Saturday, 21 August 2021

எஸ்-400 இருந்தால் F-35 தேவையில்லையா?

  


சிலர் இந்தியாவின் படைத்துறை வலிமையை மிகைப்படுத்தி காட்டும் காணொலிப் பதிவுகளைத் தொடர்ச்சியாக யூடியுப்பில் பதிவேற்றிக் கொண்டே இருக்கின்றார்கள். தங்கள் பார்வையாளர்களை அதிகரித்து தம் வருமானத்தை அதிகரிக்கும் நோக்குடன் உண்மைக்கு மாறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. பாவம் அவர்களது பார்வையாளர்கள். கர்ணனிடம் அவன அழிக்க முடியாத கவச குண்டலங்கள் இருந்தன. அதனால் அவர் வில்வித்தை கற்கத் தவறவில்லை, பரசுராமரிடம் வில்வித்தை கற்று சாபம் வாங்கினாலும் அவர் கொடுத்த விஜய தனுசு என்ற வில் அவனிடம் இருந்தது அதனால் அவன் 17-ம் நாட்போரில் எதிரிகள் பலரைக் கொன்றான். சிவபெருமானுக்காக விஸ்வகர்மா வடிவமைத்த விஜய தனுசு என்ற வில்லை சிவன் முப்புரம் எரித்த பின்னர் இந்திரனிடம் கொடுத்தார். அதை இந்திரன் பரசுராமரிடம் கொடுத்தான். இரசியாவின் எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமை கவச குண்டலம் என்றால் F-35 விஜய தனுசைப் போன்றது.

ரஃபேல் F-35இலும் சிறந்ததா?

ஜெய் ஹிந்த் என்னும் வாசகத்துடன் தம் பதிவுகளை முடிக்கும் ஆரிய ஆதிக்கத்தின் வால்பிடிகள் F-35 இலும் பார்க்க ரஃபேல் சிறந்த விமானம் எனவும் காட்ட முயல்கின்றனர். படைத்துறையில் முன்னணியில் இருக்கும் எல்லாம் நாடுகளும் ஐந்தாம் ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தையும் ஆறாம் தலைமுறைப் போர் விமானத்தையும் பெற தொடர்ச்சியாக முயன்று கொண்டிருக்கின்றன. ரஃபேல் நான்காம் தலைமுறைப் போர்விமானங்களில் ஒரு மேம்படுத்தப்பட்ட வகையைச் சார்ந்த விமானம். நான்காம் தலைமுறைப் போர்விமானங்களுக்கும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை பழைய விரல் வைத்து சுழற்றும் தொலைபேசிகளுக்கும் தற்போது உள்ள ஐ-போன்களுக்கும் இடையிலான வித்தியாசத்திற்கு ஈடானது. ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தில் உள்ள இலத்திரனியல் செயற்பாடுகள் அப்படிப்பட்டவை. முன்னணி போர்விமான உற்பத்தி நாடுகள் பல இணைந்து உருவாக்கப்பட்டது F-35. எந்த ஒரு நாட்டிலும் தங்கியிருக்காமல் தனக்குத் தேவையான படைக்கலன்களை தானே உற்பத்தி செய்யவேண்டும் என்ற கொள்கையுடைய பிரான்ஸ் உருவாக்கிய விமானம் ரஃபேல். F-35 போர் விமானங்களில் விரைவில் லேசர் படைக்கலன்களும் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளும் இணைக்கப்படும். அதற்கான வாய்ப்பு ரஃபேலில் உள்ளனவா என்பது கேள்விக் குறி. F-35ஐ வடிவமைக்கும் போது எதிர்காலத்தில் உற்பத்தி செய்யக் கூடிய ஏவுகணைகளையும் பொருத்தக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டது. F-22இல் கிடைத்த அனுபவத்தை வைத்தே அமெரிக்கா இந்த அம்சத்தை F-35இல் உள்ளடக்கியது. செய்மதிகளுடன் தொடர்பாடல்கள் வைத்துச் செயற்படக்கூடிய தன்மையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. F-35 விமானத்தைச் செலுத்த விமானியின் பங்களிப்பு மிகவும் குறைந்த அளவே தேவைப்படும் அளவிற்கு அதன் தானியங்கித் தன்மை உள்ளது. இதனால் அதை ஓட்டும் விமானி எதிரியின் நகர்வு, இலக்கு, தாக்குதல் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த முடியும். பார்க்க ரஃபேல் அதிக வேகமாகப் பறக்கக் கூடியது என்பது உண்மை. பொதுவாக F-35இலும் புலப்படாத்தன்மை (Stealth) கொண்ட விமானங்கள் மிக அதிக வேகமாகச் செல்வதில்லை. அதன் இயந்திரங்கள் அதற்கு ஏற்ப வடிவமைக்கப்படும். இயந்திர வேகம் அதிகரிக்கும் போது புலப்படாத்தன்மை இழக்கப்படும். உலகிலேயே ஊழல் குறைந்த நாடுகளில் ஒன்றான சுவிற்சலாந்து போர் விமானங்கள் வாங்கும் முடிவை எடுக்கும் போது ரஃபேலா F-35ஆ என்ற கணிப்பில் F-35ஐயே தெரிவு செய்தது. இந்தியா ரஃபேல் விமானம் வாங்குவதாக எடுத்த முடிவில் ஊழல் இல்லை என ஆரிய வாற்பிடிகளால் உறுதியாகச் சொல்ல முடியுமா?

