Friday, 17 May 2013

மருத்துவம்: வித்தியாசமான சிரிப்புக்கள் எம்மில் வித்தியாசமான தாக்கங்களை ஏற்படுத்தும்.

சிரிப்பு சிறந்த மருந்து என்பதை நாம் எல்லோரும் அறிவோம். ஜெர்மன் Tuebingen பல்கலைக்கழக்த்தில் Dr Dirk Wildgruber செய்த ஆய்வுகளின் படி சிரிக்கும் விதத்திற்கும் அது ஏற்படுத்தும் தாக்கத்திற்கும் தொடர்பு உண்டு எனக் கண்டறியப்பட்டுள்ளது. எமது ஆரோக்கியத்தில் அவை ஏற்படுத்தும் தாக்கங்களும் வித்தியாசமானவை.

எமது மூளையின் வித்தியாசமான ஒலிகளை பதிவு செய்யும் பகுதி சிரிப்பொலிக்ளுக்கு சிறந்த மாற்றங்களைக் காண்கிறது. மிக இளம் வயதில் இருந்தே எமது உடல் வித்தியாசமான சிரிப்புக்களால் வித்தியாசமாக பிரதிபலிக்கும் தன்மையை அடைகிறது. நகச்சுவைப் பேச்சால் வரும் சிரிப்பு, கிச்சு கிச்சு மூட்டுவதால் வரும் சிரிப்பு, கோமாளித்தனத்தை பார்க்கும் போது வரும் சிரிப்பு இவையாவும் எம் உடலில் வேறு வேறு விதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.



சிரிக்கும் போது எமது மூளையில் ஏற்படும் மாற்றாங்களை ஒளிவருடி( )மூலம் பார்த்த Dr Dirk Wildgruberவும் அவரது குழுவினரும் மகிழ்ச்சி நிறைந்த சிருப்பு ஒலியுடன் சம்பந்தப்பட்ட எமது மூளையின் பகுதிகள் வித்தியாசமான இணைப்புக்களைச் செய்வதாக அறிந்துள்ளனர்.  
From the scans, Wildgruber's team found that joyous and taunting laughter produced different connectivity patterns in parts of the brain involved in sound association, thinking and visual imagery.



வித்தியாசமான சிரிப்புக்கள் வித்தியாசமான இணைப்புக்களை மூளையில் ஏற்படுத்துகின்றன. These different kinds of laughter then spark different connections in the human brain, depending on their context.

இண்டியானா பல்கலைக்கழகத்தில் செய்த இன்னும் ஓர் ஆய்வு சிரிப்பு எமது நோய் எதிர்ப்புச் சக்தியை 40 விழுக்காடு அதிகரிக்கிறது.




Thursday, 16 May 2013

பயங்கரவாதத்திற்கு எதிரான போரா? சுதந்திரப் போருக்கு எதிரான பயங்கரவாதமா?

"முள்ளிவாய்க்கால் முடிவல்ல ஆரம்பம். விழவிழ எழுவோம்."  இது அவசியமானதும் தேவையானதுமான முழக்கம் என்கின்றனர் சிலர். "படைக்கலன்கள் மட்டும்தான் மௌனிக்கப்பட்டன போராட்டம் முடியவில்லை. அது வேறுவடிவத்தில் தொடரும்." இது சரியான நிலைப்பாடுதான் என்கின்றனர் சிலர்.

மாற்றுக் கருத்துக்கள்
"வெளிப்படைத்தன்மை இல்லாமல் எமது போராட்டம் நடந்துவிட்டது. அதனால் அது தோல்வியடைந்து விட்டது." என்று அர்த்தம் கற்பிக்கின்றனர் சிலர்.  "மக்களாட்சி (ஜனநாயகம்) முறைப்படி எமது போராட்டம் நடக்கவில்லை. மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கப்படவில்லை" என தத்துவம் பேசுகின்றனர் சிலர்.

முற்போக்கா போகாமல் குறுக்கால போனாங்கள்

"ஒடுக்கப்பட்ட ஐரிஸ் மக்களுடனோ, அடக்கப்பட்ட சிங்களத் தொழிலாளர்களுடனோ, நசுக்கப்பட்ட இந்திய தலித்துக்களுடனோ நாம் கைகோர்த்துப் போராடாமல்

மாற்றானின் கருத்துக்கள்

"பிராந்திய வல்லரசு இந்தியாவை அனுசரித்துப் போகாத படியால்தான் எமது போராட்டம் தோற்றது.  நாம் அந்தத் தவறை உணர்ந்து இனி இந்தியாவுடன் இணைந்து செயற்படவேண்டும்" இப்படிப் போதிக்கின்றனர் சிலர். "இதைப்பற்றி ஒரு அருமையான கட்டுரையை நான் எழுதினனான்" என்கிறார் ஒருவர்.  "ஒண்டும் வேண்டாம். இனியும் ஒரு அழிவு வேண்டாம். எல்லாத்தையும் விட்டுட்டு பேசாமல் இருப்பம்" எனச் சலிக்கின்றனர் சிலர்.

