Wednesday, 14 December 2011

இலண்டன் காதல் பரதநாட்டியம் போல்

அம்மன் கோவில் தேர்த் திருவிழாவில்
கள்ளத்தனமாக கண்களின் சந்திப்பில்
அல்லாரிப்பாய் மலர்ந்தது
எம் இருவர் காதல்

நிலக்கீழ் தொடரூந்து நிலையத்தில்
உந்தன் உதட்டோரப் புன்னகையில்
திஸ்ரத்தில் தித்திக்கும் ஜதீஸ்வரமானது
எம் இருவர் காதல்

தேம்ஸ் நதிக் கரையில் வில்லோ மர நிழலில்
கை கோர்த்து காம்போதியில் பாட்டு நீயாக
பாவங்கள் நானாக சப்தமானது
எம் இருவர் காதல்

மின்னும் வர்ண விளக்கொளியில்
 Piccaddily Circurs நடன சாலையில்
ராக மாலிகையில்  வர்ணமாய் ஆடியது
எம் இருவர் காதல்

இந்தோளத்தில் அபிநயங்கள் பலவாக
ரூபகத்தில் உணர்வுகள் தாளம் போட
இணைந்தோம் என் தனியறையில்
இனிய பதமாக  நல்ல சுகமாக

தினமும் பேசி கைப்பேசியும் சூடாகி
தித்திக்கும் உதட்டில் பல்லவித்து
அனுபல்லவித்து சரணம் நானென
தில்லான  ஆடியது நம் காதல்

எல்லாம் நடந்தும் எதுவும் நடவாதது போல்
மணவறையில்  அரங்கேறாமல்
சுருட்டி நீ மங்களம் பாடி
பிரிந்தது பெரும் கொடுமை

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...