Showing posts with label கடாஃபி. Show all posts
Showing posts with label கடாஃபி. Show all posts

Thursday, 27 December 2012

அரபு வசந்தத்தில் அமெரிக்கா - தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை.

வறுமை, அரசுகளின் ஊழல், தொழிலாளர்களுக்கு குறைவான ஊதியம், காவற்துறையினரின் முறைகேடுகள்,  தனிமனித சுதந்திரமின்மை ஆகியவை அரபு வசந்தம் எனப்படும் ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சிகளுக்குக் காரணமாக அமைந்தன. அமெரிக்க அரசும் இசுலாமியத் தீவிரவாதிகளும் வேறு முனையில் அரபு மக்களின் உண்மையான பிரச்சனையை அறியாமல் மோதிக்கொண்டிருந்தன. அமெரிக்க உளவுத் துறையோ இசுலாமியத் தீவிரவாதத் தலைமைகளோ அரபு வசந்தத்தை எதிர்பார்க்கவில்லை.

உலகில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளும் மாற்றங்களும் தனது பெருவிரலில் இருக்க வேண்டும் என்ற இறுமாப்பான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ நிறுவனத்திற்கு அரபு வசந்தம் அதிலும் முக்கியமாக எகிப்தியப் புரட்சி பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.

ஆட்சியாளர்களுக்கு எதிராக மனம் கொதித்துக் கொண்டிருந்த அரபு மக்களுக்கு துனிசியாவில் காவற்துறையைச் சேர்ந்த பெண் ஒருத்தியால் காறி உமிழப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்ட மொஹமட் பௌஜிஜி தனக்குத் தானே தீ மூட்டித் தற்கொலை செய்தமை பெரும் கிளர்ச்சி செய்யத் தூண்டியது. துனிசிய தனித்தன்னாட்சியாளர் பென் அலி பதிவியில் இருந்து விரட்டப்பட்டார்.

 மனித உரிமைப் பிரச்சனை கடாஃபிக்கு வேறு ராஜபக்சேக்களுக்கு வேறு
 கடாஃபிக்கு எதிரான லிபிய மக்களின் கிளர்ச்சியின் போது  லிபிய மக்களின் அவலத்தைக் கண்ட ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமைக்கழகத்தின் ஆணையாளர் நவி பிள்ளை எனப்படும் நவநீதம் பிள்ளை அவர்கள் சிரியாவில் மக்களுக்கு எதிராக நடக்கும் அட்டூழியங்களுக்கான சாட்சியங்கள் கிடைத்திருப்பதால் பன்னாட்டு நீதிமன்றத்திற்கு இது எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அந்த அம்மையாரின் திருவாசகம் இப்படி இருந்தது:

