
தேம்ஸ் நதிக்கரையில் வில்லோ மர நிழலில்
நடனசாலைகளில் மின்னும் விளக்கொளியில்
நகரத் தெருக்களில் மூலை முடுக்குகளில்
இணைந்திருந்த நாட்கள் இன்று எங்கே
என் இனிய காதலை ஏன் சிதைத்தாய்
என் இளகிய இதயத்தை ஏன் வதைத்தாய்
நாம் பழகிய நாட்களை ஏன் மறந்தாய்
அந்த அழகிய கனவுகளை ஏன் கலைத்தாய்
என் அரிய தூக்கத்தை ஏன் பறித்தாய்
பறந்த கற்பனைகளை ஏன் மறித்தாய்
வளர்ந்த அன்பு மரத்தை ஏன் தறித்தாய்
இன்று காரணமின்றி எனை ஏன் வெறுத்தாய்
2 comments:
nice one
nice one
Post a Comment