கேள்வி: கூகிளா யாஹூவா சிறந்த தேடு பொறி(search engine)?
பதில்: கொஞ்சம் பொறு...கூகிளில் தேடிப்பார்த்துச் சொல்கிறேன்.
கேள்வி: இந்தியப் படையினருக்கும் பாக்கிஸ்த்தான் படையினருக்கும் என்ன வித்தியாசம்?
பதில்: இந்தியாவில் படையினரின் வயதை அரசு தீர்மானிக்கும். பாக்கிஸ்த்தானில் அரசின் வயதை படையினர் தீர்மானிப்பர்.
குடிப்பதற்கு எதிரான விளம்பரம்
பெற்றோல் விலை ஏற முன்: குடித்துவிட்டு வாகனம் ஓட்டாது.
பெற்றோல் விலை ஏறிய பின்: குடி வாகனம் ஓட்டாதே.
அவள் என் இதயத்தை சுக்கு நூறாக உடைத்தாள்
இப்போது என் இதயத்தை பல பெண்களுக்கு கொடுக்கிறேன்.
உங்கள் கணனியே உங்கள் கடவுச் சொல்லைத்(password) சொல்லித்தர வேண்டுமா?
உங்கள் கடவுச் சொல்லை "incorrect" என வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கடவுச் சொல்லை பிழையாக எழுதும் போதெல்லாம் கணனி Your password is incorrect என்று சொல்லும்.
அவன் அன்று வழமையான நேரத்திற்கு முன்னதாக வீடு திரும்பினான். வீட்டில் மனைவி வேறு ஒருத்தனுடன் இருந்தாள். அவனைக் கண்டதும் மனைவி "ஏன் இன்று நேரத்திற்கு முன்னதாக வந்தாய் என்று ஆத்திரத்துடன் கேட்டாள். அவன் பதிலுக்கு அவன் யார் என்றான். அதற்கு மனைவி கதையை மாத்தாமல் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு என்றாள்.
இந்திய நிதியமைச்சர் பிரணாப் முஹர்ஜீ இந்தியாவின் GDP இந்த ஆண்டில் உயரும் என்பதை மக்கள் தவறாகப் புரிந்து கொண்டனர். அவர் சொன்னது G- Gas, D - Diesel, P- Petrol.
காதல் கணிதம்
நீ+நான்=இன்பம்
நான்-நீ=தாடி+கட்டிங்
Saturday, 25 February 2012
Friday, 24 February 2012
நீதியை நோக்கிய நெடும் பயணம்
சிந்து நதிக்கரை தொடங்கிய பயணம்
தென்பொதிகை மலை தவழ்ந்த பயணம்
குமரி முனையையும் கடந்த பயணம்
கதிர மலையிலும் கமழ்ந்த பயணம்
பாரெங்கும் பயந்தொடிய பயணம்
இன்றும் தொடர்கின்றது
ஆங்கிலக்கால்வாயையும்
பனிமலைகளயும் தாண்டி
நீதிக்கான நெடும் பயணமாய்
உரிமையிழந்துவிட்டான் இவன்
உடமையிழந்துவிட்டான் இவன்
வீழ்ந்து விட்டான் இவன்
இனி எழும்ப மாட்டான் இவன்
Hobson choice என்னும்
கொடுத்ததை வாங்கும்
பிச்சைக்கார நிலை இவன் நிலை
என எள்ளி நகையாடிய
பார்ப்பனிய விமர்சகர்கள்
முகத்தில் கரி பூச
நீதியை நோக்கி கடமை கண்ணாக
நீண்ட நெடும் பயணம் தொடர்கின்றது
அடுத்துக் கெடுத்த அயல் நாட்டையும்
துணையென வந்து துரோகியானோரையும்
தீர்க்கவென வந்து தீர்த்துக் கட்டியோரையும்
எந்தையும் தாயும் தந்தை நாடென நம்பிய
பாரததேசம் பாதக தேசமானதையும்
சிந்தையில் சுமந்து கடமை கண்ணாக
நீண்ட நெடும்பயணத்தைத் தொடர்கின்றான்
நீதியை வேண்டி நடக்கின்றான்
எத்தனை தூரம் நடந்தாலும்
எத்தனை நாடுகள் கடந்தாலும்
எந்தனை மன்றுகளின் முன்றலில்
நின்று கூக்குரலிட்டாலும்
நான் வாழ்ந்த காலத்தில்
நம்மவர் மூன்று இலட்சம் பேர்
கொடூரமாகக் கொல்லப்பட
கையாலாகாதவனாய்
நின்ற என் பாவம் என்றும் தீராது

Thursday, 23 February 2012
ராஜபக்சேக்களைச் சூழும் இருள் மேகங்கள்.