புலிக்கொடியை மடிச்சு வையுங்கோடா

இனிப் புலி என்ற கதையே வேண்டாம். உந்தப் புலிக்கொடியை இனி மடிச்சு வையுங்கோ. நாங்கள் ஒரு நியாயமான போராட்டத்தை மக்களாட்சி (ஜனநாயகம்) முறைப்படி முன்னெடுத்து பன்னாட்டு மட்டத்தில் எமது போராட்டத்தை எடுத்துச் சென்று நாம் எமது சுய நிர்ணய உரிமையை வென்றெடுக்க வேண்டும்" என வீராப்புப் பேசுகின்றனர் சிலர்.

ஒன்றாக இணைவோம்
"எல்லா அமைப்புக்களையும் ஒன்றாக இணைத்து இனி ஒற்றுமையாகச் செயற்படவேண்டும். யாரையும் துரோகி என்று சொல்லக் கூடாது" என்றும் சிலர் சொல்கின்றனர்.

காலம் மாறக் கருத்து மாறுகிறது.
"2007இல் எங்களுக்கு ஒண்டும் வேண்டாம் எங்களை இப்படியே நிம்மதியா இருக்க விட்டால் காணும்" என்றவர்கள் 2009இல் எல்லாத்தையும் தொலைச்சிட்டு எங்களை நடுத்தெருவில் விட்டிட்டாங்கள்" என்றார்கள். இன்று "அவங்கள் இருந்திருந்தால் இப்படியேல்லாம் நடக்குமா?" என்கிறார்கள்.

பன்னாட்டு மயப்படுத்தி விட்டோம்
எமது போராட்டம் ஐக்கிய நாடுகள் சபையால் விசாரிக்கப்பட்டதுடன் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன; எமது போராட்டம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன; தமிழகத்தில் மாணவர்கள் பொங்கி எழுந்து விட்டனர்; பொதுநலவாய நாடுகள் சபையில் முப்பது நாடுகள் இலங்கையில் அதன் உச்சி மாநாடு நடப்பதை விரும்பவில்லை; உலகின் எல்லா முன்னணி ஊடகங்களும் எமது பிரச்சனையைப் பற்றி குறிப்பிடுகின்றன. மொத்தத்தில் எமது பிரச்சனை பன்னாட்டு மட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது இப்படி ஆர்ப்படிக்கின்றனர் சிலர்.

