Saturday, 17 November 2012

ஹமாஸ் பிரதம மந்திரியின் பணிமனை தரைமட்டம்.

14/11/2012இல் தொடங்கி நான்காவது நாளாகத் தொடரும் காசா மீதான இஸ்ரேலின் பாதுகாப்புத் தூண் படை நடவடிக்கையில் (Operation Pillar of Defense) எட்டுச் சிறுவர்கள் உட்பட 38 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். வெள்ளிக் கிழமை(16-ம் திகதி) அமெரிக்க அதிபர் ஒபாமா இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவுடன் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார்.

ஹமாஸின் படைத்துறைப் பிரிவான Ezzedine al-Qassam Brigadeஇன் தலைவர் அஹமட் அல் ஜபாரியை இஸ்ரேலியப்படையினர் தமது பாதுகாப்புத் தூண் படைநடவடிக்கை (Operation Pillar of Defence) மூலம் நவம்பர் 14-ம் திகதி கொன்றதில் இருந்து இருதரப்பு மோதல்  ஆரம்பமானது.

அஹமட் அல் ஜபாரி கொல்லப்படும் காணொளி:



 85 இலக்குகளில் தாக்குதல்
தெரிவு செய்யப்பட்ட பல இலக்குகள்  மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல்களை நடாத்தியது. ஹமாஸ் பிரதம மந்திரியின் பணிமனையும் ஹமாஸின் தலமையகமாகவும் செயற்பட்ட கட்டிடத்தின் மீது இஸ்ரேலிய விமானப் படையினர் தாக்குதல் நடாத்தித் தரை மட்டமாக்கினர்.  ஹமாஸின் படைக்கலன்கள் பதுக்கி வைக்கப்பட்ட இடங்கள், காவற்துறைத் தலமைச் செயலகம், படைக்கலன்கள் எடுத்துச் செல்லப்படும் சுரங்கங்கள், ஆளில்லா விமானத் தயாரிப்புத் தொழிற்சாலை, ஏவுகணை செலுத்திகள் போன்ற 85 இலக்குகள் மீது இஸ்ரேலிய விமானங்கள் குண்டுகளை வீசின. ஹமாஸ் அதிகாரிகளில் ஒருவரின் மூன்று மாடி வீடு ஒன்றும் குண்டு வீச்சால தரை மட்டமாகியுள்ளது.
தாக்குதல்கள் நடந்த இடங்கள்

இஸ்ரேல் மீது இணைய வெளித் தாக்குதல்
இஸ்ரேலிய மத்திய வங்கி, இஸ்ரேலியப் பாதுகாப்புத் துறை அமைச்சு மற்றும் பல அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் கணனித் தொகுதிகள் மீது இனம் தெரியாதவர்கள் ஊடுருவி பல தகவல்களை அழித்துள்ளனர்.

இஸ்ரேலின் இரும்புக் கூரை
ஹமாஸ் செலுத்திய பல ஏவுகணைகளை இஸ்ரேலின் இரும்புக் கூரை முறைமையால் வானில் வைத்து அழிக்கப்பட்டுள்ளது. இரும்புக் கூரை பற்றி அறிய முந்தைய பதிவைப் பார்க்க இங்கு சொடுக்கவும்.

இரும்புக் கூரை பற்றிய காணொளி:


ஆக்கிரமிப்புக்குத் தயாராகும் இஸ்ரேல்

காசாப் பிராந்தியத்தை ஆக்கிரமிக்க இஸ்ரேல் சகல முன்னேற்பாடுகளையும் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சு 75,000 ஒதுக்கப்பட்ட படையினரைச் சேவைக்கு (Reservists) அழைத்துள்ளது. இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ தனது ஆலோசகர்களுடனும் படைத்துறையுடனும் ஒரு உயர் மட்டக் கூட்டம் ஒன்றை நான்கு மணித்தியாலங்களாக 16-ம் திகதி வெள்ளிக் கிழமை நடாத்தியுள்ளார். இஸ்ரேல் தனது பாதுகாப்புத் தூண் படை நடவடிக்கையின் (Operation Pillar of Defense) நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Friday, 16 November 2012

ஹமாஸின் தாக்குதலும் இஸ்ரேலின் உயர் தொழில் நுட்பமும்

இஸ்ரேலும் ஹமாஸ் இயக்கமும் போர் முனையிலும் டுவிட்டரிலும் கடுமையாக மோதிக் கொண்டிருக்கின்றன. ஹமாஸின் படைத்துறைப் பிரிவான Ezzedine al-Qassam Brigadeஇன் தலைவர் அஹமட் அல் ஜபாரியை இஸ்ரேலியப்படையினர் தமது பாதுகாப்புத் தூண் படைநடவடிக்கை (Operation Pillar of Defence) மூலம் நவம்பர் 14-ம் திகதி கொன்றதில் இருந்து இருதரப்பு மோதல் தீவிர மடைந்தது.

இஸ்ரேலின் உயர் தொழில் நுட்ப இரும்புக் கூரை
ஈரான் ஹமாஸ் மூலமாக ஆளில்லா விமானங்களை இஸ்ரேலிற்குள் அனுப்பு அதன் படை நிலைகளைப் படம் பிடித்தது. ஒரு ஆளில்லா விமானத்தை இஸ்ரேல் சுட்டு வீழ்த்தியிருந்தது. பாதுகாப்புத் தூண் படை நடவடிக்கையின் பின்னர் தம்மீது ஹமாஸ் இயக்கத்தினர் காசாவில் இருந்து வீசிய 275 ஏவுகணைக் குண்டுகள் இஸ்ரேலில் விழுந்து வெடித்ததாகவும் தமது இரும்புக் கூரைத் தொழில் நுட்பம் ஹமாஸின் ஏவிகணைகளில் 105இ விண்ணில் வைத்து வெடிக்கச் செய்ததாகவும் தாம் ஹமாஸ் நிலைகளின் மீது 275 ஏவுகணைகளை வீசியதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஹமாஸ் வீசிய ஏவுகணைகள் ஈரானிச் தயாரிக்கப்பட்ட ஃபஜிர் ஏவுகணைகளாகும்.

என்ன இந்த இரும்புக் கூரை?

