அழகென்பது
காலமென்றானால்
நீ கோடி யுகங்களடி
தேவை ஒரு காப்புறுதி
உன் கண்களிடமிருந்து
என்னைக் காக்க
நான் காண்பது கனவா
நீ என் வருங்கால
மனைவியைப் போலிருக்கிறாய்
கள்வனாக்கினாய் என்னை
திருடத் துடிக்கிறேன்
உன் இதயத்தை.
Phone the fire service!
I am burning!
She glanced at me
Phone the police
She is a thief
I lost my heart
Phone th ambulance
I am fainting
She smiled at me.
எகு கற்றன உன் கண்கள்
குங்ஃபு கலையை
என் இதயத்தில் செய்கின்றன
அதிரடித் தாக்குதல்கள்
உன் கண்கள் தரும் வெப்பத்தை
தணிக்கும் ஒரே குளிரூட்டி
உன் உதடுகளே
உன் தாய்க்கு நன்றி
உன்னை மகளாக்கியமைக்கு
என் தாய் கொடுத்து வைத்தவள்
உன்னை மருமகளாக்க
உன்னுடலில்
எங்கு ஒட்டியிருக்கிறது
Made in heaven என்று
என் பிரார்த்தனை
தேவதை என் காதலியாக
கடவுளின் பதில் நீ
காப்புரிமை தேவையடி
உன் கடைக்கண் பார்வைக்கு
US Pentagon திருடலாம்
I need a sat-nav
To find the way
To hear heart
Saturday, 18 February 2012
Friday, 17 February 2012
நகைச்சுவை: ஆப்கானிஸ்தானில் ஏன் தாலிகட்டுவதில்லை?
யோகா பயிற்ச்சியாளர்: உங்கள் கணவன் யோகா செய்யத் தொடங்கிய பின்னர் அவரது குடிப்பழக்கத்தில் மாற்றம் உண்டா?
அப்பாவிப் பெண்: ஆம் இப்போது தலைகீழாக நின்று கொண்டே தண்ணியடிக்கிறார்.
நீ மட்டும்தான் என் காதலி
உன்னை மட்டும்தான் காதலிக்கிறேன்
உன்னைவிட்டால் வேறொருத்தி எனக்கு வேண்டம்
என எழுதி ஏழு பெண்களுக்கு காதலர் தின மடல் அனுப்பினேன்
கணவன்: திருமணத்தின் முன்னர் யாரையாவது காதலித்தாயா?
மனைவி: ...................
கணவன்: ஏன் அமைதியாக இருக்கிறாய்? சொல்லப்பயப்படுகிறாயா?
மனைவி: எதற்கும் எப்போது அவசரம்தான் உங்களுக்கு. என்னை கொஞ்சம் எண்ண விடுக்ங்களேன்!
What is the longest word in the English language?
"Smiles". Because there is a mile between its first and last letters!
விரல் நகங்களைக் கடிக்கும் பழக்கமுள்ள பெண். அதைத் தவிர்க்க யோகா பயிற்ச்சி செய்தாள். இப்போது அவள் கால் நகங்களையும் விட்டு வைப்பதில்லை.
கணவன் நினைப்பது: என் மனைவி என்மேல் மிகவும் அன்பாக இருக்கிறாள். என்னை நன்றாகக் கவனித்துக் கொள்கிறாள். அவள் ரெம்ப நல்லவள்
மனைவி நினைப்பது: என் கணவன் என் மேல் மிகவும் அன்பாக இருக்கிறார். என்னை நன்றாகக் கவனித்துக் கொள்கிறார். நான் நல்ல அழகி.
First Sardar Ji: What are the fastest means of communication ?
Second Sardar Ji: Telephone, Television, Tell-a-woman
Need still FASTER - Tell her NOT to tell ANY ONE.
ஆப்கானிஸ்த்தானில் ஏன் தாலி கட்டுவதில்லை?
அங்கு தாலி-பான் இருக்கிறது.

Thursday, 16 February 2012
நகைச்சுவைக்கதை: சவுதியில் சவுக்கடி வாங்கிய இந்தியனும் பாக்கிஸ்த்தானியும் இலங்கையனும்.