9/11இன் பின்னர் மோசமான உலக ஒழுங்கு எனப்படும் ஒழுங்கீனம்.
உலக ஒழுங்கு எனப்படும் ஒழுங்கீனம் 1991 சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் மோசமாகியது. அதன் பின்னர் உலகத்தின் காவற்துறை அதிபராக அமெரிக்கா தன்னைத் தானே நியமித்துக் கொண்டது. 2001 செப்டபர் 11-ம் திகதி நடந்த அமெரிக்க நியூயோர்க் நகர இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்கா உலக ஒழுங்கு எனப்படும் ஒழுங்கீனத்தை மேலும் மோசமாக்கியது. ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது மட்டும் போர்ப் பிரகடனம் செய்யலாம் என இருந்த நிலமையை ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களான 1368உம் 1373உம் தனிப்பட்டவர்களால் நடாத்தப்படும் அமைப்புக்கள் மீதும் ஒரு நாடு போர்ப்பிரகடனம் செய்யலாம் என மாற்றியது. எல்லை தாண்டிச் சென்று கொல்லுதல், ஆட்கடத்தல், காணமற் போகச் செய்தல், சட்டத்திற்கு புறம்பான விசாரணை, சட்டத்திற்குப் புறம்பான சிறை, சட்டத்திற்குப் புறம்பான சித்திரவதை ஒழுங்காக நடைபெற்றது. இதைப் பாவித்து அமெரிக்கா உலகப் பந்தையே ஒரு போர்க்களமாக்கியது. இதை தமிழர்களின் போராட்டத்திற்கு எதிராக வஞ்சகமாகத் திசைதிருப்ப கொழும்பிற்கு புது டில்லி உதவியது. இந்தியாவின் எல்லை தாண்டிய பேரினவாதமும் இலங்கையின் எல்லை மீறிய அரச பயங்கரவாதமும் இணைந்து ஈழத் தமிழர்களின் போராட்டத்தை ஒடுக்கின. 1987இல் முன் கதவால் வந்து சாதிக்க முடியாததை 2008இல் பின்கதவால் வந்த இருபதினாயிரம் கொலை வெறிப்படைகள் சாதித்தன.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர்
உலக அரங்கில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சனையைப் பற்றிச் சொல்லுபவர்கள் ஊடகங்களாக இருக்கட்டும் ஐநா மனித உரிமைக்கழகத்தில் இலங்கை அரச படைகள் போரின் போது செய்த அத்து மீறல்கள் தொடர்பாக உரையாற்றும் ஒரு ஐரோப்பிய நாட்டு இராசதந்திரியாகட்டும் ஐநா பொதுச் செயலராகட்டும் அமெரிக்க அரசத்துறைச் செயலராகட்டும் மோசமான பயங்கரவாதத்தை இலங்கை அரசு ஒழித்துக் கட்டியது என்று சொல்லத் தவறுவதில்லை. 2009இற்கு முன்னர் எமது போராட்டத்தைப் பயங்கரவாதம் எனச் சொன்னதிலும் பார்க்க 2009இன் பின்னர் எமது போராட்டத்தை பயங்கரவாதம் என அதிகமாக உரத்துச் சொல்கின்றனர் பன்னாட்டு சமூகம் எனத் தம்மை சொல்லிக் கொள்பவர்கள். இலங்கை அரசுக்கு தாம் கொடுத்த ஆதரவு பிழை என அவர்கள் உணர்ந்து கொண்டுதான் 2009இன் பின்னர் அவர்கள் எமது போராட்டத்தை அதிக உரப்புடன் பயங்கரவாதம் என்கின்றனர். எமது போராட்டத்திற்கு பானாட்டரங்கில் நீதி கிடைக்க வேண்டுமென நாம் கருதினால்; நமது பிரச்சனைக்கு பன்னாட்டரங்கில் தீர்வு கிடைக்க வேண்டுமென நாம் கருதினால் எமது போராட்டம் பயங்கரவாதப் போராட்டம் அல்ல ஓர் எல்லை மீறிய பயங்கரவாத அரசிற்கும் ஒர் எல்லை தாண்டிய  பேரினவாத அரசிற்கும் எதிரான நியாயமான போராட்டம் என்பதை நிரூபிக்க வேண்டிய கடப்பாடு எமது தலையில் உள்ளது.

1978இல் அவ்ரோ விமானத்தில்  குண்டு வைத்துத் தகர்த்தது பயங்கரவாதமல்ல கழுத்து நெருக்கப்பட்ட ஓர் இனம் இக்கட்டான நிலையில் தன்னைப் பாதுகாக்க செய்த ஒரு நகர்வு மட்டுமே என்பதை நாம் மற்றவர்க்கு உணர்த்த வேண்டும். பயணிகள் இறங்கிப் போன பின்னர் வெடிக்கும் படி குண்டு வெடிக்கும் நேரத்தை தயார்படுத்தி வைத்தமை எமது மனிதாபிமானத்தை எடுத்துக் காட்டுகிறது என்பதை நாம் எடுத்துச் சொல்ல வேண்டும். எமது பல நகர்வுகள் உலகத்தின்
அளவுகோலில் பயங்கரவாத நடவடிக்கையாக இருக்கலாம். ஆனால் அது அழிவின் விழிம்பில் நின்று கொண்டு நாம் செய்த தவிர்க்க முடியாத நகர்வுகள் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும். எமக்கு எதிராகக் குற்றம் புரிந்த பன்னாட்டுச் சமூகத்தின் குற்றத்தை நாம் நிரூபிக்காமல் அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்குள் நாம் நின்று செயற்பட்டால் இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் சில அத்து மீறல்கள் நடைபெற்றன அவை தொடர்பாக ஒரு நம்பகரமான விசாரணையும் ஒரு (வரைவிலக்கணமில்லா) நல்லிணக்கமும் தேவை என்ற ஒரு சிறு புள்ளிக்குள் எமது தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவை அடக்கப்பட்டுவிடும். அமெரிக்காவும் இந்தியாவும் எம்மை ஏமாற்றத் தயார். நாம் ஏமாறத் தயாரா?

