இந்தியப் பொதுத் தேர்தலின் போது சாதி, தனிப்பட்ட தாக்குதல் என்பவற்றுடன் அதிகமாக அடிபட்ட சொற்தொடர் குஜராத் மாடல் பொருளாதாரம் ஆகும். நரேந்திர மோடி தான் முதலமைச்சராக இருந்த போது குஜராத் பொருளாதாரம் பெரு வளர்ச்சி கண்டதாகப் பரப்புரை செய்தார். மோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம் என்பது அடானி நிறுவனத்திற்கு ஒரு சதுட மீட்டர் நிலத்தை ஒரு ரூபாவிற்கு விற்பது என காங்கிரசுக் கட்சியினர் பரப்புரை செய்தனர்.
புளுகு மூட்டை என்கின்றார் முலாயம் சிங்
குஜராத் மாடல் வளர்ச்சி என்பது வெறும் புளுகு மூட்டை. உத்தரப்பிரதேசத்துடன் (உ. பி) ஒப்பிடுகையிலும் எல்லா வகையிலும் குஜராத் பின்தங்கிய மாநிலமாகவே உள்ளது. உ.பியை விட குஜராத்தில்தான் அதிக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். டீசல், காஸ் விலை உயர்வு, வே¬யில்லாத் திண்டாட்டம் குஜராத்தில் அதிகம் இப்படி மோடியின் குஜராத் மாடலை கடுமையாக விமர்சித்தார் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ். இவரின் மகன் உ. பியில் முதலமைச்சராக இருக்கின்றார்.
1960-ம் ஆண்டு உருவாக்கப்பட குஜராத் மாநிலத்தில் முப்பது ஆண்டுகளுக்கு மேல் காங்கிரசுக் கட்சியின் ஆட்சிதான் நடந்தது 1996-ம் ஆண்டில் இருந்து இன்றுவரை பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சி நடக்கின்றது. குஜராத் மக்கள் கடின உழைப்பாளிகள். அபிவிருத்தி அவர்களின் இரத்தத்தில் ஊறிய ஒன்று.
மற்ற மாநிலங்களுடன் குஜராத்தை ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா?
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்கள் சிறப்பாகச் பொருளாதார வளர்ச்சி கண்டுள்ளன. இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரான மும்பையுடன் மற்ற மாநிலங்களை ஒப்பிடக் கூடாது என்றாலும். தமிழ்நாடும் குஜராத்தும் மஹாராஸ்ராவிலும் பார்க்க சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளன.
முன்னணி மாநிலங்களில் குஜராத்தின் தனிநபர் வருமானம் சிறப்பாக இருக்கின்றது.
சிசுக்கள் இறப்பு விகிதம் தமிழ்நாட்டுடன் ஒப்பிடுகையில் மோசமானதாக் இருக்கின்றது
மோடியின் குஜராத்துடன் ஒப்பிடுகையில் நிதிஷ் குமாரின் பிஹார் சிறப்பான பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது. மோடிக்கு முன்னரே குஜராத் ஒரு சிறந்த பொருளாதார வளர்ச்சி உடைய ஒரு மாநிலமாக இருந்தது. ஆனால் பிஹார் இந்தியாவில் ஒரு பின் தங்கிய மாநிலமாக இருந்தது. மோடியின் பொருளாதாரக் கொள்கை சந்தைக்கு உகந்ததாக இருக்கின்றது. அதாவது முதலீடு செய்யும் முதலாளிகளுக்கு நல்ல வாய்ப்பைக் கொடுக்கின்ற பொருளாதார நிர்வாகம் மோடியினுடையது. ஆனால் நிதிஷ் குமாரின் நிர்வாகம் சமூக நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருக்கின்றது 1991-ம் ஆண்டிற்கும் 2001-ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் பிஹார் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 2.7% ஆக இருந்தது. இதை நிதிஷ் குமார் மூன்று மடங்காக உயர்த்தினார். அதே வேளை ஏற்கனவே ஒரு நல்ல வளர்ச்சி விழுக்காடான 7.5ஐக் கொண்டிருத குஜராத்தின் பொருளாதார வளர்ச்சியை மோடி 10.2 ஆக உயர்த்தினார். மோடியின் பொருளாதார வளர்ச்சி தேசிய வளர்ச்சியிலும் பார்க்க 1.4 விழுக்காடு மட்டுமே அதிகம் ஆனால் நிதிஷ் குமாரின் பொருளாதார வளர்ச்சி தேசியப் பொருளாதார வளர்ச்சியிலும் பார்க்க 2.5 விழுக்காடு அதிகமாக இருக்கின்றது
நிதிஷ் குமார் ஒரு மதசார்பற்ற முற்போக்கு சிந்தனை உடையவர். இருவரும் பெரிய அளவில் ஊழல் செய்யாதவர்கள் எனச் சொல்லலாம்
மோடியின் இரகசியம் என்ன?