சவுதி அரேபியாவில் முன்று நண்பர்கள் வேலை செய்து கொண்டிருந்தர். ஒருவர் இந்தியன், மற்றவர் பாக்கிஸ்த்தானி, மூன்றாமவர் இலங்கையர். மூவரும் ஒரு வெள்ளிக் கிழமை களவாக மதுபானம் அருந்திக் கொண்டிருந்த வேளையில் காவல்துறையினரிடம் பிடிபட்டுவிட்டனர். நீதிமன்றில் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதாக இருந்தது. ஆனால் அவர்களுக்கு தண்டனை வழங்கும் நாள் மன்னரின் 18வது மனைவியின் 19வது பிறந்த தினம் என்பதால் அவர்களுக்கு மரண தண்டனைக்குப் பதிலாக 20சவுக்கடிகள் கொடுப்பதாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
சவுதி மன்னருக்கு முன்னர் சவுக்கடி கொடுக்க மூவரும் நிறுத்தப்பட்டனர். அன்று மன்னரின் மூத்த மனைவியின் கடைசி மகளின் 40வது பிறந்த தினம் என்பதால் மன்னர் சற்று மகிழ்ச்சியுடன் இருந்தார். முதலில் இங்கை இளைஞனுக்கு சவுக்கடி கொடுக்க அழைத்து மன்னர் சொன்னார் "நீ ஒரு சிறிய அழகிய நாட்டைச் சேர்ந்தவன். எனவே உனக்கு 20 சவுக்கடி கொடுக்க முன்னர் உனக்கு வேண்டியதைக் கேள்" என்றார். அதற்கு இலங்கை இளைஞன் சவுக்கால் அடிக்கும் போது என் முதுகில் ஒரு தலையணையைக் கட்டி விடுங்கள் என்றான். ஆனால் நாலாவது சவுக்கடியில் தலையணை கிழிந்து தும்பாகப் பறந்து விட்டது. மீதி சவுக்கடிகளைத் துடிக்கத் துடிக்க வாங்கி மயங்கி விழுந்தான்.
பின்னர் இந்திய இளைஞன் மன்னர் முன்னர் நிறுத்தப்பட அவர் "நீ ஒரு பெரிய நாட்டைச் சேர்ந்தவன். நீண்ட கால வரலாற்றைக் கொண்ட நாட்டைச் சேர்ந்தவன். எனவே சவுக்கடிக்கு முன்னர் உனது விருப்பத்தைச் சொல்" என்றார். அதற்க்கு இந்திய இளைஞன் "என் முதுகில் இரண்டு தலையணைகளைக் கட்டி விடுங்கள்" என்றான். அப்படியே இரண்டு தலையணைகள் இந்திய இளைஞன் முதுகில் கட்டப்பட்டன. ஆனால் பாவம் இந்திய இளைஞன்! ஆறு சவுக்கடிகளில் இரண்டு தலையணைகளும் கிழிந்து தும்பு தும்புகளாகிவிட்டன. மீதி 14 சவுக்கடிகளும் இந்திய இளைஞன் முதுகில் மூச்சுத் திணறத் திணற விழுந்தன. இறுதியாக பாக்கிஸ்த்தானிய இளைஞன் சவுதி மன்னர் முன்னர் நிறுத்தப்பட்டான். நீ ஒரு இசுலாமியனாக இருப்பதால் நீ உனக்கு வேண்டியவை இரண்டைக் கேள் என்றார் மன்னர். பாக்கிஸ்த்தானிய இளைஞன் கைகட்டி வாய் பொத்தி மன்னருக்கு சலாம் போட்டபடி "மன்னா எனது முதல் விருப்பம் எனக்கு 20இற்குப் பதிலாக 100 சவுக்கடிகள் கொடுங்கள். எனது இரண்டாவது விருப்பம் எனக்குச் சவுக்கடி கொடுக்க முன்னர் என் முதுகில் எனது இந்திய நண்பனைக் கட்டி விடுங்கள்" என்றான் பணிவாக.

Wednesday, 15 February 2012
சித்தம் சிதறடித்தவள் நீ
விலங்கல் வேளையில்
பரன் முன்றில்
என் நெஞ்சம் விண்டு
நோகடித்தவள் நீ
அனங்கன் ஐவாளியென
ஆங்கவன் தேவியுருவில்
விழியெதிரில் வந்தவள் நீ
அம்பொற்கைலைக் கூத்தன்
போல் என்னை காதல்
பிச்சா பாத்திரமேந்த வைத்தவள் நீ
நீல நெடுமூண் நெற்றி நிலவாக
அதன் கீழிரு விழிகள் மின்னலாக
சித்தம் சிதறடித்தவள் நீ
பரன் முன்றில்
என் நெஞ்சம் விண்டு
நோகடித்தவள் நீ
அனங்கன் ஐவாளியென
ஆங்கவன் தேவியுருவில்
விழியெதிரில் வந்தவள் நீ
அம்பொற்கைலைக் கூத்தன்
போல் என்னை காதல்
பிச்சா பாத்திரமேந்த வைத்தவள் நீ
நீல நெடுமூண் நெற்றி நிலவாக
அதன் கீழிரு விழிகள் மின்னலாக
சித்தம் சிதறடித்தவள் நீ
Tuesday, 14 February 2012
ஐநா மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு என்ன நடக்கும்?