இரும்புக் கூரை என்பது ஒரு நடமாடும் ஏவுகணை எதிர்ப்பு முறைமை. இது குறுகிய தூரம் செல்லக் கூடிய ஏவுகணைகளையும் (rockets) எறிகணைகளையும் (artillery shells)  அழிக்கக் கூடியது. இஸ்ரேல் இந்த முறைமை முதலில் 2012 மார்ச் மாதம் அறிமுகப்படுத்தியது. முதலில் இதை இஸ்ரேல் தனித்தே உருவாக்கியது. பின்னர் இஸ்ரேலுடன் அமெரிக்காவும் இணைந்து கொண்டது. இரும்புக் கூரையின் உள்ள கதுவிகள்(Radar) விண்ணில் வரும் ஏவுகணைகளையும் எறிகணைகளையும் உணர்ந்து அதன் பாதை வேகம் போன்றவற்றைக் கணித்து அவற்றை நோக்கி தனது இடை மறிக்கும் குண்டுகளை வீசும். வீசப்பட்ட குண்டுகள் வரும் ஏவுகணைகளுடனும் எறிகணைகளுடனும் மோதி அவற்றை வெடிக்கச் செய்யும்.

முழு அளவிலான போர் மூளுமா?
இஸ்ரேலியப் படைகள் காசாப் பிராந்தியத்திற்குள் நுழைவதற்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. முப்பதாயிரம் ஒதுக்கி வைக்கப்பட்ட(Reserve) படையினரும் கடமைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் அஹமட் அல் ஜபாரியை மட்டுமல்ல மேலும் பல ஹமாஸின் முக்கிய உறுப்பினர்களைக் கொன்றுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹமாஸின் தென் முனைத் தளபதி ரயிட் அல் அத்தாரும் கொல்லப்பட்டிருக்கலாம். ஹமாஸ் தனது பதிலடிகளைத் தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேலியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் எஹுட் பரக் ஹமாஸ் வீசும் ஏவுகணைகளுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார். இஸ்ரேலியப் பிரதமர் பென்ஞ்சமின் நெத்தன்யாஹூ தேவை ஏற்படின் தமது படையினர் தமது நடவடிக்கைப் பிராந்தியத்தை அகலப்படுத்துவர் என்றார். இதுவரை குழந்தைகள் உடபட 19 பலஸ்த்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈரானின் தந்திரமா?
அமெரிக்கத் தேர்தலுக்குப் பின்னர் இஸ்ரேல் தனித்தோ அல்லது அமெரிக்காவுடன் இணைந்தோ ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது. தன் மீதான தாக்குதலைத் திசை திருப்ப ஈரான் ஹமாஸ்-இஸ்ரேல் மோதலை உருவாக்கியதா என்ற சந்தேகமும் உருவாகியுள்ளது. ஆனால் அஹமட் அல் ஜபாரியைக் கொல்ல இஸ்ரேல் பல மாதங்களாக திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

வில்லங்கமான நிலையில் எகிப்திய ஆட்சியாளர்கள்.
காசாமீதான இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்தாலோ அல்லது இஸ்ரேல் காசாவிற்குள் நுழைந்தாலோ எகிப்திய ஆட்சியாளர்களின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்பது ஒரு முக்கியமான கேள்வி. இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் கொள்கைப்படி பாலஸ்தீனியரகளைப் பாதுகாக்கும் கடப்பாடு எகிப்தியர்களுக்கு உண்டு. அஹமட் அல் ஜபாரி கொல்லப்பட்டவுடன் ஹாமாஸின் பிரதம மந்திரி தொலைக்காட்சியில் தோன்றி எமது இந்த எதிரியைத் தடுக்கும்படி எகிப்தியச் சகோதரர்களைக் கேட்டுக் கொள்கிறோம் என்றார். உடனே எகிப்த்து இஸ்ரேலுக்கான தனது தூதுவரைத் திரும்ப அழைத்துக் கொண்டது. 16/11/2012 வெள்ளிக் கிழமை தொழுகைக்குப் பின்னர் எகிப்த்தின் பலபாகங்களிலும் மக்கள் ஆயிரக் கணக்கில் கூடி பாலஸ்த்தினியருக்கு தமது ஆதரவைத் தெரிவித்தனர். எகிப்திய அதிபர் மொஹமட் மோர்சி இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பைத் தொடர்ந்தால் அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டும் என்றார். எகிப்தியப் பிரதமர் போர் நிறுத்தப் பேச்சு வார்த்தைக்காக மேற் கொண்ட பாலஸ்த்தீனப் பயணத்திற்காக இஸ்ரேல் எகிப்தின் வேண்டுகோளுக்கிணங்க மூன்று மணித்தியாலப் போர் நிறுத்தத்திற்கு ஒத்துக் கொண்டது ஆனால் ஹமாஸ் தரப்பு ஏவுகணைகளை வீசியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு மறுத்துள்ளது. காசா சென்ற எகிப்தியப் பிரதமர் ஹெஷாம் கண்டில் அங்கு மருத்துவ மனையில் இறந்த 4 வயதுச் சிறுவனைப் பார்த்துக் கண்ணீர் வடித்தார். எகிப்தியப் புரட்சியில் ஹஸ்னி முபராக் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பின்னர் அரபுப் பிராந்திய சமநிலையில் ஒரு பெருமாற்றம் ஏற்பட்டுள்ளது. 1979-ம் ஆண்டு செய்யப்பட்ட எகிப்து-இஸ்ரேல் உடனபாடு இப்போது ஆபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இஸ்ரேலியத் தேர்தல்
ஹமாஸ் இயக்கம் இன்னும் ஓரிரு தினங்களுக்குள் தனது ஏவுகணைத் தாக்குதல்களை நிறுத்தாவிடில் இஸ்ரேல் காசாவை ஆக்கிரமிக்கலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. 2013இல் வரவிருக்கும் இஸ்ரேலியத் தேர்தலில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு வெற்றி பெறுவதற்கு ஹாமாஸிற்கு எதிரான ஒரு காத்திரமான படை நடவடிக்கை பெரிதும் உதவும். அமெரிக்கத் தேர்தலில் ஒபாமாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததால் இஸ்ரேலில் செல்வாக்கை இழந்திருக்கும் சரிக்கட்டவேண்டிய நிர்ப்பந்தத்தில் நெத்தன்யாஹு இருக்கிறார்.

Thursday, 15 November 2012

ஐநா அறிக்கை: தொடரும் பான் கீ மூனின் தில்லு முல்லுக்கள்

A Dangerous Place என Daniel Patrick Moynihan என்னும் சமூகவியலாளரால் விமர்சிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை என்பது திருகுதாளங்களின் உறைவிடம்.  "Most dangerous Korean in the world" என அமெரிக்க ஊடகம் ஒன்றால் விமர்சிக்கப்பட்ட ஐநாவின் பொதுச் செயலர் பான் கீ மூன் தில்லு முல்லுக்களின் நாயகன். இலங்கையில் ஐநாவின் செயற்பாடுகளைப் பற்றி விசாரித்த உள்ளகக் குழு ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. உலக ஊடகங்களில் இலங்கைப் பிரச்சனை தலைப்புச் செய்தியாக் இரண்டு நாட்கள் அடிபடுகிறது. மீண்டும் அது மறக்கப்படும்.

