Thursday, 2 February 2017

யேமனில் டொனால்ட் டிரம்பின் முதற் கோணல்

அமாவாசை வரும்வரை ஒபாமா இருக்கவில்லை.
அமெரிக்காவின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் தொடர்ச்சியாக யேமனில் ஒரு தாக்குதல் நடந்துள்ளது. முன்னாள் அமெரிக்க அதிபர் பராக ஒபாமா தான் பதவிக்கு வந்தவுடன் ஒசாமா பின்லாடனைக் கொன்று புகழ் பெற்றது போல் தன் பதவிக்காலத்தின் இறுதி நாட்களில் யேமனில் உள்ள அல் கெய்தா தலைவர்கள் தங்கியிருக்கும் தளத்தைத் தாக்கி அழித்துப் புகழ் பெற விரும்பினார், ஆனால் அது நிலாக்காலம் என்றபடியால் அமாவாசை வரை காத்திருக்க வேண்டும் என அமெரிக்கப் படைதுறை நம்பியது. அமாவாசைக்குள் அவரது பதவிக்காலம் முடிவடைந்து விட்டது.


புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் யேமன் அல் கெய்தாத் தளத்தை அதிரடியாகத் தாக்கும் திட்டம் அங்கீகாரம் பெறக் கொடுக்கப்பட்டது. வெள்ளை மாளிகையில் அவரும் அவரது மகளின் கணவரும் பழமைக்கோட்பாடுசார் யூதருமான ஜரெட் குஷ்னர், பாதுகாப்புச் செயலர் ஜிம் மத்திஸ், படைத்தளபதி ஜோசெப் டன்போர்ட், துணை அதிபர் மைக் பென்ஸ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் ஃபிலின் ஆகியோர் இரவு உணவின்போது அத்திட்டத்தை ஆராய்ந்து அங்க்கீகாரம் கொடுத்தனர். அங்கீகாரம் கொடுக்க முன்னர் சட்ட ஆலோசனையும் பெறப்பட்டது. பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாட்டில் படையினருக்கு அதிக சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்பது டிரம்பின் கொள்கையாகும். தாக்குதல் ஜனவரி 31-ம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. யேமனின் மையப்பகுதியில் உள்ள Bayda மாகாணத்தில் உள்ள அல் கெய்தா முகாமே தாக்குதலுக்கு உள்ளானது.

பாக்கிஸ்த்தான் அபொட்டாபாத் நகரில் ஒசாமா பின் லாடனின் மாளிகையில் தாக்குதல் செய்த அதே அமெரிக்கச் சிறப்புப் படையணியான சீல்-6 படையைச் சேர்ந்தோரே யேமன் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் படையினர் உட்பட பலர் இத்தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்கள் தாக்குதல் இலக்கில் இருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ள யக்லா என்னும் கிராமத்தில் விமானத்தின் மூலம் இறக்கப்பட்டனர். அன்று பல ஆளில்லாப் போர்விமானங்கள் அந்தப் பகுதியில் பறந்ததை அவதானித்த மக்கள் அல் கெய்தாப் போராளிகளுக்குத் தகவல் கொடுத்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகின்றது. இதனால் சீல்-6 படையினரின் தாக்குதலின் முக்கிய உபாயமான “எதிர்பாராத தாக்குதல்” இல்லாமல் போய்விட்டது. அமெரிக்கப் படையினரின் வருகையை அறிந்த போராளிகள் தமது முகாமைச் சுற்றியுள்ள பாடசாலைகள், மருத்துவ நிலையங்கள், வீடுகள் போன்றவற்றில் நிலையெடுத்துக் கொண்டனர்.
 