நாற்பத்தேழு நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகத்தின் 19வது கூட்டத் தொடர் 27-02-2012இல் இருந்து 23-03-2012 வரை 26 நாட்கள் சுவிட்சலாந்தின் ஜெனிவா நகரில் நடக்கவிருக்கிறது. இதில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் வருமா என்பது இப்போது பெரிதாக அடிபடுகிறது. இலங்கைப் போர்க்குற்றம் தொடர்பாக உரத்துக் குரல் கொடுத்துவரும் கனடாவும் ஒஸ்ரேலியாவும் இந்த 47 நாடுகளில் அடங்கவில்லை. இவை இரண்டிற்கும் அடுத்தபடியாகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் பிரித்தானியாவும் உறுப்புரிமையுள்ள 47 நாடுகளில் இல்லை. இந்தியா, சீனா, இரசியா போன்ற இலங்கையைப் போர்க்குற்றத்தில் இருந்து பாதுகாக்கக்கூடிய நாடுகளும் இலங்கைக்குப் பொறுப்பற்ற விதத்தில் ஆதரவு தெரிவிக்கக் கூடிய மலேசியா, பங்களாதேசம் போன்ற நாடுகள் உறுப்புரிமையுடன் உள்ளன.
இலங்கையை இந்தியாவை விட 19 நாடுகள் ஆதரிக்கும்.
47 நாடுகளில் இந்தியாவை விட வேறு 19 நாடுகள் ஆதரவு வழங்கும் சாத்தியம் உள்ளன. அண்மைய நிகழ்வுகளின் பின்னர் மாலைதீவு இலங்கைக்கு சாதகமான நிலையை எடுக்காமல் போகலாம். லிபியாவும் அப்படியே. இவ்விரண்டு நாடுகளும் தற்போது உறுப்புரிமை பெற்றுள்ளன. கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் சில ஆபிரிக்க நாடுகளும் சில தென் அமெரிக்க நாடுகளும் இலங்கைக்கு ஆதரவு நிலையை எடுக்கலாம்.
இம்முறை இந்தியா எப்படிச் சதி செய்யும்?
2009-ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தை ஐநா மனித உரிமைக் கழகத்தில் கொண்டுவந்த போது அதை இந்தியா பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக மாற்றி ஈழத்தமிழர்களுக்கு எதிரான பெரும் துரோகத்தைப் புரிந்தது. இந்தியாவின் வற்புறுத்தலின் பேரில் தென் ஆபிரிக்கா இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது. இம்முறை 47 நாடுகளில் இலங்கைக்கு 19 நாடுகள் ஆதரவு தரக்கூடிய நிலையில் இந்தியாவின் நிலைப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. இதைக்கணக்கிட்ட ஐக்கிய அமெரிக்கா ஏற்கனவே இந்தியாவுடன் இதுபற்றிப் பேச்சு வார்த்தை நடாத்தியுள்ளது. இந்தியா பாரதப் போரில் கண்ணன் எடுத்த நிலைப்பாட்டை எடுக்கலாம். கண்ணன் பாண்டவர்களுடன் ஆயுதம் ஏந்தாமல் நிற்க கண்ணனின்யாதவப் படைகள் துரியோதனாதியருடன் சேர்ந்து நின்றன. இது போல இந்தியா அமெரிக்காவுடன் சேர்ந்து நின்று கொண்டு சில நாடுகளை இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கச் சதி செய்யலாம். இலங்கைப் போர்க்குற்றத்தில் இந்தியாவைச் சிக்கவைக்கக்கூடிய ஆதாரங்கள் இலங்கையிடம் உண்டு என்று ஒரு இந்தியப் அரசியல் ஆய்வாளர் தெரிவித்திருந்தமையை இங்கு கவனத்திற் கொள்ள வேண்டும்.
காணமற்போன ஐநா நிபுணர் குழு அறிக்கை
ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு அறிக்கையைப் பற்றி இப்போது ஐக்கிய அமெரிக்கா அதிகம் பேசுவதாகத் தெரியவில்லை. கடந்த சில மாதங்களாக இந்த அறிக்கை காணமற்போய் இருந்தது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் இந்த நிபுணர்குழு அறிக்கைபற்றி வலியுறுத்தியது. இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர்குழுவின் பரிந்துரைகளை ஐ.நா நடைமுறைபடுத்த வேண்டும் என்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், ஐ.நா பாதுகாப்புச் சபை, ஐ.நா மனித உரிமைகள் பேரவை மற்றும் ஏனைய அமைப்புகளுக்கு அனுப்பப்படவுள்ளது.
புலம்பெயர் தமிழர்கள் அமைப்புக்கள்
1983-ம் ஆண்டு இலங்கையில் இனக்கலவரம் என்ற போர்வையில் இனக்கொலை நடைபெற்றமையைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகக் கூட்டங்களில் இலங்கைத் தமிழர் தரப்பும் பங்கு கொள்கின்றன. ஆனால் இலங்கையில் இந்தியாவும் அவர்களிடையே பிளவுகளை ஏற்படுத்தியும் சிலரைத் தங்கள் கைக்கூலிகளாக்கியும் உள்ளன. அதில் ஒருவர் இப்போது மனித உரிமைகளைப் பற்றிப் பேசுவதை விடுத்து தமிழர்கள் இந்தியாவிற்கு வால் பிடிப்பதே மிக முக்கியம் என்று கூறுவதையே தனது தலையான கடமையாகக் கொண்டுள்ளார்.
தண்டனையும் இருக்காது கண்டனமும் இருக்காது வேண்டுகோள்கள் மட்டுமே இருக்கும்.
