அழகு ஒரு மணல் என்றால்
என் சொல்வேன்
நீ மரீனா கடற்கரையடி
முடிவிலா அலையியக்கம்
வேண்டி நிற்கிறேன்
உன்னோடு
பதினைந்து பில்லியன் உடுக்களை
உன் இரு கண்களில்
எப்படி அடக்கினாய்
நீ இருக்கும்வரை
எவருக்கும் தேவைப்படாது
வயகாரா
உன் பெற்றோர்கள்வல்லரசு நாடுகளா
ஏன் இந்தப் பேரழிவு விளைவிக்கும்
ஆயுதத்தை உருவாக்கினர்.
எங்கு கற்பேன்
கூடு விட்டு கூடு பாயும் வித்தையை
உன் இதயத்துள் புக
Saturday, 30 July 2011
Friday, 29 July 2011
ராஜபக்சேக்களுக்கு ஆப்பு வைப்பது யார்?
- சனல்-4 தொலைக்காட்சி ராஜபக்சேக்கள் செய்த போர் குற்றத்தை ஒரு தொடர் நாடகம் போல் ஒளிபரப்பி வருகிறது. பிரித்தானியாவிற்குள் மட்டும் சேவை புரியும் ஒரு தொலைக்காட்சி ஒரு பன்னாட்டு விவகாரத்தில் மிகச்சிறந்த பணியாற்றுகிறது. வெறும் நிகழ்ச்சியாக ஒளிபரப்புவதுடன் நிற்காமல் பன்னாட்டு அமைப்புக்கள் முன்னிலையில் போர்க்குற்றம் நடந்ததை வலியுறுத்துகிறது. அதன் சேவைக்கு தலை வணங்குவோமாக.
- இலங்கைக்கான அமெரிக்க உதவிகளை நிறுத்தக் கோரு முன்மொழிவு அமெரிக்க மூதவை முன் வைக்கப்பட்டது.
- இந்திய மகளிர் அமைப்பு இலங்கையில் தமிழ்ப்பெண்களுக்கு அட்டூழியங்கள் நடக்கும் போது மௌனமாக இருந்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து இப்போது இலங்கை மனித உரிமைகளுக்கு இந்தியா காரணம் என்று குரல் கொடுக்கிறது. மலையகத்தில் பெண் தொழிலாளர்களுக்கு இழைக்கும் கொடுமைகளைப் பற்றி இவர்கள் என்றாவது கவலைப்பட்டார்களா?
- அமெரிக்க அரசச் செயலர் ஹிலரி கிளிண்டன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைபற்றி பேச்சு வார்த்தை நடத்தினார்.
- பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் லியோம் பொக்ஸ் இலங்கை சென்றார். அவரது பயணத்திற்கு எதிராக பிரித்தானியா வாழ் தமிழர்கள் எதிர்ப்புக் காட்டவில்லை. சென்ற ஆண்டு அவர் செல்ல முயன்ற போது அது தமிழர்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.
- அமெரிக்க பிரதி அரசச் செயலர் ரொபேர்ட் ஓ பிளேக் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்து உரையாடினார்.
- பரம வைரிகளாக இருந்த தமிழ்நாட்டுத் தமிழின உணர்வாளர்கள் ஜெயலலிதாவை தேர்தலில் வெற்றி பெற வைத்தனர்.
- இந்திய பாரதிய ஜனதா கட்சியின் நிதின் கட்காரி பிரித்தானியத் தமிழர் பேரவையினரை இலண்டனில் சந்தித்தார்.
- மலேசியாவில் ஈழத் தமிழர்களுக்கு உதவும் அறக்கட்டளை அமைப்பு பெரும் தொகைப் பணம் சேகரித்தது.(20-07-2011)
- இந்திய கர்நாடக மநிலத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக மாநாடு.
மொட்டைகளுடன் முழங்கால்கள் இணைகின்றன.
இந்த நிகழ்வுகள் மொட்டைகளும் முழங்கால்களும் போல்தான் இருக்கின்றன. என்றாலும் இவை யாவற்றிக்கும் ஒரு தொடர்பு இருப்பதாக எம்மால் ஊகிக்க முடியும். அந்தத் தொடர்பாளர் யார் என்பதை ஊகிப்பது சிரமம் அல்ல உறுதிப்படுத்துவது சிரமம். அந்தத் தொடர்பாளர் இலங்கை ஆட்சியாளர்களுக்கு ஒரு ஆப்பு வைக்கும் கைங்கரியத்தில் ஈடுபடுகிறார் என்றும் உறுதியாகச் சொல்ல முடியும். இலங்கை ஆட்சியாளர்களுக்கு ஆப்பு வைக்கும் பட்சத்தில் அவர்களின் ஆபத்பாந்தவனாக இரட்சிக்க வருபவர்கள் இந்தியாவும் சீனாவுமே. அதனால் மேலுள்ள சில நிகழ்வுகள் இந்தியாவின் இரட்சிப்புக்கு எதிரான நடவடிக்கைக்களே என்று பார்க்கும் போது மொட்டைகள் முழங்கால்களுடன் நன்கு இணைகின்றன. இலங்கை ஆட்சியாளர்கள் எதிராக ஆப்பு வைப்பவர்கள் இலங்கையில் ஓர் ஆட்சி முறைமையை விரும்புகிறார்களா அல்லது ஆட்சியாளர்களை மாற்ற முயல்கிறார்களா? தமிழர்களுக்குத் தேவை ஆட்சி முறைமை மாற்றமே.
