Saturday, 25 August 2012

சீபா சீபா என்னும் இந்தியாவும் சீ போ சீ போ என்னும் இலங்கையும்.

வேட்டியணிந்த ஹிட்லரின் போருக்கு சேலையணிந்த முசோலினி உதவினாரா அல்லது சேலையணிந்த முசோலினியின் போரை வேட்டியணிந்த ஹிடலர் முடித்தாரா என்ற கேள்வி ஒரு பட்டி மன்ற விவாதத்துக்குரியது.

கூலி கிடைக்காத சில்லறைக் கைக்கூலி.
கூலியை எதிர்பார்த்து வேலை செய்தவனுக்கு உரிய கூலி கொடுக்கப்பட வேண்டும். இலங்கை இன ஒழிப்புப் போரில் இலங்கைக்கு உதவி செய்த நாடுகள் இருபதுக்கு மேல். இதில் முக்கிய பங்கு வகித்தவை இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய மூன்றும். இதில் சீனா படைக்கலன்களையும் பணத்தையும் இலங்கைக்கு வாரி வழங்கியது. போரின் போது இலங்கைப் படையினருக்கு ஏற்பட்ட ஆளணி இழப்புக்களை நிவர்தி செய்ய தனது இருபதினாயிரத்திற்கு மேற்பட்ட படையினரை சீனா பின்கதவால் இலங்கைக்கு அனுப்பவில்லை. சீனா விடுதலைப் புலிகளின் கப்பல்களை செய்மதி மூலம் கண்டறியவோ அல்லது தாக்கியழிக்கவோ இல்லை. சீனா தமிழர்களுக்கு எதிராக நேரடியாக ஒரு நாளும் செயற்பட்டதுமில்லை. தமிழர்கள் என்பவர்கள் சூத்திரர்கள் அவர்கள் ஒரு நாளும் ஆளக்கூடாது என்பது சீனக் கொள்கை வகுப்பாளர்களின் நிலைப்பாடுமல்ல. ஆனால் இவ்வளவும் செய்த சிங்களவர்களின் சில்லறைக் கைக்கூலிக்கு உரிய கூலி இன்னும் கிடைக்க வில்லை.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை இந்தியாவால் தடுக்க முடியாது.
2012-ம் ஆண்டு மார்ச் மாத இறுதிப் பகுதியில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் பிரகாஷ் மேனன் சென்னைப் பல்கலைக் கழகத்தில் "இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கான சவால்கள்" என்னும் தலைப்பில் உரையாற்றும் போது இலங்கை போருக்குப் பின்னர் போதிய அளவு செய்யவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில் அவர்கள் நீண்டகால அடிப்படையில் சமாதானத்தை இழப்பார்கள் என்றார். இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழகத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தமைக்கான காரணத்தை விளக்குகையில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் பிரகாஷ் மேனன் இந்தியா கூட்டணி அரசின் அரசியல் காரணங்களுக்காக அல்லாமல் இந்தியாவின் வாக்கு ஒரு பெறுமதி அடிப்படையிலான கணக்கிடப்பட்டு அளிக்கப்பட்ட வாக்கு என்றார்.
இலங்கையில் இந்தியாவை சீனா மிஞ்சி விட்டதா என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் பிரகாஷ் மேனன் "அதற்குக் காலம்தான் பதில் கூறும்" என்றார். இலங்கை விவகாரத்தை இந்தியா கையாளும் விதம் அமெரிக்காவிற்குத் திருப்தி அளிக்காததால் அமெரிக்கா தனது கையில் இலங்கை விவகாரத்தைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு இந்தியா இலங்கையில் சீன ஆதிக்கத்தை ஒழிக்கும் தன் தந்திரோபாய நடவைக்கைகளுக்கு உதவ வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியாவை வாக்களிக்க நிர்பந்தித்தது. ஆனாலும் இலங்கையின் சில்லறைக் கூலிகள் போற் செயற்படும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் தீர்மானத்தின் தீவிரத்தைக் குறைத்தனர்.
pictur courtesey HCI Colombo
 இந்தியாவின் அயோக்கியத் தனம்
இந்தியாவின் நேர்மையற்ற ஆட்சியாளர்களும் குடும்ப ஆதிக்கமும் சாதி வெறிபிடித்த தென்மண்டலப் பார்ப்பனர்களுமே இலங்கையில் இந்தியா விட்ட தவறுகளுக்கும் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டமைக்கும் காரணம். அவர்கள் இந்தியா உதவாவிட்டால் சீனா இலங்கைக்கு உதவும் என்ற பொய்யையும் இலங்கையில் தமிழர்கள் உரிமை பெற்றால் அது இந்தியாவில் பிரிவினைக்கு வழிவகுக்கும் என்ற பொய்யையும் சொல்லி சிங்களவர்களுக்கு உதவி செய்து தமிழர்களின் போராட்டத்தை வலுவிழக்கச் செய்தனர்.
Courtesey: HCI India

ச்

சீபா வேண்டாம் சீ போ என்ற பின்னர் இந்தியா மாறுமா?
இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கை சிபா வேண்டாம் என இலங்கை சொன்ன பின்னர் மாறுமா? 2008இல் போர் உச்சக் கட்டத்தில் இருக்கும் போது போர் முடிந்த பின்னர் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவோம் எனக் கூறிய இந்தியாவை வைத்துக் காரியத்தைச் சாதித்த பின்னர் ஏமாற்றியது இந்தியாவை ஆத்திரம் கொள்ளச் செய்யுமா?  இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் இலங்கையிடமிருந்து பெற்றுக் கொள்ளும் தடசணை இனியும் வேலை செய்யுமா? இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரில் சிங்களவர்களுக்கு நாம் உதவாவிடில் சினா உதவிவிடும் என்னும் பொய்ப்பூச்சாண்டி காட்டி தமிழர்களைக் கொன்று குவிக்க இவர்கள் உதவினார்கள். இப்போது இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கடுமையாக பன்னாட்டு அரங்கில் செயற்பட்டால் அது சீனா பக்கம் சார்ந்து விடும் என்று இன்னொரு பொய்ப்பூச்சாண்டியைக் காட்டி அமெரிக்காவின் கடுமையான நிலைப்பாட்டைக் குறைக்கிறார்கள். போதாக் குறைக்கு ஒரு தமிழின விரோதியான நிருபாமா ராவ் வாஷிங்கடனில் இந்தியத் தூதுவராக இருக்கிறார். இலங்கையின் சில்லறைக் கைக்கூலிகள் போல் செயற்படுபவர்கள் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களாக இருக்கும் வரை இலங்கை தொடர்பாக இந்தியாவின் கொள்கை மாறாது. எல்லாம் தட்சணை செய்கின்ற வேலை.