27-02-2012இல் ஆரம்பமாக விருக்கும் ஐநா மனித உரிமைக் கழகத் கூட்டத் தொடரில் இலங்கைக்கு தண்டனை கொடுக்கக் கூடியதாகவோ அல்லது கண்டனம் தெரிவிக்கக் கூடியதாகவோ தீர்மானங்கள் நிறைவேற்றப்பட மாட்டாது. இலங்கைக்கு சிலவேண்டுதல்களை விடுவிக்கும் தீர்மானமே நிறைவேற்றப்படும். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுதல், போர்க்குற்றம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுதல், மனித உரிமைகளை மேம்படுத்துதல், தமிழர்களுடன் இணக்கப்பாடு ஏற்படுத்தக் கூடிய வகையில் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணுதல், சிறையில் விசாரணையின்றி இருப்போரை விடுதலை செய்தல் போன்றவை ஒரு வேண்டுகோளாக விடுக்கப்படும். திரை மறைவில் சரத் பொன்சேக்காவை விடுவிக்க நிர்ப்பந்திக்கப்படும்.

Sunday, 12 February 2012
பாக்கிஸ்தான் பத்திரிகையில் ஈழப் போர்க்குற்றம் விபரிக்கப்பட்டுள்ளது.
ஈழத் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட போர்க்குற்றம் இப்போது உலகின் பல நாடுகளில் உள்ள ஊடகங்களில் பிரபலமாக அடிபடுகிறது. ஆர்ஜெண்டீனாவில் இருந்து வெளிவரும் இணையத்தளம் ஈழத் தமிழர்களிற்கு இழைக்கப் பட்ட கொடுமைகள் பற்றி வெளியிட்டபோது அதை இரண்டு மில்லியன்களுக்கு மேற்பட்டவர்கள் பார்வையிட்டனர். இப்போது பாக்கிஸ்த்தானில் இருந்து வெளிவரும் Dawn என்னும் பத்திரிகை ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை தனது கருத்துரைப் பத்தியில் வெளியிட்டுள்ளது.
பாக்கிஸ்த்தானுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையில் ஒரு நீண்டகாலப் பகையுண்டு. பாக்கிஸ்தான் ஈழத் தமிழர்களை வெறுப்பதற்கு முக்கிய காரணம் ஈழத் தமிழர்களுக்கு இந்தியாமீது இருக்கும் அல்லது இருந்த பாசம். 1971இல் நடந்த பங்களாதேச விடுதலைப் போரில் ஈழத் தமிழர்களும் அரசியல் தலைவர்களும் பங்களாதேச மக்களை ஆதரித்தனர். அப்போது இலங்கையினூடாக பாக்கிஸ்த்தான் போர் விமானங்கள் பறப்பதை இலங்கைப் பாராளமன்றத்தில் தமிழ் உறுப்பினர்கள் எதிர்க்குரல் கொடுத்தனர் குறிப்பாக அப்போது உடுவில் பாராளமன்ற உறுப்பினராக இருந்த தர்மலிங்கம் அவர்கள் கடுமையாக எதிர்த்தார். பின்னர் பாக்கிஸ்தானில் நடந்த பாராளமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் பங்குபற்றச் சென்றிருந்த சாவகச்சேரி பாராளமன்ற உறுப்பினர் வி என் நவரத்தினம் அவர்களை பாக்கிஸ்தானில் "நீ தர்மலிங்கத்தின் கட்சியா?" எனக் கேட்டதுமுண்டு.
ஈழ விடுதலைப் போரில் சிங்களவர்களுக்கு உதவுவதில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் அடுத்தபடியாக பாக்கிஸ்தான் திகழ்ந்தது. ஆனால் சீனாவும் பாக்கிஸ்த்தானும் இந்தியாவைப் போல் தமிழர்களைக் கொல்வதில் நேரடியாக களத்தில் இறங்கிச் செயற்படவில்லை.
பாக்கிஸ்த்தானில் இருந்து வெளிவரும் Dawn என்னும் பத்திரிகையில் சொல்லப்பட்டவை:
2009இல் தமிழ் புலிகளுக்கு எதிராக நடந்த கொடூரமான போரில் இறுதிப் பகுதியில் இலங்கைப் படையினர் செய்ததாகக் குற்றம் சாட்டப்படும் போர்க்குற்றங்களிற்கு இலங்கை அரசைப் பொறுப்புக் கூற வைக்க பன்னாட்டுச் சமூகம் முன்னெடுப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
அடுத்தமாதம் ஜெனிவாவில் நடக்க விருக்கும் மனித உரிமைக் கழகக் கூட்டத்தில் சமர்ப்பிக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு பாக்கிஸ்த்தான் தடையாக இருக்கக்கூடாது. தற்போது இலங்கை அதிபர் பாக்கிஸ்தானிற்கு மூன்று நாள்ப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பூர்வாங்க விசாரணையின் படி இலங்கைப் படைகள் போரை நடத்திய விதம் முழு பன்னாட்டுச் சட்டங்கள் மீதான ஒரு தாக்குதலைப் பிரதிபலிக்கிறது. போரின்போது ஐந்து மாதங்களில் மட்டும் நாற்பதினாயிரத்திற்கு மேலான பொது மக்கள் கொல்லப்பட்டனர். உண்மையில் கொல்லப்பட்டவர்கள் இன்னும் அதிகமாக இருக்கலாம்.