இது தொடர்பாக மேலு ஒரு பதிவைக் காண இங்கு சொடுக்கவும்:
இலங்கையில் அமெரிக்காவின் அவிற் பாகம்
Thursday, 28 July 2011
ஆட்டம் காண்கிறதா அல் கெய்தா?
மே மாதம் இரண்டாம் திகதி பின் லாடன் கொல்லப்பட்ட பின்னர் அல் கெய்தா இயக்கம் அமெரிக்காவிற்கு எதிரான் ஒரு பலத்த எதிரடியைக் கொடுக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் இன்றுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. இதனால் சிலர் அல் கெய்தா "அந்தளவும்தான்" என்கின்றனர். ஆனால் "பின் லாடனின் முடிவு அல் கெய்தாவின் முடிவல்ல" இதுதான் பின் லாடன் கொல்லப்பட்ட மறுநால் நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையின் தலைப்புச் செய்தி. ஒரு கரந்தடி இயக்கத்திற்கு முக்கியமானது எப்போது பதுங்க வேண்டும் என்பதை நன்கறிந்திருத்தல். ஒரு கரந்தடி இயக்கத்தின் பலத்தையோ பலவீனத்தையோ சரியாகக் கணிப்பிடுவதும் அரிது. பின் லாடன் போன்ற ஒரு தனிப்பட்ட செல்வாக்கு மிக்க தலைவரின் இழப்பு எந்த இயக்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏயின் முன்னாள் தலைவரும் தற்போதைய அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலருமான லியோன் இ பானெற்றா அணமையில் பாக்கிஸ்த்தான் பயணம் மேற் கொண்டிருந்தார். அதன் போது அவர் "We are within reach of strategically defeating al-Qaeda" தந்திரோபாய ரீதியில் நாம் அல்-கெய்தாவைத் தோற்கடிக்கும் நிலையை அண்மித்துவிட்டோம்" என்றார்.
அல் கெய்தாவின் அண்மையப் பின்னடைவுகள்:
1. பின் லாடன் கொலையும் தகவல் களஞ்சியக் கைப்பற்றலும்
அமெரிக்க கடற்படையின் சிறப்பு சீல் படையணியினர் பில் லாடனை அவரது மாளிகையில் வைத்துச் சுட்டுக் கொன்றதுடன் அங்கிருந்த பல கணனிகளையும் கைப்பேசிகளையும் எடுத்துச் சென்றனர். அவற்றிலுள்ள தகவல்கள் அல் கெய்தாவிற்கு எதிரான போரில் கிடைத்த தங்கச் சுரங்கம். அதை வைத்து பாக்கிஸ்த்தானில் உள்ள அல் கெய்தாவிற்கான ஆதரவுத் தளத்தை அமெரிக்கா சிதைத்து வருகிறது.
2. அரபு வசந்தம்
அரபு நாடுகளில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்தமையும் அது இரு நாடுகளில் ஆட்சியாளர்களை அகற்றியமையும் இசுலாமியர்களை அல் கெய்தாச் சித்தாந்தத்தில் இருந்து விலக்கி அவர்களை வேறு விதமாகச் சிந்திக்க வைக்கிறது. இது அல் கெய்தாவிற்கான ஆதரவுத் தளத்தைக் குறைத்து விட்டது. 'அரபு நாட்டு ஆட்சியாளர்கள் அமெரிக்க ஆதரவாளர்கள். அமெரிக்காவிற்கு எதிரான போரில் வென்றால்தான் இந்த ஆட்சியாளர்களைப் பதவியில் இருந்து தூக்க முடியும்" என்றே பின் லாடன் போதித்து வந்தார். ஆனால் துனிசியாவிலும் எகிப்திலும் மக்கள் வேறு விதமாக சிந்தித்து வெற்றி கண்டனர். அரபு வசந்தம் எனப்படும் ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் மேற் கொண்ட எழுச்சி அல் கெய்தாவின் ஆள் சேர்ப்பு நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. இப்போது அல் கெய்தா தங்கள் கொள்கைகளைக் கார்ட்டூன் படங்கள் மூலம் பரப்ப முயல்கிறது.
3. ஆளில்லா விமானங்கள் மூலம் நடக்கும் தொடர் தாக்குதல்கள்.
ஆப்கானிஸ்தானிலும் பாக்கிஸ்த்தானிலும் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் கடந்த சில வருடங்களாக நடாத்தி வரும் தாக்குதல்கள் அல் கெய்தாவிற்கு பலத்த ஆளணி இழப்புக்களை ஏற்படுத்தியதுடன் அவர்கள ஆளணிகளையும் படைக்கலன்களை விரும்பியபடி நகர்த்த முடியாத நிலையை ஏற்படுத்தியது. அமெரிக்கப் படைத்துறையினர் தமது ஆளில்லா விமானத் தாக்குதல்கள் அல் கெய்தாவைப் பின் வாங்க வைத்தது என்கின்றனர். அது மட்டுமல்ல அமெரிக்கா இன்னும் பல புதுவித ஆளில்லா விமானங்களைக் களமிறக்க இருக்கிறது. ஆளில்லா விமானங்களை அதிகம் பயன் படுத்தலாம் என்ற துணிவுடனேயே அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆப்கானிஸ்தானில் இருந்து பாரிய அளவிலான அமெரிக்கப் படைகளை அடுத்த ஆண்டு விலக்கிக் கொள்வதாக அறிவித்தார்.
4. உலகெங்கும் அல் கெய்தாவிற்கு ஆதரவு குறைந்தமை.
