Saturday, 21 March 2009
தமிழ்நாட்டுத் தமிழர்க்குப் பாடம் படிபிக்கும் ஆரியரின் நீண்டகாலத் திட்டம்.
இலங்கையில் தமிழன் படும் அவலம் யாவரும் அறிந்தது. இது சரித்திரத்தில் அழிக்க முடியாத இடம் பிடித்து விட்டது. இதன் பின்னணியில் ஆரியப் பேய்களின் நீண்டகாலத் திட்டம் உள்ளது.
கொல்லப்படும் தமிழ்நாட்டு மீனவர்கள்.
தமிழ்நாட்டு மீனவர்கள் சிங்களவர்களால் கொல்லப் படுவதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் ஆரிய அரசு மேற்கொள்வதில்லை. ஆரியன் ஆள்பவன் தமிழன் ஆளப்பட வேண்டியவன் என்ற திமிரான எண்ணம் இதன் பின் உள்ளது.
தமிழர் சம்மதமின்றித் தாரை வார்க்கப்பட்ட கச்ச தீவு
தமிழ்நாட்டுக்கு சொந்தமான கச்ச தீவை ஆரிய அரசு தமிழர் சம்மதமின்றி சிங்களவனுக்கு தாரை வார்த்தது. ஆரியன் ஆள்பவன் தமிழன் ஆளப்பட வேண்டியவன் என்ற திமிரான எண்ணம் இதன் பின் உள்ளது.
தண்ணி தராத இந்தியா
தமிழ்நாட்டு விவசாயிகள் தண்ணியின்றித் தற்கொலை செய்தபோது, தண்ணீர்ப் பங்கீட்டை உச்ச நீதி மன்றத் தீர்பின்படி நிறைவேற்றாமல் வேடிக்கை பாரத்தது ஆரிய அரசு. ஆரியன் ஆள்பவன் தமிழன் ஆளப்பட வேண்டியவன் என்ற திமிரான எண்ணம் இதன் பின் உள்ளது
இப்படிப்பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த நிலையை அதாவது தமது சுயநிர்ணய உரிமை இல்லா நிலையை தமிழ்நாட்டுத் தமிழர்கள் உணர்ந்து ஒரு சுயநிர்ணய உரிமைப் போரைத் தொடக்கும் போது அவர்களுக்கு ஈழத் தமிழர்கள் சுய நிர்ணய உரிமைப் போர் தொடங்கி பட்ட இன்னல்கள் முதலில் மனதில் தோன்றி அந்த எண்ணத்தை அடியோடு மறக்க வேண்டும் என்ற நீண்டகாலத் திட்டத்துடன் ஈழத்தமிழர்களுக்கு இந்த அடி அடிக்கிறார்கள் ஆரிய சிங்களக் கூட்டமைப்பினர்.
கொல்லப்படும் தமிழ்நாட்டு மீனவர்கள்.
தமிழ்நாட்டு மீனவர்கள் சிங்களவர்களால் கொல்லப் படுவதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் ஆரிய அரசு மேற்கொள்வதில்லை. ஆரியன் ஆள்பவன் தமிழன் ஆளப்பட வேண்டியவன் என்ற திமிரான எண்ணம் இதன் பின் உள்ளது.
தமிழர் சம்மதமின்றித் தாரை வார்க்கப்பட்ட கச்ச தீவு
தமிழ்நாட்டுக்கு சொந்தமான கச்ச தீவை ஆரிய அரசு தமிழர் சம்மதமின்றி சிங்களவனுக்கு தாரை வார்த்தது. ஆரியன் ஆள்பவன் தமிழன் ஆளப்பட வேண்டியவன் என்ற திமிரான எண்ணம் இதன் பின் உள்ளது.
