Saturday, 12 September 2009
திஸ்ஸநாயகத்திற்கு ஏன் இந்த முக்கியத்துவம்
இதுவரை அறிவிக்கப் பட்ட தகவல்களின் படி இலங்கையில் கொல்லப் பட்ட ஊடகவியலாளர்களின் பட்டியல்:
2004
1. Aiyathurai A. Nadesan – Journalist / 31 May
2. Kandaswamy Aiyer Balanadaraj – Writer / 16 August
3. Lanka Jayasundera – Photo journalist / 11 December
2005
4. Dharmaratnam Sivaram – Editor / 28 April
5. Kannamuttu Arsakumar – Media worker/ 29 June
6. Relangee Selvarajah – Journalist / 12 August
7. D. Selvaratnam – Media worker/ 29 August
8. Yogakumar Krishnapillai – Media Worker / 30 September
9. L. M. Faleel (Netpittimunai Faleel) – Writer / 02 December
10. K. Navaratnam – Media worker / 22 December
2006
11. Subramaniam Suhirtharajan – Journalist / 24 January
12. S. T. Gananathan – Owner / 01 February
13. Bastian George Sagayathas – Media worker / 03 May
14. Rajaratnam Ranjith Kumar – Media worker / 03 May
15. Sampath Lakmal de Silva – Journalist / 02 July
16. Mariadasan Manojanraj – Media worker / 01 August
17. Pathmanathan Vismananthan – Singer and musician / 02 August
18. Sathasivam Baskaran – Media worker / 15 August
19. Sinnathamby Sivamaharajah – Media owner / 20 August
2007
20. S. Raveendran – Media worker / 12 February
21. Subramaniam Ramachandran – Media personnel / 15 February
22. Chandrabose Suthakar – Journalist / 16 April
23. Selvarasah Rajeevarman – Journalist / 29 April
24. Sahadevan Neelakshan – Journalist / 01 August
25. Anthonypillai Sherin Siththiranjan – Media worker / 05 November
26. Vadivel Nimalarajah – Media worker / 17 November
27. Isaivizhi Chempian (Subhajini) - Media worker / 27 November
28. Suresh Limbiyo - Media worker / 27 November
29. T. Tharmalingam - Media worker / 27 November
2008
30. Paranirupesingham Devakumar – Journalist / 28 May
31. Rasmi Mohamad – Journalist / 06 October
2009
32. Lasanntha Wickrematunga - Editor / 08 January
33. Punniyamurthy Sathyamurthy - Journalist / 12 February
34. Sasi Mathan – Media worker / 06 March
இப்போது இலங்கையில் ஊடகவியாலாளர்களைக் கொல்வதிலும் பார்க்க வேறுவிதமாகத் தண்டிப்பது என்ற முடிவு எடுக்கப் பட்டுள்ளது போலிருக்கிறது.
அவசரகால நிலைச் சட்டம், பயங்கர வாதத் தடுப்புச் சட்டம் ஆகியவற்றுடன் ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஒரு அரசால் ஒருவரை பொய்க் குற்றச் சாட்டுகளின் கீழ் தண்டிப்பது இலகுவான காரியம்.
இலங்கயில் சிங்களமும் தமிழிலும் எழுதக்கூடிய ஊடகவியலாளர்கள் குறைவு. அந்த வகையில் திஸ்ஸநாயகம் ஒரு முக்கியமான ஊடகவியலாளர்.
ஆனால் மேல் கூறப் பட்டுள்ள 34 ஊடகவியலாளர்களுக்கும் கொடுக்காத முக்கியத்துவம் திஸ்ஸநாயகம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது ஏன்?
இவை மட்டுமல்ல இலங்கையில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் தொழுது கொண்டிருந்த பாரளமன்ற உறுப்பினர் ஜோசேப் பரராஜசிங்கம் கொல்லப் பட்டார். மேலும் பல பாராளமன்ற உறுப்பினர்கள் கொல்லப் பட்டனர்.
இவர்கள் கொலைகளுக்கு கொடுக்கப் படாத முக்கியத்துவம் திஸ்ஸநாயகத்திற்கு ஏன் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவரை கொடுக்கப் படுவது ஏன்? இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்:
1. திஸ்ஸநாயகம் ஏதாவது மேற்குலக நாட்டின் உளவாளியாக இருக்கலாம். அவரின் குடும்ப செல்வ நிலை இந்தக் கருத்திற்கு வலுச்சேர்பதாக இல்லை.