2001இல் ஆப்கானிஸ்தானில் ஒரு அரசையே நடத்தி வந்த பின் லாடன் அரபு நாடெங்கும் ஒரு கதாநாயகனாக கருதப்பட்டார். ஆனல் பின்னர் அவரின் முக்கிய ஆதரவுத் தளங்களான சவுதி அரேபியா, பாக்கிஸ்த்தான், ஜோர்டன், மொரொக்கோ, இந்தோனோசியா போன்ற நாடுகளில் செய்த கருத்துக் கணிப்புக்கள் அல் கெய்தாவிற்கு சாதகமாக இல்லை.
5. பிளவுகளை எதிர் கொள்ளும் ஐமன் அல்ஜவஹிரி.
பின் லாடனிற்குப் பின்னர் அல் கெய்தாவின் தலைமைப் பொறுப்பை ஏற்ற ஐமன் அல்ஜவஹிரி தனது இயக்கத்தின் பிளவுகளைத் தடுக்க முடியாமல் தடுமாறுகிறார். அத்துடன் பாக்கிஸ்தானில் இப்போது அல் கெய்தாவிற்கு சாதகமான சூழ்நிலை இல்லை.
ஆப்கானிஸ்தானில் படுவது யேமனில் தழைக்குமா?
இப்போது அமெரிக்காவிற்கு தலையிடி கொடுப்பது AQAP - AL-QUAEDA IN THE ARABIAN PENINSULA ஆகும். இதன் பிரதான தலம் யேமன். இது இப்போது உள்ள அல் கெய்தாவின் இணை அமைப்புக்களில் பலமானது அல்லது அமெரிக்க வார்த்தையில் பயங்கரமானது. பின் லாடனை கொன்ற சில தினங்களில் AQAP தலைவர் ஒலாக்கி மீது குண்டு வீச்சுத் தாக்குதல் ஒன்றை அமெரிக்க சிறப்புப் படையணி மேற் கொண்டது. அவர் தனது வாகனத்தை மாற்றித் தப்பித்துக் கொண்டார். இப்போது அமெரிக்கா யேமன் அரசுடனும் சவுதி அரேபிய அரசுடனும் இணைந்து AQAPஐ ஒழித்துக் கட்ட முயல்கிறது. அத்துடன் பாலைவனத்தில் நன்கு செயற்படக் கூடிய ஆளில்லாத் தாக்குதல் விமானங்களை அமெரிக்கா உருவாக்கி வருகிறது. இவ்விமானங்கள் இன்னும் இரண்டு மாதங்களில் களமிறக்கப்படும்.
பில் லாடன் ஏற்கனவே வென்று விட்டாரா?
பின் லாடனின் முக்கிய கொள்கை அமெரிக்க பொருளாதாரத்தைப் பலவீனப் படுத்தி அதை அடி பணிய வைப்பதே. அவர் அடிக்கடி சொல்வதும் அதுதான். அமெரிக்காவின் இப்போதைய கடன் நெருக்கடி பின் லாடனின் வெற்றியா? இது பற்றி வாசிக்க: கடன் பட்டுக் கலங்கும் அமெரிக்கா.
அல் கெய்தா வித்தியாசமானது.
2001/09/11 அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் அமெரிக்கா தனது பின் லாடன் வேட்டையை தீவிரமாக பல பில்லியன்கள் செலவில் நவீன கருவிகளுடன் முடுக்கி விட்டபோது பின் லாடன் தனது அமைப்பின் நிர்வாகக் கட்டமைப்பில் மாற்றம் கொண்டுவர வேண்டிய நிலை ஏற்பட்டது. பின் லாடன் தன்வசம் எந்த வித தொடர்பாடல் கருவிகளையும் வைத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதை வைத்து அமெரிக்காவால் அவர் இருக்கும் இடத்தை அறிந்திருக்க முடியும். இதனால் பின் லாடன் தனது அல் கெய்தாவை ஒரு franchise இயக்கமாக மாற்றினார். அதன்படி வேறு நாடுகளில் இருக்கும் அல் கெய்தா இயக்கம் பின் லாடனின் கொள்கைகளுக்கு அமைய தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து செயற்பட முடியும். அதனால் இப்போது அல் கெய்தா ஒரு தலமையின் கட்டளையின் கீழ் இயங்கும் கிளைகளைக் கொண்ட இயக்கமல்ல. இந்த அமைப்பு இப்போது அல் கெய்தாவிற்கு சாதகமாக இருக்கிறது. தலையில் வேட்டையைத் தொடங்கிய வால்களைத் தேடிப் பிடிக்க பல காலம் எடுக்கும்.

Wednesday, 27 July 2011
மேலும் போர்க்குற்ற ஆதாரங்களை சனல்-4 தொலைக்காட்சி அம்பலப் படுத்துகிறது.
"மக்களைக் கண்டபடி சுட்டனர். கத்திகளால் குத்தினர். நாக்குகளை அறுத்தனர். பெண்களின் மார்புகளை அறுத்தனர். மக்களை இரத்த வெள்ளத்தில் நனைந்தபடி கண்டேன்" இப்படி விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின் இறுதி நாள் காட்சிகளை இலங்கைப் படையில் 58வது அணியில் முன்னணிப் படை அதிகாரியான பெர்னாண்டோ என்பவர் சனல்-4 தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார்.
"இதை ஒரு வெளி ஆளாக இருந்து பார்க்கும் போது அவர்கள் நான் நினைகிறேன் அவர்கள் கொடிய மிருகங்கள். அவர்களது இருதயம் மனிதாபிமானமற்ற மிருகங்களினுடையதைப் போன்றது." என்று நடந்தவற்றை கண்ணீர் மல்க நினைவு கூர்ந்தார் பெர்னாண்டோ என்கிறது சனல்-4.