நாய்ச்சண்டையைச் செல்லுபடியற்றதாக்கிய F-35

F-35 நாய்ச் சண்டையை செல்லுபடியற்றதாக உருவாக்கப்பட்ட வானாதிக்க விமானம் ஆகும். போர் விமானங்களிடையே நடக்கும் Dog fight எனப்படும் நாய்ச்சண்டை என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எதிரி விமானங்கள் குறுகிய தூரத்தில் நின்று ஒன்றை ஒன்று தாக்குவதாகும். F-35 வானாதிக்கம் (Air Dominance) மற்றும் வான்மேன்மை (Air superiority) போன்றவைக்கு உகந்தவையாக வடிவமைக்கப்பட்டவை. ஒரு விமானம் ஒரு குறித்த வான்பரப்பில் பறக்கும்போது அது மற்ற விமானங்களை அவ்வான்பரப்பில் பறக்க அனுமதிக்காது என்றால் அவ்விமானம் வானாதிக்க விமானமாகும். ஒரு குறித்த விமானம் எதிரியின் விமானங்களிலும் பார்க்க மேன்மயானதாக இருந்தால் அது வான்மேன்மை விமானமாகும். அதனால் F-35 விமானத்தை எதிரி விமானம் கண்டறிய முன்னரி F-35 எதிரி விமானங்களை கண்டறிந்துவிடும். அதனால் எதிரி விமானம் F-35ஐ அண்மிக்க முன்னர் அதை F-35ஐ அழித்துவிடும். அதனால் நாய்ச்சண்டைக்கு வாய்ப்பில்லை. குளவித் தாக்குதல் முறைமையில் F-35 விமானத்தை அணுகினால் அதன் பரிவாரங்களாக வரும் பல ஆளில்லா போர்விமானங்களால் குளவித் தாக்குதலுக்கு வரும் விமானங்கள் அழிக்கப்பட்டுவிடும். நிலைமை இப்படியிருக்க ஆரிய ஆதிக்க வாற்பிடிகள் நாய்ச்சண்டையில் ரஃபேல் F-35ஐ சுட்டு விழுத்திவிடும் எனத் தம்பட்டமடிக்கின்றனர்.

The F-35 has the most advanced sensor suite of any fighter in history, including the Active Electronically Scanned Array (AESA) radar, Distributed Aperture System (DAS), Electro Optical Targeting System (EOTS) and advanced electronic warfare capabilities to locate/track enemy forces, jam radars and disrupt attacks.

Sensor Suite

The F-35 has the most advanced sensor suite of any fighter in history, including the Active Electronically Scanned Array (AESA) radar, Distributed Aperture System (DAS), Electro Optical Targeting System (EOTS) and advanced electronic warfare capabilities to locate/track enemy forces, jam radars and disrupt attacks. The F-35 serves as an information and communications gateway, sharing its operational picture with the ground, sea and air assets.

Sensor Fusion

The F-35's advanced sensor fusion enables pilots to draw on information from all of their on-board sensors to create a single integrated picture of the battlefield that greatly enhances awareness and survivability.

 

F-35 செலவு மிக்கதா?

F-35 செலவு மிக்க விமானம் என்கின்றனர் சிலர். ஆனால் எதிரியைத் தோற்கடிக்க செலவுக்கான பயன்பாடு உடைய விமானம் என்கின்றனர் அதன் உற்பத்தியாளர்கள்.  As the most cost-effective solution for defeating our increasingly sophisticated adversaries, the F-35 will accomplish what would otherwise require a far greater number of less capable aircraft to achieve. F-35 ஐ உருவாக்கியவர்கள் தொடர்ச்சியாக அதை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். அதன் மூலம் அதன் வானாதிக்கத்தையும் வான்மேன்மையையும் பேண முடியும்.


ரஃபேலைக் குறைத்து மதிப்பிடக்கூடாது

பறப்பு நேரம், பறப்பு தூரம் போன்றவற்றில் F-35இலும் பார்க்க ரஃபேல் சிறந்தது. கடல் மட்டதில் இருந்து உயரமான தளங்களில் இருந்து பறப்பை மேற்கொள்ளக் கூடிய ரஃபேல் சீன எல்லையில் மிகவும் பயனுள்ளதாகும்

SPECTRA (Self-Protection Equipment to Counter Threats for RAFALE Aircraft) has been jointly developed by MBDA and Thales to provide an integrated self-protection system for the new Rafale combat aircraft now in service with the French Air Force and Navy. The SPECTRA integrated electronic warfare suite provides long-range detection, identification and accurate localisation of infrared, electromagnetic and laser threats. The system incorporates, radar warning, laser warning and missile warning receivers for threat detection plus a phased array radar jammer and a decoy dispenser for threat countering. ரஃபேலை உருவாக்க 46பில்லியன் யூரோ செலவிடப்பட்டது. F-35ஐ உருவாக்க 400பில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டது. சிலர் F-35ஐ உருவாக்க 1.6ரில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டது என்கின்றனர்.

இந்தியாவிற்கு ரஃபேல் போதாது.