டாட்டா நிறுவனம் தனது சிறிய ரக நனோ கார்களை முதல் மேற்கு வங்கத்தில் உற்பத்தி செய்யத் தொடங்கியது. அங்கு நிலப்பிரச்சனை ஊதியப் பிரச்சனையால் அதை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. ரதான் டாட்டவிற்கு மோடி தனது கைப்பேசியில் ஒரு குறுந்தகவல் அனுப்பினர்: குஜராத் உங்களை வரவேற்கின்றது என்று. இந்த இரண்டு சொற்களும் குஜராத்திற்கு அதிக அளவில் முதலீடுகளைக் கொண்டு வந்தன. முதலில் டாடா வர அதைத் தொடர்ந்து போர்ட், பேர்ஜோ, மாருது சுசுக்கி போன்றமுன்னணிக் கார் உற்பத்தி நிறுவனங்கள் குஜாராதில் தமது உற்பத்திகளைத் தொடங்கினார். ரதான் டாட்டாவிற்குத் தேவையான காணியை மோடி ஒரு சில தினங்களுக்குள் ஒதுக்கிக் கொடுத்தார். முதலீட்டாளர்களுக்கு சிவப்பு நாடா இல்லை சிவப்புக் கம்பளமே இதுதான் மோடியின் தாரக மந்திரமாக இருந்தது இதுதான் மோடியின் இரகசியம்.மோடி தலைமை அமைச்சராக வரும் வாய்ப்பு உள்ளது என்றவுடன் இந்தியாவிற்கு முதலீடுகள் ஏற்கனவே பாயத் தொடங்கிவிட்டன. இந்திய ரூபாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. இந்தியப் பங்குச் சந்தைச் சுட்டேண் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
மோடியின் பொருளாதார ஆலோசகராக அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியர் அரவிந்த பரகாரியா அமர்த்தப் படலாம என எதிர் பார்க்கப்படுகின்றது.
மோடி தனது பொருளாதாரக் கொள்கைக்கும் முகாமைத்த்துவத்திற்கும் முன்னாள் பிரித்தானியத் தலைமை அமைச்சர் மார்கரெட் தட்சரையும் முன்னாள் சிங்கப்பூர் தலைமை அமைச்சர் லீ குவான்யூவையும் கொள்கின்றார். மோடி தட்சர் போல் ஒரு மோசமான வலதுசாரியாகத் திகழ்வரா என்பது ஒரு பெரும் கேள்வியாகும். ஆனால் மோடி குஜராத்தில் செய்த பல பொருளாதாரத் திட்டங்கள் மத்திய தர வர்க்கத்தினரின் நலன்களை மையப்படுத்தியதாகவே இருந்தன.
இந்தியாவில் மாநில அரசின் முகாமை வேறு மைய அரசின் முகாமை வேறு. உலகிலேயே மோசமான சிவப்பு நாடாவைக் கொண்ட அரசு இந்திய அரசாகும். இதை மோடி எப்படிச் சமாளிப்பார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
Saturday, 10 May 2014
Tuesday, 6 May 2014
நரேந்திர மோடி பற்றி சில தகவல்கள்
நரேந்திர தமோதரதாஸ் மோடி 13 வயதாக இருக்கும் போது அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு 17 வயதாக இருக்கும் போது அவருக்கு திருமணம் செய்யப்பட்டது. மனைவியின் பெயர் ஜசோதா பென். மூன்று ஆண்டுகளின் பின்னர் மனைவியைப் பிரிந்து இமயமலைக்குச் சென்ற மோடி பின்னர் மனைவியிடம் திரும்பிவரவில்லை.
மோடி தாய்மீது மிகுந்த பற்றுள்ளவர்.
மோடி பிறந்த திகதி 17-09-1950. அவரது நட்சத்திரம் அனுசம். அவருக்கு இப்போது ஏழரைச் சனி நடக்கின்றது. ஆறு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் மோடி மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தார். பிறந்த இடம் மேஷானா மாவட்டத்தில் வத்நகர் என்னும் இடத்தில். அப்போது இந்த மாவட்டம் மஹாராஸ்ட்ரா மாநிலத்துடன் இணைந்திருந்த குஜாராத்தில் இருந்தது.
