இந்திய கஷ்மீரில் எல்லை
தாண்டிச் சென்று செய்த தாக்குதல் சிறியதென்றாலும் அது உலகிலேயே மிகவும்
பிரச்சனைக்குரிய எல்லையில் செய்த தாக்குதலாகும். உளவாடல் தகவல் திரட்டல்
திட்டமிடல் இரகசியம் பேணல் வேவுபார்த்தல் இரகசியமான ஊடுருவல் ஆகியவற்றை இந்தியப்
படையினர் திறம்படச் செய்துள்ளனர். அதையும் ஆளணி இழப்பு ஏதும் இன்றிச்
செய்துள்ளனர். பாக்கிஸ்த்தானின் உளவாடலிலும் வேவுபார்த்தலிலும் மோசமாகக் கோட்டை
விட்டுள்ளது. செய்த தாக்குதல் ஓர் அறுவைசார் நடவடிக்கை (Surgical Operation) என இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. Surgical Operation என்பது தெரிவு செய்யப்பட்ட
இலக்கு மீது இலக்கிற்கு மட்டும் சேதம் விளைவிக்கக் கூடிய தாக்குதலாகும். அத்துடன்
எந்தவித (Collateral Damage) பக்கவிணைச் சேதாரங்களையும் ஏற்படுத்தாது.
எரியும் கஷ்மீர்
எரியும் கஷ்மீர்
2016 ஜூலை மாதம் கஷ்மீர் ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவரான
புர்ஹான் வானி என்பவரை இந்தியப் படையினர் கொன்ற பின்னர் இந்தியா ஆக்கிரமித்துள்ள கஷ்மீரில்
இந்தியாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அதற்கு எதிராக இந்தியப் படையினர் கடுமையான
தாக்குதல்களை மேற்கொண்டனர். பரவலான ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டன. கஷ்மீர்
மக்கள் பெரும் துயரத்துக்கு உள்ளாக்கப் பட்டனர். அரச இயந்திரம் செயற்பட முடியாத நிலையில்
பெருமளவு இந்தியப் படையினர் களமிறக்கப்பட்டனர். இந்தியப் படையினர் ரப்பர் குண்டுகளை சிறுவர்கள் முகங்களை நோக்கிச் சுட்டு பலரைப் பார்வை இழக்க்ச் செய்தனர். இந்துத்துவா பாரதிய ஜனதாக் கட்சியுடன்
கூட்டணி அமைத்துள்ள மக்கள் மக்களாட்சிக் கட்சியின் கஷ்மீர் மாநில அரசு மீதான மக்களின்
நம்பிக்கை பெருமளவில் வீழ்ச்சியடைந்தது. இந்திய நடுவண் அரசு மீதான கஷ்மீர் மக்களின்
நம்பிக்கையும் வீழ்ச்சியடைந்தது. ஆர்ப்பாட்டம் செய்பவர்களை இஸ்லாமியத் தீவிரவாதிகளாகவும்
பாக்கிஸ்த்தானின் கைக்கூலிகளாகவுமே இந்தியத்தரப்பில் இருந்து பார்க்கப்பட்டது. இதைத்
தொடர்ந்து ஊறியில் இந்திய முகாம் மீது பாக்கிஸ்த்தானில் இருந்து வந்ததாக நம்பப்படும்
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதற்கு முன்னர் 2016 ஜனவரி மாதம் கஷ்மீரில் செயற்படும்
ஐக்கிய ஹிஹாத் சபை என்னும் அமைப்பு கஷ்மீரில் உள்ள இந்தியாவின் பதாங்கொட் விமானப்
படைத்தளம் மீது தாக்குதல் நடத்தி இந்திய விமானப் படையைச் சேர்ந்த மூவரைக் கொன்றனர்.
தாக்குதல் சட்டபூர்வமானதா?
அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர்
ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் இந்தியா
எல்லை தாண்டிச் சென்ற படை நடவடிக்கை பன்னாட்டு நியமங்களுக்கு இசைவானதாகக்
கருதப்படுகின்றது. இந்தியா பல தடவைகள் பாக்கிஸ்த்தானிற்கு அங்கு செயற்படும்
தீவிரவாதிகள் தொடர்பான தகவல்களையும் எச்சரிக்கைகளையும் விடுத்திருந்தது. அதற்கு
ஏற்ப பாக்கிஸ்த்தான் நடவடிக்கை எடுக்காதவிடத்தில் இந்தியாவிற்கு ஒரு படை நடவடிக்கை
எடுக்கும் முகாந்திரம் உண்டு.
இலக்குத் தெரிவு
இந்தியப் பாதுகாப்புத்
துறையினர் தமது நாட்டுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவும் பாதைகளையும் அவர்களது நடமாட்டங்களையும்
தொடர்ந்து கண்காணித்து அவர்களின் இருப்பிடங்களை அறிந்து கொண்டனர். இந்திய
உளவுத்துறையினரையும் இந்தியாவின் செய்மதி அவதானிப்பு நிபுணர்களையும் படையினர்
இதற்குப் பயன்படுத்தினர். இதன் மூலம் தாம் தாக்குதல் செய்ய வேண்டிய பாய்ச்சுதல் திண்டுகளை () அவர்கள் இனம் கண்டு கொண்டனர். அவற்றில்
இறுதியில் நான்கு இடங்களை தெரிவு செய்து தாக்குதலுக்குத் திட்டமிட்டனர். அவை Bhimber, Hot Springs, Leepa and Kel ஆகும். தெரிவு செய்யப் பட்ட நான்கு வீச்சுத் திண்டுகள் (Launch Pads) இடங்களில் இருந்து
இந்தியாமீது தாக்குதல் நடக்கவிருக்கின்றது என்ற நிலை வரும்போது மட்டுமே அவற்றின்
மீது தாக்குதல் செய்யவும் என இந்திய அரசு படையினருக்கு உத்தவிட்டது. இதனால் அந்த
நான்கு இலக்குகளும் செய்மதிகள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன. பல நாடுகள் இந்தியாவின் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பிரான்ஸ் படைத்துறையில் உதவி செய்யவும் முன்வந்துள்ளது.
இரகசியம்
தாக்குதல் திட்டம் பற்றி
பிராந்தியத் தளபதிகளுக்கு மட்டுமே தெரிவிக்கப்பட்டது. இறுதியில் எல்லையோர
மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கும் அறிவிக்கப் பட்டது. உளவுத் துறையினரும்
செய்மதித் துறையினரும் Bhimber, Hot Springs, Leepa and Kel ஆகிய நான்கு வீச்சுத் திண்டுகளிலும் நடவடிக்கைகள்
அதிகரித்திருப்பதாகத் தகவல் தெரிவித்தனர். தாக்குதலுக்கான இறுதி முடிவு 2016
செப்டம்பர் மாதம் 27-ம் திகதி செவ்வாய்க் கிழமை எடுக்கப்பட்டது. இந்தியாவின்
