Saturday, 16 April 2011
தடை செய்யப்பட்ட விளம்பரங்களும் தவறான விளம்பரங்களும்.
சைவ சாப்பாடு நல்லது என்பத வேறு விதமாகச் சொல்லக் கூடாதா?
காரோட்டக்காரனுக்கு பிள்ளை பிறந்தால் இப்படித் தான் இருக்குமா?
வாகனங்கள் ஓட்டும் போது வேறு வேலைகள் செய்தல் ஆபத்து என்பதை இப்படி விளம்பரப்படுத்தினர்.
சிகரட் புகைப் பிடித்தலுக்கு இப்படி விளம்பரம்.
புகைத்தல் தீது என்பதற்கு இப்படி விளம்பரம்.
என்ன கொடுமை இது. இதை தடை செய்து விட்டார்கள்
இது 18+ விளம்பரமாம்..
பீர் விளம்பரம் - தலை சீவலா? சவரமா? தடை செய்யப்பட்டு விட்டது வன்முறையானது என்று.
தொலைநோக்கிக்கு(binoculars) இப்படியா - zoomes too much...
இதை ஏன் தடை செய்தார்கள்?
குவளை விளம்பரம்.
யோகா வகுப்பிற்கு இப்படி.
பேருந்தில் மற்றவர்களை நேரம் கேட்டுத் தொல்லை கொடுக்கத் தேவையில்லை. கைக்கடிகார விளம்பரம்.
உணவகம்.....
தக்களிச் சட்னி. ஏன் இந்தக் கோலமோ???
தலைக் கவசம்
எந்த சதை?
பெப்சி குடிக்க இப்படி ஆசை.
பிரித்தானிய மகாராணி பீர் குடிக்கட்டாம். தடை செய்து விட்டார்கள்.
மிருகக் காட்சிச் சாலை
மவனே வாலாட்டினியோ தொலைச்சுப்புடுவேன்
இலங்கைப் போர்க் குற்றம்: நீதிபதியின் ஆசனத்தில் குற்றவாளி
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரில் இலங்கை அரசால் இழைக்கப்பட்ட போர்க்குற்றம் பற்றிய பன்னாட்டு மட்ட விசாரணை தேவை பல தமிழர் அமைப்புக்களும் பல மனித உரிமை அமைப்புக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. நீண்ட இழுத்தடிப்புக்களுக்குப் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன் இலங்கையில் நடந்தவை தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்க ஒரு நிபுணர் குழுவை அமைத்தார். இந்தோனேசியாவைச் சேர்ந்த முன்னாள் சட்டமா அதிபர் மர்சுகி டறுஸ்மன் (Marzuki Darusman), தென்னாபிரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் சட்டவாளர், நீதியாளர் யஸ்மின் சூகா (Yasmin Sooka), அமெரிக்காவைச் சேர்ந்த சட்டத்துறைப் பேராசிரியர் ஸ்ரிவன் ரட்னர் (Steven Ratner) ஆகியோர் இந்த ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது.
இலங்கையில் நடந்தது ஒரு இனக்கொலை என்று பலரும் கருதுகிறார்கள். மனித உரிமை அமைப்புக்கள் இலங்கையில் நடந்தவற்றை போர்க் குற்றம் என்று குறிப்பிட்டன. ஐநா ஆலோசனைச் சபை போர்க் குற்றம் என்ற அடிப்படையில் அமைக்கப்படவில்லை. இலங்கையின் இறுதிப் போரில் நடந்தவை தொடர்பாக வகைசொல்லல்(Accountability) தேவை என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டது. பான் கீ மூன் அமைத்தது ஒரு விசாரணைக் குழு அல்ல ஆலோசனைக் குழுவே.
இனக்க்கொலை போர்க் குற்றமாகி, போர்க்குற்றம் வகைசொல்லலாகியுள்ளது.
பக்கிஸ்த்தானில் பெனாசிர் பூட்டோ கொலை தொடர்பாக விசாரித்த ஐக்கிய நாடுகள் சபையின் குழு விசாரணை முடிந்தபின்னர் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி அதில் ஊடகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தது. ஆனால் இலங்கை தொடர்பாக அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழு இதுவரை எந்த ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பையும் நடத்தவில்லை.