கொழும்பு புலிகளிற்கு எதிரான போரில் வெற்றி கண்டமையைப் பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றியாகப் பிரசாரம் செய்து வருகிறது. அதைத் தனது தெரிவு எனத் தெரிவிக்கிறது. போராட்டக்காரர்களுக்கும் பொதுமக்களுக்கும் வேறுபாடின்றி அனைவரையும் சாட்சியமின்றி கொழுத்தியதை மோசமாக திரித்துக் கூறுகிறது இலங்கை அரசு.
2009 ஜனவரி மாதத்திற்ககும் மே மாதத்திற்ககும் இடையில் இலங்கையின் வட பகுதியின்திவிரவாதிகளின் சிறு நிலப்பரப்பில் சிக்குண்டிருந்த பல இலட்சக் கணக்கான மக்கள் மீது பத்திரிகையாளர்களையும் பன்னாட்டுத் தொண்டர்களையும் வெளியேற்றி விட்டு இலங்கைப்படையின கண் மூடித்தனமாக எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டனர். இதனால் அங்கு நடந்தவைபற்றிக் கூற ஒருவரும் இல்லை. ஒவ்வொருவரும் தங்கள் மயிரிழையில் தப்பியதைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கும் போதே அவர்கள் உயிர்கள் பிரிக்கப்பட்டன.
மண்ணாலான பதுங்கு குழிகளில் இருந்து மிகையொலி விமானங்களில் இருந்தும் பல் குழல் ஏவு கணைச் செலுத்திகளில் இருந்தும் வீசப்பட்ட குண்டுகளில் இருந்து தப்பிய மனநிலை பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உணவும் நீரும் மறுக்கப்பட்ட நிலையில் நரக வாழ்க்கை வாழ்ந்ததைக் கூறுகின்றனர். போரில் ஓய்வு ஏற்பட்டபோது வெளிவந்த மக்கள் துண்டிக்கப்பட்ட காலகளையும் மரத்தில் தொங்கும் குழந்தைகளின் தலைகளையுமே கண்டனர். அந்த இடைவெளியில் இறந்த உடல்களை நாய்கள் உண்ணாமல் இருக்க அவசர அவசரமாக மண்ணில் புதைத்தனர்.
அரைவயிற்றை மக்கள் தங்களிடமிருந்த சிறிதளவு அரிசியில் சமைக்கப்பட்ட கஞ்சியால் சிரமப் பட்டு நிரப்பிக் கொண்டனர். பட்டினியால் ஒரு ஓன்பது வயதுச் சிறுமி தனது நிறையின் அரைவாசியை ஒரு மாதத்தில் இழந்தார். குழந்தையை ஈன்றதாய் தனது தங்க நகைகளை பத்தில் ஒரு பங்கு விலைக்கு விற்றார். இரண்டு கிலோ அரிசிக்காக 16கிராம் தங்கம் பண்டமாற்றுச் செய்யப்பட்டது.
விவசாயிகளும் கடை உரிமையாளர்களும் ஆசிரியர்களும் அரச ஊழியர்களும் நாற்பது தடவைகள் இடம் பெயர்ந்தனர். பசியால் பிள்ளைகள் தவிப்பதைப் பார்க்க முடியாத பெற்றொர்கள் கடலில் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றனர். பிள்ளைகள் தங்கள் சிநேகிதர்கள் உடல் சிதறிக் கொல்லப்படுவதைப் பார்க்க முடியாமல் கைகளால் கண்களை மூடியபடியே இருந்தனர்.
இறுதி நேரத்தில் பதுங்கு குழி வெட்ட முடியாத மணற்தரையில் அகப்பட்ட மக்கள் தங்கள் விலை உயர்ந்த திருமணச் சேலைகளை மண்பை தயாரிக்கப் பயன்படுத்தினர்
போதிய அளவு ஊழியர்களோ மருந்துகளோ இல்லாத தற்காலிக மருத்துவ மனைகள் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு உள்ளாகின. கருவறையிலேயே குண்டடிபட்ட பிள்ளை பிறக்கும் போதே காலில் துளைக்கப்பட்டிருந்த குண்டுடன் பிறந்தது. மருத்துவர்கள் இறைச்சி வெட்டும் கத்திகளை சத்திர சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தினர். தேவாலயத்தில் குண்டால் அடிபட்ட பாதிரியாரின் கால் மயக்க மருந்தின்றி துண்டிக்கப்பட்டது.
