2011 அரபு வசந்தம், பணக்கார நாடுகளில் பொருளாதார நெருக்கடி, இசுலாமியத் தீவிரவாத இயக்கங்களின் பின்னடைவு, பின் லாடன் கொலை, ஆளில்லா விமானங்களின் ஆதிக்கம், ஜப்பானிய ஆழிப்பேரலை, இணையங்களில் ஊடுருவல், கைப்பேசிகள், சமூகவலைத்தளங்கள் பற்றிய செய்திகள் அதிகம் இடம்பெற்றன. சவுதி அரேபியா பாரேய்ன் போன்ற நாட்களின் மேற்குலகு சார்பு சர்வாதிகரிகளுக்கு எதிரான மக்கள் எழுச்சி பிசு பிசுத்து விட்டன.
ஜனவரி - முள்ளும் நானே மலர் நானே
Googleஐ Facebook முந்தியது என்ற சமூக வலைத்தள் பற்றிய செய்தியுடன் தொடங்கிய 2011 சமூக வலைத் தளங்களூடாக சமூகப் புரட்சியும் செய்யலாம் என்பதை நிரூபித்தது. ஜனவரி 2011இல் ஒரு மில்லியன் மக்கள் எகிப்தில் ஆட்சியாளர்களுக்கு எதிராக திரளச் செய்வதில் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்கு வகித்தன. அதே வேளை அதிகரிக்கும் விவாகரத்துக்களுக்கு ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மீது பழியும் சுமத்தப்பட்டது. அது மட்டுமல்ல சிவப்பு ரோசாப்பூ, பரிசுப் பொருள்கள், சுவையான உணவகத்தில் சாப்பாடு போன்றவற்றை விட நல்ல கைப்பேசி அல்லது சமூக வலைத்தளங்களூடாக அனுப்பும் குறுந்தகவல்கள் பெண்களை அதிகம் கவர்கின்றன என்று ஆய்வுகள் தெரிவித்தன. பழவியாபாரி முகமது பவுவாசிசி தற்கொலை செய்து இறந்தது துனிசியாவில் மக்களை ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ந்தெழ வைத்தது. இவரை ஒரு பட்டதாரி என பல ஊடகங்கள் பொய்த் தகவல் வெளியிட்டன. துனிசியாவிலும் எகிப்திலும் மக்கள் எழுச்சி கொண்டதைத் தொடர்ந்து அல்ஜீரியாவிலும் மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர்.
பெப்ரவரி - தொடுதிரைக் காலம். கப்பலேறிய இந்திய மானம்
2011இல் தொடுதிரைத் தொழில்நுட்பத்தைக் கொண்ட கைப்பேசிகளும் கணனிகளும் பிரபலமடைந்தன. ஐ-பாட் போன்றவை பிரபலமடைந்தன. இத்தாலியப் பாராளமன்ற அமர்வின் போது அதன் 66வயதான உறுப்பினர் ஒருவர் பெண் துணைகளை வாடகைக்கு ஒழுங்கு செய்யும் நிறுவனத்தின் வலைத் தளத்தில் உள்ள பெண்களின் பலான படங்களைப் பார்த்துக் கொண்டிருந்ததை ஊடகங்கள் அம்பலப் படுத்தின. வத்திக்கான் ஐ-போன் மூலம் பாவமன்னிப்புக் கேட்க முடியாது என்று அறிவித்தது. அரபு வசந்தம் லிபியாவிலும் தொடங்கியது. லிபியத் தலைவர் கடாஃபிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தனர். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஸ்ணா உரையாற்றும் போது ஏற்கனவே போர்த்துக்கீசியப் பிரதிநிது ஏற்கனவே ஆற்றிய உரையின் பிரதியை அதுதான் தனது உரை என எண்ணி எடுத்து வாசித்தார்.
மார்ச் - அதிகரித்த எரி பொருள் விலைகள்
அரபு வசந்தமும் லிபிய மக்கள் புரட்சியும் ஏற்கனவே அதிகரித்த எரி பொருள் விலைகளை மேலும் அதிகரிக்கச் செய்ததன. உலகின் முதற்பத்துச் செல்வந்தர்களில் இருவர் இந்தியர்கள் என்று அறிவிக்கப்பட்டது. பாரெய்ன், ஏமன் சிரியா ஆகிய நாடுகளிலும் மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர். லிபியாவில் விமானப் பறப்பற்ற வலயத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை அங்கீகரித்தது. ஜப்பனிலும் மியன்மாரில்லும் பெரும் பூகம்பம் ஏற்பட்டது.
ஏப்ரல் - துடுப்பாட்டத்தில் உலகப் கோப்பையை இந்தியா வென்றது
ஏப்ரல் மாதம் இந்தியா துடுப்பாட்டத்தில் உலகக் கோப்பையை வென்றதுடன் ஆரம்பமாகியது. இந்தியாவிடம் தோற்ற இலங்கை நாணயச் சுழற்ச்சியில் குளறுபடி நடந்தது எனக் குற்றம் சாட்டியது. இலங்கையில் நடந்ததாக நம்பப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பான ஐநா நிபுணர்கள் குழுவின் அறிக்கை பொதுச் செயலர் பான் கீ மூனிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையை வெளிவிடுவதில் இந்தியாவின் விஜய் நம்பியார் தாமதத்தை ஏற்படுத்தினார். பிரித்தானிய இளவரசர் திருமணம் செய்து கொண்டார்.