இந்தியாவின் மிகப் பெரிய அச்சுறுத்தல் சீனாவின் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளே. அதிலும் பெரிய அச்சுறுத்தலாக வரவிருப்பது. சீனா அந்த ஏவுகணைகளை அல்லது அதன் தொழில்நுட்பத்தை பாக்கிஸ்த்தானுக்கு விற்பனை செய்வதாகும். அதனால் F-35இலும் பார்க்க மேம்பட்ட புலப்படாத் (Stealth) தன்மை கொண்ட விமானங்களும் லேசர் படைக்கலன்களும் இந்தியாவிற்கு அவசியமாகும். ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை இந்தியாவிடமிருக்கும் எஸ்-400 விமான எதிப்பு ஏவுகணைகளால் அழிக்க முடியாது. பாக்கிஸ்த்தான் அல்லது இரசியாவுடன் ஒரு போர் என்றுவரும் போது இந்தியாவிடம் புலப்படாத் தன்மை கொண்ட விமானங்கள் மூலம் எதிரியின் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை எதிரி நாட்டுக்குள் வைத்தே அழிக்க முடியும்.

பல ஊடகங்களில் படைக்கலன்களைப் பற்றி எழுதப்படும் கட்டுரைகளில் படைக்கல விற்பனையாளர்களினதும் அவர்களது முகவர்களதும் தாக்கம் இருக்கும். அவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். சரியான தொழில்நுட்ப அறிவைத் தேடிப் பெற்றுக் கொள்ளுதல் அவசியம். “Rafale Jets won’t save Indian Air Force” என்னும் தலைப்பில் Foreign Policy என்ற அமெரிக்க சஞ்சிகையில் ஒரு கட்டுரை வந்தது. அதை ரஃபேலுக்கு போட்டியாக இந்தியாவிற்கு தமது விமானங்களை விற்பனை செய்ய முயன்று தோல்வியடைந்தவர்களின் குரலாகவே நான் பார்க்கின்றேன்.

மூன்றாம் தர Youtube Channelகள் பற்றி கவனமாயிருங்கள்.

Tuesday, 17 August 2021

இந்தியாவினதும் அமெரிக்காவினதும் புதிய விமானம் தாங்கிக் கப்பல்கள்

  


2021 ஓகஸ்ட் 8-ம் திகதி அமெரிக்கா தனது யூ.எஸ்.எஸ். ஜெரால்ட் ஆர் ஃபோர்ட் விமானம் தாங்கிக் கப்பலின் வெள்ளோட்டதை நிறைவு செய்தது. இந்தியாவின் ஐ.என்.எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பலும் தனது வெள்ளோட்டத்தை ஓகஸ்ட் 4-ம் திகதி ஆரம்பித்தது. விமானம் தாங்கிக் கப்பல்களை முதலில் கடலில் இறக்கி பல்வேறு தேர்வுகளுக்கு உட்படுத்தப்படும். கடலில் பயணிக்கும் விதம் குண்டு வெடிப்பு அதிச்சியைத் தாங்கும் திறன், இயந்திரம் மற்றும் பல்வேறுகருவிகளின் செயற்பாடு போன்றவை தேர்வுக்கு உட்படுத்தப்படும். இந்தியா அமெரிக்காவிற்கும் பிரான்சையும் அடுத்து 1957-ம் ஆண்டில் இருந்தே விமானம் தாங்கிக் கப்பலைப் பயன் படுத்துகின்றது.

விமானம் தாங்கிக் கப்பல்களின் வகைகள்

ஒரு விமானம் தாங்கிக் கப்பலின் திறன் அது தாங்கிச் செல்லும் விமானங்களின் எண்ணிக்கையிலும் திறனிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்தனை விமானங்கள் அதிலிருந்து பறந்து செல்லும் போன்றவற்றில் தங்கியிருக்கின்றன. விமானம் தாங்கிக் கப்பல்களை மூன்றாக வகைப்படுத்தலாம்: 1. மீகை- விமானம் தாங்கிக் கப்பல்கள் (Super-carriers) இவை 100,000 தொன் எடையுள்ளவை. 90 விமானங்களைக் கொண்டவை. 2. நடுத்தர விமானம் தாங்கிக் கப்பல்கள். இவை 40,000 தொன் எடையுடவை. 40 விமானங்களைக் கொண்டவை. 3. தாழ்ந்த தரமான விமானம் தாங்கிக் கப்பல்கள் இவை விமானம் தாங்கிக் கப்பல் உற்பத்தியிலும் கடற்போரிலும் அனுபவமில்லாத நாடுகள் வைத்திருக்கும் கப்பல்கள். இரசியா கடற்போர் அனுபவம் குறைந்த நாடு. சீனா கடற்போர் அனுபவமில்லாத நாடு.

நாசகாரிகள் சூழ வலம்வர.....