ஐநா அதிபரின் ஆலோசனைக் குழுவின் அறிக்கையை இதுவரை ஐநா தரப்பு பகிரங்கப்படுத்தவில்லை. ஐநாவின் வழமைப்படி மதிப்புரவின்(courtesy) நிமித்தம் இலங்கையிடம் அறிக்கையின் ஒரு பிரதி வழங்கப்பட்டது. அறிக்கையில் சில பகுதிகள் இலங்கையில் சில ஊடகங்களில் பகிரங்கப்படுத்தப்பட்டு அது தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஐநா அதிபரின் ஆலோசனைக் குழுவின் அறிக்கை தொடர்பாக தனது "தீர்ப்பை" இலங்கை வழங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு எதிராக அறிக்கை விடும்படி தனது நட்பு நாடுகளைத் தூண்டி வருகிறது. இந்தியாவுடன் இலங்கை இது தொடர்பாக ஆலோசித்து வருகிறது.
ஐநா அதிபரின் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அடுத்த கட்டத்திற்கான ஆரம்பம் மட்டுமே. அறிக்கைக்குப் பின்னர் ஐநா என்ன செய்யும்? ஐநாவின் பாதுகாப்புச் சபையில் சீனா, இரசியா ஆகிய இரு நிரந்தர உறுப்பினர்களும் தற்காலிக உறுப்பினரான இந்தியாவும் நிச்சயம் இலங்கைக்குச் சாதகமாக நடந்து கொள்ளும். அமெரிக்க நிலைப்பாடு இலங்கைக்கு எதிராக இல்லை. ஐநா அதிபரின் ஆலோசனைக் குழுவின் அறிக்கை இலங்கைக்கு "வகைசொல்லல்" இற்கு உதவி செய்யும் என்று அமெரிக்கா தெரிவிக்கிறது.
ஐநா அதிபரின் ஆலோசனைக் குழுவின் அறிக்கை இலங்கைக்கு எதிராக அமையும் என்று நாம் எல்லோரும் கருதிக் கொண்டு இருக்கையில் அது இலங்கைக்கு ஒரு சொத்தாக அமையும் என்று அமெரிக்கப் பேச்சாளர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்:
- I think that we believe that the Lessons Learnt commission and Reconciliation commission were good steps. But we believe also that the UN Panel of Experts is a useful asset and should be taken advantage of by the government.
Friday, 15 April 2011
நேட்டோவிற்குள் லிபியா தொடர்பாக நெருக்கடி.
லிபியத் தலைவர் மும்மர் கடாஃபி தொடர்ந்து தந்திரமாக தனது எதிரிகளைக் குழப்பும் தகவல்களையும் அறிக்கைகளையும் பேச்சு வார்த்தை அழைப்புக்களையும் விட்டு வருகிறார். அவரை எதிர்க்கும் கிளர்ச்சியாளர்களிடை ஒரு ஒழுங்காகன கட்டமைப்புக் கொண்ட படையணிகள் இல்லை. போதிய அளவு ஆயுதங்களும் இல்லை. அவர்களிடை முரண்பாடுகளும் காணப்படுகிறது. அவர்களிடை பல முரண்பாடுகளும் உண்டு.
பிரான்ஸ் இன் முன்னெடுப்புடன் நேட்டோ அமைப்பு கடாஃபியை பதவியில் இருந்து அகற்ற அப்பாவி மக்களைப் பாதுகாப்பது என்ற போர்வையில் மும்மர் கடாஃபியின் படை நிலைகள் மீது தொடர்ந்து தாக்குதல்களை மேற் கொண்டு வருகிறது.