MV-22 Osprey போர் விமானம்
உதவிக்குச் சென்ற விமானம் அழிக்கப்பட்டது.
சீல்-6 படையணியினரை அல் கெய்தா போராளிகள் சுற்றி வளைத்து பல முனைகளில் இருந்து தாக்குதல் தொடுத்த போது விமானப் படையின் உதவி கோரப்பட்டது. Marine Cobra உலங்கு வானுர்திகளும்  போர்விமானங்களும் சென்று தாக்குதல் நடத்தின. செங்குத்தாக ஏறவும் இறங்கவும் கூடிய MV-22 Osprey போர் விமானம் காயப்பட்டவர்களை மீட்கத் தரையிறங்கிய போது அவசரச் செயற்பாட்டால் நிலத்துடன் மோதல் ஏற்பட்டு அதில் இருந்த மூவர் காயமடைந்தனர். விமானம் சேதமடைந்தது. அந்த 75மில்லியன் டொலர்கள் பெறுமதியான விமானம் எதிரி கைகளில் சிக்காமல் இருக்க இன்னொரு விமானத்தில் இருந்து குண்டு வீசி அழிக்கப்பட்டது.
ஓர் அல் கெய்தா முகாமைத் தாக்குவதாயின் ஆளில்லாப் போர்விமானம்  மூலமாகவோ அல்லது வழிகாட்டல் ஏவுகணை வீச்சின் மூலமாகவோ தாக்கி அழிக்க முடியும். மிகவும் ஆபத்தான படை நடவடிக்கையை அமெரிக்காவின் கடற்படையின் சீல்-6 பிரிவினர் மேற்கொண்டதன் நோக்கம் அங்குள்ள கணினிகளியும் கைத் தொலைபேசிகளையும் கைப்பற்றுவதன் மூலம் அல் கெய்தாவின் செயற்பாடுகள் தொடர்பான விபரங்களை அறிவதே. பின் லாடனின் அபொட்டாபாத் மாளிகையில் இருந்தும் பல கணினிகளை சீல் படையினர் கைப்பற்றிச் சென்றனர். யேமனில் உள்ள அல் கெய்தா முகாமில் இருந்து கணினிகளையும் கைப்பேசிகளையும் கைப்பற்றியதாக அமெரிக்கப் படையினர் சொல்கின்றனர். அந்த வகையில் அவர்கள் நடந்த தாக்குதல் வெற்றி என்கின்றனர்.

எல்லை தாண்டிய பயங்கரவாதம்.
அமெரிக்கப்படையினர் செய்த தாக்குதலால் யேமனின் யக்லா கிராமத்தின் பெரும் பகுதி அழிக்கப்பட்டது. அமெரிக்காவால் கொல்லப்பட்ட அமெரிக்கக் குடிமகனான Anwar al-Awlakiயின் 8வயது மகளும் சில்-6 படையணியின் தாக்குதலால் கொல்லப்பட்டார்.  பத்துக்கு மேற்பட்ட அல் கெய்தாப் போராளிகளும் கொல்லப்பட்டனர். பத்துப் பெண்கள் உட்படப் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பயேமனின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் மலிக் அல் மெக்லஃபி இது ஒரு நீதிக்குப் புறம்பான கொலை என்றார்.

