யுனேஸ்க்கோ நிறுவனம் யானைகள் உலகில் அழியாமல் இருக்கும் பொருட்டு எல்லா நாடுகளையும் யானைகளைப் பற்றி புத்தகம் எழுதி பிரசுரிக்கும் படி வேண்டிக் கொண்டது. ஒவ்வொரு நாடுகளும் வெவ்வேறு தலைப்பில் புத்தகங்களைப் பிரசுரித்தன.
பிரித்தானியா: பிரித்தானியப் பேரரசும் யானைப் பலமும்
அமெரிக்கா: யானைகளில் முதலீடும் வரிச்சலுகைகளூம்.
பிரான்ஸ்: யானைகளில் பாலுணர்வுகளும் பிரேஞ்சு மக்களின் காதலுணர்வுகளும்.
ஜப்பான்: யானையா ஹொண்டாவா?
இந்தியா: கஜ பூசையும் தோஷநிவர்த்திகளும்.
Saturday, 25 May 2013
Friday, 24 May 2013
ஒன்றாக நிற்காவிடில் வெல்ல மாட்டோம்
ஒன்றுடன் ஒன்று ஒத்துவரா
இந்தியாவும் இலங்கையும்
ஈழப் போரில் ஒன்றாகி நின்றதால்
வென்றார்கள் எம்மை
உலகப் பெரு முதலாளித்துவ அமெரிக்காவும்
அரச முதலாளித்துவ செம்மையிலாச் சீனாவும்
தம் போட்டிகளைப் புறம் தள்ளி
ஈழப் போரில் ஒன்றாகி நின்றதால்
வென்றார்கள் எம்மை
பல முறை மோதிக் கொண்ட பகையாளிகள்
பாக்கிஸ்த்தானும் இந்தியாவும் பங்காளிகளாகி
ஈழப் போரில் ஒன்றாகி நின்றதால்
வென்றார்கள் எம்மை
அந்நியர் எம்மைப் பிரித்தாள வேண்டியதில்லை
நாம் பிரிந்து நின்றால் ஆள்வார்கள் எம்மை
இந்த உண்மை நாம் உணர்ந்து
ஒன்றாக நிற்காவிடில் வென்றாக மாட்டோம்
வீணே அழிவோம் வீழ்ந்தே மடிவோம்
அடம்பன் கொடி பழமொழி கேட்டுத் திருந்தவில்லை
நண்டுகளின் கதை கேட்டும் திருந்தவும் இல்லை
என்று தான் நாம் ஒன்றாகி நிற்போம்
ஒன்றாக நிற்காவிடில் வென்றாக மாட்டோம்
வீணே அழிவோம் வீழ்ந்தே மடிவோம்
புலித்தோல்கள் போர்த்திங்கு
நரிகள் வந்து ஊளையிடுகின்றன
கழுதைகள் இங்கு கானம் பாடுகின்றன
தீயோரைப் நல்வழிப்படுத்தி ஒன்றாக இணைவோம்
வென்றே தோள் கொட்டுவோம்
இன்றைய அழிபாடுகள்
நாளைய கோபுரங்களாக
இன்றைய அவலக் குரல்கள்
நாளைய வெற்றியிசையின்
பல்லவிகளாக ஒலிக்க
இன்றைய எரிந்த சாம்பல்கள்
நாளைய தோட்டப் பசளையாக
ஒன்றாக இணைவோம்
அன்றேல் வெல்ல மாட்டோம்
ஒன்றாக இணைவோம்
ஒன்றாக இணைவோம்
Tuesday, 21 May 2013
சீன வேலைப்பசிக்கு இரையாகும் இந்தியப் பொருளாதாரம்.