Wednesday, 15 May 2013

விமானம் தாங்கிக் கப்பல்களிலும் ஆளில்லாப் போர் விமானங்கள்

ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் தமது விமானம் தாங்கிக் கப்பலிலும் ஆளில்லாப் போர் விமானங்களை இணைத்துள்ளன. இவை மற்றப் போர்விமானங்களை போல் பெரியவனவையாகவும் கதுவிகளுக்கு(Radar) புலப்படாத stealth தொழில்நுட்பத்தையும் கொண்டிருக்கின்

அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ பல நாடுகளில் இரகசியமாக அமெரிக்கச் சட்டங்களுக்குக் கட்டுப்படாத ஆளில்லாப் போர்விமானத் தளங்களை வைத்துக் கொண்டு பல நாடுகளை வேவு பார்த்தல், அமெரிக்காவிற்கு எதிரான தீவிரவாதிகளைக் கொல்லுதல் போன்ற பல நடவடிக்கைகளைச் செய்து வருகிறது. பாக்கிஸ்த்தானிற்குள் அத்து மீறி நுழைந்து சிஐஏயினதும் அமெரிக்கப்படைத்துறையினரினதும் ஆளில்லாப் போர் விமானங்கள் பல தாக்குதல்களை மேற்கொண்டன. இவற்றில் பாக்கிஸ்த்தான் படைவீரர்களும் கொல்லப்பட்டதுண்டு. 2013  மே மாதம் பாக்கிஸ்த்தானில் நடந்த பொதுத் தேர்தலில் அமெரிக்க ஆளில்லாப் போர்விமானங்களின் அத்து மீறல்கள் ஒரு முக்கிய விவாதமாகக் காணப்பட்டன. 

மெரிக்காவின் Marylandஇல் உள்Patuxent தியில் 14/05/2013-ம் திகதி USS George என்னும் கப்லில் ருந்து அமெரிக்கக் கடற்படையினர் முன்னோட்டம் விட்டுப்பார்த்த X-47B ரக ஆளில்லாப் போர் விமானங்கள் அமெரிக்கக் கடற்படைக்குஉலகின் எப்பாகத்திலும் ஆளில்லாப் போர்விமானத் தாக்குதல் செய்யக் கூடிய வல்லமையைக் கொடுத்துள்ளது.  X-47B வழமையான Predator எனப்படும் தாக்குதல் ஆளில்லாப் போர் விமானங்களிலும் பார்க்க மூன்று மடங்கு பெரியவை. 


ஆளே தேவையில்ல விமானம்
X-47B ளில்லாப் போர் விமானங்கள் வழமையான ஆளில்லாப் போர் விமானங்களைப் போல் தொலைக் கட்டுப்பாடு செய்யவும் ஒரு ஆள் இதற்குத் தேவைப்படாது. இது தனக்குத் தேவையான சமிக்ஞைகளை கடற்படைக் கப்பலில் இருக்கும் கணனிகளில் இருந்து பெற்றுக் கொள்ளும். இதன் இன்னும் ஒரு முக்கிய அம்சம் விமானிகள் ஓட்டும் போர் விமானங்களிலும் பார்க்க இவை துல்லியமாக இலக்குகளைத் தாக்கும் திறன் பெற்றுள்ளன. X-47B ளில்லாப் போர் விமானங்கள் 19mஇறக்கை மும், 6,350kg எடையும் கொண்ன. மையாதாக்குதல் விமாங்கள் 15m அமும் 499kg எடையும் உடைன. ற்றின் இறக்கைகள் டிக்கக் கூடிவை. இவை விமானம் தாங்கிக் கப்லில் நிறுத்தி வைக்கும் இத்தேவையைக் குறைக்கிது. X-47B ளில்லாப் போர் விமானங்கள் 40,000டிகள் (12,192 meters)  உத்தில் றக்கக் கூடின. அத்துடன் 2,100 nautical miles (3,890 kilometers) தூரம் றக்கக்கூடின. மையான  Predator விமாங்கல் 675 nautical miles வீச்சைமட்டுமே உடைன. அத்துடன் வானிலே வைத்து எரிபொருள் மீள்நிரப்டக் கூடிவை என்தால் அதன் வீச்சுத் தூரம் மேலும் அதிமாகும். 

தேசிய எல்லைளைத் தாண்டி ங்வாதம் செயயும் அமெரிக்காவின் வல்மை அதிரித்துக் கொண்டே போகிது. 