நாட்டாமை ஏற்றினார் பின் இறக்கினார்
ஐநா உள்ளக அறிக்கை முதலில் ஐநாவின் வலைத் தளத்தில் பதிவேற்றப்பட்டது. பின்னர் அதில் இருந்து நீக்கப்பட்டது. இந்தத் திருகுதாளம் ஏன்?

தீரப்பை அழித்த நாட்டாமை
128 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் பத்துக்கு மேற்பட்ட இடங்கள் கறுப்பு நிறத்தால் highlight செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு ஒன்று:
ஒரு அறிக்கையை வெளிவிட்ட பின்னர் இப்படி அழிக்கப்பட்டது ஐநா வரலாற்றில் இது முதல் தடவையாக இருக்கலாம். இன்னர் சிர்ரி பிரஸ் இதை விட்டு வைக்கவில்லை. இலங்கையின் இறந்தவர்களின் எண்ணிக்கையை ஐநா ஊழியர்கள் வேண்டுமென்று வெளிவிடாமல் இருந்ததை அழித்துள்ளார்கள். ஐநா அறிக்கையில் அழிக்கப்பட்ட இன்னும் ஒரு திருகுதாளம் மிக முக்கிய மானது.
  • ஐநாவின் கொள்கைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் இலங்கை அரச அறிக்கை அதன் அத்து மீறல்களை விசாரிக்க உகந்தது அல்ல என்றும் ஐநா இலங்கையின் அத்து மீறல்களைப் பற்றி விசாரிக்க ஒரு பன்னாட்டு நிபுணர்கள் குழுவை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அதை மறுத்த பான் கீ மூன் ராஜபக்சவிற்கு உள்ளக விசாரணைக்கு போதிய கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அப்படி ஒன்று நடக்காத போது ஐநா விசாரணையைச் செய்யலாம் என்றும் சொன்னார்.
தீர்த்துக் கட்டியவனைத் தீர்ப்புச் சொல்லச் சொன்ன நாட்டாமை
இலங்கையில் தமிழர்கள் மூன்று இலட்சம் பேர் கொல்லப்பட்டனர். இறுதிப் போரின் போது 40,000இற்கு மேல் கொல்லப்பட்டனர் என்பதை ஐநா ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் ராஜபக்ச ஒரு  பொது மகன் கூடக் கொல்லப்படவில்லை என்றும் தனது படையினர் ஒருகையில் மனித உரிமைகள் பற்றிய புத்தகத்தையும் ஒருகையில் துப்பாக்கியையும் வைத்துக் கொண்டு போர் புரிந்தனர் என்றும் சொன்னார். அது மட்டுமல்ல போர்க்குற்றத்திற்காக தனது படையினர் ஒருவர் கூடத் தண்டிக்கப்படமாட்டார் எனக் கூறினார். இலங்கையில் நடந்த அத்து மீறல்கள் பற்றி அவரையே  விசாரிக்க பான கீ மூன் வேண்டுகிறார்.



விலக்கப்பட்ட வில்லன் விஜய் நம்பியார்
பான் கீ மூனின் Chief of Staff ஆகக் கடமையாற்றிய இந்திய விஜய் நம்பியாரைப் பற்றி அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இவரின் உடன் பிறப்பு சதீஷ் நம்பியார் இலங்கைக் படையினருக்கு ஆலோசகராக கடமையாற்றினார். போரின் போது பான் கீ மூன் இலங்கை செல்ல வேண்டும் என மனித உரிமை அமைபுக்களும் ஊடகங்களும் வலியுறுதின. அப்போது பான் கீ மூன் பல இழுதடிப்புக்களுக்குப் பின்னர். தனது பிரதிநிதியாக விஜய் நம்பியாரை அனுப்பினார். இவரது உடன்பிறப்பு இலங்கைப்படைக்கு ஆலோசகராகக் கடமையாற்றுவதால் இவரிடம் நடு நிலையை எதிர்பார்க்க முடியாது என பலரும் சுட்டிக் காட்டினர். இலங்கை சென்ற விஜய் நம்பியார் அங்கிருந்து இந்தியா சென்றார். அங்கும் தங்கி நாட்களை இழுத்தடிது விட்டு நியூயோர்க் சென்றார். இலங்கையில் நடப்பவைபற்றி அறிக்கை சமர்ப்பிக்கும்படி பாதுகாப்புச் சபை உறுப்பு நாடுகள் கேட்ட போது அவர் அறிக்கை சமர்ப்பிக்க மறுத்தார். அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பிரித்தானியா மிரட்டிய பின்னர் ஐநாவின் நிலக்கீழ் அறையின் தனது அறிக்கையை இரகசியமாகச் சமர்ப்பித்தார். இவர் இலங்கை அரசுக்குச் சார்பாக நடந்து கொண்டதாக பல குற்றச் சாட்டுக்கள் ஊடகங்களில் முனவைக்கப்பட்டன. விஜய் நம்பியாரின் நடவடிக்கைகள் பற்றி அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

போர்க்குற்றம் என்ற பதம் கெட்ட வார்த்தை
ஐநாவின் உள்ளக விசாரணைக் குழுவின் அறிக்கையில் அழிக்கப்பட்ட வாசகங்களின் போர்க்குற்றமும் அடங்குகிறது என்று இன்னர் சிர்ரி பிரஸ் தெரிவித்துள்ளது.  இலங்கைப் போரின் போது மனித உரிமைகளுக்கான பிரதிப் பொதுச் செயலராக இருந்த டேவிட் ஹோல்ம்ஸ் என்னும் ஒரு பன்னாடைக்கு போர்க் குற்றம் என்றபதம் விருப்பமில்லையாம். அதனால் அறிக்கையில் போர்க்குற்றம் என்ற பதம் அழிக்கப்பட்டதாம். ஆனால் ஐநா நியமித்த நிபுணர் குழு அறிக்கை இலங்கையில் போர்க்குற்றம் என்ற வார்த்தை அழிக்கப்பட்டதாம். மூன்று இலட்சத்திற்கு மேல் கொல்லப்பட்டனர் என்ற உண்மை ஒரு நாளும் உலக அரங்கில் நீருபிக்கப்படாமல் போகலாம். போர்க்குற்றத்தில் இந்தியாவின் பங்களிப்பு உலகத்திற்குத் தெரியாமல் போகலாம்.