மே - பின் லாடன் கொல்லப்பட்டார். சொர்க்கமும் நரகமும் நம் வசமே
பின் லாடன் கொலையுடன் இந்த மாதம் ஆரம்பமானது. இலங்கையில் நடந்ததாக நம்பப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பான ஐநா நிபுணர்கள் குழுவின் அறிக்கை பற்றி ஆராயவும் அது பற்றி இலங்கைக்கு ஆலோசனை கூறவும் இலங்கைக்கு இந்திய நிபுணர்கள் குழு ஒன்று பயணம் செய்தது. ராட்கோ மிலாடிக் இனப்படுகொலை குற்றச்சாட்டின் பேரில் செர்பியாவில் கைது செய்யப்பட்டார்.சொர்க்கம் என்பது இருட்டுக்குப் பயந்தவர்களினிதும் இறப்பிற்குப் பயந்தவர்களினதும் கட்டுக்கதை என்றார் Stephen Hawking என்னும் பிரித்தானிய விஞ்ஞானி. கடவுளை நம்புவது இருட்டுக்கான பயத்தையும் இறப்பிற்கான பயத்தையும் நீக்குகிறது என்கிறார் அந்த கேம்பிரிட்ஜ் பேராசிரியர். விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளர் இந்திய ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்தார். தமிழர்களின் விரோதிகளான காங்கிரசுடன் சேர்ந்து போட்டியிட்ட திமுக தமிழ்நாடு சட்ட சபைத் தேர்தலில் வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்தது. ஆப்பிளின் நிறுவனர் ஸ் ரீவ் ஜாப் காலமானார்.
ஜூன் - அல் கெய்தாவின் கேக் செய்யும் முறை
அல் கெய்தாவின் இணையத்தளத்தை ஊடுருவிய பிரித்தானிய உளவுத் துறை அங்கு குண்டு தாயாரிக்கும் முறை பற்றி அளிக்கப்பட்ட விளக்கங்களை நீக்கி விட்டு கப் கேக் செய்யும் முறைபற்றிய பதிவை இட்டுவைத்தது. பன்னாட்டு நீதி மன்றம் லிபியத் தலைவர் கடாஃபியை கைது செய்யும் ஆணையைப் பிறப்பித்தது. லிபியாவில் கொல்லப்பட்டவர்கள் 4000பேர். ஆனால் இலங்கையில் கொல்லப்பட்ட அப்பாவிகள் மூன்று இலட்சத்திற்கு மேல்.
ஜூலை - புதிய நாடு பிறந்தது. இந்தியாவின் குட்டு அம்பலம்
தென் சூடான் ஒரு புதிய நாடாக உருவெடுத்தது. தனிப்பட்டவர்களின் அந்தரங்கத் தகவல்களைத் திருடியதற்காக பிரித்தானியாவில் ஒரு பத்திரிகை மூடப்பட்டது. நோர்வேயில் தீவிர வலதுசாரி ஒருவர் குண்டை வெடிக்கச் செய்து பெரும் சேதம் விளைவித்தார். மும்பாய் குண்டு வெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டனர். உலகெங்கும் வேலையில்லாதவர்கள் தொகை அதிகரித்தது. ஆப்கானிஸ்த்தான், லிபியா, யேமன் போன்ற நாடுகளில் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் தாக்குதல்களை மேற்கொண்டன. ஃபேஸ்புக் மூலம் தனக்கு எதிராக நடக்க இருந்த பெரும் ஆர்ப்பாட்டத்தை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியது. சாம் ராயப்பா என்னும் பத்திரிகையாளர் ஸ்ரேட்ஸ்மன் பத்திரிகையிலும் எம் ஜீ தேவசகாயம் என்னும் முன்னாள் இந்திய நிர்வாக சேவை(I.A.S) அதிகாரி த வீக்கெண்ட் லீடரிலும் இலங்கையில் நடந்த இனக்கொலையில் இந்தியாவிற்குப் பங்குண்டு என்று எழுதினர். சீனா ஒரு மின்காந்த அதிர்வு{electromagnetic pulse (EMP)} உருவாக்கும் முறையை கண்டறிந்தது இதன் மூலம் அமெரிக்கக் கடற்படையை தம்மால் செயலிழக்கச் செய்ய முடியுமென்று கூறப்பட்டது. அமெரிக்காவில் அரச கடன் நெருக்கடி பெரும் பிரச்சனையாக மாறியது. பிரித்தானிய சனல்-4 தொலைக்காட்சி இலங்கைப் போர்க் குற்றம் தொடர்பாக மேலும் ஒரு காணொளியை வெளிவிட்டது.