இளவயதில் மோடிக்கு சந்நியாசிகளையும் சந்நியாசத்தையும் பிடிக்கும்.வயதில் தொடரூந்து நிலையத்தில் தேநீர் விற்றவர் மோடி. இமயமலையில் இருந்து திரும்பிய பின்னர் தனது சகோதரருடன் இணைந்து அஹமதாபாத்தில் அரச பேரூந்துப் பணிமனையில் ஒரு தேநீர் கடை நடாத்தினார் மோடி.
மோடி மாமிசம் உண்பதில்லை. மது அருந்துவதில்லை. புகைப்பிடிப்பதில்லை. நவராத்திரியின்போது ஒன்பது நாளும் மோடி விரதம் இருப்பார். அப்போது ஒருநாளில் ஒரு பழம் மட்டுமே சாப்பிடுவார்.
1965-ம் ஆண்டு நடந்த இந்திய பாக்கிஸ்த்தான் போரின் போது 15வயதாக இருந்த மோடி தன்னை இந்தியப் படையின் தொண்டராகப் பதிவு செய்து கொண்டார்.
இந்திரா காந்தியின் அவசர நிலைப் பிரகடனத்தின் போது ஜெயப்பிரகாஸ் நாராயணனுடன் இணைந்து செயற்பட்டார். அப்போது அவர் கைது செய்யப்படுவதில் இருந்து தப்ப தலைமறைவாக இருந்தார்.
2009-ம் ஆண்டு நடந்த தேர்தல் வேட்பாளர் மனுப்பத்திரத்தில் தன்னை திருமணமாகாதவர் எனக் குறிப்பிட்ட மோடி 2014-ம் ஆண்டு தேர்தல் பத்திரத்தில் தன்னை திருமணமானவர் எனக் குறிப்பிட்டார். மனைவியின் சொத்துப் பற்றிய கேள்விக்கு அவர் பதில் எழுதவில்லை.
மோடியின் சாதி OBC(other backward class) மற்றத் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் எனப்படுகின்றது.
மோடிக்கு சுவாமி விவேகாநந்தரை மிகவும் பிடிக்கும்.
மோடி ஒரு கவிஞர். சிறந்த பேச்சாளர். நிறைய நகைச்சுவை உணர்வுள்ளவர். மோடி ஒரு புகைப்படக் கலைஞர். ஒரு புகைப்படக் கண்காட்சி கூட மோடி நடாத்தியுள்ளார். குஜராத் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவனாக முதுமானிப் பட்டம் பெற்றவர் மோடி, அவர் கடின உழைப்பாளி. நாளொன்றிற்கு நான்கு மணித்தியாலம் மட்டுமே அவர் தூங்குவார்.
2001-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மோடி குஜராத் மாநில முதலமைச்சரானார். இன்றுவரை அப்பதவியிலேயே இருக்கின்றார்.
மோடியை பாரதிய ஜனதாக் கட்சியின் இணை அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஸத் அமைப்பினருக்கு பிடிக்காது.
2002-ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான இனக்கொலை குஜராத்தில் நடந்தது. மம்தா பனர்ஜீயின் கட்சியினர் மோடியை குஜராத்தின் கசாப்புக்கடைக்காரர் என்றனர். 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த இனக்கொலையைத் தொடர்ந்து மோடி பதவி விலகவேண்டும் என்றார் கருணாநிதி.
தனது உருவத்திலும் தோற்றத்திலும் மோடி அதிக கவனம் செலுத்துவார். இதன் இரகசியம் மோடி அமெரிக்காவில் மூன்று மாதம் Public relations and Image management என்னும் கற்கை நெறி பயின்றவர்.மோடியின் தோற்றத்தில் பல நடுத்தர பெண்களுக்கு விருப்பம் உண்டு எனப்படுகின்றது.
மோடி தனது தேர்தல் பரப்புரையை மிகவும் நவீனமயபப்டுத்தியுள்ளார். அவரது கட்சியினர் பல்லாயிரம் பேர் கடந்த சில ஆண்டுகளாக இணையவெளியில் மோடி பற்றி சிறந்த பரப்புரை செய்து வருகின்றனர். மோடியின் பர்ப்புரைப் பொறு உறங்குவதில்லை. இவர்கள் பல பொய்ப்பரப்புரைகளும் செய்வதுண்டு எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. உத்தரகாந்த் மாநிலத்தில் 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அகப்பட்ட 15000குஜராத்தியர்களை மோடி சென்று மீட்டு வந்ததாகப் பொய்ப்பரப்புரை செய்ததாக குற்றம் சாட்டப்படுகின்றது.
மோடி தாய்மீது மிகுந்த பற்றுள்ளவர்.
