இலண்டனில் நடக்கும் ஆர்ப்பாட்த்தில் பல கோரிக்கை வாக்கியங்கள் ஒலிப்பதுண்டு. இவை பிரித்தானிய அரசையும் மக்களையும் நோக்கி இருப்பதால் பெரும்பாலானவை ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. அவ்வப்போது தமிழிலும் ஒன்றிரண்டு ஒலிப்பதுண்டு. அவற்றிலொன்று:
பனை மரத்திலை வெளவாலா புலிகளுக்கே சவாலா
இதற்கான சரியான பொருள் எனக்கு விளங்கவில்லை. பனை மரத்திற்கும் வெளவாலுக்கும் என்ன தொடர்பு என பலதமிழறிஞர்களிடம் கேட்டேன். அவர்களுக்கும் தெரியவில்லை. இயற்கை விஞ்ஞானம் படித்த ஒருவர்தான் சொன்னார். பனை மரத்தில் வெளவால் தொங்குவது சாத்தியமற்றது. கிளையில்லாத மரம். இலையின் மட்டை முள்போன்ற அமைப்புடையது. அதனால் பனையில் வெளவால் தொங்குவது சாத்தியமற்றது. அது போலவே புலிகளுக்கும் சவால் விடமுடியாது.
அங்கு ஒலித்த மற்றக் கோரிக்கைகள்:
We want – Ceasefire
When we want? – Now
Permanent - Ceasefire
Srilanka, Srilanka – Stop the war, stop the war.
Gordon Brown, Gordon Brown – Open your eyes, open your eyes
Our Nation – Tamil Eelam
Our leader – Pirapaharan
Stop, stop – genocide
Stop using – chemical weapons
BBC, BBC – Tell the truth! Tell the truth!!
Indian Army – Go home
Rajapakse – Terrorist
Tamil Tigers – Freedom fighters