  • "I believe the evidence points the commission of crimes against humanity." She quoted several human rights violations that provide rationale for referral of Syria’s case to International Criminal Court, like arbitrary detention, attacks on hospitals, extreme use of artillery and killings of suspected government informants.
சிரியாவில் ஒரு நாளில் மட்டும் இருபத்தி ஐந்தாயிரம் பேர் கொல்லப்படவில்லை. மொத்தமாக மூன்று இலட்சம் பேர் கொல்லப்படவில்லை. எந்த ஒரு ஐநா விசாரணைக்குழுவும் சிரியாவில் போர்க்குற்றமும் மானிடத்திற்கு எதிரான குற்றமும் நடந்ததமைக்கான போதிய ஆதாரங்கள் இருப்பதாகச் சொல்லவில்லை. சிரியப் படையினர் பெண்களை மானபங்கப்படுத்தி மார்புகளை கத்திகளால் குதறிக் கொல்லவில்லை. சிரியாவில் காயப்பட்டவர்கள் உயிரோடு புதைக்கப்படவில்லை.  சிரியாவில் சரணடையுங்கள் மறு வாழ்வு தருகிறோம் என்று சொல்லிவிட்டு சரணடைய வந்தவர்களைச் சுட்டுத் தள்ளவில்லை. ஆனாலும் சிரிய ஆட்சியாளர்களை பன்னாட்டு குற்றவியல் நீதி மன்றத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்கிறார் நவி பிள்ளை அம்மையார். அவரின் இத் துணிச்சலான கூற்றுக்குப் பாராட்டும் நன்றியும் தெரிவித்துக் கொண்டு இலங்கையில் இவ்வளவு அட்டூளியங்கள் நடந்தும் அவற்றிற்கான காத்திரமான சாட்சியங்கள் இருப்பதாக ஐநா நிபுணர் குழு அறிக்கை தெரிவித்திருந்தும், டப்ளின் தீர்ப்பாயம் இலங்கையில் போர்க்குற்றம் நடந்தது விசாரணை தேவை எனத் தெரிவித்திருந்த போதும், பல காணொளிப் பதிவுகள் வெளி வந்த போதும் இலங்கை ஆட்சியாளர்கள் பன்னாட்டுக் குற்றவியல் நீதி மன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று நவி பிள்ளை அம்மையாரோ வேறு எந்த ஐக்கிய நாடுகள் உயர் அதிகாரிகளோ தெரிவிக்க வில்லை. கொலையாளிகளையும் கொல்லப்பட்டவர்களையும் நல்லிணக்கம் செய்யும் படி தீர்மானம் நிறைவேற்றாமல் ஏன் பன்னட்டுக் குற்றவியல் நீதி மன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படவேண்டும்? பன்னாட்டு நீதி என்பது தண்ணீருக்கு வேறு மசகு எண்ணெய்க்கு வேறு.

பன்னாட்டு நீதி கடாஃபிக்கு வேறு ராஜபக்சேக்களுக்கு வேறு
லிபியவில் போர்க் குற்றம் புரிந்தமைக்காக மும்மர் கடாஃபியையும் அவரது மகன் சயிஃப் அல் இஸ்லாம் கடாஃபியையும் கைது செய்யும் பிடியாணையை பன்னாட்டு நீதி மன்று(International Criminal Court) 27-06-2011இலன்று பிறப்பித்தது. பன்னாட்டு நீதிமன்ற நீதியாளர் Sanji Mmasenono Monageng அவர்கள் கடாஃபியைக் கைது செய்வதற்குப் போதிய ஆதாரங்கள் உள்ளது என்றார். லிபியாவும் இலங்கையைப் போலவே ரோம் உடன்படிக்கையில் கையொப்பமிடவில்லை. இருந்தும் கடாஃபி மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 4000 அப்பாவிகளைக் கொன்றவர் எனக் கருதப்படும் கடாஃபிமீது ஆறு மாதங்களுக்குள் குற்றம் சுமத்தப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. 70,000இற்கு மேற்பட்ட அப்பாவிகளைக் கொன்றவர், மருத்துவ மனைகள் மீது குண்டு வீசியவர், பல இலட்சம் மக்களுக்கு உணவு மருத்துவ வசதி கிடைக்காமல் தடுத்தவர் எனக் கருதப்படும் மஹிந்த ராஜபக்ச தலை நிமிர்ந்து நிற்கிறார். மூன்று ஆண்டுகளாகியும் அவர் மீது நடவடிக்கைகளை பன்னாட்டு சமூகம் ஏன் எடுக்கவில்லை?