விமானம் தாங்கிக் கப்பல்கள் தனித்துப் பயணிப்பதில்லை. அவற்றை சுற்றி ஒரு பெரும் பரிவாரம் எப்போதும் இருக்கும். அவை விமானம் தாங்கிக் கப்பலுக்கு பல வட்டப் பாதுகாப்பை வழங்கும். விமானந்தாங்கிக் கப்பல்கள் நீருக்குக் கீழ்நீர் மேற்பரப்புவான்வெளி ஆகியவற்றில் இருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் இவற்றைத் தடுக்க பல நாசகாரிக் கப்பல்கள் ஈடுபடுத்தப்படும். அத்துடன் குறைந்தது ஒரு frigate கப்பலாவது இருக்கும். மொத்தக் கப்பல்களையும் Carrier Battle Group என அழைப்பர். விமானம் தாங்கிக் கப்பலை எதிரி விமானங்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க ஒரு Guided Missile Cruiser  என்னும் வழிகாட்டல் ஏவுகணை தாங்கிக் கப்பல் அந்தப் பரிவாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும். Light Airborne Multi-Purpose System என்னும் முறைமை கொண்ட கப்பல் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்தும் கடற்கப்பல்களில் இருந்தும் பாதுகாக்கும். பல உலங்கு வானூர்திகள் விமானந்தாங்கிக் கப்பல்களுக்குச் சுற்றவர உள்ள கடற்பரப்பின் கீழ் உள்ள பகுதிகளை இலத்திரனியல் கருவிகளால் பார்வையிட்டுக் கொண்டே இருக்கும்.

செலவு மிக்க வி/தா கப்பல்கள்

1988இல் இரசியா 70விமானங்கள் தாங்கிச் செல்லக்கூடிய 85,000 தொன் எடையுள்ள அணுவலுவில் இயங்கும் விமானம் தாங்கிக் கப்பலை கட்ட முடி செய்திருந்தது. ஆனால் அதைப் பின்னர் கைவிட்டது. அதில் இரசியா சந்திக்கவிருக்கும் நிதிப் பிரச்சனை தொழில்நுட்பப் பிரச்சனை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு திட்டம் கைவிடப்பட்டது. சீனாவிடம் லியோனிங் என்னும் விமானம் தாங்கி கப்பல் உள்ளது. அது மேலும் ஒன்றை நிர்மாணித்துக் கொண்டிருக்கின்றது. இந்தியாவின் ஐ.எஸ்.எஸ் விக்ராந்த 23,000 கோடி ரூபாக்களில் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவின் யூ.எஸ்.எஸ். ஜெரால்ட் ஆர் ஃபோர்ட் விமானம் தாங்கிக் கப்பலிற்கான மொத்தச் செலவு $12.8பில்லியன்.

அரசுறவில் பெரும் பங்கு வகிக்கும் விமானம் தாங்கிகள்

அமெரிக்கா 11 விமானம் தாங்கிக் கப்பல்களையும் சீனாவும் இந்தியாவும் பிரித்தானியாவும் இத்தாலியும் இரண்டு விமானம் தாங்கிக்கப்பல்களையும் பிரேசில்இரசியாபிரான்ஸ்ஸ்பெயின்தாய்லாந்து ஆகியவை ஒரு விமானம் தாங்கிக் கப்பல்களையும் வைத்திருக்கின்றன. சீனா தனது மூன்றாவது விமானம் தாங்கிக் கப்பலை நிர்மாணித்துக் கொண்டிருக்கின்றது. 2030-ம் ஆண்டு சீனா ஐந்து அல்லது ஆறு விமானம் தாங்கிக் கப்பல்களை வைத்திருக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது. ஹென்றி கிஸ்ஸிங்கர்: ஒரு விமானம் தாங்கிக் கப்பல் 100,000 தொன் அரசுறவுக்கு ஈடானது. (An aircraft carrier is 100,000 of diplomacy)

இரண்டும் தேறின

2021 ஓகஸ்ட் மாதம் உள்ள கணக்கின்படி உலகில் 41 விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன. அதில் 11 அமெரிக்காவிற்கு சொந்தமானது. அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்கள் அணுவலுவில் இயங்கும் பாரிய அளவிலானவை. ஒவ்வொன்றும் 80விமானங்களைக் காவிச்செல்ல வல்லவை. அமெரிக்காவின் USS GERALD FORD கப்பலுக்கு அருகில் மூன்று தடவை குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மூன்றாவது வெடிப்பு 3.9ரிக்டர் அளவுகோல் பூமி அதிச்சிக்கு ஈடானது. Kochin Shipyard Ltd என்னும் இந்திய அரசுக்கு சொந்தமான நிறுவனம் இந்தியாவின் விக்ராந்தை உற்பத்தி செய்துள்ளது. அதற்கான கடற் கடற்தேர்வுகளில் அது தேறியுள்ளதாக இந்தியக் கடற்படை அறிவித்தது. விக்ராந்த் வெடிப்புக்கு உள்ளாக்கி தேர்வு செய்யப்பட்டுள்ளதா எனத் தகவல் இல்லை.



மலையும் மடுவும்

262மீட்டர் நீளம் 62மீட்டர் அகலம். 14அடுக்குகள், 2300 அறைகள் கொண்டது விக்கிரந்த். அதில் 1700பேர் செயற்படுவர். விக்ராந்தின் மிதப்பு வேகம் 18கடல் மைல்கள். அதி உயர் வேகம் 28கடல் மைல்கள்.அமெரிக்க ஃபோர்ட் வகை விதா கப்பல்களில் 25 அடுக்குகள், வேகம் 30கடல் மைல்கள். அது 4539ஆளணிகளையும் 2700 அறைகளையும் கொண்து. ஃபோர்ட் கப்பல்கள் குறைந்த அளவு ஆட்கள் தேவைப்படும் அளவிற்கு பல தானியங்கி முறைமைகளைக் கொண்டுள்ளது.