Friday, 24 August 2012

வாகனங்கள் தமக்குள் உரையாடிக் கொள்ளும் - அமெரிக்காவில் சோதனை

வாகனங்கள் தமக்குள் V2V-Technology என்னும் புதிய தொழில் நுட்பத்தைப் பாவித்து தமக்குள் தகவல் பரிமாற்றம் செய்வது அமெரிக்கவின் மிச்சிகன் மாநிலத்தில் ஆன் ஆபர் என்னும் நகரில் பரீட்சத்தார்திக்கப்படுகிறது. இப்பரீட்சார்த்த ஆய்வில் மூவாயிரம் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஒரு வாகனம் மற்றைய வாகனத்துடன் தங்களது வேகம் தெரு நிலைமை போன்றவை பற்றி தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும். அத்துடன் Wi-fi தொழில் நுட்பத்தைப் பாவித்து சமிக்ஞை விளக்குகளின் மா|ற்றம் வாகன நெருக்கடி போன்ற தெருத் தகவல்களையும் வாகனங்கள் தெருக்கட்டுப்பாட்டகத்திடத்திடமிருந்து பெற்றுக் கொள்ளும்.

2015இல் இருந்து உலகெங்கும் வாகனங்களில் V2V-Technology அறிமுஜப்படுத்தப்படும். இந்த தொழில் நுட்பத்தின் மூலம் வாகனங்கள் தகவல் பரிமாற்றம் செய்து விபத்துக்களையும் தவிர்த்துக் கொள்ளும்.
நம்ம ஊரில் இந்த தொழில் நுட்பம் பாவிப்பதானால் வாகனங்களின் மென்பொருளில் சாவுக் கிராக்கி, வீட்டை சொல்லிபுட்டு வந்தியா, பேமானி, ஓரம் போடா போன்ற வாசகங்கள் ஊள்ள்ளடக்கப்பட வேண்டும்.,,,,,,,,,,,,,,,,,

பின்வரும் எச்சரிக்கைக்களை வாகனங்கள் தங்களுக்குள்ளும் வாகன ஓட்டிகளுடனும் பரிமாறிக் கொள்ளும்:
    Blind spot warning — warning drivers when they try to change lanes if there is a car in the blind spot
    Forward collision warning — alerting and then warns drivers if they fail to brake when a vehicle ahead of them is stopped or traveling too slowly
    Electronic emergency brake lights — notifying drivers when a hard to see vehicle ahead of them is braking hard
    Intersection movement assist — telling drivers when it is not safe to enter an intersection, for example, when something is blocking a driver’s view of opposing traffic
    Do not pass warning — warning drivers if they attempt to change lanes and pass when there is a vehicle in the opposing lane within the passing zone
    Control loss warning — advising drivers when they are about to lose control of the vehicle 
இதனால் பல்லாயிரக்கணக்கான வாகன மோதல்களைத் தவிர்த்து பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புக்களைத் தவிர்க்கலாம என ஐக்கிய அமெரிக்க அரசின் வீதிப் போக்குவரத்துக்கான முகவரகம் தனது ஆழ்ந்த ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளது.





 கவிதை: காற்றின் திசை மாறும்

காற்றின் திசை மாறும்
கத்துங்கடல் சுற்றும் நிலம்
எம் தேசமாகும்
கடலோடு வானும்
நிலவோடு கதிரும்
எம் வசமாகும்

காற்றின் திசை மாறும்
மழலைக் கொலை வினை
கனலை மூட்டி கொழுத்தும்
கன்னியழி செய்த பழி
ஊழித்தீயாகும்

காற்றின் திசை மாறும்
நேற்றைய வீழ்ச்சி
நாளைய எழுச்சியாகும்
கன்னித்தமிழ் ஈழமாளும்


காற்றின் திசை மாறும்
வஞ்சகர் பகை நெஞ்சகம்
இங்கு பஞ்சென மாறும்
நேசக்கரம் பாசத்துடன் நீளும்



காற்றின் திசை மாறும்
சேலயணி முசோலினி
நாட்டை விட்டோடும்
நாளும் எமை நாடிவரும்

காற்றின் திசை மாறும்

வெள்ளை வேட்டியணி
ஹிட்லர் கூண்டிலேறும்
காலமிங்கு கனியும்

காற்றின் திசை மாறும்
எனக் காத்திருக்க வேண்டாம்
காரியத்தில் நாமிறக்கி
காற்றின் திசை மாற்றிடுவோம் வாரீர் வாரீர்
விடுதலைக் கள விதைகளை
முளயாகிடுவோம் வாரீர் வாரீர்

Thursday, 23 August 2012

இந்தியாவில் தொடரும் மெகா ஊழல்கள்

ஊழல் பெருஞ்சாளிகளின் குகையாகிவிட்டது இந்திய அரசியல். ஊழல் புரிவதில் இந்தியாவில் அரசியல்வாதிகள் சாதனைமேல் சாதனை புரிந்து வருகின்றனர். எந்த ஒரு வல்லரசு நாட்டின் வரலாற்றிலும் இந்த அளவு ஊழல்கள் நடந்திருக்கவில்லை. சேலை அணிந்த முசோலினியின் கையில் நாடு இருந்தால் வேறு என்ன நடக்கும்?
ஊழல் நாடுகளில் இந்தியா

மாமூலாகிவிட்ட மாமூல்
இந்தியாவில் எதுவும் நடக்க வேண்டுமென்றால் கையூட்டு(மாமூல்) கொடுத்தால்தான் நடக்கும். இது இந்திய வாழ்க்கை முறையின் ஒரு தவிர்க்க முடியாத அம்சமாகிவிட்டது. Transparency International தயாரித்த உலக ஊழல் நாடுகள் பட்டியலில் ஊழலற்ற நாடாக நியூசிலாந்து முதலாம் இடத்தில் இருக்கிறது. மற்ற ஊழலற்ற நாடுகளான டென்மார்க், ஃபின்லாந்து, சுவீடன், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் முறையே இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் இடங்களில் இருக்கின்றன. இந்தியத் தாலி அறுத்த இத்தாலி மாஃபியாவின் கையில் நாடு இருந்தால் வேறு என்ன நடக்கும்!

