அது ஒரு அழகிய சிறு நகரம். பச்சைப்பசேல் என்ற பூமி. நிறைய மரங்கள் பூந்தோட்டங்கள் அங்கு இருந்தன. மொத்ததில் காதலுக்கு உகந்த நிலம். அதனால் ஊர் மக்கள் கன்னாபின்னா என்று முறை தவறிக்காதலிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
திருமணமானவர்களும் யார் யாரோவிடமெல்லாம் உறவு கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். அதனால் ஊர் தேவாலயத்துக் குரு மக்களுக்கு முறைதவறிய உறவுகள் பெரும் பாவம் என்றும் அப்படிச் செய்பவர்கள் வந்து தேவனிடம் பாவ மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று போதித்தார்.
நாளுக்கு நாள் தமது முறை தவறிய உறவுகளைப் பற்றிப் பாவமன்னிப்புக் கேட்பவர்கள் தொகை அதிகரிக்கத் தொடங்கி விட்டது. சிலர் தமது பாவங்களை விலாவாரியாகவும் விபரித்தார்கள். சலிப்படைந்த தேவாலாயக் குரு இனி யாரும் முறைதவறிய உறவு கொண்டால் பாதையில் வழுக்கி விழுந்து விட்டேன் என்று வந்து பாவம்ன்னிப்புக் கோருங்கள் என்று சொல்லிவிட்டார். மக்களும் அப்படியே செய்தனர்.
குரு சில மாதங்களில் இறந்து விட்டார். வேறு ஊரில் இருந்து புதிதாக ஒரு குரு வந்து தேவாலயத்தைப் பொறுப்பேற்றுக் கொண்டார். ஒரு வாரம் கழித்து அவர் நகர மேயரைச் சந்தித்து நீங்கள் தெருக்களை ஒழுங்காகப் பராமரியுங்கள். நிறையப் பேர் வந்து தாங்கள் வழுக்கி விழுந்ததாக என்னிடம் முறையிடுகிறார்கள் என்றார். குருவிற்கு தங்கள் நகரத்து மக்களிற்கு காலம் சென்ற குரு சொன்ன குறியீட்டுச் சொல்லின் அர்த்தம் தெரியவில்லை என்று சிரி சிரி என்று சிரித்தார். அதற்குப் புதுக் குரு சிரிக்காதீர்கள் மேயர் ஐய்யா அவர்களே ஒரு வாரத்தில் உங்கள் மனைவி மட்டும் மூன்று தடவை வழுக்கி விழுந்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் என்றார். மேயர் கோபத்தில் ஏன் துள்ளிக் குதித்தார் என்று குருவிற்கு விளங்கவில்லை.
Saturday, 12 January 2013
Friday, 11 January 2013
கவிதை: காதலென்னும் இசை
தியாகங்கள் சங்கதிகளாக
வீரம் மேடையாக
தாயகத் தாகம் வாத்தியங்களாக
மலரும் விடுதலை இசை
பார்வைகள் சுரங்களாக
ஆசைகள் ராங்கங்களாக்
அன்பு இணைக்கும் தாளமாக
மலரும் காதலென்னும் இசை
பாசம் என்பது பாடலாக
பரிவு என்பது மெட்டாக
நேசமென்பது உடன்பாட
மலரும் குடும்பம் என்னும் இசை
அன்பு பல்லவியாக
உழைப்பு அனுபல்லவியாக
விருந்தோம்பல் சரணங்களாக
மலரும் வாழ்க்கை என்னும் இசை
கல்லைக் கரைத்தெடுக்கும்
அரவத்தையும் ஆடவைக்கும்
நெஞ்சத்தை மகிழவும் வைக்கும்
கண்ணீரையும் வரவைக்கும்
ஓடும் நதியிலும் இசை
ஆடும் அலையிலும் இசை
வீசும் காற்றிலும் இசை
விடும் மூச்சிலும் இசை
நோய்க்கு மருந்தாகும்
காதுக்கு விருந்தாகும்
பிரபஞ்சத்தை இயங்கும்
வலுமிக்க இசை
வீரம் மேடையாக
தாயகத் தாகம் வாத்தியங்களாக
மலரும் விடுதலை இசை
பார்வைகள் சுரங்களாக
ஆசைகள் ராங்கங்களாக்
அன்பு இணைக்கும் தாளமாக