Tuesday, 14 May 2013

கடவுச்சொல்லின் காலம் கடக்கப்போகிறதா?

கடவுச்சொற்களும் பின் எனப்படும் தன் அடையாள இலக்கங்களும் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்று ஆகிவிட்டது. அவற்றை நினைவில் வைத்திருப்பதற்கும் திருடர்களிடம் இருந்து பாதுகாப்பதற்கும் படும்பாடு நாய் படாப்பாடு. உலகிலேயே அதிகப் பாவிக்கப்படும் கடவுச்சொற்கள்களின் தரவரிசைப்  பட்டியல் இது:
2011இல் இருந்த நிலையில் இருந்து  ஏற்பட்ட மாற்றம் அடைப்புக்குறிக்குள்
அமெரிக்க நகரான லஸ் வேகஸில் நடந்த தகவ்ற்தொழில்நுட்ப மாநாட்டில் உரையாற்றிய PayPalஇல் தலமை பாதுகாப்பு அதிகாரி Michael Barrett  கடவுச்சொற்கள் முட்வடையும் காலம் நெருங்கி விட்டது என்றார். இதற்கான முன்னோடியாக ஆப்பிள் நிறுவனம் திகழப்போகிறது என்றார். ஆப்பிளின் ஐபோன் - 6 இல் பெருவிரலடையாளத்தை இனங்காணும் தொழில்நுட்பம் இணைக்கப்படவிருக்கிறது என்று செய்தி அடிபடுகிறது.

Fast IdentityOnline (FIDO) என்னும்  மென்பொருளாலும் வன்பொருளாலும் இனங்காணும் முறைமை ஒன்று ஒரு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இது பின், கடவுச்சொல், பெருவிரலடையாளம் ஆகிய மூன்றும் இணைந்ததாக இருக்கிறது.



ஆனால் இது கடவுச்சொல், பின், பெருவிரலடையாளம் ஆகிய மூன்றும் தேவைப்படுவதால் எமது நிலைமையை இன்னும் மோசமாக்குமா?

Monday, 13 May 2013

பக்கிஸ்த்தான் வயசுக்கு வந்துவிட்டதா? இந்தியாவில் காதல் கொள்ளுமா?

உலகிலேயே மோசமான தீவிரவாதம், அடங்காத மதவாதம், பிரிவினைவாதம், இனவாதம், படைத்துறை ஆதிக்கம், நலிவடைந்த பொருளாதாரம், அமெரிக்க ஆளில்லா விமானங்களின் அத்துமீறல்கள் ஆகிய பிரச்சனைக்குள் அகப்பட்டுள்ள பாக்கிஸ்த்தானில் முதல் தடவையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு அதன் படைத்துறையினரால் கவிழ்க்கப்படாமல் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து இரத்தக் களரிக்கு மத்தியில் தேர்தலை நடாத்தி வேறு ஓர் ஆட்சியாளரைத் தெரிந்து எடுத்துள்ளது.

அதிபர் அசிஃப் அல் சர்தாரி - Mr. Ten Percent
2008-ம் ஆண்டு நடந்த தேர்தல் மூலம் பதவிக்கு வந்த பாக்கிஸ்தான் அதிபர் அசிஃப் அல் சர்தாரி பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் சுல்பிகார் அலி பூட்டோவின் மகளும் முன்னாள் பிரதம மந்திரியுமான பெனாஸீர் பூட்டோவைத் திருமணம் செய்ததன் மூலம் அரசியலில் பிரபலமானவர். 1996இல் ஊழலுக்காக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டவர். 1990இல் பாராளமன்றத்திற்கும் 1997இல் மூதவைக்கும் தெரிவு செய்யப்பட்டவர். 2008இல் அமெரிக்க துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் பெண் வேட்பாளர் சேரா பெயினுடன் கிசுகிசுக்கப்பட்டவர் அசிஃப் அல் சர்தாரி. முன்னாள் பாக்கிஸ்தானிய அதிபர் பெர்வஸ் முசரஃப்பை பதவியில் இருந்து விரட்டியவர் அசிஃப் அல் சர்தாரி. முன்னள் அதிபர் முசரஃப் அதிபர்  சல்தாரியை ‘Asif Zardari is a criminal and a fraud. He’ll do anything to save himself. He’s not a patriot and he’s got no love for Pakistan. He’s a third-rater’ என்று விமர்சித்தார். 2003இல் சுவிஸ் நீதிமன்றில் நிதி மோசடிக்காக ஆறு மாதச் சிறைத்தண்டனையும் $50,000 அபராதமும் விதிக்கப்பட்டவர் அசிஃப் அல் சர்தாரி. இதில் இருந்து அசிஃப் அல் சர்தாரியை முசரப்பே விடுவித்தார். சர்தாரியை அவரது ஊழலுக்காக Mr. Ten Percent என்று அழைப்பர். சர்தாரிக்கு எதிராக நகைச்சுவைகள் கிண்டல்களைப் பகிரங்கப் படுத்தினால் 14 மாதச் சிறைத்தண்டனைக்குள்ளாகலாம். சர்தாரிக்கு பணம் கொடுக்க வேண்டிய ஒருவரிடம் பணத்தை வசூலிப்பதற்கக அவரது அடியாட்கள் அவரது காலில் ரிமோட் கொன்ரூலில் வெடிக்கக் கூடிய குண்டைப் பொருத்தி விட்டு அவரை அவரது வங்கிக்குச் சென்று பணம் எடுத்துத் தராவிடில் அதை வெடிக்க வைப்போம் என மிரட்டிப் பணத்தைப் பெற்றனர்.