தண்ணி தராத இந்தியா
தமிழ்நாட்டு விவசாயிகள் தண்ணியின்றித் தற்கொலை செய்தபோது, தண்ணீர்ப் பங்கீட்டை உச்ச நீதி மன்றத் தீர்பின்படி நிறைவேற்றாமல் வேடிக்கை பாரத்தது ஆரிய அரசு. ஆரியன் ஆள்பவன் தமிழன் ஆளப்பட வேண்டியவன் என்ற திமிரான எண்ணம் இதன் பின் உள்ளது
இப்படிப்பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த நிலையை அதாவது தமது சுயநிர்ணய உரிமை இல்லா நிலையை தமிழ்நாட்டுத் தமிழர்கள் உணர்ந்து ஒரு சுயநிர்ணய உரிமைப் போரைத் தொடக்கும் போது அவர்களுக்கு ஈழத் தமிழர்கள் சுய நிர்ணய உரிமைப் போர் தொடங்கி பட்ட இன்னல்கள் முதலில் மனதில் தோன்றி அந்த எண்ணத்தை அடியோடு மறக்க வேண்டும் என்ற நீண்டகாலத் திட்டத்துடன் ஈழத்தமிழர்களுக்கு இந்த அடி அடிக்கிறார்கள் ஆரிய சிங்களக் கூட்டமைப்பினர்.
Friday, 20 March 2009
இத்தாலிச்சனியாள் பக்சராஜன் டூயட்டு
சனியாள்
நான் நினைக்கும் கொலைகளெல்லாம்
நீ செய்ய வேண்டும் நீ செய்ய வேண்டும்
நாளொடும் பொழுதோடும்
தமிழினம் அழிய வேண்டும் - ஈழத்
தமிழினம் அழிய வேண்டும்
பக்சன்
நான் கேட்கும் ஆயுதங்கள்
நீ தரவேண்டும் நீ தரவேண்டும்
காசென்றும் பயிற்ச்சியென்றும்
அள்ளித் தர வேண்டும்
அள்ளித் தர வேண்டும்
சனியாள்
தேர்தலொன்று வருது
பயமாக இருக்கு
தலையிடியாய் இருக்கு – பெரும்
தலையிடியாய் இருக்கு
பக்சன்
எனக்கந்த கவலை
இப்போது இல்லை
இன்னும் இருக்கு காலம் - எனக்கு
இன்னும் இருக்கு காலம்
சனியாள்
தேர்தலில் நான் தோற்றுப் போனால்
எல்லாமே தலைகீழ் எல்லாமே தலைகீழ்
தேர்தலுக்கு முன் பிரபாவை பிடிடா
ஈழத் தமிழினத்தை வேரோடு முடிடா
பக்சன்
நீ போனால் எனக்கென்ன
தேர்தலில் கவிழ்ந்தால்தான் என்ன
சீனா எனக்கிருக்கு
பாக்கியும் இன்னவா.
கொலைகள் ஓய்வதில்லை
சிறையில் கொன்றனர் வகுப்பறையில் கொன்றனர்
வேலையில் கொன்றனர் நெடுஞ் சாலையில் கொன்றனர்
காலையில் கொன்றனர் அந்தி மாலையில் கொன்றனர்
கொன்றனர் தமிழனை பல்லாயிரம் தடவைகள் கொன்றனர்
கோயிலில் கொன்றனர் வைத்தியசாலையில் நோயினில் கொன்றனர்
பாயினில் கொன்றனர் இளம் சேயினில் கொன்றனர்
வாலிபத்தில் கொன்றனர் வாடும் வயோதிபத்தில் கொன்றனர்
கொன்றனர் தமிழனை பல்லாயிரம் தடவைகள் கொன்றனர்
நிலத்தினில் கொன்றனர் நடுக் கடல் நீரில் கொன்றனர்
விண்ணினில் கொன்றனர் கொடுந் தீயினில் கொன்றனர் - கன்னியை
கெடுத்துக் கொன்றனர் கழுத்தை நெரித்துக் கொன்றனர்
கொன்றனர் தமிழனை பல்லாயிரம் தடவைகள் கொன்றனர்
அமெரிக்க ஆலோசனையுடன் கொன்றனர் இந்திய ஆசியுடன் கொன்றனர்
பாக்கிஸ்த்தான் ஆயுதத்தால் கொன்றனர் சீனப் பணத்தால் கொன்றனர்
இஸ்ரேலிய உளவால் கொன்றனர் ஐரோப்பிய ஆதராவல் கொன்றனர்
கொன்றனர் தமிழனை பல்லாயிரம் தடவைகள் கொன்றனர்
Thursday, 19 March 2009
புதுக்கதை விடும் இலங்கை இராணுவம்.