பிரேதங்கள் நிறைந்த தண்ணீரூடாகவும் இரத்தக் குட்டைகளூடாகவும் குண்டடிபட்ட மக்கள் வெறும் கால்களுடன் தப்பி ஓடினர். தங்கள் உயிரைக் கையில் பிடித்தபடி காயப்பட்ட உறவினர்களைக் காப்பாற்றக் கூட மூடியாமல் தப்பி ஓடினர்.
தப்பியவர்களில் பலர் தற்கொலை செய்யும் மனோ நிலையில் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியப்படக் கூடிய ஒன்றல்ல. அங்கு கடமையாற்றிய மருத்துவர் ஒருவர் இப்போது இரத்தத்தைக் காணப் பயப்படுகிறார். ஒரு படப்பிடிப்பாளர் வில்லையூடாக பார்க்கும் போது அவருக்கு இறந்த குழந்தைகளின் உடல்கள்தான் தெரிகின்றன. ஒரு கத்தோலிக்க கன்னி தன் கண்ணால் கண்ட காட்சிகளின் பின்னர் கடவுள் மீது தனது நம்பிக்கையைத் தக்கவைக்கப் போராடுகின்றார்.
போர்க்குற்றமும் மாநிடத்திற்கு எதிரான குற்றமும் ஒருதரப்பால் மட்டும் மேற்கொள்ளப்படவில்லை. புலிகளும் மூர்க்கமாக முன்னேறும் படையினருக்கு எதிராக மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தினர். அவர்கள் மக்களைத் தப்பி ஓடாதபடி தடுத்து வைத்தனர். புலிகள் பதின்ம வயதினரை பொருளில்லாத போருக்கு கட்டாயப் படுத்திச் சேர்த்தனர். மே 18-ம் திகதி புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் கொலைகள் முடியவில்லை எஞ்சி இருந்தவர்களைத் துடைத்தழிக்கும் நோக்குடன் காயப்பட்டபடி பதுங்கு குழிகளுக்குள் இருந்தவர்கள் மீது கைக்குண்டுகளை வீசிக் கொன்றனர்.
280,000இற்கு மேற்பட்ட களைப்படைந்த பொது மக்கள் அவர்கள் விருப்பத்திற்கு மாறாக நெருக்கமான இடங்களில் முட்கம்பிகளாலும் ஆயுதம் தாங்கிய படையினர் சூழத் தடுத்து வைக்கப்பட்டனர். ஆயிரக் கணக்கானோர் இலஞ்சம் கொடுத்துத் தப்பித்தனர். உலகின் மிகப் பெரிய தடுப்பு முகாமில் பதினொராயிரத்திற்கு மேலான சந்தேகிக்கப்படும் கிளர்ச்சிக்காரர்கள் விசாராணை ஏதுமின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கண்டபடி கொல்லுதல், குழுக்கற்பழிப்பு, சித்திரவதை போன்றவை போர் முடிந்து ஆண்டுகள் கடந்த பின்னரும் தொடர்கின்றன.
இலங்கை அரசால் செய்யப்பட்ட பிழையான விசாரணைக் குழு அற்புத உலகில் அலிஸ் கதை போல சகல குறைகளையும் புலிகள் மீது சகல குற்றத்தையும் சுமத்திவிட்டு அரசை குற்றமற்றதாக்கிவிட்டது.
மனித உரிமை அமைப்புக்கள் போர்க்குற்றம் தொடர்பான சுயாதின விசாரணை தேவை என வலியுறுத்துகின்றன.
தப்பிய தமிழர்கள் தங்கள் நொருக்கப்பட்ட வாழ்கையை மீள ஆரம்பிக்கவும் இணக்கப்பாட்டிற்கும் உண்மை கண்டறிய்பப்பட வேண்டும் என்கின்றனர். உண்மையின்றி இணக்கப்பாடோ மன்னிப்போ இல்லை. மோதலுக்கு வழிவகுத்த குறைபாடுகள் இப்போதும் தீர்க்கப்படாமலே இருக்கின்றன.

இலங்கையில் அமெரிக்க இந்தியக் கூட்டுச் சதி
இலங்கை இந்தியாவின் பிராந்திய ஆதிக்கத்திற்கு உள்பட்டது என்பதை அமெரிக்கா முழுமையாக ஏற்றுக் கொள்ளாவிடினும் இலங்கையில் இந்தியாவின் சில இணக்கப்பாட்டுடன் காய்களை நகர்த்துவது வழக்கம். இலங்கையை தனது "வழிக்குக் கொண்டுவரும்" அமெரிக்க முயற்ச்சியில் அமெரிக்கா இந்தியாவுடன் அண்மைக் காலங்களாக இணைந்து செயற்படத் தொடங்கியுள்ளது. இலங்கையை தனது "வழிக்குக் கொண்டுவரும்" அமெரிக்க முயற்ச்சியில் முக்கிய அம்சம் இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிரான போர்க் குற்றச் சாட்டும் இந்த மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகக் கூட்டமும் ஆகும். இலங்கை ஆட்சியாளர்கள் இழைத்த போர்க்குற்றம் பற்றி ஆர்ஜெண்டீனாவில் இருந்து பாக்கிஸ்த்தான் வரை பல பத்திரிகைகள் இப்போது பத்தி பத்திகளாக எழுதுகின்றன. இலங்கைப் போர்க்குற்றம் இப்போது தண்டிக்கப்படவேண்டிய ஒன்று என்ற கருத்துருவாக்கம் பன்னாட்டு அரங்கில் வலுப்பெற்று வருகிறது.