மலரும் காதலென்னும் இசை
பாசம் என்பது பாடலாக
பரிவு என்பது மெட்டாக
நேசமென்பது உடன்பாட
மலரும் குடும்பம் என்னும் இசை
அன்பு பல்லவியாக
உழைப்பு அனுபல்லவியாக
விருந்தோம்பல் சரணங்களாக
மலரும் வாழ்க்கை என்னும் இசை
கல்லைக் கரைத்தெடுக்கும்
அரவத்தையும் ஆடவைக்கும்
நெஞ்சத்தை மகிழவும் வைக்கும்
கண்ணீரையும் வரவைக்கும்
ஓடும் நதியிலும் இசை
ஆடும் அலையிலும் இசை
வீசும் காற்றிலும் இசை
விடும் மூச்சிலும் இசை
நோய்க்கு மருந்தாகும்
காதுக்கு விருந்தாகும்
பிரபஞ்சத்தை இயங்கும்
வலுமிக்க இசை
Thursday, 10 January 2013
நகைச்சுவைப்படங்கள்: குவாட்டர் அடிச்ச குழந்தைகள்
என் வழி நீ வா மகனே |
புல்லா அடிச்சாத்தான் கிக்கு ஏறும் |
ஏய் வாடி இங்கிட்டு |
என்ன சுகமா இருக்கு..... |
எங்கிட்டே மோதாதே..... |
அம்மா என்னா நீதான் அம்மா |
செம கிக்கு மச்சி.... |
எவண்டா கால் வைக்கிற இடத்திலை கையை வைச்சது... |
சுகம்மா இருக்கு.... |
நான் ஆணையிட்டால்....அது நடக்காவிட்டால்..... |
எவண்டா சைட்டிஷ்ஷை சுட்டது..... |
நல்ல கம்பன் இருந்தாத்தான் தண்ணி அடிக்கறதில சுகம் இருக்கு... |
எல்லாமே மாயை... |
Wednesday, 9 January 2013
2013இல் உலகப் பொருளாதாரம் வளருமா தளருமா?
2012-ம் ஆண்டு ஐரோப்பிய
ஒன்றியத்திற்கு இன்னும் ஒரு மோசமான ஆண்டாக அமைந்தது. ஒன்றிய நாடுகளின்
கடன் பிரச்சனை, யூரோ நாணயத்தின் பிரச்சனை, வேலையில்லாப் பிரச்சனை,
சமூகப்பிரச்சனை போன்றவற்றால் பல நாடுகள் பாதிக்கப்பட்டன. உலக வல்லரசு
நாடுகள் ஐந்தில் இரண்டு நாடுகளான பிரித்தானியாவும் பிரான்சும் ஐரோப்பிய
ஒன்றிய நாடுகளில் இருக்கின்றன. ஐநூறு மில்லியன் (ஐம்பது கோடி) மக்களைக் கொண்ட ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் உலகிலேயே மிகப் பெரிய பொருளாதாரம். ஐரோப்பிய ஒன்றியப் பொருளாதாரத்தின் நிலை உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு முக்கியமானதாக அமைகிறது.
ஐரோப்பிய வேலையில்லாப் பிரச்சனை
வேலையில்லாதவர்களின் விழுக்காடு ஜப்பானில் 4.2% ஆகவும் அமெரிக்காவில் 7.6%ஆகவும் பிரித்தானியாவில் 7.7% ஆகவும் இருக்கையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் சராசரி விழுக்காடு 10.7% ஆக இருந்தது. தொடர்ந்து 19 மாதங்களாக வேலையற்றோர் தொகை உயர்ந்து கொண்டிருப்பது அரசியல் தலைவர்களைச் கவலையடைய வைக்கிறது. 26 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 26மில்லியன் பேர் வேலையற்றிருக்கின்றனர். யூரோ வலய நாடுகள் எனப்படும் யூரோ நாணயக் கட்டமைப்புக்குள் இருக்கும் 17 நாடுகளில் வேலையில்லாப் பிரச்சனை ஏற்றுக் கொள்ள முடியாத அளவு உயர்வாக இருக்கிறது. யூரோவலய நாடுகளின் சராசரி விழுக்காடு 2012 ஒக்டோபரில் 11.6% ஆக இருந்தது நவம்பரில் 11.7% ஆக உயர்ந்தது. 1999இல் ஆரம்பிக்கப்பட்ட யூரோ நாணய நாடுகளைப் பொறுத்த வரை இந்த 11.7% மிகக்கூடிய விழுக்காடாகும்.