உலகின் மிக மோசமான பயங்கரவாத(?) இயக்கத்தைத் தோற்கடித்தவர்கள் என்ற பெருமையுடன் தலை நிமிர்ந்து நின்ற ராஜபக்ச சகோதரர்கள் இப்போது பன்முகப் பிரச்சனையை எதிர் கொள்கிறார்கள். இலங்கை இனப் பிரச்சனையை அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தல்வரை இழுத்தடிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தவர்களுக்கு இப்போது இனப்பிரச்சனை பெரும் தலையிடியாக இருக்கிறது.
ராஜபக்ச சகோதரர்கள் எதிர்க் கட்சிகளைச் சிதறடித்தனர். அவர்களில் பலரைத் தம்பக்கம் இழுத்தனர். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பலர் ராஜபக்சவின் சிறிலாங்கா சுதந்திரக் கட்சிக்குத் தாவினர். எஞ்சியவர்களிடை பதவிப் போட்டியை உருவாக்கினார் ராஜபக்ச. இனவாத இடதுசாரிகளான ஜனதா விமுக்தி பெரமுனையையும் பிளவு படுத்தினார் ராஜபக்ச. இந்தியாவைத் தன் சொற்படி ஆடவைத்தார் ராஜபக்ச. தன் பிரதான எதிரியான முன்னாள் படைத் தளபதி சரத் பொன்சேக்காவைச் சிறையில் அடைத்தார். தனக்குப் பெரும் சவாலாக விளங்கிய புலம் பெயர்ந்த தமிழர்களிடை பெரும் பிளவை ஏற்படுத்தினார். புலம் பெயர்ந்த தமிழர்களின் பல ஊடகங்களை தனது எண்ணப்படி ஆட்டிப் படைகிறார் தனது கைக்கூலிகள் மூலம்.
எரியும் எரிபொருள்விலையும் சரியும் பொருளாதாரமும்
சென்ற மாதம் வரை இப்படி இருந்த ராஜபக்சவிற்கு திடீரென்று நிலைமைகள் அவருக்கு எதிராக மாறி வருகின்றன. அரச நிதி நெருக்கடியைச் சமாளிக்க பன்னாட்டு நாணய நிதியத்திடம் கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம். ஏற்கனவே தனது பன்னாட்டு நாணயத்திடம் பெறவேண்டிய அதிக பட்சக் கடனை வாங்கிய இலங்கை அரசு மேலும் கடன் வாங்க ஏற்கனவே வாங்கிய கடனுக்கும் சேர்த்து அதிக வட்டி கொடுக்க வேண்டும். அத்துடன் இலங்கை நாணய மதிப்பை இறக்க வேண்டிய கட்டாயம். இலங்கை நாணயத்தின் மதிப்புக் குறைய எரிபொருள்களின் விலை அதிகரித்தது. பட்ட காலிலே படும் என்பதைப் போல் ஈரான் மீதான பொருளாதாரத் தடையை மேற்கு நாடுகள் விதித்தன. இலங்கையில் 93% மசகு எண்ணெய் ஈரானில் இருந்து இறக்கு மதியாகிறது. சப்புகஸ்கந்தவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஈரானின் எண்ணெய்யை மட்டுமே சுத்தீகரிக்கக் கூடியது. மேற்குலகின் ஈரான் மீதான பொருளாதாரத் தடையைப் புறக்கணித்து இலங்கையால் சீனா-ஈரான் அச்சில் இணைய முடியவில்லை. இணைந்தால் ஜெனிவாவில் பெப்ரவரி 27 முதல் மார்ச் 23 வரை நடக்க விருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தின் கூட்டத் தொடரில் அதிக விலை கொடுக்க வேண்டியிருந்திருக்கும். விளைவு இலங்கையில் பெரும் எரி பொருள் விலை அதிகரிப்பு. இந்த எரிபொருள் விலை அதிகரிப்பு இலங்கையில் பல தரப்பட்ட மக்களையும் அதிருப்திக்குள்ளாக்கியது. போக்குவரத்துத் துறையினர், மீனவர்கள், உணவு உற்பத்தியாளர்கள், விவசாயிகள் இப்படிப் பலதரப்பட்டவர்களையும் கொதித்து எழச் செய்தது. பலமின்றி இருந்த எதிர்க் கட்சியினர் இதைப் பயன் படுத்திக் கொண்டு பெரும் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கினர். சிலாபத்தில் மீனவர்கள் செய்த ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டது. ஒருவர் கொல்லப்பட்டார். உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடாத்திய படைத்துறையினர் சட்டத்தை மீறினர் என்றும் சுடுவதற்கான உத்தரவு கோத்தபாய ராஜபக்சவிடமிருந்து வந்தது என்றும் ஊடகமொன்றிற்குத் தெரிவித்தார். அதை அரசு மறுத்தது. உடனே எதிர்க்கட்சியினர் கோத்தபாய உத்தரவு கொடுக்காவிடில் கொடுத்தது யார் என்று கேள்வி எழுப்பினர். இந்தக் கேள்வியைத் தான் தமிழர்கள் மூன்று ஆண்டுகளாகக் கேட்டு வருகின்றனர்.
