Saturday, 18 July 2009
சோனியாவின் காங்கிரஸ் இந்தியாவை எங்கு இட்டுச் செல்கிறது?
இந்த உலகத்தில் பிரகாசமான எதிர்காலம் உள்ள நாடுகள் என்று குறிப்பிட வேண்டியவை ஆசியாவின் கிழக்கிலும் மேற்கிலும் உள்ள நாடுகள் ஆகும். ஆனால் இங்குள்ள துர்ப்பாக்கிய நிலை இந்த நாடுகளுக்கு நல்ல தலைமை இல்லை. இந்தியாவிற்கு நல்ல எதிர்காலம் உண்டு என்று பலரும் கூறுகின்றனர்.
பல கோடி மக்கள், வளரும் கல்வியறிவு, பரவலான ஆங்கிலக் கல்வி, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி இவையாவும் இருக்கின்ற நாடு வளர்ச்சியடையும் வாய்ப்புண்டு. அதை சரியான வளர்ச்சிப்பாதையில் இட்டுச் செல்லத் தலைமை உண்டா?
இந்திரா காந்தியின் தலைமையில் ஈழப் பிரச்சனையை கையாளும் போது "இலங்கை எனது ஏரியா, உள்ளே வராதே" என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்தியிருந்தார். இலங்கையில் 1983இல் நடந்த இனக் கலவரம் கட்டுக்கடங்காமல் போன போது இலங்கை அரசு பிரித்தானியாவிடம் படை உதவி கேட்டது. பிரித்தானியா இந்தியாவைக் கேட்கவும் என்று சொல்லி மறுத்துவிட்டது. பின்னர் இலங்கை அரசு பாக்கிஸ்த்தானை அணுகியது பாக்கிஸ்த்தான் கூட தான் இந்தியாவுடன் முரண்பட விரும்பவில்லை என்று மறுத்துவிட்டது.
1984இல் அமெரிக்கவின் உளவாளிகளை ஒரு தமிழ் ஆயுதக் குழு கடத்தியபோது அமெரிக்க விமானம் ஒன்று இலங்கை வந்து கட்டுநாயக்கா விமானத் தளத்தில் இறங்கியது. அந்தவிமானம் எந்த ஒரு பறப்பையும் மேற் கொள்ளக் கூடாது என்று இந்திரா காந்தி இலங்கைகு உத்தரவிட்டார். இலங்கையும் பணிந்தது.
இன்று நிலமை மாறிவிட்டது. இந்தியா இலங்கைக்கு கொடுத்த கதுவிகள்(ராடர்கள்) விடுதலைப் புலிகளின் விமானங்களைப் படம் பிடிக்கவில்லை என்று பொய்கூறி இந்தியாவிற்கு எதிரான நாட்டின் கதுவிகளையும் அதை இயக்குபவர்களையும் இலங்கைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அவர்களால் இந்தியாவையும் உளவு பார்க்க முடியும்.
இந்தியாவின் கிழக்குப் பிராந்தியத்தின் பெரும் பகுதிகள் இப்போது நக்சலைட்டுகளின் ஆபத்திற்கு உட்பட்டுள்ளது. இதன் காரணம் என்ன? கிழக்கில் இருக்கும் நாடுகள் எவை? இப்போதுள்ள இந்தியத்தலைமை அதைப் பற்றிச் சிந்திக்கவில்லையா? அது தமது வாரிசுகளை எப்படி அடுத்த தலைமையாக்குவது என்பதை மட்டும் சிந்திக்கிறதா? இதைப்பற்றி இந்தியாவின் முன்னாள் படை அதிகாரி ஆர். கரிகாலன் சொல்லுவது இது:
How much of a worry is it for India that China is investing in these ports(around India in tha name of "string of pearl")?
While India should not 'worry' on each specific Chinese action, it should be concerned about any factor potentially destabilising to its strategic security, introduced in its area of influence. And Hambantota in Sri Lanka is one such case. Unfortunately, our political decision making process on strategic issues is often influenced more by concerns other than national strategic security. India can develop Trincomalee on eastern coast of Sri Lanka as major commercial pub for Indian Ocean traffic. This would balance Chinese influence. But we seem to be lethargic in acting on such issues and we will pay the price when the time comes.
இந்தியத் தலைமையின் தீர்மானம் எடுக்கும் முறைமை தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல் வேறு விடயங்களை கருத்தில் கொள்கிறதாம். அது என்ன வேறுவிடயங்கள்? குடும்ப நலன், கட்சி நலன், அதிகாரிகளின் ஊழல், முக்கிய அதிகாரிகள் தமது சாதி நலன்களைப் பேணுதல்....இவற்றைத்தவிர வேறு உண்டா? இதன் விளைவு சினா முத்து மாலைத்திட்டம் என்ற பெயரில் இந்தியாவிற்கு சுருக்குக் கயிறு போடுகிறது. நக்சலைட்டுகள் பெருகுகிறார்கள்.