நாட்டாமையின் காட்டாமைத்தனம்
இலங்கைப் போரின் போது பான் கீ மூன் பல தடவை இலங்கை அரசுக்குச் சார்பாக நடந்து கொண்டார். பான் கீ மூன் முதல் தடவையாக ஐநா பொதுச் செயலர் பதவிக்குப் போட்டியிடப்பட்டபோது இலங்கையும் ஒருவரைப் போட்டியிட வைத்தது. பான் கீ மூனிடம் இலங்கை ஒரு உடன்பாட்டிற்குப் பின்னர் தனது வேட்பாளரை விலக்கிக் கொண்டது எனக் கூறப்படுகிறது. அந்த உடன்பாடு இலங்கைப் போரின் போது ஐநா சரியாக நடந்து கொள்ளாமைக்கு உரிய காரணமாக இருந்திருக்கலாம். அதைப்பற்றி அறிக்க்கையில் எதுவும் கூறவில்லை.

பங்காளியின் பங்காளி பான் கீ மூன்
இந்தியாவில் தனது இராச தந்திரத் தொழிலை ஆரம்பித்த பான் கீ மூனின் மகள் ஒரு இந்தியப் படை வீரரை திருமணம் செய்து கொண்டார். அதனால் இந்தியாவின் பங்காளியானார் பான் கீ மூன். தனது இந்திய மருமகனுக்கு தகுதிக்கு மீறிய பதவி கொடுத்தார் பான் கீ மூன் என்ற குற்றசாட்டும் உண்டு. இலங்கைப் போரில் இந்தியாவும் ஒரு பங்காளி. இந்தப் பங்காளித் தொடர்புகள் ஐநாவின் பிழையான செயற்பாடுகளுக்குக் காரணமாக அமைந்திருக்கலாம். இதைப்பற்றி அறிக்கை கவலைப்படவில்லை.

தீர்ப்புக் கூறாத நாட்டாமை
அறிக்கையில் ஐநாவின் மீது வைக்கப்பட்ட குற்றச் சாட்டுகளை (பல வாச்கங்களை அழித்த பின்னர்) ஏற்றுக் கொண்ட பான கீ மூன் இலங்கைத் தமிழர்களுக்கு எந்த விமோசனத்தையும் குறிப்பிடவில்லை. போர் முடிந்த பின்னர் இலங்கையின் வெற்றிக் களிப்பைக் காண இலங்கை சென்ற பான் கீ மூன் இலங்கை அதிபருடன் ஒரு கூட்டறிக்கயை வெளியிட்டார். அதில் போரின் போது நடந்த அத்து மீறல்கள் தொடர்ப்பாகவும் இலங்கை இனப்பிரச்சனை தீர்ப்பது தொடர்பாகவும் வழங்கிய உறுதி மொழிகள் நிறைவேற்றப் படாதமைக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி எதுவும் கூறவில்லை அந்த உலகமகா பயங்கரக் கொரியர்.

அறிக்கையின் முக்கியமான பகுதிகளில் ஒன்று:
  • Some commentators (see table) have argued that the discrepancy between the number of
    people recorded as being within the Wanni at the beginning of the final stages and the number
    recorded as having left the Wanni by the end of the war, indicates the number of people who are unaccounted for and who may have died during the period. On this basis, a written submission to the LLRC, cited population figures provided by the Government Agents of Killinochchi and Mullaithivu as listing a total population in the Wanni of 429,059 in early October 2008. The submission to the LLRC compared the population numbers in the Wanni in October 2008 with the number of people registered as IDPs outside the Wanni by July 2009 and said that some “146,679 people seem to be unaccounted for.” There is a similar discrepancy between the 360,000 people reported to be in the Mullaithivu area of the Wanni as the conflict intensified in early 2009, cited by the Government Agent of Mullaithivu in her own 2010 testimony to the LLRC, and the 289,915 cited by OCHA as having left the Wanni by June 2009. 
இதன்படி  146,679 பேர் கணக்கில் இல்லாமல் போயுள்ளனர் என்கிறது. இது உண்மையான 300,000பேர் கொல்லப்பட்டனர் என்ற கணக்கில் இருந்து நீண்ட தூரம் விலகி நிற்கிறது.

பன்னாட்டு மட்டத்தில் ஒரு விசாரணை 
இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கு எதிரான அடக்கு முறைகளைப் பற்றியோ வன்முறைகளைப்பற்றியோ பன்னாட்டு மட்டத்தில் எந்த கரிசனையும் இப்போது இல்லை. இந்தியா போன்ற நாடுகள் திரை மறைவில் இந்த அடக்கு முறைகளுக்கு ஆதரவு அளிப்பது போல் தெரிகிறது. அறிக்கையைப் பார்த்தவுடன் இரு அம்சங்கள் முக்கியத்துவம் பெறுகிறது. ஒன்று இலங்கையின் போர்க்குற்றத்தைப் பற்றி ஒரு பன்னாட்டு மட்ட விசாரணை தேவை. இரண்டு இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பிற்கு உரிய நடவடிக்கை பன்னாட்டு மட்டத்தில் எடுக்கப்படவேண்டும்.


அழிக்கப்பட்ட பகுதிகள் தற்போது வெளியாகியுள்ளன:

The blacked out sentence on Page 11 reads:

    several USG participants and the RC did not stand by the casualty numbers, saying that the data were ‘not verified’. Participants in the meeting questioned an OHCHR proposal to release a public statement referencing the numbers and possible crimes.

The blacked out paragraph on Page 15 reads:

    Several participants noted the limited support from Member States at the Human Rights Council and suggested the UN advocate instead for a domestic mechanism, although it was recognized that past domestic mechanisms in Sri Lanka had not led to genuine accountability. One participant said that “[i]t was important to maintain pressure on the Government with respect to recovery, reconciliation and returns and not to undermine this focus through unwavering calls for accountability ...”

 The blacked out sections on pages 66 and 67 read:

    The Policy Committee met two days later, on 12 March, to discuss Sri Lanka. Participants noted variously that “this crisis was being somewhat overlooked by the international community”, the policy “of coordinating a series of high level visits seemed to have produced some positive results”, and that the possible involvement of the Special Adviser on the Prevention of Genocide (SAPG) would not indicate a suspicion of genocide but may add to overcrowding of UN actors involved. Participants acknowledged the apparent need for a Special Envoy but noted this “did not seem politically feasible”. It was suggested that “the Secretary General’s [public] statements may have appeared a bit soft compared with recent statements on other conflict areas [and it] was suggested [he] cite the estimated number of casualty figures ….”. OHCHR said it would be issuing a “strong” statement which would include indicative casualty figures and raise the issue of possible crimes under international law by both sides.
                                                          
    Several participants questioned whether it was the right time for such a statement, asked to see  the draft before release and suggested it be reviewed by OLA. There was a discussion on “balancing” the High Commissioner’s mandate with other UN action in situations requiring the UN to play several different roles. The meeting led to the adoption by the Secretary-General, through the Policy Committee, of several decisions, including: continued engagement on “the immediate humanitarian, human rights and political aspects of the situation”; “system-wide advocacy” to press the LTTE to allow safe passage for civilians and UN staff; pressing the Government on protection and assistance to IDPs; inter-ethnic accommodation and reconciliation; political advice to Sri Lanka; child protection; transitional justice; demining; reconstruction; disarmament, demobilization and rehabilitation; political solutions to the underlying causes of the conflict; and renewed efforts to establish an OHCHR field office. 