ஆகஸ்ட் - ஆட்டம் கண்ட உலகப் பொருளாதாரம்
பல மேற்குலக செல்வந்த நாடுகளின் பொருளாதர நெருக்கடி அம்பலத்திற்கு வந்தது. Motorolaவை Google வாங்குகியது. பிரித்தானியாவின் பெரு நகரங்களில் கலவரம் நடந்தது. அல் கெய்தாவின் இராண்டாம் நிலைத் தலைவரான அதியா அப் அல் ரஹ்மான் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
செப்டம்பர் - வாழ்வில் இன்பத்தைத் தொலைத்தோம்
பல நாடுகளிலும் பொருளாதார நெருக்கடி பரவியது. அமெரிக்க ஆளில்லா விமானம் அன்வர் அல் அவ்லாக்க்கி என்னும் ஒரு அல் கெய்தா தலைவரைக் கொன்றது. அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ ஒரு படையணி வைத்திருப்பது அம்பலத்திற்கு வந்தது.
அக்டோபர் - கடாஃபியின் கொலை
உலகத்தில் மொத்த மக்கள் தொகையானது 7 பில்லியனைத் தொட்டது. அமெரிக்க ஆளில்லா விமானக்களில் வைரஸ் பரவியது. கடாஃபி பன்னாட்டுச் சட்டங்களுக்கு எதிராகக் கொல்லப்பட்டார். ஆப்பிள் தனது புதிய கைப்பேசியை அறிமுகம் செய்தது. அமெரிக்க ஆளில்லா விமானங்கள் அப்பாவிகளைக் கொல்வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆப்கானிஸ்த்தான் பாக்கிஸ்தான் எல்லைப் பகுதி மக்கள் பாக் தலைநகரில் அமெரிக்காவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். அமெரிக்காவின் பெரும் பங்குச் சந்தை வர்த்தகர்களுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். சம்சங் ஐ-போனை விற்பனையில் முந்தியது.
நவம்பர் - ஈரானிடம் அணு குண்டு?
சீன இரசிய அரசுகளின் ஆதரவுகளுடன் செயற்படும் இணைய ஊடுருவிகள்(Hackers) தனது நாட்டின் பொருளாதார தொழில்நுட்ப இரகசியங்களைத் திருடுகின்றன என அமெரிக்கா குற்றம் சாட்டியது. இத்தாலியப் பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்குள்ளானது. ஐரோப்பிய நாடுகள் தங்கள் நிதி நெருக்கடியைத் தீர்க்க சீனாவின் தயவை நாடின. அமெரிக்காவில் தாய்வானை அமெரிக்காவிற்கு "விற்கும்" திட்டம் முன்வைக்கப்பட்டது. மும்மர் கடாஃபியின் மகன் சயிஃப் கடாஃபி கைது செய்யப்பட்டார். இலங்கைப் பாராளமன்றில் உறுப்பினர்கள் கைகலப்புச் செய்தனர். எகிப்தில் மீண்டும் மக்கள் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம். ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யப் போவதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் கொதித்து எழுந்தன. மலையாளிகள் dam 999 திரைப்படத்தின் மூலம் பெரும் சர்ச்சையைக் கிளப்பினர்.
டிசம்பர் - இரசிய மக்கள் எழுச்சி
தமிழர்களைத் தாக்கியும் தமிழ்ப் பெண்களை ஆடைகளைக் கழற்றி மானபங்கப் படுத்தியும் மலையாளிகள் கோர தாண்டவம் ஆடினர். ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின. அமெரிக்க ஆளில்லா விமானத்தை தாம் தரையிறக்கியதாக ஈரான் அறிவித்தது. அதைத் தரையிறக்கும் தொழில் நுட்பம் ஈரானிடம் இல்லை என்று அமெரிக்காவில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இந்திய நாணயம் மதிப்பிறக்கம் கண்டது. இரசியாவில் புட்டீன் பிழையாக நடத்தப் பட்ட தேர்தலால் தெரிந்து எடுக்கப்பட்டார் என மக்கள் கிளர்ந்து எழுந்தனர். ஈரான் வளை குடாவை மூடி உலக எரிபொருள் விநியோகத்தை முடக்கப் போவதாக ஈரான் எச்சரித்தது. அமெரிக்கா தனக்குப் பிடிக்காத ஆட்சியாளர்களுக்கு புற்று நோய் வரப் பண்ணுகிறது என வெனிசுலேவியத் தலைவர் குற்றம் சாட்டினார்.