இலங்கை இராணுவம் தனது ஒரு படையணியில் 400 முதல் 500 வரையிலான பேர்களைக் கொண்டது. இப்படையணிகளை 15 பேர்கள் மட்டும் கொண்ட விடுதலைப் புலிகள் இனக்கொலையில் இருந்து தமிழர்களைக் காப்பாற்றுவதற்காக போராடுகிறார்கள். இவர்களின் வீரம் செறிந்த தாக்குதலால் இனக்கொலையாளிகளுக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்துகின்றனர். இறக்கும் இராணுவத்தினரை அவர்களின் குடும்பத்தினருக்கு தெரியாமல் புதைத்துவிட்டு அவர்களின் இறப்புக்களை இலங்கை அரசு மூடி மறைப்பதாகச் சொல்லப் படுகிறது. இறப்புக்கள் தொடர்பான சரியான தகவல்கள் அதிபர் ராஜபக்சேக்கும் மறைக்கப்படுவதாக நம்பப்படுகிறது. அண்மையில் பக்சே களமுனையில் உள்ள இடை நிலை அதிகாரிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு இராணுவ இழப்புக்கள் தொடர்பாக விசாரித்தாராம். இவ்விழப்புக்களால் தமது வீரத்தின் மேல் சந்தேகம் வராமல் இருக்க இலங்கை இராணுவம் இப்போது ஒரு புதுக் கதையை கட்டிவிட்டுள்ளது. அதாவது விடுதலைப்புலிகள் தமக்குத் தெரியாது ஒரு புதுவகையான ஆயுதங்களைப் பாவிக்கிறார்களாம். அதனால்தான் தங்கள் தரப்பில் இழப்பு அதிகமாம்.
அவங்க எத்தனை பொய் சொன்னாலும் நம்புறீங்களே நீங்க ரெம்ப ரெம்ப நல்லவங்க!
சிறுமி கடத்தல் நாடகம் பாகம் இரண்டு
திருமலை பாலையூற்றைச்சேர்ந்த 6 வயதான வர்ஸா என்ற சிறுமி திருகோணமலை சென் மேரிஸ் பாடசாலையில் இருந்து கடத்தி செல்லப்பட்டார்.
சிறுமியின் குடும்பத்தினரிடம் கடத்தல் காரர்கள் கப்பமாக கேட்ட பணம் திரட்டுவதற்குள் சிறுமி பாலியல் வதை செய்யப் பட்டுக் கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக முதலில் கைது செய்யப்பட்டவர் தப்பி ஓடமுயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்ட்டார்.
இந்த நாடகத்தின் இரண்டாம் அங்கம் இப்போது நிறைவேறியுள்ளது. கைது தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டாவது சந்தேகநபர் சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்துள்ளார். இவரும் துரோகக் குழுவைச் சேர்ந்தவராம்.
சிறுமியின் குடும்பத்தினரிடம் கடத்தல் காரர்கள் கப்பமாக கேட்ட பணம் திரட்டுவதற்குள் சிறுமி பாலியல் வதை செய்யப் பட்டுக் கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக முதலில் கைது செய்யப்பட்டவர் தப்பி ஓடமுயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்ட்டார்.
இந்த நாடகத்தின் இரண்டாம் அங்கம் இப்போது நிறைவேறியுள்ளது. கைது தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டாவது சந்தேகநபர் சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்துள்ளார். இவரும் துரோகக் குழுவைச் சேர்ந்தவராம்.
ஐநா தடுமாறுகிறது! தயங்குகிறது! இரட்டை வேடம் போடுகிறது?
ஐநாவை வறுத்தெடுக்கும் Inner City Press
இலங்கைப் பிரச்சனை தொடர்பாக ஐக்கியநாடுகள் சபையினரிடம் பல இக்கட்டான எதிர்பாராத கேள்விகளைத் தொடுத்து Inner City Press ஐநாவின் பல விடயங்களை அம்பலப் படுத்தியுடள்ளது.
ஐநாவின் தடுமாற்றம்
Inner City Press பிலிப்பைன்ஸில் பத்திரிகையாளர்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளைக் கண்டிக்கிறீர்கள் ஆனால் இலங்கையில் நடக்கும் பத்திரிகையாளர் கொலை கைது தொடர்பாக எதுவும் செய்யவில்லை என்று Nicholas Burnett, Assistant Director-General for Education at UNESCO, அவர்களிடம் வினவியபோது பதில் அவரால் உடனடியாகக் கூறமுடியாமல் தடுமாறி பின்னர் பதிலளிப்பதாகக் கூறித்தப்பித்துக் கொண்டார்.