Monday, 30 January 2017

ஆசிய ஆதிக்கப் போட்டியில் அமெரிக்க ஆட்சிமாற்றம் ஏற்படுத்தவிருக்கும் தாக்கம்

ஆசிய ஆதிக்கப் போட்டியில் சீனாவின் விரிவாக்கம், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான ஆதிக்கப் போட்டி, வட கொரியாவின் அச்சுறுத்தல், பாக்கிஸ்த்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான முறுகல் நிலை, ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையிலான கடல் எல்லைப் பிரச்ச்னை, ஆசியான் நாடுகளுடனான வர்த்தகப் போட்டி, மத்திய ஆசியாவில் சீனாவிற்கும் இரசியாவிற்கும் இடையிலான விரிவாக்கப் போட்டி ஆகியவை முக்கிய இடம் வகிக்கின்றன. ஆட்சி மாற்றங்களை செய்வதன் மூலம் உலக கேந்திரோபாய நிலையை தனக்குச் சாதகமாக மாற்ற முயலும் அமெரிக்காவில் உலக அமைதிக்குச் சவால் விடக்கூடிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. Foreign Policy என்னும் அமெரிக்க ஊடகம் டிரம்ப்பால் ஆசியாவிற்கு மிரட்டலைத் தவிர வேறு ஒன்றையும் கொடுக்க முடியாது என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளது. டிரம்ப் எப்படி ஆசியாவில் ஒரு குழப்ப நிலையை உருவாக்கப் போகின்றார் என்பது தொடர்பான ஒரு ஆசிரியத் தலையங்கத்தை அல் ஜசீரா வரைந்துள்ளது.

மாறிய கேந்திரோபாய நிலை.
2016-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஐக்கிய அமெரிக்காவும் இந்தியாவும் LEMOA எனச் சுருக்கமாக அழைக்கப்படும் செயலாதாரப் பரிமாற்ற ஒப்பந்தக் குறிப்பாணை (Logistics Exchange Memorandum of Agreement) ஒன்றில் கையொப்பமிட்ட பின்னர் இந்து மாக்கடலின் கேந்திரோபாயச் சமநிலையில் பெரும் தாக்கம் ஏற்ப்பட்டுள்ளது. வல்லரசுகளுடன் படைத்துறை ஒத்துழைப்பைச் செய்வதில்லை என்ற நிலைப்பாட்டிலும் இந்தியாவின் படை நிலைகளை வல்லரசு நாடுகள் பாவிக்க அனுமதிப்பதில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்தும் இந்தியா விலகி இந்த உடன்பாட்டைச் செய்தது. இந்தியாவிற்கு படைக்கலன்களை விற்பதில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்து இந்தியாவிற்கு தனது புதிய தர படைக்கலன்களையும் தொழில்நுட்பங்களையும் விற்பனை செய்வதில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்து அமெரிக்கா விலகியது. இரு நாடுகளும் தமது நிலைப்பாட்டில் இருந்து விலகியமைக்குக் காரணம் இந்து மாக்கடலில் சீனா தனது ஆதிக்கத்தை நிதானமாகவும் கவனமாகவும் விரிவாக்கி வருவதே.

உண்மையான நண்பனும் பங்காளியும்
ஐக்கிய அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை தலைகீழாக மாற்றியமைக்க விருக்கும் டொனால்ட் டிரம்ப் பராக் ஒபாமா தொடக்கிய பல திட்டங்களையும் ஒப்பந்தங்களையும் இரத்துச் செய்து கொண்டிருக்கின்றார். ஆனால் ஒபாமா-ஹிலரி கிளிண்டன், ஒபாமா-ஜோன் கெரி ஆகியவர்களின் வெளியுறவுச் செயற்பாட்டில் வளர்த்தெடுத்த இந்தியாவுடனான அமெரிக்காவின் நட்பை யாரும் எதிர்பாராத அளவிற்கு மேம்படுத்த இருக்கின்றார். டிரம்ப் பதவியேற்ற பின்னர் தொடர்பு கொண்ட உலகத் தலைவர்களுள் இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி முக்கியமானவர். இருவரும் ஒருவரை மற்றவர் தம் நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளும் படி அழைப்பும் விடுத்திருந்தனர். இந்தியா உண்மையான நண்பனும் பங்காளியும் என மோடியிடம் டிரம்ப் தெரிவித்தார். இரு நாடுகளும் பொருளாதாரம், பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றில் ஒத்துழைக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தையும் டிரம்ப் மோடியிடம் தெரிவித்தார். நரேந்திர மோடியின் பார்திய ஜனதாக் கட்சியின் இந்து சேனையினர் டொனால்ட் டிரம்ப்பின் வெற்றியடைந்ததும் புது டில்லியில் அவரது படத்திற்குகு குங்குமப் பொட்டிட்டு காவி நிற மலர்களடங்கிய மாலைகளைச் சூடினர். அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவை மேம்படுத்துவதில் இந்திய ஆளும் கட்சியினர் அதிக அக்கறை காட்டுகின்றனர். அமெரிக்க வரலாற்றில் முதற் தடவையாக நான் இந்து மதத்தின் இரசிகன், நான் இந்தியாவின் இரசிகன் என்று தனது தேர்தல் பரப்புரையின்போது சொல்லிய ஒருவர் முதற் தடவையாக அதிபராகியுள்ளார். அமெரிக்க அதிபராக முன்னர் டிரம்ப்பின் நிறுவனம் இந்திய காணி-கட்டிடத்துறையில் ஒன்றரை அமெரிக்க பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்திருந்தார்.

