Saturday, 19 November 2011

மாவீரர்களே இன்று உம் தியாகத்தையே சிதைக்கின்றோம்

நீரின்றி சோறின்றி 
நித்திரையின்றி நிம்மதியின்றி
மண் மீட்புக்கு உயிர் கொடுத்த
தியாகச் செம்மல்களேஉம்மைப் புதைக்கவில்லை
மீண்டும் வர விதைத்தோம்
என்று கதைத்தோம் கண்ணீர் விட்டோம்
இன்று உம் நினைவை உதைக்கின்றோம்
உங்கள் ஆன்மாக்களையும் வதைக்கின்றொம்

எதிரி உம் சின்னங்களைத்தான் சிதைத்தான்.
இன்று உம் தியாகத்தையே சிதைக்கின்றோம்


தண்ணீர் விட்டு வளர்க்காமல்
கண்ணீர் விட்டு தம் நாட்டுச்
சுதந்திரம் பெற்றவர்க்கு
உயிர் நீர் விட்ட
உம் தியாகம் புரியவில்லை

கையாட்கள் மூலம்
கைவரிசை காட்டுகின்றனர்
புலத்திலும் ஒரு முள்ளி வாய்க்காலுக்கு.

ஒன்று படுத்த எதுவும் செய்யாமல்
இன்று ஒன்றாகச் செய்யுங்கள்
ஓரிடத்தில் நன்றாகச் செய்யுங்கள்
என்று சொல்கிறோம் நாம் இங்கு
உங்கள் காதும் புளித்திருக்கும்

Friday, 18 November 2011

ஹைக்கூ: கட்டில் முழக்கம் ஒலிக்கிறது

விரைந்து சென்றது காற்று
வேகத் தடை
போட்டது இயற்கை
தென்றல்

காதலின் ஆரம்பித்தது
கடைக்கண்ணால் அவள் பார்வை
தென்றல்

களைத்து வீடு சென்றேன்
அரிதாய்க் கிடைத்தது இன்சொற்கள்
தென்றல்

கதிரவனின் கோபம்
காற்றின் கருணை மனு
தென்றல்


கட்டில் முழக்கம் ஒலிக்கிறது
முத்தத்தோடு அணைப்பு
தென்றல்

பிள்ளைகள் வெய்யிலில்
இயற்கை அன்னையின் முத்தம்
தென்றல்

பிளவு பட்டது நம் இனம்
ஒன்று பட்டு வாழ்ந்தால்
தென்றல்

Thursday, 17 November 2011

பதிவர்கள்(bloggers) பற்றிய நகைச்சுவைகளும்..விநோதமான படங்களும்

இதையும் பதிவில் இடுவார்களா?
எனக்காகவா?
பணிமனையில் பயங்கர இட நெருக்கடி

பின் லாடனை இப்படியும் சாகடிச்சாங்கள்

எப்படி ஆடை அழுக்கின்றி வெளியே வந்தீங்க...

முன்றாம் அணி தயார் நிலையில்

லைன் அடிச்சாங்கள்...

உனக்கல்லடி கண்ணே ஊருக்கடி உபதேசம்......

யாருக்கு யார் பயப்படுவது?

பல் வைத்தியருக்கு யார் பணம் கொடுப்பது


Schoolஇல் ஒழுங்காகப் படித்திருந்தால்....

Church உங்களைச் சாகடிக்குமாம


கஸ்டமான சேக்கிங்....








காற்சட்டையைக் கழற்றினால் கவனிப்பாங்களாம்.....

பாதுகாப்பான தரிப்பிடம்

ஆண்டி வைரஸ் - இப்படியும் செய்யலாமா?

பொறுமை......

டீசன் விற்கிற விலையில் அதில் கோழி பொரிக்கக் கட்டுமா?





சந்தொசம் தரும் சவாரி போவோம் சலோ சலோ

வழியை விடுங்கடா தேவடிப் பசங்களா.......

கொஞ்சம் சிரி.....