மண்ணால் மூடப்பட்ட 50,000 பிணங்கள்.
"அப்பாவிச் சிறுவர்கள் பெருந்தொகையானோரும் முதிர்ந்தோரும் கொல்லப்பட்டனர் காயப்பட்டவர்களையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. ஒரு பெண்ணை ஆறு பேர் கற்பழித்ததை என் கண்ணால் கண்டேன். போர் முனையில் இருந்த படைவீரர்களின் இருதயங்கள் கல்லாகிவிட்டன. அவர்கள் மானிடத் தன்மையை இழந்து விட்டனர். அவர்களை நான் இரத்தக் காட்டேரிகள் என்பேன். 1500 பிணங்களை புல்டோசர்களால் மண்போட்டு மூடுவதைக் கண்டேன். இப்படி 50,00பிணங்கள் மண்ணால் மூடப்பட்டன." என்றார் பெர்னாண்டோ.
சரணடைந்தவர்களைச் சுட்டுக் கொல்லும் படி கோத்தபாய ராஜபக்ச தற்போது ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கான உதவித் தூதுவராக இருப்பவரும் போரின் போது 58வது படையணியின் பிரிகேடியருமான ஷவேந்திர சில்வாவிற்கு உத்தரவிட்டார் என்று இன்னொரு அதிகாரி சஸ்ருத்த சனல்-4 இற்கு தெரிவித்துள்ளார்.
சனல் - 4 இன் செய்தியைக் காண கீழே சொடுக்கவும்:
சனல் - 4
சனல் - 4 தொலைக்காட்சி இதுவரை பல காணொளிகளை வெளிவிட்டுள்ளது. ஒரு 49 நிமிடக் காணொளியை ஐக்கிய நாடுகள் சபையிலும் அதன் மனித உரிமைக் கழக்த்திலும் வெளியிட்டது. இன்று வெளிவிட்ட காணொளி மிக நம்பிக்கைக்குரிய சாட்சியத்துடன் வெளிவிடப்பட்டுள்ளது. பெர்னாண்டோ என்பவரை இனி இலங்கை அரசு ஒரு பொய்யன் என்றோ அல்லது ஒரு போலியான ஆள் என்றோ அல்லது ஒரு தமிழரை வைத்துத்தான் சனல்-4 நாடக மாடுகிறது என்று பரப்புரை செய்யலாம்.
இன்னும் சாட்சியங்கள் வருமா?
சனல்-4 இன்னும் காணொளிகளை வெளிக் கொண்டுவருமா? அல்லது வைத்திருக்கும் சான்றுகளை ஒன்றன் பின் ஒன்றாக வெளிவிடுகிறதா? இன்னும் பல வெளிவர வேண்டும் இதுவரை வெளிவந்தவை ஒரு சிறு பகுதியே. பாவிக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் பற்றிய சான்றுகள் வரவேண்டும். போர்க்குற்றத்தில் இந்தியாவின் பங்கு அம்பலப்படுத்தப் படவேண்டும்.
கலக்கமடைந்துள்ள ராஜபக்ச குடும்பம்
கோத்தபாய ராஜபக்சவைத் தொடர்பு கொண்டு புதிய சாட்சியங்கள் பற்றி வினவிய சனல்-4 செய்தியாளர் ஜொனார்த்தன் மில்லர் ரஜபக்ச குடும்பம் கலங்கமடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
பெர்னாண்டோவின் சாட்சியத்தைப் பற்றிக் குறிப்பிட்ட மார்க் எலிஸ் என்னும் பன்னாட்டு சட்டவாளர் சபையின் நிர்வாக இயக்குனர் போர்க்குற்றத்திற்கான போதுமான சாட்சியம்(prima facie) இது என்றார்.
பான் கீ மூன் இனி சும்மா இருக்க முடியாது.
சனல்-4 இற்கு மேற்படி சாட்சியத்தைப் பார்த்த சட்ட நிபுணர் இது போர்க்குற்றத்திற்கு போதுமான சாட்சி என்கிறார். பெர்னாண்டோ என்பவரை ஐநா தேடிப் பிடித்து அவரின் சாட்சியத்தைப் பதிவு செய்ய வேண்டும். இன்னும் ஏன் மௌனம் பன்னாட்டு நீதி மன்றமே பான் கீ மூனே?

நீதி பிழைத்தது அமெரிக்காவில் கற்பழிக்கப்பட்ட பெண்ணைப் பழிவாங்கிய காமுகன்.
ஒரு பொலிவூட் திரைப்படக் கதை போலானது அமெரிக்காவில் ஒரு பெண்ணின் வாழ்க்கை. முதலில் ஒரு பொய்யனால் ஏமாற்றப்பட்டாள். அவனால் கற்பழிக்கப்பட்டாள். அவளைத் துப்பாக்கி முனைக் கொள்ளைக்காரியாக பொய்யாக வழக்குப் பதிவு செய்து சிறையிலும் தள்ளப்பட்டாள்.இது சீமோனா சுமசாரின் கண்ணீர்க் கதை.
