Saturday, 7 November 2009
ஐநாவும் இலங்கையும் இணைந்து செய்யும் அவசர நாடகம்
ஆயுத மோதல்களில் சிக்கியுள்ள சிறுவர்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் சிறப்புப் பிரதிநிதியாக ராதிகா குமாரசாமி என்னும் இலங்கைத் தமிழ்ப் பெண்மணி செயற்படுகிறார். இவர் இலங்கை அரசின் சிபாரிசின் பெயரில் இந்தப் பதவியைப் பெற்றவர். இவர் இலங்கை அரசின் நலன்களையே ஐக்கிய நாடுகள் சபையில் பேணுவதாகச் சந்தேகிக்கப் படுபவர். இலங்கை அரசின் அமைச்சர் ஒருவர் தனது ஆயுதப் படையில் சிறுவர்களை வைத்திருப்பதற்கு எதிராக எதுவுமே செய்யாதவர். இவர் இலங்கை முகாம்களில் இருக்கும் உடன் பிறந்த சிசுக்கள் உட்பட 37000 சிறார்கள் தடுத்து வைத்திருப்பதற்கு எதிராக எதுவுமே செய்யாதவர். விடுதலைப் புலிகளின் கட்டுப் பாட்டுப் பிரதேசத்தில் இருந்த தாயின் வயிற்றில் பிறந்தது தான் அக் குழந்தைகள் செய்த ஒரே குற்றம். இதற்க்காக இவர்களைத் படுமோசமான சூழ்நிலையில் தடுத்து வைத்திருப்பதை எந்த நாட்டுச் சட்டமும் அனுமதிக்காது. இந்த ராதிகா குமாரசாமி தனது பிரதிநிதி Patrick Cammaertயை இலங்கைக்கு அனுப்ப இருப்பதாகச் சொல்லி ஒருமாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. அவருக்கான பயண அனுமதியை வழங்குவதில் இலங்கை அரசு இழுத்தடிப்புச் செய்து கொண்டிருந்தது. அதற்கு எதிராக ராதிகா கண்டனமோ கவலையோ தெரிவிக்கவில்லை.
சில நாடுகளின் போக்கு இலங்கைக்கு சாதகமாக இல்லை என்று அறிந்தவுடன் ராதிகாவும் இலங்கையும் டிசெம்பர் 5-ம் திகதி Patrick Cammaertஐ அனுப்புவதாக ஒந்துக்கொண்டனர். இதற்கிடையில் வன்னிமுகாம்களில் இருந்த பலர் காணமற் போய்க் கொண்டே இருக்கின்றனர். பலர் வேறு மீள் குடியேற்றம் என்ற போர்வையில் வேறு முகாம்களில் அடைக்கப் படுகின்றனர். இன்னும் பலர் அவர்களுக்கு முன்பின் தெரியாத இடங்களில் கொண்டு போய் வேண்டு மென்றே நள்ளிரவில் இறக்கிவிடப் பட்டு பேரவலத்து உட்படுத்தப் படுகின்றனர்.
சென்ற வாரம் மட்டுமே 39,000 பேர்கள் மீள் குடியேற்றம் செய்யப் பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணையாளர் Andrej Mahecic அவர்கள் அறிவித்துள்ளார். ஒருவாரத்தில் இவ்வளவு தொகை மக்கள் மீள் குடியேற்றப் படுவது இலங்கை அரசின் அவசரத்தை எடுத்துக் காட்டுகிறது. ஏன் இந்த அவசரம். மக்களின் அவலத்தை நீக்கவா அல்லது பலதரப்பில் இருந்து வரும் கண்டனங்களை தவிர்க்கச் செய்யும் கண்துடைப்பா? அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீஎஸ்பி+ வர்த்தகச் சலுகையைப் பெற ஆடும் நாடகமா?
வாரமொன்றுக்கு 39000 பேர் என்றவகையில் போனால் டிசெம்பர் -4ம் திகதிக்கு முன் வன்னிமுகாம்களில் உள்ள சகலரும் "விடுவிக்கப்" பட்டு விடுவார்கள். ராதிகா குமாரசாமியின் பிரதிநிதி வந்து இலங்கைக்கு நற்சான்றிதழ் கொடுத்துவிடுவார். மீள் குடியேற்றப் பட்டவர்களின் நலனுக்கு என்று பெருந்தொகைப் பணத்தை பல்வேறு தரப்பினர்களிடமிருந்தும் பெற்றுக் கொள்ளும். இலங்கை அரசு "மீட்கப்பட்ட" பிரதேசங்களில் இந்த ஆண்டு மே மாதத்திலிருந்தே அவசர அவசரமாகச் செய்யும் வேலைகள் இரண்டு. ஒன்று பௌத்த விகாரைகள் கட்டுவது அடுத்தது பாரிய சிறைச் சாலைகள் கட்டுவது. ராதிகா குமாரசாமியின் பிரதி நிதியின் பயணத்தைத் தொடர்ந்து பன்னாட்டு பாராட்டைப் பெற்றபின் மீண்டும் பல்லாயிரக் கணக்கான மக்கள் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப் பட்டு இச்சிறைகளில் அடைக்கப் படுவார்கள்.