2. இப்போதைய இலங்கை இருக்கும் பிராந்தியத்தில் நிலவும் பன்னாட்டு போட்டியில் இலங்கைக்கு எதிரான வாதங்களிற்கு வலுச் சேர்ப்பதற்கு திஸ்ஸநாயகத்தின் மீதான தண்டனை சில நாடுகளிற்கு தேவைப் படுகிறது. தெளிவாகச் சொல்வதானால் சீன சார்பாக மாறிக் கொண்டிருக்கும் இலங்கைக்கு ஆப்பு வைப்பதற்கான முயற்ச்சிக்கு திஸ்ஸநாயகம் மீதான தண்டனையையும் மேற்கு நாடுகள் பாவிக்கின்றன.
காணொளி: இலங்கை அமைச்சு செயலர் சனல்-4 இற்கு பேட்டி
Friday, 11 September 2009
இரண்டு வயதுச் சிறுமிக்கு தகாத வார்த்தையால் சீட்டு எழுதியவர் சீட்டுக் கிழிபட்டார்.
இரண்டு வயது மகளுடன் உணவகத்தில் உணவருந்திய பெற்றோர்கள் இறுதியில் கிடைத்த பற்றுச் சீட்டைப் பார்த்து அதிர்ந்தனர். பிரித்தானியாவின் ஹலிfஅக்ஸ் என்னும் இடத்தில் உள்ள மெக்சிக்கன் உணவகத்தில் இது நடந்தது.
உணவு பரிமாறுவதில் ஏற்பட்ட தாமதம் பசியுடன் இருந்த இரண்டு வயது மொலி கார்டின் பொறுமை இழந்து உணவு விரைவில் வேண்டு முறையிட்டதால் ஆத்திரமடைந்த உணவக ஊழியர் Fஇல் தொடங்கும் தகாத வார்த்தையால் எழுத்துப் பிழையுடன்:
'Thank you littell f***er'
என்று சீட்டில் அச்சடித்துக் கொடுத்தனர். அவருக்கு little என்ற வார்த்தையக்கூட சரியாக எழுதத் தெரியவில்லை. மேலுள்ள படத்தைச் சொடுக்கினால் அது தெரியும். அந்த தகாத வார்த்தை மறைக்கப் பட்டுள்ளது. கோபமடந்த பெற்றோர் உணவக நிர்வாகத்திடம் முறையிட்டபோது அவர்கள் சம்பந்தப்பட்ட ஊழியரை வேலை நீக்கம் செய்தனர்.GSP+ என்றால் என்ன? அது இலங்கைக்கு மறுக்கப் பட்டால் என்னவாகும்?
GSP என்பது The Generalised System of Preferences என்பதன் சுருக்கமாகும். GSPஎன்பது ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் வர்த்தக முன்னுரிமையாகும். இவ்வுரிமை வழங்கப் பட்ட நாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் இறக்குமதித் தீர்வின்றி பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும்.
ஜிஎஸ்பி+ என்ற சலுகைமூலம் ஒரு நாடு கிட்டத்தட்ட 7200 வகையான பொருட்களை இறக்குமதித் தீர்வையின்றி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்ய முடியும்.
ஐரோப்பிய ஒன்றியம் ஏன் இச்சலுகையை வழங்குகிறது?
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நாடுகளுக்கு தமது பொருளாதரத்தை அபிவிருத்தி செய்ய சந்தர்ப்பம் வழங்குவதற்கு என்று ஐரோப்பிய ஒன்றியம் சொல்கிறது. ஆனால் சீனாவிற்கு ஆப்பு வைக்கச் செய்யப்பட்ட ஏற்பாடுதான் இது என்றும் சொல்லப் படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வியாபார நிறுவனம் ஒன்று ஊழியர்களுக்காக செய்யும் செலவு சீனவின் ஊழியச் செலவுடன் ஒப்பிடுகையில் 20 மடங்கு அதிகமாகும். இதனால் பல பொருட்களை ஐரோப்பிய ஒன்றிய வியாபாரிகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யத் தொடங்கினர். இதனால் சிறந்த தொழிலாளர் வளமுள்ள நாடுகளுக்கு GSP+ வரிச் சலுகையை வழங்கி அந்நாடுகளில் இருந்து மலிவாகப் பொருட்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய ஒன்றியம் முயன்றது.