தேக்க நிலையில் இருக்கும் போர்
நேட்டோவின் தொடர்ச்சியான குண்டு வீச்சுக்கள் கடாஃபியின் படைகளின் பலத்தை பாதித்ததாகத் தெரியவில்லை. கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் முன்னேற முடியாத ஒரு தேக்க நிலையிலேயே இருக்கிறார்கள். லிபியா மீதான தாக்குதல் எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக நேட்டோவுக்குள் ஆரம்பத்தில் இருந்தே கருத்து வேறுபாடு இருக்கிறது. நேட்டோவில் இருக்கும் ஒரே ஒரு முசுலிம் நாடான துருக்கி மற்ற நாடுகளிலும் பார்க்க வித்தியாசமான கருத்தைக் கொண்டுள்ளது. நேட்டோ தனது முயற்சிகளை லிபியாவில் இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்தல் விடுத்துள்ளன. அமெரிக்கா லிபியாவில் பிரான்ஸ் பிரித்தானியாவிலும் பார்க்க குறைந்த அக்கறையைக் காட்டுகிறது. லிபியாவில் கடாபிக்கு எதிரான நடவடிக்கைகள் தேக்க நிலையை அடைந்தமைக்கு அமெரிக்காவே காரணம். ஜேர்மனி கடாஃபிக்கு எதிரான நடவடிக்கைகளில் பங்கு கொள்ளவில்லை. நேட்டோவின் 28 நாடுகளில் 14 நாடுகள் மட்டு மே கடாஃபிக்கு எதிராக செயற்படுகின்றன. நேட்டோவில் இருந்து அடிக்கடி தாம் ஒற்றுமையாக இருக்கிறோம் என்று அறிக்கைகள் வருவது எங்க அப்ப குதிருக்குள் இல்லை என்பது போன்றதே.
ஐரோப்பிய பலம்
லிபியத் தலைவர் மும்மர் கடாஃபிக்கு எதிரான நடவடிக்கை பன்னாட்டு அரங்கில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பலத்தை சோதனை செய்வதற்கான ஒரு களம் என்று சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்
கடாஃபிக்கு எதிராக லிபியப் பணம்
வெளிநாடுகளில் உள்ள லிபியாவின் சொத்துக்களை முடக்கி வைத்திருக்கும் ஆபிரிக்க ஐரோப்பிய அமெரிக்க அரசுகள் அச்சொத்துக்களை கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களிடம் திட்டத்தைத் தீட்டியுள்ளன. தனக்கு எதிராக சொத்து முடக்கம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீண்டகால்த்துக்கு முன்பரே உணர்ந்த கடாஃபி தனது சொத்துக்களில் பெரும் பகுதியை தனது நாட்டிலேயே தங்கங்களாக சேமித்து வைத்திருக்கிறார். அவரிடம் இருக்கும் தங்கங்களின் மதிப்பு 6.5பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சம்மானது. இதை வைத்துக் கொண்டு அவரால் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியும்
Thursday, 14 April 2011
புத்தாண்டாம் இன்று புதிதாக ஓன்றும் இல்லை.
நாராயணன் மேல் நாரதனுக்கு
வந்தகாமத்தால் பிறந்தவை
அறுபது பிள்ளைகளாம்
அதில் ஒன்று இன்றாம்
புத்தாண்டாம் இன்று
புதிதாக ஓன்றும் இல்லை
மீனுக்குள் இருந்த சூரியன்
ஆட்டுக்குள் புகுந்ததாம்
நாட்டுக்குள் பல தொல்லைகள்
நாடுகளிடைப் பல பிரச்சனைகள்
புத்தாண்டாம் இன்று
புதிதாக ஓன்றும் இல்லை.
அடுத்துக் கெடுத்த அதே
பழைய இந்தியா
காட்டிக் கொடுத்த அதே
பழைய துரோகிகள்
பாரமுகமாய் இருந்த அதே
பழைய உலக சமூகம்
புத்தாண்டாம் இன்று
புதிதாக ஓன்றும் இல்லை.
அதே பழைய அட்டூழியக்
கும்பலின் ஆட்சி
ஆரியப் பிணம் தின்னிப் பேய்களின்
ஆதரவுடன் ஆணவச் சிங்களம்
புத்தாண்டாம் இன்று
புதிதாக ஓன்றும் இல்லை.
பஞ்சாங்கம் எடுத்து
இலாப நட்டம் பார்த்து
கந்தாய பலன்களும் பார்த்து
விடிவு வருமா என ஏங்கும் கூட்டம்
புத்தாண்டாம் இன்று
புதிதாக ஓன்றும் இல்லை
Wednesday, 13 April 2011
ஐநா சொதப்பல்: அறிவிக்கப்படாத அறிக்கை பற்றி இலங்கை அறிக்கை.