ஜெனீவாவிற்குக் கள்ளக் கடிதம் - பிள்ளையார் பிடிக்க்கக் குரங்கானது
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தின் கூட்டத் தொடரில் தமக்கு எதிராக வரப்போகும் நிர்ப்பந்தங்களை உணர்ந்த ராஜபக்சேக்கள் மனித உரிமைக் கழகத்திற்கு ஒரு இரகசியக் கடிதத்தை அனுப்பினர். அதில் இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்த தாம் செய்ய இருக்கும் திட்டங்கள் அடங்கிய இருந்தன. இலங்கைப் பாராளமன்றத்திற்குத் தெரியாமல் அக்கடிதம் எழுதியமை சட்ட விரோதம் என்று எதிர்க்கட்சிகள் ஆட்சேபிக்கின்றன.
கட்சிக்குள்ளும் பிரச்சனை
ராஜபக்சேக்களின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இம்மாதம் 21ம் திகதி செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. அதில் ராஜபக்சவின் பிரதேசமான அம்பாந்தோட்டத்தைச் சேர்ந்த மஹிந்த அமரவீர என்னும் உறுப்பினர் "அரசு இப்படி ஒருவரைப்பற்றியும் கவலைப்படாமல் தான் தோன்றித்தனமாக நடந்து கொண்டால் நாம் எப்படி எமது கிராமங்களுக்குப் போவது?" என்று போட்டார் ஒரு போடு. ஆள் அத்துடன் நிற்கவில்லை "எங்களாலேயே விலைவாசி உயர்வைச் சமாளிக்க முடியவில்லை. மக்கள் என்ன செய்வார்கள்? இப்படி இருக்கையில் மக்களைச் சுடுவது எப்படிச் சரியாகும்" அடுத்த போட்டைப் போட்டார். சரி அவர்தான் ஒரு சாதாரண உறுப்பினர் என்றால் அடுத்து எழுந்தார் ஒரு பிரதி மந்திரி "மீனவர்கள் கோரிக்கை நியாயமானது. அவர்கள் மேல் துப்பாக்கிப் பிரயோகம் செய்தவ்து நியாயமற்றது" என்றார். இக்கூட்டத்திற்குத் தலைமைதாங்கிய பசில் ராஜபக்ச அதிகம் வாய் திறக்கவில்லையாம். இறுதியில் கொதித்த பாராளமன்ற உறுப்பினர்களுக்கு மக்களின் குறைகளைக் கேட்டு அறியக்கூடிய வகையில் ஒரு விண்ணப்பப்பத்திரம் கொடுக்கப்படும் என்றும் அவற்றை அவர்கள் தங்கள் கிராம மக்களிடம் கொடுத்து அவர்களின் குறைகளைப் பதிவு செய்யச் சொல்லவும் என்று சமாதானம் கூறப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையில் பிரச்சனை
போர்க் குற்றவாளியாகக் கருதப்படும் சவேந்திர சில்வாவை ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படைகளுக்கான பிரதான ஆலோசகராக நியமித்தமை பலத்த எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக ஐநா சபையின் மனித உரிமைக்கழத்தின் ஆணையாள்ர் நவநீதம் பிள்ளை அதிருப்தி தெரிவித்தார். பல மனித உரிமை அமைப்புக்களும் எதிர்த்துக் குரல் கொடுத்தன. இந்தியா கள்ளத் தனமாக மௌனமாக இருந்தது. பங்களாதேசம் பகிரங்கமாக கருத்துத் தெரிவித்தது. வழமையாக நவநீதம் பிள்ளையை கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கும் இலங்கை இம்முறை சற்று நாகரீகமாக கண்டித்தது. பிந்திக் கிடைத்த செய்திகளின்படி ஐநாவின் அமைதிகாக்கும் படைகள் விடயத்தில் ஐநா தலைமைச் செயலருக்கு ஆலோசனை வழங்கும் குழுவின் கூட்டத்திற்குச் சென்ற சவேந்திர சில்வாவை மற்ற உறுப்பினர்கள் புறக்கணித்தும் அவருக்கு எந்த ஒரு ஆவணங்களையும் வழங்க மறுத்தும் உதாசீனப்படுத்தினர். இது ஒரு விதமான பதவி நீக்கமே. அவர் கூட்டத்தில் பங்குபற்றுவது உகந்தது அல்ல என கூட்டத்திற்கு தலைமை வகித்த கனடியப் பிரதிநிதி தெரிவித்தார்.