GSP+சலுகையைப் பெறுவதற்கு என்று சில நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும். அதில் முக்கியமானது 27 சர்வதேச உடன்படிக்கைகளில் சலுகை பெறமுயலும் நாடு கையொப்பமிட்டிருக்க வேண்டும். அந்த உடன்படிக்கையை மதித்து பின்பற்றி நடக்க வேண்டும். அவற்றில் முக்கியமானவை மனித உரிமைகள் சம்பந்தமானது.
இலங்கையும் GSP+ உம்.
2005ஆம் ஆண்டின் நடுப் பகுதியில் இலங்கைக்கு இந்த வரிச்சலுகை ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்பட்டது. இலங்கைக்கு மூன்று பில்லியன் டொலர் பெறுமதியான ஏற்றுமதி வருமானம் இதனால் ஆண்டு தோறும் கிடைக்கிறது. 100,000 பேர் வேலை வாய்ப்புப் பெற்றனர். Marks & Spencer உட்படப் பல வர்த்தக நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்தன.
தமிழாராய்ச்சிப் படுகொலை, செம்மணிப் படுகொலை, கொக்கட்டிச் சோலைப்படுகொலை இப்படி நீண்ட கொலைப் பட்டியல் கொண்ட நாட்டிற்கு இப்படி ஒரு சலுகை வழங்கியிருக்கக் கூடாது. இந்தச் சலுகை நிறுத்தப் பட்டால் ஒருஇலட்சம் பேர் வேலை வாய்ப்பு இழப்பர் பல பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை இலங்கை இழக்கும்.
2008இல் GSP+ஏன் நிறுத்தப் படவில்லை?
சென்ற ஆண்டு இலங்கைக்கான GSP+ வரிச்சலுகை நிறுத்தப் படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப் பட்டது. ஆனால் இலங்கைக்கு மனித உரிமை தொடர்பா சீர்திருத்தம் செய்ய அவகாசம் வழங்கி ஒத்திவைக்கப் பட்டது என்று சொல்லப் பட்டது. ஆனால் Marks & Spencerஇன் வற்புறுத்தலின் பேரில் தான் வரிச்சலுகை நிறுத்தப் படவில்லை என்றும் சொல்லப்பட்டது. Marks & Spencer தனது உற்பத்தியை வேறு இடம் எடுத்துச் செல்ல அல்லது தனது உற்பத்திச் செலவை சரிசெய்து கொள்ள அவகாசம் வழங்கப் பட்டதாகவும் சிலர் கருத்துத் தெரிவித்தனர்.
இப்போது ஏன் நிறுத்தப் படுமா?
பத்து நாட்களுக்கு முன் தி எக்கொனமிஸ்ற் சஞ்சிகை ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ளக அறிக்கை ஒன்றை மேற்கோள் காட்டி வெளியிட்ட தகவலின் படி GSP+ சலுகை இலங்கைக்கு கிடைப்பது மிக அரிது என்றே தெரிகிறது. அது வெளியிட்ட தகவல்:
The confidential 130-page report, which has been obtained by The Economist, concludes that Sri Lanka has failed to honour important human-rights commitments, and is ineligible for GSP Plus. Widespread police torture, abductions of journalists, politicised courts and uninvestigated disappearances have all played a part in creating a state of “complete or virtually complete impunity in Sri Lanka”. The internment of the Tamil displaced, which the government claims is necessary to weed out the last Tamil Tiger rebels and to protect them from munitions left in their fields, is “a novel form of unacknowledged detention”.
ஆனால் பின்வருவனவற்றையும் நாம் கவனத்தில் கொள்ள் வேண்டும்:
- இவ்வறிக்கை திஸ்ஸநாயகத்திற்கு 20ஆண்டுச் சிறைத் தண்டன வழங்கமுன் தயாரிக்கப் பட்டது.