அரசியலில் வேறு வேறு திசைகள். பொருளாதார ஒற்றுமை. |
ஆசிய பசுபிக் நாடுகளைச் சுரண்ட முயலும் சீனா
வட அமெரிக்க நாடுகளுக்கும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் தனது மலிவான உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதியைத் தொடர்ந்து செய்த சீனா தனது நாணயத்தின் மதிப்பை உயரவிடாமல் தடுத்து வைத்திருந்தது. சீன இறக்குமதியால் தமது நாட்டு மக்களின் வேலைவாய்ப்புக்களை இழந்த இந்த நாடுகள் இப்போது பல பொருளாதாரப் பிரச்சனையை சமாளிக்க முடியாமல் தவிக்கின்றன. இதனா சீன தனது கவனத்தை ஆசிய பசுபிக் நாடுகள் மீது திருப்பியுள்ளது. Regional Comprehensive Economic Partnership என்ற அமைப்பில் ஜப்பான் தென் கொரியா, இந்தியா, நியூசிலாந்து ஆகியவற்றுடன் மேலும் பல நாடுகளை இணைத்து அவற்றுடனான தனது வர்த்தகத்தை மேம்படுத்த முனைகிறது.
லீ க சியாக்
ஆசிய நாடுகளைச் சுரண்டும் சீனாவின் முயற்ச்சியின் ஒரு அம்சமாக சீனத் தலைமை அமைச்சர் லீ க சியாக் 18-05-2013-ம் திகதி மேற்கொண்ட இந்தியப் பயணம் அமைந்துள்ளது. சீனாவின் அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியா ஆக்கிரமித்துள்ளது என்று இந்தியா மீது சீனா குற்றம் சாட்டுகிறது. தனது காஷ்மீரின் ஒரு பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது என்று இந்தியா குற்றம் சாட்டுகிறது. இந்தப் பிரதேசத்தில் பல பகுதிகளை சீனா அவ்வப் போது ஊடுருவி தனது படைகளை நிலை கொள்ளச் செய்வதுண்டு.இது இந்தியாவிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் நிலையில் சீனத் தலைமை அமைச்சர் லீ க சியாக் இந்தியா சென்றுள்ளார். இரு நாட்டு ஆட்சியாளர்களிடையான பேச்சு வார்த்தையில் முக்கியமாக இடம் பெறவேண்டியது எல்லைப் பிரச்சனையே.
எல்லைப் பிரச்சனையிலும் பார்க்க எருமை இறைச்சி முக்கியத்துவம் பெற்றது.
லீ க சியாக்கின் இந்தியப் பயணத்தின் போது இந்தியாவும் சீனாவும் தமக்கிடையே எட்டு புரிந்துணர்வு குறிப்புக்களில் கைச்சாத்திட்டன:
- எருமை இறைச்சி வர்த்தகம்.
- பிரம்ம புத்திரா அணை தொடர்பாக தகவல் வழங்குதல்
- புனிதப் பயணம்
- கழிவு நீர்
- பொருளாதாரம் வர்த்தகம் தொடர்பான செயற்குழு
- நீர்த் தொழில்நுட்பம்
- புத்தகங்களை மொழிபெயர்த்தல்
- நகரங்களை இரட்டைச் சகோதரியாக்குதல்
இந்திய சீன வர்த்தகம் சீனாவிற்குச் சாதகமாகவே அமைந்துள்ளது. இந்தியாவின் வர்த்தகதில் சீனாவுடன் செய்யும் வர்த்தகம் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகப் பெரியதாகும். இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சீனா முதலாமிடம் வகிக்கிறது. இந்தியா சீனாவிற்கு தாதுப் பொருட்கள், பருத்தி போன்ற மூலப் பொருட்களை மட்டுமே சீனாவிற்கு ஏற்றுமதி செய்கின்றது. இந்திய மருந்துப் பொருட்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய முடியாமல் சீனா தடை செய்துள்ளது. இந்தியப் பொருட்களின் ஏற்றுமதிக்கு இது போன்ற பல நியாயமற்ற தடைகளை சீன செய்துள்ளது. சீன இறக்குமதியால் இந்திய உற்பத்தித் துறை பாதிப்படைந்துள்ளது. சீனாவிற்கான இந்திய ஏற்றுமதி அங்கிருந்து செய்யும் இறக்குமதியிலும் அதிகமாக இருந்து வருகிறது. 2001-02இல் இது (The trade deficit ) $1.08 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. 2012-13இல் அது 40.77 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 2012இல் 66.4 பில்லிய அமெரிக்க டாலர்களாக இருந்தது. இதை இரு நாடுகளும் 2015இல் நூறு பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்க முயல்கின்றன. ஏற்கனவே ஆசியான் அமைப்பைச் சேர்ந்த நாடுகள் சீனாவுடன் 2010இல் செய்த ஒப்பந்தங்கள் சீனாவிற்குச் சாதகமாக அமைந்துள்ளது என்று சொல்லி அதை மீளவும் பேச்சு வார்த்தைக்கு உட்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளன. ஒப்பந்தங்களைத் தமக்கு சாதகமானதாக போட்டு மற்ற நாடுகளை ஏமாற்றுவதில் சீனாவிற்கு நிறைய அனுபவம் உண்டு.