சனல்-4 வெடிகுண்டு
இலங்கை ஆட்சியாளர்களின் போர்க்குற்றங்களை தொடர்ச்சியாகக் காணொளிப் பதிவுகளால் அம்பலப்படுத்தி வரும் சனல்-4 தொலைக் காட்சி இன்னும் சில நாட்களில் இலங்கையில் புரியப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக தனது அடுத்த காணொளிப்பதிவை வெளிவிடவிடுக்கிறது.
அமெரிக்காவின் கையில் போர்க்குற்ற ஆதாரங்கள்
சரணடைய வந்த விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவினரை கொல்வதற்கான உத்தரவை கோத்தபாய ராஜபக்சவே விடுத்தார் என்பதற்கான ஆதாரங்களும் மேலும் பல ஆதாரங்களும் ஐக்கிய அமெரிக்காவின் கையில் இருப்பதாக நம்பப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே இங்கு இரு பதிவுகள் இடப்பட்டுள்ளன அவற்றைக் காணக் கீழே சொடுக்கவும்(click):
1. எல்லாவற்றையும் மேலிருந்து ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
2. இலங்கையில் அமெரிக்காவின் அவிற்பாகம்
சரத் பொன்சேக்காவை விடுவித்தே ஆக வேண்டும்
ராஜபகசேக்கள் சரத் பொன்சேக்கா இனி சாகும் வரை சிறையில்தான் இருக்க வேண்டும் என்று கணக்குப் போட்டிருந்தனர். ஆனால் அவரை ராஜபகசவிற்கு எதிராக இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் களமிறக்கிய அமெரிக்கா அவரைக் கட்டாயம் விடுவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4-ம் திகதி அவர் விடுவிக்கப்படாமையால் அமெரிக்க உயர் அதிகாரிகள் மரியா ஒட்டேரோவும் ரொபேர்ட் ஓ பிளேக்கும் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர். இனி சிங்களப் புத்தாண்டிற்கு முன்னர் சரத் பொன்சேக்கா விடுவிக்கப்படுவார் என்ற செய்தி விரைவில் வெளிவர வேண்டும். அது வராவிடில் ராஜபக்சேக்கள் பெரும் பிரச்சனையில் மாட்டுவர். சரத் பொன்சேக்கா வெளியில் வந்தாலும் பெரும் பிரச்சனைகள் ராஜபக்சேக்களுக்கு இருக்கின்றன.
துள்ளிக் குதிக்கும் தமிழ் ஊடகங்கள்
பெப்ரவை 27 முதல் மார்ச் 23 வரை நடக்க விருக்கும் ஐநா மனித உரிமைக்கழகக் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான எவற்றையும் நிகழ்ச்சி நிரலில் இதுவரை உள்ளடக்கப்படவில்லை. இப்படி இருக்க அங்கு இலங்கை தண்டிக்கப்படப் போகிறது என்று பல தமிழ் ஊடகங்கள் எழுதி வருகின்றன. அதிக பட்சம் இலங்கை தொடர்பாக எதாவது கலந்துரையாடல்கள் நடக்கலாம். இலங்கைக்கு அதன் நல்லிணக்க ஆணைக் குழுவில் தெரிவிக்கப்பட்ட பரிந்துரைகளை நிறை வேற்ற கால அவகாசத்துடன் ஒரு வேண்டு கோள் விடுக்கப்படலாம்.
பிரச்சனையின் ஆரம்பமே
இப்போது ராஜபக்சேக்களிற்கு ஒரு முடிவு கட்டப்படும் என்று சொல்ல முடியாது. அவர்களின் பிரச்சனைக்கு உரிய காலம் ஆரம்பித்து விட்டது. இப்போது எதிரிகள் சூழ்கிறார்கள். பின்னர் கேடு சூழும். இலங்கை தனது குடியரசு தின விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்க கோத்தபாய ராஜபக்ச இந்தியாவில் ஒரு சாமியாரிடம் அருள்வேண்டிப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். ஆம் கழுதை கெட்டால் குட்டிச் சுவர். கேடு சூழும் போது சாமியார்களைத் தேடி ஓடுவார்கள். ராஜபக்சேக்கள் காலம் இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகளே.

Wednesday, 22 February 2012
ஈரான் அணு ஆயுத உறபத்தி நிலைகளை இஸ்ரேலால் தாக்க முடியுமா?