Wednesday, 16 November 2011

ஐம்பூதமானது உன் பிரிவு

கண்களில் நீர் முட்டியது
நெஞ்சில் தீ மூட்டியது
உறவு மண்ணானது
இதயம் பெரு வெளியானது
நினைவு காற்றாகியது
ஐம்பூதமானது உன் பிரிவு

வாய்களில் வார்த்தையில்லை
கண்களில் ஒளியில்லை
காதில் உன் குரலில்லை
மூக்கில் உன் கூந்தல் மணமில்லை
உடலில் உன் உணர்வில்லை
தவிக்கின்றன ஐம்புலன்கள்
உன் பிரிவில்

மீண்டும் ஈரானியக் கணனிகளை ஊடுருவித் தாக்கிய இஸ்ரேல் படைத் தாக்குதலையும் மேற் கொள்ளுமா?


2010இல் ஈரானின் அணு ஆராய்ச்சி மையத்தை இஸ்ரேலிய உளவுத்துறை இணைய வழி ஊடுருவி Stuxnet என்னும் வைரஸ் மூலம் சேதப் படுத்தியது. இப்போது மீண்டும் இஸ்ரேல் அப்படி ஒரு தாக்குதலை நாடாத்தியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சென்ற சனிக்கிழமை ஈரானில் உள்ள ஒரு பெயர் குறிப்பிடப்படாத இடத்தில் பெரும் ஆயுதக் கிடங்கு ஒன்றில்  பாரிய வெடி விபத்து ஏற்பட்டது அதில் ஈரானிய ஏவுகணைத் திட்டத்திற்கு பொறுப்பான பிரிகேடியர் ஜெனரல் ஹசன் ரெஹ்ரானி மொக்காத் உட்பட 17 ஈரானியர்கள் கொல்லப்பட்டனர். இந்த வெடி விபத்து ஈரானில் பெரும் ஆச்சரியத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. ஈரானில் இப்படி வெடி விபத்துக்கள் ஏற்படுவதில்லை. ரைம்ஸ் சஞ்சிகையில் ஒரு பதிவர் உடனே இந்த வெடி விபத்து இஸ்ரேலின் கைவரிசையாக இருக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.

Stuxnet அக்காவின் தங்கை வைரஸின் கைவரிசை
ஈரானிய ஆயுதக் கிடங்கில் வெடி விபத்து ஏற்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னதாகவே இஸ்ரேல் தனது முந்தைய Stuxnet என்னும் வைரஸின் "தங்கை"யை நடமாட விட்டுள்ளது என்ற தகவல் வெளிவந்திருந்தது. தங்கையின் பெயர் Dugu ஈரான் விரைவில் அணு ஆயுதம் தயாரிக்கப் போகிறது என்ற தகவல்களும் தங்கை Dugu வைரஸ் பற்றிய தகவல்களும் ஒன்றாகவே ஊடகங்களில் அடிபட்டன. அது மட்டுமல்ல அண்மையில் ஈரான் இஸ்ரேல் வரை சென்று தாக்கக் கூடிய ஏவுகணைகளையும் பரீட்சித்திருந்தது. முதலில் வதந்தியாக இருந்த Dugu வைரஸ் பற்றிய செய்தி  ஈரான் தனது நாட்டு நிறுவனங்களுக்கு Dugu வைரஸை அழிக்கக்கூடிய மென் பொருளை விநியோகம் செய்ததால் உறுதி செய்யப்பட்டது.