நன்றி இந்துஸ்த்தான் ரைம்ஸ் |
இந்தியாவின் இரட்டை அமைச்சரவை
சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதில் பல இந்தியப் பண முதைலைகள் பெரும் இலாபம் ஈட்டுகின்றன. இவர்களின் இலாபம் தொடர்ந்தும் பேணப்பட வேண்டும். இந்தியாவில் ஒரு இரட்டை அமைச்சரவை இயங்குவதாகச் சொல்லப்படுகிறது. ஒன்று மன்மோகன் சிங் தலைமையில் இயங்கும் அரசியல்வாதிகளைக் கொண்டது. மற்றது சோனியா காந்தி தலைமையில் பல பண முதலைகளையும் ஆலோசகர்களையும் கொண்டது. இந்த இரண்டாம் அமைச்சரவை இந்திய மக்களின் நலங்களைக் கருத்தில் கொள்ளாமல் பண முதலைகளின் இலாபத்தைக் கருத்தில் கொண்டு செயற்படுவதாகச் சொல்லப்படுகிறது. இதனால் இந்தியப் பொருளாதாரத்திற்குப் பாதகமான சீன வர்த்தகம் தொடர்ந்தும் பேணுவதில் இந்தியா ஆட்சியாளர்கள் அக்கறை காட்டுகின்றனர். இந்திய சீன எல்லைப் பிரச்சனை பற்றி இரு நாட்டுத் தலைமை அமைச்சர்களும் பேச்சு வார்த்தை நடாத்தியதாகச் சொல்கிறார்கள். ஆனால் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.
புது டில்லியைச் சேர்ந்த கேந்திரோபயக் கற்கைகளுக்கான பேராசிரியர் பிரம்மா செல்லனி (Brahma Chellaney, professor of strategic studies at the Centre for Policy Research) இந்தியா சீனாவுடனான வர்த்தகத்தைப் பெருக்கினால் அதனால் இரு நாடுகளின் பொருளாதாரம் மேம்படும் என்றும் சீனாவுடனான முறுகல்களை தவிர்ப்பதற்கு அது உதவும் என்றும் இந்திய ஆட்சியாளர்கள் நம்புகிறார்கள் ஆனால் இந்த நம்பிக்கை சரிவரவில்லை. இப்போது அரசியலும் பொருளாதாரமும் எதிர் எதிர்த் திசையில் செல்கின்றன என்கிறார். ஆனால் பன்னாட்டு உறவு நிபுணரான கரெத் பிரைஸ் (Gareth Price, a senior research fellow at Chatham House, a London-based foreign-affairs think tank) ஒரு படி மேலே போய் இந்திய வர்த்தகர்களைக் குற்றம் சாட்டுகிறார். இரு நாடுகளிற்கிடையிலான வர்த்தகம் பெருகும் போது ஒரு வியாபார் பெரும் இலாபம் ஈட்டுவான். அவனுக்கு எல்லையில் நடக்கும் மோதலைப் பற்றிக் கவலையில்லை. "If you are a businessman doing big business with China, then you don't care about an incursion somewhere up in Ladakh,"
இந்தியர்கள் மீண்டும் அந்நியர் ஆட்சிக்கு எதிராகப் போராட வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...