Thursday, 5 November 2009
உலகத் தமிழ் செம்மறி மாநாடு - கேனை- 2010
தவிச்ச வாய்க்குத் தண்ணி கொடா அயலவனுக்குப் பயந்த
இழிச்ச வாய்க்கூட்டத்தின் செம்மறி மாநாடு
சொரணையற்ற கூட்டத்தின் பெருங்கூட்டம்
குள்ள நரி தலைமையில் இசுட்டாலின் முன்னிலையில்
அழுகிரியின் அருகாமையில் மாற்றான் குடும்பம் பணம் சேர்க்கும் மாநாடு.
நிகழ்ச்சி நிரல்கள்
(அல்வாக்கள் இலவசமாக வழங்கப்படும்)
1. தண்டவாளத்தில் தலைவைத்து தலைவனாவது எப்படி - இகழ் வார் ஆச்சி.
2. உத்திரப் பிரதேசத்துக் கொத்தடிமையாய் பணம் சேர்ப்பது எப்படி - நிதியாய்வு
3. நாலு மணி நேர உண்ணவிரதமிருந்து ஏமாற்றிய காதை- மீளாய்வு
4. உடன்பிறப்பு என்று சொல்லை ஏமாற்றிவிட்டு சகோதரம் யுத்தம் என்று சாக்கு சொல்லும் கலை.
5. ராஜபக்சேக்கு நற்சான்றிதழ் கொடுத்துப் பிழைப்பது எப்படி - மதிநிதி
6. தெல்லுங்கில் இருந்து வந்து தமிழனாய் மாறி தமிழன் காதில் பூச்சுற்றும் கலை நிகழ்வு.
7. தமிழ் தமிழ் என்று கூக்குரலிட்டு தமிங்கிலத் தொல்லைக் காட்சி தருவது எப்படி?
8. சேலை அணிந்த முசோலியின் பாவாடையில் தொங்கும் காட்சி
9. இனக்கொலை புரிவோருடன் இணைந்து பிழைப்பு நடத்தும் கலை.
10. சொக்கத் தங்கம் சனியாள் வாந்தியினால் இலங்கையில் சாந்தி நிலவுகிறது என்று முழங்கு சங்கே.
கல்லக்குடி கொண்டான் கச்சதீவு இழந்தான்
அஞ்சுக அம்மை மடி தவழ்ந்தான்
இயற் பெயரோ தட்சிணாமூர்த்தி
அஞ்சுக மடி தவழ்ந்தாலும்
நீதிக் கட்சியில் நீ இணைந்தாய்
அகவை பதின்மூன்றில் தொண்டனாகினாய்.
நீதிக் கட்சியில் நீ இணைந்தாலும்
சொத்துச் சேர்ப்பது நின் இலக்கென்று
அறிந்தோம் இன்று நாமெல்லாம்
தெளிந்தோம் இன்று நாமெல்லாம்
தண்டவாளத்தில் தலை வைத்தாய்
கல்லக்குடியை நீ கொண்டாய்
அதனால் பதவி தேடிக் கொண்டாய்
பதவிக்காக கச்சத் தீவை ஏன் இழந்தாய்
கழகம் ஒரு குடும்பம் என்றாய்
குடும்பமே கழகம் என்றாக்கினாய்
கோபாலபுரத்தையே கோட்டையாக்கினாய்
சொந்தவீடாகவே நாட்டையாக்கினாய்
ஒரு தாலி போனதால் ஒரு இத்தாலி
பலி கொள்ள வந்தாள் பலதாலி
பலதாலி கட்டிய பைந்தமிழ்க் கலைஞனே
ஏன் இணைந்தனையோ அச்சனியாள் கூட.
வீழ்வது நானாகிலும் வாழட்டும் தமிழென்றாய்
வளமாய் வாழ்கின்றது நின் குடும்பம்
கொலைக்களமாகியது நம் ஈழம்
பதவிகள் பல கொண்டது நின் குடும்பம்
இரு பெண்டாட்டிகள் துணைக்கிருக்க
இரு குளிரூட்டிகள் அருகிருக்க
நன்றாய் ஆடினாய் நாடக மொன்று
நாலு மணிநேர உண்ணா விரத மென்று
நாலு மணி உண்ணா விரதம்
நாடகமாக நல்லாய் ஆடினாய்
பொய்யாய் பெரும் புகழ் தேடினாய்
தேர்தல் வாக்கு வேட்டையாடினாய்
ஈழத்தில் சாந்தி நிலவுகிறது
அமைதி திரும்பிவிட்டது
சான்றிதழ் கொடுத்தாய்
ராஜபக்சேயிற்கு
பெற்ற வெகுமதி என்ன?