Friday, 17 July 2009
இலங்கை: இந்தியாவின் கையாலாகத் தனத்தை மறைமுகமாக வெளிப்படுத்தினார் முன்னாள் செயலர் சுவாமிநாதன்
இந்தியா இலங்கைமீது ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பாக எந்தவித நிர்ப்பந்தங்களும் கொடுக்க முடியாத கையாலாகாத பரிதாப நிலையில் இருக்கிறது என்பதை இந்திய அரசின் முன்னாள் செயலர் ஆர். சுவாமிநாதன் அவர்கள் மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார். ஸ்ரெல்லா மேரிஸ் கல்லூரியில் நடந்த ஜூலை 7-ம் திகதி நடந்த மாநாட்டில் அதை இவர் இந்தியா நிலை தொடர்பாக அவர் தெரிவித்தது:
I will be very brief in stating my views about India’s role in the present situation (in Srilanka). Politically, India can only be persuasive – not too obtrusively, but persistent in working towards the Tamils being treated as equal citizens the same as the Sinhalas, Muslims etc. On the economic front, India could be as cooperative and helpful as possible. In matters relating to relief and rehabilitation, India could easily display much more activism and involvement.
(These points were made by R.Swaminathan, former Special Secretary (DG-Security), Government of India, to form the basis of his “Chairperson’s Remarks” at a seminar jointly organized by Observer Research Foundation - Chennai Chapter and Stella Maris College, on 7 July 2009.)
இந்தியாவுடன் ஒப்பிடுகையில் இலங்கை சர்வதேச ரீதியில் எவ்வளவு பலமாக இருக்கிறது என்பதை இது காட்டுகிறது.இப்போது இந்தியாவின் நிலையைப் பற்றி சுவாமிநாதன் கூறியதுடன் இந்திய அரசின் முன்னாள் மேலதிக செயலர் பி. ராமன் அவர்கள் கூறியதை ஒப்பிட்டுப் பார்ப்போம்:
In many articles in the past, I had expressed my fears that once the Srilakan security forces win against the LTTE, the SL Government would try to impose a dictated peace on the Tamils. Those fears remain. All the more reason for India to play the leadership role to ensure that these fears are belied. These fears, even if valid, should not be allowed to inhibit our initiatives in Sri Lanka.
தமிழர்கள்மீது ஒரு சமாதனத்தை சிங்களம் திணிக்காமல் இருக்க இந்தியா ஒரு தலைமைத்துவ நிலையில் நின்று செயற்பட வேண்டும். ஆனால் சுவாமிநாதனின் கூற்றுப்படி இந்தியா தலைமைத்துவ நிலையில் இருந்து செயற்படமுடியாது உள்ளது.
இந்நிலையில் தமிழர்களின் பிரச்சனைக்கு யார் தீர்வு கொடுப்பார்கள்? இதற்குரிய பதிலை கலைஞர் கருணாநிதி அவர்கள் கூறிவிட்டார்கள்: ராஜபக்சே கொடுப்பதை வாங்கிக் கொள்ளுங்கள்.
தமிழர் அவலம்: சர்வதேச சமூகத்திற்கு கடைசி சந்தர்ப்பம்
சர்வ தேச சமூகம் என்று ஒன்று இருப்பதாக சொல்கிறார்கள். அவர்கள் இலங்கைத்தமிழர்களின் அவலத்திற்கு காரணமாக இருந்தார்கள். ஆரிய-சிங்களக் கூட்டமைப்பு தமிழர்களைக் கொன்றொழிப்பதற்கு பயங்கரவாத ஒழிப்பு என்ற போர்வையில் ஆதரவளித்தார்கள்.
சிறீலங்கா காவல்துறையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரவதாக, ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.கண்டியில் மனித உரிமை அமைப்பொன்றை நடத்திவரும் அருட்தந்தை நந்தன மனதுங்கவை ஆதாரம்காட்டி இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சிறீலங்கா காவல்துறையினர் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்ற போதிலும், பாதிக்கப்பட்டவர்கள் அச்சம் காரணமாக உண்மையை வெளிப்படுத்த தயங்கி வருகின்றனர்.
சிறீலங்கா காவல்துறையினர் பாலியல் துன்புறுத்தல்கள், அடக்குமுறைகள், அத்துமீறல்கள் என்பவற்றில் ஈடுபட்டு வருவதாகவும், ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு கூறுகின்றது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவுபெற்ற போரில் ஒரு இலட்சம் விரையிலான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும், அருட்தந்தை நந்தன மனதுங்க கூறியிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அடிக்கடி இவ்வாறான அறிக்கைகளை வெளியிட்டு வருகின்ற போதிலும், சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் ஆக்கபூர்வ நடவடிக்கை எதனையும் மேற்கொள்வதில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அருட்தந்தை நந்தன மனதுங்க ஒரு சிங்களவர் அவர் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இதையெல்லாம் இந்த சர்வ தேச சமூகம் ஏன் வேடிக்கை பார்க்கிறது?