The blacked out line later on on page 67 reads:

    At today’s Policy Committee meeting,

The blacked out line on page 68 reads:

    The references to possible war crimes will be controversial … I am not sure going into this dimension is helpful, as opposed to more indirect references to the need for accountability, in this conflict as elsewhere.”

 The blacked out section on page 88 reads:

    Members agreed to: urge the Government to ensure protection and assistance for IDPs in accordance with international law; continue dialogue toward a durable political solution and reconciliation; seek a principled and coordinated international approach to relief, rehabilitation, resettlement, political dialogue and reconciliation; and pursue a “principle-based engagement by UNHQ and RC/HC/UNCT, with the Government, International Financial Institutions, and other partners on early recovery …”. It was agreed that the UNCT would engage with international partners and develop principles of engagement, and a monitoring mechanism to ensure adherence to these principles.

The blacked out line on page 89 reads:

    Members of the Policy Committee also noted “politically, there was little to show for the UN's engagement with all stakeholders” and that the President was “not receptive to the Secretary-General's suggestion to appoint an envoy.”

The blacked out line across page 92 and 93 reads:

    “The Government has not agreed to proposals for the establishment of a body involving donors and the UN which would facilitate humanitarian and recovery coordination.”

The blacked out sections on pages 95 and 96 read:

    albeit with considerable disagreement on what action should be taken. In the 23 June Policy Committee meeting in New York

then

    One participant said that “[i]t was important to maintain pressure on the Government with respect to recovery, reconciliation and returns and not to undermine this focus through unwavering calls for accountability ...”  OHCHR was tasked with preparation of a UN strategy and position on justice and accountability issues, including the possibility of an international investigation.

then

    Discussing whether or not the Secretary General should establish an international Commission of Experts, many participants were reticent to do so without the support of the Government and at a time when Member States were also not supportive. At the same time, participants also acknowledged that a Government-led mechanism was unlikely to seriously address past violations. The Secretary-General said that “the Government should be given the political space to develop a domestic mechanism” and that only if this did not occur within a limited time frame would the UN look at alternatives.

Wednesday, 14 November 2012

முதிர்வடைவதைத் தடுக்கும் 7 வகையான உணவுகள்

முதிர்வடைவதைத் தடுப்பதைப் பலரும் விரும்புவார்கள். இளமையாகத் தோற்றமளிக்க எல்லோருக்கும் விருப்பம்.  வாரந்தோறும் தவறாமல் உடற்பயிற்ச்சி செய்யுங்கள்.  உங்கள் body-mass index ஐ 25இற்குக் கீழ் வைத்திருங்கள். இடுப்புச் சுற்றளவை 35அங்குலம் (88 சென்ரி மீட்டர்) இலும் குறைவாக வைத்திருங்கள். கொழுப்பின் அளவை (cholesterol) 200 mg/dl இலும் குறைவாக வைத்த்திருங்கள். இவை ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை. இத்துடன் உங்கள் உணவு வகைகளை கவனமாகத் தேர்ந்தெடுங்கள். உங்களுக்கு தேவையான உணவு வகைகள்:

  1. காய்கறிவகைகள்: உங்கள் உடலின் உயிரணுக்களை ஆக்சிடேர்ரிவ் அழுத்தம் (oxidative stress) பாதிக்கும். இது முதுமையை தூண்டும். இதைக் குறைக்க ஆன்ரிஆக்சிடன்ர் (antioxidants) உள்ள காய்கறிவகைகளை உண்ணுங்கள். பலவகையான பலவகை நிற காய்கறிகளைத் தேர்ந்தெடுங்கள். காய்கறிகளில் மிகவும் எளிதிலும், விரைவாகவும் ஜீரணமாகக் கூடியது தக்காளி! உடம்புக்கு ஆரோக்கியம் அளிக்கும் மூன்று விதமான புளிப்புகளும் தக்காளிப் பழத்தில் இருக்கின்றன. முக்கியமாக, ஆப்பிள் பழத்தில் இருக்கும் ஃபாலிக் அமிலம்.
  2. பழங்கள்: உங்கள் உணவின் பழங்கள் மிக முக்கியம். ஞாபக மறதியை தவிர்க்க பழங்கள் சாப்பிடுதல் அவசியம். பழங்களில் ஆன்ரிஆக்சிடன்ர் (antioxidants) நிறைய உண்டு. இளமையைத் தக்கவைக்க பழங்கள் மிக முக்கியம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழங்களில் முக்கியமானது மாதுளம் பழம். கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் என்று அனைவருக்கும் ஏற்ற பழமாக இது உள்ளது. திராட்சையும் நல்ல பழமாகும். உள்ளூரில் கிடைக்கக் கூடிய பழங்களில் நல்லவற்றைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.
  3. சோயா: ஜப்பானில் செய்த ஆராய்ச்சியில் பெண்களுக்கு சோயா உண்பதால் பல நன்மைகள் உள்ளன என்று கண்டு பிடித்துள்ளனர். புரதம் நிறைய உள்ள சோயா இளமையாக இருப்பதற்கு உதவும். There is no denying that soy has many health benefits, which are coming form the quality of the soy proteins and from health promoting phytochemicals, such as isoflavones, phytates, saponins and polyphenols. சோயா அதிகம் உண்ணும் நாடுகளில் இருதய நோய்கள் வருவது குறைய என அவதானிக்கப்பட்டுள்ளது.
  4. மீன் வகைகள்: omega-3 fatty acids உள்ள மீன்வகைகளைத் தேர்ந்தெடுத்து உண்ணுவதால் மூளை விருத்தியடையும். வயது போவதால் மூளைக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கலாம். இருதய நோய், புற்று நோய், பாரிச வாதம் ஆகியவை வராமல் omega-3 fatty acids தடுக்கும்.
  5. முழுத் தானியம்: முழுத்தானியங்கள் சிறந்த இயற்கை உணவு. முழுத்தானியங்களில் glycemic index (GI) குறைவாக உள்ளது. குறைந்த glycemic index (GI) என்பதால் இரத்தத்தில் சர்க்கரை சேர்வதும் குறைக்கப்படும்.  This is important because eating a lot of foods that are high on the GI will produce spikes in blood sugar that can lead, over time, to insulin resistance. Insulin resistance is associated with obesity, high blood pressure, elevated blood fats, an increased risk of type 2 diabetes, and other chronic diseases. Barley, quinoa, millet, wheat berries and kasha are good choices, as they provide important nutrients, including protein, fiber, vitamins, minerals, and, especially, carbohydrates that are low on the GI.
  6. மசாலாப் பொருள்கள் (Spices) : இஞ்சியும் மஞ்சளும் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கின்றன. முக்கியமாக மூளையின் ஆரோக்கியத்திற்கு இவை பெரிதும் உதவுகின்றன. நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கின்றன. உடலில் கிருமிகளைக் கொல்கின்றன.
  7. கறுப்புச் சாக்லெட்:  இளமையாக இருப்பதற்கு கறுப்புச் சாக்லெட் பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள polyphenols with high antioxidant activity ஆரோக்கியத்தைத் தருவதுடன் நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்க்கும். அண்மைக் கால ஆய்வுகளின் படி கறுப்புச் சாக்லெட்டில் உள்ள flavonoids இருதயத்திற்கு மிகவும் நல்லது என்று சொல்லப்படுகிறது. இது இருதய நாளங்களில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது.

