்கப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால் அது அமைப்பதில் கால தாமதம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. கால தாமதத்திற்கான காரணம் இலங்கையுடன் திரை மறைவில் பான் கீ மூன் பேச்சு வார்த்தைகளில் ஈடு பட்டுக் கொண்டு இருந்திருக்க வேண்டும். கொழும்பில் இருந்து வரும் தகவல்களின் படி இலங்கை ஐரோப்பியாவையோ அல்லது அமெரிக்காவையோ சேர்ந்தவர்கள் ஆலோசனைச் சபையில் இடம்பெறுவதை விரும்பவில்லை. அந்தக் கோரிக்கையை முழுதாக பான் கீ மூனால் நிறைவேற்ற முடியாற் போய்விட்டது. அவர் தன்னிச்சையாகவும் நியமிக்க முடியாது. அப்படிச் செய்தால் அவர் மீது பல குற்றச் சாட்டுக்கள் பாயும். அவர் ஆசியான் நாடுகளின் பிரதிநிதியையும் அமெரிக்கப் பிரதி நிதியையும் ஆபிரிக்கப் பிரதி நிதிகளையும் கலந்தாலோசித்து இந்தோனேசியாவைச் சேர்ந்த முன்னாள் சட்டமா அதிபர் மர்சுகி டறுஸ்மன் (Marzuki Darusman), தென்னாபிரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் சட்டவாளர், நீதியாளர் யஸ்மின் சூகா (Yasmin Sooka), அமெரிக்காவைச் சேர்ந்த சட்டத்துறைப் பேராசிரியர் ஸ்ரிவன் ரட்னர் (Steven Ratner) ஆகியோரை நியமித்துள்ளார். இலங்கைப் போர் குற்றங்களைப் பொறுத்தவரை அமெரிக்கா ஒரு திடமான கொள்கையை கடைப் பிடிக்கவில்லை. பேராசிரியர் ஸ்ரிவன் ரட்னர் (Steven Ratner) எப்படி நடந்து கொள்வார் என்று எதிர்வு கூற முடியாது.

பான் கீ மூன் அமைத்துள்ள ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ள இந்தோனேசியாவைச் சேர்ந்த முன்னாள் சட்டமா அதிபர் மர்சுகி டறுஸ்மன் அவர்கள் ஏற்கனவே இலங்கையில் அமைக்கப் பட்ட பன்னாட்டு சுதந்திர நிபுணர் குழுவில் (International Independent Group of Eminent Person) இடப் பெற்றிருந்தவர். இக்குழு இலங்கையின் மனித உரிமை சம்பந்தமாக விசாரணை செய்ய முயன்ற போது இவருக்கும் இலங்கை அரசிற்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது. இதனால் இவர் தமக்கு வேண்டப்படாதவர் என்று இலங்கை கருதுகிறது. அதனால் அதிர்ச்சியுமடைந்துள்ளது.

ஆலோசனைக் குழுவின் அதிகாரங்கள் தொடர்பாக இன்னும் பகிரங்கப் படுத்தப் படவில்லை. ஆலோசனைக் குழுவின் அதிகாரங்கள் தொடர்பாக பான் கீ மூன் இலங்கையுடன் கலந்தாலோசித்திருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பான் கீ மூன் அமைத்துள்ள ஆலோசனைக் குழு தொடர்பாக இலங்கை அரசு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

Wednesday, 10 March 2010

பான் கீ மூன் - திருப்பமா? திருகுதாளமா?