நாணயம் மனிதனுக்கு அவசியம்
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 26 நாடுகளில் 17 நாடுகள் யூரோ நாணயக் கட்டமைப்பில் இணைந்திருக்கின்றன. யூரோ வலய நாடுகளின் பொருளாதாரப் பிரச்சனை மற்ற 9 நாடுகளின் பிரச்சனையிலும் பார்க்க மோசமாக இருக்கின்றது. யூரோ நாணய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் மத்திய வங்கியான ஐரோப்பிய மத்திய வங்கியின் நிபந்தனைகளுக்கு அமைய தமது நாட்டின் நிதிக் கொள்கையை வகுக்க வேண்டும். யூரோ நாணய நாடுகள் தமது அரச கடன், அரச செலவீனம், பணவீக்கம் போன்றவற்றை யூரோ நாணயக் கட்டமைப்பின் நிபந்தனைகளுக்கு அமைய நிர்வகிக்க வேண்டும். ஆனால் இந்த அரச நிதி நிர்வாக நிபந்தனைகளை விதிப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் ஜெர்மனி அதிக செல்வாக்கு வகிக்கிறது. ஒரு நாட்டுக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்படும்போது அந்நாடு தனது நாணய மாற்று வீதத்தையும் வங்கிக் கடன் வட்டி வீதத்தையும் பொருளாதார சூழ் நிலைக்கு ஏற்ப மாற்றியமைக்கும். கிரேக்கம் 17 நாடுகளைக் கொண்ட யூரோ கட்டமைப்பில் இருப்பதனால் அப்படிப்பட்ட நடவடிக்கைகளைச் செய்ய முடியாது. யூரோ நாணயத்தின் பெறுமதியும் அதன் வட்டி வீதமும் அதில் உள்ள 17 நாடுகளில் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட ஜேர்மனியின் பொருளாதார நிலைமைக்கு ஏற்பவே நிர்ணயிக்கப் படுவதாக குற்றச் சாட்டு உண்டு. யூரோ நாணயக் கட்டமைப்பில் இருக்கும் நாடு தனது கடன் பளு பண வீக்கம் போன்றவற்றை சில வரையறைகளுக்குள் வைத்திருக்க வேண்டும்.
ஐரோப்பியாவில் தெற்கு தேய வடக்கு வாடுகிறது
உலக நாடுகள் பொருளாதார ரீதியில் ஒன்றில் ஒன்று தங்கி இருக்கின்றன. இந்தப் பின்னிப் பிணைவு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடை இன்னும் நெருக்கமாக இருக்கிறது. அவை ஒரு பொருளாதாரக் கட்டமைப்பில் இருப்பதால் ஒரு நாட்டில் ஏற்படும் பொருளாதாரப் பிரச்சனை மற்ற நாட்டைப் பாதிக்கும். வடக்கு ஐரோப்பிய நாடுகளான ஒஸ்ரியாவில் 4.5%ஆகவும், லக்சம்பேர்க்கில் 5.1%ஆகவும் ஜேர்மனியில் 5.4% ஆகவும் நெதர்லாந்தில் 5.6% ஆகவும் இருக்கும் வேலையற்றோர் விழுக்காடு தெற்கு ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயினிலும் கிரேக்கத்திலும் 26% ஆக இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலேயே கிரேக்கத்தில்தான் வேலையற்றோர் எண்ணிக்கை ,மிகப் பெரும் அதிகரிப்பை கண்டுள்ளது. அங்கு வேலையற்றோர் விழுக்காடு 18.9%இல் இருந்து 26% ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினையும் கிரேக்கத்தையும் யூரோ நாணயக் கட்டமைப்பில் கட்டாயமாகத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டிய கட்டாயம் மற்ற நாடுகளுக்கு இருக்கிறது. இந்த இரு நாடுகளும் யூரோ நாணயக் கட்டமைப்பில் இருந்து வெளியேறினால் அது ஐரோப்பியப் பொருளாதாரத்தில் மட்டுமல்ல உலகப் பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இரண்டு நாடுகளும் வெளியேறினால் அந்த நாடுகளுக்கு கடன் கொடுத்த வங்கிகள் முறிவடையும் அது ஒரு தொடர் டொமினோ சரிவை ஐரோப்பியப் பொருளாதரத்திலும் உலகப் பொருளாதாரத்திலும் ஏற்படுத்தும். இவ்விரு நாடுகளுக்கும் பெரும் பொருளாதார உதவிகள் வெளியில் இருந்து தேவைப்படுகிறது. அடுத்த பிரச்சனைக்குரிய நாடு வடக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த இத்தாலியாகும்.