ஈரான் அணுகுண்டைத் தயாரித்தால் அதனால் பெரிய ஆபத்தைச் சந்திக்கப் போகின்ற நாடு இஸ்ரேல். இஸ்ரேலாலும் அணுக்குண்டு தயாரிக்க முடியும் அது அணுக்குண்டு தயாரித்தால் அது மத்திய கிழக்கில் ஒரு ஓர் அணு ஆயுதப் போட்டிக்கும் அணு ஆயுதப் பரவாலாக்கத்திற்கும் வழி வகுக்கும் என்று ஐக்கிய அமெரிக்கா இஸ்ரேலை அணு ஆயுதம் உற்பத்தி செய்யாமல் தடுத்து வைத்திருக்கிறது. இஸ்ரேல் ஏற்கனவே அணு ஆயுதங்களை உற்பத்தி செய்துவிட்டது ஆனால் அவற்றைப் பரிசோதித்துப் பார்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஈரானால் இன்னும் ஒரு ஆண்டுக்குள் அணுக்குண்டைத் தயாரிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரான் தனது அணு ஆராய்ச்சி சமாதானத்தை நோக்கமாகக் கொண்டது என்று அடித்துச் சொல்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பன்னாட்டு அணு சக்தி முகவரகத்தில் இருந்து ஈரான் அணு ஆயுத உற்பத்தி செய்யலாம் என்ற செய்தி வந்தவுடனேயே இஸ்ரேலில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுவிட்டன. இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு அணு ஆயுத வல்லமை கொண்ட ஈரான் மத்திய கிழக்கு உட்பட முழு உலகுக்குமே பெரும் அச்சுறுத்தல் என்றும் இஸ்ரேலுக்கு நேரடி ஆபத்து என்றும் கூறினார்.
ஈரானின் உள்ளகப் பிரச்சனைகள்
ஈரானியப் பொருளாதாரம் பலவீனமடைந்த நிலையில் இருக்கிறது. ஈரானியப் படைத்துறையில் அமைப்பு ரீதியான பிரச்சனைகள் பல இருக்கின்றன. ஈரானிய அரசில் பிளவுகள் இருக்கின்றன. ஈரான் ஆதரவு தீவிரவாத இயக்கங்களான ஹமாசும் ஹிஸ்புல்லாவும் இஸ்ரேலிற்கு எதிராக அடக்கியே இப்போது வாசிக்கின்றன. இஸ்ரேலிற்கு எதிரான ஒரு தாக்குதலைச் செய்ய அவை இப்போது விரும்பவில்லை. ஓமான் வளைகுடாவையும் பாராசீக வளைகுடாவையும் இணைக்கும் 35மைல்கள் அகலமுள்ள ஹோமஸ் நீரிணையை தான் மூடி விடுவேன் என்று ஈரான் மீண்டும் எச்சரித்துள்ளது. கடல் மூலமான உலக எரிபொருள் வழங்கலில் 40% ஈரானிற்கு அண்மையில் உள்ள் ஹொமஸ் நீரிணையூடாக நடக்கிறது. உலக் மொத்த எண்ணை வழங்கலில் இது 20% ஆகும். நாளொன்றிற்கு 15 எண்ணை தாங்கிக் கப்பல்கள் இதனூடாக பயணம் செய்கின்றன. சவுதி அரேபியா, ஈராக்,குவைத், பாரெய்ன், கட்டார், துபாய், போன்ற நாடுகளில் இருந்தூ ஏற்றுமதியாகும் எரிபொருள் ஹோமஸ் நீரிணையூடாகவே நடக்கின்றது. இதை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து உலகை ஆட்டிப்படைக்கலாம் என்பது ஈரானின் கனவு. ஹோமஸ் நீரிணையில் ஒரு போர் மூளுமானால் உலகெங்கும் எரிபொருள் விலை 200 அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கலாம். இப்போது இருக்கும் பொருளாதார சூழலில் இதனை எந்த ஒரு நாடும் விரும்பாது. இது ஈரானுக்கு ஆதரவாக ஒரு நாடுகளும் செயற்படாமல் போகச் செய்யலாம். ஈரானைத் தனிமைப்படுத்தலாம். ஈரானின் அணு ஆயுத உற்பத்தியைத் தடுக்க பல சதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று ஈரானிய அணுவிஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். ஒருவர் தாக்குதலில் இருந்து தப்பியுள்ளார். ஈரானிய ஏவுகணைத் தாயாரிப்புத் தொழிற்சாலையில் பாரிய வெடிவிபத்து ஏற்பட்டது. இவ்விபத்து அங்குள்ள கணனித் தொகுதிகளை ஊடுருவி மேற்கொள்ளப்பட்டிடுக்கலாம் என நம்பப்படுகிறது.
