விண்வெளியில் உள்ள குப்பைகளை வாரி அள்ளுவதற்கு என சீனா அனுப்பிய Roaming Dragon என்னும் செய்மதி பல
ஐயங்களை எழுப்பியுள்ளது. ஜூன் 25-ம் திகதி சீனாவின்
தென் பிராந்திய நகரமான Hainanஇல் இருந்து சீன மொழியில் Aolong-1 என்றும் ஆங்கிலத்தில் Roaming Dragon-1 என்றும் அழைக்கப்படும் செய்மதி விண்வெளிக்கு Long March 7
rocket இல் இருந்து
செலுத்தப்பட்டது. இதை தமிழில் சுற்றித்திரியும் யாளி-1 என அழைக்கலாம்.
சீனாவின் செய்மதி விஞ்ஞானியான Tang Yagang சுற்றித்திரியும் யாளி-1ஐப் போன்றும் இன்னும் பல விண்வெளியைச் சுத்தம் செய்யும் செய்மதிகள்
விண்வெளிக்கு அனுப்பப்படும் என்றார். விண்வெளியில் குப்பைகளாகக் கிடக்கும் பழைய
செய்மதிகளின் சிதைவுகளை வாரி அள்ளுவதே Aolong-1 இன் செயற்பாடு எனச் சொல்லப்படுகின்றது.
தும்புக் கட்டா துப்பாக்கியா?
சீனாவின் Aolong-1 ஒரு படைக்கலனாகவும் இருக்கலாம் என அமெரிக்காவிலும் இரசியாவிலும்
கருதப்படுகின்றது. விண்வெளியில் இருக்கும் பழைய செய்மதிகள் மற்ற செய்மதிகளுக்கு ஆபத்து
விளைவிக்கக் கூடிய வகையில் சுற்றித் திரிகின்றன. 2015-ம் ஆண்டின்
நடுப்பகுதியில் இரசிய மற்றும் அமெரிக்க விண்வெளிப்பயணிகள் தங்கியிருந்த விண்வெளி
ஓடத்தின் மீது மோதும் அபாயம் ஏற்பட்டிருந்தது. Aolong-1 இன் இயந்திரக்கரங்கள் (robotic arm) பொருத்தப்பட்டுள்ளன. இவை விண்வெளியில் உள்ள குப்பைகளை வாரி அள்ளும் என சீனா
தெரிவித்துள்ளது. ஆனால் விண்வெளியில் உள்ள பெருமளவு குப்பைகளை வாரி அள்ளிச்
சுத்தப் படுத்துவது என்பது ஓர் இயலாத காரியம் என விண்வெளி நிபுணர்கள் கூறுகின்றனர்.
பிய்த்து உதறுமா?
சீனாவின் Aolong-1 செய்மதியின் நீண்ட கரங்கள் எதிரி நாட்டுச் செய்மதிகளை பிய்த்து உதறக்
கூடியவையாக இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. சீனாவின் Aolong-1 இன் விண்வெளி
இயந்திரக் கரங்கள் (Space robotic arms) படைத்துறைச் செயற்பாடுகளைச் செய்யக் கூடியவை எனவே
நம்பப்படுகின்றது. 1981-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் நாசா தனது விண்வெளி ஓடத்தை (space shuttle) அனுப்பிய போது
அதில் பொருத்தப் பட்டிருந்த கனடாவில் உருவாக்கப் பட்ட “Canadarm”—the
Canadian-made “Shuttle Remote Manipulator System” என்னும் முறை படைத்துறை நோக்கம் கொண்டதே என
இரசியாவில் கரிச்னையுடன் கருதப்பட்டது. ஆனால் 2011-ம் ஆண்டு வரை
விண்வெளிக்குச் சென்று வந்த அமெரிக்காவின் விண்வெளி ஓடம் எந்த ஒரு
படைநடவடிக்கையையும் செய்யவில்லை.