விடியலுக்கு வெகுதூரம்
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருளாதாரப் பிரச்சனை 2013ஐயும் தாண்டிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலையற்றோரின் அதிகரிப்பு 20141-ம் ஆண்டு வரை தொடரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. யூரோ வலய நாடுகளில் 11.8% ஆக இருக்கும் வேலையற்றோர் தொகை 2011இல் 12.5%இற்கு மேல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்லா ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளைத் தொடர வேண்டிய நிலையில் இருக்கின்றன. அரச செலவீனங்கள் குறைக்கப்படும் போது பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படும். அரசுகள் வரிகளை அதிகரித்தும் சம்பளங்களையும் ஓய்வூதியங்களையும் குறைத்தன. இதனால் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்து விட்டது.இதனால் அவர்களின் கொள்வனவுத் திறன் குறைகிறது. இது உற்பத்தித் துறையைப் பாதிக்கும். அது வேலையில்லாப் பிரச்சனையை அதிகரிக்கும். இத் தொடர் வீழ்ச்சியை நிறுத்தி பொருளாதாரத்திற்கு ஒரு உந்து வலுவை எப்படிக் கொடுப்பது என்று தெரியாமல் அரசுகளும் பொருளாதார நிபுணர்களும் கையைப் பிசைகின்றனர். வங்கிகள் கடன் கொடுக்க அஞ்சுகின்றன. மக்கள் கடன் பட அஞ்சுகின்றனர். இது வளர்ச்சியடைந்த பொருளாதார முறைமையைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு உகந்ததல்ல.
வெளியில் இருந்து வரும் உந்து வலு
ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் இருந்து ஒரு உந்து வலு இல்லாத நிலையில் வெளியில் இருந்து ஒரு உந்து வலு கிடைக்குமா என்ற கேள்விக்கும் நல்ல பதில் இல்லை. பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவும் ஜப்பானும் தமது பிரச்சனையைச் சமாளிக்க முடியாமல் தடுமாறுகின்றன. வேகமாக வளர்ந்து வந்த பொருளாதாரங்களான சீனாவும் இந்தியாவும் 2012இல் வேகக் குறைப்பைக் கண்டுள்ளன. அதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான ஏற்று மதியில் வீழ்ச்சியடைந்தமையே. 2007இற்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கலில் இருந்து இன்னும் உலகம் விடுபடாமைக்குக் காரணம் ஒரு சரியான உந்து வலு எங்கிருந்தும் கிடைக்காமையும் பின்னிப் பிணைந்த நெருக்கடிகளுமே. அமெரிக்க fiscal cliff என்னும் அரச நிதிப் படுகுழி கடைசித் தருணத்தில் தவிர்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உலகெங்கும் பங்குச் சந்தையில் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விடப்பட்டது. எரி பொருள் விலை அதிகரித்தது. ஆனால் அமெரிக்கா தனது நிதிப் பிரச்சனையைத் தீர்க்கவில்லை ஒத்தி வைத்துள்ளது. 2013இல் செய்யப்படவிருக்கும் வரி அதிகரிப்பால் அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும். இது அரச வருமானத்தைக் குறைக்கும். அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சியில் 1% குறைப்பை அரச நிதிப் படுகுழித் தவிர்ப்பு உடன்பாடு ஏற்படுத்தும். 2013 மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்கா பரவாயில்லாமல் இருக்கும் எனப்படுகிறது.