மோடி பிறந்த திகதி 17-09-1950. அவரது நட்சத்திரம் அனுசம். அவருக்கு இப்போது ஏழரைச் சனி நடக்கின்றது. ஆறு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் மோடி மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தார். பிறந்த இடம் மேஷானா மாவட்டத்தில் வத்நகர் என்னும் இடத்தில். அப்போது இந்த மாவட்டம் மஹாராஸ்ட்ரா மாநிலத்துடன் இணைந்திருந்த குஜாராத்தில் இருந்தது.
இளவயதில் மோடிக்கு சந்நியாசிகளையும் சந்நியாசத்தையும் பிடிக்கும்.வயதில் தொடரூந்து நிலையத்தில் தேநீர் விற்றவர் மோடி. இமயமலையில் இருந்து திரும்பிய பின்னர் தனது சகோதரருடன் இணைந்து அஹமதாபாத்தில் அரச பேரூந்துப் பணிமனையில் ஒரு தேநீர் கடை நடாத்தினார் மோடி.
மோடி மாமிசம் உண்பதில்லை. மது அருந்துவதில்லை. புகைப்பிடிப்பதில்லை. நவராத்திரியின்போது ஒன்பது நாளும் மோடி விரதம் இருப்பார். அப்போது ஒருநாளில் ஒரு பழம் மட்டுமே சாப்பிடுவார்.
1965-ம் ஆண்டு நடந்த இந்திய பாக்கிஸ்த்தான் போரின் போது 15வயதாக இருந்த மோடி தன்னை இந்தியப் படையின் தொண்டராகப் பதிவு செய்து கொண்டார்.
இந்திரா காந்தியின் அவசர நிலைப் பிரகடனத்தின் போது ஜெயப்பிரகாஸ் நாராயணனுடன் இணைந்து செயற்பட்டார். அப்போது அவர் கைது செய்யப்படுவதில் இருந்து தப்ப தலைமறைவாக இருந்தார்.
2009-ம் ஆண்டு நடந்த தேர்தல் வேட்பாளர் மனுப்பத்திரத்தில் தன்னை திருமணமாகாதவர் எனக் குறிப்பிட்ட மோடி 2014-ம் ஆண்டு தேர்தல் பத்திரத்தில் தன்னை திருமணமானவர் எனக் குறிப்பிட்டார். மனைவியின் சொத்துப் பற்றிய கேள்விக்கு அவர் பதில் எழுதவில்லை.
மோடியின் சாதி OBC(other backward class) மற்றத் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் எனப்படுகின்றது.
மோடிக்கு சுவாமி விவேகாநந்தரை மிகவும் பிடிக்கும்.
மோடி ஒரு கவிஞர். சிறந்த பேச்சாளர். நிறைய நகைச்சுவை உணர்வுள்ளவர். மோடி ஒரு புகைப்படக் கலைஞர். ஒரு புகைப்படக் கண்காட்சி கூட மோடி நடாத்தியுள்ளார். குஜராத் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவனாக முதுமானிப் பட்டம் பெற்றவர் மோடி, அவர் கடின உழைப்பாளி. நாளொன்றிற்கு நான்கு மணித்தியாலம் மட்டுமே அவர் தூங்குவார்.
2001-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மோடி குஜராத் மாநில முதலமைச்சரானார். இன்றுவரை அப்பதவியிலேயே இருக்கின்றார்.
மோடியை பாரதிய ஜனதாக் கட்சியின் இணை அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஸத் அமைப்பினருக்கு பிடிக்காது.
2002-ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான இனக்கொலை குஜராத்தில் நடந்தது. மம்தா பனர்ஜீயின் கட்சியினர் மோடியை குஜராத்தின் கசாப்புக்கடைக்காரர் என்றனர். 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த இனக்கொலையைத் தொடர்ந்து மோடி பதவி விலகவேண்டும் என்றார் கருணாநிதி.
தனது உருவத்திலும் தோற்றத்திலும் மோடி அதிக கவனம் செலுத்துவார். இதன் இரகசியம் மோடி அமெரிக்காவில் மூன்று மாதம் Public relations and Image management என்னும் கற்கை நெறி பயின்றவர்.மோடியின் தோற்றத்தில் பல நடுத்தர பெண்களுக்கு விருப்பம் உண்டு எனப்படுகின்றது.
மோடி தனது தேர்தல் பரப்புரையை மிகவும் நவீனமயபப்டுத்தியுள்ளார். அவரது கட்சியினர் பல்லாயிரம் பேர் கடந்த சில ஆண்டுகளாக இணையவெளியில் மோடி பற்றி சிறந்த பரப்புரை செய்து வருகின்றனர். மோடியின் பர்ப்புரைப் பொறு உறங்குவதில்லை. இவர்கள் பல பொய்ப்பரப்புரைகளும் செய்வதுண்டு எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. உத்தரகாந்த் மாநிலத்தில் 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அகப்பட்ட 15000குஜராத்தியர்களை மோடி சென்று மீட்டு வந்ததாகப் பொய்ப்பரப்புரை செய்ததாக குற்றம் சாட்டப்படுகின்றது.