டிரம்பை இந்தியாவால் நம்ப முடியுமா?
டிரம்ப் அமெரிக்க நிறுவனங்கள் மலிவான மனித உழைப்பிற்காக வெளிநாடுகளில் முதலீடு செய்வதை எதிர்ப்பவர். அமெரிக்க நிறுவனங்கள் தமது பணிகளைக் கையாள இந்தியாவில் அழைப்பு நிலையங்கள் (Call Centres) அமைத்திருப்பதை தனது தேர்தல் பரப்புரையின் போது சாடியிருந்தார். அந்த நிலையங்களில் பணிபுரியும் இந்தியர்களின் ஆங்கிலப் உரையாடல்களையும் கிண்டல் செய்திருந்தார். டிரம்ப் அடிக்கடி மனம் மாறக் கூடியவர் அவரை நம்பி இந்தியாவின் எதிரகாலத்தைப் பணயம் வைக்க முடியாது எனக் கருத்து வெளியிடுவோரும் புது டில்லியில் உள்ளனர்.  இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் சுப்பிரமணியம் ஜெய்ஷங்கர் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு நல்ல நிலையை நோக்கிச் செல்லும் என்றும் அதில் எந்தவிதச் சஞ்சலத்திற்கும் இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் டிரம்ப்பின் இந்தியா தொடர்பான நிலைப்பாட்டையும் அதில் அவரது உறுதிப்பாட்டையும் சரியாக அறிந்த பின்னரே இந்தியா அமெரிக்காவினுடனான தனது உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியும் எனவும் புது டில்லியில் உள்ள சில தரப்பினர் கருதுகின்றனர்.