ஐநாவின் தயக்கம்
ஐநா இலங்கையின் தமிழ்மக்கள் கொலையின் எண்ணிக்கை தொடர்பாக முன்பர் கேட்டபோது தாம் பிரேதங்களை எண்ணுவதில்லை என்று பதிலளித்திருந்தது. ஆனால் ஐநாவின் பத்திரத்ததை வெளிப்படுத்திய Inner City Press ஐநாவிடம் எண்ணிக்கை இருந்தும் வெளியிடத் தயங்குவதை அம்பலப்படுத்தியது.
ஐநாவின் இரட்டைவேடம்
சர்வதேச நியமங்களுக்கு முரணான வகையில் இலங்கை அரசு இடைத்தங்கல் முகாம் என்ற போர்வையில் நடாத்தும் வதை முகாம்களுக்கு ஐநா நிதி உதவி வழங்குவதையும் Inner City Press அம்பலப்படுத்தியுள்ளது.
Wednesday, 18 March 2009
நிறைமாதக் கற்பிணி குண்டடிபட்டு வயிறு வெடித்து சிசுவோடு இறந்தாள்
இலங்கையில் நடக்குது இனக்கொலை
இந்தியா பணம் கொடுக்க பயிற்ச்சியளிக்க
சீனாவும் பாக்கியும் ஆயுதம் கொடுக்க
ஆதரவு கொடுத்தன பலநாடுகள்
பயங்கரவாத ஒழிப்பாம்
விரைவில் முடியுமாம்
அழிகின்றனர் அப்பாவிகள்
இறக்கின்றன சிசுக்கள்
நல்லமனம் படைத்த உலகம்
அப்பாவிகளைக் காக்க வேண்டியது
த்யாள குணம் கொண்ட சிங்களம்
அறிவித்த்து பாதுகாப்பு வலயமொன்று
அதிக மக்களைக் கொல்கிறது
பாதுகாப்பு வலயத்தில்
நிறைமாதக் கற்பிணியாய் ஒரு தாய்
குண்டடிபட்டு வயிறு வெடித்து
சிசுவோடு இறந்தாள்
பயங்கரவாத ஒழிப்புப்போரின் பயங்கரம்
காந்தீயத்தை விற்றவனும்
பெளத்தத்தை சிதைத்தவனும் கூட்டு.
ஐநா இலங்கையில் நடக்கும் இனக்கொலையை உன்னிப்பாக கவனிக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை உன்னிப்பாகக் கவனிப்பதாகவும் வன்னிப்பகுதியில் நடக்கும் மனித அவலத்தை சொந்தமாக கணீப்பீடு செய்வதாகவும் Inner City Press ஐநாவின் இரகசியத் தகவல்களை அறிந்து செய்தி வெளியிட்டுள்ளது. ஐநாவின் கணிப்பீட்டின் படி சனவரி 20ம் திகதியில்இருந்து மார்ச் 7ம் திகதிவரை வன்னியில் 2683 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், 7241 பொது மக்கள் காயப்பட்டுள்ளனர். அதேவேளை 150,000 இருந்து 190,000 வரையிலான மக்கள் தொகையினர் போர்முனையில் சிக்குண்டுள்ளதாகவும் தெரிவிககப்பட்டுள்ளது.
இலங்கை அரசுடன் முரண்படுவதை தவிர்க்கும் ஐநா
ஐநாவின் மேற்கூறிய கணிப்பீடுகள் இலங்கை அரசு தெரிவிக்கும் எண்ணிக்கையிலும் இரு மடங்காக இருப்பதால் இலங்கை அரசின் கண்டனத்தையும், ஐநா இல்ங்கையிலிருந்து வெளியேற்றப் படுவதையும் தவிர்க்கும் நோக்கத்துடன் ஐநா இத்தகவல்களை இரகசியமாக வைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
ஜோன் ஹொல்ம்ஸ் ஒரு பயங்கரவாதி
ஏற்கனவே ஐநாவின் ஜோன் ஹொல்ம்ஸ் அவர்களை இலக்கை அரசு பயங்கரவாதி என விமர்சித்திருந்தது. இலங்கை மனிதாபிமானப் பணியாளர்களுக்கு மிக ஆபத்தான நாடு என்ற உண்மையை அவர் வெளியிட்டதற்கு பதிலடி கொடுக்கு முகமாகவே இலங்கை இப்படித் தெரிவித்திருந்தது.