விழுந்து எழும்பிய இம்ரான் கான்
முன்னாள் துடுப்பாட்ட வீரர் இம்ரான் கான் தேர்தல் பிரச்சாரத்தின் போது மேடையிலலிருந்து விழுந்து தலையில் பலமாக அடிபட்டார். இதனால் அவருக்கு அனுதாப ஆதரவு கூடியது. தலிபான்களுக்கு உகந்தவரானரும் அமெரிக்க ஆளில்லா விமானத்தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டிப்பவருமான இம்ரான் கான் அதிக இளைஞர்களைக் கவர்ந்தார். ஆனால் கடந்த தேர்தலில் ஓர் இடத்தில் கூட வெற்றி பெறாத இவரது கட்சி இம்முறை கணிசமான வெற்றி பெற்று பூட்டோ குடும்பத்தினரின் பாக்கிஸ்த்தான் மக்கள் கட்சியை மூன்றாம் இடத்திற்கு தள்ளி விட்டது.

தேர்தலில் வெற்றி பெற்ற ஷரிஃப் நவாஸ்
ஏற்கனவே இரண்டு தடவை பாக்கிஸ்த்தானின் தலைமை அமைச்சராகத் தேர்ந்தெடுக்க்கப்பட்டு படைத்துறையினரால் பதவில் இருந்து அகற்றப்பட்ட ஷரிஃப் நவாஸ் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். அவரது வலதுசாரிக் கட்சியான பாக்கிஸ்த்தான் முசுலிம் லீக் - நவாஸ்{Pakistan Muslim League-Nawaz (PML-N)} தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. தேர்தலிலின் போது ஷரிஃப் நவாஸ் தலிபானகளுக்கு எதிராகவோ அமெரிக்க ஆளில்லா விமானங்களின் அத்து மீறல்கள் தொடர்பாகவோ கடுமையான தொனியில் கருத்துத் தெரிவிக்கவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம்
கூட்டாட்சி அரசியல் அமைப்பின் க்கீழ் ஆளப்படும் பாக்கிஸ்த்தானில் நான்கு மாநிலங்கள் இருக்கின்றன. மேலும் ஒரு பிரதேசம் மைய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. பஞ்சாப் மாநிலம் பாக்கிஸ்த்தானின் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கு மேல் கொண்டுள்ளது. இந்த மாநிலம் ஷரிஃப் நவாஸின் கட்சியின் ஆட்சியின் கீழ் அவரது உடன் பிறப்பை முதலமைச்சராகக்  கொண்டு ஆளப்படுகிறது. அங்கு பல முதலீடுகள் செய்யப்பட்டதுடன் தீவிரவாதத் தாக்குதல்களும் குறைவடைந்துள்ளது நவாஸின் வெற்றிக்கு வழிவகுத்தது. ஆனால் நவாஸ் பாக்கிஸ்த்தனியத் தீவிரவாத இயக்கமான தலிபான்களுடன் இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டமையால் இது சாத்தியமானது எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் மொத்த 18 கோடி மக்கள் தொகையில் ஒன்றரைக் கோடி தீவிரவாதிகளைக் கொண்ட நாட்டில் இதைத் தவிர வேறு வழி இருக்கிறதா? தலிபானின் கொள்கைப்படி மேற்கத்தைய பாணி மக்களாட்சி இசுலாமிய மார்க்கத்திற்கு விரோதமானது. தேர்தலின் போது பல வேட்பாளர்கள் தலிபான் இயக்கத்தினரால் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. தேர்தலின் போது பல குண்டு வெடிப்புக்கள், கொலைகள், ஆட்கடத்தல்கள் நடைபெற்றன.