வேட்டியை மடிச்சுக் கட்டிய ஈரான்
பொருளாதாரத் தடையால் மேற்குலக நாடுகள் ஈரானை மிரட்டிக் கொண்டிருக்க ஈரான் தனது கடற்படையின் 18வது பிரிவை சிரியாவிற்கு அனுப்பி தனது சண்டித்தனத்தைக் காண்பித்துள்ளது. ஈரானின் போர்க்கப்பல்கள் சிரியாவில் ஒத்திகையும் சிரியப்படையினருக்குப் பயிற்ச்சியையும் மேற்கொள்ளவிருக்கின்றன. அத்துடன் ஈரான் சிரியாவில் கைவைத்தால் நடக்கிறது வேறு என்பது போல் மிரட்டலையும் ஐக்கிய அமெரிக்காவிற்கு விடுத்துள்ளது. ஈரான் தான் எவ்விதத்திலும் மசியப்போவதில்லை என்ற செய்தியை மேற்குலகிற்கு தெரிவித்துள்ளமை இஸ்ரேலை ஒரு முன் கூட்டிய தாக்குதலுக்குத் தூண்டுமா?
இஸ்ரேலால் ஈரானில் தாக்குதல் நடத்த முடியுமா?
இஸ்ரேல் ஈரானில் தாக்குதல் நடத்துமா என்ற கேள்வியிலும் பார்க்க முக்கியமானதும் சிக்கலானதுமான கேள்வி இஸ்ரேலால் ஈரானில் தாக்குதல் நடாத்த முடியுமா என்பதுதான். முன்பு 2சிரியாவிலும் ஈராக்கிலும் இஸ்ரேல் இலகுவாக அங்குள்ள அணு ஆராய்ச்சி நிலையங்களில் தாக்குதல்களை நடாத்தியது. ஆனால் இப்போது நிலைமைகள் வேறு. ஈரான் தனது அணு ஆராய்ச்சி நிலையங்களை பல வேறு இடங்களில் அமைத்துள்ளது. அத்துடன் அவை 30 அடி ஆழமான கொன்கிறிட் பாதுகாப்புச் தடுப்புக்களுக்குக் கீழ் உள்ளன. அந்த அளவு ஆழமாக ஊடுருவிச் சேதம் விளைவிக்கக் கூடிய குண்டுகள் இஸ்ரேலிடம் இப்போது இல்லை. அது அவற்றை உருவாக்க வேண்டும் அல்லது அமெரிக்காவிடம் இருந்து பெறவேண்டும். அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் மூலம் ஈரானை வழிக்குக் கொண்டுவர முயல்கிறது. ஆனால் இந்தியாவும் சீனாவும் அமெரிக்காவின் பொருளாதரத் தடைக்கு உதவவில்லை. பன்னாட்டு நிதிக் கொடுப்பனவு முறைமையான SWIFTஇல் இருந்து ஈரானிய வங்கிகளை விலக்கியதால் ஈரானில் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இந்தியாவும் சீனாவும் ஈரானுடன் பண்டமாற்று முறைமை மூலம் வர்த்தகம் செய்யப் போவதாக அறிவித்து விட்டன. பொருளாதாரத் தடையால் ஈரான் அடங்காமல் போக வாய்ப்புண்டு. இது ஒரு இஸ்ரேல் ஐக்கிய அமெரிக்கா இணைந்து ஈரானில் தாக்குதல் நடத்தும் நிலைமையை உருவாக்கலாம். இதில் அமெரிக்கா திரைமறைவிலேயா இஸ்ரேலுடன் இணைந்து செயற்படலாம்.
ஈரானின் மீதான தாக்குதல் எப்படி இருக்கும்
ஈரானின் விமான எதிர்ப்பு முறைமை, தொலை தொடர்பாடல் முறைமை, தியணைப்பு நிலையங்கள் போன்றவற்றை ஆளில்லாப் போர் விமானங்கள் மூலமும் இணைய வெளி ஊடுருவல் மூலமும் செயலிழக்கச் செய்யலாம். இஸ்ரேலின் Eitans, Herons ஆகிய ஆளில்லாப் போர் விமானங்கள் இவற்றிற்குப் பயன்படுத்தப்படலாம். ஈரானின் மின்சார விநியோக முறைமையில் உள்ள பலவீனங்களை அமெரிக்க உளவுத்துறை நன்கறியும். அவற்றை செயலிழக்கச் செய்ய அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவும். 2007இல் இஸ்ரேல் சிரியாவின் ராடார்களிற்கு முதலில் சிரியவிண்வெளியில் எந்த விமானமும் இல்லை என்று உணரவைத்தது பின்னர் நூற்றுக் கணக்கான விமானங்கள் பறப்பது போன்று உணர வைத்தது. சிரியப் படையினர் தலை முடியைப் பிய்த்துக் கொண்டிருக்க இஸ்ரேல் தனது கைவரிசையைக் காட்டி விட்டது. இப்போது இஸ்ரேல் அதிலும் நவீன தொழில் நுட்பத்தைக் கொண்டிருக்கலாம். கடந்த பத்து ஆண்டுகளாக இஸ்ரேல் பல பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ஈரானின் தொழில் நுட்ப வளர்ச்சியைத் சிதறடிக்கக் கூடிய வகையில் தனது படைபலத்தை வளர்த்து வருகிறது. ஆனால் ஈரான் அணு நிலையங்கள் மீதான தாக்குதல் சிரியாவில் செய்ததைப் போல் ஒரு நாளில் முடியாது. இவை சில வாரங்கள் நீடிக்கலாம். அதைத் தொடர்ந்து ஈரான் ஹோமஸ் நீரிணையை மூடினால் மேலும் சில வாரங்கள் போர் நீடிக்கும்.