Tuesday, 13 November 2012

விஞ்ஞானிகள்: கட்டிப்பிடிப்பதால் பல நன்மைகள்.

கட்டிப்பிடி வைத்தியம் உண்மையில் வேலை செய்கிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். விஞ்ஞானி ஜான் அஸ்ரோம் தலைமையில் நடந்த ஓர் ஆய்வின்படி கட்டிப்பிடிப்பதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரு பத்து செக்கன்கள் கட்டிப்பிடிப்பதால் உடலில் பல நன்மையளிக்கக் கூடிய இரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன.

பெண்கள் கட்டிப்பிடிப்பதால் தமது சமுகத் திறமைகளையும் நம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ளலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
Scientist, Dr Jan Astrom, who led the study said, "The positive emotional experience of hugging gives rise to biochemical and physiological reactions."  For women these 'reactions' could include improved social skills and increased trust. Seriously, all that from a ten second hug!

கட்டிப்பிடித்தல் மன அழுத்தத்தைக் குறைக்கும். தினசரி வழமையாகக் கட்டிப்பிடித்தலால். இருதய நோய் வராமல் தடுக்கலாம், மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம் குறையும், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

Just ten seconds of hugging can lower blood pressure and after this time elapses, levels of feel-good hormones such as oxytocin increase, while the amounts of stress chemicals, including cortisol, drop.

கட்டிப்பிடித்தல் தாய்மாருக்கும் நல்லது. கட்டிப்பிடித்தலின் போது உருவாகும்  Oxytocin தாய்மாருக்கு நன்மையளிக்கும்.
Oxytocin is secreted by the body during childbirth and in breastfeeding, where it stimulates release of milk. Until recently, its effects were thought to be confined to just that.

கட்டிப்பிடிக்கும் போது எமது தோலில் இருக்கும் Pacinian corpuscles எனப்படும் அழுத்த மையங்கள் செயற்பட்டு மூளைக்கு தகவல்களை அனுப்பும். அங்கிருந்து எமது உடலின் பலபாகங்களுக்கு (இருதயம் உட்பட) தகவல் அனுப்பப்படுகிறது. அத்தகவல்கள் oxytocin,களை உருவாக்குகிறது. அந்த oxytocin, உடலுறுப்புக்களில் பல நன்மைகளைச் செய்கிறது.
So how does hugging come in to this?  Well, the skin also contains a network of tiny, egg-shaped pressure centres called Pacinian corpuscles that can sense touch and which are in contact with the brain through the vagus nerve. The vagus nerve winds its way through the body and is connected to a number of organs, including the heart. It is also connected to oxytocin receptors. One theory - like the one used in this study - is that stimulation of the vagus triggers an increase in oxytocin, which in turn leads to the cascade of health benefits.

Monday, 12 November 2012

Those Splendid Moments

This broken heart,
These dry lips
And the tearfull eyes
Still yearning for you

Your shiny eyes
Silky cheeks
Sweet lips
I still missing a lot

Your sweet words
Gentle touch
Your gracefull fingers
Still I want

Those splendid moments
Walking hand in hands
Over the spring petals
I cannot forget

Sunday, 11 November 2012

இந்தியாவின் இராஜதந்திர விபச்சாரம்: இலங்கையில் வருகிறது 19வது திருத்தம்.

இலங்கையின் வரவு செலவுத் திட்டத்தைப் பாராளமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய மஹிந்த ராஜ்பக்ச இலங்கையில் அதிகாரப்பரவலாக்கம் பொருள்நிறைந்ததாக இருக்க வேண்டும்என்றும் அதிகாரப்பரவலாக்கம் நாட்டை ஒன்றுபடுத்துவதாக இருக்க வேண்டும் என்றும் சிக்கலான ஆட்சி முறை கொண்டதாக இருக்கக் கூடாது என்றும் பாரிய நிதியக் கையாள்வதாக இருக்கக் கூடாது என்றும் சொன்னதை அடுத்து கொழும்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

13வது திருத்தத்தின் படியான அதிகாரப்பரவலாக்கங்களை பறிக்கும் சட்டமூலத்திற்கு பொதுமக்கள் வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்று சொன்ன பிரதம நீதியரசரை பதவி நீக்கும் செயலில் இலங்கை அரசு இறங்கியுள்ளது.