ஈரான் மீது படைத் தாக்குதல்
ஐக்கிய நாடுகள் சபையின் பன்னாட்டு அணு சக்தி முகவரகத்தில் இருந்து ஈரான் அணு ஆயுத உற்பத்தி செய்யலாம் என்ற செய்தி வந்தவுடனேயே இஸ்ரேலில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுவிட்டன. இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு அணு ஆயுத வல்லமை கொண்ட ஈரான் மத்திய கிழக்கு உட்பட முழு உலகுக்குமே  பெரும் அச்சுறுத்தல் என்றும் இஸ்ரேலுக்கு நேரடி ஆபத்து என்றும் கூறினார். ஈரானை இஸ்ரேல் மீண்டும் தாக்குமா என்ற கேள்வி எழுந்திருந்த வேளையிலேயே ஈரானிய ஆயுதக் கிடங்கில் வெடி விபத்து எற்பட்டது. இப்போது எழுந்துள்ள அடுத்த கேள்வி ஈரானை இஸ்ரேல் நேரடியாகத் தாக்க்குமா என்பது. இஸ்ரேலிய அதிபர் சைமன் பெரஸ் அரச தந்திர நடவடிக்கைகளுடன் நேரடித் தாக்குதலை அண்மித்த நடவடிக்கைகள் தேவை என்று சொன்னார். தற்போதைய உலக பொருளாதார மத்திய கிழக்குப் பிராந்திய நெருக்கடி சூழ் நிலையில் ஈரான் மீது ஒரு படைத் துறைத் தாக்குதலை அமெரிக்கா விரும்பவில்லை என்றே உணரக்கூடியதாக இருக்கிறது. ஈரானுடனான ஒரு போர் உலக எரி பொருள் விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். லிபிய எரிபொருள் உற்பத்தி இன்னும் சீரடையாத நிலையில் வளை குடா எரிபொருள் விநியோகத்தில் தடை ஏற்படல் உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஈரானின் அணு ஆயுதம் பற்றிய செய்தியும் இஸ்ரேல் தாக்கலாம் என்ற செய்தியும் ஏற்கனவே மசகு எண்ணை விலையை உயர்த்தி விட்டன.  ஆனால் சீனவினதும் இரசியாவின் துணையின்றி ஈரான் மீது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய ஒரு பொருளாதாரத் தடையைக் கொண்டுவருதல் சாத்திய மற்றது. மத்திய கிழக்கிலும் ஆபிரிக்காவிலும் தமக்குச் சாதகமான சமநிலையை ஏற்படுத்துவதற்கு ஈரானும் சிரியாவும் முக்கியம் என்று சீனாவும் இரசியாவும் உறுதியாக நம்புகின்றன. அது மட்டுமல்ல தனது நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் ஈரான் இஸ்ரேல் மீதும் அமெரிக்கா மீது நேரடியாகவோ அல்லது ஹமாஸ் இயக்கம் மூலமாகவோ தாக்குதல்களைச் செய்யலாம். இதை ஈரானில் உள்ள ஊடகங்கள் பகிரங்கமாகவே தெரிவித்தன.

அமெரிக்கா கணனிப் போரில் இறங்குமா?

லிபியாவில் மும்மர் கடாஃபிக்கு எதிரான போர் ஆரம்பித்த போது அமெரிகாவில் லிபியாவின் படைத்துறை கணனிகளை ஊடுருவி லிபிய விமான எதிர்ப்புக் கட்டமைப்பைச் சிதறடிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டது ஆனால் சீனா இரசியா போன்ற நாடுகளின் இணைய வெளிப் போர்த் திறனை வளர்க்க இது ஊக்குவிக்கலாம் என்பதால் அந்த யோசனை கைவிடப்பட்டது. இப்போது ஈரானுக்கு எதிரான படை நடவடிக்கையோ பொருளாதாரத் தடையோ சரிவராத நிலையில் அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரானியக் கணனிகளை ஊடுருவி ஈரானின் அணு உற்பத்தித் திட்டத்தைச் சிதறடிக்கலாம்.

Tuesday, 15 November 2011

தைவான்: அமெரிக்காவிலிருந்து ஒரு Indecent Proposal

அமெரிக்காவின் கடன் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு நீண்ட காலம் எடுக்கும். ஐரோப்பியா தனது நிதி நெருக்கடியில் இருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் தவிக்கிறது. இந்த நெருக்கடிகள் மற்றைய நாடுகளையும் பாதிக்கிறது. செப்டம்பர் மாதம் பிலிப்பைன்சின் ஏற்றுமதி 27% வீழ்ச்சியைக் கண்டது. இந்த மாதிரியான நிலைமைதான் ஆசியாவின் அபிவிருத்தியடைந்த இரண்டு நாடுகளில் ஒன்றான தென் கொரியாவில். தென் கொரியாவின் ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி 20% வீழ்ச்சியடைந்தது. வேகமான பொருளாதார வளர்ச்சி காணும் நாடுகள்  அதிக வெப்பமடைவதைத் தவிர்த்து பணவீக்கத்தால் பாதிப்படையாமல் மென்மையான தரையிறக்கம் செய்ய முயலும். வேக மான வளர்ச்சி கண்ட சீனா இந்த மென்மையான தரை இறக்கத்தில் தோல்விகண்டுள்ளது. அங்கு பணவீக்கம் பிரச்சனையாக அமைந்துள்ளது. இந்தப் பொருளாதாரப் பிரச்சனையில் இருந்து மீள்வதற்கு உலக அரசியல்வாதிகளும் பொருளியல் நிபுணர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கின்றனர்.