முற்றுப் பெறாத எகிப்தியப் புரட்சி, சிரியா, ஈரான், இரசியா போன்ற நாடுகளில் மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக செய்யும் கிளர்ச்சி 2012இலும் தொடர்ந்து நடக்கும். அமெரிக்க ஈரானிய முறுகல் தொடரும்.உலகப் பொருளாதார் நெருக்கடி இன்னும் ஐந்து ஆண்டுகள் தொடரும். சீனா தனது ஆதிக்கத்தை குறிப்பாக கடலாதிக்கத்தை விரிவு படுத்த முயலும்
புத்தாண்டுக் கவிதை
கால நதியின் தொடரோட்டத்தில்
அசைந்து செல்லும் ஒரு சிறு புள்ளி
இன்று ஒன்றும் இதில் முடியவில்லை
நாளை ஒன்றும் புதிதாகத் தொடங்கவில்லை
புத்தாண்டு எனப் புதிதாக ஒன்றும் இல்லை
வேதம் ஓதும் தமிழினக் கொலைக் கும்பல்
கூச்சலிடும் குள்ள நரி அரசியல் கூட்டம்
நேற்றும் அப்படியே நாளையும் அப்படியே
புத்தாண்டு எனப் புதிதாக இங்கொன்றும் இல்லை
தமிழன் நிலமெங்கும் சிங்களக் குடிகள்
தமிழன் தெருவெங்கும் சிங்களக் கடைகள்
இன்றும் அப்படியே நாளையும் அப்படியே
புத்தாண்டு எனப் புதிதாக இங்கொன்றும் இல்லை
கண்ணிரண்டில் நீர் வற்றி நிற்பவற்க்கு
பன்னிரண்டில் தன்னும் விடிவுவருமா
Saturday, 31 December 2011
Friday, 30 December 2011
70 ஆண்டுகளுக்கு முன் விட்ட தவறு: 99 வயதுக் கணவன் 96 வயது மனைவியை விவாக இரத்து
99 வயதான இத்தாலியக் கணவர் தனது 96 வயது மனைவியை 1940-ம் ஆண்டு செய்த தவறுக்காக விவாக இரத்துச் செய்துள்ளார்.
1940களில் தற்போது 96 வயதான ரோசா தனது இரகசியக் காதலனுக்கு எழுதிய கடிதங்கள் அவரது 77 ஆண்டு விவாகத்தை முறித்து விட்டது
ரோசா தனது கணவன் அண்டோனியோவை தனது தவறை மன்னிக்கும் படி மன்றாடினார். ஐந்து பிள்ளைகளும் 12 பேரப்பிள்ளைகளும் ஒரு பூட்டப் பிள்ளையும் கொண்ட தம்பதிகளின் 77 ஆண்டுகள் நிரம்பிய விவாகத்தை பழைய காதல் கடிதங்கள் கணவரின் கையில் சிக்கியமை முறித்துவிட்டது.
பழைய பெட்டிகளை சுத்தம் செய்யும் போது அண்டோனியோவின் கைகளில் ரோசா தனது காதலனுடன் பரிமாறிய கடிதங்கள் சிக்கிவிட்டது.
காதலித்துத் திருமணம் செய்து கொண்ட ரோசா-அண்டோனியோ தம்பதிகள் இணைபிரியாமல் இருந்து வந்தனர். 10 ஆண்டுகளின் முன்னர் தன் மகனுடன் சிலகாலம் தங்கி இருந்த அண்டோனியோ தனது மனைவியின் பிரிவித்துயர் தாங்காமல் மகனை விட்டு மீண்டும் வந்து ரோசாவுடன் இணைந்து கொண்டார்.
நீண்டகாலத் தம்பதிகளின் விவாக இரத்துச் சாதனை
இதற்கு முன்பு 36 ஆண்டுகள் தம்பதிகளாயிருந்த பிரித்தானியாவைச் சேர்ந்த பேர்ட்டி - ஜெசி தம்பதிகளின் விவாகரத்தின் சாதனையை ரோசா-அண்டோனியோ தம்பதிகளின் 77ஆண்டுச் சாதனை முறியடித்து விட்டது.
2012
கல்லுக்கும் மண்ணுக்கும் முன்னிருந்து
யாண்டும் ஆண்டு வந்த இனத்தின்
கண்ணிரண்டில் நீர் வற்றிய நிலை
பன்னிரண்டில் தன்னும் மாறுமா
உலகுக்கென உழுதுண்டு விருந்தாகி
திருக்குறள் எனும் மறையை மருந்தாக்கி
உலகாண்ட இனம் நடுத்தெருவில் நிற்கும் நிலை
பன்னிரண்டில் தன்னும் மாறுமா
யாயும் ஞாயும் நாயிலும் கேவலமாகினர்
எந்தையும் நுந்தையும் கந்தலாய் ஆயினர்
தந்தை நாடென இந்தியாவை நம்பி
இந்த நம்பிக்கைத் துரோக நிலை
பன்னிரண்டில் தன்னும் மாறுமா
நாடற்று வீடற்று நாதியற்று
அவதியுற்று நிற்கையில்
ஊடுருவிகளோடு தூரோகிகளும்
கைகோத்துச் சதிசெய்யும் நிலை
பன்னிரண்டில் தன்னும் மாறுமா
ஒன்று பட்டுத் தோள் கொடுத்து
மீண்டெழுந்து பன்னிரண்டில் தன்னும்
மாற்றுவோம் எம்மவர் இழிநிலை

Thursday, 29 December 2011
SMS 2011
வாழ்க்கையில்
வெளியில் சொல்ல முடியாத இரகசியங்கள் இருக்கும்
தீர்க்க முடியாத கவலைகள் இருக்கும்
ஈடு செய்ய முடியாத இழப்புக்கள் இருக்கும்
நிறைவேறாத ஆசைகள் இருக்கும்
இருந்தும்
வாழ்க்கை இரண்டு சொற்களில்
ஓடிக் கொண்டே இருக்கும்:
வாழ்க்கை வாழ்வதற்கே
There have been many time in 2011
when I may disturbed you
troubled u
irritated u
bugged u
My new year resoulution is
I plan to continue it in 2012.
when I may disturbed you
troubled u
irritated u
bugged u
My new year resoulution is
I plan to continue it in 2012.