இந்தியாவிற்கு நட்புக்கரம் நீட்டுவாரா நவாஸ்?

இந்தியாவிற்கும் பாக்கிஸ்த்தானிற்கும் இடையில் அண்மைக்காலங்களாக பெரும் எல்லை முறுகல்கள் நடந்து வருகின்றன. எல்லாவற்றிலும் பெரும் முறுகலாக இருப்பது 2008இல் பாக்கிஸ்த்தானில் இருந்து சென்ற லக்ஸர் இ தொய்பா அமைப்பினர்களாகக் கருதப்படுவோர் மும்பை நகரில் நடாத்திய தாக்குதலே. நவாஸ் தான் ஆட்சிக்கு வந்தால் மும்பைத் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடாத்துவேன் என்றும் பக்கிஸ்த்தானிய மண்ணில் இருந்து இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத இயக்கங்கள் செயற்பட அனுமதிக்க மாட்டேன் என்றும் தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்திருந்தார். நவாஸ் இந்தியாவுடனும் ஆப்கானிஸ்த்தானுடனும், அமெரிக்காவுடனும் நட்புறவை விரும்புவதாகத் தெரித்துள்ளார். 1999-ம் ஆண்டு இந்தியாவிற்கும் பாக்கிஸ்த்தனிற்கும் இடையில் நடந்த கார்கில் போரைத் தொடர்ந்து அப்போது தலைமை அமைச்சராக இருந்த நவாஸை அப்போதைய தளபதி பர்வேஸ் முஷாரஃப் பதவியில் இருந்து தூக்கி எறிந்தார். பாக்கிஸ்த்தானியப் படையினர் எல்லை தாண்டி கார்கிலில் நிலைகொண்ட செய்தி அப்போதைய இந்திய தலைமை அமைச்சர் அடல் பிஹாரி வாஜ்பாய் தொலைபேசியில் சொல்லித்தான் தெரியும் எனப்படுகிறது. இதைத் தொடர்ந்து எழுந்த நாவஸிற்கும் முசஃப் முறுகலில் நவாஸைத் தூக்கி எறிந்தார். படைத்துறையினருடன் நல்ல உறவைக் கொண்டிராத நவாஸால் பாக்கிஸ்த்தானின் வெளியுறவுக் கொள்கையில் அதிக செல்வாக்குத் செலுத்தும் படைத்துறையினரின் சம்மதத்தை பெற்று இந்தியாவிற்கு நட்புக்கரம் நீட்ட முடியுமா? ஆனால் நவாஸின் வெற்றிக்கு உதவி வழங்கிய பாக்கிஸ்த்தான் முதலாளிகள் இந்தியாவுடனான நட்புறவை மேம்படுத்துவதன் மூலம் தமது இலாபத்தைப் பெருக்கலாம் என உறுதியாக நம்புகின்றனர். இந்தியாவில் பல பத்திரிகைகளும் பெரு வர்த்தகர்களும் நவாஸின் வெற்றியையிட்டு மகிழ்ச்சியடைந்துள்ளன. இந்திய அரசு நவாஸை இந்தியா வரும்படி விடுத்த அழைப்பை பாராதிய ஜனதாக் கட்சி அவசரப்பட்டு செய்யத வேலை என விமர்ச்சித்துள்ளது. நவாஸ் தனது பதவியேற்பு வைபவத்திற்கு இந்தியத் தலைமை அமைச்சரை தனது பதைவியேற்பு வைபவத்திற்கு அழைத்துள்ளார்.