தொல்காப்பியத்துக்கு உரை தந்தோன்
தொல்லைக் காப்பியமாய் நின்றதேன்
ஓயுமோ உன்றன் பொய்நா
சாயுமோ நின்றன் கொடுமை.
"கருணாநிதியின் வரலாறு" என்று கூகிளில் தேடினால் "கருணாநிதியை வரலாறு மன்னிக்காது" என்று பல நூற்றுக் கணக்கான பதிவுகள் கிடைத்தன.
Wednesday, 4 November 2009
சரத் பொன்சேக்கா விசாரணையைத் தவிர்த்து கொழும்பு திரும்புகிறாராம்.
சரத் பொன்சேக்கா தனது அமெரிக்கப் பயணத்தை இடை நிறுத்திக் கொண்டு அமெரிக்க உள்ளகப் பாதுகாப்பகத்தின் விசாரணைக்கு முகம் கொடுக்காமல் நாளை இலங்கையில் வந்து இறங்குவார் என்று கொழும்பில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று பராளமன்றத்தில் ஜனதா விமுக்திப் பெரமுனையினர் இலங்கைப் பராளமன்றத்தில் சரத் பொன்சேக்கா நாளை இலங்கை வந்து சேர்வார் என்று தெரிவித்தனர்.
ஜெனரல் சரத் பொன்சேக்க நேற்றே விமானம் ஏறிவிட்டதாகத் தகவல்.
இச்செய்தி தவறானதா அல்லது அண்மையில் இலங்கை இந்திய உயர் மட்டப் பேச்சு வார்த்தைகளின் விளைவா என்று தெரியவில்லை.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரை இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே நேற்று சந்தித்து முக்கிய பேச்சு வார்த்தை நடாத்தினார்.
இச்செய்தி தொடர்பாக அமெரிக்கத் தரப்பிலிருந்து எந்தத் தகவல்களும் இதுவரை வரவில்லை.
சரத் பொன்சேக்காவிற்கு எதிராக எந்த நீதிமன்ற ஆணையோ அல்லது வேறு அதிகார பூர்வ ஆணையோ அமெரிக்காவில் பிறப்பிக்கப் படவில்லை. அமெரிக்க உள்ளகப் பாதுகாப்பகத்தின் அதிகாரி ஒருவர் அவரை நேர்காணல் ஒன்றுக்கு மட்டுமே அழைத்திருந்தார். அதற்கு அடிபணிய வேண்டிய அவசியம் இல்லை என்பதால அவர் தப்பிக்க முடிந்தது.
இது இவ்வாறு இருக்க இலங்கைக்குத் திரும்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் இன்று கொழும்பு சென்றவேளை அவர்களை இலங்கைப் புலனாய்வுத் துறையினர் தடுத்து வைத்து நீண்ட நேரம் விசாரித்த பின் விடுவித்துள்ளனர்.
உடன்பாடும் முரண்பாடும் மோதவிருக்கின்றன
இந்திய மேற்குலக உடன்பாடு
முதலாளித்துவத்தின் வளர்ச்சியடந்த நிலையில் ஏகாதிபத்தியங்கள் உலகைப் பிராந்திய ரீதியில் தமக்குள் பங்கிட்டுக் கொள்ளும் என்பது கம்யூனிசியவாதிகளின் கருத்து. இந்த ரீதியில் இலங்கை இந்தியாவின் வல்லாதிக்கத்துள் வரவேண்டும் என்பது மறைந்த இந்தியப் பிரதமர் இந்திராகந்தியின் விருப்பம். இதற்கு சில மேற்குலக நாடுகள் உடன்பட்டிருந்தன. இந்த அடிப்படையில்தான் வன்னியில் இவ்வாண்டின மேமாதமளவில் நடந்த மனிதப் பேரழிவைத் தவிர்க்க சில மேற்குலக நாடுகள் மேற்கொண்ட முயற்ச்சிகளை இந்தியாவால் தடுக்க முடிந்தது. இந்த அநியாயமான் அக்கிரமத்தை இந்தியா தன்னை விட்டால் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ யாருமில்லை என்று இப்போது தமிழர்களுக்கு தெரிவிக்க முயல்கிறது. ஆனால் மேற்குலக நாடுகள் இலங்கை விவகாரத்தில் தாம் இந்தியாவிற்கு கொடுத்த அதிகாரத்தை இந்தியா சரியாகப் செயற்படுத்தவில்லை. இந்தியாவால் இலங்கையில் சீனா காலூன்றுவதைத் தடுக்க முடியவைல்லை. இந்தியக் கொள்கை வகுப்பாளர்களாக இருக்கும் பார்ப்பனர்களும் அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் இத்தாலியாளும் இந்தியப் பிராந்திய நலன்களைக் கோட்டை விட்டு விட்டனர். கொள்கை வகுப்பாளர்கள் தம் சாதிய ஆதிக்கத்திற்கு விடுதலைப் புலிகள் சவாலாக அமைவர் என்று கருதி அவர்களை அழித்தொழிப்பதில் அதிக முனைப்புக்காட்டினர். இதனால் இந்தியாவின் பிராந்திய