இலங்கையில் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை இந்திய வற்புறுத்தலின் பேரில் பலநாடுகள் பயங்கரவாத முத்திரை குத்தி, பன்னாட்டு ரவுடிக் கும்பல்கள் தமிழர்களை ரவுண்டுகட்டித் தாக்கி தமிழர் போராட்டத்தை ஒடுக்கினர். வெறி கொண்ட சிங்களப் பேரினவாதம் இந்தியப் பேரினவாதிகளின் உதவியுடன் தமிழர்களுக்கு எதிராக மோசமான போர்க் குற்றம் புரிந்தது.
தமிழர்கள் முன்வைக்கும் குற்றச் சாட்டுக்கள்:
- மக்கள் ஒரு சிறிய பிரதேசத்துக்குள் முடக்கப்பட்டனர்.
- பாதுகாப்பு வலயங்களில் என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வீசப்பட்டன
- தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பாவிக்கப்பட்டன.
- உணவு, உடை, நீர், மருத்துவ வசதிகள் அவர்களைச் சேருவது தடுக்கப்பட்டன.
- மருத்துவ மனைகள், மக்கள் குடியிருப்புக்கள், வணக்கத்தலங்கள் மீது கண்மூடித்தனமான குண்டுகள் வீசப்பட்டன.
- சரணடைய வந்தோர் கொல்லப்பட்டனர்.
- மக்கள் உயிரோடு புதைக்கப் பட்டனர்.
- சரணடைந்தவர்கள் ஜெனிவா உடன்படிக்கைக்கு ஏற்ப நடத்தப்படவில்லை.
- இலட்சக் கணக்கான மக்கள் வசதிகள் ஏது மற்ற நிலையில் தடுத்து வைக்கப்பட்டனர்.( இலங்கா ரத்னா இந்து ராம் அவை இந்தியாவில் இருப்பவற்றிலும் பார்க்க வசதியான இடங்கள் என்று பிதற்றினார்.)
இந்தோனேசியாவைச் சேர்ந்த முன்னாள் சட்டமா அதிபர் மர்சுகி டறுஸ்மன் (Marzuki Darusman), தென்னாபிரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் சட்டவாளர், நீதியாளர் யஸ்மின் சூகா (Yasmin Sooka), அமெரிக்காவைச் சேர்ந்த சட்டத்துறைப் பேராசிரியர் ஸ்ரிவன் ரட்னர் (Steven Ratner) ஆகியோர் இந்த ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்தனர். அந்த ஆலோசனைக் குழு நீண்ட இழுத்தடிப்பிற்குப் பின்னர் தனது விசாரணைகளை ஆரம்பித்தது. நீண்ட இழுத்தடிப்பிற்குப் பின்னர் அந்த ஆலோசனைக் குழு தனது அறிக்கையை அறிக்கையை ஏப்ரல் 12-ம் திகதி பான் கீ மூனிடம் சமர்ப்பித்தது.
ஐநாவின் வழமைப்படி மதிப்புரவின்(courtesy) நிமித்தம் இலங்கையிடமும் அறிக்கையின் ஒரு பிரதி வழங்கப்பட்டது. அறிக்கை பகிரங்கப் படுத்தப்படுமா என்பது பற்றியோ அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் படும் என்பது பற்றியோ எதுவும் தெரியவில்லை. பகிரங்கப் படுத்தப் படாத அறிக்கை பற்றி இலங்கை மதிப்புரவை மீறி தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அது அந்த அறிக்கை அடிப்படையில் பல தவறுகளைக் கொண்டுள்ளது; பல குறைபாடுகளைக் கொண்டுள்ளது; பாராபட்சமான பல தகவல்கள் எவ்வித உறுதிப்படுத்தலுமின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கை அரசு மதிப்புரவை மீறி பகிரங்கப் படுத்தப்படாத அறிக்கை பற்றி தனது கருத்தைத் தெரிவித்தது தவறாகும்.
இலங்கையின் குத்துக் கரணம்
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை இன்னும் இலங்கைக்கு கையளிக்கப்படவில்லை என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஐநா செயலதிபரின் ஆலோசனைக் குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப் படவேண்டும் என்று பன்னாட்டு மன்னிப்புச் சபையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் வேண்டுகோள் விடுத்துள்ளன.