சென்ற ஆண்டின் முற்பகுதியில் இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கும் போது அங்கு சென்று பேச்சு வார்த்தை நடாத்தும் படி பலர் ஐக்கிய நாடுகளின் செயலர் பான் கீ மூனைக் கேட்டிருந்தனர். அதை கவனத்தில் எடுக்காத பான் கீ மூன் பல கண்டனங்கள் ஊடகங்களால் தெரிவிக்கப் பட்டதை அடுத்து விஜய் நம்பியார் என்ற தமிழ் மக்களின் வில்லனை இலங்கைக்கு அனுப்பினார். அவர் அங்கு சென்று பின் இந்தியா சென்றார். அதன் பின்னர் ஐநா வந்த அவர் தனது அறிக்கையைப் பாதுகாப்புச் சபைக்கு சமர்ப்பிக்காமல் காலத்தை இழுத்தடித்தார். அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பிரித்தானியா முற்பட்ட போது அவர் தமது அறிக்கையை ஐநா அதிபரிடம் சமர்ப்பித்தார். அந்த அறிக்கை பற்றி மூடப்பட்ட அறைக்குள் கலந்துரையாடப் பட்டது. இந்த இழுத்தடிப்புக்கள் யாவும் இலங்கைக்கு போரை முடிக்க
வழங்கப்பட்ட அவகாசமாகும். போர் முடிந்த பின் இலங்கைக்கு சென்ற பான் கீ மூன் இலங்கைக் குடியரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில் உறுதியளிக்கப் பட்டவையை இலங்கை குடியரசுத் தலைவர் ஏன் நிறைவேற்றவில்லை என்ற கேள்வி ஐக்கிய நாடுகளின் செயலர் பான் கீ முனிடம் அதன் பின் பல தடவை எழுப்பப்பட்டு வருகிறது.
அந்த கூட்டறிக்கையின் படி இலங்கை அரசு:
  • போரினால் பாதிக்கப் பட்டவர்களை மீள் குடியேற்றுதல்.
  • சர்வ தேச நியமங்களுக்கு அமைய இலங்கையில் மனித உரிமைகளை மதித்து நடத்தல்.
  • இலங்கை வாழ் சகல சமூகங்களின் அபிலாசைகள் பிரச்சனைகளை அறிந்து அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுத்தல்.
  • இலங்கையின் நீண்டகால சமூக பொருளாதார வளர்ச்சிக்காக இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணுதல்.
  • இலங்கைக் குடியரசின் அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தை நிறைவேற்றுதல். இதற்காக தமிழ் மக்களுடன் பரந்த அளவில் பேச்சு வார்த்தை நடாத்துதல்.
இலங்கைக் குடியரசுத் தலைவரும் ஐக்கிய நாடுகளின் செயலரும்வெளிவிட்ட கூட்டறிக்கையில் எதுவும் இது வரை நிறை வேற்றப் படவில்லை. அவை நிறைவேற்றப் படாதவிடத்து பான் கீ மூன் என்ன செய்வார் என்ற கேள்வி எழுவது இயற்கை. அதற்கான பதிலாகவே பான் கீ மூன் அவர்கள் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் போர்குற்றம் தொடர்பாகவும் தமக்கு ஆலோசனை வழங்க ஒரு விற்பன்னர்கள் சபையை அமைத்துள்ளார். இது இலங்கையை ஆத்திரமடைய வைத்துள்ளது.

இந்திய பான் கீ மூன் கூட்டுச் சதியும் நிருபாமாவின் பாய்ச்சலும்
பான் கீ மூனின் ஆலோசகர் விஜய் நம்பியாரின் சகோதரர் இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப் பட்ட படைத்துறை ஆலோசகர். பான் கீ மூனின் மருமகனும் சித்தார்த் சட்டர்ஜி என்னும் ஒரு இந்தியர். இவரும் இலங்கை வந்து கொலை கொள்ளை கற்பழிப்புகளில் ஈடுபட்ட அரசியல் அறிவிலி ராஜிவ் காந்தியின் அமைதிப் படையில் இடம் பெற்றவர். இவற்றைக் கூட்டிப் பார்க்கும் போது இந்தியாவின் சதி பற்றிய சந்தேகம் இயல்பாகவே எழுகிறது. அதுமட்டுமா பாக்கிஸ்த்தானுடன் ஒரு தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் நிருபாமா ராவ் அவர்கள் ஐநா செயலர் விற்பன்னர்கள் சபையை அமைத்தவுடன் இலங்கைக்கு ஒரு திடீர்ப் பாய்ச்சலை மேற் கொண்டது இதற்குத்தானா? இந்த விற்பனனர்களின் விசாரணையில் இந்தியா புரிந்த போர்க் குற்றம் இந்தியச் சதி இந்தியத் தொடர்பு என்பன வெளிப்படும் என்ற பயமா? அதைத் தவிர்க்கவே நிருபாமா இலங்கைக்கு சென்றாரா? மேற்குலகை ஆத்திரப் படுத்திய பொன்சேக்காவிவகாரத்தில் இந்தியத் தலையீட்டால் தான் பொன்சேக்காவை இராணுவ நீதிமன்றில் விசாரிக்காமல் சாதாரண நீதி மன்றில் விசாரிக்கும் முடிவை இலங்கை எடுத்ததா?