நலன்களை அவர்கள் இரண்டாமிடத்திற்கு தள்ளிவிட்டனர். இந்திய அதிகாரத்தை தமது கைக்குள் வைத்திருக்கும் தரப்பினர் இந்திய நலலிலும் பார்க்க தமது குடும்பத்தின் பழிவாங்கும் தன்மையை முன்னிலைப் படுத்தினர். இலங்கையின் இன அழிப்புப் போருக்கு முற்று முழுதான உதவியும் பங்களிப்பும் தமது தென்னிந்திய தேர்தல் களத்தில் பாதக சூழ்நிலை ஏற்படுத்தும் என்பதால் இலங்கையை சீனாவிடமிருந்தும் பாக்கிஸ்த்தானிடமிருந்தும் கணிசமான உதவிபெற அனுமதித்தனர். இலங்கை அதற்கு செய்யும் பிரதி உபகாரம் இந்தியப் பிராந்திய நலனுக்கு உகந்தது அல்ல என்ற உண்மையை இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும் அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொள்பவர்களும் உதாசீனம் செய்தனர். இந்திரா காந்தி அம்மையார் தமிழர்களை ஆயுதபாணிகளாக்கி இலங்கையை தனது நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு வந்தார். கற்றுக் குட்டி ராஜீவ் காந்தி அந்த ஆயுதங்களை களைய் முற்பட்டு பல தமிழ் ஆயுதக் குழுக்களை நிராயுதபாணிகளாக்கி சகோதர யுத்தத்தை தமிழ் ஆயுதக் குழுக்க்ளுக்குள் ஏற்படுத்தி தமிழர்களின் ஆயுத பலத்தை குறைத்தார். இதனால் இந்திய நிகழ்ச்சி நிரலிற்குள் இலங்கை வராமல் இலங்கையின் நிகழ்ச்சி நிரலுக்க்ள் இந்தியா வந்து விட்டது. இந்த நிலைப்பாடு மேற்குலகமும் இந்தியாவும் செய்த உடன்பாட்டுக்கு பாதகமாக அமைந்தது.
மேற்குலக சீன முரண்பாடு
இலங்கையில் இந்திய உதாசீனத்தால் சீனப் பிடி இறுக்கமடைய மேற்குலகத்திற்கும் சீனாவிற்கும் இடையிலான முரண்பாடு இலங்கையிலும் மையம் கொண்டது.
இலகு உலக வர்த்தகத்திற்காக சீனாவுடன் நேரடி மோதலை தவிர்க்க வேண்டிய சூழலில் உள்ள மேற்குலகம் இலங்கைமீது தனது பிடியை எப்படி இறுக்குவது என்று சிந்திக்கவும் செயற்படவும் ஆரம்பித்து விட்டது. மியன்மாரில் விட்ட பிழையை மேற்குலகம் இலங்கையில் விடத் தயாராக இல்லை என்பதை இலங்கையைச் சுற்றி மேற்குலகம் எடுக்கும் நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன. சிங்கள பேரின வாதிகள் இலங்கையை இன்னொரு சீனசார்பு மியன்மார் ஆக்குவதை ஆதரிக்கிறார்கள். அவர்களின் பிரதான நோக்கம் இலங்கையின் நீண்டகால வளர்ச்சியிலும் பார்க்க தமிழர்களை அடக்கி ஆள்வதே. அதற்கு ஏற்புடைய நட்பு சீன நட்பே என்று அவர்கள் பெரிதும் நம்புகின்றனர்.
இலங்கையில் இந்தியா பாரிய வெளிநாட்டுக் கொள்கைத் தவறை இழைத்ததாக பல முன்னாள் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை பற்றி நன்குணர்ந்தவர்களும் ஒப்புக் கொள்கின்றனர்.
இப்போது இலங்கை இந்தியாவின் ஆதிக்க வரம்பிற்கு உட்பட்ட நாடு அல்ல. இலங்கை இந்தியாவின் நட்பு நாடுபோல் பாசாங்கு செய்து கொண்டு இந்தியாவைத் தனது தேவைகளுக்குப் பாவித்து வருகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை எதிர்க்க இந்தியா சீனாவுடன் இணந்து எதிர்த்தது. மேற்குலகம் இலங்கைக்கு எதிராக எடுக்க விருக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக சர்வ தேச நாணய நிதியத்தின் கடனுதவி நிறுத்தம் அமையவிருப்பதாக கருதப்படுகிறது சர்வ தேச நாணய நிதியம் இலங்கைக்கு கடனுதவி வழங்காவிடில் இலங்கை சீன உதவியை நாடமல் இருக்க இந்தியா தான் கடனுதவி வழங்குவேன் என்று முன் கூட்டியே அறிவித்து விட்டது
இலங்கைக்கு எதிராக மேற்குலகம் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகளை இந்தியா சீனாவுடன் இணைந்து தொடர்ந்தும் எதிர்க்கப் போகிறதா?