ஐநா செயலதிபரின் ஆலோசனைக் குழுவின் அறிக்கை வெளிவர முன்னரே இலங்கை அதற்கான தாயார் படுத்தலில் இறங்கிவிட்டது. தமிழ்நாட்டில் மாநில அரசுத் தேர்தல் நடந்த படியால் இந்தியாவால் பகிரங்கமாக உதவ முடியாது என்றபடியால் இலங்கைக்கு உதவ சீனா முன் வந்தது. அறிக்கை வெளிவர முன்னரே இலங்கையில் வெளி நாட்டுத் தலையீடுகள் இருக்கக் கூடாது என்று சீனாவும் பாலஸ்த்தீனமும் அறிக்கை விட்டன. ஐநா செயலதிபரின் ஆலோசனைக் குழுவின் அறிக்கை தனக்கு சாதகமாக இருக்காது என்று இலங்கைக்கு முன்கூட்டியே தெரியும் என்றபடியால் தான் இந்த சீன பாலஸ்த்தீன அறிக்கைகள் வெளிவந்தன. இது ஐநாவின் நேர்மையில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
Tuesday, 12 April 2011
நகைச்சுவைக் கதை: நரகத்தில் இத்தாலிச் சனியாள்
இத்தாலிச் சனியாள், ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன் ஆகிய மூவரும் இறந்து நரகத்திற்குப் போனார்கள். அங்கு அவர்கள் நிறைய கோழிக் குஞ்சுகள் இருக்கும் ஒரு தோட்டத்தில் அடைத்துவிடப்பட்டனர். மூவருக்கும் பெரும் கவலை தமக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகிறதோ என்று. அங்குள்ள காவலன் அவர்களுக்கு சொன்னான் நீங்கள் இங்கு உள்ள கோழிக் குஞ்சுகளை மிதிக்காமல் இருக்கும் வரை உங்களுக்கு எந்த விதமான தண்டனையும் கிடையாது.
எங்கு பார்த்தாலும் கோழிக்குஞ்சுகள். ஆனாலும் இத்தாலிச் சனியாள், ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன் ஆகிய மூவரும் கவனமாக இருப்பதாக முடிவெடுத்தனர். ஆனால் மறு நாளே அங்குள்ள தொலைக் காட்சியில் தாளம் படப்பாடல்கள் ஒளிபரப்பானதைப் பார்த்து மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த ஐஸ்வர்யா ராய் ஒரு கோழிக் குஞ்சை மிதித்து விட்டார். உடனே அவர் இடி அமீனுடன் ஒரு தனி அறையில் வைத்துப் பூட்டப்பட்டார்.
ஒரு வாரம் இத்தாலிச் சனியாளும் தீபிகா படுகோனும் மிகக் கவனமாக இருந்தார்கள். ஆனால் உடம்பு முழுவதும் மறைக்கும் ஆடையை அணியும் அவர்களுக்குக் கொடுத்த போது தீபிகா படு கோபத்தில் துள்ள ஒரு கோழிக் குஞ்சு மிதிபட்டது. தீபிகா மா ஓ சே துங்குடன் ஒரு அறையில் வைத்துப் பூட்டப்பட்டார்.
இப்போது சனியாள் மிகக் கவனமாகத் தான் இருந்தார். ஒரு கோழிக் குஞ்சு கூட மிதிபடவில்லை. ஆறு மாதங்கள் ஓடியது. ஒரு நாள் திடீரென சனியாள் ஹிரித்திக் ரோஷனுடன் வைத்து ஒரு தனியறையில் பூட்டப் பட்டார். மகிழ்ச்சி தாங்க முடியவில்ல சனியாளுக்கு. ஹிரித்திக் ரோஷன் கவலையுடன் சொன்னார் இரு கோழிக் குஞ்சுகளை ஒரேயடியாக மிதித்து விட்டேன்.