சர்வதேச நாணய நிதியத்தின் 1.9 பில்லியன் கடனுதவி
சர்வதே நாணய நிதியத்தின் கடன் என்பது பொருளாதர வளர்ச்சியடைந்த நாடுகள் தமது பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கு ஏதுவான சூழல் வளர்ச்சியடையாத நாடுகளில் ஏற்படுத்த கொடுக்கும் கடனுதவியாகும். சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை அரசு தனது இன அழிப்புப் போரில் காலி செய்த அந்நியச் செலவாணியை ஈடு செய்வதற்கு தனக்கு 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாகத் தரும்படி கேட்டிருந்தது. இந்தக் கடன் கொடுக்கக் கூடாது என தமிழர் தரப்பிலிருந்து பல வேண்டுகோள்கள் விடுக்கப் பட்டிருந்தது. இந்தக் கடனை உலகெங்கும் வாழ் தமிழ் இன உணர்வாளர்கள் சர்வதேச சமூகம் தனது இலங்கை தொடர்பான நியாபூர்வ நிலைப் பாட்டை தெளிவு படுத்த கிடைத்துள்ள கடைசி சந்தர்ப்பம் என்றே கருதுகின்றனர்.
பிரித்தானியாவின் நிலைப்பாடு.
பிரித்தானிய ஊடகங்கள் தொடர்ந்து இலங்கை அரசின் அசிங்கங்களை அம்பல்ப் படுத்திவந்ததின் விளைவாகவும் பிரித்தானியாவில் வாழ் தமிழர்களின் தொடர் போராட்டங்களின் விளைவாகவும் பிரித்தானிய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் 1.9 பில்லியன் கடனுதவி வழங்குவதற்கு ஏதுவான சூழ் நிலை இலங்கையில் இல்லை என்று தெளிவுபடுத்தி விட்டது. அந்த நிலைப்பாட்டில் இருந்து மாறுமா? என்ற கேள்வியும் உள்ளது.
ஐக்கிய அமெரிக்காவின் நிலைப்பாடு.
அமெரிக்கா சர்வதேச நாணய நிதியத்தின் 1.9 பில்லியன் கடனுதவி தொடர்பாக ஒரு நழுவல் நிலைப்பாட்டிலேயே இருந்தது. ஆனால் கடந்த 13ம் திகதி நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அட்டூழியங்கள் தொடர்பாக வெளிவந்த முன் பக்க செய்தியும் அதே பத்திரிகையில் மறுநாள் வெளிவந்த ஆசிரியத் தலையங்கமும் அமெரிக்க நிலைப்பாடு இலங்கைக்கு எதிராகத் திரும்பும் சாத்தியத்தை உருவாக்கியது. இப்போது அமெரிக்க காங்கிரஸ் அமெரிக்க அரசின் சார்பில் அதன் செயலர் ஹிலரி கிளிங்டன் அவர்கள் வன்னி முகாம்களில் தமிழர்கள் சர்வதேச நியமங்களுக்கு அமைய நடாத்தப் படுகிறார்கள் என்ற உறுதி மொழி வழங்கினால் மட்டுமே அமெரிக்க திறைசேரி இலங்கைக்கு சர்வதேச நாணயம் இலங்கைக்கு வழங்கும் கடனுக்கு அனுமதி வழங்க முடியும் என்ற சட்டத்தை நிறைவேற்றவுள்ளது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால் இலங்கைக்கு கடனுதவி கிடைக்காது. இலங்கை அரசு சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தை இலங்கையில் இருந்து வெளியேற்றியதும் இலங்கைக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தாது.
இந்தியாவும் சீனவும் போட்டி போட்டுக் கொண்டு இலங்கைக்கு பணத்தை இறைக்கும்.
சர்வதேச நாணய நிதியத்தின் 1.9 பில்லியன் கடனுதவி இலங்கைக்கு கிடைக்காவிட்டால் பெரிய பாதிப்பு ஒன்றும் இலங்கைக்கு ஏற்படாது. இந்தியாவும் சீனவும் போட்டி போட்டுக் கொண்டு இலங்கைக்கு பணத்தை இறைத்து உதவும். இந்தியப் பொதுத் தேர்தலுக்கு முன்னரே இந்தியா 500 கோடிரூபாவிற்கு மேல் கடனாக வழங்குவதாக இந்தியா உறுதிமொழி வழங்கி விட்டதாம்.