2007-ம் ஆண்டில் இருந்து
தொடர்கின்றது 2007-ம் ஆண்டு சீனா விண்வெளியில் மிதந்து கொண்டிருந்த தனது காலநிலை தொடர்பான
செய்மதியை தரையில் இருந்து ஏவப்பட்ட தனது ஏவுகணையால் அழித்து ஒரு பரிசோதனையைச்
செய்தது. தனது எதிரி நாட்டுச் செய்மதிகளை அழிக்க சீனா போட்ட திட்டம் அது எனக்
கருதப்படுகின்றது. அமெரிக்கப் படையினர் தமது தொடர்பாடல்களுக்கும் கட்டளை மற்றும்
கட்டுப்பாட்டுச் செயற்பாடுகளுக்கும் இருப்பு நிலை பற்றி அறிந்து கொள்வதற்கும் தமது
செய்மதிகளிலேயே பெரிதும் தங்கியுள்ளனர். அமெரிக்காவின் அச்செய்மதிகளை சீனா தனது
தரையில் இருந்து செலுத்தும் ஏவுகணைகள் மூலம் அழித்தால் அது அமெரிக்கப் படைகளுக்கு
பெரும் பின்னடைவாகவே இருக்கும். 2012-ம் ஆண்டு சீனா 18 செய்மதிகளை விண்வெளிக்கு அனுப்பியது. அவை காலநிலை அவதானிப்பில் இருந்து வேவு, உளவு, படை நடவடிக்கை, தொடபாடல், வழிகாட்டல் போன்ற
பலதரப்பட்ட செயற்பாடுகளைச் செய்யக் கூடியவையாக இருந்தன. பின்னர் 2013 மேமாதம் 13-ம்திகதி தனது Xichang Satellite
Launch Centerஇல் இருந்து செய்மதிகளை அழிகக் கூடிய ஏவுகணையை மிக இரகசியமாகப் பரிசோதனை
செய்தது. 2015-ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திலும் செய்மதிகளை அழிக்கக் கூடிய ஏவுகணைகளை சீனா
பரிசோதித்தது. அந்த ஏவுகணை எந்த இடத்தில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது என்பதும்
அறியப்படவில்லை. சீனா தொடர்ந்து தனது செய்மதிகளை ஏவும் தளங்களை(space launchers ) மேம்படுத்தியும்
வருகின்றது. சீனாவின் KZ-11 என்னும் தளத்தில் இருந்து செய்மதிகளை அழிக்கக் கூடிய ஏவுகணைகள் இப்போது
வீசப்படலாம் என நம்பப்படுகின்றது.
இரசியாவின் பங்கு2010-ம் ஆண்டு இரசியா
தனது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு விண்வெளியும் முக்கியமானது எனத் தெரிவித்தது. 2014-ம் ஆண்டின்
இறுதியில் இரசியா விண்வெளிக்கு அனுப்பிய மூன்று செய்மதிகள் படை நடவடிக்கைகளைச்
செய்யக் கூடியவை எனக் கருதப்படுகின்றது. அவை வானிலை தொடர்பான செய்மதிகள் என இரசியா
சொன்ன போதிலும் அவை மற்ற செய்மதிகளை அழிக்கக் கூடியவை எனவே கருதப்படுகின்றது.
அமெரிக்கா சும்மா
இருக்குமா?அமெரிக்கப்
படைத்துறையின் முதுகெலும்பாக இருப்பது செய்மதிகளே. அவற்றிற்கு ஏற்படக் கூடிய
ஆபத்துக்களைப் பார்த்துக் கொண்டு அமெரிக்கப் படைத்துறையால் சும்மா இருக்க
முடியாது. சற்றுத் தாமதமானாலும் 2014-ம் ஆண்டு அமெரிக்கா தனது செய்மதிகளை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பது
தொடர்பாகவும் எதிரிகளின் ஏவுகணைகளை அழிப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தத்
தொடங்கியது. தற்போது அமெரிக்கா தனது செய்மதிகளை அழிக்கக் கூடிய எதிரியின்
செயற்பாடுகளை வேவுபார்க்கக் கூடிய செய்மதிகளை உருவாக்கி விண்வெளியில் மிதக்க
விட்டுள்ளது. அமெரிக்காவின் லேசர் படைக்கலன்களால் தரையில் இருந்தும் வானில்
இருந்தும் எதிரியின் செய்மதிகளையும் தனது செய்மதிகளை அழிக்க வரும் எதிரியின்
ஏவுகணைகளையும் அழிக்க முடியும்.
தும்புக் கட்டா துப்பாக்கியா?
பிய்த்து உதறுமா?