விமானங்கள் கப்பலில் இருந்து பல்வேறு வழியில் கிளம்பிச்செல்லும்:

1. catapult-based launch system (CATOBAR)- பாரம் குறைந்த விமானங்கள்

2. Short Take-Off, Barrier Assisted Recovery (STOBAR)

3. Short Take-Off and Landing (STOL)

4. Vertical take-off and short landing (VSTOL)

விக்கிராந்த்தில் STOBAR முறைமை உண்டு. ஃபோர்ட்டில் VSTOL முறைமை செயற்படுகின்றது. அத்துடன் மின்காந்த உந்து முறைமையும் பாவிக்கப்படுகின்றது. விக்கிராந்தில் மிக்-29கே அல்லது தேஜஸ் போன்ற நான்காம் தலைமுறைப் போர்விமானங்கள் பயன்படுத்தப்படலாம். ஃபோர்ட்டில் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள் ஈடுபடுத்தப்படும். நான்காம் தலைமுறைப் போர்விமானத்திற்கும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமானத்திற்கும் உள்ள வித்தியாசம் பழைய விரல்விட்டு சுழற்றும் தொலைப்பேசிக்கும் தற்போது உள்ள ஐ-போனுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் போன்றது. விக்ராந்த் டீசல் மூலம் தன் வலுவைப் பெறுகின்றது. ஃபோர்ட் அணுவலுவால் இயக்கப்படுகின்றது. விக்ராந்த தொடர்ச்சியாக 6000மைல்கள் பயணிக்கும். ஃபோர்ட் பயணிக்கும் தூரத்திற்கு வரையறை இல்லை அது இருபது ஆண்டுகள் கடலில் பயணிக்கலாம்.

இந்தியாவிற்கு விக்ராந்த்அவசியம் தேவை

இந்தியாவின் கரையோரம் 7516கிலோ மீட்டர் நீளமானது. சீனாவின் கரையோரம் 32,000கிலோ மீட்டர் நீளமானது. சீனாவின் கரையோரங்களில் உள்ள தென் கொரியாஜப்பான்வியட்னாம்பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை சீனா சமாளிக்க வேண்டியுள்ளது. இந்தியா பங்களாதேசம்மியன்மார்இலங்கை பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளை தன் கரையோர அயல் நாடுகளாகக் கொண்டுள்ளது. இந்தியாவிற்கு கடல் வழியாக வந்த தீவிரவாதிகள் 2008-ம் ஆண்டு மும்பை நகரை தொடர்ந்து 64 மணித்தியாலங்கள் தாக்கினர். இந்தியா கடல்வழியாக தீவிரவாதிகளின் அச்சுறுத்தலையும் எதிர் கொள்கின்றது. இந்தியாவின் அடுத்த விமானம் தாங்கி கப்பலாக விகிரமாதித்தியா வரவுள்ளது. அமெரிக்கா ஃபோர்ட் போன்று மேலும் பத்து கப்பல்களை உருவாக்கவுள்ளது. இந்தியாவின் நீண்ட கடலோரத்தைப் பாதுகாக்க ஐந்து விமானம் தாங்கிக் கப்பல்கள் அவசியம் என படைத்துறை நிபுணர்கள் கருதுகின்றனர். 

அமெரிக்காவின் ஃபோர்ட் வகை வி/தா கப்பல்களிற்கு முந்திய தலைமுறைக் கப்பல்களான நிமிட்ஸ் வகைக் கப்பல்களை அழிக்க்க் கூடிய ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை சீனா உருவாக்கியது. அவற்றைத் தடுக்க அமெரிக்கா தனது வி/தா கப்பல்களை பாதுகாக்கும் ஆழி பேர்க் வகை நாசகாரக் கப்பல்களில் சிறந்த ரடார்களையும் ஏவுகணை எதிர்ப்பு முறைமையையும் இணைத்துள்ளது. அதனால் சீனா பாரிய எண்ணிக்கையில் குளவித் தாக்குதல் பாணியில் அமெரிக்க வி/தா கப்பல்களில் மீது தாக்குதல் செய்யும் திட்டத்துடன் உள்ளது. அதை முறியடிக்க அமெரிக்கா லேசர் படைக்கலன்களைப் பாவிக்கவுள்ளது. ஆனால் பாவம் இந்தியாவின் விக்ராந்த் சீன ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளுக்கு நின்று பிடிக்குமா?

காளி அம்மாள் காப்பாற்றுவாளா?