இந்தியாவின் தாசித்தனம்
நவம்பர் 1-ம் திகதி ஜெனிவா நகரில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழக்த்தின் இலங்கை தொடர்பான காலாந்தர் மாநாட்டில் உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி இலங்கையில் அதன் அரசியலமைப்பிற்கான 13வது திருத்தம் நிறைவேற்றப்படவேண்டும், வடக்கு மாகாண சபைக்கான  தேர்தல் நடாத்தப்பட வேண்டும் மனித உரிமை மீறல்களுக்கான நம்பகரமான விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்று முழங்கினார். பின்னர் நவம்பர் 5 - ம் திகதி ஒரு குத்துக் கரணம் அடித்து அந்தப் பரிந்துரைகளை இறுதி அறிக்கையில் இருந்து நீக்கி விட்டது. ஈழத் தமிழர்களுக்கு இந்தியா கடந்த பல ஆண்டுகளாக செய்துவரும் திருகுதாளங்களைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு இது ஆச்சரியமளிக்கவில்லை. ஆனால் பல மேற்கு நாட்டு ராசதந்திர்கிகள் தமது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர். அங்கு இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில்ஒரு பெரிய டீல் நடந்திருக்கிறது என்று பலரும் கருதுகின்றனர். 2009-ம்  ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் தீர்மானத்தை இந்தியா இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக மாற்றியது. பின்னர் 2012 மார்ச் மாதத்தில் அமெரிக்காவைத் திருப்திப் படுத்த இந்தியா வேறு விதமாக நடந்து கொண்டது. இதுவரை 13வது திருத்தம் என்ற கிலுகிலுப்பையை வைத்துக் கொண்டு தமிழர்களை ஏமாற்றி வந்த இந்தியாவிற்கு நன்கு தெரியும் இலங்கையில் 13வது திருத்தத்தின்படி தீர்வு காணமுடியாது என்று. சிங்களவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழர்கள் அதில் போதிய அளவு அதிகாரப்பரவலாக்கம் இல்லை எனத் தெரிவித்துள்ளனர். ஆனாலும் தமிழர்கள் அதை ஏற்றே ஆகவேண்டும் என இந்தியா தமிழர்களை வற்புறுத்தி வந்தது. 1987இல் இதற்காக இந்தியா ஈழத் தமிழர்கள் மீது அமைதிப்படை என்னும் கொலைவெறி நாய்ப்படை மூலம் மோசமான பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது.  1987வரை தமிழர்களுக்கு படைக்கலனும் பயிற்ச்சியும் வழங்கி சிங்களவர்களுடன் மோதலைத் தூண்டிய இந்தியா பின்னர் ஒரு இராஜதந்திரக் குத்துக் கரணம் அடித்தது. அப்போது பல இந்திய இராஜதந்திரிகள் கணிசமான தட்சணையை அப்போதைய இலங்கை அதிபர் ஜே ஆர் ஜயவர்த்தனேயிடம் இருந்து பெற்றுக் கொண்டனர் என்று சொல்லப்பட்டது. ஒருவரின் மகளின் திருமணமே ஜே ஆரின் செலவில் நடந்ததாம். ஜே ஆர் - ராஜீவ் ஒப்பந்தப்படி தமிழ் அமைப்புக்கள் படைக்கலன்களை முழுமையாக ஒப்படைக்கவில்லை என்று தமிழர்கள் மீது தனது பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்ட இந்திய அரசு அந்த ஒப்பந்தப்படி செய்யப்பட்ட இலங்கை அரசியல்யாப்பிற்கான 13வது திருத்தம் நீக்கப்படும் போது என்ன செய்யப் போகிறது? 13வது திருத்தப்படி செய்யப்பட்ட வடக்கு கிழக்கு இணைப்பு நீக்கப்பட்டபோது இந்தியா வாலைச்சுருட்டிக் கொண்டு மௌனமாக இருந்தது. கடந்த 25 ஆண்டுகளாக 13வது திருத்தப்படி இலங்கைப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும் என்று கூறி வந்த இந்தியா 13வது திருத்தத்தை 19வது திருத்தத்தின் மூலம் இரத்துச் செய்யும் போது இந்தியா என்ன செய்யப்போகிறது? இந்தியாவின் ஆசியுடன்தான் இந்த இரத்து செய்யப்படப் போகிறதா?

இலங்கையில் தமிழர்பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்ற இந்தியா மறைமுகமாக ஆதரவு செய்கிறது. சிங்களவர்களின் போக்கு வரத்திற்கு வசதியாக தொடரூந்து சேவையைப் புனரமைத்து வருகிறது. தமிழர்களை அவர்கள் தாயக பூமியிலேயே சிறுபான்மையினராக்க இந்தியா உதவுகிறது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  

நீதி கேட்கும் நீதியில்லாத இலங்கை நீதித் துறை

ஷிரானி பண்டாரநாயக்கவை இலங்கையின் பிரதம நீதியரசராக 2011இல் நியமித்தவர் இலங்கைக் குடியரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ச. தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக ஷிரானியின் கணவரான பிரதீப் காரியவாசத்தை தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக நியமித்தது மஹிந்த ராஜபக்ச. மோசடிக்காக பிரதீப் காரியவாசத்தை பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ச நீக்கினார். இப்போது ஷிரானியைப் பதவியி இருந்து நீக்க மஹிந்த முயற்ச்சி செய்கிறார். தன் மீது வைக்கும் குற்றச் சாட்டை ஷிரானி மறுத்துள்ளார்.

இலங்கையில் சட்டவாக்க அதிகாரம் பாராளமன்றத்திடமும் சட்ட நிறைவேற்று அதிகாரம் குடியரசுத்தலைவரிடமும், சட்டத்திற்கு வியாக்கியானம் கொடுக்கும் அதிகாரம் நீதித்துறையிடமும் இருக்கிறது.

மன்னார் நீதி மன்றில் ஆரம்பித்த மோதல்
இலங்கையின் நீதித் துறைக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான மோதல் மன்னாரில் ஆரம்பித்தது. மன்னார் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் மன்னார் நீதிபதியை அச்சுறுத்தியமை தொடர்பாக கோத்தபாய ராஜ்பக்சவிற்கு நெருக்கமானவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீனிற்கு மன்னார் நீதிபதி அழைப்பாணை விடுத்தார். இது நீதித் துறைக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான மோதலை ஆரம்பித்து வைத்தது. இலங்கை நீதிச் சேவையின் செயலாளர் இனம் தெரியாதோரால் தாக்கப்பட்டார்.

நீதிபதி நியமனம்
உயர் நீதிமன்றத்திற்கு மஹிந்தவின் செயலாளருக்கு மிகவும் வேண்டியவர் ஒருவரை நியமிக்கும்படி மஹிந்த செய்த பரிந்துரையம் பிரதம் நீதியரசர்  ஏற்றுக் கொள்ளவில்லை.  இது மஹிந்த-ஷிரானி மோதலை மேலும் வளர்த்தது.