ஐநாவிற்கு இலங்கையில் மிரட்டல்
இலங்கைப் பேரினவாதிகள் அண்மையில் கொழும்பு ஐநா அலுவலகத்தை சுற்றிவளைக்கப் போவதா மிரட்டல் விடுத்திருந்ததும் இங்கு குறிப்பிட வேண்டும். அதேவேளை இலங்கை அரசு Inner City Press இலங்கை தொடர்பாக ஐநாவிடம் கேள்வி எழுப்புவதை தடை செய்யவேண்டும் என்றும் கேட்டிருட்ந்த்தது.
இலங்கை அரசுடன் முரண்படுவதை தவிர்க்கும் ஐநா
ஐநாவின் மேற்கூறிய கணிப்பீடுகள் இலங்கை அரசு தெரிவிக்கும் எண்ணிக்கையிலும் இரு மடங்காக இருப்பதால் இலங்கை அரசின் கண்டனத்தையும், ஐநா இல்ங்கையிலிருந்து வெளியேற்றப் படுவதையும் தவிர்க்கும் நோக்கத்துடன் ஐநா இத்தகவல்களை இரகசியமாக வைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
ஜோன் ஹொல்ம்ஸ் ஒரு பயங்கரவாதி
ஏற்கனவே ஐநாவின் ஜோன் ஹொல்ம்ஸ் அவர்களை இலக்கை அரசு பயங்கரவாதி என விமர்சித்திருந்தது. இலங்கை மனிதாபிமானப் பணியாளர்களுக்கு மிக ஆபத்தான நாடு என்ற உண்மையை அவர் வெளியிட்டதற்கு பதிலடி கொடுக்கு முகமாகவே இலங்கை இப்படித் தெரிவித்திருந்தது.
ஐநாவிற்கு இலங்கையில் மிரட்டல்
இலங்கைப் பேரினவாதிகள் அண்மையில் கொழும்பு ஐநா அலுவலகத்தை சுற்றிவளைக்கப் போவதா மிரட்டல் விடுத்திருந்ததும் இங்கு குறிப்பிட வேண்டும். அதேவேளை இலங்கை அரசு Inner City Press இலங்கை தொடர்பாக ஐநாவிடம் கேள்வி எழுப்புவதை தடை செய்யவேண்டும் என்றும் கேட்டிருட்ந்த்தது.
கிழக்கின் உதை-யமும் இந்தியப் பயிற்ச்சியும் - சிறுமி கடத்திக் கொலை.
கருணாவின் பயிற்ச்சி முகாமொன்றை தாக்கி அழித்த போது அங்கிருந்த இந்தியப்படையை சேர்ந்தவர் ஒருவரும் கொல்லப்பட்டார். அங்கு அவர்களுக்கு என்ன பயிற்ச்சி வழங்கப் பட்டது என்று இப்போது புரிந்துள்ளது. அக்குழு இப்போது இரண்டாகப் பிரிந்து பல அட்டூழயங்கள் புரிவதாகக் கூறப்படுகிறது
கிழக்கின் உதயமா? உதை-யமா?
விடுதலைப் புலிகள் கிழக்கிலிருந்து வெளியேறியதும் அது கிழக்கின் உதயமென்று சிங்களப் பேரினவாதிகள் ஆர்ப்பரித்தனர். அது இப்போது புரிந்துள்ளது.
கடந்த 11 ஆம் திகதி பாலையூற்றை சேர்ந்த 6 வயதான வர்ஸா என்ற சிறுமி திருகோணமலை சென் மேரிஸ் பாடசாலையில் இருந்து கடத்தி செல்லப்பட்டார்.