Rajesh Shetty
Uttarakhand, Dehradun
Uttarakhand, Dehradun
புகைப்படத்திற்காக ஒரு கணம்
செய்யும் ஒரு புன்னகை
அதற்கு அழகூட்டுகிறது
அதையே தொடர்ந்து செய்தால்
வாழ்க்கைக்கு அழகூட்டும்
A pretty girl shows her hands 2 a clerk in a hotel,
He kisses her fingers & asks: What can I do 4 u?
GIRL: Just tell the Manager that there is no soap in d toilet...
by Himanshu
Ramanathan Street, Chennai, India
கைப்பேசிகள் உங்களை
தொலைவில் உள்ளவர்களுடன்
தொடர்பு கொள்ள வைக்கிறது
அண்மையில் உள்ளவர்களை
தொலைக்கிறது
I Have Saved My Girl Friend Number As "LOW BATTERY"
So Whenever She Calls & I Am Not Around
My Mom Plugs My Phone To The Charger :p
by Ranju
Noida, India
நட்பில்லா வாழ்க்கை
பூவில்லாப் பூந்தோட்டம் போனறது
என் நட்புத் தோட்டம் மிகப் பெரிது
அதில் மிக அழகிய பூ
இதை வாசிக்கும் நீயே
If you marry one woman,
She will fight with you.
But, if you marry 2 women,
They will fight for you.
Think different.
Add wife, have life :p
by Babloo
Ratlam, Madhya Pradesh, India
அன்னை என்பவள்
படித்தவாளாகவும் இருக்கலாம்
படிக்காதவளாகவும் இருக்கலாம்
அன்பெனும் பாடத்தின்
பல்கலைக்கழகம் அவள்
Life is short,
kiss slowly,
laugh insanely,
love truly and
forgive quickly
by Divyansh
கடவுளே என் எதிரிகளின்
முன்பல்லை அழுக்காக்குங்கள்
அவர்கள் புன்னகைக்கும் போது
நான் அடையாளம் காண
Never laugh at your wife's choices
You are one of them
Never be proud of your choices
Your wife is one of them
by Aakash
Thane, MH, India
Wednesday, 28 December 2011
வர்ணங்களைப் பிரித்த வர்ணம்
அவள் கூந்தல் கரு வர்ணம்
நாணத்தில் முகம் ஒரு வர்ணம்
கோபத்தில் இன்னொரு வர்ணம்
ஆடும் விழியசைவுகள்
ஸ்வரங்களும் அபிநயங்களும்
இணைந்த பதவர்ணம்
பேசும் மொழியோ
ஜதியும் சஞ்சாரமும்
நிறைந்த தான வர்ணம்
இணைந்திருந்த
ஒவ்வொரு இனிய நாட்களும்
ஒவ்வொரு அழகிய வர்ணம்
பிரித்து வைத்ததும் ஒரு வர்ணம்
மகாபாரத்தில் மகாபாவிகள்
இடைச் செருகிய
பகவத் கீதை சொல்லும்
நான்கு வர்ணம்
இயற்கை அன்னையின் ஓவியத்தில்
எத்தனை வர்ணங்கள்
பதமளிக்கும் பச்சை நிற வனங்கள்
நீலவர்ணத்தில் கடலும் வானும்
வெண்ணிற முகில்கள்
அவ்வப் போது கற்பனை
வெடித்தெழ
பலவர்ண வானவில்
மனிதத் தோலைப்
பல வர்ணங்களில் வரைந்து
பல குழப்பங்கள் ஏன் தந்தாய் தாயே
Tuesday, 27 December 2011
நகைச்சுவைக் கதை: நரகத்தில் மொக்கை காந்தி, இத்தாலிச் சனியன், மோகன் மன் Shit
ஒரு பெரிய நிலநடுக்கம் வந்து இந்தியாவிலும் இலங்கையில் நிறையப் பொதுமக்கள் கொல்லப்பட்டுவிட்டனர். அதனால் நிறையப் பேர் யம லோகத்தில் யமனின் தீர்ப்புக்காக மிக நீண்ட வரிசையில் காத்துக் கொண்டு நின்றனர். யமனும் சித்திரபுத்திரனும் மிகவும் சிரமப்பட்டு அவரவர்கள் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தண்டனை கொடுப்பதற்காக சிலரை சொர்க்கத்திற்கு பலரை நரகத்தில் வேறு வேறு பகுதிகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு பகுதிகளிலும் தண்டனைகள் வேறு வேறு விதமாக இருக்கும். சிலவற்றில் கொதி எண்ணைக்குள் போடுதல். சிலவற்றில் மாடுகளால் மிதிக்கவிடுதல். சிலவற்றில் புழுக்களாக் கடிக்க விடுதல். இப்படி அந்நியன் படத்தில் வந்தது போல் தண்டனைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன.
தண்டனை கொடுத்துக் கொண்டிருந்த யமன் ஓய்வெடுக்கப் போகமுன் தான் மொக்கை காந்திக்கும் இத்தாலிச் சனியனுக்கும் மோகன் மன் Shitஇற்கும் தண்டனை உடனடியாகக் கொடுக்க வேண்டும் வரிசையில் அவர்கள் எங்கு நின்றாலும் இழுத்துக் கொண்டு வா என ஒரு தூதுவனுக்கு உத்தரவிட்டான்.