பான் கீ மூனின் பதவி நீடிப்பு
பான் கீ மூனைப் பற்றி கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கத்திய சக்திவாய்ந்த ஊடகங்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அவரை ஒரு மிக உயர் ஆபத்தான கொரிய நாட்டவர் (Most dangerous Korean)என்ற தலைப்பிட்டுக் கூட ஒரு Foreign Policy என்னும் அமெரிக்க ஊடகம் கட்டுரை வெளியிட்டது. இவையாவும் பான் கீமூன் இலங்கையின் போர்குற்றம் தொடர்பாக பான் கீமூனின் மௌனம், இலங்கையில்ன் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பான் கீ மூன் செயற்படாமை, இலங்கையில் போர் முனையில் அகப்பட்ட பொது மக்களைப் பாதுகாக்கத் தவறியவை போன்றவற்றை குற்றச் சாட்டாக முன்வைக்கின்றன. இந்நிலையில் பான்கீ மூன் அவர்களது பதவிக்காலம் இரண்டாவது முறையாகத் தொடருமா என்ற கேள்வி எழுகிறது. இரண்டாவது முறையும் தனது பதவிக் காலத்தை நீடிக்கவே பான் கீமூன் விற்பன்னர்கள் சபையை அமைத்தாரா?

பான் கீ மூனைப் பதவியில் அமர்த்திய இலங்கை
பான் கீ மூன் அவர்கள் ஐநா செயலர் பதவிக்குப் போட்டியிட்ட போது இலங்கையும் ஒருவரைப் போட்டிக்கு நிறுத்தியிருந்தது. பின்னர் பான் கீ மூனின் வெற்றியை உறுதி செய்யதனது வேட்பாளரை போட்டியில் இருந்து இலங்கை விலக்கியது. அது மட்டுமல்ல இலங்கையில் போர் நடந்த வேளை பான் கீமூன் அவர்களை இலங்கை "நன்கு கவனித்து" கொண்டதாகவும் பேசப்படுகிறது. பான் கீ மூன் விற்பன்னர்கள் சபையை அமைத்ததும் இலங்கை சீற்றம் கொண்டது இதற்குத்தானா? தம்மை எதுவும் செய்ய முடியாது என்று இலங்கை மார் தட்டுவது ஏன்? பான் கீ மூன் விற்பன்னர்கள் சபையை அமைத்ததால் ஒரு கால இழுத்தடிப்பைச் செய்யலாம். அது இலங்கைக்கும் வசதியாக அமையும். அது மட்டுமல்ல இது பற்றி அடிக்கடி கதைக்கும் நவநீதம் பிள்ளை அவர்களின் வாயையும் அடக்கலாம்.

Thursday, 21 January 2010

நாலு சிங்களவர் செத்ததிற்கு ஒப்பாரி வைக்கும் பான் கீ மூன்


ஒரு நாளில் 25,000 பேரை கொன்ற இலங்கையில் நாலு சிங்களவர்கள் தேர்தல் வன்முறையால் இறந்துள்ளனர். இதற்காக ஒப்பாரி வைக்கும் கூட்டத்தில் ஐக்கிய நாடுகளின் செயலரும் உலகின் மிக ஆபத்தான கொரிய நாட்டவர் என்று வர்ணிக்கப் பட்டவருமான பான் கீ மூன் அவர்களும் இணைந்துள்ளார்.

இலங்கைத் தேர்தலில் நடக்கும் வன்முறை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் செயலர் பான் கீ மூன் அவர் தனது கரிசனையை வெளியிட்டுள்ளார்.

“The peaceful conduct of the first post-conflict national election is of the highest importance for long term peace and reconciliation in Sri Lanka,” the Secretary-General Ban ki Moon stressed. முரண்பாடுகளுக்கு பின்னரான முதல் தேர்தல் அமைதியாக நடைபெறுவது நீண்டகால அமைதிக்கும் இணக்கப் பாட்டிற்கும் மிக முக்கியமாகும் என்கிறார் அந்த மோசமான சொறியர் மன்னிக்கவும் கொரியர்.