பாஹ்ரெய்னைப் பாருங்கள் தமிழர்களே.
அரபு வசந்தத்தை ஒட்டி 17-02-2011இல் பாஹ்ரெய்னில் மக்கள் புரட்சி ஆரம்பித்தது.  அங்கும் மக்களுக்கு எதிரான அடக்கு முறையை இரும்புக்கரங்கள் கொண்டு மன்னர் ஹமாட் கட்டவிழ்த்து விட்டார். அங்கு படைத்துறைச் சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது கடும் தாக்குதல் நடாத்தப்பட்டது. அரபு நாட்டில் அமெரிக்காவின் நட்பு நாடான சவுதி அரேபியாவின் படைகள் பஹ்ரெய்னுக்கு அனுப்பப்பட்டு கிளர்ச்சிக்காரர்கள் அடக்கப்படுகின்றனர். பஹ்ரெய்னில் நடக்கும் மனித உரிமை மீறல்களைப் பற்றி ஐக்கிய அமெரிக்காவோ மேற்கு ஐரோப்பிய நாடுகளோ கவலைப்படுவதில்லை. இதற்கான காரணம் பாஹ்ரெய்னில் அமெரிக்கக் கடற்படைத் தளம் இருக்கிறது. அது அமெரிக்காவின் மத்திய கிழக்கின் ஆதிக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அமெரிக்காவையும்  மேற்கு ஐரோப்பிய நாடுகளையும் பொறுத்தவரை மனித உரிமைப் பிரச்சனை என்பது ஒரு துருப்புச் சீட்டு. அதை அவை தமக்குத் தேவையான இடங்களில் மட்டுமே பயன் படுத்தும். இலங்கை அரசிற்கு எதிராக ஐநா மனித உரிமைக்கழகத்தில் கொண்டுவரப்பட்ட மற்றும் கொண்டு வரப்படவிருக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச் சாட்டுகள் யாவற்றிக்கும் இரு நோக்கங்கள் மட்டுமே! ஒன்றில் இலங்கையின் ஆட்சியாளர்கள் தமது சீனாவிற்குச் சாதகமான நிலைப்பாட்டை மேற்கு நாடுகளுக்குச் சாதகமாக மாற்ற வேண்டும் அல்லது அங்கு ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்படும். இதில் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது அவர்கள் நிகழ்ச்சி நிரலில் இல்லை.

Wednesday, 4 April 2012

கடாஃபி கணக்கற்ற பெண்களைக் கற்பழித்தாராம்

கடாஃபியின் கன்னி(?) காவலாளிகள்
 மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் அரங்கேற்றப்பட்ட புரட்சியில் கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் அதிபர் கேணல் மும்மர் கடாஃபி பதவியில் இருந்த போஒது பல பெண்களைக் கற்பழித்தமைக்கான ஆதாரம் இருப்பதாக ஜேர்மனிய ஊடகம் ஒன்று கூறுகிறது. இது தொடர்பான ஒரு சூடான ஆவணப்படத்தை அந்த தொலைக்காட்சி ஊடகம் தயாரித்துள்ளது. கடாஃபி பதவியில் இருந்த போது அவரைச் சந்திக்கப் பல பெண்கள் ஆவலாய் இருந்தனராம். ஆனால் அவர்கள் கடாஃபியைச் சந்தித்த போது அவர்கள் கற்பழிக்கப்பட்டனராம். ஆண்டோனியோ ரடோஸ் என்னும் பெண் ஊடகவியலாளர் இதை அம்பலப்படுத்துகிறார்.

கடாஃபியைச் சுற்றி எப்போதும் ஒரு பெண்கள் கூட்டம் மெய்பாதுகவலராக இருப்பர். அவர்கள் கன்னிக் காவலாளிகள் எனப்படுவர். அவர்களையும் கடாஃபி விட்டு வைத்ததில்லையாம். லிபிய மனோதத்துவவியலாளரான கலாநிதி சேர்கம் சேகேவா என்பவர் தனக்குத் தெரிய ஐந்து பெண் காவலாளிகள் அப்படிக் கற்பழிக்கப்பட்டனர் என்கிறார்.

கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சியின் போது கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த பெண்களைக் கற்பழிக்குமாறு கடாஃபி உத்தரவிட்டார் என பன்னாட்டு நீதிமன்ற வழக்குத் தொடுனர் தெரிவித்திருந்தார். இதற்காக கடாஃபியின் படையினருக்கு வயகாரா மாத்திரைகளும் ஆணுறைகளும் வழங்கப்பட்டிருந்தனவாம்.