இந்திய மேற்குலக உடன்பாட்டுக்கும் சீன மேற்குலக முரண்பாட்டுக்கும் இடையில் ஒரு முறுகல் நிலை இலங்கையில் ஏற்பட்டுள்ளது.
Tuesday, 3 November 2009
சரத் பொன்சேகாவை அமெரிக்கா தடுத்து வைக்கும்?
சரத் பொன்சேகா ஒரு அரச தந்திரி அவரை விருப்பத்திற்கு மாறாக விசாரிக்க முடியாது என்று அமெரிக்காவிடம் இலங்கை அரசு தெரிவித்துள்ளது. சரத் பொன்சேகாவுடன் அமெரிக்க உள்ளக பாதுகாப்பகம் நாளை புதன் கிழமை (04-11-2009) "நேர்காணல்" நடாத்தவுள்ளது. அவருக்கென்று அரச தந்திரச் சிறப்புரிமை உண்டு .(diplomatic immunity) என்று இலங்கை அரசு வாதிடுகிறது.
ஒரு நாட்டின் அரச தந்திரிகள் இன்னொரு நாட்டில்செயற்படும் போது அவர்களுக்கென்று சிறப்புரிமைகள்உண்டு.(diplomatic immunity -A principle of international law that provides foreign diplomats with protection from legal action in the country in which they work)
இந்தச் சிறப்புரிமைகள் 1961 ஆண்டு நடந்த வியன்னா அரச தந்திரிகளுக்கான மாநாட்டில் உலக நாடுகளால் ஒப்புதல் அளிக்கப் பட்டது. அரச தந்திரி ஒருவர் தான் செயற்படுகம் நாட்டில் குற்றமிழைத்தால் அவரைக் கைது செய்யவோ தண்டிக்கவோ அவர் செயற்படும் நாட்டிற்கு உரிமை இல்லை. அதிக பட்சமாக அவரை நாட்டை விட்டு வெளியேற்றலாம். உதாரணமாகஇலங்கைக்கான பர்மாவின் தூதுவர் தனது மனைவியை இலங்கையில் வைத்துக் கொலை செய்தால் அவரை பர்மாவில்தான் விசாரிக்க முடியும்.
பாரிய குற்றங்கள் இழைக்கப் படுமிடத்தில் அரச தந்திரி ஒருவர் தனது அரச தந்திரிகளுக்கான சிறப்புரிமையை இழக்க வாய்ப்புண்டு.
ஐக்கிய நாடுகள் சபையின் ஊழியர்கள் இருவரை இலங்கை அரசு வன்னி முகாம்களில் தடுத்து வைத்துள்ளது. ஐக்கிய நாடுகளின் ஊழியர்கள் என்றவகையில் இவர்களுக்கு அரச தந்திரிகளுக்கான சிறப்புரிமை உண்டு. இது பற்றி Inner City Press ஐக்கிய நாட்டு அதிகாரிகளிடம் அவர்களின் அரச தந்திரிகளுக்கான சிறப்புரிமை பற்றியும் அவர்களது தடுத்து வைப்பு சர்வதேச நியமங்களுக்கு முரணானது என்றும் பல தடவைகல்சுட்டிக் காட்டியது அவர்கள் இக் கேள்விகளுக்கு பதில் கூறாமல் இழுத்தடித்து விட்டு இறுதியில் இருவரும் இலங்கைக் குடிமக்கள் என்பதால் அவர்களிற்கு அவர்களின் சொந்த நாட்டில் அரச தந்திரிகளுக்கான சிறப்புரிமை இல்லை என்று ஐக்கிய நாடுகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டது.
இதே பிரச்சனை இப்பொது சரத் பொன்சேகாவிற்கு ஏற்பட்டுள்ளது. அவரை அமெரிக்க அரசு தடுத்து வைக்க முடியாது அவருக்கு அரச தந்திரிகளுக்கான சிறப்புரிமை உண்டு என்று இலங்கை அரசு கருதுகிறது. அதில் உள்ள சட்டச் சிக்கல்கள்:
- சரத் பொன்சேகா இலங்கை அரச அதிகாரிதான் ஆனால் அவர் அரச தந்திரியா?
- சரத் பொன்சேகா அமெரிக்கக் குடியுரிமை உடையவர். அவரை அமெரிக்க அரசு தடுத்து வைக்கலாம்.
- அவர் இழைத்த குற்றம் பாரதூரமானது அதனால் அவரைத் தடுத்து வைத்து விசாரிக்க அரச தந்திரிகளுக்கான சிறப்புரிமை நீக்கி (waiving the diplomatic immunity) அமெரிக்க அரசு முற்படலாம்.
- அமெரிக்கச் சட்டப் படி 12மாதங்களுக்கு மேல் சிறைத் தண்டனை வழங்கப் படக்கூடிய ஒருவருக்கு அரச தந்திரிகளுக்கான சிறப்புரிமையை நீக்கி அவர் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.