ஈரான் மீதான தாக்குதலின் பின்விளைவுகள்
பல இசுலாமிய நாடுகளும் வளர்முக நாடுகளும் ஈரானுடன் அணி சேரும். தொடர்ந்து பிராந்திய முரண்பாடுகள் பல புதிதாக முளைக்கும். மல்லிகைப் புரட்ச்சியின் பயன் மக்களுக்குக் கிடைக்காமல் போகும். உலகப் பொருளாதர நிலை மேலும் மோசமடையும்.

Tuesday, 21 February 2012
கூகிள் எடுத்த விநோதமான படங்கள்
கூகிள் நிறுவனம் முழு உலகத்தையுமே ஒளிப்பதிவு செய்து அதை தனது இணையத்தளத்தில் பதிவு செய்து வைத்திருக்க முயல்கிறது. தெருப்பார்வை என்னும் தலைப்பில் உலகின் சகல தெருக்களிலும் கூகிளின் வாகனங்கள் ஒன்பது ஒளிப்பதிவுக் கருவிகளுடன் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவை எடுத்த சில விநோதமான படங்கள்:
ஸ்பெயினில் பலான தொழில் செய்யும் அழகி வாகன ஓட்டியை நாடுகிறார் |
கடல் பறவைகள் நிலத்தை ஆக்கிரமிக்கின்றன |
வாகனத்தில் பிணம் |
நிர்வாணக் குளியலுக்குத் தயாராகும் பிரெஞ்சுப் பெண் |
சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன்.... |
தாய்லாந்தில் விழும் பையன் |
ஒஸ்ரேலியாவில் வெள்ளத்திற்குப் பயந்து ஓட்டம்.. |
காட்டுக்குள் ஒளிபவர் காட்டிக் கொடுக்கப்பட்டார் |
மெக்சிக்கோவில் மூகமூடியுடன்.....(தூள் வியாபாரிகள்?) |
நியூயோர்க்கில் வெற்றிக் களிப்பில் ஒருவர்.... |
கனடாவின் ரொறென்ரோவில் ஒளித்திருப்பவர் |
பிரான்சில் கண்ணாமூச்சி விளையாடும் சிறுவன் |
ஒரு தாத்தா இரட்டை வேடத்தில் |
தீப்பிடிக்க தீப்பிடிக்கப் படமெட்டா |
தெருவோரம் காதலர்கள் லீலை |
Monday, 20 February 2012
விஞ்ஞானிகள்: உபவாசம் ஆரோக்கியத்திற்கு நல்லது
பல்டிமோரில் உள்ள ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் neuro science பிரிவிவினர் பேராசிரியர் மார்க் வற்சன் தலைமயின் நடாத்திய ஆய்வுகளின் படி ஒன்று விட்டு ஒருநாள் உணவருந்தாமல் பட்டினி இருந்தால் உடல் ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகள் கிட்டும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வின்போது சில எலிகளை இரு குழுக்களாகப் பிரித்து ஒரு குழுவில் தினசரி உணவும் மறு குழுவில் உணவு ஒன்றுவிட்ட ஒரு நாளும் வழங்கப்பட்டது. இரு குழுவிலும் உள்ள எலிகளின் சமமான அளவு கலோரிப் பெறுமானமுள்ள உணவு வழங்கப்பட்டது.
இரு குழுக்களையும் சேர்ந்த எலிகளின் மூளைச் செயற்பாட்டையும் ஆரோக்கியத்தையும் பின்னர் பரிசோத்தித்துப் பார்த்து எடுத்த முடிவுகள்:
பிளாஸ்ரிக் பாத்திரங்களில் உண்ணுவது மிகவும் ஆபத்து
பிளாஸ்ரிக் பாத்திரங்களின் உண்ணுவது புற்று நோய் வரும் வாய்ப்பை அதிகரிக்கலாம் என்று ஏற்கனவே கண்டறியப்பட்டது. இப்போது பிளாஸ்ரிக் பாத்திரங்களின் உண்ணுவது உடல் எடை அதிகரிப்பிற்கும் நீரழிவு நோய்(diabetes) வருவதற்கும் வழிவகுக்கின்றது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். A report published last week in PLoS ONE shows that the chemical bisphenol A (BPA) - used in everything from fertilisers to plastic water bottles - can 'fool' the body into creating more fat.Furthermore, it can lead to the increased production of insulin, the body's way to regulate fat and carbohydrates.