சீனா தனது அப்பாவி மக்களைச் சுரண்டி குறைந்த ஊதியத்திற்கு வேலை வாங்கி குறைந்த உற்பத்திச் செலவுடன் பொருள்களை உற்பத்தி செய்து அதை உலகெங்கும் ஏற்றுமதி செய்து 3.2ரில்லியன் அமெரிக்க டொலர்களை அந்நியச் செலவாணி உபரியாக வைத்துள்ளது. அதன் பெரும்பகுதியான 1.14ரில்லியன் டொலர்களை அமெரிக்காவிற்கு கடனாகக் கொடுத்துள்ளது. இதன் வட்டிகளை செலுத்துவதனால் அமெரிக்க பெரும் நிதி நெருக்கடியை எதிர் கொள்கிறது. சீனா தனது 3.2ரில்லியன் டொலர்கள் சொத்தை வைத்துக் கொண்டு உலக அரங்கில் தனது செல்வாக்கை உயர்த்த முயல்கிறது. தனக்கு எதிரான மனித உரிமைக் குரல்களைத் திசை திருப்பவும் முயல்கிறது.

அமெரிக்காவின் நிதி நெருக்கடியைத் தீர்க்க அமெரிக்காவில் இருந்து ஒரு Indecent Proposal சீனப் பல்கலைக்கழகம் ஒன்றின் பேராசிரியராகப் பணிபுரியும்  பட்ரிக் சோவனெக் என்னும் அமெரிக்கரிடம் இருந்து வந்துள்ளது. அதன்படி
  • தாய்வானை அமெரிக்கா சீனாவிற்கு விட்டுக் கொடுக்க வேண்டும். அதற்குப் பிரதி உபகாரமாக சீனா அமெரிக்காவிற்கு கொடுத்த 1.14ரில்லியன் கடனை இரத்துச் செய்ய வேண்டும்.
  • இப்படிச் செய்வதனால் தாய்வானைத் தன்னுடன் இணைக்கும் சீனாவின் நீண்டகாலத் திட்டம் நிறைவேறும்.
  • தாய்வான் தொடர்பாக சீனா செய்யும் பாதுகாப்புச் செலவீனச் செலவான 500பில்லியன் அமெரிக்க டொலர்களை 2020இற்கு முன்னர் சேமிக்க முடியும்.
இதற்கான கணக்குகளை எப்படி பிசகு தீர்ப்பது என்பது பற்றியும் பேராசிரியர் பட்ரிக் சோவனெக் விளக்கியுள்ளார். அவரது Indecent Proposalஐ நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை பிரசுரித்துள்ளது.

1949/50இல் சீனாவில் நடந்த பொதுவுடமைப் புரட்சி சீனாவை மக்கள் சீனக் குடியரசு என்றும்(செஞ்சீனா) சீனக் குடியரசு(தாய்வான்) என்றும் இரண்டாகப் பிரித்தது. செஞ்சீனா பொதுவாகச் சீனா என்று அழைக்கப்படுகிறது. அது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை கொண்ட ஒரு வல்லரசு. அத்துடன் உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்டது. பொருளாதார உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடு. சீனா எப்போதும் தாய்வானைத் தனது ஒரு மாகாணம் என்றே கூறிவருகிறது. எந்த ஒரு பன்னாட்டு அமைப்பிலோ அல்லது கூட்டங்களிலோ தாய்வானின் பிரதிநிதிகள் பங்கு பற்றுவதை சீனா கடுமையாக எதிர்த்து வருகிறது. தாய்வானை சீனா ஆக்கிரமிக்காமல் அமெரிக்கா பாது காத்துவருகிறது. சீனாவின் அபரிமிதமான பொருளாதார மற்றும் படைத்துறை வளர்ச்சிக்கு எதிராக தாய்வானை எத்தனை காலம் அமெரிக்காவால் பாதுகாக்க முடியும் என்று பல ஆய்வாளர்கள் ஏற்கனவே கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தனது நட்பு நாடான(?) தாய்வானை வைத்து அமெரிக்கா பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது ஒரு பெரும் கல்விமானின்(?) கருத்து. இதற்குப் பின்னர் எத்தனை அமெரிக்காவின் நட்பு நாடுகள் அமெரிக்காவின் நட்பை மதிக்கும்? தாய்வானை விற்க அமெரிக்காவிற்கு என்ன உரிமை அருகதை உண்டு?