கனிமொழியின் இலங்கைப் பயணம்.
இந்தியாவின் கடன் வழங்கலிற்கு முன்னோடியாகவே இலங்கைக்கு முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் பயணம் அமையவிருக்கிறது. கனிமொழி இலங்கை வந்து வன்னியில் தமிழர்கள் அடைத்து வைத்திருக்கப் பட்டிருக்கும் முகாம்களைப் பார்த்துவிட்டு அவற்றிலுள்ள குறைபாடுகளி அவர் அறிக்கையாக வெளியிடுவார். அதை நிவர்த்தி செய்கிறேன் பேர்வழி என்ற போர்வையில் இந்தியா பல கோடி பணத்தை இலங்கைக்கு வழங்கும். இலங்கை அரசு அப்பணத்தை என்ன செய்யும் என்பதை நாம் அறிவோம்.
Thursday, 16 July 2009
அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது அதனால் வேலையை விட்டுத் தூக்கி விட்டோம்!
இந்தப் பெண் அழகாகவும் கவர்ச்சிகரமாகவு இருந்தபடியால் வேலையில் இருந்து நீக்கிவிட்டார்கள். இவரது பெயர் அமிற்ஜோ கஜ்லா வயது 22. இவர் தனது வேலையில் தான் கண்காணிக்க வேண்டியவர்களுடன் நட்பாகப் பழகுவார். அதற்காக அவரை வேலையில் இருந்து நீக்கிவிட்டார்கள். இவர் வேலை செய்த இடம் இளம் குற்றவாளிகளுக்கான சிறைச்சாலை!!! பிரித்தானியாவில் வோல்வஹம்ரன் என்னும் இடத்தில் உள்ள சிறைச் சாலையில் இவர் வேலை பார்த்தார்.
அமிற்ஜோ சிறையில் இருப்போரின் பார்வையாளர்களைச் சந்திக்கும் நேரத்தில் தான் அவர்களோடு இருந்து நட்பாகப் பழகுவாராம். அது தப்பு என்று வேலையிலிருந்து நீக்கிவிட்டார்கள். ஒருகைதி Miss, you look sexy என்று வேறு கூறிவிட்டாராம். தான் கைதிகளுடன் நட்பாகப் பழகுவேன் ஆனால் அவர்களின் நண்பி அல்ல என்கிறார் இவர்.
You left nothing but finger prints
I used to walk in the evenings all alone
Along Embankment and Vauxhall Bridge
You came like an unexpected gift
To hold my hands and to give company
I used to watch alone plays and shows
In the theatres of London’s West End
You came out of nowhere to share
To put your head on my shoulder
I used to dance on my own like a loser
In the ballrooms under flashing lights
You came like an angel to join me
And to put your arms around my hips
I used to sleep in my apartment
You came to make my days into night
And to make my nights into days
We had fun and we had joy
You came like a shadow
When the sun was burning
You came like a fire
When I was shivering in cold
Why did you leave me for no reason?
Why did you change you mind?
Like you change your hair style
You left nothing but finger prints.
தமிழர் அவலம்: தமிழ்நட்டில் ஏற்பட்டது உணர்வலைகள் மட்டுமே அதிர்வலைகள் அல்ல!
1983 ஜூலை மாதத்தில் யாழ்ப்பாணத்தில் பதின்மூன்று சிங்கள இராணுவத்தினர் கொல்லப் பட்டபோது, இலங்கை முழுவதிலும் உள்ள சிங்களவர்கள் கொதித்து எழுந்தனர். அரச படகளுடன் இணந்து தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டனர்.
ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் இடையில் தொப்புள் கொடி உறவு உண்டு.
பகுளி ஆறு இயற்க்கை அனர்தத்தால் பாக்கு நீரிணையாகி தமிழர்களைப் பிரித்தது. சில பார்ப்பன இலங்கை தமிழர்கள் தமிழர்கள் அல்ல மலையாளிகள் என்று சித்தரிக்க முற்பட்டன. ஆனால் தமிழ் இன உணர்வாளர்கள் பின்வரும் வாதத்தால் இதை மறுத்தனர். ஈழத்தில் தமிழர்கள் தொன்று தொட்டு வாழ்கிறார்கள். அவர்கள் 2000 ஆண்டுகளுக்கு மேல் ஈழத்தில் வாழ்ந்ததிற்கு ஆதாரங்கள் பல உண்டு. மலையாளிகள் என்ற இனக் குழுமம் 500 அல்லது 1000 ஆயிரம் ஆண்டுகளுக்குள் உருவானது. ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் உள்ள பிரதான வேறுபாடு மாமன் மருமகளைத் திருமணம் செய்தல். இந்த மாமன் மருமகளைத் திருமணம் செய்யும் முறை இடையில் தோன்றிய ஒன்று. தமிழ்நாட்டில் வாழும் தமிழரல்லாத தமிழ் பேசும் ஆரியர்களும் இதைப் பின்பற்றுகின்றனர். மற்ற ஒரு வேறுபாடு பார்ப்பனர்கள் ஈழத்தமிழ் சமுதாய அமைப்பில் ஆதிக்கம் செலுத்துவது இல்லை. ஈழத்தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் இடையில் உள்ள இரத்தத் தொடர்பு யாராலும் மறுக்கப் முடியாதது - அசைக்கவும் முடியாதது.