வளரும் ஊழல்கள்
2010-ம் ஆண்டு 2G அலைக்கற்றை ஊழல், பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி ஆகியன உலகின் மிகப்பெரிய ஊழல்களாக அறிவிக்கப்பட்டன. 2011இல்
Uttar Pradesh NRHM scam -   INR10,000 crore      (US$1.81 billion)
ISRO's S-band scam  -           INR200,000 crore       (US$36.2 billion)
NTRO scam -                            INR800 crore        (US$144.8 million) ஆகியவை பெரும் ஊழல்கள். இது தவிரப் பல ஊழல்கள் 2010இல் நடந்தன. 2012இல் இதுவரை நடந்த ஊழல்கள்:
Andhra Pradesh land scam - ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,INR100,000 crore (US$18.1 billion)
Forex derivates scam - ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,INR32,000 crore (US$5.79 billion)
Service Tax and Central Excise Duty fraud - INR19,159 crore (US$3.47 billion)
Gujarat PSU financial irregularities - .................INR17,000 crore (US$3.08 billion)
Maharashtra stamp duty scam - ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,INR640 crore (US$115.84 million)
MHADA repair scam - .............................................INR100 crore (US$18.1 million)
Highway scam - ..........................................................INR70 crore (US$12.67 million)
Flying Club fraud - ...................................................INR190 crore (US$34.39 million)
Jammu and Kashmir Cricket Association scam .......INR50 crore (US$9.05 million)
Punjab paddy scam - .................................................INR18 crore (US$3.26 million)
Uttar Pradesh stamp duty scam - .......................INR1,200 crore (US$217.2 million)
Uttar Pradesh horticulture scam -............................. INR70 crore (US$12.67 million)
Uttar Pradesh palm tree plantation scam - ..............INR55 crore (US$9.96 million)
Uttar Pradesh seed scam -..........................................INR50 crore (US$9.05 million)
Patiala land scam - ...................................................INR250 crore (US$45.25 million)
Tax refund scam - ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,INR3 crore (US$543,000) million

நிலக்கரி ஊழல் - காங்கிரசு ஆட்சி இந்தியாவின் கரிகாலம்
2005-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை நிலக்கரி சுரங்க உரிமைகளை ஏலம் விடாமல் தனியார் நிறுவனங்களுக்கு இந்திய அரசு வழங்கியதில் ஒரு இலட்சத்து எண்பத்தாறாயிரம் கோடி ரூபாய்(Rs1,860,000,000,000) இழப்பு ஏற்பட்டிருப்பதாக அரச கணக்காய்வாளரும் கட்டுப்பாடாளாரும்(Controller & Auditor General) சமர்ப்பித்த அறிக்கை கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த ஊழலில் பிரதம மந்திரி மன்மோகன் சிங் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருப்பதாக இந்திய எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. 2005இலும் 2006இலும் இந்திய நிலகரித் துறை மன்மோகன் சிங்கின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. மன் மோகன் சிங் பதவி விலகும் வரை பாராளமன்றத்தை கூட விடாமல் தடுப்போம் என பிஜேபி எனப்படும் பாரதிய மக்கள் கட்சி கூறுகிறது. இதற்குப் பதில் கூறும் புரிந்த காங்கிரசுக் கட்சியின் அரசு நிலக்கரிச் சுரங்கங்களை ஏலம் போட்டு விற்றிருந்தால் இந்தியாவில் நிலக்கரி எரிபொருள் விலை அதிகரித்திருக்கும் என்பதால் நிலக்கரியைப் பாவித்து உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு (முக்கியமாக சீமெந்து)அவை விற்கப்பட்டன என்கின்றது. ஏலத்தின் மூலம் விற்பதை பிஜேபியின் ஆட்சியில் இருந்த மாநில அரசுகளும் எதிர்த்தன என்கிறது காங்கிரசு அரசு. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு குறுத்து மத்திய தலைமை கணக்குத் தணிக்கைக் குழு சமர்ப்பித்த அறிக்கை மீது விவாதிக்கத் தயார் என்று காங்கிரசு அரசு கூறியுள்ளது. 23-ம் திகதி இந்தியப் பாராளமன்றத்தின் இருஅவைகளும் எதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பங்களால் ஒத்தி வைக்கப்பட்டன. காங்கிரசு என்னும் கட்சி ஆட்சியில் இருக்கும் வரை இந்தியாவிற்கு விமோசனமில்லை. தமிழினக் கொலைக்கு துணைபோனவர்கள் இந்தியாவை ஆள்வது இந்தியாவின் கரிகாலமே!

Coalgate
இந்தியப் பாராளமன்றம் தொடர்ந்து மூன்று தடவைகள் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆளும் காங்கிரசு கட்சியின் தலைவி(தி) சோனியா காந்தி தனது கட்சிப் பாராளமன்ற உறுப்பினர்களுக்கு தற்காப்பை விடத் தாக்குதல் மேலானது என்று அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர் எந்தவிதமான "தாக்குதல்" நடாத்த தன் கட்சியினருக்கு உத்தரவிடுகிறார் என்று தெரியவில்லை. காந்தியின் பெயரைத் திருடியவர்கள் "இம்சையை" ஆதரிக்கிறார்கள்.கோபாலபுரத்தில் இருந்து ஒருவர் ஏன் எனது கட்சியினருக்கு நிலக்கரித் துறை மந்திரிப்பதவி எடுக்காம்ல் விட்டேன் என்று தலையில் அடித்துக் கொள்கிறார் போல் இருக்கிறது.

ஊழலை ஒழிக்கிறேன் பேர்வழி என்று வந்த அன்ன ஹசாரே கும்பல் பிரதம மந்திரியின் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் செய்யப் போகிறதாம். அவனவன் அரபு வசந்தம் அது இது என்று ஊழல் ஆட்சியாளர்களை விரட்டும் போது இந்திய இளைஞர்கள் சினிமா மற்றும் கிரிக்கெட் மோகத்தில் ஆழந்து கொண்டு யார் காலில் விழுந்து வேலை தேடுவது என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Wednesday, 22 August 2012