புத்திசாலியான சீமோனா படித்துப் பட்டம் பெறவில்லை. அவள் புத்திசாலித்தனமும் திறமையும் அவளுக்கு Morgan Stanleyஎன்னும் நிறுவனத்தில் analyst வேலையையும் தேடிக்கொடுத்தது. சொந்தமாக ஒரு உணவகமும் நடத்தி வந்தாள். அவளது வாழ்வில் ராம்ரத்தன் குறுக்கிடும்வரை எல்லாம் ஒழுங்காகவே இருந்தது. சீமோனாவின் உணவகத்திற்கு 2006இல் ஒரு கனவான் போல் உடையணிந்து உணவருந்த வந்த ராம்ரத்தன் தன்னை ஒரு காவற்துறையின் உளவுப் பிரிவில் வேலை செய்பவனாக சீமோனாவிடம் அறிமுகம் செய்து கொண்டான். சீமோனாவை தன் காதல் வலைக்குள்ளும் வீழ்த்திவிட்டான். காதலனாக இருந்தவன் மெல்ல அவள் வீட்டிற்குள்ளும் குடி புகுந்து விட்டான். சீமோனாவிற்கு அவன் ஒரு பொய்யன் என்று அறிய அதிக காலம் பிடிக்கவில்லை. அவன் வேலை ஏதும் செய்வதில்லை. அவனை வெளியேறுமாறு வேண்டினாள். மறுத்த அவன் 2009 மார்ச் மாதம் சீமோனாவின் வாயை செலோரேப்பால் ஒட்டிவிட்டு கற்பழித்து விட்டான். ஆத்திரம் கொண்ட சீமோனா காவற்துறையிடம் முறையிட்டாள். அவன் கைது செய்யப்பட்டான். தனது நண்பர்கள் மூலம் சீமோனாவை மிரட்டிப்பார்த்தான் ராம்ரத்தன். அவள் மசியவில்லை.
ராம்ரத்தன் ஒரு காவல்துறை சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நாடகப்(Crime Scene Investigation) பித்தன். தனது தொலைக்காட்சி நாடக மூளையைப் பயன்படுத்தத் தொடங்கினான். இருவரைப் பணம் கொடுத்து தங்களை ஒரு இந்தியப் பெண் துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்ததாக காவல்துறையில் முறையிட வைத்தான். அவர்களும் அவன் சொன்னபடியே செய்தனர். அவர்கள் காவல் துறைக்கு கொடுத்த அடையாளம் வண்டி இலக்கம் போன்றவற்றை வைத்து காவல்துறை சீமோனாவைக் கைது செய்தது. ராம்ரத்தன் ஒரு கள்ளக் குடியேற்றவாசியை இதற்கு தன் மூளையைப் பாவித்து ஒழுங்கு செய்தான். இப்படிச் செய்வதன் மூலம் அவர்களுக்கு சிறப்பு விசாவை அரசு வழங்கும் என்றும் போதித்தான். அவர்களும் அவனால் ஏமாற்றப்பட்டனர். போதாத காலம் சீமோனாவின் உணவகம் அப்போது நட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. அவளுக்குப் பணத்தட்டுப்பாடும் இருந்தது. சாட்சியங்கள் சரியாக இருந்ததனால் பணத்தட்டுப்பாட்டால் சீமோனா கொள்ளையடித்தாள் என்று சிறையிலடைக்கப்பட்டாள்.
பின்னர் காவற்துறைக்கு ஒரு அனாமதேய தகவல் ராம்ரத்தனைப் பற்றி கிடைத்தது. அதில் ராம்ரத்தனின் தொலைபேசியொன்றின் இலக்கமும் கொடுக்கப்பட்டது. அந்த தொலைபேசியை வைத்து சீமோனாவால் கொள்ளையடிக்கப்பட்டவர்களுடன் ராம்ரத்தன் பலமுறை தொடர்பு கொண்டதைக் காவல் துறையினர் கண்டறிந்தனர். அது மட்டுமல்ல சீமோனாவின் தொலைபேசியின் படி அவள் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நேரத்தில் அவள் வேறு இடங்களில் இருந்ததையும் காவற்துறை அறிந்து கொண்டது. உண்மைகளைக் காலம் தாழ்த்தி காவற்துறை அறிந்து கொண்டது. அமெரிக்க காவற்துறை வரலாற்றில் இப்படி ஒரு சோடிக்கப்பட்ட வழக்கைத் தாம் கண்டதில்லை என்கின்றனர். காவற்துறையினரினதும் சட்டத்துறையினரதும் பயிற்ச்சிக் கல்லூரிகளில் சீமோனாவின் வழக்கு இடம் பிடித்துக் கொண்டது.
சீமோனா இப்போது காவற்துறைக்கு எதிராக பெரும் நட்ட ஈடு கோரி வழக்குத் தொடர்ந்துள்ளாள்.

ராம்ரத்தன் |

கற்பழிக்கப்பட்ட இந்தியப் பெண் தொடர்ந்து பழிவாங்கப்பட்டாள் அமெரிக்காவில் பிழைத்தது நீதி

சீமோனா இப்போது காவற்துறைக்கு எதிராக பெரும் நட்ட ஈடு கோரி வழக்குத் தொடர்ந்துள்ளாள். அவள் கூறுவது: "From the beginning, I said he made it up. I never thought my life would become a cop film,' the former Morgan Stanley analyst told the New York Times. 'From the beginning I was presumed guilty - not innocent. I felt like I never had a chance. 'I can never have faith in justice in this country again.'

Tuesday, 26 July 2011
கதறிய "பிரேதம்" தலை தெறிக்க ஓடிய காவலாளிகள்.
தென் ஆபிரிக்காவின் கேப் ரவுனின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள ஒரு சிறு ஊரில் பிரேத அறையில் காவலுக்கு இருந்த இரு காவலாளிகள் ஒரு "பிரேதம்" இங்கு குளிருது என்னை இதற்குள் இருந்து எடுங்கள் என்ற குரல் கேட்டுத் தலை தெறிக்க ஓடினர். பின்னர் ஊர்மக்கள் உதவியுடன் பிரேத அறைக்கு மீண்டும் வந்து அவசர சிகிச்சை வண்டியை அழைத்து மருத்துவ மனைக்கு கொண்டு சென்றபோது அந்த "பிரேதம்" உயிருடன் இருப்பதை அறிந்து கொண்டனர்.