Monday, 5 May 2014
ஆசியாவைச் சைட் அடிக்கும் அமெரிக்காவும் சுழட்டும் ஒபாமாவும்
ஏப்ரல் மாதம் 24-ம் திகதியில் இருந்து 29-ம் திகதிவரை ஐக்கிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஜப்பான், தென் கொரியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஒரு பயணம் மேற் கொண்டிருந்தார். அவருக்கு சென்ற இடமெல்லாம் ஆரவாரமான வரவேற்புக் கொடுக்கப்பட்டது. சீன விரிவாக்கற் கொள்கையா அமெரிக்க ஆதிக்கக் கொள்கையா என்ற என்ற போட்டிக்கும் வட கொரியாவின் அணுக் குண்டு ஆராய்ச்சிக்கும் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 2013-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஒபாமா ஆசியான் மாநாட்டிற்கு செல்லவிருந்தமை அமெரிக்காவில் ஏற்பட்ட கடன் நெருக்கடியால் இரத்துச் செய்யப்பட்டது. இம்முறையும் சகுனம் சரியில்லை. மலேசியா விமானத்தைத் தொலைத்து விட்டுத் தேடுகின்றது. தென் கொரியா கப்பல் கவிழ்ந்து தலையில் கைவைத்துக் கொண்டிருக்கின்றது.
2013-ம் ஆண்டின்
இறுதிப் பகுதியில் இரத்துச்
செய்யப்பட்ட பராக் ஒபாமாவில்
ஆசியப் பயணம் பின்னர்
மத்திய கிழக்கில் சிரியப்
பிரச்சனை மற்றும் ஈரானின்
அணு ஆராய்ச்சிக்கு எதிரான
பொருளாதாரத் தடையைத் தளர்த்துவது பற்றிய பேச்சு வார்த்தையால் முதலில் தடைபட்டது. பின்னர்
உக்ரேன் விவகாரத்தால் இழுபட்டது.
நான்கு நாடுகளுக்குமான பயணம் பல பிரச்சனைகளுக்கும் மத்தியிலும் அமெரிக்கா ஆசியாவைச் சுரண்டுவதை மறக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.
பராக் ஒபாமாவின் நான்கு
ஆசிய நாடுகளுக்கான பயணத்தைப்
பற்றிக் கருத்துத் தெரிவித்த
சீன அரச ஊடகம் ஆசியாவின் பெரும்பூதத்தை ஒரு கூட்டுக்குள் அடக்கும்
முயற்ச்சி என்றது. அமெரிக்க
அதிபரின் ஆசியப் பயணத்திற்குப் பதிலடி கொடுக்கும் முகமாக
சீன வெள்நாட்டமைச்சர் லத்தின்
அமெரிக்க நாடுகளான கியூபா,
வெனிசுவேலா, ஆர்ஜெண்டீனா, பிரேசில்
ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
பராக் ஒபாமாவின் பயணத்தின்
முக்கிய நோக்கங்கள்:
1. குடுமி சும்மா
ஆடாது: வர்த்தகம், வர்த்தகம்,
வர்த்தகம்.
2. சீனாவைச் சமாளித்தல்.
3. வட கொரியாவை
அடக்குதல்.
4. ஆசியச் சுழற்ச்சி
மையத்திற்கு வலுவூட்டல்
5. பிலிப்பைன்ஸிற்கு நம்பிக்கையூட்டல்.