Monday, 11 April 2011
ஹைக்கூ : பெரு மூச்சுக்களின் தீயில் எழுகின்ற நெருப்பு
பெரு மூச்சுக்களின் தீயில்
எழுகின்ற நெருப்பு
காதல்
எம்மொழியும் பேசும்
எல்லா நாடும் செல்லும்
பணம்
தேவையான அதிகாரம்
மட்டுப்படுத்தப்பட்ட சேவை
பேச்சுரிமை
காதலின் நாக்கு
உள்ளத்தின் தூதுவன்
கண்கள்.
திருந்த மறுக்கும் மனிதர்களை
மாற்றக் கொடுக்கும் கைப்பொம்மை
மதம்
பணத்தால் வாங்க முடியாது
பணமிருந்தால் தேடி வருவது
காதல்
மாற்றான் தோட்டதில் பிடுங்க முடியாதது
எம் வீட்டில் பயிரிட்டுப் பெற வேண்டியது
மகிழ்ச்சி மலர்
Sunday, 10 April 2011
சோனியா காந்தியின் கூற்றைப் பொய் என்கிறது கொழும்பு ஊடகம்
காங்கிரசு அரசு தான் இலங்கையில் 2008/09 இல் தான் போரை நிறுத்தி பேச்சு வார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று வெளியில் பொய் சொல்லிக் கொண்டு திரை மறைவில் இலங்கையுடன் சேர்ந்து இனக் கொலையை செய்தது யாம் அனைவரும் அறிந்தது. இப்போது சோனியா காந்தி புதிதாக ஒரு பொய்யை அவிழ்த்து விட்டுள்ளார்.
சென்னையில்2011 ஏப்ரல் 5-ம் திகதி நடைபெற்ற திமுக கூட்டணி பிரசார பொதுக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்துகொண்டு பேசியது:
- தமிழர்கள் அனைத்து உரிமைகளுடன் கண்ணியமாக தலைநிமிர்ந்து வாழும் வகையில் தேவையான மாற்றங்களை அரசியல் சட்டத்தில் செய்ய வேண்டு மென்று மத்திய அரசு இலங்கையை வற்புறுத்தி வருகிறது. இப்பிரச்னையில் இயன்ற அனைத்தையும் இந்தியா செய்யும்.
டெய்லி மிரர் பத்திரிகையின் வாசகர்: நீ இப்படித்தான் பகிரங்கமாகக் கூறுவாய். திரை மறைவில் நீ சொல்வதும் செய்வதும் உன்னை யாரென்பதை உணர்த்தும்.
இப்படி ஒருவர் எழுதினார்: Shame you are the only one with a shallow mind and rotten brain.
எல்லாவற்றிற்கும் மேலாக ஞாயிறுப் பத்திரிகை ஒன்றில் சோனியா காந்தியின் பொய் பற்றி எழுதிய ஓர் அரசியல் விமர்சகர் கடுமையாக சோனியா காந்தியைச் சாடியுள்ளார்:
- According to Sonia Gandhi, current President of India’s ruling Congress Party, ‘India is pressing Sri Lanka to amend the constitution to guarantee and ensure equal rights and equal status to Sri Lankan Tamils’. Now I know that politicians are not the most informed people on earth and I know that power not only corrupts, it makes people arrogant and stupid, but on all counts, this statement really puts Ms. Gandhi into serious contention for the Dumbest Gaffe Award, except of course for the danno-danithi clause.
- சோனியா காந்தி விபரமறியாதவர்.
- அதிகாரமுள்ளவர்கள் ஊழல் செய்பவர்களாகவும் ஆணவம் கொண்டவர்களாகவும் முட்டாள்களாகவும் இருப்பர்.
- சோனியா காந்தி உலக மகா முட்டாள் விருதுக்கு தகுதியுடையவர்.