குத்து விளக்குக்கீழ் பிரித்தானியப் பிரச்சனை
உலகிலேயே சிறந்த வங்கிக் கட்டமைப்பைக் கொண்ட பிரித்தானியாவிலும் வங்கிகள் தடுமாறுகின்றன. ஒலிம்பிக் போட்டிகள் இங்கிலாந்திற்கு எதிர்பார்த்தது போல் ஒரு உகந்த உந்து வலுவைக் கொடுக்கவில்லை. 2015இல் தமது கடன் பிரச்சனையில் இருந்து விடுபடலாம் எனக் கணக்குப் போட்டிருந்த பிரித்தானிய அரசு இப்போது குத்துவிளக்குக் கீழ் இருந்து அந்தக் கணக்கை மறுபரிசீலனை செய்கிறது. பழமைவாதக் கட்சியினதும் தாராண்மை வாதக் கட்சியினதும் கூட்டணி அரசு தனது சிக்கன நடவடிக்கைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்கப் போவதாக உறுதியுடன் இருக்கிறது. பிரித்தானிய நிதியமைச்சர் தனது நாட்டுப் பொருளாதாரப் பிரச்ச்னைக்கு உடனடித் தீர்வு இல்லை என்கிறார். 2012இல் 0.8% வளர்ச்சியைக் காணும் என எதிர்பார்க்கபட்ட பிரித்தானியப் பொருளாதாரம் 0.1% சுருங்கியிருக்கலாம் எனப்படுகிறது. அரசு கீன்சியப் பொருளாதாரத் தத்துவப்படி சிக்கன நடவடிக்கைக்களைக் கைவிட்டு கடன் வாங்கி அதிகம் செலவளித்தால் பொருளாதாரம் வளர்ச்சி காணும் என்று சிலர் வாதாடுகின்றனர். ஆனால் நிதியமைச்சர் இதை நிராகரிக்கிறார். நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கும் அத்துடன் நாட்டின் கடன்படு திறன் குறையும் என அவர் அஞ்சுகிறார். சில பொருளாதார நிபுணர்கள் 2013இலும் 2014இலும் பிரித்தானியப் பொருளாதாரம் வளர்ச்சியடையும் ஆனால் அந்த வளர்ச்சி போதுமானதாக இருக்காது என்கின்றனர். பணப்புழக்க அதிகரிப்பின் மூலம்(quantitative easing) பொருளாதார வளர்ச்சித் தூண்டல் செய்வதற்கு பிரித்தானிய மத்திய வங்கி தயக்கம் காட்டுகிறது. பிரித்தானிய வங்கி 0.25% வட்டியுடன் தனது நாணயத்தின் பெறுமதியை நிலை நிறுத்துவதில் வெற்றி கண்டுவருகிறது. 2012 நவம்பரில் தொழில் துறையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த முன்னேற்றம் தொடர வேண்டும். அது மட்டுமல்ல பிரித்தானியாவின் தேசிய வர்த்தகப் பற்றாக் குறையிலும் நவம்பரில் முன்னேற்றம் காணப்பட்டது. பிரித்தானிய தொழில் கொள்வோர் மத்தியிலும் நம்பிக்கை வளர்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
சமூகப் பிரச்சனையாக உருவெடுக்குமா?
2011இல் இங்கிலாந்து நகரங்களில் நடந்த கலவரத்திற்கு பொருளாதாரப்பிரச்சனையும் ஒரு காரணமாக அமைந்தது. தெற்கு ஸ்பெயினில் 57வயதான வேலையற்ற ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டித் தற்கொலை செய்து கொண்டார். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இப்படி நடப்பது ஒரு அசாதாரண நிகழ்ச்சியே. இதே போல முயன்ற 63 வயதான இன்னும் ஒருவர் தப்பித்துக் கொண்டார். ஸ்பெயினில் 350,000 குடும்பங்கள் தமது வீடுகளை இழந்துள்ளன. இவை அரபு வசந்தம் ஐரோப்பாவிற்கும் வருமா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. துனிசியாவில் ஒரு இளைஞர் தனக்குத் தானே தீ மூட்டித் தற்கொலை செய்தது அந்த நாட்டு அரசைக் கவிழ்த்ததுடான் மற்ற நாடுகளுக்கும் பரவி எகிப்திலும் லிபியாவிலும் ஆட்சியாளர்களை விரட்டியது. சிரியாவில் பெரும் உள்நாட்டுப் போர் மூண்டுள்ளது. ஐரோப்பாவிலும் ஒரு மக்கள் புரட்சி வெடிக்குமா என்பதில் ஐரோப்பிய அரசுகள் கவனத்துடன் இருக்கின்றன. அது மட்டுமல்ல குடியேற்ற வாசிகளிடையும் உள்நாட்டுக்காரர்களிடையும் மோதல்கள் உருவாகுமா என்ற அச்சமும் உண்டு.
