Saturday 31 January 2009

தமிழைத் தொலைக்கும் காட்சிகள்



தொலைக்காட்சிப் பெயரும் தமிழில்லை
நிகழ்ச்சிகளின் பெயரும் தமிழில்லை
காமெடி ரைம் சுப்பர் ரென்
லாஜிக் இல்லா மாஜிக்
வார்த்தைகளும் தமிழில் இல்லை
ஒனியனை கடடிங் பானில் புட்டிங்
பொய்லிங் அன்ட் மிக்ஸிங்
அசிங்கமான பாடலுக்கு
ஐந்து குண்டுகள் நடனமாட
மூன்று குண்டுக்ள் அதை மதிப்பிட
கெமிஸ்ரி வேற்க்கவுட் ஆக
யானையாட எருமையாட என்பது
மானாட மயிலாடவானது
முறையற்ற காதல்கள்
அசிங்கமான கதைகள்
நிறைந்த நாடகங்கள்
தமிழனை யார்தான்காப்பாற்றுவார்?

Friday 30 January 2009

இத்தாலிச் சனியன்.



போடுகிறான் தாளம்
மலையாளும் மேனன்
ஆடுகிறாள் அங்கே – ஒரு
இத்தாலிச் சனியன்.

கொடுத்தாள் கொடும் ஆயுதத்தை
அனுப்பினாள் படை மூவாயிரத்தை
பச்சிளம் குழந்தைகளை சிதறடிக்கிறாள்
அப்பாவித் தமிழர்களைக் கதறடிக்கிறாள்

தாலியிழந்தாள் அந்த இத்தாலி
பறிக்கிறாள் இன்று பலதாலி
பழிதீர்க்கிறாள் பல பலி யெடுக்கிறாள்.
மெளனமானள் கொடுங் கூற்றானாள்.

இலண்டனில் திண்ட கோப்பை கழுவினாள்
இன்று தமிழ் உயிர் பல திண்டு தீர்க்கிறாள்
கொன்று குவிக்கிறாள் நின்றறுக்கிறாள்
பக்சராஜனுக்கு பெரும் பக்க பலமானாள்

Thursday 29 January 2009

சிங்களப் பேய்கள் சிதறி ஓடும்


கால நதியின் மிக நீண்ட ஓட்டத்தில்
இது ஒரு கரடு முரடான வளைவு
திக்கு முக்காட வைக்கும் திருப்பம்
திணறடிக்கும் ஒரு சூழ்நிலை
பிரளயம் போல் வருமொரு களேபரம்
இறுதியில் வரும் பெரும் புரட்சி
தொடரும் எதிரிகளின் பயங்கர வீழ்ச்சி
ஓடுக்கப் பட்டவர்களின் பேரேழுச்சி
வட இந்திய நாய் வாலைச் சுருட்டும்
சிங்களப் பேய்கள் சிதறி ஓடும்

தந்தை பெரியாரை மறந்தாயோ!



திருச்செந்தூர் முத்துக்குமரா
ஈழத்தில் ஆரியப்பேய்கள் போடும்
கோலத்தைக் கண்டு கொதித்தாயோ
உன் உடலதை தீயில் குளிப்பாட்டினாயோ
சுவர் உரசி உன் உடல் நொந்தால்
துடிக்கும் உனைப் பெற்ற தாய்
தீப்பொசுங்கி நீ வெந்ததால்
எப்படித்தான் துடிதுடித்தாளோ
உன் தமிழ்ச் செந்நீர்த் துடிப்பை
நாமெல்லாம் நன்குணர்ந்தோம்
ஆனாலும் உரிமைக்கு உயிர்கொடுக்க
பல வழிகள் காட்டிய பெரியோரை
மறந்தது ஏன் என் கண்ணா
தந்தை பெரியாரை போதனையை
ஏன் மறந்தாய் என் ஐயா!

Wednesday 28 January 2009

போயஸ் தோட்டத்தில் ஒரு மாமி



போயஸ் தோட்டத்தில் ஒரு மாமி – புதுப்
போதனை செய்கிறாள் ஐயோ சாமி
சொல்லுகிறாள் பல பொய்கள்
கேட்குமா அதைத்தான் நாய்கள்

அரகர ஐயோ கன்னடத்து அம்மு
உனக்கு ஏனம்மா இந்த வம்பு
நீதான் ஒரு பெரும் குண்டம்மா
தமிழர்க்கு நீ ஒரு தண்டமா

அபிமன்யு மனைவியோட மாலை மாத்தினாள் – அந்த
ஓரினச் சேர்க்கையாள் ஏதேதோ கத்தினாள்
ஈழத்தமிழர்க்கு பிரச்சனை இல்லையாம்
போராளிகள்தான் பெரும் தொல்லையாம்


கொடுங் சிங்கள கள்ளப் பார்பனக் கூட்டு
தமிழர்க்கு வைக்கிறாங்கய்யா வேட்டு
ஒருநாள் அழியும் ஆரியப் பேய்கள்
ஓடோடும் அந்தச் சொறி நாய்கள்

Tuesday 27 January 2009

தினம் பாடவிது


எதுவிது எனக்கேயிது
மாதிது நல் மதுவிது
குளிரிது இளம் தளிரிது
மலரிது எனை மயக்குது
கொடியிது மிகக் கொடியது
அணைக்கவிது தீ அணைக்குது
துணைக்கிது மனம் துளைக்குது
பனிக்கிது மிக இனிக்குது
கனியிது சுவை உடையது
உடையது பெரும் தடையது
இடையது தான் எங்குளது
இணையுது எதற்கிணையிது
தொடவிது என்றும் தொடருது
நாடவிது சுகம் தேடவிது
தடவவிது தினம் பாடவிது

Sunday 25 January 2009

The way you kiss me.....


ஓடு ஓடு எதிரியே ஓடு ஓடு


ஓடு ஓடு எதிரியே ஓடு ஓடு
குதியது பிடரி பட ஓடு ஓடு

ஒவ்வொரு நீர்த் திவலையும் உனக்கு எமனாகும்
ஒவ்வொரு சிறு சுள்ளியும் உனக்கு கொள்ளியாகும்
ஒவ்வொரு மண்ணும் உனக்கு கண்ணி வெடியாகும்
ஒவ்வொரு அடியும் உனக்கெனி மரண அடியாகும்
ஓடு ஓடு எதிரியே ஓடு ஓடு
குதியது பிடரி பட ஓடு ஓடு

பொடிபடும் இனி உன் யுத்த தாங்கிகளெல்லாம்
அடி படும் இனி உன் யுத்த முனைப்பெல்லாம்
சுடு படும் இனி உன் வெற்றிக் களிப்பெல்லாம்
மண் படும் இனி உன் எந்திரப் பறவைகளெல்லாம்
ஓடு ஓடு எதிரியே ஓடு ஓடு
குதியது பிடரி பட ஓடு ஓடு

பாயும் பார் தமிழர் படையிங்கு
ஓயும் பார் உன் எக்காளமிங்கு
சாயும் பார் உன் கூலிப் படையிங்கு
நாறும் பார் உன் போலி வீரமிங்கு
ஓடு ஓடு எதிரியே ஓடு ஓடு
குதியது பிடரி பட ஓடு ஓடு

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...