தமிழ்நாட்டில் ஒரு அரசியல் முள்ளி வாய்க்கால்
தமிழ்நாட்டில் காங்கிரசுக் கட்சி 63 இடங்களில் போட்டியிடுகிறது என்பது தமிழின உணர்வாளர்களுக்கு ஒரு தோல்வியான நிகழ்வாகும். காங்கிரசைப் பொறுத்தவரை இலங்கையில் தமிழர்களை அடக்கிவிட்டது. இலங்கையில் அது நடந்து கொண்டவிதம் தமிழ்நாட்டுத் தமிழர்கள் இனி கனவிலும் ஒர் உரிமைப் போர் பற்றி சிந்திக்கக் கூடாது என்ற ஒரு படிப்பினையை அவர்களுக்கு ஊட்டும் செயலாகும். தமிழ்நாட்டுத் தேர்தலில் காங்கிரசுக் கட்சி நடந்து கொள்ளும் விதம் திராவிடக் கட்சிகளை அடக்கி ஒடுக்குவதற்கான ஒரு நகர்வாகும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தை இனி பதவியில் இருந்து அகற்றுவதே காங்கிரசுக் கட்சியின் திட்டம். துக்ளக் சோவின் வழிகாட்டலின்படி செயற்படும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு திராவிடக் கட்சியல்ல. இலங்கையில் நடந்தது தமிழர்களுக்கு எதிரான படைத்துறை முள்ளிவாய்க்கால் என்றால், தமிழ்நாட்டில் இன்று நடந்து கொண்டிருப்பது தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு எதிரான ஒர் அரசியல் முள்ளி வாய்க்கால்.
தேர்தல் செல்லாக் காசுகளான தமிழின உணர்வாளர்கள்
சோவின் வழிகாட்டலின்படி ஜெயலலிதா காய்களை நகர்த்தி வை. கோபாலசாமியை செல்லாக் காசு ஆக்கிவிட்டார். ஏற்கனவே நெடுமாறன் தமிழருவி மணியன் போன்ற தமிழின உணர்வாளர்கள் தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை செல்லாக் காசுகளே. இவர்களால் ஒரு தொகுதியின் வெற்றியைத் தன்னும் தீர்மானிக்கக் கூடிய வாக்கு வங்கி இல்லை. திருப்பி அடிப்பேன் என்கிற சீமான் யாருக்கு, எங்கே, எப்போத, எப்படி அடிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 2007-ம் ஆண்டில் இருந்தே காங்கிரசுக் கட்சி தனது "தோழமைக் கட்சி" திமுகவை மிரட்டி தான் நினைத்தபடி ஆட்டி வைக்கத் தொடங்கிவிட்டது. திமுகவிற்கு எதிராக மத்திய அரசின் கையில் இருக்கும் ஆதாரங்களை வைத்து காங்கிரசு திமுகவை இலகுவாக மிரட்டிக் கொண்டிருக்கிறது. இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கும் போது சிவ சங்கர மேனன், நாராயணன், பிரணாப் முஹர்ஜி போன்றோர் அடிக்கடி வந்து கருணாநிதியைச் சந்திப்பர். அது இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை தொடர்பாகவும் அங்கு போர் நிறுத்தம் ஏற்படுத்துவது தொடர்பாகவும் கருணாநிதியைச் சந்திப்பதாக வெளியில் கூறப்பட்டது. ஆனால் இலங்கையில் நடக்கும் போரில் தமிழர்கள் கொன்றொழிக்கப் படும் போது அதற்கு எதிரான உணர்வலை தமிழ்நாட்டில் கிளர்ச்சியாக மாறாமல் இருக்க எப்படி தமிழின உணர்வாளர்களை அடக்க வேண்டும் என்பது பற்றிய பேச்சு வார்த்தைகளே நடந்தன. இலங்கையில் இந்தியா தனது பிராந்திய நலன்களைப் பலியிட்டு தமிழத் தேசிய வாதத்தை அடக்கியது. தமிழ்நாட்டுத் தேர்தலில் கூட்டணி தர்மத்தைப் பலியிட்டு தானது கட்சி தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை திமுகவை சரிப்பதையே காங்கிரசுக் கட்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. தேர்தல் ஆணையம் உளவுத்துறை அனைத்துமே திமுக வெற்றி பெறாமல் இருக்க சகல நடவடிக்கைகளையும் மேற் கொள்கிறன. காங்கிரசின் நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் ஒரு அரசியல் முள்ளிவாய்க்கால் அழிவை தமிழ்நாட்டுத் தமிழ் இன உணர்விற்கு எதிராக அரங்கேற்றுவதாகவே அமைந்துள்ளது. தான் இன்னொரு அவசரநிலைக்கு( இந்திராகாந்தியின் "எமேர்ஜென்சி") உள்ளாக்கப் பட்டிருப்பதாக கருணாநிதி பகிரங்கமாக அறிவித்தது இதைத்தான். காங்கிரசை மனதில் வைத்துக் கொண்டுதான் பேராசிரியர் அன்பழகன் சொன்னார் திமுகவை தோற்கடிக்க நினைக்கும் சக்திகளை மனதில் வைத்துக் கொண்டு வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்று.