பாக்கிஸ்த்தான்
அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் நரேந்திர மோடிக்கும் இடையிலான உரையாடலில் உலக பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயற்பட வேண்டும் என டிரம்ப் தெரிவித்ததில் பாக்கிஸ்த்தானும் உள்ளதா என்பது இந்தியாவில் அதிக கரிசனையுடன் அவதானிக்கப் படுகின்றது. இந்தியா தனக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாக்கிஸ்த்தானியப் படையினருக்கும் உளவுத் துறைக்கும் தொடர்பு இருப்பதாக நம்புகின்றது. கடந்த எட்டு ஆண்டுகளாக பாக்கிஸ்த்தானில் உள்ள தீவிரவாதிகளின் நிலைகளில் ஆளில்லாப் போர் விமானங்கள் மூலம் தாக்குதலை நடத்திவந்த அமெரிக்க உளவுத் துறையினர் 2016 ஏப்ரல் மாதம் பாக்கிஸ்த்தானில் செயற்பட்டு வந்த தலிபான் தலைவர் முல்லா அக்தர் மன்சூரைக் கொன்றவுடன் நிறுத்திக் கொண்டது. ஆனால் பராக் ஒபாமா பாக்கிஸ்த்தானை நம்பாத ஒருவராகவே கடைசிவரை இருந்தார். பல அமெரிக்க அதிபர்கள் பாக்கிஸ்த்தானில் படைத்துறை ஆட்சி இருப்பது தமது நாட்டுக்கு உகந்தது எனக் கருதினர். ஆனால் ஒபாமா பாக்கிஸ்த்தானிய ஜெனரல்களைப் பிரச்சனையாகவே கருதினார். அல் கெய்தாவின் தற்போதைய தலைவர் அய்மன் அல் ஜவாகிரி இன்றுவரை பாக்கிஸ்த்தானில்தானில் இருந்து கொண்டு தனது பரப்புரைகளைச் செய்கின்றார். இந்தியாவிற்கு எதிரான தீவிரவாதத் தாக்குதல்களைச் செய்யும் லக்சர் ஈ தொய்பாவின் தலைவர் ஹஃபீஸ் சயித் பாக்கிஸ்த்தானில் பிரபலமான ஒருவர். பாக்கிஸ்த்தானியப் படையினருக்கு வேண்டியவராகக் கருதப்படுபவர். அல் கெய்தா அமைப்பை விரைவில் ஏற்கப் போவதாக நம்பப்படும் ஒசமா பின் லாடனின் மகனும் பாக்கிஸ்த்தானிலேயே இருக்கின்றார். ஆப்கான் பிரச்சனையை அமெரிக்கா முடிவுக்குக் கொண்டு வரும்வரை அல்லது ஆப்கானிஸ்த்தானை அமெரிக்கா கைவிடும் வரை பாக்கிஸ்த்தானை அமெரிக்கா அதிருப்திப் படுத்த முடியாது. ஆனால் இந்திய அரசுறவியலாளர்கள் பாக்கிஸ்த்தான் தொடர்பான அமெரிக்காவின் கொள்கையையும் நிலைப்பாட்டையும் மாற்றுவதற்கு பெரு முயற்ச்சி எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்தியாவுடன் டிரம்ப் வைக்கவுருக்கும் நட்புக்கு இந்தியா அதை ஒரு நிபந்தனையாக வைத்து வெற்றிபெறக் கூடும்.

அமெரிக்கா-இந்தியா-இரசியா                                                 அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நட்புறவில் இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு கேந்திரோபாயப் பிரச்சனையாக இருப்பது இந்திய-இரசிய உறவாகும். பங்களாதேசப் பிரிவினைப் போரின் போது உச்சத்தில் இருந்த இந்திய-சோவியத் உறவு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் பின்னர் இரசிய-இந்திய உறவாகவும் படைத்துறை ஒத்துழைப்பாகவும் தொடர்ந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் இந்தியாவிற்க்குத் தேவையான போதெல்லாம் தனது வீட்டோ எனப்படும் இரத்து அதிகாரத்தை அதிக நிபந்தனையின்றி முன்பு சோவியத் ஒன்றியமும் பின்னர் இரசியாவும் இந்தியாவிற்காகப் பாவித்தன. அந்த நட்பை இழக்க விரும்பாத இந்தியா அமெரிக்காவுடன் தனது உறவை வளர்க்கும் போதெல்லாம் இரசியாவை அதிருப்திப்படுத்தாமல் செயற்பட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தது. அமெரிக்க இந்திய உறவு மேம்படுவதைச் சமாளிக்க இரசியா பாக்கிஸ்த்தானுடனான தனது உறவை சீரமைத்தது. இப்படிப்பட்ட சிக்கலான சூழ் நிலையில் இரசியாவுடனான அமெரிக்க உறவை புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் வளர்த்தெடுப்பது என உறுதி பூண்டுள்ளார். அதற்கு ஏற்ப இரசியாவின் நண்பர் விருதைப் பெற்றவரும் விளாடிமீர் புட்டீனின் நெருங்கிய நண்பருமான ரெக்ஸ் ரில்லர்சனை தனது வெளியுறவுத் துறைச் செயலராக நியமித்துள்ளார். விரைவில் சியாமீதாபொருளாதாத் டையை டிரம்ப் து நிறைவேற்திகார உத்வின்(executive order) மூலம் இத்துச் செய்வார். அதற்காதொலைபேசி உரையாடல் டிரம்ப்பிற்கும் புட்டீனிற்கும் இடையில் 29-01-2017 னிக்கிமை ந்துவிட்து.