ஆசியச் சுழற்ச்சி மையம்
ஐரோப்பியப் பொருளாதாரங்கள் இனி வரும் காலங்களில் மெதுவாகவே வளர்ச்சியடையும் என்ற நிலையிலும் அமெரிக்கா
இனி எரிபொருளில் தன்னிறைவு
கண்டு ஒரு எரிபொருள்
ஏற்றுமதி நாடாக மாறவிருக்கின்றது என்ற நிலையிலும் அமெரிக்கா,
வேகமாக வளரும் பொருளாதாரங்களைக் கொண்ட ஆசிய நாடுகளில்
தனது கவனத்தைத் திருப்புவதற்கு ஆசியச் சுழற்ச்சி மையம் எனப் பெயரிட்டுள்ளது. அமெரிக்கா தனது தலைமையில்
ஆசிய பசுபிக் நாடுகளுடன் ஒரு பொருளாதார மற்றும்
படைத்துறைக் கூட்டமைப்பை உருவாக்க
வேண்டும் என்பது அமெரிக்காவின் கனவுகளில் ஒன்றாக இருக்கின்றது. 2012-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆசியச்
சுழற்சிமையம் என்பது ஒரு கேந்திரோபாய மீள் சமநிலைப்படுத்தல் எனப்படுகின்றது. இதனால் ஆசியச் சுழற்ச்சி
மையம் என்னும் பெயரிலும்
பார்க்க மீள் சமநிலைப்படுத்தன் என்ற பெயரே இப்போது
அதிகம் பாவிக்கப்படுகின்றது. இது கிழக்கு ஆசியாவையும் பசுபிக் நாடுகளையுமே முக்கிய
மாக உள்ளடக்குகின்றது. 2018-ம் ஆண்டு சீனா மொத்தத்
தேசிய உற்பத்தியில் அமெரிக்காவை விஞ்சி விடும் என எதிர்பார்கப்படுகின்றது. அதே வேளை இந்தியா
சீனாவிலும் பார்க்க சிறப்பான
மக்கள் தொகைக் கட்டமைப்பை கொண்டுள்ளது. சீனாவில் உள்ள இளையோர் தொகை வீகிதாசாரத்திலும் பார்க்க
இந்தியாவின் இளையோர் தொகை வீகிதாசாரம் அதிகமாக
உள்ளது. இவ்விரண்டு நாடுகளினதும் பொருளாதாரம் அடுத்த 20 ஆண்டுகளிள் ஐந்து மடங்கு வளரும்
வேளையில் அமெரிக்கப் பொருளாதாரம் ஒன்றரைப் பங்கு மட்டுமே
வளரும் என எதிர்வு
கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஆசியச் சுழற்ச்சியின் மையப்புள்ளிகளாக இந்த இரு நாடுகளும் இருப்பதுடன் பிரச்சனைக்கு உரிய நாடுகளாகவும் சமாளிப்பதற்கு மிகவும் சிரமமான
நாடுகளாகவும் இருக்கின்றன. ஆசியா தொடர்பான அமெரிக்காவின் கொள்கைகளையும் திட்டங்களையும் இந்த இரண்டு நாடுகளும்
தலைகீழாக மாற்றக்கூடியனவாக இருக்கின்றன. அதே வேளை அமெரிக்காவுடனான வர்த்தகம்
இன்றி சீனப் பொருளாதாரம் செயற்படமுடியாத நிலை இருக்கின்றது. அமெரிக்காவிற்கு அதிக அளவில்
ஏற்றுமதி செய்யும் சீனா அந்த ஏற்றுமதியின் மூலம் கிடைக்கும் நிதியை
அமெரிக்க அரசிற்கு கடனாகக்
கொடுத்தே ஆக வேண்டும்
என்ற கட்டாய நிலை இருக்கின்றது. அப்படிச்
செய்யாவிடில் அமெரிக்க நாணயத்தின் பெறுமதி சீன நாணயத்துடன் ஒப்பீட்டளவில் தேய்மானம் அடைந்து
அமெரிக்காவிற்கான சீனாவின் ஏற்றுமதி
பெரும் பாதிப்படையும். இதானால்
சீனா ஒரு பண்டாக்
கரடி எனக் கருதப்படலாம் எனக் கருதும் அமெரிக்க
ஆய்வாளர்களும் உண்டு. அதே வேளை படைத்துறையில் வேகமாக முன்னேறிவரும் சீனா ஒரு யாளி என அச்சம்
தெரிவிக்கும் ஆய்வாளர்களும் உண்டு.
ஆசியச் சுழற்ச்சி மையம் என ஒன்று இல்லையா?
ஹிலரி கிளிண்டன் ஐக்கிய
அமெரிக்காவின் அரசு துறை செயலராக இருந்த
போது அவரது பயணங்களில் பெரும்பான்மையானவை ஆசியப் பிராந்திய
நாடுகளுக்கானதாக இருந்தது. 2011-ம் ஆண்டு ஹிலரி ஆசிய நாடுகள் கவனத்தில்
எடுக்கப்பட வேண்டிய நிலையை
அடைந்துவிட்டன என்றார். அதனால்
அமெரிக்காவின் கவனங்களும் வளங்களும்
ஆசியாவை நோக்கி நகர்த்தப்
பட வேண்டும் என்றார்.
2012-ம் ஆண்டு அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் பாதீட்டில் ஆசியாவை நோக்கிய மீள் சமநிலைப்படுத்தல் வலியுறுத்தப்பட்டது. அப்போது
அமெரிக்கா ஈராக்கில் இருந்து
வெளியேறிக் கொண்டிருந்தது. ஆசியச்
சுழற்ச்சி மையம் என்பது
வெறும் எண்ணக் கரு மட்டுமே அப்படி
ஒன்று நடைமுறையில் இல்லை என்போரும் உண்டு.