காணமற் போன கொள்கை அரசியல். வெற்றி பெற்ற இலவச அரசியல்.
ஒரு கட்சி தனது கொள்கைகளை மக்கள் முன்வைத்து அதற்காக மக்களிடமிருந்து தேர்தல் நிதி திரட்டி தன் கொள்கைகளை மக்களிடையே பரப்பும் கொள்கை அரசியல் தமிழ்நாட்டு அரசியலில் காணாமல் போய்விட்டது. இப்போது பணபலமும் ஊடக பலமும் உள்ள ஒரு கட்சி வாக்காளர்களுக்கு பணமும் பிரியாணியும்வாக்காளர்களுக்குக் கொடுத்து இலவசங்களை வழங்குவதாகப் பிரச்சாரம் செய்தால்தான் தேதலில் வெற்றி பெற முடியும். பணபலமும் ஊடக பலமும் உள்ள திமுக அதிமுக ஆகிய இரு கட்சிகள்தான் தமிழ்நாட்டு அரசியலில் மிகுந்த செல்வாக்கைச் செலுத்த முடியும். பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய திராவிட முன்னேற்றக் கழகம் கம்யூனிஸ்ட் கட்சி போன்றவை இந்த இருகட்சிகளைச் சார்ந்தே தேர்தலில் போட்டியிட வேண்டும். அல்லது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போல் போட்டியில் இருந்து விலகவேண்டும்.
புதிதாக உருவாகிய மிரட்டல் அரசியல்.
காங்கிரசுக் கட்சிக்கு என்று ஒரு நல்ல தலைவர்களோ அல்லது ஒழுங்கான கட்டமைப்போ தமிழ்நாட்டில் இல்லை. அது தனது வாக்குப் பலத்தை வைத்துக் கொண்டு பேரம் பேசி திமுக கூட்டணியில் 63 இடம் பெறவில்லை. மாறாக திமுகவை மிரட்டியே அவற்றைப் பெற்றது. தமிழர்கள் தொடர்பான தனது கொள்கைகளையோ அல்லது திட்டங்களையோ அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டில் தனது அரசியல் செல்வாக்கை வளர்க்காமல் காங்கிரசின் அதிகாரபலம் தமிழர்களை ஒடுக்கி ஆள முற்படுகிறது.
காங்கிரசுக் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கை தமிழர்களை எவ்வளவு முட்டாள்களாகப் பார்கிறது என்று அதன் தேர்தல் அறிக்கையைப் பார்கத் தெரிகிறது.
- தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நலத் திட்டங்களை பரவலாக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஒரு புதிய இயக்கமாக செயல்படும்.
- கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நலத்திட்டங்கள், சமூகநீதி, மதசார்பற்ற நிர்வாகம் ஆகியவற்றை லட்சியமாகக் கொண்ட புதிய இயக்கமாக காங்கிரஸ் செயல்படும்.
- மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசின் மூலம் தூய்மையான நிர்வாகத்தை வழங்க பாடுபடுவோம். லஞ்சக் கொடுமை, நிர்வாக திறமையின்மை வேரறுத்து ஒழிக்கப்படும்.
- சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தமிழகத்தில் நடக்க காங்கிரஸ் துணை நிற்கும்.
- முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்காமல் இரு மாநிலங்களுக்கு இடையே நட்புறவு பாதிக்கப்படாமல் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
காவேரி நீர்ப் பிரச்சனை தீர்த்தது போல் இதுவும் தீர்க்கப்படும்.
மீனவர் பாதுகாப்புப் பற்றி ஏதாவது சொன்னார்களா?
தொடர்புடைய பதிவுகள்:
நீலப்பட நடிகர்களுக்கும் காங்கிரசுக்காரர்களுக்கும் என்ன ஒற்றுமை?
நகைச்சுவைக் கதை: கண்விழித்த காங்கிரசுப் பூனை.
Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...