- இவ்வறிக்கை தாயாரித்த பின்னர்தான் சனல்-4 தொலைக்காட்சியின் இரண்டாவது வன்னி முகாம் தொடர்பான காணொளி வெளிவந்தது.
- இவ்வறிக்கையின் பின்னர் தான் யூனிசெவ்வின் அதிகாரி இலங்கையில் இருந்து வெளியேற்றப் பட்டார்.
ஐரோப்பிய ஒன்றியம் தனது முடிவை அக்டோபர் மாத நடுப்பகுதியில் எடுக்கவிருக்கிறது.
Thursday, 10 September 2009
அடுத்த பனிப்போர் இலங்கையை மையம் கொண்டு ஆரம்பிக்குமா?
அமெரிக்காவை இலக்கு வைத்து சோவியத் ஒன்றியம் கியூபாத்தீவில் அணு ஆயுதங்களை 1960களில் குவித்தபோது இரு பெரும் வல்லரசுகளுக்கும் இடையில் அணு ஆயுதப் போர் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. கியூபாவை அமெரிக்கா கடல் முற்றுகைக்கு உள்ளாக்கியது. சோவியத் ஒன்றியம் பெரும் படையணிகளை அங்கு நகர்த்தியது. பின்னர் சோவியத் ஒன்றியம் அணு ஆயுதங்களை அகற்ற சம்மதித்தது. பின்னர் இரு நாடுகளும் ஒன்றை ஒன்று அறிக்கைகள் மூலம் மிரட்டும் பனிப் போர் திவிரமடைந்தது.
இந்தியாவின் அணுஆயுதங்கள் தாங்கிய ஏவுகணைகள் பாக்கிஸ்த்தானின் சகல பகுதிகளையும் தாக்கும் வல்லமையுடையன. ஆனால் பாக்கிஸ்த்தானின் அணுஆயுதங்கள் தாங்கிய ஏவுகணைகள் இந்தியாவின் வடமாநிலங்களை மட்டுமே தாக்கக் கூடியன. இது சீன-பாக்கிஸ்த்தான் கூட்டைப் பொறுத்தவரை ஒரு பாதாகமான நிலைப் பாடு. இதைச் சம நிலைப் படுத்த சீன-பாக் கூட்டமைப்பிற்கு இலங்கை தேவைப் படுகிறது. சீனாவால் இந்தியாவின் தென் மாநிலங்களில் தாக்குதல் நடத்த தனது தொலைதூரத் தாக்குதல் திறனை அல்லது கடற்படை வலுவை பாரிய அளவில் அதிகரிக்க வேண்டும். இதனால் அடுத்த இருபது ஆண்டுகளில் உலகின் பெரும் வல்லரசாக மாறமுயலும் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போட்டியில் பெரும்பகுதி இலங்கையை மையப் படுத்தி நடக்கவிருக்கிறது. இதன் தாக்கங்களை கடந்த ஐந்து வருடங்களாக உணரக்கூடியதாக இருக்கிறது. இதன் ஒரு அம்சமே இவ்விரு நாடுகளும் ஒன்றுக் கொன்று போட்டியாக தமிழினக் கொலைக்கு உதவி வருகின்றன. இதன் விளைவாகவே இலங்கையும் தனது வெளியுறவுக் கொள்கையில் மேற்கு நாடுகளைப் புறந்தள்ளி சீனாவின் தீவிர நண்பனாக மாறி வருகிறது. இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் நாடுகளில் சீனா ஜப்பானை இரண்டாம் இடத்திற்குத் தள்ளி தான் முதலிடத்தை வகிக்கிறது. அந்நியச் செலவாணி இருப்பில் உலகில் முதலாமிடத்தில் இருக்கும் சீனாவுடன் 162-ம் இடத்தில் இருக்கும் இந்தியா இந்த விடயத்தில் போட்டிபோட முடியாது. சிங்கள மக்களைப் பொறுத்த வரை இந்திய நட்பிலும் சீன நட்பை அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் இப்போதைய சூழலில் தமிழ்த்தேசியம் முற்றாக துடைத்தழிக்கும் வரை இதை வெளிகாட்ட விரும்பவில்லை.