தந்தை செல்வநாயகம் 1970களில் தமிழ்த்தேசியப் போராட்டத்தை தீவிரப் படுத்தும் போது எமக்கு 35மைல் தொலைவில் மூன்றரைக் கோடி தமிழர்கள் எமக்குத் தோள் கொடுக்க இருக்கின்றார்கள் என்றுரைத்தார். அந்த மூன்றரைக் கோடி இருமடங்காகி விட்டது ஆனாலும் தமிழ்த்தேசிய போராட்டம் மழுங்கடிக்கப் பட்டது ஏன்?
தமிழகத் தமிழர்கள் ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தனர். கொட்டும் மழையில் கை கோத்து நின்றனர். சிலர் தீக் குளித்தனர். இவையாவும் ஈழத் தமிழர்கள் மோசமாகப் பாதிக்கப் பட்ட போது ஏற்பட்ட உணர்வலை மட்டுமே! இது அதிர்வலை அல்ல. அதிர்வு ஏற்பட்டிருந்தால் 10,000 ஆரியப் பிணந்தின்னி பேய்கள் சிங்களவரோடு தோளோடு தோளாக நின்று போரிட்டிருக்க முடியாது.
ஈழத் தமிழர்கள் மிக மோசமாகப் பாதிக்கப் பட்ட அதிர்வலை தமிழ்நாட்டில் பரவி இருந்தால் பல தரப்பினரும் வன்னிமுகாம்களில் தமிழர்கள் படு கேவலமாக நடாத்தப் படுகின்றனர் என்று சொல்லும் போது ஒரு பார்ப்பன நாய் மட்டும் தமிழர்கள் நன்கு நடாத்தப் படுகிறார்கள் என்று பொய் கூறிவிட்டு தமிழ் நாட்டில் நடமாட முடியாது.
Wednesday, 15 July 2009
வன்னி முகாம்களில் மாபெரும் இரத்தக் களரி ஏற்படும்!
"இடைத்தங்கல்" முகாம்களை சிறைக்கூடங்கள் போல் பராமரித்தமையே இங்கு வாழும் மக்களின் பெருமளவானோர் மனநோயினால் பீடிக்கப்பட பிரதான காரணமாகும். இவ்வாறு பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் என்று ஜே. பி. வி.யின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். இனவாதிகளான ஜே. பி. வி யினரே இப்படிக் கூறுகின்றனர்.
வன்னி முகாம்களின் உள்ள தழர்கள் தொடர்ச்சியான மானபங்கப் படுத்தலுக்கும் நிரந்தர மன வேதனைக்கும் உட்படுத்தப் படுகிறார்கள். சகல ஊடகங்களும் (ஒரு பார்ப்பன நாயைத்தவிர) இம்முகாம்களின் மோசமான நிலைய பகிரங்கப் படுத்தி வருகின்றன. சில சிங்கள இனவாதிகளே முகாம்களின் மோசமாக தமிழர்கள் நடாத்தப் படுவதாக கூறத் தொடங்கி விட்டனர். இவர்களைத் துரிக கதியில் மீள் குடியேற்றப் படவேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது. இந்தியாவால் இலங்கை மீது எந்த வித அழுத்தங்களும் பிரயோகிக்க முடியாது. இதையே சிவ சங்கர மேனன் மீசையில் மண்படாத பாணியில் தாம் இலங்கை மீது எந்த அழுத்தங்களையும் பிரயோகிக்கப் போவதில்லை என்று கூறி விட்டார்.
தொடரும் 180 நாட்கள் கணக்கு
இலங்கை அதிபர் இன்னும் 180 நாட்களில் இவர்கள் மீள் குடியேற்றப் படுவார்கள் என்று தொடர்ந்து கூறி வருகிறார். தொடர்ந்தும் அவர் இந்த 180 நாள்கள் கணக்கையே சொல்லிக் கொண்டிருப்பார்.மீள் குடியேற்றதிற்கான எந்த முயற்ச்சிகளும் அரசு எடுத்ததாகத் தெரியவில்லை. இதைச் சில ஊடகங்களும் சுட்டிக் காட்டியுள்ளன. இதை மறுதலிப்பதற்காக அண்மையில் முகாமில் இருப்போருக்கு கடன் வழங்கும் திட்டம் அறிவிக்கப் பட்டது.