2007-ம் ஆண்டில் இருந்து தொடர்கின்றது 2007-ம் ஆண்டு சீனா விண்வெளியில் மிதந்து கொண்டிருந்த தனது காலநிலை தொடர்பான செய்மதியை தரையில் இருந்து ஏவப்பட்ட தனது ஏவுகணையால் அழித்து ஒரு பரிசோதனையைச் செய்தது. தனது எதிரி நாட்டுச் செய்மதிகளை அழிக்க சீனா போட்ட திட்டம் அது எனக் கருதப்படுகின்றது. அமெரிக்கப் படையினர் தமது தொடர்பாடல்களுக்கும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டுச் செயற்பாடுகளுக்கும் இருப்பு நிலை பற்றி அறிந்து கொள்வதற்கும் தமது செய்மதிகளிலேயே பெரிதும் தங்கியுள்ளனர். அமெரிக்காவின் அச்செய்மதிகளை சீனா தனது தரையில் இருந்து செலுத்தும் ஏவுகணைகள் மூலம் அழித்தால் அது அமெரிக்கப் படைகளுக்கு பெரும் பின்னடைவாகவே இருக்கும். 2012-ம் ஆண்டு சீனா 18 செய்மதிகளை விண்வெளிக்கு அனுப்பியது. அவை காலநிலை அவதானிப்பில் இருந்து வேவு, உளவு, படை நடவடிக்கை, தொடபாடல், வழிகாட்டல் போன்ற பலதரப்பட்ட செயற்பாடுகளைச் செய்யக் கூடியவையாக இருந்தன. பின்னர் 2013 மேமாதம் 13-ம்திகதி தனது Xichang Satellite Launch Centerஇல் இருந்து செய்மதிகளை அழிகக் கூடிய ஏவுகணையை மிக இரகசியமாகப் பரிசோதனை செய்தது. 2015-ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திலும் செய்மதிகளை அழிக்கக் கூடிய ஏவுகணைகளை சீனா பரிசோதித்தது. அந்த ஏவுகணை எந்த இடத்தில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது என்பதும் அறியப்படவில்லை. சீனா தொடர்ந்து தனது செய்மதிகளை ஏவும் தளங்களை(space launchers ) மேம்படுத்தியும் வருகின்றது. சீனாவின் KZ-11 என்னும் தளத்தில் இருந்து செய்மதிகளை அழிக்கக் கூடிய ஏவுகணைகள் இப்போது வீசப்படலாம் என நம்பப்படுகின்றது.
இரசியாவின் பங்கு2010-ம் ஆண்டு இரசியா தனது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு விண்வெளியும் முக்கியமானது எனத் தெரிவித்தது. 2014-ம் ஆண்டின் இறுதியில் இரசியா விண்வெளிக்கு அனுப்பிய மூன்று செய்மதிகள் படை நடவடிக்கைகளைச் செய்யக் கூடியவை எனக் கருதப்படுகின்றது. அவை வானிலை தொடர்பான செய்மதிகள் என இரசியா சொன்ன போதிலும் அவை மற்ற செய்மதிகளை அழிக்கக் கூடியவை எனவே கருதப்படுகின்றது.
அமெரிக்கா சும்மா இருக்குமா?அமெரிக்கப் படைத்துறையின் முதுகெலும்பாக இருப்பது செய்மதிகளே. அவற்றிற்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்களைப் பார்த்துக் கொண்டு அமெரிக்கப் படைத்துறையால் சும்மா இருக்க முடியாது. சற்றுத் தாமதமானாலும் 2014-ம் ஆண்டு அமெரிக்கா தனது செய்மதிகளை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பது தொடர்பாகவும் எதிரிகளின் ஏவுகணைகளை அழிப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தத் தொடங்கியது. தற்போது அமெரிக்கா தனது செய்மதிகளை அழிக்கக் கூடிய எதிரியின் செயற்பாடுகளை வேவுபார்க்கக் கூடிய செய்மதிகளை உருவாக்கி விண்வெளியில் மிதக்க விட்டுள்ளது. அமெரிக்காவின் லேசர் படைக்கலன்களால் தரையில் இருந்தும் வானில் இருந்தும் எதிரியின் செய்மதிகளையும் தனது செய்மதிகளை அழிக்க வரும் எதிரியின் ஏவுகணைகளையும் அழிக்க முடியும்.