இலங்கையில் அமெரிகத் தலையீடு: அன்று முதல் இன்று வரை

 அணி சேரா நாடுகள்
1955இல் இந்தோனியத் தலைநகர் பாண்டூங்கில் நடந்த மாநாட்டில் அமெரிக்க அணியிலோ அல்லது சோவியத் ஒன்றிய அணியிலோ சேர விரும்பாத நாடுகள் (எனத் தம்மைக் கூறிக்கொள்ளும்) ஒரு அணியாகக் கூடி கூட்டுசேரா நாடுகள் அல்லது அணிசேரா நாடுகள் என்ற அமைப்பை உருவாக்கின. இந்த மாநாட்டுக்கு ஒரு ஆண்டு முன்னதாக இதில் இலங்கை சேர்வதை அமெரிக்கா தடுக்க முயன்றது. ஆனால் இந்தியப் பிரதமர் ஜவகர்லால நேரு இலங்கையை கூட்டுச் சேரா நாடுகளின் இணையும்படி நிர்ப்பந்தித்தார். இதைச் சாக்காக வைத்து அப்போதைய இலங்கைப் பிரதம மந்திரி சேர் ஜோன் கொத்தலாவலை இலங்கையின் மலையகத்தில் வாழும் தொழிலாளர்களில் பல இலட்சம் நாடுகடத்தப்பட்டனர். அப்போது அமெரிக்கா இலங்கையில் செய்த தலையீடு தமிழர்களுக்கு பாதகமாக முடிந்தது.

சோசலிச முகமூடியுடன் வந்த பண்டாரநாயக்க
12-04-1956இல் இலங்கையின் பிரதம மந்திரியாகப் பதவியேற்ற எஸ் டபிள்யூ ஆர் டி பண்டாரநாயக்க உள்ளூர் முதலாளிகளை வெளிநாட்டு முதலாளிகளிடமிருந்து பாதுகாக்க முற்பட்டார். அவரது எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு கொடுக்கும் முதலாளிகளின் நிறுவனங்களை அரசுடமையாக்கத் தொடங்கினார். பண்டாரநாயக்க ஒரு சோசலிச முகமூடியையும் அணிந்து கொண்டார். இவரது நடவடிக்கைகள் முதலாளித்துவத்திற்கு ஆபத்தானது என்பதை உணர்ந்த ஐக்கிய அமெரிக்கா இவரது ஆட்சியைக் கவிழ்க்க சதிதிட்டம் தீட்டியது. அப்போது அமெரிக்காவிற்கு வாய்ப்பான ஒரு நகர்வை பண்டாரநாயக்க  மேற்கொண்டார். அதுதான் இலங்கையின் ஆட்சி மொழியாக சிங்களத்தை கொண்டுவந்தது. இதற்கு எதிராக தமிழர்களைக் கிளர்ந்து எழச்செய்வது அமெரிக்கவிற்கு இலகுவாக இருந்தது. தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ் ஜே வி செல்வநாயகத்தை அப்போது இலங்கையின் சட்டத்திணைக்களத்தின் உயர்பதவியில் (Solicitor General) இருந்த எஸ் திருச்செல்வத்தின் மூலமாக ஐக்கிய அமெரிக்காவின் உளவுத்துறை பண்டாரநாயக்கவின் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டியது. இதனால் எஸ் திருச்செல்வத்தை பண்டாரநாயக்க கட்டாய விடுமுறையில் பதவியில் இருந்து விலக்கி வைத்தார். எஸ் திருச்செல்வம் எப்போது ஒரு அமெரிக்க உளவாளியாகவே செயற்பட்டார் என்று கருதப்பட்டது. செல்வநாயகத்தின் கிளர்ச்சியைத் தொடர்ந்து பண்டாரநாயக்கா செல்வநாயகத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்தார் அதன்படி வடக்குக் கிழக்கிற்கு ஒரு தன்னாட்சியுடன் ஒரு பிராந்திய சபை உருவாக்கப்பட இருந்தது. இப்போது ஐக்கிய அமெரிக்கா சிங்கள இனவாதிகளையும் பௌத்த பிக்குகளையும் பண்டாரநாயக்காவிற்கு எதிராக கிளர்ச்சி செய்ய வைத்தது. பண்டாரநாயக்க இலங்கையை இரண்டாக பிளவு படுத்துகிறார் என்ற பிரச்சாரத்துடன் ஜே ஆர் ஜயவர்த்தன கொழும்பில் இருந்து கண்டிக்கு ஒரு பாத யாத்திரையை மேற்கொண்டார். இலங்கையில் பெரும் இனக்கலவரம் மூண்டது. குழந்தைகள் கோவில் பூசாரிகள் கொதிதாரில் போட்டுக் கொல்லப்பட்டனர். பல தமிழ்ப்பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர். பல தமிழர்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. பண்டாரநாயக்க தான் செல்வநாயகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை தன் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் செய்த பௌத்த பிக்குக்களின் முன் கிழித்தெறிந்தார். பின்னர் சோமராம தேரர் என்னும் பௌத்த பிக்கு பண்டாரநாயக்கவை சுட்டுக் கொன்றார். அப்போது அமெரிக்காவின் தலையீடு தமிழர்களுக்கு அழிவைக் கொடுத்தது.

மாவட்ட சபை...... பேய்விட்ட கதை.....
1977இல் ஆட்சிக்கு வந்த ஜே ஆர் ஜயவர்த்தன ஒரு பெரும் இனக்கலவரத்துடன் தனது ஆட்சியைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தீவிரமடையத் தொடங்கியது. இதை தனக்குச் சாதகமாக பயன்படுத்த இந்தியா திட்டமிட்டது. அதை உணர்ந்த ஐக்கிய அமெரிக்கா தனது கையாளும் தந்தை செல்வநாயகத்தின் மகனுமாகிய பேராசிரியர் ஏ ஜே வில்சனை அமெரிக்கவில் இருந்து இலங்கைக்கு அனுப்பி தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் ஒரு உடன்பாடு ஏற்படுத்த முனைந்தது. அதன் ஒரு அம்சமாக எந்தவித அதிகாரமும் இல்லாத மாவட்ட சபை 1981இல்உருவாகியது. ஏ ஜே வில்சனின் ஆலோசனையுடன் உருவான மாவட்ட சபையை அதிகாரமற்றது என்று தமிழர்கள் ஏற்க மறுத்தனர். அமெரிக்கத் தூதுவர் தமிழ் அரசியல்வாதிகளைச் சந்தித்து அதை இப்போதைக்கு ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தினார். அப்போதைய தமிழர் தேசியக் கூட்டணியும் அதை ஏற்றுக் கொண்டது. மாவட்ட சபைத் தேர்தல் நட்ந்த போது ஒரு இனக்கலவரம் நடந்தது யாழ் நூலகம் எரிக்கப்பட்டது.  பின்னர் தமிழர்கள் மாவட்ட சபை ஒன்றுக்கும் உதவாதது என்பதை உணர்ந்து கொண்டனர். அதை ஏற்றுக் கொண்ட தமிழர் கூட்டணி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது. சிங்கள தமிழ் விரோதம் தீவிர மடைந்தது. அப்போது அமெரிக்கா இலங்கையில் செய்த தலையீடு இலங்கையில் சிங்கள தமிழ் குரோதத்தை மோசமாக்கியதுடன். தமிழர்களின் படைக்கலன்கள் ஏந்திய போராட்டத்தை தீவிரமடையச் செய்தது.