இலங்கை போர்க்குற்றம் வலுப்பெற்றமைக்கு முக்கிய காரணம் பன்னாட்டு நெருக்கடிக் குழு, பன்னாட்டு மன்னிப்புச் சபை போன்றவை இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தண்டிக்கப்படாவிட்டால் அது மேலும் பல ஆட்சியாளர்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்து விடும் என்று வலியுறுத்துவதே. இலங்கையின் போருக்கு உதவிய பல நாடுகள் தமிழர்களுக்கு எதுரான போரில் சில ஆயிரம் அப்பாவிகள் கொல்லப்படலாம் என்று எதிர்பார்த்தனர். ஆனால் பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டமையும் சரணடைய வந்தவர்களைக் கொன்றமையும் போருக்கும் பின்னரும் தமிழர்களுக்கு எதிரான மோசமானவன்முறைகள் தொடர்வதும் இனப்பிரச்சனை தீர்வு ஏதும் இன்றி இழுபடுவதும் அந்த நாடுகளில் சிலவற்றிற்கு ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. அந்நாடுகள் ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்ற உணர்வைக் கொண்டுள்ளன.
விசயமில்லாமல் போன "கிருஷ்ண விஜயம்".
இலங்கையை வழிக்குக் கொண்டுவரும் அமெரிக்க இந்தியக் கூட்டு முயற்ச்சியின் ஒரு அம்சமாக இலங்கைக்குச் சென்ற இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவின் இலங்கையில் காதில் பூச்சுற்றி அனுப்பிவிட்டார்கள். இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா தனது பயணத்தின் முடிவில் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது இலங்கை அதிபர் ராஜபக்ச தன்னிடம் 13-ம் திருத்தத்தின் மேல் சென்று தீர்வு வழங்குவதாக உறுதியளித்தார் என்றார். அதற்குப் பின்னர் ராஜபக்ச தனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே தான் அப்படி ஒரு வாக்குறுதி இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவிற்கு வழங்கவில்லை என்றார். அப்படியென்றால் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் தான் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் செய்தது போல் யாரோ யாருக்கோ எழுதிய வைத்ததை கொழும்புப் பத்திரிகையாளர் மாநாட்டில் வாசித்தாரா? அல்லது இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பொய் சொன்னாரா? அல்லது மஹிந்த பொய் சொல்கிறாரா? இதுவரை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா மௌனமாக இருப்பது ஏன்?
அமெரிக்காவின் அதிரடிக் காய் நகர்த்தல்கள்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் பரிதாபகரமான இலங்கைப் பயணத்தைத் தொடர்ந்து அமெரிக்க அரசத் துறைச் செயலர் ஹிலரி கிளிண்டன் இந்திய அதிகாரிகளுடன் திடீர்ப் பேச்சு வார்த்தை ஒன்றை மேற்க் கொண்டார். அமெரிக்காவின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான விசேட தூதுவர்(The US ambassador at large for war crimes) Stephen Rapp இலங்கைக்கு அனுப்பப்பட்டார். அத்துடன் நிற்காமல் மத்திய மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி அரசத் துறைச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் இலங்கை அனுப்பப்பட்டார்.
அமெரிக்கச் சதி.
அமெரிக்காவிடம் இலங்கைப் போர்க்குற்றம் தொடர்பான ஆதாரங்கள் நிறைய உண்டு. அமெரிக்கா அதை தனது தேவைக்குப் பாவிக்கும் என்று இலங்கையில் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த போது இங்கு அதைப்பற்றி எழுதப்பட்டது அதைக் காண இங்கு சொடுக்கவும்: எல்லாவற்றையும் மேலுக்கு இருந்து ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
அமெரிக்கா தன்னிடம் உள்ள போர்க்குற்ற ஆதாரங்களை முன்வைத்து இலங்கையை மிரட்டி தன் வழிக்குக் கொண்டுவந்துவிட்டதாக லங்காஇநியூஸ் இணையத் தளம் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவுடன் செய்யவிருக்கும் இரகசிய உடன்பாட்டில் அதில் மூன்று முக்கிய அம்சங்கள் பகிரங்கப்படுத்தப் பட்டுள்ளன:
1. முன்னாள் படைத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு மன்னிப்புக் கொடுத்து விடுதலை செய்தல்.
2. இலங்கை அமைத்த நல்லிணக்கத்திற்கான ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற கால அட்டவணையுடன் கூடிய ஒரு செயற்திட்டத்தை உருவாக்குதல்.
3. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் ஒரு உடன்படு ஒப்பந்தம் செய்தல்.