19படைப்பிரிவிலும் 25படைப்பிரிவிலும் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட படைவீரர்கள்
தாக்குதல் நடப்பதற்குப் பலநாட்களுக்கு முன்னராகவே அழைக்கப்பட்டு அவர்களுக்குப்
பயிற்ச்சிகள் வழங்கப்பட்டன. இந்தியாவின்
வட முனைப் படைத் தளபதி தாக்குதலுக்கான தளபதியாக நியமிக்கப்பட்டார். ஊரித்
தாக்குதலைத் தொடர்ந்து இந்தியத் தரைப் படைத்துறையின் உச்ச தளபதியான ஜெனரல் தல்பிர்
சிங் சுஹாக் வடமுனை கட்டளைப் பணிமனைக்குச் சென்றிருந்தார். 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் திகதி நள்ளிரவு
கடந்து 30 நிமிடங்களுக்குப் பின்னர் அதாவது வியாழன் அதிகாலை 00-30 மணியளவில்
தாக்குதல் தொடங்கப்பட்டது. தாக்குதலை அடுத்து பாக்கிஸ்த்தான் பதில் தாக்குதலை
மேற்கொண்டால் அதற்கு தயாரான நிலையில் இருக்கும் படி புதன்கிழமைதான் பல பிராந்தியத்
தளபதிகளுக்கு கட்டளை வழங்கப்பட்டது. இந்திய பாக்கிஸ்த்தான் எல்லையில்
முப்படையினரும் உச்ச விழிப்புடன் இருக்கும் படி உத்தரவிடப்பட்டது. தெரிவு செய்யப்பட்ட சிறப்புப் படையினர்
கட்டுப்பாட்டு எல்லையில் பரசூட் மூலம் இறக்கப் பட்டனர். அவர்கள் நான்கு
பிரிவுகளாகச் செயற்பட்டனர். நான்கு இலக்குகளையும் தாக்குவது அவர்களது பணியாகும். மூன்று
கிலோ மீட்டர் தூரம் வரை அவர்கள் பயணித்து தாக்குதல்களை மேற்கொண்டனர். அவர்களுக்கு
உழங்கு வானூர்திகள் துணையாகச் சென்றன. இரண்டு பாக்கிஸ்த்தானியப் படையினர் கொல்லப்பட்டதுடன் முப்பது தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பிரிஐ தெரிவிக்கின்றது.
பாக்கிஸ்த்தானின் மறுப்பு
இந்தியப் படையினர் எல்லை தாண்டிச் சென்றதை
பாக்கிஸ்த்தானியப் படையினர் கடுமையாக மறுத்துள்ளனர். அது இந்தியாவால் புனையப்பட்ட
புளுகுக் கதை என்றனர். இந்தியா ஒரு எறிகணைத் தாக்குதலைத் தொடங்கியது. பின்னர்
இருதரப்பினரும் செய்த எறிகணைத் தாக்குதலில் இரு பாக்கிஸ்த்தானியப் படையினர்
கொல்லப் பட்டதாகவும் பாக்கிஸ்த்தான் சொன்னது. ஆனால் இந்த தாக்குதலுக்கு
பாக்கிஸ்த்தானின் மிக உயர் மட்டத்தில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிந்திக் கிடைத்த செய்தி: ஒரு இந்தியப் படை வீரரை பாக்கிஸ்த்தான் கைப்பற்றி வைத்துள்ளது.
பிந்திக் கிடைத்த செய்தி: ஒரு இந்தியப் படை வீரரை பாக்கிஸ்த்தான் கைப்பற்றி வைத்துள்ளது.