தூதுவன் வருவதைக் கண்ட மொக்கை காந்தியும் இத்தாலிச் சனியனும் மோகன் மன் Shitஉம் தங்கள் ஆடைகளை கழற்றி எறிந்துவிட்டு அங்கு நின்ற வேறு ஆட்களின் ஆடைகளைப் பறித்து அணிந்து தங்களை கண்டறிந்து கொள்ள முடியாதபடி செய்து கொண்டனர். அவர்களைத் தேடிவந்த தூதுவன் அவர்களைக் காண்டு பிடிக்க முடியாததால் திரும்ப யமனும் சித்திர புத்திரன் இருக்கும் அறைக்குப் போய் அவர்களைக் காணவில்லை என்றான். உடனே சித்திர புத்திரத் அத்தூதுவன் தலையில் ஓங்கி ஒரு குட்டு வைத்துவிட்டு வா அவர்களை நான் உனக்குக் காட்டுகிறேன் என்றான்.
அறைக்கு வெளியே வந்த சித்திர புத்திரன் அதோ பார் காணும் தமிழர்களுக் கெல்லாம் அடித்தும் நகத்தால் பிராண்டிக் கொண்டும் மற்ற இந்தியர்களின் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை எடுத்து சுவிஸ் வங்கிக்கு அனுப்பிக் கொண்டும் நிற்கிறாள் ஒருத்தி. அவள்தான் இத்தாலிச் சனியன். அவள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டு வாயே திறக்காமல் நிற்கிறான் ஒருத்தன் அவன் தான் மோகன் மன் Shit.முதலில் இருவரையும் பிடி என்றான்
இப்போது மொக்கை காந்தியை எப்படிப் பிடிப்பீர்கள் என்றான் தூதுவன். அதற்கு சித்திரபுத்திரன் 1970-ம் ஆண்டு ஜூன் 19-ம் திகதி பிறந்தவர்கள் எல்லோரும் கையை உயர்த்துங்கள் என்றான். ஆறு பேர் கைகளை உயர்த்தினர். ஆறு பேரையும் தனித்தனியாக அழைத்த சித்திர புத்திரன் அவர்களிடம் மகாத்மா காந்தி யார் என்று கேட்டான். ஐந்து பேர் சரியாகப் பதில் சொன்னார்கள். ஒருவன் மட்டும் அந்தப் பேமானி யார் என்று என்க்குத் தெரியாது பொறு மோகன் மன் Shitஇடம் கேட்டுச் சொல்கிறேன் என்றான். உடனே சித்திர புத்திரன் சொன்னான் இவன்தான் மொக்கை காந்தி பிடி இவனை என்றான்

Monday, 26 December 2011
நத்தார் நகைச்சுவைகள்
இன வெறி நகைச்சுவைகள்:
யூதர்கள் இலாபத்தை நோக்கமாகக் கொண்ட வியாபாரிகள் என்பதற்காக ஒரு நகைச்சுவை. நத்தார் தாத்தாவாக ஒரு யூதர் வந்தால் அவர் வீட்டுக்குள் புகைக்கூட்டினூடாக நுழைந்தவுடன் நத்தார் பரிசுகளை விற்பனை செய்வாராம்.
நைஜீரியாவில் நத்தார் தினத்தன்று தேவாலயத்தில் குண்டு வெடிப்பில் 40 பேர் பலி. கடவுளே ஒவ்வொரு நாளும் நத்தார் தினமாக இருந்தால் எவ்வளவு நல்லது.
I’m Dreaming of a White Christmas, Not cause I like snow or anything, I’m just a racist.
From a black man: I never believed in Santa Claus because I knew no white dude would come into my neighborhood after dark.
கணவன் மனைவி நகைச்சுவை
மனைவி கணவனுக்கு: மவனே பார்ட்டி என்று வெளியில் போய் லேட்டா வந்தா சாப்பாட்டு மேசையில் உனக்கு சாப்பாடு இருக்கும் என்று எதிர் பார்க்காதே!
கணவன்: ஒகே மைக்ரோவேவில் வைத்துவிடு. அப்படியே சூடாக்கி சாப்பிட வசதியாக இருக்கும்.
விநோதமான நத்தார்ப் பரிசு - கொள்ளை அழகு
http://www.huffingtonpost.co.uk/2011/12/23/weirdest-news-stories-2011_n_1167606.html?ref=uk-weird-news
What does Santa suffer from if he gets stuck in a chimney?
Claustrophobia!
Why did Santa's helper see the doctor?
Because he had a low "elf" esteem!
I can't believe how stupid that Post Office clerk was.
He said that my xmas present parcel was too heavy and that I needed to put more stamps on it.
Like that's going to make it lighter.
பரிசு வாங்கி சலிப்படைந்த தந்தை: எந்தப்பாவி இந்த நத்தாரைக் கண்டுபிடித்தானோ! அவனை சிலுவையில் வைத்து ஆணியடித்துக் கொல்ல வேண்டும்.