சர்வதேச சமூகம் மெல்ல மறக்கும்.
ஈரானில் நடந்த தேர்தலை ஒட்டி இடம் பெற்ற வன்முறைகளும் மைக்கேல் ஜக்சனின் மரணமும் இலங்கைச் செய்திகளை ஒரு புறம் தள்ளி விட்டன. வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்து களைத்து விட்டனர். மேற்கு நாடுகள் அவர்களை விட்டுப் பிடிக்கும் தந்திரத்தில் வெற்றி அடைந்து விட்டனரா? தேர்தலுக்கு முன் ஈழம் பெற்றுத்தருவோம் என்று சொன்ன தமிழ் நாட்டுத் தலைவர்கள் இப்போது அடங்கிப் போங்கடா என்கின்றனர்.
முகாம்களில் இருக்கும் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு.
முகாம்களில் இருக்கும் மக்களின் மனக் கொதிப்பை அண்மயில் அங்கு சென்ற இலங்கை அதிபரின் மகனுக்கு செய்த சேறு அபிசேக மூலமாக அறிந்து கொள்ளலாம். இந்தக் கொதிப்பு இனி வரும் காலங்களில் இன்னும் பன் மடங்காகும்.
அதன் வெளிப்பாடாக அங்குள்ள தமிழர்கள் வன்முறையில் ஈடுபடலாம். வெற்றிக்களிப்பின் உச்சக் கட்டத்தில் நிற்கும் சிங்கள் இராணுவம் தனது மிக மோசமான வன் முறையை தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடும். விளைவு பெரும் இரத்தக் களரியாக இருக்கும்.
Tuesday, 14 July 2009
அடுத்த பொய் - பிரபாகரன் மகன் நிலத்தில் அடித்துக் கொலை!
இலங்கை அரசாங்கத்தின் அடிவருடிகளின் ஊடகங்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. இப்போது புதிதாக ஒரு கதையக் கட்டிவிடுகிறார்கள். பிரபாகரனின் மகனான 14 வயது பாலச்சந்திரனை நிலத்தில் அடித்து இலங்கை இராணுவம் கொலை செய்ததாம்! அதற்கு ஆதாரமாக மேலுள்ள படத்தை வெளியிட்டுள்ளனர். யார் பெற்ற பிள்ளையோ? அதை கண்ணை மூடிக் கொண்டு சேற்றில் படுக்கவைத்து படம் எடுத்து இருக்கிறார்கள். இப்படத்தைப் பார்த்தால் நிலத்தில் அடிக்கப் பட்டவர் போலிருக்கிறதா. ஏதாவது இரத்தக் கறை இருக்கிறதா? காயங்கள் ஏதவது இருக்கிறதா? ஒரு படத்தை வெளியிட முன்னர் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாமா? கழுத்தடியில் ஒரு நிழல் போல் இருப்பது இலத்திரனியல் வரை கலை வேலையா?
வேலிக்கு ஓணான் சாட்சி போல யாழ் பல்கலைக்கழக மனிதவுரிமைக்கான ஆசிரியர் சங்கம் என்ற ஆரிய சிங்களக் கூட்டமைப்பு தமிழர்களின் தேசியப் போராட்டத்தை கொச்சைப் படுத்தவென ஆரம்பிக்கப் பட்ட அமைப்பு இதை உறுதிசெய்துள்ளதாம்!
தமது நீலிக்கண்ணீரின் ஒரு பகுதியாக இலங்கை இராணுவம் இக் கொடூரச் செயலைச் செய்ததாக மாரடித்து அழுதும் உள்ளனர்.
கார்த்திகைப் பூவுக்குள் வல்லாதிக்க வெறியர்களின் பூகம்பம்.
இணைத்தறுதலை நாடுகளின் மௌனம்.
நோர்வே என்றொரு மாரீசன்
ஜப்பான் என்றொரு நயவஞ்சகன்
அமெரிக்கா என்றொரு அயோக்கியன்
ஐரோப்பிய ஒன்றியம் என்றொரு கயவன்.
இவையாவும் ஒன்று கூடி ஈழத்தமிழர்களின் பிரச்சனையை தீர்ப்பதாக கூட்டங்கள் நடாத்தின அறிக்கைகள் விட்டன. தமக்குத் தாமே இணைத் தலைமை நாடுகள் என்று பெயரும் சூடிக் கொண்டன. தமிழ்த்தேசியத்தின் ஆயுத பலத்தை மழுங்கடிக்கும் வரை இவர்கள் மிக அக்கறையுடன் செயற்பட்டனர். இப்போது ஏன் மௌனமாக இருக்கின்றனர்? முன்னூறு ஆயிரம் தமிழர்களின் அவலங்கள் தொடர்பாக இவர்கள் கூடிக் கதைக்காதது ஏன்? அமெரிக்கக் கோலா பானத்தையும் கோழி வறுவலையும் ருசித்துக் கொண்டு ஜப்பானிய ஒலிப் பேழையில் பிரித்தானியப் பாடல்களைத் தமிழர்கள் கேட்கும் நாளிற்காக இவர்கள் காத்திருக்கின்றனர். அந்த நாள் வரும் வரை என்ன சதிகளை இவர்கள் செய்வார்கள்?