சீனா-அமெரிக்கா-இந்தியா-இரசியா
சீனாவிலிருந்து செய்யப்படும் பொருட்களுக்கு 45 விழுக்காடு வரி விதிப்பேன் எனச் சூளுரைத்த டொனால்ட் டிரம்ப் அதனால் அமெரிக்காவிற்கு ஏற்படப் போகும் உலக வர்த்தக வீழ்ச்சியை சமாளிக்க இந்தியா மிகவும் தேவைப்படுகின்றது. ஆனால் இந்தியாவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற கொள்கையுடைய மோடியும் அமெரிக்க வேலை வாய்ப்புக்களை மற்ற நாடுகள் பறிக்கக் கூடாது என்ற கொள்கையுடைய டிரம்பும் சீனாவைக் கருத்தில் கொண்டு ஓர் இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும். சீனாவை அமெரிக்கா தனது தேவைகளுக்கு ஏற்பக் கையாளுதல் இலகுவான காரியம் அன்று. ஆனால் இந்தியாவை அப்படிக் கையாள முடியும். இந்தியாவில் நிலவும் ஊழல் அதற்கு வாய்ப்பாக இருக்கின்றது. ஆனால் அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் செய்யும் உற்பத்திகளை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான ஊழியர்கள் இந்தியாவில் உண்டு. ஆனால் கட்டுமானத் துறையில் சீனாவிலும் பார்க்க இந்தியா பின் தங்கியுள்ளது. பாதுகாப்புத் துறை என்னும் போது உலகச் சந்தையில் அதிக அளவு படைக்கலனகளை வாங்கும் இந்தியாவும் அதிக அளவு விற்பனை செய்யும் அமெரிக்காவும் ஒரு நேர் கோட்டில் சந்திக்க முடியும். ஆனால் இந்தியாவிற்கு நவீன படைக்கலன்களை விற்பனை செய்ய அமெரிக்கா காட்டும் தயக்கம் இந்தியாவை இரசியா பக்கம் போக வைக்கின்றது. சீனா ஆசிய ஆதிக்கப் போட்டியில் வெற்றியடைவதை தவிக்க அமெரிக்காவும் இந்தியாவும் கைகோர்க்க வேண்டிய நிலையில் உள்ளன. இதற்காக இரு நாடுகளும் ஒன்றுடன் ஒன்று ஒத்துழைக்கவும் சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்யவும் தயாராக இருக்கின்றன என்பதையே செயலாதாரப் பரிமாற்ற ஒப்பந்தக் குறிப்பாணையில் இரு நாடுகளும் கைச்சாத்திட்டமை சுட்டிக்காட்டுகின்றது. அமெரிக்க இரசிய இடையிலான நெருங்கிய உறவை டொனால்ட் டிரம்ப்பினதும் விளடிமீர் புட்டீனினது வெள்ளைத் தேசியவாதம் உருவாக்கினால் அது சீனாவிற்கு பெரும் பாதகமாக அமையும். அமெரிக்க அச்சுறுத்தலைச் சமாளிக்கவே இரசியா சீனாவுடன் தனது உறவை மேம்படுத்திக் கொண்டிருக்கின்றது. அமெரிக்க அச்சுறுத்தல் இரசியாவிற்கு இல்லை என்பதை டிரம்ப் முழுமையாக புட்டீனை நம்பவைத்தால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுக்குத் தடையில்லை.பிரித்தானியத் தலைமை அமைச்சரைச் சந்தித்த டிரம்ப் நேட்டோவிற்கான அமெரிக்க அர்ப்பணிப்பை உறுதி செய்தார். ஆனால் இரசியாமீதான பொருளாதாரத் தடை நீக்கப் பட மாட்டாது என உத்திரவாதம் அளிக்க மறுத்துவிட்டார். இது இரசிய உறவிற்கு டிரம்ப் கொடுக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது. போல்ரிக் நாடுகளில் அமெரிக்கப் படை இருக்காது என அமெரிக்காவும் போல்ரிக் நாடுகளுக்கு இரசியாவின் அச்சுறுத்தல் இருக்காது என இரசியாவும் ஒத்துக் கொள்வது புட்டீனையும் டிரம்ப்பையும் இணைக்கும். கிறிமியா விவகாரம் பற்றி இப்போது யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இதனால் இரசிய அமெரிக்க உறவு நெருக்கமடைவதற்கான சாத்தியங்கள் அதிகம். மேலும் சீனாவின் ஆதிக்கம் மத்திய ஆசியாவில் விரிவடைவது தனக்கு அச்சுறுத்தல் என்பதையும் இரசியா அறியும். சீன உறவால் இரசியாவிற்கு பெரும் பொருளாதார இலாபங்கள் கிடைக்கப் போவதில்லை. படைக்கல ஏற்றுமதியால் வருமானம் கிடைக்கலாம் அது இரசியாவிற்கே அச்சுறுத்தலாக எதிர் காலத்தில் அமையும் என்பதையும் புட்டீன அறிவார். இதனால் சீனா சுற்றி வளைக்கப்பட்டு தனிமைப் படுத்தப் படும் வாய்ப்புக்கள் அதிகம். 