இந்தியாவின் Defence Research and Development Organisation (DRDO)யும் Bhabha Atomic Research Centre (BARC)உம் இணைந்து இலத்திரன் அதிர்வுகளை வீசும் கருவிகளை உருவாக்கியுள்ளன. அதற்குப் பொருத்தமாக காளி எனப் பெயரும் சூட்டியுள்ளனர். Kilo Ampere Linear Injector என்பதன் முதலெழுத்துக்களே காளி என அழைக்கப்படுகின்றது. அது எதிரியின் ஏவுகணைகளை நோக்கி pulses of Relativistic electron beam இலத்திரன் அதிர்வுகளைக் கொண்ட கதிர்களை வீசும். லேசர் கதிர்கள் எதிரியின் இலக்கில் துளையிடும். ஆனால் இந்தியாவின் காளியின் கதிர்கள் எதிரியின் இலக்கில் படும் போது அவற்றின் இலத்திரனியல் செயற்பாட்டை முற்றாக அழிக்கும். அதனால் ஏவுகணை செயலிழந்து போகும். எதிரியின் விமானங்கள் மற்றும் பல எண்ணிக்கையில் வரும் ஆளில்லா விமானங்களையும் காளி இடைமறித்து அழிக்கக் கூடியது. KALI 80, KALI 200, KALI 1000, KALI 5000 and KALI 10000 என இந்திய தொடர்ச்சியாக காளியை மேம்படுத்திக் கொண்டிருக்கின்றது. அந்த வழியில் தொடர்ச்சியாக முயன்று கொண்டிருந்தால் இந்தியாவால் நுண்ணலைக் கதிர்களை (Microwave) உற்பத்தி செய்யும் படைக்கலன்களை விரைவில் உருவாக்க முடியும். ஒளியின் வேகத்தில் பாயும் நுண்ணலைக் கதிர்கள் மூலம் எதிரியின் ஏவுகணைகளையும் விமானங்களையும் இடையில் வைத்தே கருக்கி அழிக்க முடியும். 

Sunday, 15 August 2021

திபெத்தை சீனாவில் இருந்து பிரிக்க முடியுமா?

  


சீனா, இந்தியா, மியன்மார், பங்களாதேசம், நேப்பாளம் ஆகியவற்றுடன் எல்லையைக் கொண்ட நீர்க்கோபுரம் எனப்படும் திபெத்தை 1950இல் இருந்து சீனா கைப்பற்றி வைத்திருக்கின்றது. அன்றிலிருந்து சீனா திபெத்தில் பெரும் அபிவிருத்தித் திட்டம் என்னும் போர்வையில் சீனர்களை திபெத்தில் குடியேற்றி திபெத்தியர்களை முடக்குகின்றது. திபெத்தியர்களுக்கும் அவர்களின் ஞானப்பெரும் தந்தையான தலாய் லாமாவிற்கும் இடையிலான தொடர்புகளையும் தொடர்ந்து துண்டித்து வருகின்றது. தற்போது உள்ள தலாய் லாமாவிற்கு அடுத்து வரும் 15வது தலாய் லாமாவை தாமே தெரிவு செய்வோம் என சீனா அடம் பிடிக்கின்றது. அடுத்த தலாய் லாமா தெரிவில் இந்தியா தலையிடக் கூடாது என இந்தியாவையும் சீனா எச்சரித்துள்ளது. சீனாவிற்கு எதிராக பல நாடுகள் ஒன்று சேரும் தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் திபெத்தியர்கள் பகடைக்காய்களாக்கப்படலாம்.

திபெத்தின் வரலாறு

13-ம் நூற்றாண்டில் சீனாவைக் கைப்பற்றிய மங்கோலியர் தீபெத்தையும் கைப்பற்றினர். சீனாவின் மிங் பேரரசு 14-ம் நூற்றாண்டில் மங்கோலியரை விரட்டியடித்த போது தீபெத்தை தனியாக விட்டனர். 18-ம் நூற்றாண்டில் சீனாவின் கிங் பேரரசின் பிடியின் கீழ் திபேத் கொண்டு வரப்பட்டது. 1911இல் திபெத் சுதந்திர நாடாகியது. 1914-ம் ஆண்டு இந்தியாவை ஆண்ட பிரித்தானியாவும் சீனாவும் கஷ்மீர் நகர் சிம்லாவில் “சிம்லா மரபொழுங்கு உடன்பாட்டில்” கையொப்பமிட்டன. அதில் திபெத்தை உள்-திபெத், வெளி-திபெத் என இரண்டு நிலப்பரப்புகளாகப் பிரிக்கப்பட்டு உள்-திபெத் சீனாவின் ஆட்சியின் கீழும் வெளி-திபெத் ஒரு தனிநாடாகவும் அங்கீகரிக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் சீனாவிற்கும் பிரித்தானியா ஆண்ட இந்தியாவிற்கும் இடையிலான எல்லை என்னும் மக்மான் கோடு வரையப்பட்டது இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் 1950-ம் ஆண்டு சீனா வெளி-திபெத்தையும் ஆக்கிரமித்து தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது. அத்துடன் இந்தியாவை ஆண்ட பிரித்தானியாவும் சீனாவும் 1914இல் கொண்ட சிம்லா மரபொழுங்கு உடன்பாட்டையும் இரத்துச் செய்ததுடன் மக்மான் கோட்டையும் ஏற்றுக் கொள்ள மறுப்பதாக முடிவு செய்தது. திபெத்தை சீனா கைப்பறியமையால் ஆசியாவின் பல நாடுகளிற்கு நீர் வழங்குகின்ற இமயமலையின் முக்கிய பகுதி சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. திபெத் இமயமலையை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள பெறுமதி வாய்ந்த பீடபூமியாகும். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான கவசப் பிரதேசமாக இருந்த திபெத் சீனா வசமானது. திபெத்தை சீனா ஆக்கிரமிக்க முன்னர் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் எல்லை என ஒன்று இருந்தில்லை. தற்போதைய பாக்கிஸ்த்தான், இந்தியா பங்களாதேசம், மியன்மார் ஆகியவற்றைக் கைப்பற்றிய பிரித்தானியப் பேரரசால் நேப்பாளத்தையும் திபெத்தையும் கைப்பற்ற முடியவில்லை. திபெத்தை சீனர்கள் தம் மண்டரின் மொழியில் சிஜாங் என அழைக்கின்றனர். சிஜாங் என்றால் மேற்குச்செல்வ வீடு எனப் பொருள்படும். இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானிய-இந்தியப் படையின் தளபதியாக இருந்த ஃபிரான்சிஸ் தக்கர் என்பவர் இரசியாவிலும் பார்க்க சீனா ஆபத்தானது என்றும் சீனாவிடமிருந்து திபெத் பாதுகாகப்பட வேண்டியது என்றும் தெரிவித்திருந்தார்.