இவரை விடுவிக்க 3 கோடி ரூபா கப்பம் கோரப்பட்டு பின்னர் அது 10 இலட்சம் ரூபா வரை குறைக்கப்பட்டது சிறுமியின் குடும்பத்தினர் பணம்திரட்டுவதற்குள் சிறுமி பாலியல் வதை செய்யப் பட்டுக் கொல்லப்பட்டார். இச்சிறுமியின் கொலை தொடர்பான வைத்திய பரிசோதனையின் போது வர்ஷா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நித்தியபுரத்தைச் சேர்ந்த ஒப்ரின் மேர்வின் ரினோசன் ( வயது 26 ) என்ற நபர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு வைத்திய பரிசோதனைக்காக பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட வேளை பொலிஸ் அதிகாரியொருவரின் கழுத்தை நெரித்து தப்பியோட முயன்ற வேளை அப் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் உயிரொடு இருந்திருந்தால் நீதி விசாரணயின் போது மேலும் பல உண்மைகள் வெளியாகி இருந்திருக்கும். இவரது மரணம் திட்டமிட்டு நடாத்தப்பட்ட நாடகமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Tuesday, 17 March 2009
தமிழினத்தை கருவோடறுக்கும் போரிது
கருவறுக்கும் போரிது - தமிழினத்தை
கருவோடறுக்கும் போரிது
கருவிலும் கயப்படுத்தும் கயவர் கூட்டம்
கயவர்க்கு கரம் தரும் இத்தாலிச் சனியாள் கொட்டம்.
சரணடைந்த தாயின் கருவைக் கலைக்கும்
உடன் பிறந்த சேயின் கழுத்தை நெரிக்கும்
ஆரிய சிங்களக் கூட்டமைப்பின் முகமிது
இனக்கொலைச் சிங்களத்தின் அகமிது
போர்முனையில் பௌத்தத்தின் முடிவிது
ஆயுதமுனையில் மானிடத்தின் அழிவிது
ஆரியப் பிணம்தின்னி நாய்கள் ஆறாயிரம்
ஈழதில் பின்கதவால் வந்து கண்டதிது.
ஊழ்வினை வந்து ஒருநாள் வாட்டுமுமை
ஈழம் மலர்ந்து வெற்றியீட்டுங்கால்.
காதலிப்பதை நிறுத்திப்பார்
காதலிப்பதை நிறுத்திப்பார்
உன்னை மறக்க மாட்டாய்
உலகையும் மறக்க மாட்டாய்
ராத்திரிகள் நிம்மதியாகும்
நித்திரை தானாய் வரும்
கண்ட கவிதைகள் எழுத மாட்டாய் -
உன் தலை எழுத்து தானாக சீராகும்
கடிதங்கள் எழுதிக் காகிதங்கள் கிழியாது
தபால் செலவுக்கு அழத் தேவையில்லை
கண்ணாடி முன் காலம் வீணாகாது
கண்கள் தெளிவாகும் எண்ணம் சீராகும்
காதலிப்பதை நிறுத்திப்பார்
படுக்கை ஒழுங்காயிருக்கும்
தலையணை சீரழியாது
பற்பசை வீணாகாது
சீப்பு பிய்யாது
ஒழுங்காக சாப்பிடுவாய்
தொண்டை நோகாது
வயிறு வலிக்காது
குடல் பிரளாது
இதயம் ஒழுங்காயத் துடிக்கும்
நாடித் துடிப்பு நன்றாயிருக்கம்
படிப்பு ஒழுங்காயப் போகும்
பரீட்சையெல்லாம் சித்தியாகும்
காதலிப்பதை நிறுத்திப்பார்.
Monday, 16 March 2009
இந்தியப் பேரினவாதத்திற்கு எதிராகப் போராடும் உலகத் தமிழர்கள்
ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயப் போராட்டம் இப்போது சர்வதேச அரங்கிற்கு வந்துள்ளது. உலகெங்கும் வாழும் தமிழர்களின் நீண்டகாலப் போராட்டத்தின் பயனாகவே சர்வதேச அரங்கத்திற்கு இது வந்துள்ளது. கொட்டும் மழையிலும் குளிரிலும் தமிழ்நாடு முதல் ரொறன்டோ வரை பல்லாயிரக் கணக்கான மக்களின் பலகாலப் போராட்டத்தால் ஐக்கிய நாடுகள் சபைவரை ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயப் போராட்டம் கொண்டு செல்லப் பட்டுள்ளது. சர்வதேச அரசியலை அறிந்தவர் பலரும் இப்போதுஈழத்தமிழரின் பிரச்சனையை அறிவர்.