அமெரிக்கக் கடற்படைக் கலன்களில்
55 விழுக்காடு ஆசிய பசுபிக்
பிராந்தியத்தில் இருக்கின்றன. இவை மேலும் அதிகரிக்கப்படும். ஆசியாவை
நோக்கிய மீள் சமநிலைப்படுத்தலின் முதற் படை நகர்வாக
ஒஸ்ரேலியாவின் டார்வின் துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படைத்தளம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் சீனாவின் அதிருப்தியைச் சம்பாதிக்காமல் இருக்க ஆசியாவை
நோக்கிய மீள் சமநிலைப்படுத்தலில் படைத்துறைக்கான ஒத்துழைப்புப் பற்றி அதிகம்
பேசுவது தவிர்க்கப்பட்டது.
பசுபிக் தாண்டிய வர்த்தக உடன்படிக்கை
அமெரிக்கா ஆசிய பசுபிக்
நாடுகளைக் கொண்ட பசுபிக்
தாண்டிய வர்த்தக உடன்படிக்கை (Trans-Pacific Partnership) (TPP) ஒன்றைக் கைச்சாத்திட முயல்கின்றது. இதில் ஒஸ்ரேலியா, புரூணே,
சிலி, கனடா, ஜப்பான்,
மலேசியா, மெக்சிக்கோ, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர், ஐக்கிய
அமெரிக்கா, வியட்னாம் ஆகியவை
உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இந்த உடன்படிக்கையில் இந்த நாடுகளுக்கு இடையிலான
பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதும் நாடுகளுக்கிடையிலான வர்த்தகங்களில் சுங்கவரியைக் குறைத்தலும் இல்லாமற்
செய்தலும் முக்கிய அம்சமாகும். இந்த நாடுகளின் மொத்த மக்கள் தொகை
65 கோடிகளுக்கு மேலாகும். இதில் மேலும் தென் கொரியா, இந்தியா
ஆகிய நாடுகளையும் இணைக்க
அமெரிக்கா விரும்புகிறது.
கழுவுற மீனில் நழுவுற மீனாக ஜப்பான்
பராக் ஒபாமாவின் ஆசியப்
பயணத்தின் முதற் தரிப்பு
ஜப்பான் ஆகும். அமெரிக்க
உற்பத்தி நிறுவனங்களும் ஜப்பானிய
உற்பத்தி நிறுவனங்களும் சம தளத்தில் போட்டி
போடுவதற்கு வாய்ப்பாக ஜப்பான்
தன் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கும்
சலுகைகள் குறைக்கப்பட வேண்டும்
என அமெரிக்கா விரும்புகின்றது. ஆனால் இந்த விவகாரத்தில் ஜப்பான் கழுவிற மீனில்
நழுவுற மீனாக இருக்கின்றது. இதில் ஓர் உரிய உடன்பாடு எட்டாமையினால் அமெரிக்க அதிபர் பராக் ஒபமாவும் ஜப்பானியத் தலைமை அமைச்சர் சின்சே
அபேயும் ஒரு கூட்டறிக்கையை வெளிவிட முடியவில்லை. பசுபிக்
கடந்த வர்த்தக உடன்படிக்கையிலும் பெரிதான
உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை. ஆனால் ஜப்பானும் சீனாவும்
கடுமையாக முரண்பட்டுக் கொள்ளும்
செங்காகு சிறு தீவுக்
கூட்டங்களைப் பொறுத்தவரை அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான ஒருவரை ஒருவர்
பாதுகாக்கும் உடன்படிக்கையின் ஐந்தாம்
பிரிவின் கீழ் அமெரிக்கா
செயற்படும் என்பதை ஒபாமா உறுதி செய்தார்.
மலேசியாவில் கயிற்றில் நடந்த ஒபாமா
மனித உரிமை மீறல்கள்,
எதிர் கட்சிகளுக்கு எதிரான
மோசமான அடக்கு முறைகள்
நிறைந்த மலேசியாவில் அமெரிக்க
அதிபர் பராக் ஒபாமா உள்ளூர் அரசியல்
பற்றிப் பேசாமல் கயிற்றின்
மேல் நடப்பது போல நடந்து கொண்டார்.
மற்ற மூன்று நாடுகளுடன் ஒப்பிடுகையில் மலேசியாவுடன் பொருளாதார
மற்றும் படைத்துறை ஒத்துழைப்பு மட்டுமல்ல மக்களாட்சியை மேம்படுத்துவது தொடர்ப்பாகவும் அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டிய
நிலை உள்ளது. சீனாவைப்
பொறுத்தவரை மலேசியாவில் ஒரு அமெரிக்கப் படைத்தளம்
அமைவது அதற்கு கழுத்துக்கு ஒரு சுருக்குக் கயிறு போல் அமையும்.
