Wednesday 2 June 2010

காதற் போர்க்களம்

 
 உன் கண்கள் செய்தன வலிந்த தாக்குதல்கள் 
உதட்டோரப் புன்னகை ஏவுகணைகளாகின 
ஏன் இந்தப் போர் முனைப்பு
ஏன் இந்த விழி வியூகம் 
நாணமெனும் முன்னரங்க காவலரண் 
முன்னகர்வால் தூளாகியது 
 ஆண்மை ஏற்றது அறைகூவலை 
என் பொறுமைக் கோட்டை தகர்ந்தது 
காம வறுமைக் கோட்டைத் தாண்டியது 
தொடங்கியது ஒரு போர் இங்கு 
உன் மெல்லிய உடலெங்கும் 
வெட்கத்தை தேடியழிக்கும் படையாகியன என் விரல்கள் 
அதிரடித் தாக்குதலின் முனைப்பிது 
 உதடும் நாவும் இணைந்து செய்யும் ஈரூடகத் தாக்குதல் 
மூக்கு முனையில் பெரும் நேரடி மோதல் ஆரம்பம் 
மார்பு வழியாக ஒரு மரபுப் போர் 
பல் சுவை தரும் பன்முனைத் தாக்குதல் 
புதிய பரிமாணத்தில் 
ஒர் ஆக்கிரமிப்பு போரியல் 
உத்திகளின் உச்சம் 
இடைச் சம வெளியெங்கும் 
வருடல்களால் வன்முறைச் சமர் 
இறுக அணைக்க ஒரு உத்தரவு 
கட்டளைப் பீடத்தில் இருந்து வந்தது
கால் ஆல் படை சுற்றி வளைக்கின்றன 
கைகள் செய்யும் முற்றுகைகள்
சாய்ந்த தலைமயகம் நிமிர்ந்தது 
சைகைகளில் செய்திப் பரிமாற்றம் 
 கட்டுமானங்கள் கைவசமாகின 
ஊடறுப்புத் தாக்குதல் உத்திகள் 
கரந்தடியால் நிறைவேறின
 இறுதித் தாக்குதல்கள் தொடங்கின 
 இருதிடல் இடை ஒரு பதுங்கு குழி 
என் முகம் செய்யும் தாக்குதல் வழி 
வழங்கற் பாதை வழிதிறக்கிறது 
ஆழ ஊடுருவும் அணி களமிறங்கிறது

5 comments:

VELU.G said...

சேதாரம் எவ்வளவுங்க

Anonymous said...

ஆளணி இழப்பில்லை...உருவாகலாம்..

Anonymous said...

காதல் போர்க்களம் அல்ல..
காமப் போர்க்களம்

தமிழ் மதுரம் said...

வேல் தர்மா.. சங்க இலக்கியங்கள் நவீன காதல் போரினை நவரச வடிவில் எழுதியுள்ளீர்கள். அருமை.

Anonymous said...

superb ...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...