மெக்சிக்கோவின் ஈழத் தமிழர் இன்னல்களை ஐநாவில் விவாதிக்க எடுத்த முயற்சி ரஷ்யாவின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. ரஷ்யாவின் எதிர்ப்பின் பின்னணியில் இந்தியாவே இருந்தது.
சிங்கள-தமிழ் மோதலை வளர்த்த இந்தியா
1977 இற்குப் பின் இலங்கை அமெரிக்க சார்பானதாக மாறியபோது தமிழ்க்குழுக்கழுக்கு ஆயுதங்களும் பயிற்ச்சிகளும் வழங்கி சிங்கள-தமிழ் மோதலை வளர்த்த இந்தியா இன்று தமிழர்களைக் கொன்றொழிக்க சிங்களவர்களுக்கு பல விதத்திலும் உதவுவது மட்டுமல்ல சர்வதேச அரங்கிலும் பல சதி வேலைகளிலும் ஈடுபட்டு வருவதாக தமிழர்கள் நம்புகின்றனர். தனது பிராந்திய நலனைப் பாதுகாப்பதற்கு தமிழர்கள் முதுகில் இந்தியா சவாரி செய்தது. இதனால் இன்று உலகத் தமிழர் சர்வதேச அரங்கில் இந்தியாவை எதிர்ப்பதில் பலத்த சிரமத்தை எதிர் நோக்குகின்றனர்.
சிவசங்கர மேனன் – ஹிலரி கிளின்டன் சந்திப்பு
ஹிலரி கிளின்டன் அமெரிக்காவில் பதவியேற்றதைத் தொடர்ந்து தமிழர் தரப்பில் பலத்த நம்பிக்கை உருவானது. அண்மையில் சிவசங்கர மேனன் – ஹிலரி கிளின்டன் சந்திப்பு இந்த நம்பிக்கையை தகர்த்தெறிவதாகவே அமைந்திருந்தது.
ஆக மொத்தத்தில் உலகத் தமிழர் ஈழப் பிரச்சினையில் இந்தியப் பேரினவாதத்தின் பலத்த சவாலை எதிர் கொள்கின்றனர்.
Sunday, 15 March 2009
பிரபாவின் மகள் தமிழ்நாட்டிற்கு தப்பியோடிய அகதிகளுக்குள் அடங்கியிருந்தாராம்?
மதிவதனியின் முக அமைப்புடன் ஒரு பெண்
சென்ற மாதம் 24-ம் திகதி இலங்கை கடற்படையினரால் இடைமறிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்குத் தப்பியோடிய அகதிகள் படகொன்றில் பிரபாகரனின் மனைவி மதிவதனியின் முக அமைப்புக் கொண்ட ஒரு பெண்ணும் இருந்ததாகவும் இவர் பிரபாகரனின் மகள் துவாரகா இருக்கலாம் என்று செய்திகள் வெளிவந்துள்ளது.
பிரபா மகள் துவாரகா
மூத்த கடற்படை அதிகாரி படகில் இருந்த ஒரு பெண் மதிவதனியின் முக அமைப்பைக் கொண்டிருப்பதாக கருதியபடியால் அவரைத் தீவிர விசாரணக்குட்படுத்தியதாகவும் அப் பெண் தமக்கும் பிரபா குடும்பத்திற்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என்று கூறியதாகவும் தமிழர் தேசியப் போராட்டத்திற்கு எதிராக பொய்பிரசாரங்களைக் கட்டவிழ்த்துவிடும் சக்திகள் ஒரு செய்தியைக் கசிய விட்டுள்ளது.
பிரபா மகள் துவாரகா அயர்லாந்திலாம்!
பிரபா மகள் துவாரகா அயர்லாந்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளார் என்றும் அதே பிரச்சார இயந்திரம் செய்தி கசிய விட்டுள்ளது. பிரபா தப்பி வெளிநாடு சென்றார், சூசை கொல்லப்பட்டார், பொட்டு சரணடைந்தார் போன்ற செய்திகளை வெளியிட்ட இத்தீய சக்திகள் அண்மையில் இளம்பருதி தப்பி ஓடுகையில் கொல்லப்பட்டார் என்றும் செய்தி வெளியிட்டிருந்தது.
என்ன பொய் சொல்வது என்று அறை வாடகைக்கு எடுத்து இருந்து யோசிப்பார்களோ? ( றுாம் போட்டு யோசிப்பாங்களோ?)
Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...