திருக்கோணமலையும் சிலாபமும்
இலங்கையின் பூகோள அமைப்பு இந்து மாகடலில் நீர்முழ்கிக்கப்பல்களுக்கு இடையலான அதிதாழ் அலைவரிசை ( ultra law wave) தொடர்பாடல்களுக்கான பரிவர்த்தனை நிலையம் அமைப்பதிற்கு உகந்தது. திருக்கோணமலை சிறந்த ஒரு கடற்படைத் தளத்திற்கு உகந்த ஒரு இடமாகும். திரக்கோணமலையில் இருந்து கொண்டு உலகின் கிழக்கில் ஆதிக்கம் செலுத்தலாம். 1977இல் இலங்கையில் ஜே ஆர் ஜெயவர்த்தன ஏற்படுத்திய உறுதியான ஆட்சியைத் தொடர்ந்து இலங்கையில் தனது கால்களை ஊன்ற அமெரிக்கா திட்டமிட்டது. அமெரிக்கா திருக்கோணாமலையில் சிங்கப்பூர் நிறுவன மொன்றின் பெயரில் தனது கடற்படைகளுக்கான எரிபொருள் மீள் நிரப்பு வசதிகளையும் சிலாபத்தில் அமெரிக்கா ஒரு வானொலி அஞ்சல் நிலையம் என்ற போர்வையில் தனது கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான தொடர்பாடல் வசதிகளையும் ஏற்படுத்த முயன்றது. இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்பதை உணர்ந்த அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இலங்கையைத் தனது வழிக்குக் கொண்டுவர தமிழர்கள் முதுகில் ஏறினார். தமிழர்கள் மத்தியில் பல ஆயுதக் குழுக்களை உருவாக்கி  படைத்துறைப் பயிற்ச்சி வழங்கி இலங்கை அரசுக்கு எதிரான படை நடவடிக்கைகளை அக்குழுக்களைக் கொண்டு செய்வித்தார். அந்தக் குழுக்களிடை ஒரு முரண்பாட்டு நிலையையும் உருவாக்கினார். ஆர்ப்பாட்டங்கள் உண்ணா விரதங்கள்  சத்தியாக் கிரகங்கள் என இருந்த தமிழர் சிங்களவர்களுக்கு இடையிலான பகைமை ஒரு பெரும் ஆயுதப் போராக உருவெடுத்து சிங்களவர்களும் தமிழர்களும் நிரந்தர விரோதிகளாகினர். தமிழர்களை ஆயுதபாணிகளாக்கி சிங்களவர்களுடன் சண்டையிட வைத்து பின்னர் சிங்களவர்கள் பக்கம் சேர்ந்து தமிழர்களை அழித்தொழிக்க சகல உதவியும் செய்து தமிழர்களை நிர்க்கதி ஆக்கியது இந்தியா. அப்போது இலங்கையில் ஐக்கிய அமெரிக்காவின் தலையீடு ஒரு பெரும் பாதகத்தை தமிழர்களுக்கு ஏற்படுத்தியது.

ரணிலா மஹிந்தவா
2005-ம் ஆண்டு நடந்த இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் ஒரு கடும் போட்டியாக அமைந்தது. வெற்றியை தமிழர்களின் வாக்கு தீர்மானிக்கும் என்ற நிலை ஏற்பட்டது. தமிழர்கள் ரணிலை ஆதரிக்க வேண்டும் என்று ஐக்கிய அமெரிக்கா விரும்பியது. ஆனால் தம் அமைப்பை பிளவு படுத்திய ரணிலைப் பழிவாங்கவும் ரணில் குடியரசுத் தலைவரானால் அவர் பின்னால் மேற்று நாடுகள் நிற்கும் என்பதாலும், பன்னாட்டு அரங்கில் ரணிலிலும் பார்க்க மஹிந்தவைக் கையாள்வது இலகு என்பதாலும் சாம் கதிர்காமர் இல்லாத மஹிந்த ராஜபக்ச குடியரசுத் தலைவர் ஆவதை விடுதலைப் புலிகள் தேர்தலைப் புறக்கணிப்பது என்ற போர்வையில் ரணிலைத் தோற்கடித்தனர். இது ஐக்கிய அமெரிக்காவை கடும் ஆத்திரத்துக்கு உள்ளாக்கியது. இரட்டைக் கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்த பயங்கரவாத ஒழுப்புக் கொள்கையுடன் சேர்த்து உலகெங்கும் விடுதலைப் புலிகளின் நிதி மூலங்கள் கப்பல்கள் போன்றவற்றை சிதைக்க நேரடியாகவும் மறை முகமாகவும் இலங்கைக்கு அமெரிக்கா உதவியது. அமெரிக்காவில் பல விடுதலைப் புலி ஆதரவாளரகள் கைது செய்யப்பட்டு சிறையிலடப்பட்டனர். தனக்கு ஏதுவானவர் இலங்கையில் குடியரசுத் தலைவராக வேண்டும் என்ற அமெரிக்க ஆதிக்கக் கொள்கை இலங்கையில் பல இலட்சம் உயிர்களைப் பலிகொண்டது.