கடந்த கால உதாரணங்கள்
- 1984 இல் இலண்டனில் உள்ள் லிபியத் தூதுவரகத்துக்குள் இருந்து மேற்கொள்ளப் பட்ட துப்பாக்கிச் சூடு வெளியில் இருந்த காவற்துறை அதிகாரியைக் கொன்றது. இதற்காக அரச தந்திரிகளுக்கான சிறப்புரிமை நீக்கி லிபிய நாடு கொலைக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டது.
- 1991இல் ஜோர்யிய அரச தந்திரி ஒருவர் அமெரிக்காவில் வாகன விபத்தொன்றிற்காகத் தண்டிக்கப்பட்டார்.
- 1960இல் பிரித்தானியாவில் தீர்வை இன்றி இறக்குமதி செய்த சிகரெட்டை விற்பனை செய்தமைக்காக ஹொலண்ட் நாட்டைச் சேர்ந்தவர் தண்டிக்கப் பட்டார். அதே குற்றத்தைச் செய்த அமெரிக்க அரச தந்திரி தண்டனையில் இருந்து அரச தந்திரிகளுக்கான சிறப்புரிமையால் தப்பினார்.
Category | May Be Arrested or Detained | Residence May be Entered Subject to Ordinary Procedures | May Be Issued Traffic Citation | May Be Subpoenaed as Witness | May Be Prosecuted | Recognized Family Member |
Diplomatic | ||||||
Diplomatic Agent | No1 | No | Yes | No | No | Same as sponsor (full immunity and inviolability). |
Member of Administrative and Technical Staff | No1 | No | Yes | No | No | Same as sponsor (full immunity and inviolability). |
Service Staff | Yes | Yes | Yes | Yes | Yes | No immunity or inviolability.2 |
Consular | ||||||
Career Consular Officers | Yes, if for a felony and pursuant to a warrant.2 | Yes4 | Yes | No--for official acts. Testimony may not be compelled in any case. | No--for official acts. Otherwise, yes.2 | No immunity or inviolability.2 |
Honorary Consular Officers | Yes | Yes | Yes | No--for official acts. Yes, in all other cases. | No--for official acts. Otherwise, yes. | No immunity or inviolability. |
Consular Employees | Yes2 | Yes | Yes | No--for official acts. Yes, in all other cases. | No--for official acts. Otherwise, yes.2 | No immunity or inviolability.2 |
International Organizations | ||||||
International OrganizationsStaff3 | Yes3 | Yes3 | Yes | No--for official acts. Yes, in all other cases. | No--for official acts. Otherwise, yes.3 | No immunity or inviolability. |
Diplomatic-Level Staff of Missions to International Organizations | No1 | No | Yes | No | No | Same as sponsor (full immunity and inviolability). |
Support Staff of Missions to International Organizations | Yes | Yes | Yes | No--for official acts. Yes, in all other cases. | No--for official acts. Otherwise, yes. | No immunity or inviolability. |
Monday, 2 November 2009
கூகிள் தாக்குகிறது ரொம்-ரொம்மை
கூகிள் நிறுவனத்தின் தாக்குதலுக்கு இப்போது செய்மதி வழிகாட்டற்(Satellite navigators or in short Sat-Nav) கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனங்களான Garmin and TomTom ஆகியன இலக்காகியுள்ளன. இதுவரை காலமும் செய்மதி வழிகாட்டற் (Satellite navigators or in short Sat-Nav) கருவிகள் தயாரிப்பில் நெதர்லாந்து நிறுவனமான TomTom உம் அமெரிக்க நிறுவனமான Garminஉம் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இப்போது கூகிள் இந்தத்துறையில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஏற்கனவே பல கைத் தொலைபேசிகளில் கூகிளின் செய்மதி வழிகாட்டற்(Satellite navigators or in short Sat-Nav) மென்பொருள்கள் இருக்கின்ற போதிலும் அவை பெருமளவில் இதுவரை எடுபடவில்லை. ஆனால் இப்போது கூகிள் புதிய ரக மென்பொருளை அறிமுகப் படுத்தியுள்ளது. நேரடி செய்மதி மூலமான வழிகாட்டல் படிப்படியான வழிகாட்டல் போன்ற நல்ல பயனுள்ள தகவல்கள் அடங்கிய Android softwareஇன் புது வடிவத்தில் சந்தைக்கு வந்துள்ளது. TomTom தனது கைத்தொலைபேசிகளுக்கான மென்பொருளை $99.99இற்கு விற்கிறது. ஆனல் கூகிள் தனது மென்பொருளை இலவசமாக வழங்குகிறது. Nokia, Apple and
தற்போது இலவசமாக தனது மென்பொருளின் புதிய வடிவத்தை வெளிவிடும் கூகிள் பின்னர் எப்படி இதன் மூலம் பண்ம சேர்ப்பது என்ற உத்தியை நன்கு அறிந்துள்ளது என்று கூறப்படுகிறது.