லெனின் தனது ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக் கட்டம் என்னும் நூலில் சொன்னார் முதலாளிகள் உலகத்தை தங்களுக்குள் பிராந்திய ரீதியாகப் பங்கிட்டுக் கொள்வார்கள் என்று.

இது தொடர்பான முந்தைய பதிவைக் காண கீழே சொடுக்கவும்:
தாய்வானை அமெரிக்கா சீனாவிற்கு தாரை வார்க்குமா?



 

Monday, 14 November 2011

தாலி கழற்றும் இத்தாலியும் சீனாவிடம் கையேந்தும் ஐரோப்பியாவும்.

ஒரு இத்தாலியாளின் தாலி கழன்றமைக்காக இலட்சக்கணக்கான தாலிகள் இலங்கையில் அறுக்கப்பட்டன. இப்போது இத்தாலிய தேசத்தின் தாலியே கழர்கின்றது. ஒரு புறம் சர்வாதிரிகள் ஆயுதப் புரட்சிகள் மூலம் பதவியில் இருந்து விரட்டப் படும் வேளையில் மறு புறம் பணநாயகங்களின் தலைவர்கள் பண நெருக்கடியால் பதவிகளில் இருந்து விரட்டப்படுகின்றனர். இத்தாலி 17 நாடுகளைக் கொண்ட யூரோ வலய நாடுகளில் மூன்றாவது பெரிய பொருளாதாரம். முதலாம இரண்டாம் இடங்களை ஜெர்மனியும் பிரான்சும் வகிக்கின்றன. அதன் கடன்கள் 1.9டிரில்லியன் யூரோக்கள். இது இத்தாலியின் வருட மொத்த உறபத்தியுடன் ஒப்பிடுகையில் 120%.

யூரோ நாணயம் இத்தாலியின் கடன் நெருக்கடியால் தனது பெறுமதியை இழந்து வருகிறது. அயர்லாந்து, கிரேக்கம், போர்ச்சுக்கல் ஆகியவற்றின் அரசத் தலைவர்கள் ஏற்கனவே பதவியில் இருந்து விலகிவிட்டனர். இத்தாலியின் அரச கடன் முறிகளின் வட்டி வீதம் பிரச்சனைக்குரிய 7%ஐத் தாண்டிவிட்டது. ஒரு நாட்டின் அரச கடன் முறிகளின் வட்டி வீதம் பிரச்சனைக்குரிய 7%ஐத் தாண்டினால் அது தனது கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படும் என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்து. கிரேக்கத்தில் இவ்வீதம் 50ஐத் தாண்டியது. இத்தாலியின் கடன் நெருக்கடியால் அதன் பிரதம மந்திரி சில்வியோ பெல்ரொஸ்க்கோனி பதவியில் இருந்து விலகினார். மிக இளம் பெண்களை வைத்து பலான விருந்து கொடுத்து வந்த இத்தாலியப் பிரதம மந்திரி, அது அம்பலமான போது பதவி விலகவில்லை. அவரது திறமை அற்ற நிர்வாகம் எப்போதே கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அவரது நிர்வாகத்தில் ஊழல்கள் நிறைந்திருந்தன. 17 வருட அரசியல் வாழ்க்கையில் 19 தடவை நீதிமன்றத்திற்கு இழுக்கப்பட்டவர். இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியிலும் அவர் பதவியில் நிலைத்தது அவர் வத்திக்கானுக்கு வேண்டப்பட்டவர் என்பதால் என்று விமர்சனங்கள் வந்திருந்தன. இத்தாலியப் பிரதம மந்திரி சில்வியோ பெல்ரொஸ்க்கோனியின் பதவி விலகலை பல இத்தாலியியர்கள் ஹல்லலூயா எனக் கூக்குரலிட்டுக் கொண்டாடினர். பிரதம மந்திரி சில்வியோ பெல்ரொஸ்க்கோனியின் பதவி விலகலுடன் இத்தாலிய அரசு பல சிக்கன நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது ஊழியர்கள் ஓய்வி பெறும் வயதை 65இல் இருந்து 67 ஆக உயர்த்தியதுடன். பல அரச ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தாலியின் புதிய பிரதமராக ஜியோஜியோ நெப்பொலிற்றனொ பதவி ஏற்ப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