மஹிந்தவை மாட்டவைக்க தமிழர்கள் பலி
போரின் பின்னர் மஹிந்த ராஜபக்ச சீனாவின் பக்கம் அதிகம் சார்வதை அமெரிக்கா விரும்பவில்லை. இலங்கையில் சீன ஆதிக்கத்தை இந்தியாவால் தடுக்க முடியாது என்பதையும் அமெரிக்கா உணர்ந்து கொண்டது. இதனால் 2008-2009இல் இலங்கையில் நடந்த போரில் மஹிந்த அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்களை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தில் ஒரு பிரச்சனையாக எழுப்பி அதன் மூலம் மஹிந்த அரசுக்கு ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தி இலங்கையை தன்வழிக்குக் கொண்டு வர அமெரிக்க இப்போது முயல்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கையின் படி இலங்கை மீது நடவடிக்கை எடுத்தால் அது சிங்களவர்களை ஆத்திரமடையச் செய்யும் என்பதை அமெரிக்கா உணர்ந்து கொண்டது. அதனால் அதை கிடப்பில் போட்டுவிட்டு இலங்கையில் இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு மஹிந்தவை மிரட்டுகிறது. இதில் சிங்களவர்களை மஹிந்த அமெரிக்காவிற்கு எதிராக கிளர்ந்து எழச் செய்யாதபடி அமெரிக்கா கவனமாக இருக்கிறது. தமிழர்களுக்கு ஒரு தன்னாட்சியுள்ள ஒரு அதிகாரப் பரவலாக்கம் கிடைக்கக் கூடாது என்று உறுதியுடன் நிற்கும் இந்தியா அமெரிக்காவுடன் இணைந்து நிற்கிறது. அமெரிக்கா இலங்கையில் ஒரு சுமூகமான தீர்வைத் தமக்குத் தரும் என சில தமிழர்கள் நம்புகின்றனர். தமிழர்களை வைத்து ரணிலை அல்லது தனக்கு சார்பான ஒருவரை இலங்கையின் ஆட்சியாளராக மாற்றுவது அல்லது மஹிந்தவை சீனப் பிடியில் இருந்து விலக்கி தன் காலடியில் கொண்டுவருவது மட்டுமே அமெரிக்காவின் நோக்கம்.

மீண்டும் ஒரு தறுதலைக் கூட்டம்
அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே  ஆகிய நாடுகளைக் கொண்டு இலங்கை இனப்பிரச்சனைக்கென அமைக்கப்பட்ட இணைத் தலைமை நாடுகள் போரில் சிங்களவர்கள் வென்றதுடன் செயலிழந்து போனது. போரின் பின்னர் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அட்டூழியங்கள் நில அபகரிப்புக்கள் போன்றவற்றைப் பற்றி அந்த நாடுகள் எந்தக் கவலையும் கொள்ளவில்லை. இப்போது எப்போதும் தமிழர்களுக்கு பாதகமான அமெரிக்காவும் என்றும் தமிழரகளின் விரோதியான இந்தியாவும் என்றும் சிங்களவரக்ளின் நண்பனுமாகிய ஜப்பானும் இலங்கை விவகாரத்தில் அக்கறை காட்டுக்கின்றன. அவர்களின் முக்கிய நோக்கம் இலங்கையில் அதிகரித்துவரும் சீன ஆதிக்கததை தடுத்து சீனப்பிடியில் இருந்து இலங்கையை விடுவிப்பதே. இலங்கயில் 13வது திருத்தத்திற்கும் குறைந்த ஒரு தீர்வுத் திணிப்பையே சாதி வெறி பிடித்த இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் விரும்புகின்றனர். இந்தியாவின் இலங்கை எனது பின்புறம் (my backyard) இதில் எனது சொல்லுக்குத்தான் மற்ற நாடுகள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு நியாயமான அதிகாரப் பரவலாக்கம் கிடைக்காமல் இருப்பதை இந்தியா உறுதிசெய்யும். அமெரிக்காவோ ஜப்பானோ இந்தியாவோ வடக்குக் கிழக்கில் இருந்து படையினர் விலக்கப்படுவதை போதிய அளவு வலியுறுத்தவில்லை. சட்டத்தை, மனித உரிமைகளை, மதிக்காத ஒரு மனித நேயம் அறவே இல்லாத ஒரு கும்பலாக முப்பது ஆண்டுகாலமாக செயற்பட்டு வந்த இலங்கைப் படையினர் வடக்குக் கிழக்கில் இருந்து அகற்றப்பட்டு சிங்களப் பகுதியில் நிலை கொள்ளச் செய்யப்பட்டால் அதனால் பெரும் குழப்பம் இலங்கையில் ஏற்படும். அது அமெரிக்க்க இந்திய ஜப்பானிய வர்த்தக நோக்கங்களுக்குப் பாதகமாக அமையும். இலங்கை அரசு சிங்களப் படையினரை நிரந்தரமாக தமிழர் பிரதேசங்களில் நிலை கொள்ளச் செய்து  அங்கு மேலும் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு தமிழர்களை அவர்கள் தாயக பூமியாகக் கருதும் இடங்களில் ஒரு சிறுபானமை இனமாக்குவதை அமெரிக்காவோ இந்தியாவே ஜப்பானோ தடுக்க முடியாது அப்படித் தடுக்கும் போது அவர்கள் சிங்கள் விரோதியாக சித்தரிக்கப்படுவார்கள்.

ஜப்பானின் யசூசி அகாசி
இலங்கையில் அமைதியைக் கட்டியெழுப்புதல் மற்றும் புனர்வாழ்வு, மீள்கட்டுமானத்துக்கான ஜப்பானிய அரசின் பிரதிநிதி யசூசி அகாசி இலங்கை மீது அமெரிக்கா அழுத்தங்கள் பிரயோகிக்கும் போதெல்லாம் இலங்கை சென்று அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்துவார். இவர் இறுதிப் போரின் போது பொதுமக்களின் இழப்பைப் பற்றிக் கவலைப்படாமல் சகலரையும் கொன்றொழுக்கும் படி இலங்கைப் படையினருக்கு ஆலோசனை வழங்கியவர் என்று இலங்கை ஊடகமொன்றினால் குற்றம் சாட்டப்பட்டவர்

 அமெரிக்க நிகழ்ச்சி நிரலில் தமிழர்கள்
இலங்கையை சீனப்பிடியில் இருந்து விடுவித்தல் அதற்காக தேவை ஏற்படின் மஹிந்த ராஜபக்சவை பதவியில் இருந்து அகற்றுதல் என்ற அமெரிக்காவின் செயற்திட்டத்தில் நாடுகடந்த தமிழீழ அரசும் உலகத் தமிழர் பேரவையும் இணைந்து விட்டன. முள்ளி வாய்க்காலின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஓர் எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கிறது. எந்நேரமும் அவர்களை வெள்ளை வானில் கொண்டு சென்று கறுப்பு வானில் கொண்டு வந்து இறக்கலாம் என்ற ஒரு பயங்கர சூழ் நிலையில் அவர்களின் இருப்பிற்கு அவர்கள் புது டில்லியையோ அல்லது வாஷிங்டனையோ நம்பி இருக்கிறார்கள். தமிழர்களுக்கு எந்த வகையான தீர்வு தேவை என்பதை நாடுகடந்த தமிழீழ அரசும் உலகத் தமிழர் பேரவையும் தமிழர் தேசியக் கூட்டமைப்பும் தனித் தனியாகவோ அல்லது இணைந்தோ முன் வைக்க வேண்டும். இது திம்புக் கோட்பாட்டை அடிப்படியாகக் கொண்ட மீளப் பெற முடியாத அதிகாரப்பரவலாக்கமாக இருக்க வேண்டும். அதற்கு அமெரிக்க இந்திய ஜப்பானியக் கூட்டணி ஒத்துக் கொள்ளாவிடில் மீண்டும் 1977இல் இருந்தது போல் நிலமையை உருவாக்கி தமிழர்கள் தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிக்க வேண்டும்.