இனக்கொலைப் போரில் இலங்கைக்கு இந்தியா சீனா பாக்கிஸ்த்தான் ஆகிய மூன்று நாடுகளும் பேருதவி வழங்கின. இப்போது இலங்கை கைமாறு செய்ய்யும் வேளை வந்துவிட்டது. இலங்கை பாக்கிஸ்த்தானுக்கு வழங்க விருக்கும் கைமாறு என்ன? இலஙகையில் பாக்கிஸ்த்தானிய இராணுவத்தினருக்கு பயிற்ச்சி அளிப்பது என்ற போர்வையில் கிளிநொச்சியில் பாக்கிஸ்த்தானிய இராணுவ முகாம் அமையுமா? அப்பயிற்சிக் கல்லூரியில் சீன இராணுவ நிபுணர்கள் பணிபுரிவார்களா? அங்கு பாக்கிஸ்த்தானில் இருந்து தென் இந்தியாவிற்கு பேரழிவு விளைவிக்கக் கூடிய ஆயுதங்கள் குவிக்கப் படுமா? 1960களில் கியூபாத்திவில் நடந்தது வரும் காலத்தில் இலங்கையில் நடக்குமா? ஆக மொத்தத்தில் தமிழர் தாயக பூமியை மையப் படுத்தி ஒரு பெரும் வல்லாதிக்கப் போட்டி நடக்கிறது.
Wednesday, 9 September 2009
பாலித ஹொகன்னவிற்கு விசா வழங்க பிரித்தானியா மறுப்பு
இலங்கையின் வெளியுறவுச் செயலாளராக இருந்தவரும் இலங்கையின் ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தரப் பிரதிநிதியாக பதவி ஏற்கவிருப்பவருமான பாலித ஹொகன்னவிற்கு பிரித்தானிய அரசு பயண அனுமதி(விசா) வழங்க மறுத்துள்ளது.
தமிழர் விவகாரத்தில் பலத்த பொய்களை பன்னாட்டு அரங்கில் அவிழ்த்து விடுபவர் என பல தமிழ் ஊடகங்கள் இவரைப்பற்றி விமர்சிப்பதுண்டு.
தமிழர் பிரச்சினைக்கு எதற்கு அரசியல் தீர்வு? என்று கேள்வி எழுப்பியுள்ளதுடன், அதற்கு தர்க்க ரீதியில் எந்த அடிப்படையும் இருப்பதாக எனக்குப் புரியவில்லை எனவும் சொன்னவர்இலங்கையின் வெளியுறவுச் செயலர் பாலித கோஹன.
சிறிலங்காவில் போர் நடைபெற்ற போது வெளி நாட்டு அமைச்சில் பணியாற்றி தற்போது ஐ. நா வுக்கான நிரந்தர அலுவலராக செல்லவிருக்கும் கலாநிதி பாலித ஹொகன்னவை அவுஸ்ரேலிய அரசாங்கம் விசாரணை செய்யவேண்டும் என குரலற்றவர்களிற்கான ஆஸி மனித உரிமைகள் அமைப்பு கேட்டுக்கொண்டது.
ஸ்ரீலங்காவில் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது அவுஸ்ரேலிய அரசாங்கம் இலங்கை வெளி நாட்டமைச்சின் ஊடாக சில உதவி திட்டங்களை அங்கு மேற்கொண்டது. அந்த நேரம் திரு பாலித கேகன்ன அவர்களே வெளி நாட்டமைச்சிற்கு செயலாளராக இருந்தார். தவிர அவர் தனது தொலை காட்சி நேர்முகம் ஒன்றில் 20,000 மக்கள் பாதுகாப்பு வலயத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தினை நியாயப்படுத்த முற்பட்டுள்ளார். எனவும் கூறப்படுகின்றது.
பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வலயத்தில் அணு குண்டை போடவில்லையே என கூறியதன் மூலம் அவர் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வலயத்தில் குண்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என்பதனை ஒத்து கொண்டுள்ளார். மேலும் வெற்றி பெற்ற நிலையில் இருந்த இராணுவம் நினைத்திருந்தால் ஒவ்வொரு பெண்களையும் பாலியல் வல்லுறவு கொண்டிருக்கலாம் ஆனால் செய்யவில்லை என்று கூறியதன் மூலம் போரில் வெற்றி பெற்றவர்கள் எதையும் செய்யலாம் என்ற கருத்துப்பட கூறியமை போர் விதிகளுக்கு முரணானவை எனவே இவர் விசாரிக்கப்பட வேண்டும் என அஸ்திரேலிய மனித உரிமைகள் அமைப்பு விட்டுள்ள பத்திரிகை குறிப்பில் தெரிவித்தது.