ஆண்டோனியோ ரடோஸ் என்னும் பெண் ஊடகவியலாளர் கடாஃபியால் பாதிக்கப்பட்ட பெண்களைச் சந்தித்து தனது ஆவணப்படத்தில் பதிவு செய்துள்ளார்.

மும்மர் கடாஃபியைச் சந்திக்க வரும் வெளிநாட்டு வர்த்தகர்கள் அவரது பலவீனத்தை அறிந்து அவருக்கு அழகிகளின் "சேவைகளை" வழங்குவார்களாம்.

கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சியின் போது அவரது கன்னிக் காவலாளிகளுக்கு நடந்தவை:

எச்சரிக்கை படங்கள் கொடூரமானவை. இளகிய மனதினர் பார்க்க வேண்டாம்
>

>

>

>


Monday, 24 October 2011

கடாஃபி லிபிய மக்களுக்குச் செய்த நன்மைகள்.

விடுதலை வீரர்களின் நண்பன்
உலக எண்ணெய் வளத்திலேயே லிபியாவில் உள்ள எண்ணெய் வளம்தான் மிகத் தூய்மையானது. சதாம் ஹுசேயின் அரபு நாடுகள் தமது எண்ணெய் விலையை அமெரிக்க டொலர்களில் நிர்ணயம் செய்யாமல் யூரோ நாணயத்தில் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூறியதற்காக கொல்லப்பட்டார். மும்மர் கடாஃபி எண்ணெய விலையை தங்கத்தில் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூறியதற்காகக் கொல்லப்பட்டார். கடாஃபியை கொல்லாமல் உயிருடன் பிடித்து விசாரித்திருந்தால் அவர் பல ஐரோப்பிய அரசியல்வாதிகளுக்குக் கொடுத்த இலஞ்சங்கள் வெளி வந்திருக்கும். ஒரு மடிக்கணனி(Laptop) இலவசமாகக் கொடுத்து ஐந்து ஆண்டுகாலம் ஆட்சியில் அமர்ந்து கொள்கிறார்கள். காடாஃபியோ அள்ளி அள்ளிக் கொடுத்தார்.

புரட்சி வீரர்களின் நண்பன்.

மூன்றாம் உலக நாடுகளின் தலைவர்களின் நண்பன்
லிபியர்களுக்கு அவர் செய்த நன்மைகள்.