Tuesday, 21 August 2012

சிவந்த வாய்க்கால்

நான் காயப்பட்டுக் கிடக்கிறேன்
என்னைக் கடந்து ஓடுகின்றனர்
என்னில் இடறி விழுகின்றனர்
உயிரில்லாச் சிறு உடலை
கையிலெடுத்துக் கொண்டு
உயிரைப் பிடித்துக் கொண்டு
தலை தெறிக்க ஓடுகின்றார் ஒருவர்
நான் காயப்பட்டுக் கிடக்கிறேன்

என் உடலெங்கும் பெரும் வலி
எங்கு வலி என்று சொல்ல முடியவில்லை
எல்லா இடத்திலும் வலி
யாரும் யாருக்கும் உதவவில்லை
விண்ணில் மிகையொலி இரைச்சல்
மண்ணின் அவல ஓலத்தில்
அடங்கிப்போய் விடுகிறது
நான் காயப்பட்டுக் கிடக்கிறேன்

நன்கு தெரிந்த வீதிகள்
உருத்தெரியாமல் சிதைந்து போனது
திசையே தெரியாமல் இருக்கிறது
நாதியற்ற இனத்தின்
திக்கற்ற நிலைதான் இது
போக என ஒரு இடமில்லை
போகத்தான் முடியுமா
நான் காயப்பட்டுக் கிடக்கிறேன்


வரண்டு போனது நாக்கு
தேடிப்பார்க்கிறேன்
அங்கு ஒரு வாய்க்கால்
அதை நாடிப் போகிறேன்
தட்டுப்பட்டது ஒரு சிறு கை
தவழ்கிறேனா ஊர்கிறேனா
எனக்கே தெரியவில்லை
ஆனால் அசைகிறேன்
வாய்க்காலை நொக்கி
ஆனால் வாய்க்கால் சிவந்திருந்தது
நான் காயப்பட்டுக் கிடக்கிறேன்

பொழுது சரிந்துவிட்டது
சூரியனும் மறைந்து விட்டது
கந்தகப் புகையினூடே
தெரிகிறது ஒரு செய்மதி
என் கண்கள் மூடிக் கொள்கின்றன

Monday, 20 August 2012

வாய்திறந்த விக்கிலீக்ஸ் அசாஞ்சே அமெரிக்காவை வெளுத்து வாங்கினார்.

இலண்டனில் உள்ள எக்குவேடர் தூதுவரகத்தில் தஞ்சம் அடைந்திருக்கும் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் நிறுவனரும் அமெரிக்காவிற்கு பெரும் சங்கடங்களை ஏற்படுத்தியவருமான ஜூலியான் அசாஞ்சே உலக மக்களுக்கு ஆகஸ்ட 19-ம் திகதி ஞாயிற்றுக் கிழமை உரையாற்றியுள்ளார். தனது விக்கிலீக்ஸ் நிறுவனத்திற்கு எதிரான மாய வேட்டையை நிறுத்தும்படி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு அசாஞ்சே தனது உரையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலண்டனில் உள்ள எக்குவேடர் தூதுவரகத்தின் முதலாம் மாடியில் இருந்து கொண்டு உலக மக்களுக்கு சுமார் ஒன்பது நிமிடங்கள் உரையாற்றிய ஜூலியான் அசாஞ்சே தனது ஆதரவாளர்களுக்கும் தென் அமெரிக்கச் சிறிய நாடான எக்குவேடருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். அத்துடன் தனக்கு ஆதரவு தெரிவிக்கும் பல நாடுகளுக்கும் முக்கியமாக ஆர்ஜென்ரீனா, எல் சல்வடோர், பொலிவியா, கொண்டூரஸ், மெக்சிக்கோ, பிரேசில், சிலி, கொலம்பியா, நிக்கரகுவா, பெரு, வெனிசுலேவியா ஆகிய நாடுகளுக்கும் அமெரிக்கா, பிரித்தானியா, ஒஸ்ரேலியாவில் வாழும் தனது ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார். 41 வயதான அவரது உரையைக் காண பெரும் தொகையான மக்கள் திரண்டிருந்தனர். தனது ஆதரவாளர்களும் உலகமும் தன்னைக் கண்காணித்துக் கொண்டிருப்பதால் பிரித்தானிய வியன்னா உடன்படிக்கையை மீறி தூதுவரகத்துள் நுழைய முடியாமல் இருப்பதாகக் அசாஞ்சே தெரிவித்தார்.

மிரட்டிய பிரித்தானியா. ஆத்திரமடைந்த எக்குவேடர்.
எக்குவேடர் நாட்டு வெளிவிவகார அமைச்சர் இலண்டனில் உள்ள தமது தூதுவரகத்தில் நுழைந்து ஜுலியன் அசாஞ்சேயை கைது செய்யப் போவதாக மிரட்டியதாகச் செய்த குற்றச்சாட்டு இராஜதந்திர வட்டாரங்களில் பெரும் பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 16-ம் திகதி எக்குவேடர் தூதுவரகத்தை பிரித்தானியக் காவற்துறையினர் சூழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தென் அமெரிக்காவில் உள்ள 12 நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள் கூட்டத்தைக் ஆகஸ்ட் 18-ம் திகதி கூட்டினார் எக்குவேடர் வெளிநாட்டமைச்சர். அக்கூட்டத்தில் பிரிந்தானியாவின் மிரட்டலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அசாஞ்சே ஆதரவாளரக்ள் கைவரிசை!
அமெரிக்கா செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பிய கியூரோசிட்டி ஆய்வு வாகனத்தை ஜுலியன் அசாஞ்சேயின் ஆதரவாளரகள் இணைய ஊடுருவல் மூலம் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றதாகச் செய்திகள் வெளிவந்தன. ஆனால் நாசா அதை முறியடித்து விட்டதாம்.