திபெத்தில் சீனா நிறைவேற்றும் திட்டங்கள்

1999-ம் ஆண்டில் இருந்து திபெத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றி வருகின்றது. அந்த அபிவிருத்தி திட்டங்களுடன் ஹன் சீனர்கள் அங்கு குடியேற்றியும் வருகின்றது. அதற்காக திபெத்தில் வறுமை ஒழிப்பையும் மேற்கொண்டது. 2006-ம் ஆண்டு திபெத்திற்கான தொடரிப்பாதை உருவாக்கப்பட்டு அங்கு சீனாவின் மற்றப் பாகங்களில் இருந்து பயணிக்க வசதி செய்து கொடுக்கப்பட்டது. 2010இல் உலகின் மிக உயர்ந்த இடத்தில் அமைந்த விமான நிலையம் திபெத்தில் 13மில்லியன் டொலர் செலவில் உருவாக்கப்பட்டது. சீனாவின் மிகப்பெரிய செப்பு இருப்பு திபெத்தில் உள்ளது. மேலும் இரும்பு, துத்தநாகம், ஈயம், கட்மியம், யூரேனியம் போன்ற கனிம வளங்கள் திபெத்தில் உள்ளன. அவற்றின் பெறுமதி ஒரு ரில்லியன் டொலர்களிலும் அதிகமானது.

நாடு கடந்த திபெத்திய அரசு

1959-ம் ஆண்டு சீனா திபெத்தை ஆக்கிரமித்த போது அங்கிருந்து தப்பியோடிய தலாய் லாமாவிற்கு ஜவகர் லால் நேருவின் அரசு அடைக்கலம் கொடுத்து இந்தியாவில் நாடு கடந்த திபெத்திய அரசையும் அமைக்க அனுமதித்தார். ஆனால் 1954-ம் ஆண்டு செய்த இந்திய சீன ஒப்பந்தத்தில் திபெத்தை “சீனப் பிராந்தியமான திபெத்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது ஒரு இலட்சம் திபெத்தியர்கள் இந்தியாவில் வாழ்கின்றனர். அவர்களின் அரசியற் செயற்பாடுகளை இந்திய அரசு தடை செய்துள்ளது. இதுவரை எந்த ஒரு நாடும் திபெத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கவில்லை என்பது மட்டுமல்ல திபெத்தை ஓர் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசமாகக்கூட அறிவிக்கவுமில்லை. 2020-ம் ஆண்டு அமெரிக்கப் நாடாளுமன்றத்தில் திபெத்திற்கான கொள்கை மற்றும் உதவிக்கான சட்டம் (Tibetan Policy and Support Act) என ஒன்று நிறைவேற்றப்பட்டது. அச்சட்டம் அமெரிக்கா திபெத்தில் ஒரு துணைத்தூதுவரகத்தை அமைக்க வழிவகுப்பதுடன் திபெத் தொடர்பாக தவறிழைக்கும் சீனர்களுக்கு எதிராக பொருளாதரத் தடைகளையும் அமெரிக்காவிற்கு பயணிப்பதற்கான தடையையும் விதிக்க முடியும். ஆனால் இவை திபெத்தின் விடுதலைக்கு வழிவகுக்க மாட்டாது.

இந்தியாவின் தடுமாற்றம் மிகுந்த வெளியுறவுக் கொள்கை

1965-ம் ஆண்டு அப்போது இந்திய தலைமை அமைச்சராகவிருந்த லால் பகதூர் சாஸ்த்திரி திபெத்தின் நாடுகடந்த அரசிடம் தான் அவர்களின் அரசை அங்கீகரிப்பேன் என உறுதியளித்தார். ஆனால் அதைச் செய்யமுன்னர் அவர் இறந்துவிட்டார். 2014-ம் ஆண்டு மோடி தனது தலைமை அமைச்சர் பதவியேற்பிற்கு வெளிநாடுகளில் இயங்கும் திபெத்திய அரசின் தலைமை அமைச்சரை அழைத்தது. ஆனால் தனது 2019 தலைமை அமைச்சர் பதவியேற்பிற்கு அப்படி யாரையும் அழைக்கவில்லை. 2019இல் சீனப்படையினருடன் மோதிய போது கொல்லப்பட்ட திபெத் போராளியின் இறுதிச் சடங்கில் இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் கலந்து கொண்டார். பின்னர் டுவிட்டரில் அது தொடர்பான தனது பதிவை நீக்கியிருந்தார். 2021இல் மோடி தலாய் லாமாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவில் இருக்கும் திபெத்தியர்களுக்கு பிறந்த பிள்ளைகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதை இந்தியா நிறுத்தியுள்ளது.