1. அனைவருக்கும் மின்சாரம் இலவசம்.
2. லிபிய வங்கிகள் வழங்கும் கடன்களுக்கு வட்டி அறவிடப்படுவதில்லை.
3. மக்களுக்கு வீடு என்பது அடிப்படை உரிமை. லிபிய நாட்டின் அனைத்து மக்களுக்கும் வீடு கிடைக்கும் வரை தனது தந்தைக்கு கடாஃபி வீடு கொடுக்கவில்லை. கடாஃபியின் தந்தை இறக்கும் வரை ஒரு கூடாரத்திலேயே வசித்தார்.
4. லிபியாவில் திருமணமான தம்பதிகளுக்கு அறுபதினாயிரம் டினார்கள் (50,000அமெரிக்க டொலர்கள்) இலவசமாக அவர்கள் வீடு வாங்கவும் வாழ்க்கையை ஆரம்பிக்கவும் வழங்கப்படும்.
5 அனைவருக்கும் இலவசக் கல்வி. கடாஃபி ஆட்சிக்கு வரமுன் லிபியாவின் படித்தவர்கள் 25%. இப்போது 83%
6. அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி.
7. லிபிய மக்கள் எவராவது விவசாயம் செய்ய விரும்பினால் அவர்களுக்கு இலவசக் காணி, வீடு, விவசாய உபகரணங்கள் வழங்கப்படும்.
8. லிபிய மக்களில் எவருக்காவது தேவையான கல்வியோ அல்லது மருத்துவ வசதியோ லிபியாவில் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் வெளி நாடு சென்று அவற்றைப் பெற அதற்குரிய செலவை லிபிய அரசு பொறுப்பேற்கும். அத்துடன் மாதமொன்றுக்கு அவர்களுக்கு அமெரிக்க டாலர்கள் 2300ஐ இலவசமாக வழங்கும்.
9 லிபிய மக்கள் எவராவது மகிழூர்தி(Car)வாங்க விரும்பினால் அரைவாசிச் செலவை லிபிய அரசு வழங்கும்.
10 லிபியாவில் பெட்ரல் விலை US $0.14. per litre.
11 லிபியாவிற்கு வெளிநாட்டுக் கடன் எதுவுமில்லை.அதன் வெளிநாட்டுச் சொத்து $150பில்லியன்கள்
12. பட்டதாரி ஒருவருக்கு வேலை கிடைக்கும் வரை சராசரி பட்டதாரிக்குரிய சம்பளத்தை லிபிய அரசு வழங்கும்.
13. லிபிய எண்ணெய் விற்பனை வருமானத்தின் ஒரு பகுதி நேரடியாக ஒவ்வொரு லிபிய மக்களினது வங்கிக்கணக்கில் வைப்பிலடப்படும்.
14. பிள்ளை பெறும் ஒரு தாய்க்கு அரசு US $5,000 வழங்கும்.
15 லிபியாவில் 40துண்டங்கள் அடங்கிய பாணின் விலை US $0.15
16. லிபிய மக்களில் 25% மானோர் பல்கலைக்கழகப் பட்டதாரிகள்.
17. உலகத்திலேயே பாரிய நீர்ப்பாசனத் திட்டம் - செயற்கை ஆறு லிபியாவில் மேற்கொள்ளபட்டது.
18. ஆபிரிக்காவிற்கான தொலை தொடர்புச் செய்மதியை ஒழுங்கு செய்ய கடாஃபி பணம் கொடுத்தார்.
19. ஆபிரிக்கக் கண்டத்திலேயே லிபியா மிகச் செல்வந்த நாடு.
20. ஆபிரிக்கக் கண்டத்திலேயே வாழ்கைத் தரம் மிக உயர்ந்தவர்கள் லிபியர்கள்.


கடாஃபிக்கு எதிரான கருத்துக்கள்
  • லிபியாவின் வெளிநாட்டுச் சொத்து $150பில்லியன்கள் ஆனால் கடாஃபியின் சொத்து $200 பில்லியன்கள். 
  • கடாஃபி சவுதி மன்னரிலும் பார்க்க மூன்று மடங்கு செல்வந்தர்.
  • கடாஃபி சிறப்பாக பொருளாதாரத்தை நிர்வகிக்கவில்லை.
லிபிய வருமானத்தின் 5% கடாஃபியைப் போய்ச் சேரும். கடாஃபி நாட்டின் கட்டமைப்புக்களை(infrastructure) சரியாக அபிவிருத்தி செய்யவில்லை.

அணிசேரா நாடுகளின் மாநாட்டிற்கு கொழும்பு வந்திருந்தபோது கடாஃபியின் படத்தில் கையெழுத்து வாங்கப் பல இலங்கை அதிகாரிகள் திரண்டனர்.
கடாஃபியை மேற்குலகினர் ஏன் வெறுத்தனர்.
  • கடாஃபியின் பெயரை எப்படி எழுதுவது என்பதில் மேற்குலக ஊடகங்களிடை பெரும் குழப்பம்.
  • ஆபிரிக்காவிற்கான தொலை தொடர்புச் செய்மதியை ஒழுங்கு செய்ய கடாஃபி பணம் கொடுத்தார். இதனால் மேற்கத்திய வர்த்தகர்களுக்கு பெரு நட்டம் ஏற்பட்டது.
  • கடாஃபி தனது நாட்டில் சீனாவின் முதலீட்டை அதிகரித்தார். பல அபிவிருத்தித் திட்டங்களில் சீனாவிற்கு அதிக வாய்ப்புக்கள் வழங்கினார். காடாஃபிக்கு எதிரான கிளர்ச்சி ஆரம்பித்தவுடன் லிபியாவில் இருந்து 30,000க்கு அதிகமான சீனர்கள் வெளியேறினர்.
  • கடாஃபி ஒரு ஆபிரிக்க நாணய நிதியத்தை உருவாக்க முயன்றார். இது மேற்குலக ஆதிக்கத்தில் உள்ள பன்னாட்டு நாணய நிதியத்திற்கு பெரும் சவாலாக அமையும்.