ஆத்திரமடைந்த இலங்கை வெளிவிவகார அமைச்சு
பாலித ஹொகென்னவிற்கு பயண அனுமதி வழங்க மறுத்ததால் இலங்கை அரசு ஆத்திரமடைந்தது. அது பிரித்தனியத் தூதுவரை 10-09-2009 தனது வெளிவிவகார அமைச்சிற்கு அழைத்து விசாரிக்கவிருக்கிறது.
வரிக் கவிதை
தமிழ் மீனவர்களைப் பாதுகாக்க ராகுல் என்ன நடவடிக்கைகள் எடுப்பார்?
சென்ற மாதம் நடுக்கடலில் பழுதடைந்த இந்திய மீனவர்களின் படகைக் கட்டி இழுத்துச் செல்வதற்கு இந்தியக் கரையோரக் காவற் படையினர் தயாராகிக் கொண்டிருந்த வேளை அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் இந்தியர்கள் மீது சரமாரியாகச் சுடத் தொடங்கினர். பயந்து நடுங்கிய இந்தியக் கரையோரக் காவற் படையினர் தமது கைகளை உயர்த்தி அவர்களிடாம் சரணடைந்தனர். அவர்கள் கப்பலுக்குள் ஏறி சோதனையிட்ட பின் இலங்கைக் கடற்படையினர் அங்கிருந்து விலகிச் சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக இந்தியா இலங்கை அரசிடம் எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை.
தமிழ் மீனவர்களை சிங்களவர்கள் நடுக்கடலில் கொன்று குவிப்பதைப் பற்றி தமிழ்நாட்டில் உள்ள உத்தரப் பிரதேச பேரினவாதிகளின் கொத்தடிமைகளிடம் சொன்னால் அவர்கள் கூறும் பதில்: மீனவர்கள் எல்லையைத் தாண்டிச் சென்றனர். அதனால் இலங்கைக் கடற்படை சுடுகிறது. எல்லையைத் தாண்டிச் செல்பவர்களைச் சுட்டுத் தள்ள வேண்டும் என்பது இவர்களின் கருத்து. இப்படி எந்த நாட்டிலும் நடப்பதில்லை. எல்லையைத் தாண்டுபவர்கள் ஆகக் கூடிய தண்டனையாக கைது செய்யப் படலாம். ஆனாலும் இக் கொத்தடிமைகள் இப்பதிலைத் திருப்பி திருப்பி சொல்லி மகிழ்கின்றனர்.
இதுவரை கடலில் கொல்லப் பட்ட தமிழ் மீனவர்களுக்காக இலங்கை அரசிற்கு எதிராக இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் ராகுல் காந்தி தமிழ் மீனவர்கள் கொல்லப் பட்டால் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் படும் என்று தெரிவித்துள்ளார். இவரது அப்பன் தமிழர்களுக்கு என்ன செய்தார்?:
தமிழர்களை ஆயுதங்களை சிங்களவர்களிடம் ஒப்படைக்கும் படியும் தமிழர்களைத் தான் பாதுகாப்பதாகவும் வாக்குறுதி அளித்தார். அதன் பிறகு நடந்தது என்ன? தமிழர்களை அமைதிப்படையை அனுப்பி கொன்று குவித்தார். இந்தியாவால் சிங்களவர்களுக்கு ஆயுதம் படைப் பயிற்ச்சி வழங்கப் பட்டது. தமிழினக் கொலைக்குத் தேவையான ஆயுதங்களைவாங்குவதற்கு இந்தியா சிங்களவர்களுக்கு நிதி வழங்கியது. இலங்கைப் படையினருடன் இந்தியப் படையினர் இணைந்து தமிழர்களுக்கு எதிராகச் செயற்பட்டனர்.
தமிழ் மீனவர்களைப் பாதுகாக்க ராகுல் காந்தி என்ன செய்வார்?