சீறும் சீனா
முத்து மாலைத் திட்டம் என்ற இந்தியாவிற்கு எதிரான சீனாவின்சுருக்குக் கயிறு பர்மா, பங்களாதேசம், இலங்கை,பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளில் அமைக்கும் கடற்படைத் தளங்களைக் கொண்டது. இத் தளங்களில் முக்கியமான பகுதி இலங்கை ஆகும். இது வரை சிங்களப் பிரதேசங்களில் மட்டும் கண் வைத்திருந்த சீனா தமிழ்த்தேசியம் பலவீனமடைந்த நிலையில் தமிழர் பிரதேசங்களிலும் தனது பார்வையைச் செலுத்த ஆரம்பித்துள்ளது. வடக்கின் அபிவிருத்திக்கு சீன வங்கி உதவ முன் வந்துள்ளதின் பின்னணி என்ன? வடக்கில் சிங்கள இராணுவத்தினரை குடும்ப சமேதராகக் குடியேற்றி தமிழர் பிரதேசங்களை சிங்கள மயமாக்கவா?
பாரதத்தின் பாதகம்.
13-ம் திருத்தம் என்ற உருப்படாத திட்டத்தை குடுகுடுப்பையாக வைத்துக்கொண்டு நல்ல காலம் வருகுது தமிழர்களுக்கு நல்ல காலம் வருகுது என்று கதறிக் கொண்டிருக்குது பாரத பூமி. இலங்கையில் சீனா தின்று துப்பிய எச்சங்களைச் சுவைக்கக் காத்திருக்கிறதா பாரத தேசம்?
இவர்கள் எல்லாரும் இணைத்து தமிழர்களின் பிரேதங்களில் நடனமாடுகின்றனரா?
Monday, 13 July 2009
நம்புவோம் நம் தலைவன் வருவான் என்று.
அவர் இறந்துவிட்டார் என்கின்றனர்
அவர் பின் நின்றோர்.
அவர் இருக்கின்றார் என்கின்றனர்
அவருக்குத் துணை நின்றோர்.
இரு சாராரும் நம்மவரே.
தமிழ்த்தேசியத்தை அழித்தவர்
பல பொய்கள் சொன்னார்கள்.
பல பொய்கள் சொல்கின்றார்கள்.
தமிழ்த்தேசியத்தைப் பாதுகாக்க
நம்மவரும் ஒரு பொய் சொல்லலாம்.
மறைந்திருந்து வழிகாட்டியவன்
மறைந்தாலும் வழிகாட்டுவான்.
கானகத்திலிருந்து வழிகாட்டிய தலைவன்.
மறைந்தாலும் மறைக்கப் பட்டாலும்
வானகத்திலிருந்து வழிகாட்டுவான்.
அந்திக் கடலில் மறையும் சூரியன்
மறு நாள் காலை உதிக்கிறான்.
நந்திக் கடலில் மறைந்தவன்
மீண்டும் வருவான் என நம்புவோம்.
கிறிஸ்த்தவர்கள் நம்புகின்றனர்
ஏசு மீண்டும் வருவார்
பாவிகளை ரட்சிக்க என்று.
இந்துக்கள் நம்புகின்றனர்
திருமால் மீண்டும் வருவார்
பாவிகளை அழிக்க என்று
நாமும் நம்புவோம்
நம் தலைவன்
வருவான் என்று.
Sunday, 12 July 2009
இலண்டன் மலர் காட்சி - படங்கள்
கனி மொழியின் இலங்கைப் பயணம்- சில சந்தேகங்கள்.
கலைஞர்களின் வாரிசுகளின் கனிமொழி அவர்கள் இலங்கைத் தமிழர்கள் மீது அதிக அக்கறை உள்ளவர். வன்னிப் போரின் இறுதிக் கட்டத்தில் கனிமொழி அவர்களது பங்களிப்பு உன்னதமானது. கனிமொழி அவர்கள் வன்னி அகதி முகாம்களைச் சென்று பார்க்கவிருக்கிறார் என்பது மகிழ்ச்சியைத் தரவில்லை. சில சந்தேகங்களை எழுப்புகிறது.