Saturday, 22 October 2011

கேவலப்படுத்தப்பட்ட கடாஃபி

 கடாபி சித்திரவதை செய்யப் படும் புதிய காணொளி வெளிவிடப்பட்டுள்ளது. அது மிகவும் கொடூரமாக உள்ளது அதை கீழே காணலாம்.

மும்மர் கடாஃபி ஆட்சியில் இருக்கும் போது கிளர்ச்சி செய்த மாணவர்களைப் பொது இடத்தில் வைத்துக்கொலை செய்து விட்டு அவர்களின் உடல்களை அந்த இடத்திலேயே பல நாட்களாக அழுகும் வரை கிடக்கச் செய்தார்.  மற்ற வீதிகளை மூடி வாகனங்களை அந்த அழுகும் உடல்கல் கிடக்கும் வீதிவழியாக போகச் செய்தார். தன்னை எதிர்ப்பவர்களுக்கு என்ன நடக்கும் என்பதப் பலருக்கும் உணர்த்த இந்த ஏற்பாடு. ஒரு புரட்சியாளராகவும் உலகெங்கும் உள்ளவிடுதலை இயக்கங்களுக்கு  உதவி செய்பவராகவும் நிறவெறிக்கு எதிரான தென் ஆபிரிக்க மக்களின் போராட்டத்திற்கு  பேருதவி செய்பவராகவும் கருதப்பட்ட கடாஃபி தனது 42 கால ஆட்சியின் இறுதிப் பகுதியில் ஒரு அடக்கு முறையாளராகவே செயற்பட்டார். அவர் மீது மக்களுக்கு இருந்த வெறுப்பை அவர் இறந்தபின் மக்கள் ஆர்பரித்து மகிழ்வதில் காண முடியும்.



கடாஃபியின் தங்கப் துப்பாக்கியால் கடாஃபி சுடப்பட்டார்.
மும்மர் கடாஃபி பிடிபட்ட பின் அவர் நீண்ட நேரம் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். இரத்தம் வழிய வழிய அவர் தாக்கப்பட்டுள்ளார். கடாஃபி வைத்திருந்த தங்கத் கைத்துப்பாக்கியல் அவர் சுடப்பட்டார். அவரை கொன்றபின்னரும் தாக்குதல் தொடர்ந்தது. அவரது இறந்த உடலை தெருவில் போட்டுக் கால்களால் உதைத்தும் உடைகளைக் கழற்றியும் கேவலப் படுத்தினர்.

கடாஃபி சித்திரவதை செய்யப் படும் புதிய காணொளி
குளோபல் போஸ்ற் இணையத்தளம் கடாஃபி சித்திரவதை செய்யப்படும் காணொளியை வெளிவிட்டுள்ளது. கடாஃபி நடத்தப்படும் விதம் பன்னாட்டுப் போர் விதிகளுக்கு முற்றிலும் முரணானது.