ஜூலியன் அசாஞ்சேயின் உரையின் காணொளி:


ஜுலியன் அசாஞ்சே தொடர்பான முந்தைய பதிவு: பெரும் இழுபறியில் விக்கிலீக் அசாஞ்சே

Sunday, 19 August 2012

இலண்டன் சைவக்கோவில் அசம்பாவிதம்

இலண்ட னில் உள்ள ஒரு பிரபல கோவிலில் மிகவும் வருந்தத்தக்க சம்பவம் ஒன்று நடந்துள்ளது. உண்மை உடை மாற்ற முன்னர் பொய் உலகத்தைச் சுற்றிவிடும். அதன் படியே மேற்படி ஆலயத்தில் நடந்த சம்பவம் பற்றியும் பல கதைகள் பரவத் தொடங்கிவிட்டன.

பிரித்தானியக் கோவில்களும் பக்தர்களும்
பிரித்தானியாவில் கோவில்கள் மிகுந்த வருமானத்துடன் இயங்கின்றன. சில நல்ல திருப்பணிகளை தாயகத்தில் வாழும் மக்களுக்குச் செய்கின்றன. ஆலயத்தின் வருவாய் அங்கு வரும் பக்கதர்களின் எண்ணிக்கையில் பெரிதும் தங்கியுள்ளது. பிரித்தானியாவில் வாழும் ஒரு குடும்பத்தில் வேலையால் வந்த குடும்பத் தலைவிக்கு வெளியில் செல்வதாயின் முதலில் குடும்பத்தில் உள்ளவர்களின் இரவுச் சாப்பாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும். கோவிலுக்குப் போவதாயின் அப்படியே. பிரித்தானிய ஆலயங்களில் பூசை முடிந்தபின்னர் நல்ல சுவையான உணவு வழங்கப்படுவதுண்டு. இது உண்மையான கடவுள் அன்புடன் கோவிலுக்குச் செல்பவர்களுக்கு வசதியாக அமைந்துவிடும். வேலையால் வந்தவுடன் குளித்துவிட்டு கோவிலுக்குப் போய் அங்கு கும்பிட்டுவிட்டு ஆலயத்திலேயே உணவை அருந்திவிட்டு வீடு வரலாம். சிலரின் பிள்ளைக வீட்டில் படித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் போகும் போது பிள்ளைகளுக்கும் உணவு எடுத்துச் செல்வார்கள். ஆனால் இந்த உணவை உண்பதற்கென்றே சில "பக்த கோடிகள்" ஆலயம் செல்வதுண்டு.

வெளியில் தள்ளிவிடப்பட்ட பக்தர்
மேற்படி அசம்பாவிதம் நடந்த கோவிலில் ஒருவர் தினமும் குடித்து விட்டு மதுமயக்கத்தில் ஆலயம் சென்று தனக்கு உரிய நேரத்திற்கு முதல் உணவு வழங்கவேண்டும் என்று அடம் பிடிப்பதுண்டு. சிலசமயங்களில் பெண்கள் கூட்டத்திற்குள்ளும் நுழைந்துவிடுவார். இது பலரைப் பொறுமை இழக்கச் செய்வதுண்டு. 17/08/2012 வெள்ளிக்கிழமை வழமை போல் மேற்படி ஆலயம் அடியார்களாலும் "பக்தர்களாலும்" நிறைந்து வழிந்தது. அப்போதும் அக்குடிமகன் மது போதையில் ஆலயத்துக்குள் சென்று வழமையிலும் அதிகமாகக் கலாட்டா செய்தாராம். அதனால் ஆத்திரமடைந்த ஒருவர் அவரை ஆலயத்துக்கு வெளியே இழுத்துச் சென்று தள்ளிவிட்டார். ஆனால் அக்குடிமகன் தள்ளாடி விழுந்து நடைபாதை விளிம்பில் தலை அடிபட்டுவிட்டது. இரத்தப் பெருக்குடன் விழுந்த ஒருவரைப் பார்த்த பிரித்தானியப் பெண் ஒருத்தி உடன் காவற்துறைக்கு அவசர சேவைப்பிரிவிற்கும் தொலைபேசி அழைப்புக்கள் விடுத்தார். அங்கு விரந்த காவற்துறையினரும் அவசர சேவைப்பிரிவினரும் காயப்பட்டவரை மருத்துவ மனைக்கு அனுப்பினர். விசாரணையின் போது பிரித்தானியப் பெண் காயப்பட்டவரைத் தாக்கியவர் ஆலயத்துக்குள் சென்றுவிட்டார் என்று சொல்லிவிட்டார். காவற்துறையினர் ஆலயத்தைச் சூழ்ந்து கொண்டு உழங்கு வானூர்தி மூலமும் யாராவது தப்பி ஓடுகிறார்களா என்றும் கண்காணித்தனர்.
ஆலயத்தின் உள்ளுக்குள் இருப்பவர்கள் வெளியில் செல்லாமலும் வெளியில் இருந்து யாரும் உள்ளுக்கு செல்லாமலும் தடுப்புக்கள் போடப்ப்ட்டன. உடனே குறுந்தகவல்கள் மூலம் கண்டபடி செய்திகள் பரவின.

 வதந்திகள்
காயப்பட்டவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி அறிய முடியவில்லை. அவர் கோமா நிலையில் இருக்கிறார் என்கின்றனர் சிலர். சிலர் அவர் இறந்து விட்டார் என்கின்றனர். இப்போது இதுபற்றிப் பல வதந்திகள் அடிபடுகின்றன. சம்பவம் நடந்த போது ஆலயக் கண்காணிப்புக் காணொளிப்பதிவு வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இருந்தும் காவற்துறையினர் காணொளிப்பதிவுகளை எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்தக் கோவிலைப் பற்றி அதன் உண்மையான அடியார்கள் கூறுவது:
  • பிரித்தானியாவிலேயே அதிக அளவு பணத்தை இலங்கையில் தமிழர் நலன்களுக்காக அனுப்பிய கோவில் இது.
  • மூர்த்தீகரம் நிறைந்த கோவில் இது. இங்கு எலுமிச்சை விளக்கேற்றி தொடர்ந்து தொழுபவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறியுள்ளன.
சிலர் பிரித்தானியாவில் அகதித் தஞ்சம் கோரிய தமிழர்கள் தங்களுக்கு பிரித்தானியாவில் நிரந்தர வதிவிட உரிமை பெற்றபின்னர் வழங்கிய காணிக்கைகளால் வளர்ந்த கோவில் இது என்கின்றனர்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...