கூகிளின் இந்தப் புதிய அறிவிப்பால் Tom Tom பங்கு விலைகள் 20% வீழ்ச்சியையும் Garminஇன் பங்குகள் 17% வீழ்ச்சியையும் அடைந்துள்ளன.
கோத்தபாயவை இந்தியா ''பிணை" எடுக்குமா?
பிரித்தானிய சனல்-4 தொலைக்காட்சி இலங்கையில் இளைஞர்கள் நிர்வாணமாக்கப் பட்டு கொலை செய்யப் படுவதை அம்பலப் படுத்தியத்து. இச்செய்தி வந்தவுடன்இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அது தொடர்பாக விசாரிக்குமாறு அவசரமாக தனது அதிகாரிகளுக்கும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரகத்திற்கும் ஆணையிட்டார். ஆனால் அந்த விசாரணை தொடர்பாக இதுவரை எந்த அறிக்கையும் இந்தியத் தரப்பிலிருந்து வெளிவரவில்லை. இலங்கியின் இனக்கொலைக்கு இந்தியா ஆற்றிய பங்களிப்பு சம்பந்தமான காணொளிப் பதிவுகள் ஏதாவது உண்டா என்பதை அறியத்தான் இந்தியா விசாரிக்க உத்தரவிட்டதா என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது.
இலங்கையில் நடந்த போர்க் குற்றம் தொடர்பாக இலங்கையின் பாது காப்புச் செயலாளரும் இலங்கை குடியரசுத் தலைவரின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சே அவர்களுக்கு எதிராக அமெரிக்கா இப்போது நடவடிக்கை எடுக்கும் முன்னேற்பாட்டில் இறங்கியுள்ளது. இதற்கு இலங்கையின் படைத் துறைத் தலைவராக இருந்த சரத் பொன்சேகாவை சொந்த விருப்பத்தின் பேரில் நேர்காண அமெரிக்க உள்துறைச் செயலகம் முயல்கிறது. அமெரிக்கா அண்மையில் இலங்கையின் போர்குற்றம் தொடர்பாக ஒரு இடைக் கால அறிக்கையை வெளியிட்டிருந்தது. அது இலங்கைக்கு எதிரான காத்திரமான குற்றப் பத்திரிகை அல்ல என்றாலும் இறுதி அறிக்கையில் என்ன இருக்கும் என்பது பற்றி இலங்கை அரசு அதிர்ந்து போய் உள்ளது. கிடைக்கும் செய்திகளின் படி அமெரிக்கா இலங்கைக்கு எதிராக மெதுவாகக் காய்களை நகர்த்துகிறது.
இப்போது அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா எப்படி உதவப் போகிறது?இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரில் முன்னின்று உதவியது இந்தியா. இலங்கையின் இறுதிப் போர் நடக்கும் வேளை போர்முனையில் அகப்பட்டவர்களைப் பாதுகாக்க பல நாடுகள் முயன்றபோது அதை தடுத்து நிறுத்தியது இந்தியா. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்த போது அதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து தீர்மானத்தை இலங்கையைப் பாராட்டும் தீர்மானமாக மாற்றியது இந்தியா. இலங்கையில் இராணுவப் புரட்சி ஏற்பட்டால் அதை ஒடுக்க இந்தியா தயாராக இருக்கிறது. இலங்கையின் வன்னி வதை முகாம்களுக்கு நற்சான்றிதழ் வழங்கியது இந்தியா. இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி கிடைக்காவிட்டால் அதை ஈடு செய்யத் தயாராக இருக்கிறது இந்தியா. இலங்கையுடனான எதிர்கால உறவு இலங்கை அரசியிலமைப்பின் 13வது திருத்தத்தை அமூலாக்குவதில்த்தான் தங்கி இருக்கிறது என்று அறிவித்து விட்டு இப்போது 13வது திருத்தம் பற்றிய பேச்சையே இந்தியத் தரப்பில் இருந்து எடுப்பதில்லை. இலங்கைக்கு சார்பாக இந்திய உளவு அமைப்பு ப. சிதம்பரம் மு. கருணாநிதி ஆகியோர் ஒரு நாடகத்தை அண்மையில் அரங்கேற்றினர்: இந்தியப் பாராளமன்ற உறுப்பினர்களின் இலங்கைப் பயணம். அதில் ஒருவரை கொன்றிருப்பேன் என்று கூட இலங்கைக் குடியரசுத்தலைவர் சொன்னார். அது பற்றி இந்தியத் தரப்பிலிருந்து எந்த ஆட்சேபனையும் இது வரை வரவில்லை. இப்போது இலங்கை அரசின் போர்குற்றம் சம்பந்தமாக அமெரிக்காவின் காய் நகர்த்தல்களுக்கு எதிராக் இந்தியாவே இலங்கைகு உதவ முடியும். இது தொடர்பாக சீனாவால் எதுவும் செய்ய முடியாது. இலங்கையில் அமெரிக்க சீனப் போட்டி கடுமையாக நிலவுகிறது. இந்தியா தனது "சந்தை" பலத்தைக் கொண்டு அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுக்க முடியும். அத்துடன் இலங்கை "இந்தியாவின் ஏரியா" என்பதை சில வகைகளில் அமெரிக்கா ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தியா கோத்தபாயவைப் "பிணை" எடுக்குமா? இலங்கைக்கு எதிரான போர்குற்றங்களில் இந்தியாவிற்கும் உதவிசெய்த நாடு என்ற வகையில் பங்குண்டு.