அந்த 50 வயதானவர் இறந்துவிட்டார் என நம்பிய அவரது குடும்பத்தினர் தனியார் அமரர் சேவையை அணுகி அவரது உடலை இறுதிக் கிரியைகள் வரை ஒரு பிரேத அறையில் வைக்க ஏற்பாடு செய்தனர். ஆனால் அவர் இறக்கவில்லை. அவரது உடலைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஒருவர் இறந்துவிட்டார் என்பதை தீர்மானிக்கும் சட்ட பூர்வ உரிமை மருத்துவர்களுக்கும் காவல்துறைக்கும் தான் உண்டு என்றனர்.

Monday, 25 July 2011
கடன் பட்டுக் கலங்கும் அமெரிக்கா.
அமெரிக்காவின் கடன் உச்ச வரம்பு(Debt Ceiling)
அமெரிக்க அரசு எவ்வளவு கடன் படலாம் என்பதற்கு என்று ஒரு உச்ச வரம்பு (debt ceiling) உள்ளது. இதை அமெரிக்க பாராளமன்றத்தின் (காங்கிரசு) இரு அவைகளான மக்களவையும் மூதவையும் முடிவு செய்கின்றன. அமெரிக்காவின் இப்போதைய கடன் உச்ச வரம்பு 14.3ரில்லியன் டொலர்கள் ($14,300,000,000,000). அமெரிக்காவின் கடன் சுமை அதிகரிப்பதால் இந்த உச்ச வரம்பை உயர்த்த வேண்டும். அதுவும் ஆகஸ்ட் 2-ம் திகதிக்கு முன்னர் இது அமெரிக்க பாராளமன்ற அவைகளால் ஒரு சட்டமாக அங்கீகரிக்கப் படவேண்டும். இந்த உச்சவரம்பை உயர்த்தி மேலும் கடன் பட்டு கடன் அடைக்க வேண்டும். அல்லாவிடில் அமெரிக்கா தனது கடனுக்கான வட்டிகளைச் செலுத்த முடியாத நிலை ஏற்படும். அமெரிக்கக் கடன் வளரத் தொடங்கியபின் - 1980 இற்குப் பின்- 39தடவை உயர்த்தப் பட்டுள்ளன. ரொனால்ட் ரீகன் நிர்வாகத்தில் மட்டும் 17தடவை உயர்த்தப்பட்டன.
பராக் ஒபாமாவின் இக்கட்டான நிலை.
அமெரிக்க அதிபருக்கு நிர்வாக அதிகாரம் மட்டுமே உண்டு. சட்டவாக்க அதிகாரம் மக்களவையிடமும் மூதவையிடமுமே உண்டு. முதலில் மக்களவையில் சட்ட மூலம் நிறவேற்றப்பட்டு பின்னர் மூதவையில் அங்கீகரிக்கப்பட்டு ஒரு சட்டம் அமூலுக்கு வரும்.தற்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபமா சனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர். மக்களவையில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருப்பதால்பராக் ஒபாமா இக்கட்டான நிலையில் இருக்கிறார். மூதவையில் பராக் ஒபாமாவின் சனநாயகக் கட்சியினர் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள். 2010இல் நடந்த மக்களவைத் தேர்தலில் குடியரசுக் கட்சியினர் அரச செலவீனங்களைக் குறைப்போம் என்ற வாக்குறுதியுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிறது. இரு கட்சியினரினதும் வெற்றி வாய்ப்புக்கள் இந்த கடன் நெருக்கடியை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதில் தங்கி இருக்கிறது.
எந்த வழி
கடன் சுமை அதிகரித்த அமெரிக்கா செய்ய வேண்டியவை:
1. செலவுகளைக் குறைத்தல். இது வறிய மக்களின் வாழ்வாதரத்தைப் பதிக்கும். அரச நலன்புரி சேவைகளுக்கான செலவுகள் குறைக்க வறிய மக்கள் பாதிக்கப்படுவர். மாணவர்கள் பாதிக்கப்படுவர். சுகாதார சேவைகள் பாதிக்கப்படும். பாதுகாப்புச் செல்வீனங்கள் குறையும்.
2. வரிகளை அதிகரித்தல். இது அமெரிக்கப் பணக்காரர்களையும் வர்த்தக நிறுவனங்களிலும் பாதிக்கும். பொருளாதார வளர்ச்சி குன்றும்
3. மேலும் கடன் படல். அமெரிக்கா மேலும் கடன் பட கடன் உச்ச வரம்பை உயர்த்த வேண்டும்.
ஒபாமா இந்த மூன்றையும் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறார். ஆனால் எதை எந்த அளவில் செய்வது என்பதில் அமெரிக்காவின் இரு கட்சியினரிடையே முரண்பாடு.
அமெரிக்க மக்களவைத் தலைவர் ஜோன் போர்னர் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் 22-07-2011இலன்று கடன் நெருக்கடி பற்றி கலந்துரையாடினார். ஒபாமா செல்வந்தர்கள் மீதான வரியை அதிகரிக்கும் யோசனையை முன் வைத்தபடியால் மக்களவைத் தலைவர் ஜோன் போர்னர் பேச்சு வார்த்தையை முறித்துக் கொண்டு வெளியேறிவிட்டார். வலது சாரியான அவர் வரி அதிகரிப்பை விரும்பவில்லை. ஒபாமா பல சமூக சேவை சுகாதார சேவைச் செலவீனங்களைக் குறைக்க ஒத்துக் கொண்டும் மக்களவைத் தலைவர் ஜோன் போர்னர் பேச்சை முறித்ததைப் பலர் விரும்பவில்லை.