புதிய பிரதமர் பொருளாதார நிபுணர் ஜியோஜியோ நெப்பொலிற்றனொ
 புதிய பிரதமாராகப் பதவி ஏற்கவிருக்கும் பொருளாதார நிபுணர் ஜியோஜியோ நெப்பொலிற்றனொ அரசியல் பொருளாதாரவியலில் வல்லவர். பொக்கன் பல்கலைக் கழகத்தின் தலைவராக இருந்தவ்ர். ஐரோப்பிய ஒன்றியத்தில் வர்த்தக்த்துறையில் ஆரோக்கியமான போட்டிக்குப் பொறுப்பாக இருந்து சிறப்பாகச் செயற்பட்டவர். அப்பதவியில் இருக்கும் போது மைக்ரோசொfற் நிறுவநனத்திற்கு 650 மில்லியன் யூரோ தண்டம் விதித்தவர். பல ஜேர்மனிய வங்கிகள் ஜெர்மன் மாநில அரசுகளிடம் இருந்து பெற்ற மானியங்களை திரும்பச் செலுத்தச் செய்தவர். இத்தாலியப் பாராளமன்றத்திலோ அல்லது இத்தாலிய அரசியலிலோ முன் அனுபவம் இல்லாதவர்.

யூரோ அதிர்ச்சி - "euroquake"
பணநாயக நாடுகளில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடி டொமினோச் சரிவைப்(domino effect) போல மற்ற நாடுகளின் நிதி நிலைமையைப் பெரிதும் பாதுக்கும். இதில் முதல் பாதிக்கப்படுவது பிரான்ஸ் ஆகும். உலகின் எட்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட இத்தாலிய அரசுக்கு பிரெஞ்சு வங்கிகள் 365பில்லியன் டொலர் பெறுமதியான கடன்களை வழங்கியுள்ளன. பிரென்ஸில் கடன் நெருக்கடி ஏற்பட்டால் அதற்குக் கடன் கொடுத்த பிரித்தானிய ஜேர்மனிய நாடுகளின் வங்கிகள் பாதிக்கப்படும். பிரித்தானியாவிலும் ஜெர்மனியிலும் கடன் நெருக்கடி ஏற்பட்டால் முழு உலகத்திலும் பொருளாதரப் பிரச்சனை ஏற்ப்படும்.  ஐரோப்பாவில் முக்கியமக யூரோ வலயநாடுகளில் ஏற்படும் நிதி நெருக்கடி முழு உலகப் பொருளாதரத்தையும் உலுக்கும். இதை யூரோ அதிர்ச்சி - "euroquake" எனக் கூறப்படுகிறது.

கையைப் பிசைந்து கொண்டு நிற்கின்றனர்.
இத்தாலியில் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதாலோ அல்லது அரச செலவுகளைக் குறைப்பதாலேயோ இத்தாலியப் பொருளாதாரப் பிரச்சனை தணியப்போவதில்லை. இப்போதைய உலகப் பொருளாதாரப் பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பதை உலக அரசியல்வாதிகளோ பொருளாதார நிபுணர்களோ இதுவரை சரியாக குறிப்பிடவில்லை.

