
சிங்கத் தோலோடு
கழுதை ஒன்று
பல காலமாகச்
சீறிப் பாய்கிறது
நரிகளும் பன்றிகளும்
இணைந்து நிற்கின்றன
கோட்டான்களும் கழுதைகளும்
துணைக்கு நிற்கின்றன
இரைக்கு இரந்து அழ
பசுக்களுமல்ல
விழுந்து எழாமலிருக்க
யானைகளுமல்ல
சரிந்து நிமிராமலிருக்க
மட் சுவர்களுமல்ல
பதுங்கிப் பயந்தோட
கோழைகளுமல்ல
கரு முகிலிடை
ஒரு மின்னல் வெடிக்கும்
பேரிடி பல முழங்கும்
கீழத் திசையில்
ஒரு கதிர் உதிக்கும்.
No comments:
Post a Comment