Sunday, 1 November 2009
அறிவை வளர்க்க 10 இணையத் தளங்கள்.
1. nationalgeographic.com
அற்புதமாக வடிவமைக்கப் பட்ட இணையத்தளம். சுற்றுச் சூழல், விண்வெளி, மிருகங்கள் போன்றவற்றைப் பற்றி மட்டுமல்ல பலநாட்டு இசைகளைப் பற்றியும் உண்டு.
2. www.nasa.gov
அண்ட சராசரங்களைப் பற்றிய முப்பரிமாணப் படங்கள், காணொளி இணைப்புக்கள் எனப் பலவும் உண்டு.
3. howstuffworks.com
நிபுறர்கள் எழுதிய கட்டுரைகள் காணொளி இணைப்புக்கள் எனப் பலவும் உண்டு. பொருளாதாரப் பின்னடைவு எப்படி ஏற்படுகிறது, கூகிள் எப்படி வேலை செய்கிறது என்பவற்றைப் பற்றியும் அறியலாம்.
4. discovery.com
டிஸ்கவரிச் சனலின் இணயத்தளம் பல தகவல்களை உள்ளடக்கியது.
5. smithsonianmag.com
சிமித்சொனியன் என்னும் பிரபல அமெரிக்க அருங்காட்சியகத்தின் தளம். அற்புதத் தகவல்களை உள்ளடக்கியது.
6. bbc.co.uk/nature
மிருகங்களைப்பற்றியும் இயற்கையைப் பற்றியும் விளக்கும் தளம். காணொளி இணைப்புக்கள் எனப் பலவும் உண்டு.
7. ted.com
பல அறிஞர்களின் விளக்க உரைகள் அடங்கிய காணொளிகள்.
8. arkive.org
காணொளிகளும் காட்சிகளும் நிறைந்த தளம்.
9. historytoday.com
இலவசமாக இத்தளத்தில் பதிவுசெய்தால் பல உயர்ந்த ரக கட்டுரைகளைப் படிக்கலாம்.
10. pbs.org
கலை விஞ்ஞானம் சரித்திரம் பற்றிய பல தகவல்கள் இங்குண்டு.
புலிகளின் போர் உத்திகளை அறிய முயலும் அமெரிக்கா!
முகாமைத்துவ விற்பன்னரான Peter Drucker தனது Managing for Results என்னும் நூலில் நிறைவேற்று அதிகாரிகளும் தொடர்பாடலும் (Executives and communication) என்பதைப் பற்றி எழுதுகையில் கரந்தடி படை அமைப்பில் ஒரு கரந்தடி படை வீரன் தனது தலைமையுடன் உடனுக்குடன் தொடர்பாடல் செய்ய முடியாததால் அவன் களத்தில் சுயாமாக முடிவெடுக்க வேண்டியிருப்பதால் ஒவ்வொரு படை வீரனும் நிறைவேற்று அதிகாரியாவான் என்றார். இந்தச் நிலைமயை மாற்றி அமத்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். எப்போதும் அதி நவீன தொடர்பாடல் கருவிகளைப் பாவித்தவர்கள். இந்திய அமைதிப்(அட்டூழிய) படை இலங்கையில் இருந்த காலத்தில் இந்தியப் படை வீரர்கள் தமது தொடர்பாடல் கருவிகளைத் தோளில் சுமந்து செல்வர் ஆனால் விடுதலைப் புலிகளின் கருவிகள் சட்டைப் பைக்குள் இருக்கும். அநுராதபுர விமானப் படைத் தாக்குதல் நடந்தவேளை நேரடியாக புலிகளின் தலைமை அதை காணொளியில் கண்டு உத்தரவுகளை வழங்கிக் கொண்டிருந்தது. வேறு எங்கும் இம்மாதிரியான முறை அதற்கு முன்பு கடைப் பிடிக்கப் படவில்லை.
போர் முறையில் பல புதிய உத்திகளை வகுத்தவர்கள் விடுதலை புலிகள். அவர்களிடம் இருந்து கற்கவேண்டியது நிறைய உண்டு.
அமெரிக்கா இப்போது முன்னாள் விடுதலை புலிகளைப் புனர் வாழ்வு வழங்கி சாதாரண வாழ்க்கைக்கு திரும்பச் செய்வது என்று ஒரு திட்டத்தில் இறங்கியுள்ளது. இதற்கு அமெரிக்கா தேர்ந்தேடுத்த இடம் திருக்கோணாமலை. இத்துடன் கிழக்கு முதலமைச்சரும் சம்பந்தப் படுத்தப் பட்டுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...