வன்னிக்கள நிலை பாரீர் - எம்மவர்
எண்ணிக்கை யிலாத் துயர் கேளீர் - அங்கு
குண்டோடும் செல்லோடும்
நீரோடும் பாம்போடும் - தினம்
போராட்டம் - பெரும்
திண்டாட்டம்
விண்ணில் ஒரு விமானம் பறக்கும் -உடன்
மண்ணில் பல தமிழ் உயிர் இறக்கும்
தாயென்றும் சேயென்றும் - சிறு
சிசுவென்றும் பசுவென்றும் - பல்லுடல்
சிதறும் - மனம்
கதறும்
கொக்கரிக்குது அந்த பேரினவாதம் - அது
எச்சரிக்குது எமைத் தினந்தோறும்
பொய்யோடும் புரட்டோடும்
புளுகோடும் உருட்டோடும்
கதைபல கூறும்
பத்திரிகைகள் நாறும்
கோசலை மகன் பெயரோடு ஒரு நாயோன்
கோள்கள் பல கூறும் கோணல் வாயோன் - அந்த
சிங்களரத்தினா எத்தனைநாள் - எமக்கெதிராய்
கத்தினான் கதைபல சுத்தினான் - தருணம்
பார்ப்பான் - பழி
தீர்ப்பான்
அப்பன் முருகன் பெயரொடு ஒரு சாமி
வந்தான் அந்த பெரும் புரட்டு ஆசாமி – அந்த
ஆரியன் பெரும் பேயன்
முழுவிசரன் கடும் பொய்யன் - நிற்ப்பான்
சிங்களப் பக்கம் - செல்வான்
கீழப்பாக்கம்
முட்டைக் கண்ணோடு ஓரெழுத்து நாமன்
தமிழர் நெற்றியில் போடுவான் நாமம் - அந்தக்
கோமாளி கொடுங் கேப்மாரி
மெய்மாதிரிப் பொய்மாரி
பொழிவான் - ஒருநாள்
அழிவான்
தமிழர் போராட்டமிங்கு வெல்லும் - உந்த
உலுத்தர்க்கு நல்ல பதில் சொல்லும்
பொழுது புலரும் ஈழம் மலரும் - எம்
துயர் தீரும் இடர் போகும் - பெரும்
புகழ் சேரும் தமிழ் வாழும்
நம்பிக் கை கொடு – மன
நம்பிக்கையோடு