- பட்டினி இருந்த எலிகளின் மூளைகள் சக்தி மிகுந்தனவாகக் காணப்பட்டன.
- பட்டினி இருந்த எலிகள் நீண்ட காலம் உயிர் வாழ்ந்தன.
பிளாஸ்ரிக் பாத்திரங்களில் உண்ணுவது மிகவும் ஆபத்து
பிளாஸ்ரிக் பாத்திரங்களின் உண்ணுவது புற்று நோய் வரும் வாய்ப்பை அதிகரிக்கலாம் என்று ஏற்கனவே கண்டறியப்பட்டது. இப்போது பிளாஸ்ரிக் பாத்திரங்களின் உண்ணுவது உடல் எடை அதிகரிப்பிற்கும் நீரழிவு நோய்(diabetes) வருவதற்கும் வழிவகுக்கின்றது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். A report published last week in PLoS ONE shows that the chemical bisphenol A (BPA) - used in everything from fertilisers to plastic water bottles - can 'fool' the body into creating more fat.Furthermore, it can lead to the increased production of insulin, the body's way to regulate fat and carbohydrates.
Sunday, 19 February 2012
நகைச்சுவை: மனைவியும் சோதிடர் போலே
உங்கள் மகள் உதட்டுச் சாயம்(lipstic) பூசிக்கொண்டு வெளியே சென்றால் அவள் வளர்ந்து விட்டாள் என்று அர்த்தம். உங்கள் மகன் வெளியே சென்றுவிட்டு வரும்போது உதட்டுச் சாயம் ஆங்காங்கே படிந்தபடி வந்தால் அவன் வளர்ந்து விட்டான் என்று அர்த்தம்.
மனைவி சோதிடர் போலே
நடக்கப் போவதை
எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பாள்
ஆனால் எதுவும் நடக்காது
மனைவி சட்டவாளர்கள் போலே
எந்த நேரமும் எதிர் வாதம் செய்வதால்
மனைவி கால நிலை போலே
மாற்ற முடியாது
மனைவி விளம்பரம் போலே
சொலவதற்கும் உண்மைக்கும்
நிறைய வித்தியாசம்
Success Is Relative.
The more The Success,
The more The Relatives.
நீ சிரித்தால்
உலகமே உன்னுடன்
இணைந்து சிரிக்கும்
நீ குறட்டை விட்டால்
நீ தனியத் தூங்க வேண்டி வரும்
Getting Caught Is The Mother Of Invention.
And the son of intervention.
What's common between the sun & women's underwear?
a) Both are hot
b) Both look better while going down
c) Both disappear by night.
முகவேடு(Facebook)
வீடிருக்கும் சாப்பாடிருக்காது
கணக்குண்டு பணமிருக்காது
சுவருண்டு முட்டிக்க முடியாது
Statusஉண்டு செல்வாக்கிருக்காது
காதலியுண்டு கட்டிக்க முடியாது
7 சைட் அடித்தல்கள் = 1 புன்னகை
7 புன்னகைகள் = 1 சந்திப்பு
7 சந்திப்புக்கள் = 1 முத்தம்
7 முத்தங்கள் = 1 திருமண வேண்டுதல்
7 திருமண வேண்டுதல்கள் = 1 திருமணம்
1 திருமணம் = 77777 பிரச்சனிகள்.
சவுதி அரேபியாவில் ஒரு சவுதி அரேபியனும் ஒரு இந்தியனும் ஒரு இலங்கையனும் ஒரு பாக்கிஸ்த்தானியனும் ஒன்றாக நடந்து கொண்டிருந்தனர். அவர்களை ஒரு நிரூபர் மறித்து "மன்னிக்கவும், உணவுத் தட்டுப்பாடு பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன" என்று கேட்டார்.
முதலில் மூவரும் திரு திரு என விழித்தனர்.
தட்டுப்பாடு என்றால் என்ன என்றான் சவுதி அரேபியன்.
சாப்பாடு என்றால் என்ன என்றான் இந்தியன்
கருத்துத் தெரிவிப்பது என்றால் என்ன என்றான் இலங்கையன்
மன்னிக்கவும் என்றால் என்ன என்றான் பாக்கிஸ்த்தானி.

Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...