விழமுடியாததும்  விடுவிக்க முடியாததுமான பெரிய பொருளாதாரம்,Too big to fail; too big to bail
உலகின் எட்டாவது பெரிய யூரோ நாணய வலயத்தில் முன்றாவது பொருளாதாரமான இத்தாலியப் பொருளாதாரம் விழ முடியாது என்று சொல்லி வந்தவர்கள் இப்போது கடன் நெருக்கடியில் இருந்து விடுவிக்க முடியாத பெரிய பொருளாதாரம் இத்தாலியினுடையது என்று சொல்கின்றனர். அடுத்த ஆண்டு மட்டும் இத்தாலி முன்னூறு பில்லியன்கள் பெறுமதியான புதிய கடன்களைப் பெற்று  பழைய கடன்களைத் தீர்க்க வேண்டும். இதை €300 billion roll over என்பார்கள். இத்தாலியின் புதிய அரசு கடன் வழங்கும் வங்கிகளின் நம்பிக்கையைப் பெறவேண்டும்.


சீனாவிடம் கையேந்தும் ஐரோப்பா
அமெரிக்காவும் பிரித்தானியாவும் தமது நிதி நெருக்கடியைத் தீர்க்க பணத் தாள்களை(நோட்டுக்கள்) அச்சடித்தன. இதற்கு அவை Quantitative Easing (QE)என்ற கௌரவப் பெயர் கொடுத்தன. யூரோ வலய நாடுகளின் கடன் நெருக்கடிகளைத் தீர்க்க அவை அதிக பண நோட்டுக்களை ஐரோப்பிய மத்திய வங்கி அச்சடிக்க வேண்டும். அதிக பண நோட்டுக்கள் அச்சடிக்கப்படும் போது அது யூரோ வலய நாடுகளில் பணவீக்கத்தை ஏற்படுத்தும். யூரோ நாணயத்தின் பெறுமதியை இது பாதிக்கும். யூரோ நாணயத்தின் பெறுமதியும் அதன் வட்டி வீதவும் ஜெர்மனியின் பொருளாதார நலன்களுக்கு ஏற்ப தீர்மானிக்கப் படுவதை யூரோ நாணயக் கட்டமைப்பில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஜேர்மனி விரும்புகிறது. இத்தாலியின் பதவி விலகிய பிரதம மந்திரி சில்வியோ பெல்ரொஸ்க்கோனி சீனாவிடம் இருந்து கடன் பெற விரும்பினார். இதற்கான தொலைபேசிப் பேச்சு வார்த்தைகளும் நடை பெற்றன. சீனா மறுக்கவுமில்லை உடன் ஒத்துக் கொள்ளவுமில்லை. தன்னிடம் இருந்து கடன் பெறுவதாயின் ஐரோப்பிய நாடுகள் தனது நாட்டு மனித உரிமை மீறல்களைப் பற்றி கண்டுக்காமல் இருக்க வேண்டும் என்று சீனா விரும்புவதாகத் தெரிவிக்கப் படுகிறது. ஐரோப்பிய நாடுகளின் நிதி நெருக்கடியைத் தீர்க்க பன்னாட்டு நாணய நிதியம் நிதி உதவி கடன் போன்றவற்றை வழங்க வேண்டும் இதற்குத் தேவையான கடனை அது சீனாவிடம் இருந்து பெற முயற்ச்சிக்கிறது. இலண்டனில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று இப்படித் தலைப்பிட்டது: Humiliated Europe forced to beg China for bailout. யூரோ வலய நாடுகள் அக்டோபர் மாதக் கடைசியில் நடாத்திய மாநாட்டை அடுத்து பிரெஞ்சு அதிபர் நிக்கொலஸ் சார்க்கோஜி சீன அதிபர் ஹூ ஜின்ராவோவை தொடர்பு கொண்டு தமது நாடுகளுக்கு கடன் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார். 3.2 ரில்லியன் அமெரிக்க டொலர்களை வெளி நாட்டுச் செலவாணி உபரியாகக் கொண்ட சீனா ஐரோப்பிய நாடுகளுக்கு கடன் வழங்க விதிக்கும் நிபந்தனைகள்:
  1. பன்னாட்டு நாணய நிதியத்தில் சீனாவிற்கு அதிக செல்வாக்கு
  2. உலக வர்த்தக நிலையத்தில் ( WTO) சீனாவிற்கு சந்தைப் பொருளாதார நாடாக அங்கீகாரம். 2001இல் இந்த நிலையத்தில் சீனா இணையும் போது ஒரு சந்தைப் பொருளாதார நாடாக அங்கீகரிக்கப் படாமையை சீனா ஏற்றுக் கொண்டே இருந்தது.
  3. ஐரோப்பிய நாடுகள் சீனாவிற்கான ஆயுத ஏற்றுமதித் தடையை நீக்க வேண்டும். 1989இல் ரினமன் சதுக்கத்தில் சீன அரசு மாணவர்களின் கிளர்ச்சிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்தமையைத் தொடர்ந்து சீனாவிற்கான ஆயுத ஏற்றுமதியை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்தது.