இன்னொரு போர்க்குற்றவாளியான சரத் பொன்சேகாவை அமெரிக்கா தனது கைக்கூலி என்பதற்காகப் பாதுகாக்கிறது.
இலங்கை அமைத்த நல்லிணக்கத்திற்கான ஆணைக் குழுவின் பரிந்துரைகள் ஏற்கனவே தமிழர்களால் நிராகரிக்கப்பட்டவையே. அதில் எந்த அளவிலான அதிகாரப் பரவலாக்கம் தமிழர்களின் பிரச்சனைக்குத் தீர்வாக அமையும் என்று சொல்லப்படவில்லை. திம்புக் கோட்பாட்டின் அடிப்படையில் தீர்க்கப்படவேண்டும் என்ற நிர்ப்பந்தம் பிரயோகிக்கப்படாமல் தவிர்தது அமெரிக்காவின் சதியே. நல்லிணக்க ஆணைக்குழு போர்க்குற்றம் நிகழ்ந்ததாக தெரிவிக்கவே இல்லை. இங்கு ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளும் அதில் குறிப்பிட்டுள்ள போர்க்குற்றம் மற்றும் மானிடத்திற்கு எதிரான குற்றங்கள் பற்றி கருத்தும் புறந்தள்ளப்பட்டுள்ளது. சிங்களவர்களுடன் ஒப்பந்தம் செய்து சலித்துப் போன தமிழர் தரப்பு மீண்டும் ஒரு ஒப்பந்தம் அவர்களுடன் செய்யப் போகிறதா?
1981இல் அமெரிக்கக் கைக்கூலியும் தந்தை செல்வாவின் மருமகனுமான பேராசிரியர் ஏ ஜே வில்சன் (இன்னோரு கைக்கூலியான நீலன் திருச் செல்வமும் அவருடன் இணைந்திருந்தார்) இலங்கையில் தங்கி இருந்து இலங்கை இனப்பிரச்சனைக்கு மாவட்ட சபைதான் ஒரு தீர்வு என்று அவரின் ஆலோசனைகளுடனும் பங்களிப்புக்களுடனும் முன்வைக்கப்பட்ட மாவட்ட சபைத் திட்டத்தை தமிழர் விடுதலைக் கூட்டணியினர் ஏற்க மறுத்த போது அதை ஏற்றும் கொள்ளும்படி அமெரிக்கா வற்புறுத்தியது. மாவட்ட சபைத் தேர்தலில் கூட்டணியினர் பங்கு பற்றினர். விளைவு யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. தமிழர்கள் மீது மேலும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. மாவட்ட சபைத் திட்டத்தை முன்வைத்த பேராசிரியர் ஏ ஜே வில்சன் அப்போது ஒரு கருத்தையும் கூறியிருந்தார். "இதிலும் பார்க்கக் கூடுதலான அதிகாரம் தமிழர்களுக்கு ஒரு அரசு வழங்கினால் அது தற்கொலைக்கு ஒப்பானதாகும்". அப்போது சிங்களவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா உதவும் என்று அஞ்சி இருந்தனர். இப்போது தமிழர்களுக்கு உதவ ஒருவரும் இல்லை என்று சிங்களவர்கள் நம்புகின்றனர். இந்த நிலையில் மஹிந்த ராஜபக்ச தப்பித் தவறி ஒரு அதிகாரப் பரவலாக்கத்தை தமிழர்களுக்கு கொடுக்க முன்வந்தால் அரசியல் வங்குரோத்து நிலையில் இருக்கும் ஜேவிபி எனும் பேரினவாதக் கட்சியும் பௌத்த அடிப்படை வாதிகளான ஜாதிக ஹெல உருமயவும் தமது அரசியல் செல்வாக்கை வளர்க்க தமிழர்களுக்கான அதிகாரப் பரவலாக்கத்தை எதிர்க்கும். தங்கள் நாட்டை விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவிக்க தமது இன்னுயிர் நீத்த சிங்களப் படை வீரர்களின் தியாகத்தை மஹிந்த நாட்டை மீண்டும் நாசமாக்குகிறார். நாடு மீண்டும் பிளவு படப்போகிறது என்ற கருத்தை முன்வைக்கும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தும் இதற்கு ஆதரவான ஒரு கருத்தைக் கொண்டவர்கள் களமிறங்கி ராஜபக்சக்கள் நாட்டைக் காட்டிக் கொடுக்கிறார்கள் என்று களமிறங்கும். பௌத்த பிக்குக்கள் தெருவில் இறங்கிப் போராடுவார்கள். தொழிற் சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யும். ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் ராஜபக்சவின் ஆட்சி கவிழும் சூழ்நிலை உண்டாகும். இவை மட்டுமல்ல இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு அதிகாரப் பரவலாக்கம் செய்யப்படுவதை டில்லியின் தென்மண்டலப் பார்ப்பனர்கள் எப்படியும் சதி செய்து தடுப்பார்கள். பண்டா செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது போல் அமெரிக்கா முன்வைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு-ராஜபக்ச ஒப்பந்தம் கிழித்தெறியப்படும்.

Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...