I’ve been bad a few times this year, but it was worth it…you judgmental fat bastard!
What I don’t like about office Christmas parties is looking for a new job the next day
Please remember a doggy is not just for Christmas….It’s a great position all year round!
Sunday, 25 December 2011
தமிழர்களுக்கு சிங்களப் பேரினவாதப் பேராயரின் நத்தார்ப் பரிசு
இலங்கையின் இரண்டாவது கதிர்னால் பேராயர் பேரருட்திரு மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் டிசம்பர் மாதம் 3-ம் திகதி ஆரம்பத்தில் இலங்கை அரசு அருட்சகோதரி ஒருவர் கைது செய்யப்பட்டதை ஆட்சேபிக்கும் முகமாக இலங்கை அரசின் எந்த ஒரு வைபவத்திலும் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்திருந்தார். பின்னர் அந்த அருட் சகோதரி விடுதலை செய்யப் பட்டதைத் தொடர்ந்து அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் தின நிகழ்வில் கலந்துகொண்டார். ஒரு அருட்சகோதரி விடுதலை செய்யப்பட்டவுடன் அரசின் பாவங்கள் யாவும் கழுவப்பட்டுவிட்டதா? ஆயிரக் கணக்கானொர் ஆண்டுக் கணக்காக விசாரணை எதுமின்றி இலங்கை அரசால் சிறைகளில் தடுத்து வைத்திருப்பது பாவச் செயல் இல்லை என்று ஆண்டகை படித்த எந்த மதப் புத்தகத்திலாவது எழுதப்பட்டுள்ளதா?
ஆண்டுகொண்டிருப்போரின் கைபிடித்த ஆண்டகை
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் தின நிகழ்வில் கலந்துகொண்ட பேராயர் பேரருட்திரு மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அங்கு சும்மா இருக்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளரது இலங்கை தொடர்பிலான அறிக்கையை விட, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, பொதுமக்கள் பிரச்சினை குறித்து சீராக ஆராய்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆண்டகையின் கூற்று பல பன்னாட்டு மனித நேய அமைப்புக்களினதும் மனித உரிமை அமைப்புக்களினதும் கூற்றுக்கு முரண்பட்டதாக இருக்கிறது. சிங்களப் பேரினவாதிகளுக்கு என்று மத விதிகளும் சட்டங்களும் வேறுபட்டதாக எழுதப் பட்டுள்ளதா? உலகிலேயே எந்த எதிரியாலும் மதிக்கப்படும் இடம் தான் வணக்கத்தலம் ஆனால் தனது ஆலயத்தின் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த வேளையில் தயவு தாட்சாண்யம் இன்றி சிங்களமும் அதன் எடுபிடிகளாக உள்ள தமிழ் துணை ஆயுதக் குழுக்களும் இணைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம். அவரின் கொலை நடந்து ஆறு ஆண்டுகள் கடந்து விட்டன. ஆண்டகை கைப்பிடித்து வாழ்தும் அரசு இதுவரை எந்த நடவடிக்கையாவது எடுத்ததா? அப்படிப்பட்ட சிங்களப் பேரினவாத் அரசு இறுதிப் போரின் போது கொல்லப்பட்டவர்களுக்கோ அல்லது நடந்த மனித உரிமை மீறல்களுக்கோ நீதி வழங்குமா?
இன அழிப்பில் இலங்கைக்கு உதவிய இந்தியாவில் இருந்து வரும் ஒரு பத்திரிகையான Economic Times இப்படிக் கூறுகிறது:
பேராயர் பேரருட்திரு மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களே நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னர் சாட்சியமளித்த மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யேசேப்பு ஆண்டகை அவர்கள்:
மருத்துவ மனைகள் மீது வீசப்பட்ட குண்டுகளை நியாயப்படுத்தும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஆண்டகையே நீங்கள் நியாயப் படுத்துகிறீர்களா?
போர்க்குற்றமும் மானிடத்திற்கு எதிரான குற்றமும் புரிந்த அரசிற்கு வக்காலத்து வாங்குவதுதான் திருச்சபை தமிழர்களுக்கு வழங்கும் நத்தார் பரிசா? ஆண்டகையே உங்கள் திருச்சபை கத்தோலிக்கத் திருச்சபையா அல்லது சிங்களத் திருச்சபையா? பரமண்டலத்தில் வாழும் எங்கள் பிதாவே இவர்களை மன்னிப்பீர்களாக. ஆமேன்.
