
கருவறுக்கும் போரிது - தமிழினத்தை
கருவோடறுக்கும் போரிது
கருவிலும் கயப்படுத்தும் கயவர் கூட்டம்
கயவர்க்கு கரம் தரும் இத்தாலிச் சனியாள் கொட்டம்.
சரணடைந்த தாயின் கருவைக் கலைக்கும்
உடன் பிறந்த சேயின் கழுத்தை நெரிக்கும்
ஆரிய சிங்களக் கூட்டமைப்பின் முகமிது
இனக்கொலைச் சிங்களத்தின் அகமிது
போர்முனையில் பௌத்தத்தின் முடிவிது
ஆயுதமுனையில் மானிடத்தின் அழிவிது
ஆரியப் பிணம்தின்னி நாய்கள் ஆறாயிரம்
ஈழதில் பின்கதவால் வந்து கண்டதிது.
ஊழ்வினை வந்து ஒருநாள் வாட்டுமுமை
ஈழம் மலர்ந்து வெற்றியீட்டுங்கால்.
No comments:
Post a Comment