சீனா தனது 3.2 ரில்லியன் அமெரிக்க டொலர்களை வெளி நாட்டுச் செலவாணி உபரியை எங்காவது முதலிட்டே ஆக வேண்டும்.

Sunday, 13 November 2011

நகைச்சுவைக் கதை: பாதிக்கப் பட்ட பெண்ணுக்கு காமுக சாமியாரின் ஆலோசனை.

ஒரு பெண் கண்ணீரும் கம்பலையுமாக ஒரு சாமியாரிடம் போய் தனது பிரச்சனையைக் கூறினாள்: நான் ஒரு பெண் எனக்கு 36 வயது எனது கணவருக்கு 41 வயது சென்ற செவ்வாய்க்கிழமை கணவன் முழு நாளும் வீட்டில் இருந்தார். நான் வீட்டில் இருந்து வேலைக்கு என் ஸ்கூட்டியில் போனேன். பாதிவழியில் ஸ்கூட்டி பழுதடைந்து விட்டது. நான் வீட்டிற்கு திரும்பி ஸ்கூட்டியையும் தள்ளிக் கொண்டு வந்து பார்த்த போது எனது கணவன் பக்கத்து விட்டுப் 19 வயதுப் பெண்ணுடன் படுக்கை அறையில் இருந்ததைப் பார்தேன். நான் மிகவும் மனமுடைந்து விட்ட்டேன். எனக்கு உதவுங்கள்.

சாமியாரின் பதில்: அன்புக் குழந்தாய் ஸ்கூட்டி பழுதடைவது ஒரு சாதாரண நிகழ்வுதான். உங்கள் ஸ்கூட்டியில் பெற்றோல் இருக்கிறதா என முதலில் பாருங்கள். பெற்றோல் எஞ்சினுக்கும் போகும் பாதையில் ஏதாவது தடங்கல் இருக்கிறதா என்று பாருங்கள். பாட்டரி ஒழுங்காக இருக்கிறதா என்று பாருங்கள். மின் இணைப்புக்கள் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். இவை எல்லாம் ஒழுங்காக இருந்தால் பக்கத்துத் தெருவில் எனது பக்தனின் திருத்தகத்திற்கு உங்கள் ஸ்கூட்டியைக் கொண்டு செல்லுங்கள் எல்லாம் நன்றாக நடக்கும். என்று சொல்லி வீபூதி கொடுத்து விட்டு அந்தப் 19வயதுப் பெண்ணின் பெயர் விலாசத்தைத் தரும்படி கேட்டார்.

 காதலி: என்னை எத்தனை எந்த அளவுக்கு காதலிக்கிறீர்கள்?
காதலன்: 100இற்கு 100%
காதலி: ஓ அப்படியா?
காதலன்: ஆம். திங்கள் 15%, செவ்வாய் 20% புதன் 15% வியாழன் 5% வெள்ளி 10%  சனி 20% ஞாயிறு 25%.

இப்படியும் ஒரு கொடுமை: I'm so lazy I've got a smoke alarm with a snooze button.

மீன ராசி:  I went in to a pet shop. I said, "Can I buy a goldfish?" The guy said, "Do you want an aquarium?" I said, "I don't care what star sign it is." 

படித்ததில் இரசித்தது:



Differences between American-English and English-English

Even though we speak the same language, it's amazing how there are some subtle differences between American-English and English-English:

They say "sidewalk"
We say "pavement"

They say "pants"
We say "trousers"

They say "buried at sea"
We say "naked and chained to a metal bed frame with a car battery connected to his private parts, whilst being beaten for answers!"


Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...