நத்தார் நற்சிந்தனை( பெரிதாக நல்லதென்று சொல்ல முடிதாது)
வாழிடம் நீங்கி
வேறிடம் போய்
உறைவிடம் இன்றி
தொழுவம் தஞ்சமாய்
புனிதத் தாய் பெற்ற
இனிய யேசு பாலனே
பேரவலப்பட்டதால்
நீரும் தமிழர் போலே
மன்னர்க் கெல்லாம்
மன்னன் நானென்றீர்
சித்திரவதைகள் செய்தார் உம்மை
முள்ளால் கிரீடம் சூட்டினர்
சிலுவை சுமக்கவைத்தார்
கொடுமைகள் செய்தார்
ஆணியால் அறைந்து கொன்றார்
எம்மண் எமக்கென்ற தமிழனைப் போல்
உம்மையும் பேரவலத்துக்குள்ளாக்கினர்
பாவிகளை மன்னிக்க நீர் பிரார்த்தித்தீர்
ஆனால் நாம் எமக்குக் கொடுமைகள்
செய்த பாவிகளை ஒரு நாளும்
மன்னிக்கவே மாட்டோம்

- On the war crimes front, the LLRC's report, made public recently, is a disappointment. It has attracted criticism from UN-affiliated and other international rights groups, citing doubts about the LLRC's mandate and impartiality. The report virtually exonerates the Lankan army from the charge of deliberately targeting civilians, including using heavy artillery in the No Fire Zone
பேராயர் பேரருட்திரு மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களே நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னர் சாட்சியமளித்த மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யேசேப்பு ஆண்டகை அவர்கள்:
- இந்த நாட்டின் தமிழ் மக்கள் பட்ட துன்பங்கள் அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு எதிராக செய்யப்பட்ட காரியங்கள் ஆகியவற்றை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். சிறப்பாக மக்கள் காணாமல் போன விடயம், சட்டத்திற்கு மாறாக மக்கள் கொல்லப்பட்ட விடயங்கள் ,சட்டத்திற்கு முன்னாள் மக்கள் குற்றவாழிகள் என அறியப்பட்டவர்கள்,வேறு விதமாக பிடிக்கப்பட்டு கொல்லப்பட்ட விடயங்கள், தமிழ் மக்களை கொண்டு போய் சித்திர வதை செய்தவை,மக்கள் வாழும் இடங்களில் குண்டுகள் வீசப்பட்டமை, கட்டிடங்கள், மருத்துவமனை போன்றவற்றை அழித்தொழித்த உண்மைகளை அவர்கள் கொண்டு சொல்ல வேண்டும்.
மருத்துவ மனைகள் மீது வீசப்பட்ட குண்டுகளை நியாயப்படுத்தும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஆண்டகையே நீங்கள் நியாயப் படுத்துகிறீர்களா?
போர்க்குற்றமும் மானிடத்திற்கு எதிரான குற்றமும் புரிந்த அரசிற்கு வக்காலத்து வாங்குவதுதான் திருச்சபை தமிழர்களுக்கு வழங்கும் நத்தார் பரிசா? ஆண்டகையே உங்கள் திருச்சபை கத்தோலிக்கத் திருச்சபையா அல்லது சிங்களத் திருச்சபையா? பரமண்டலத்தில் வாழும் எங்கள் பிதாவே இவர்களை மன்னிப்பீர்களாக. ஆமேன்.
நத்தார் நற்சிந்தனை( பெரிதாக நல்லதென்று சொல்ல முடிதாது)
வாழிடம் நீங்கி
வேறிடம் போய்
உறைவிடம் இன்றி
தொழுவம் தஞ்சமாய்
புனிதத் தாய் பெற்ற
இனிய யேசு பாலனே
பேரவலப்பட்டதால்
நீரும் தமிழர் போலே
மன்னர்க் கெல்லாம்
மன்னன் நானென்றீர்
சித்திரவதைகள் செய்தார் உம்மை
முள்ளால் கிரீடம் சூட்டினர்
சிலுவை சுமக்கவைத்தார்
கொடுமைகள் செய்தார்
ஆணியால் அறைந்து கொன்றார்
எம்மண் எமக்கென்ற தமிழனைப் போல்
உம்மையும் பேரவலத்துக்குள்ளாக்கினர்
பாவிகளை மன்னிக்க நீர் பிரார்த்தித்தீர்
ஆனால் நாம் எமக்குக் கொடுமைகள்
செய்த பாவிகளை ஒரு நாளும்
மன்னிக்கவே மாட்டோம்
நீர் மீண்டும் எழுந்தது போல்
நாமும் மீண்டெழுவோம்
பதின்மூவரில் ஒருவன்
உம்மைக் காட்டிக் கொடுத்தான்
பதின்மூவருமே
எம்மைக் காட்டிக் கொடுத்தனர்
பதின்மூவரில் ஒருவன்
உம்மைக் காட்டிக் கொடுத்தான்
பதின்மூவருமே
எம்மைக் காட்டிக் கொடுத்தனர்
பாவங்கள் சுமந்து நிற்கிறோம்
நீர் சிலுவை சுமந்தது போல்
உங்கள் பரலோக இராச்சியம்
வேண்டி நிற்கின்றோம்
கொடியோர் ஆட்சியில்
வதைபடும் தமிழர் நாம்
வாரீர் மீண்டும்
எம்மை இரட்சிக்க
நீர் சிலுவை சுமந்தது போல்
உங்கள் பரலோக இராச்சியம்
வேண்டி நிற்கின்றோம்
கொடியோர் ஆட்சியில்
வதைபடும் தமிழர் நாம்
வாரீர் மீண்டும்
எம்மை இரட்சிக்க
புனித தூதரின் நத்தார்
என்றவுடன் என் நெஞ்சில்
எழும் வரிகள் இதுதான்
பிழைகள் இருந்தால்
பரலோகப் பிதாவே
என்னையும் மன்னியுங்கள்
Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...