ஐயப்படும் தி டிப்ளோமட் ஊடகம்
இந்தியாவிடம் ஓர் அறுவைசார் நடவடிக்கை (Surgical Operation) செய்யும் திறன் இருக்கின்றதா என்பதில் ஐயம் உள்ளதாக தி
டிப்ளோமட் என்னும் ஊடகம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்தியாவிடம் துல்லியமாகத்
தாக்கும் வழிகாட்டல் ஏவுகணைகள் இல்லை என்கின்றது அது. இந்தியாவிடம்
இரசியாவிடமிருந்து வாங்கிய GPS guided munition called the
Krasnopol மட்டும்தான் இருக்கின்றது. தரைவழி அல்லது உழங்குவானூர்தி
வழி அறுவைசார் படை நடவடிக்கை செய்வதற்கு கஷ்மீர் உகந்த இடமல்ல எனவும் தி டிப்ளோமட்
ஊடகம் சொல்கின்றது. செய்த தாக்குதல் காணொளிப் பதிவு செய்யப்பட்டதாக இந்தியா தெரிவித்தது. ஆனால் தாக்குதல் விபரம் வெளிவிடப்படவில்லை. அமெரிக்காவின் நியூயோர்க் ரைம்ஸ் நாளிதழுக்குப் பேட்டியளித்த பாக்கிஸ்த்தான் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீரில் இந்தியா தாக்குதல் செய்ததாகக் சொல்லப்படும் இடங்களைச் சூழவுள்ள மக்கள் தாம் எந்த ஒரு கொல்லப்பட்ட தீவிரவாதியின் உடல்களையும் காணவில்லை என்றும் எங்கும் பொரு இறப்பு இறுதி நிகழ்வுகள் நடக்கவில்லை என்றும் தெரிவித்தனர். இது மோடியின் பரப்புரை நாடகமா என்ற கேள்வியும் அதில் எழுப்பப்பட்டுள்ளது. கஷ்மீரில் இந்தியா எழு இலட்சம் படையினரையும் பாக்கிஸ்த்தான் இரண்டு இலட்சம் படையினரையும் நிறுத்தியுள்ளன. இருதரப்பினருக்கும் இடையிலான எல்லைப் பகுதி உலகிலேயே மிகத் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் பிரதேசமாகும். அதில் எல்லை தாண்டிப்போய் தாக்குதல் நடத்துவது என்பது இயலாத காரியம் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பல தடவைகள் பாக்கிஸ்த்தானில் இருந்து தீவிரவாதிகள் எல்லை தாண்டிச் சென்று தாக்குதல்கள் நடத்திக் கொண்டே இருக்கின்றனர். இந்தியப் படைகளும் பல தடவை எல்லை தாண்டிச் சென்று இரகசியத் தாக்குதல்கள் செய்கின்றது.
பாக்கிஸ்த்தான் பொத்திக்கிட்டு இரு
தாக்குதல் முடிந்ததும் அமெரிக்காவிற்கான
இந்தியத் தூதுவர் அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு அதுபற்றி அறிவிக்கப்பட்டது.
மேலும் படை நடவடிக்கைகள் இருக்கக் கூடாது என அமெரிக்கப் படைத்தரப்பில்
இந்தியாவிடம் தெரிவிக்கப்பட்டது. பாக்கிஸ்த்தானைப் பொத்திக் கொண்டு இருக்கும்படி
அமெரிக்கா மூலம் பணிப்பு விடுக்கவே அமெரிக்காவிற்குத் தெரிவிக்கப்பட்டிருக்கலாம்.
பதில் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அமெரிக்கா பாக்கிஸ்த்தானிடம்
தெரிவித்திருக்கும் என ஊகிக்க யாரும் ஒரு விஞ்ஞானியாக இருக்க வேண்டும் என்றில்லை.
கேரளக் கோழிக் கூட்டில் மோடியின் சவால்
கேரள நகரான கோழிக்கூட்டில் நரேந்திர மோடி
உரையாற்றிய போது வேலையில்லப் பிரச்சனை ஒழிப்பு, வறுமை
ஒழிப்பு, கல்வியறிவின்மை ஒழிப்பு ஆகியவற்றில் இந்தியாவுடன்
போட்டியிடும் படி பாக்கிஸ்த்தானுக்கு சவால் விட்டார். ஊறித் தாக்குதலுக்குப்
பதிலடி கொடுக்காமல் மோடி இப்படிப் பேசுகின்றார் என்ற கண்டனம் பல தரப்பில்
இருந்தும் எழுந்தது.