சிய எல்லையில் சீனா து Dongfeng-41என்னும் புதிகண்டம் விட்டுக் கண்டம் பாயும் வுணைளை நிறுத்தியிருப்தை சியா நிச்யம் து ரினைக்கு எடுத்துக் கொண்டிருக்கும். 

ஜப்பான் – தென் கொரியா
ஆசிய ஆதிக்கப் போட்டியில் அடுத்த பங்காளி ஜப்பான். ஜப்பான் டிரம்ப்பின் வெளியுறவுக் கொள்கையின் அலைவரிசையைச் சரியாகப் புரிந்து கொண்டுள்ளது.அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செலர் ஜேம்ஸ் த்திஸின் முதற் ணம் ஜப்பானிற்கும் தென் கொரியாவிற்குமாவே இருக்கப் போகின்து. தைஒரு மன்னிப்புக் கோரும் மாபார்க்கப்டுகின்து. தேர்தல் ரப்புரையின் போது டிரம்ப் இரு நாடுளும் து பாதுகாப்பை தாமே பார்த்துக் கொள்வேண்டும் என்று சொன்து போண்டு இது இந்ண்டு எ டிவேலுவின் பாணியில் ஜேம்ஸ் இரு நாட்டுத் லைவர்ளுக்கும் சொல்விருக்கின்றார்.
தென் கொரியாவும் ஜப்பானும் சீனாவின் அச்சுறுத்தலையிட்டு அதிக கரிசனை கொண்ட நாடுகள் இரு நாடுகளும் இந்தியாவுடன் பல ஒத்துழைப்புக்களை மேற்கொண்டுள்ளன. ஜப்பானியத் தலைமை அமைச்சர் சீனாவிற்கு எதிராக இந்தியா-அமெரிக்கா-ஜப்பான் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் அதிக விருப்பம் கொண்டவர். இதில் இரசியாவும் இணைவது ஜப்பானுக்கு இரட்டை வெற்றி.


டிரம்ப்பின் இரசியாவிற்கும் இந்தியாவிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் புதிய வெளிநாட்டுக் கொள்கையால் உலக கேந்திரோபாயச் சமநிலையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம் ஆசிய ஆதிக்கப் போட்டியில் சீனாவை பின் தள்ளக் கூடியது. 

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...