அமெரிக்கக் கடன் நெருக்கடியின் பின்னணி.
2010இல் ஒபாமாவும் மக்களவையும் அரச செலவீனங்களை மூன்று ரில்லியன் டொலர்களால் குறைக்கவும் வரி வருமானத்தை ஒரு ரில்லியன் டொலர்களால் அதிகரிக்கவும் ஒத்துக் கொண்டனர். 2011 ஜனவரியில் அறுவர் குழு எனப்படும் இரு கட்சிகளையும் சேர்ந்த ஆறு மூதவை உறுப்பினர்களைக் கொண்ட குழு அமெரிக்காவின் நீண்டகாலக் கடன் சுமையைக் குறைக்க உடன்பட்டது. இக்குழுவிற்கு அமெரிக்க உப அதிபர் பிடென் தலைமை தாங்கியதால் பிடென் குழு என்றும் அழைப்பர்.. 2011இல் குடியரசு உறுப்பினர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மக்களவை முந்தைய ஆண்டிலும் பார்க்க 61பில்லியன் டொலர்கள் குறைவான செலவீனங்களைக் கொண்ட பாதிட்டை நிறைவேற்ற அதை ஒரு மாதம் கழித்து சனநாயக கட்சி உறுப்பினர்களை பெரும்பான்மையாகக் கொண்ட மூதவை நிராகரித்தது. 2011 ஏப்ரலில் அமெரிக்க அரசின் பாதீடு நிறை வேற்றப்படாமல் அரச நிர்வாகம் இழுத்து மூடப்படுமா என்ற நெருக்கடியின் விளிம்பு வரை அமெரிக்கா இட்டுச் செல்லப்பட்டது. இறுதியில் பத்து வருடங்களில் ஆறு ரில்லியன் டொலர்கள் செலவீனக் குறைப்புடன் அரச பாதீட்டை மக்களவை நிறைவேற்றியது. 2011 மே மாதம் 9-ம் திகதி அமெரிக்க மக்களவைத் தலைவர் ஜோன் போர்னர் கடன் உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டால் அதே அளவு செலவீனக் குறைப்புச் செய்யப்பட வேண்டும் என்று சூளுரைத்தார். 11-05-2011 மக்களவை கல்வி, தொழில், சுகாதார சேவை போன்றவற்றிற்கான செலவீனக் கட்டுப்பாகளை முன்வைத்தது. 16-05-2011 அமெரிக்க அரசு தன் கடன் உச்சவரம்பான 14.3 ரில்லியன் டொலர்களை எட்டியது. 17-05-2011 அறுவர் குழுவிற்குள்(பிடென் குழு) முரண்பாடுகள் தோன்றின. 31-05-2011 இலன்று அமெரிக்க மக்களவையில் கடன் உச்சவரம்பை உயர்த்தும் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது. 23-06-2011 சனநாயகக் கட்சியினர் வரி விதிப்பை 400பில்லியன்களால் அதிகரிக்கப் பார்க்கிறார்கள் என்று குறை கூறி மீண்டும் அறுவர் குழுவிற்குள்(பிடென் குழு) முரண்பாடுகள் உருவாகின. ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து ஒபாமாவும் குடியரசுக் கட்சியினரும் தொடர் பேச்சுவார்த்தைகளிலும் இழுபறிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். குடியரசுக் கட்சியினர் கேட்கும் செலவீனக் குறைப்பிற்கு சனநாயாகக் கட்சியினர் ஒத்துக் கொள்கிறார்கள் இல்லை. சனநாயக் கட்சியினர் கேடும் வரி அதிகரிப்புக்களுக்கு குடியரசுக் கட்சியினர் ஒத்துக் கொள்கிறார்கள் இல்லை.
அமெரிக்கத் திறைசேரி
அமெரிக்கா தனது கடன் உச்ச வரம்பை ஆகஸ்ட் இரண்டாம் திகதிக்கு முன்னர் உயர்த்தாவிடில் வரலாற்றில் முதல் முறையாக தனது கடன் நிலுவையைச் செலுத்தாத நிலை ஏற்படும் என்று எச்சரிக்கிறது. குடியரசுக் கட்சியினர் கட்சி நலன்களுக்காக அமெரிக்கா தனது கடன்களைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட வேண்டும் என்று விரும்புகின்றனர். குடியரசுக் கட்சியினர் கட்சி அரசியலுக்கு அப்பால் நின்று சிந்திக்க வேண்டும் என்று திறைசேரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்லாவிடில் உலக நிதிச் சந்தையில் பெரும் நெருக்கடி ஏற்படும் என்றும் பலர் கருதுகின்றனர்.
TEA Party
அமெரிக்காவில் 2009இல் இருந்து TEA Party (தேநீர் விருந்து கட்சி அல்ல) என்று ஒரு பழமைவாதக் கும்பல் வரி அதிகரிப்புக்களை எதிர்த்து வருகின்றது. இதுவும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் வரி அதிகரிப்பை பலமாக எதிர்க்கிறது. இது ஒரு இனவாதக் கும்பல் என்ற குற்றச்சாட்டும் உண்டு. குடியரசுக் கட்சியிலும் மக்காட்சிக் கட்சியிலும் உள்ள வரி விதிப்பிற்கு எதிரான அரசியல்வாதிகள் முக்கியமாக அமெரிக்கப் பாராளமன்றமான காங்கிரசின் இரு அவைகளான மக்களவை, மூதவை ஆகியவற்றின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய அமைப்பு TEA (Taxed Enough Already) Party எனப்படும்.