இந்தியாவிடம் திபெத் போராளிகள்

2020 செப்டம்பர் 1-ம் திகதி லடாக் பிரதேசத்தில் உள்ள பங்கொங் சோ என்ற இடத்தில் சீனா எல்லை தாண்டி அமைத்திருந்த ஒரு படை நிலை மீது திபெத்தியப் போராளிகள் தாக்குதல் நடத்தி அந்த படைநிலையையும் அங்கிருந்த படைக்கலன்களையும் கைபற்றினர். இந்தத் தாக்குதலில் நியிமா தென்ஞின் (Nyima Tenzin) என்ற திபெத்தியப் போராளி கொல்லப்பட்டார். இந்தச் செய்தியை இந்திய ஊடகங்கள் உடனடியாக வெளியிட்டதுடன் தாக்குதல் செய்தவர் இந்தியாவின் உளவுத்துறையான ரோவின் கீழ் மிக இரகசியமாகச் செயற்படும் திபெத்தியர்களைக் கொண்ட ஒரு சிறப்புப் படையணியைச் சேர்ந்தவர் என்ற தகவலையும் வெளிவிட்டன. 1950களில் இருந்தே அமெரிக்காவினதும் இந்தியாவினதும் உளவுத்துறைகள் இணைந்து திபெத்தியப் போராளிகளுக்கு பயிற்ச்சியளித்து வருகின்றனர். சிறப்பு எல்லைப் படை என்னும் பெயரில் மிக இரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் இப்படையணியில் ஐயாயிரம் முதல் பன்னீராயிரம் போராளிகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சீனாவிடமிருந்து திபெத்தை மீட்க பன்னீராயிரம் படையினர் போதாது.

திபெத்தை மாற்றியமைக்கும் சீனா

கடந்த பத்து ஆண்டுகளாக சீனா திபெத்தில் பல உட்கட்டுமானங்களைச் செய்யும் அபிவிருத்தி என்ற போர்வையில் பல சீனர்களை அங்கு குடியேற்றி அதன் மக்கள் தொகைக் கட்டமைப்பை மாற்றி வருகின்றது. இதனால் அங்கு ஒரு தனிநாட்டுக்கான போர் செய்வது கடினமாக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது. திபெத்தியர்களுக்கும் தலாய் லாமாவிற்கும் இடையிலான தொடர்புகள் தொடர்ந்து துண்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. சீனாவின் முகமறி தொழில்நுட்பம் கொண்ட கண்காணிப்பு ஒளிப்பதிவுக் கருவிகள் மூலமும் பல்வேறுவகையான உளவாடல்களினாலும் திபெத்தியர்கள் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். திபெத்திற்கும் நேப்பாளத்திற்கும் இடையிலான போக்குவரத்துப் பாதைகள் மூடப்பட்டன. திபெத்தில் இருந்து 2மில்லியன் திபெத்தியர்கள் வேறு மாகாணங்களுக்கு இடம்பெயரச் செய்யப்பட்டுள்ளனர்.

சீனாவின் வெள்ளையறிக்கை

சீனாவின் எழுச்சியை முடக்குவதற்கு அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகளுக்குள் திபெத்தின் பிரிவினைவாதத்தை தூண்வதும் உள்ளடக்கப் பட்டிருக்கும் என சீனா கருத இடமுண்டு. அதனால் 2021 மே மாதம் சீனா திபெத் தொடர்பான தனது வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அவ்வெள்ளையறிக்கையில் கூறப்பட்டவை:

1. திபெத் மக்களுக்கு மத சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது,

2. 15வது தலாய் லாமாவை சினாவே தெரிவு செய்யும்,

3. திபெத்திய பௌத்த சமூகம் சமூகவுடமையை(Socialisam) கடைப்பிடிக்க வழிகாட்டப்படும்,

4. திபெத் மீதான சீனக் கட்டுப்பாடு மேலும் இறுக்கப்படும்,

2013-ம் ஆண்டு சீன தேசிய மக்கள் பேரவையில் உரையாற்றிய சீன அதிபர் ஜீ ஜின்பிங் சீனாவை சிறப்பாக ஆள்வதற்கு எமது எல்லைகள் சிறப்பாக ஆளப்படவேண்டும்; எமது எல்லைகள் சிறப்பாக ஆளப்படுவதற்கு திபெத்தில் உறுதிப்பாடு நிலவ வேண்டும் என்றார். அந்த அளவிற்கு திபெத்திற்கு சீனா முக்கியத்துவம் கொடுக்கின்றது. சீனாவின் பல பகுதிகளில் நீர்த்தட்டுப்பாடு நிலவுகின்றது அப்படியிருக்கையில் மிகச் சிறந்த நீர் மூலமான திபெத்தை சீனா இலகுவில் விட்டுக் கொடுக்காது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...