தனக்குச் சார்பானவர்களை மட்டுமே வன்னி முகாம்களைச் சென்று பார்வையிட இலங்கை அரசு அனுமதிக்கிறது. இந்து ராம் அவர்களை அனுமதித்து அவர் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு தினமணியிடம் முறையாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.
இலங்கையின் அரசியலிலும் வெளிநாட்டுத் தொடர்புகளிலும் வன்னி முகாம்கள் இனிப் பெரும் பங்கு வகிக்க விருக்கிறது. இதை வைத்து தனது வெளிநாட்டுச் செலவாணிப் பற்றாக் குறைய தீர்ப்பது இலங்கையின் நோக்கமாகக் கருதப் படுகிறது.
தமிழ்த் தேசியவாதத்தை அடியோடு ஒழித்துக் கட்டுவதானால் வன்னி முகாம்களின் இருப்பவர்களுக்கு முறையான படம் படிப்பித்தே ஆக வேண்டும்.
சில மேற்குலக நாடுகள் தமது பிராந்திய நலன்களைப் பாதுகாப்பதற்கு வன்னி அகதி முகாம்களைத் தமது துருப்புச் சீட்டாக வன்னி முகாம்களைப் பாவிக்கலாம் எனக் கருதப் படுகிறது.
இந்தியா சீனா இலங்கையில் எடுத்தது போக எச்சங்களைத் தான் எடுத்துக் கொள்ளக் காத்திருக்கிறது. இலங்கையில் இந்த மாதிரி தானும் சீனாவும் "பங்கு போட்டுக் கொள்ள" தயாரக இருக்கிறது. இந்தப் பங்கு போடுதலில் மேற்குலக நாடுகளும் இணைவதை இந்தியா விரும்பவில்லைப் போலிருக்கிறது. இப்போது தமிழ்தேசியப் போராட்டதின் ஆயுதபலம் இந்தியாவின் ஒரு குடும்ப நலனுக்காகவும் ஒரு சாதியின் ஆதிக்கத்திற்காகவும் மழுங்கடிக்கப் பட்ட நிலையில் இலங்கைமீதான இந்தியாவின் பிடி தளர்ந்து போயிருக்கிறது. தொடர்ந்து இலங்கைக்கு உதவி செய்து கொண்டே இருக்க வேண்டிய நிர்ப்பந்த நிலையில் இந்தியா இருக்கிறது. இந்த தொடர் உதவி செய்தலும் இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்களுக்கு அடங்கியிருக்கச் செய்தலுமே இந்திவின் குறைந்த பட்சப் பிடியிலாவது இலங்கையை வைத்திருக்க முடியும். இதன் ஒரு அம்சமாகவே தமிழக முதல்வர் கலஞர் இலங்கையில் தமிழர்கள் (தாம் உத்தர பிரதேச பேரின வாதிகளுக்கு அடங்கியுருப்பதைப் போலவே) சிங்களவர்களுக்கு அடங்கியிருக்க வேண்டும் என்று அண்மையில் கருத்து வெளியிட்டார். இந்நிலையில் கனிமொழியை இலங்கை அரசு அனுமதித்தது சந்தேகத்தைத் தருகிறது. போர் முடிந்தவுடன் கலைஞரை இலங்கை வரும்படி இலங்கை அதிபர் அழைத்திருந்தார். அவர் அழைப்பின் உள்நோக்கம் வெளிப்படையானது. கலைஞரை எப்படியாவது தன் வழிக்குள் கொண்டுவருவதே அதன் நோக்கம். ஆரிய சிங்களக் கூட்டமைப்பு இப்போது எப்படியாவது வன்னிமுகாம்கள் ஒழுங்காக நடக்கிறது என்று உலகிற்கு பறைசாற்ற வேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கிறது. இதற்குக் கனிமொழி தெரிந்தோ தெரியாமலோ பலிக்கடாவாகப் போகிறார்.
கனிமொழி நீந்தத் தெரியாத மீன் குஞ்சு அல்ல. அவர் வன்னி சென்று வந்து முகாம்களில் உள்ள குறைபாடுகளி எடுத்துச் சொல்வது போல் சொல்வார். தம்மை இலங்கை அரசு நட்புடன் நடத்தியதாகவும் சொல்வார். வன்னி முகாம்களுக்கு மேலும் பண உதவிகள் தேவை என்று அறிக்கை சமர்ப்பிப்பார். அதையொட்டி இலங்கைக்கு இந்தியா வழங்கவிருக்கும் 500 கோடி ரூபா நிதி உதவி மேலும் அதிகரிக்கப் படும். அதன் பிறகு கனிமொழிக்கு இலங்கைத் தமிர்களின் துயர் துடைத்தவர் என்று பாராட்டுக் கூட்டமும் நடாட்த்தப்பட்டு ஈழவர் காவல்த் தேவதை என்று பட்டமும் வழங்கப் படும்.
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...