காணொளியில் அல்லாஹு அக்பர் என்று கூச்சலிடுபவர்கள் அல்லாவின் போதனைகளை மறந்தது ஏன்?
ஒரு அமெரிக்க ஊடகத்தில் வாசகர் தெரிவித்த கருத்து: Khadafy deserved to face justice for his actions. However, this seemed to be a tad barbaric. Civilized people do not dispense justice in that manner. Seeing these images plastered over the screen has to make the average person a little sick to the stomach

பழைய இறைச்சிக் கடையில் கடாஃபியின் சடலம்
பின் லாடனைக் கொன்றபின் அமெரிக்கர்கள் பன்னாட்டு சட்டங்களுக்கு ஏற்பவும் இசுலாமிய விதிகளுக்கு ஏற்பவும் இறுதி ஏற்பாடுகளைச் செய்தனர்.  சாதாம் ஹுசேயின் பிடிபட்ட பின்னர் அவர் மீது எந்த ஒரு வன்முறையும் பிரயோகிக்கப்படவில்லை. அவர் மருத்துவப் பரிசோதனை செய்யும் காணொளி வெளிவிடப்பட்ட போது அவரது உடலில் எந்த ஒரு கீறல் கூட இல்லை. கடாஃபியைக் கொன்றவர்கள் அவரது உடலத்தை ஒரு மருத்துவமனையின் குளிரூட்டிய அறையில் வைக்கவும் இல்லை. கேவலமாக ஒரு பழைய இறைச்சிக் கடையில் வைத்து அவரது உடலத்தை காட்சிப் பொருளாக்கியுள்ளனர். இசுலாமிய விதிகளுக்கு ஏற்ப 24 மணித்தியாலத்துள் அடக்கம் செய்யவுமில்லை. அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கும் திட்டமும் இல்லை.

 நீர்க் குழாய்க்கும் சாக்கடைக்கும் வித்தியாசம் உண்டு
கடாஃபி வாகனத் தொடரணியில் தப்பி ஓட முயற்ச்சித்த போது பிரித்தானிய விமானங்கள் அவற்றை அடையாளம் கண்டு அமெரிக்க ஆளில்லா விமானப் படைக்கு அதை அறிவித்தன. முதலில் அமெரிக்க ஆளில்லா விமானங்களும் பின்னர் பிரெஞ்சு விமானங்களும் குண்டுகளை வீசின. குண்டு வீச்சுக்களில் இருந்து தப்ப கடாஃபி கொங்கிரீட்டால் ஆன நீர்க் குழாய்குள் அவரது பாதுகாப்புப் படையினரால் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் மேற்கத்திய ஊடகங்கள் கடாஃபி சாக்கடைக்குள் ஒழிந்தார் என்று அவரை கேவல்பபடுத்த செய்திகளை வெளியிட்டன.

நீர்ப்பாசனத்திற்கு அமைக்கப்பட்ட குழாய். சாக்கடை அல்ல...
 மௌனமாகிப் போன கடாஃபியின் நண்பர்கள்
அடைகு முறையாளர்  மும்மர் கடாபிக்கு இலங்கை இந்தியா போன்ற நாட்டை ஆளும் கேவலமானவர்களின் நட்பு நிறைய உண்டு. அவரின் இறப்புத் தொடர்பாக இந்த நண்பர்கள் மௌனமாக இருக்கின்றனர். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகப் பேச்சாளர் ரூபேர்ட் கொல்வில் காடாஃபியின் கொலை தொடர்பாக விசாரணை தேவை என்று சொல்லியுள்ளார். பனனாட்டு மன்னிப்புச் சபை கடாஃபியை பிடித்தவர்கள் அவரை கொன்றிருந்தால் அது ஒரு போர்க்குற்றம் என்கின்றது.

லிபியாவின் புதிய அரசைச் சேர்ந்தவர்கள் கடாஃபியைக் கொன்றவர் யாரென்று தமக்குத் தெரியும் என்கின்றனர். அவர் ஒரு வயது குறைந்தவர் என்கின்றனர். அவர் ஒரு லிபியக் குடிமகன் என்ற வகையில் அவரைத் தாம் பாது காப்போம் என்கின்றனர்.  அவர் ஒரு லிபியக் கதாநாயகன் என்றும் சொல்கின்றனர். அவர் குறைந்த வயதினர் என்றபடியால் அவரைச் நீதி மன்றில் நிறுத்த முடியாது என்று சொல்கின்றனர். குறைந்த வயதினர் என்பது ஒரு நாடகமா?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...