- சிங்களைக் கடற்படைக்கு பயிற்ச்சி வழங்குவாரா?
- சிங்களக் கடற்படைக்கு ஆயுதங்கள் வழங்குவாரா?
- சிங்களக் கடற்படைக்கு தேவையான நிதிகளை வழங்குவாரா? அதைப் பாவித்து சீனாவிடமும் பாக்கிஸ்த்தானிடமும் இருந்து சிங்களவர்களை ஆயுதங்கள் வாங்கச் செய்வாரா?
Tuesday, 8 September 2009
பிரபாவும் பொட்டும் இறந்து விட்டதாக இலங்கை அரசு நீதிமன்றத்தில் அறிவிப்பு.
தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் பொட்டு அம்மான் எனப்படும் சிவசங்கரும் இறந்துவிட்டதாக இலங்கை அரசின் சட்டமா அதிபர் கொழும்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னாள் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் சாம் கதிர்காமர் கொலை வழக்கு நிதிபதி குமுதினி விக்கிரமசிங்கவிடமே இலங்கச் சட்டமா அதிபர் இதைத் தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அவர்கள் இருவரின் பெயர்களையும் வழக்கிலிருந்து விடுவித்தார்.
முதல் முறையாக இலங்கை நீதி மன்றமொன்றில் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் பொட்டு அம்மான் எனப்படும் சிவசங்கரும் இறந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இறப்புச் சாட்சிப் பத்திரம்(Death Certificat) எங்கே?
தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் பொட்டு அம்மான் எனப்படும் சிவசங்கரும் இறந்துவிட்டதற்கான சாட்சிப்பத்திரம் சமர்பிக்கப் பட்டதாகத் தகவல் இல்லை.
Monday, 7 September 2009
காணொளி: வன்னி முகாம் அவலங்கள் சனல் -4 தொலைக் காட்சி
வன்னிமுகாம் நிலைமை தொடர்பக கேள்விகள் கேட்ட சனல்-4 இன் ஒளிபரப்பாளர்மீது இலங்கை இடர் முகாமைத்துவ அமைச்சு செயலர் சனல்-4 இன் பாய்ச்சல்:
காணொளி: வன்னி வதை முகாம் அவலம்-அம்பலப் படுத்துகிறது அல்ஜஸீரா
இலங்கையில் இறுகும் சீனப் பிடியை இந்தியா ஏன் புறக்கணிக்கிறது?
இந்திய முதலாளிகளை மேற்கத்திய முதலாளிகளிடமும் உள்ளூர்த் தரகு முதலாளிகளிடமும் பொதுவுடமைவாதிகளிடமிர்ருந்தும் பாதுகாப்பதில் இந்திராகாந்தி பெரும் பிரயத்தனம் எடுத்தார். இதற்காக அவர் மும் முனைகளில் செயற்பட்டார். ஒன்று கூட்டுச் சேராநாடுகள் அமைப்பில் முக்கிய பணியாற்றினார். அதனால் மத்திய கிழக்கிலும் ஆபிரிக்காவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் இந்தியாவிற்கு பல நண்பர்களை ஏற்படுத்தினார். மற்றது மேற்கு நாடுகளின் எதிரியான சோவியத் யூனியனின் நண்பரானார். அத்துடன் அவர் நிற்கவில்லை உள்ளூர் பொதுவுடமைவாதிகளை ஒழிப்பதில் அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்டார். அதனால் பன்னாட்டு அரங்கில் இந்தியாவின் செல்வாககை சற்று நிமிர்த்தினார்.
எங்க "ஏரியா" உள்ளே வராதே!