உலகெங்கும் அதிர்வலைகள் பாயும்
அமெரிக்கா தனது கடன் உச்ச வரம்பை உயர்த்தாவிடில் அமெரிக்காவின் கடன்படு திறன் குறைக்கப்படும் என்று Standard & Poor அறிவித்துள்ளது அமெரிக்காவின் கடன்படு திறன் குறைப்பு உலக வட்டி வீதத்தை உயர்த்தலாம். அமெரிக்காவின் கடன் உச்ச வரம்பு உயர்த்தப்படாமல் அது தன் கடன் நிலுவைகளைச் செலுத்த முடியாமல் போனால் அமெரிக்கக் கடன் முறிகளின் வீழ்ச்சியடையலாம். வட்டி வீதங்கள் அதிகரிக்கப்படலாம். பன்னாட்டு நிதிச் சந்தையைப் பொறுத்தவரை அமெரிக்கா தும்மினால் பல நாட்டு நிதிச் சந்தைகளிற்கு தடிமன் பிடிக்கும். இபோது அமெரிக்க நிதிச் சந்தைக்கு நிமோனியா ஏற்படும் ஆபத்து உள்ளது. அமெரிக்க நிதிச் சந்தையில் நிமோனியா என்றால் உலகச் சந்தையில் என்ன நடக்கும் என்பதுதான் பலரின் கவலை.
பிந்திய செய்திகள்:
1. 2011-ஜூலை 25th 5.00 GMT: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் அமெரிக்க கடன் உச்ச வரம்பை உயர்த்துதல் தொடர்பாக ஒரு உடன்பாடு எட்ட முடியும் என்று தெரிவித்துள்ளார். எண்ணெய் விலை ஒரு டொலர்களால் குறைந்தது. உலக பொருளாதார மந்தம் தொடரலாம் என்ற அச்சம் இதன் காரணம்.
2. 2011-ஜூலை 25th 6.00 GMT: அமெரிக்க நிதி நெருக்கடியை ஒட்டி பங்குகளினதும் கடன் முறிகளினதும் விலைகள் வீழ்ச்சியடைகின்றன. தங்கத்தின் விலையும் சுவிஸ் பிராங்கின் நாணயமாற்று வீகிதமும் உயர்ந்துள்ளன. முதலீட்டாளர்கள் தங்கள் பணங்களை பாதுகாப்பாக தங்கத்திலும் சுவிஸ் வங்கிகளிலும் முதலீடு செய்கிறார்கள்.
3. 2011-ஜூலை 25th 9.40 GMT: Senate Majority Leader Harry Reid அவர்கள் 2.7ரில்லியன் டொலர்கள் செலவீனக் குறைப்பும்(பத்து ஆண்டுகளில்) அதே அளவு கடன் உச்ச வரம்பு உயர்த்தலும் கொண்ட ஒரு சட்ட மூலத்தைத் தயாரித்துள்ளார். இதில் சமூக, சுகாதாரத் துறைகளுக்கான செலவீனங்கள் குறைக்கப்படமாட்டாது.
3. 2011-ஜூலை 25th 10.00 GMT: அமெரிக்க மக்களவைத் தலைவர் ஜோன் போர்னர் கடன் உச்ச வரம்பை உடனடியாக ஒரு ரில்லியன் டொலர்களாலும் பின்னர் அடுத்ததாஅண்டு ஒருரில்லியன் டொலர்களாலும் உயர்த்தும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
4. 2011-ஜூலை 25th 11.30 GMT: ஆசியப்பங்குகள் விலை வீழ்ச்சி. அதில் சீனப் பங்குகள் பெரும் வீழ்ச்சியைக் கண்டன.
5. 2011-ஜூலை 25th 15.50 GMT தங்கத்தின் விலை என்றுமில்லாத அளவு உயர்வு. Gold prices vaulted to a record $1,624.30 a troy ounce shortly after electronic trading opened Sunday night as buyers in Asia leapt at the chance to protect their wealth from rising uncertainty.
6. 2011-ஜூலை 26th 09.40 GMT: அமெரிக்க பாடகி அமியின் இறப்பையும் அமெரிக்கக் கடன் நெருக்கடியையும் சம்பந்தப்படுத்தி தனது டுவிட்டரில் எழுதியமைக்காக அமெரிக்க மக்களவை உறுப்பினர் பில்லி லோங் கடுமையான கண்னத்துக்கு உள்ளாகியுள்ளார். அவர் எழுதியது: #Amy Winehouse before it was too late. Can anyone reach Washington before it's too late? Both addicted - same fate???
Sunday, 24 July 2011
Being with you always makes me stronger
The wave in your walk
The move in you hip
The softness of your body
The words from your eyes
Always make me mad
As we walk side by side
With our hands clinch together
Along the bank of Thames
The sweet odour of you
Always makes me intoxicated
The mere thoughts of you
A sweet burden in my heart
We will never go apart
Being with you in my dream
Always make me stronger
The move in you hip
The softness of your body
The words from your eyes
Always make me mad
As we walk side by side
With our hands clinch together
Along the bank of Thames
The sweet odour of you
Always makes me intoxicated
The mere thoughts of you
A sweet burden in my heart
We will never go apart
Being with you in my dream
Always make me stronger
Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...