திவி நெகும என்னும் சட்டமும் 80 பில்லியன் ரூபாக்களும்
 திவி நெகும சட்டம் நீதித் துறைக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான மோதலை மேலும் மோசமாக்கியது. திவி நெகும என்பது மாகாணசபையின் அதிகாரங்களை பறித்து மஹிந்தவின் இன்னொரு உடன் பிறப்பான பசின் ராஜபக்சவின் கீழுள்ள பொருளாதாரத் துறை அமைச்சுக்கு கொடுக்கும் சட்டம். இச் சட்ட மூலத்தின் 27 வாசகங்களில் 16 இலங்கை அரசியல் அமைப்பிற்கு முரணானது என்று இலங்கை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சில வாசகங்கள் பாராளமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் ஒரு வாசகத்தை நிறைவேற்றுவதற்கு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தப் படவேண்டும் என்றும் உயர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. இது ஆட்சியாளர்களை ஆத்திரத்திற்குள்ளாக்கியது. விளைவு பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்காவைப் பதவி விலக்கும் பிரேரணை பாராளமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. எண்பது பில்லியன் ரூபாக்களின் செலவிற்கு பசில் ராஜபக்ச பொறுப்பு என்பது எவ்வளவு சுகமானது?

பொத்திக்கிட்டு போம்மா என்றார் சரத்
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா நீதியரசருக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுப்பது இது முதற் தடவை அல்ல என்கிறார். குடியரசுத் தலைவருக்கு எதிராக பிரதம நீதியரசர் ஷிரானி கருத்துத் தெரிவித்திருக்கக் கூடாது என்கிறார் சில்வா. ஷிரானி பேசாமல் பதவியில் இருந்து விலக வேண்டும் என அவருக்கு ஆலோசனை கூறியுள்ளார்

மத உயர்பீடங்களுக்க்குப் பிடிக்கவில்லை
ஷிரானி பண்டாரநாயக்கவைப் பதவிநீக்கம் செய்ய மஹிந்த அரசு எடுக்கும் நடவடிக்கைக்களை பௌத்த சாசன அடிப்படையில் மறுபரிசீலனை செய்யும்படி மல்வத்தை பீடாதிபதியும் அஸ்கிரிய பீடாதிபதியும் வேண்டுகோள் விடுத்தனர். Therefore the essence of Buddhist law is to consider it as the duty to subjugate the unrighteousness and propagate righteousness by controlling behaviour of individuals and ensuring the well being of society என்று அவர்கள் கூறுகின்றனர்.

நீலகண்டனும் காலகண்டனும்
ஷிரானி பண்டாரநாயக்க தன் மீது வைத்துள்ள குற்றச்சாட்டை நீலகண்டனும் நீலகண்டனும் என்ற சட்ட நிறுவனத்தின் மூலம் மறுத்துள்ளார். காலகண்டன் மஹிந்த இதை ஏற்கமாட்டார். அவரது கட்சிக்குப் பெரும்பான்மைப் பலம் பாராளமன்றத்தில் இருக்கிறது. இலங்கைப் பாரளமன்றத்திற்கு விசாரணை செய்து தண்டனை வழங்கும் அதிகாரமுண்டு.  இலங்கையின் பிரதம நீதியரசர் நோய் அல்லது வெளி நாட்டுப் பயணம் போன்றவை காரணமாகச் செயற்பட முடியாமற் போகுமிடத்து ஒரு பதில் பிரதம நீதியரசரை நியமிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு. ஆனால் அவருக்கு எதிரான விசாரணைக்கு ஒரு பதில்பிரதம நீதியரசரை நியமிக்கும் அதிகாரம் இருக்கிறதா என்பது கேள்விக்குறியே! பாராளமனறம் பிரதம நீதியரசரை விசாரிக்கும் வரை பிரதம நீதியரசர் பதவியில் இருந்து செயற்படலாம் என்கின்றனர் சட்ட அறிஞர்கள். முன்னாள் பிரதம நீதிபதி சரத் என் சில்வா தான் மஹிந்தவிற்கு சாதகமாக நடந்து கொண்டதாக பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தெரிவித்தார். அவர் எதிர்பார்த்த பதவியை மஹிந்த ஓய்வு பெற்றபின்னர் கொடுக்காததால் இப்படிச் சொன்னாரா? ஷிரானி பதவியில் இருந்து விலக்கப்பட்ட பின்னர் என்ன சொல்லப் போகிறார்?

நீதித் துறையில் நிறைவேற்று அதிகாரத் துறையின் தலையீடு
பல சட்டவாளர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் மஹிந்தவின் நிறைவேற்று அதிகாரம் நீதித் துறையில் தலையிடுவதாகக் கருதுகின்றனர். இலங்கை அரசியல் அமைப்பிற்கான 18வது திருத்தம் இலங்கைக் குடியரசுத் தலைவரை ஒரு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரியாக மாற்றியுள்ளது. உலகத்திலேயே அதிகாரம் மிக்க தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அரசத் தலைமை இலங்கையின் குடியரசுத் தலைவரே.

இலங்கையில் எங்கும் முறைகேடு
சிறைச்சாலையில் பெரும் மோதல் நடந்தது. காவற்துறையினர் கையாள வேண்டிய சிறைச்சாலைக் கிளர்ச்சிக்கு இரு நாடுகளுக்கு இடையில் சண்டை நடப்பது போல அதிரடிப்படையினர் கனரக ஊர்திகளில் சிறைச்சாலைக்குள் நுழைந்தனர். காயப்பட்டவர்களை மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லவிடாமல் அவர்கள் தடுத்தனராம். இத்தனைக்கும் மோதல் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் நடக்கவில்லையாம். சிறைச்சாலையில் தீடீர் சோதனை நடாத்தச் கோத்தபாய ராஜ்பக்சவின் உத்தரவின் பேரில் சென்றவர்களுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில்தான் மோதல் நடந்ததாம். இவர்கள் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொள்ள அங்கு வந்த சிறைக்கைதிகள் அவர்களது துப்பாக்கிகளைப் பறித்து தாக்குதலில் ஈடுபட்டனராம்.  வேண்டப்படாதவர்களைப் போட்டுத் தள்ள நடாத்தப்பட்ட நாடகம் இது என்றும் கூறப்படுகிறது. நீதித்துறை அப்படி காவல்துறை இப்படி என்றால் பிக்கு ஒருவர் பலான படங்களுடன் பிடிபட்டார். காவற்துறை ஒரு படைத்துறை அதிகாரியின் கீழ் கொண்டுவரப்பட்டது. 2011இல் தான் நியமித்த ஷிரானியின் மீது இப்போது மஹிந்த ராஜபக்ச பல ஊழல் குற்றச் சாட்டுக்களை முன்வைக்கிறார். 2011 மேமாதம் ஷிரானி நியமித்த போதே அரச வங்கியின் தலைவரான அவரது கணவர் மீது நிதி மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. மஹிந்தவால் நியமிக்கப்பட்ட ஒருவர் எப்படி உத்தமராக இருக்க முடியும்?


Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...