மலேசியாவை ஒட்டியுள்ள மலாக்கா
நிரிணை சீனாவின் உலக வர்த்தகத்திற்கு கேந்திர
முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிலையமாகும். மலேசியா
தனது மனித உரிமை விவகாரங்களில் அதிக அக்கறை காட்டவேண்டும் என மலேசியத் தலைமை அமைச்சர் நஜிப் ரசாக்கிடம் கூறியதாக
ஒபாம தெரிவித்தார். அதே வேளை போலிக்
குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்
பட்டிருக்கும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த
அன்வரை ஒபாமா சந்திக்கவில்லை. முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சம வாய்ப்புக்கள் வழங்காமல்
மலேசியா பொருளாதாரத்தில் சிறப்படைய
முடியாது என்றார் ஒபாமா.
தென் கொரியாவில் வைத்து வட கொரியாவிற்கு மிரட்டல்
வட கொரியா எந்நேரமும் தனது நான்காவது அணுக்குண்டு வெடிப்புப் பரிசோதனையைச் செய்யலாம்
என்ற நிலையில் ஒபாமா தென் கொரியாவிற்குப் பயணம் செய்தார். அங்கிருந்து அவர் வட கொரியாவிற்குப் பல மிரட்டல்களை விடுத்தார். வட கொரியா மேலும்
உலக அரங்கில் தனிமைப்படுத்தப்படும் என்றார்.
வட கொரியாமீதான பொருளாதாரத் தடை மேலும் இறுக்கப்படும் என்றார். அத்துடன் நிற்கவில்லை தனது நட்பு நாட்டைப்
பாதுகாக்க அமெரிக்கா படை நடவடிக்கைகள் செய்ய ஒரு போதும்
தயங்காது என முழங்கினார். இரண்டாம் உலகப் போரின்
போது கொரியப் பெண்களை
ஜப்பானியப் படையினர் பாலியல்
அடிமைகளாக வைத்திருந்தமைக்கு ஜப்பான்
மன்னிப்புக் கேட்க வேண்டும்
இழப்பீடு வழங்க வேண்டும்
என்றார்
பிலிப்பைன்ஸிற்கு அமெரிக்கா அவசியம்
சீனாவால் கிழக்குச் சீனக் கடலில் பெரும்
அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும்
பிலிப்பைன்ஸிற்கு அமெரிக்காவுடனான உறவு மிக அவசியமானதாக இருக்கிறது. இரு நாட்டுக்
கடற்படைகளும் ஏற்கனவே பலதடவைகள்
ஒன்றுடன் ஒன்று மோதும்
நிலை ஏற்பட்டன. இதனால்
ஒபாமாவின் பிலிப்பைன்ஸ் பயணம் அமெரிக்காவிற்கு படைத்துறை
ரீதியில் வெற்றியாகும். பிலிப்பைன்ஸில் அமெரிக்கப்படைகள் மேலும் அதிகரிக்கப்படவிருக்கின்றன. பிலிப்பைன்ஸ் மேலும் படைக்கலன்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கவிருக்கின்றது. இரு நாடுகளும் பத்து ஆண்டு கால ஒன்றை ஒன்று பாதுகாக்கும் பாதுகாப்பு உடன்படிக்கை கைச்சாத்திட்டன.
வானத்தில் இருந்து சனியனை இறக்கிய சீனா
சீனா தனது அயல் நாடுகளுடன் உறவை மேம்படுத்தாமல் அவற்றுடன்
எல்லை முரண்பாடுகளை வளர்ப்பதால் அந்த நாடுகள் உலகக் காவற் துறை என தன்னை நினைக்கும் அமெரிக்காவை தங்கள் துணைக்கு அழைக்க
வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கியுள்ளது. தென் சீனக் கடலிலும்
கிழக்குச் சீனக் கடலிலும்
சீனா குழப்பிய குட்டையில் அமெரிக்கா மீன் பிடிக்க
முயல்கின்றது. அமெரிக்கா உக்ரேனில்
இரசியாவுடனும் முரண் பட்டுக்
கொண்டிருக்கின்றது. அமெரிக்காவிற்கு ஒரு போதும் வேண்டாத ஒன்று இரசியாவும் சீனாவும் இணைவதாகும். இவ்விரு
நாடுகளுடன் உலகெங்கும் உள்ள இஸ்லாமியத் தீவிரவாதிகளும் இணைந்தால்?
Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...