கேந்திரோபாய தடை - strategic
restraint
2012-ம் ஆண்டு பாக்கிஸ்த்தானில்
இருந்து ஊடுருவியதாகக் கருதப்படும் தீவிரவாதிகள் இந்தியப் படையினரை தலைகளை
வெட்டிக் கொலை செய்தனர். அதற்கு முன்னர் 2008-ம் ஆண்டு பாக்கிஸ்த்தானில் இருந்து
திவிரவாதிகள் படகு மூலம் மும்பாய் சென்று தாக்குதல் நடத்தினர். அப்போதெல்லாம்
இந்தியா கேந்திரோபாய தடையக் (strategic restraint) கடைப்பிடித்தது. அப்போது பாக்கிஸ்த்தான் மீது தாக்குதல்
நடத்தப்பட்டிருக்க வேண்டும் எனப் பல கண்டனங்கள் எழுந்தன. இந்தத் தாக்குதல் மிகவும்
காலம் கடந்ததும் காத்திரமற்றதுமான ஒரு தாக்குதல் என்ற குற்றச்சாட்டு வரத் தவறவில்லை.
இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கென்றே லக்சர் இ தொய்பா, லக்சர் இ ஜங்வி ஆகிய தீவிரவாத அமைப்புக்கள் பாக் அரசின் உதவியுடன்
செயற்படுவதாக நம்பப்படுகின்றது.
அரசுறவியல் தனிமைப்படுத்தல்
அண்மைக்காலங்களாக பாக்கிஸ்த்தானை அரசுறவியல் ரீதியில் தனிமைப்படுத்தும் முயற்ச்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் பாக்கிஸ்த்தான் மீது இந்தியா கடும் வார்த்தைகளைப் பாவித்துத் தாக்குதல் நடத்தியது. பாக்கிஸ்த்தானில் நடக்கும் சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணிக்கப் போவதாக அறிவித்தது அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்த்தான் பூட்டான் பங்களாதேசம் ஆகிய நாடுகளும் புறக்கணிக்கப் போவதாக அறிவித்தன. இதனால் 2016 நவம்பரில் பாக்கிஸ்த்தானில் நடக்க விருக்கும் தெற்காசியப் பிராந்திய ஒத்துழைப்பு நாடுகளின் உச்சி மாநாடு ஒத்தி வைக்கப்படலாம் என அஞ்சப் படுகின்றது. வல்லரசு நாடுகளுடன் இந்தியா தொடர்ச்சியாகத் தொடர்பு கொண்டு பாக்கிஸ்த்தான் இந்தியாவிற்கு எதிராக தாக்குதல் செய்யும் தீவிரவாதிகளை வளர்த்து வருவதாகத் தெரிவித்து அதற்கு எதிரான தனது நிலைப்பாட்டிற்கு ஆதரவு கோரி வருகின்றது. ஏற்கனவே சில நாடுகள் இந்தியாவுடன் மோதலைத் தவிர்க்கும் படி பாக்கிஸ்த்தானுக்குத் தெரிவித்துள்ளன.
இரு இனக்கொலையாளிகள்
இந்திய ஆக்கிரமிப்பில் உள்ள கஷ்மீரில் 1989-ம் ஆண்டின் பின்னர் 92,000 பேருக்கு மேல் இந்தியப்படையினரால் கொல்லப்பட்டனர். பாக்கிஸ்த்தானில் ஆண்டு தோறும் ஐநூறுக்கு மேற்பட்ட சியா இஸ்லாமியர்கள் கொல்லப்படுகின்றனர். இரு நாடுகளும் ஈழத்தில் நடந்த இனக்கொலைக்கு உதவி செய்து கொண்டிருக்கும் நாடுகளாகும்.