ஐயா பான் கீ மூன் அவர்களே அது என்ன "முரண்பாட்டிற்கு பின்னரான" முதற் தேர்தல்? முரண்பாடு முடிந்துவிட்டது என்று யார் சொன்னது? முதலில் இலங்கையில் முரண்பாடு என்பது என்ன அது எப்படித் தொடங்கியது என்று உமக்குத் தெரியுமா பான் கீ மூன் அவர்களே. ஆயுத மோதல்கூட முடிவிற்கு வந்ததாக் நாம் நம்பவில்லை. இருவர்களிற்கிடையில் முரண்பாடு அதனால் அவர்கள் மோதிக் கொண்டனர்.

நீரும் உமது சர்வ தேச சமூகமும் ஒரு பக்கச் சார்பாகச் செயற்பட்டு ஒருவரை விழுத்தி விட்டீர்கள்.

ஒருவன் விழுந்தவுடன் முரண்பாடு முடிந்து விடுமா பான் கீ மூன் ஐயா?

அவன் விழுந்தது இது முதற் தடவை அல்ல. விழுந்தவன் சாதாரணமானவன் அல்ல. அவன் விழ விழ எழுபவன்.

நீங்கள் சொல்வது போல் "post-conflict national election" இலங்கை பிளவு பட்டபின்தான் ஏற்படும்.

Tuesday, 19 January 2010

ஹெய்டியிலும் ஐநாவின் கபடம் அம்பலம்.




ஐக்கிய நாடுகள் சபை இலங்கைப் போரில் நடந்து கொண்டது போலவே ஹெய்டியிலும் மோசமாக நடந்து கொள்வது மேலுள்ள இரு படங்களிலும் தெரிய வந்துள்ளது.ஹெய்டியில் ஐநா ஊழியர்கள் இறந்தபின் மிகுந்த மரியாதை செலுத்தப் பட்டது. ஆனால் சாதாரண ஹெய்டி வாசிகளின் உடலங்களை ஐநா குப்பை போல் வீசுகிறது.

இலங்கையில் தமிழ் ஐநா ஊழியர்களை இலங்கை அரசு கைது செய்து மோசமாக நடத்தியபோது ஐநா பாராமுகமாக இருந்தது.

ஐக்கிய நாடுகள் சபையினதும் மற்றும் அரசு சார்பற்ற அமைப்புக்களினதும் ஊழியர்கள் பலரை இலங்கை அரசு தனது வதை முகாம்களில் தடுத்து வைத்திருப்பது சென்ற ஆண்டு அம்பலமாகியது. ஐநா இவர்களை விடுவிக்கும் படி பலமுறை இலங்கை அரசைக் கோரியும் இலங்கை அரசு இவர்களை விடுவிக்க மறுத்துள்ளதை ஐநா மறைத்து வைத்திருந்ததை Inner City Press அம்பலப் படுத்தியுள்ளது. இதை அடுத்து ஐநா இரட்டை வேடம் பூணுகிறதா என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

Inner City Press e-mailed the spokespeople for The Office for the Coordination of Humanitarian Affairs (OCHA) and UNICEF, repeating the question. OCHA spokeswoman Stephanie Bunker replied first:

Subj: Re: Q if there are UN system staff / family in Sri Lankan government's "IDP" camps, and if so...
From: [OCHA at] un.org
To: Inner City PressSent: 4/13/2009 3:17:39 P.M. Eastern Daylight Time

Among those tens of thousands of people who have managed to flee the No Fire Zone in northern Sri Lanka, we are aware that some UN and NGO staff and their dependents have managed to flee as well. As far as we know, they are still in the camps for displaced people set up in the area, and we have repeatedly asked the Government of Sri Lanka to allow them freedom of movement so that they can eventually resume their role as aid workers. While the Government has repeatedly assured us that this request would be met, the staff still remain in the camps.

Inner City Press' sources in Sri Lanka say that OCHA chief John Holmes was informed of these people while he was in Sri Lanka, that local staff dissatisfaction with his public silence about it has been growing.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...