அமெரிக்காவும் நவாஸும்
பின் லாடனுன் தனது நட்பைப் பெருமையாகச் சொல்லும் ஷரிஃப் நவாஸுடன் அமெரிக்காவின் உறவு எப்படி அமையப் போகிறது? 2014இல் ஆப்கானிஸ்த்தனில் இருந்து வெளியேறவிருக்கும் அமெரிக்காவிற்கு தலிபானுடன் இரகசிய ஒப்பந்தம் செய்யும் நவாஸின் ஆட்சியை எப்படிக் கையாளப் போகிறார்கள்? தீவிரவாதத்தைத் தேர்தலின் போது கடுமையாகக் கண்டித்த நவாஸ் எந்த ஒரு தீவிரவாத இயக்கத்தையும் பெயர் சொல்லிக் கண்டிக்கவில்லை. தலிபானுடன் பேச்சு வார்த்தை நடத்துவேன் எனச் சொல்லும் நவாஸும் தலிபானை ஒழித்துக் கட்டத் துடிக்கும் அமெரிக்காவும் எப்படி ஒன்றாகச் செயற்படப் போகிறார்கள்? இவை நவாஸின் வெற்றிக்குப் பின்னால் எழுந்துள்ள கேள்விகள். Sipah-e-Sahaba Pakistan என்னும் தடைசெய்யப்பட்ட இயக்கத்துடன் நவாஸின் கட்சிக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. பதினெட்டுக் கோடி மக்கள் தொகையில் பத்துக் கோடியினர் 25 வயதிற்கு உட்பட்டவர்கள். இது அமெரிக்க முதலாளிகளுக்கு ஒரு நல்ல சந்தை வாய்ப்பாகும். பிரிக்ஸ்(BRICS) நாடுகளுக்கு வெளியில் இது ஒரு பெரிய சந்தை வாய்ப்பாகும். வளர்ந்து வரும் சீன ஆதிக்கத்தை சமப்படுத்த அமெரிக்காவிற்கு பாக்கிஸ்த்தானுடனான உறவு மிக முக்கியமாகும். தனியார் மயமாக்குதல் போன்றவற்றில் நம்பிக்கையுள்ள உருக்குத் தொழிற்சாலை முதலாளி நவாஸ் அமெரிக்க முதலாளிகளுக்கு உகந்தவராக இருக்கலாம்.

நவாஸின் பெரும் சவாலாக பொருளாதாரம்.

மிக மோசமான மின்சாரத் தட்டுப்பாடு, பணவீக்கம், அந்நியச் செலவாணித் தட்டுப்பாடு, ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள பாக்கிஸ்த்தானியப் பொருளாதாரத்திற்கு நவாஸ் புத்துயிர் அளிப்பார் என முதலீட்டாளர்கள் நம்புகிறார்கள். நவாஸின் வெற்றியைத் தொடர்ந்து பாக்கிஸ்த்தனியப் பங்குச் சந்தைச் சுட்டெண் அதிகரிப்பு அடைந்துள்ளது. நவாஸின் கொள்கைகளான தாராளமயமாக்கலும் தனியார் மயமாக்கலும் முதலீட்டாளர்களுக்கு உகந்தவை.

மிகப் பெரும் சவாலாக படைத்துறை

நவாஸ் எதிர் நோக்கும் சவால்கல் எல்லாவற்றிலும் மோசமான சவால் பாக்கிஸ்த்தானின் படைத்துறையைச் சமாளிப்பதே. பாக்கிஸ்த்தனின் வெளியுறவுக் கொள்கையிலும் பாதுகாப்புக் கொள்கையிலும் படைத்துறையினர் பெரும் செல்வாக்குச் செலுத்தி வருகின்றனர். பாக்கிஸ்த்தான் சுதந்திரம் அடைந்த பின்னரான காலத்தில் அரைப்பகுதி அங்கு படைத்துறையினரின் ஆட்சியே நிலவியது.

தேறுமா பாக்கிஸ்த்தான்
இந்தத் தேர்தல் பாக்கிஸ்த்தானைப் பொறுத்தவரை ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது. அது பாக்கிஸ்த்தானை எந்த வழியில் இட்டுச் செல்லும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். விரைவில் நவாஸ் வாஷிங்டன் செல்லலாம் அல்லது அமெரிக்க அரச செயலர் ஜோன் கெரி பாக்கிஸ்த்தான செல்லலாம் அல்லது இரண்டும் நடக்கலாம். இது நிச்சமாக நடக்கும். அதன் பின்னர் பாக்கிஸ்த்தானிற்கான நிதி உதவியை அமெரிக்கா அதிகரிக்காலம். ஆனால் பாக்கிஸ்த்தான் தேறுவதாயின் தலிபான்கள் அடக்கப்பட வேண்டும் அல்லது கொள்கை மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும். சஷ்டியப்பப் பூர்த்தி செய்த பாக்கிஸ்த்தான் இன்னும் வயசுக்கு வரவில்லை. வெறும் அணுக்குண்டு மட்டும் ஒரு நாட்டின் பலத்தை தீர்மானிக்காது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...