அரசுறவியல் தனிமைப்படுத்தல்
அண்மைக்காலங்களாக பாக்கிஸ்த்தானை அரசுறவியல் ரீதியில் தனிமைப்படுத்தும் முயற்ச்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் பாக்கிஸ்த்தான் மீது இந்தியா கடும் வார்த்தைகளைப் பாவித்துத் தாக்குதல் நடத்தியது. பாக்கிஸ்த்தானில் நடக்கும் சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணிக்கப் போவதாக அறிவித்தது அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்த்தான் பூட்டான் பங்களாதேசம் ஆகிய நாடுகளும் புறக்கணிக்கப் போவதாக அறிவித்தன. இதனால் 2016 நவம்பரில் பாக்கிஸ்த்தானில் நடக்க விருக்கும் தெற்காசியப் பிராந்திய ஒத்துழைப்பு நாடுகளின் உச்சி மாநாடு ஒத்தி வைக்கப்படலாம் என அஞ்சப் படுகின்றது. வல்லரசு நாடுகளுடன் இந்தியா தொடர்ச்சியாகத் தொடர்பு கொண்டு பாக்கிஸ்த்தான் இந்தியாவிற்கு எதிராக தாக்குதல் செய்யும் தீவிரவாதிகளை வளர்த்து வருவதாகத் தெரிவித்து அதற்கு எதிரான தனது நிலைப்பாட்டிற்கு ஆதரவு கோரி வருகின்றது. ஏற்கனவே சில நாடுகள் இந்தியாவுடன் மோதலைத் தவிர்க்கும் படி பாக்கிஸ்த்தானுக்குத் தெரிவித்துள்ளன.
இரு இனக்கொலையாளிகள்
இந்திய ஆக்கிரமிப்பில் உள்ள கஷ்மீரில் 1989-ம் ஆண்டின் பின்னர் 92,000 பேருக்கு மேல் இந்தியப்படையினரால் கொல்லப்பட்டனர். பாக்கிஸ்த்தானில் ஆண்டு தோறும் ஐநூறுக்கு மேற்பட்ட சியா இஸ்லாமியர்கள் கொல்லப்படுகின்றனர். இரு நாடுகளும் ஈழத்தில் நடந்த இனக்கொலைக்கு உதவி செய்து கொண்டிருக்கும் நாடுகளாகும்.
போர் வருமா
இந்தியாவும் பாக்கிஸ்த்தானும் ஆசியப் பிராந்தியத்தில்
உள்ள நேர வெடி குண்டுகளாகும். அமெரிக்காவும் இரசியாவும் ஒன்றன் மீது ஒன்று அணுக்குண்டு
வீசுவதற்கான வாய்ப்புகளிலும் பார்க்க பாக்கிஸ்த்தானும் இந்தியாவும் ஒன்றின் மீது
ஒன்று வீசுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். பாக்கிஸ்த்தானை இப்போது அடக்காவிடில்
எப்போதும் அடக்க முடியாது என இந்தியப்படையினர் கருதுகின்றனர். 2008-ம் ஆண்டே அரபிக்
கடல் ஓரமாக பாக்கிஸ்த்தான் மீது ஒரு கடல் முற்றுகையைத் தொடுத்து அதன் மீது தாக்குதல்
நடத்தும் திட்டத்தை இந்தியப் படையினர் முன் வைத்தனர். அரசியல்வாதிகள் அதை ஏற்றுக்
கொள்ளவில்லை. தற்போது உள்ள பாரதிய ஜனதா அரசு காங்கிரசு அரசிலும் பார்க்க பாக்கிஸ்த்தான்
மீது அதிக வன்மம் கொண்டுள்ளது. அது மட்டுமல்ல இந்தியப் படையினர் செய்த அறுவைசார் படை
நடவடிக்கை பற்றி இனி பாரதிய ஜனதாக் கட்சியினர் அதிகம் பெருமைப் பரப்புரை செய்யும்
போது அது பாக்கிஸ்த்தானிய மக்களை ஆத்திரமூட்டச் செய்யும். இந்தப் பரப்புரையும் ஆத்திரமூட்டலும்
பாக்கிஸ்த்தானியப் படையினரை பதிலடி கொடுக்கத் தூண்டலாம். அது பெருமைப் பரப்புரைச்
செய்யும் பாரதிய ஜனதாக் கட்சியினரின் ஆணவத்தின் மீதான அடியாக விழும் போது ஒரு போர்
உருவாகும் ஆபத்து உண்டு.