இலங்கையை இந்திராகாந்தி தனது பிராந்திய ஆதிக்கத்துள் வைத்திருக்க விரும்பினார். இலங்கை திருமலையில் அமெரிக்கா எண்ணை நிரப்பு வசதிகளைப் பெற முயன்றபோது கொதித்தெழுந்தார். தமிழர்களை இலங்கை அரசிற்கு எதிராக ஆயுதமேந்திப் போராடச் செய்தார். 1984இல் அலன் தம்பதிகள் தமிழ்ப் பேராட்டக்குழு ஒன்றினால் கடத்தப் பட்டபோது அவர்களைத் தேட அமெரிக்க விமானம் ஒன்று கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்து இறங்கியது. இதை அறிந்த இந்த்திரா காந்தி அம்மையார் அவ்விமானம் எந்தத் தேடுதல் நடவடிக்கையிலும் ஈடு படக்கூடாது என்று இலங்கையை எச்சரித்து அந்த விமானத்தைப் பறக்காமல் செய்தார். அவ் விமானம் பறப்பில் ஈடுபட்டால் இந்தியக் கரையோரப் பகுதிகளை வேவு பார்க்கக் கூடும் என்றே இலங்கையை மிரட்டிப் பணிய வைத்தார். தமிழ்த்தேசிய வாதிகளின் பக்கபலத்தால் இதை அவரால் சாதிக்க முடிந்தது. தனது கொல்லைப் புறம் தனது கட்டுப் பாட்டுக்குள் இருக்கவேண்டும் என்பது இந்திராகாந்தியின் கொள்கை.
இப்போது சீனா இலங்கியில் பலவகையில் தனது பிடிகளை இறுக்குகிறது.
இலங்கைக்கு பண உதவி வழங்கும் நாடுகளில் சீனா முதலாமிடத்தில் நிற்கிறது.
இலங்கைக்கு பெருமளவு ஆயுத விற்பனையையும் உதவியையும் சீனா செய்கிறது. சீனா தனது ரத்து(வீட்டோ) அதிகாரத்தைப் பாவித்து ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் மனித் உரிமை தொடர்பாக பாதுகாப்புச் சபை விவாதிக்காமல் பார்த்துக் கொண்டது. எல்லாவற்றிலும் மேலாக சீனா அம்பாந்தோட்டையில் அமைத்துக் கொண்டிருக்கும் துறைமுகம் அமைகிறது.
இதைப்பற்றி இருமுறை குன் ஜன் சிங் இந்தியாவை எச்சரித்துள்ளார். ஒன்று 2009 ஜூனில் மற்றது ஆகஸ்டில்:
“This increasing closeness between Colombo and Beijing is a reason for concern for New Delhi. During the construction of the (Hambantota) port a large number of Chinese experts are to be expected to be present in the region and this is proving to be a security concern for the Indian side.”
ஆனால் பி. இராமனோ அல்லது கேணல் ஹரிகரனோ சீனப் பிடி இலங்கையில் இறுகுவதை பெரிதாக எடுக்கவில்லை. கேணல் ஹரிகரன் இப்படிக் கூறுகிறார்:
While India should not 'worry' on each specific Chinese action, it should be concerned about any factor potentially destabilizing to its strategic security, introduced in its area of influence.
ஏன் ஹரிகரனும் இராமனும் இலங்கை-சீன உறவை பெரிது படுத்துவது இல்லை. இலங்கையில் தமிழ்த் தேசியத்தை ஒழிக்க இந்தியால் மட்டும் முடியாது சீன உதவியும் தேவை என்று அவர்கள் கருதுகிறார்கள். இந்தியக் கொள்கை வகுப்பாளர்களாக இருக்கும் சாதி வெறியர்களும் இதைத்தான் நினைக்கிறார்கள். இலங்கைக்கு தமிழ்த்தேசியவாதத்தை ஒழிக்க சீனாவும் உதவட்டும். ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்புக்களில் இலங்கைக்கு ஆதரவாக காத்திரமான உதவிகளைச் செய்ய இந்தியாவால் முடியாது. அது ரத்து(வீட்டோ) அதிகாரமுடைய சீனவால் மட்டுமே முடியும் என்று இந்த சாதிய வெறி பிடித்த சில டெல்லிக் கொள்கை வகுப்பாளர்களும் ஆலோசகர்களும் நினைத்ததின் விளைவே இந்தியா சீனாவின் செல்வாக்கை இலங்கையில் அதிகரிக்க உதவியது. இவர்களுக்கு தமது சாதிய நலனே இந்தியத் தேசிய நலனிலும் பெரிது. சாதியத்தை ஒழித்துக் கட்டிய தமிழ்த்தேசிய போராட்டம் வெற்றியடைவதை இவர்கள் விரும்பாமல் போனதுதான் இதற்குக் காரணம்.
ராசி! சோனியா மகராசி!!
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...