சீரடையும் சீனா
2013இல் சீனப் பொருளாதாரம் 2012இலும் பார்க்க 2013இல் சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல சீனாவின் பொருளாதாரம் தொடர்பான நிபுணர்கள் சீனப் பொருளாதாரம் 2013இல் சீரடையும் என்கின்றனர். சீனாவின் புதிய தலைமை சீனப் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் தடையாக இருக்கும் ஊழலையும் தேசிய வருமானப் பங்கீட்டுப் பிரச்சனையையும் ஓரளவு தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த அளவில் இருக்கும் வேலையில்லாப் பிரச்சனையும் குறைக்கப்பட்டுள்ள பணவீக்கமும் சீனாவின் பலமாகும்.
சற்று நிமிரும் இந்தியா
2014இல் தேர்தலை எதிர்கொள்ளும் இந்தியாவிற்கு 2013 ஒரு முக்கிய மான ஆண்டு. 2011இல் 7.3% வளர்ச்சியடைந்த இந்தியப் பொருளாதாரம் 2012இல் 7.1% வளர்ச்சியை மட்டுமே கண்டது. 2013இல் இந்தியப் பொருளாதாரம் 7.7% வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ரூபாயின் மதிப்பிறக்கம், பணவீக்கம், அதிகரித்த வெளிநாட்டு வர்த்தகப் பற்றாக் குறை (current account deficit) ஆகிய பிரச்சனைகளுடன் இந்தியா 2013இல் காலடி எடுத்து வைத்துள்ளது.
நம்பிக்கை தளராத மக்கள்
ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு மத்தியில் மக்களின் பொருளாதாரம் தொடர்பான உணர்ச்சிவயக்கருத்துச் சுட்டி (sentiment index) 1.3% விழுக்காட்டால் உயர்ந்து 87% ஐ எட்டியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒன்றிணைந்து நிதிப் பிரச்சனைக்கு எதிராக கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுத்து வரும் நடவடிக்கைகளில் மக்கள் நம்பிக்கை பெற்றுள்ளனர் எனப்படுகிறது. நம்பிக்கையே உயர்ச்சிக்கு வித்தாகும். இந்த நம்பிக்கைக்கு வளர்ந்துவரும் சந்தை ப் பொருளாதாரங்களின் வளர்ச்சி 2013இல் கைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகப் பொருளாதாரத்திற்கு ஒரு உந்து வலு கிடைப்பதென்றால் அது வளர்ந்துவரும் சந்தை ப் பொருளாதாரங்களிடமிருந்தே கிடைக்கும். ஆனால் எரிபொருள் பிரச்ச்னை தொடந்து எரிந்து கொண்டிருக்கும்.

Tuesday, 8 January 2013
மேசையாக மாற்றக் கூடிய சீனக் கணனி
மேசைக்கணனி, மடிக் கணனி, பட்டிகைக்கணனி, கைக்கணனி என்று பலதரப்பட்ட கணனிகள் இருக்கையிலேயே சீனாவின் கணனி தயாரிப்பு நிறுவனமான Lenovo மேசையாக மாற்றக் கூடிய ஒரு கணனியை உருவாக்கியுள்ளது. பாரிய ஐ-பாட் போல் செயற்படக்கூடியது இந்தக் கணனி.
IdeaCentre Horizon Table PC எனப்படும் சீனக் கணனி நாலு பேர் ஒரேயடியாகப் பாவிக்கக் கூடியது. இது கணனிகள் பிரித்த குடும்பத்தை மீளவும் இணைக்கும் என்று சொல்லப்படுகிறது.
பெரிய தொடு திரையை இந்த Coffee Table computer கொண்டிருக்கிறது. நான்கு பேர் ஒன்றாக இருந்து இதில் கணனி விளையாட்டுக்களை விளையாடலாம். இதனால் இதை interpersonal computer என்று அழைக்கிறார்கள். IdeaCentre Horizon Table PC எனப்படுக் இக் கணனி 27அங்குல(67செமீ) திரையைக் கொண்டது. ஐ-பாட்டிலும் பார்க்க எட்டு மடங்கு பெரியது.
விண்டோ - 8 இல் இயங்கும் இந்த IdeaCentre Horizon Table PC இரண்டு மணித்தியாலங்கள் செயற்படக் கூடிய பட்டரியைக் கொண்டது. இதன் விலை 1700 அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் Lenovo நிறுவனம் ஐபிஎம்மின் PC பிரிவை விலைக்கு வாங்கி கணனிகளைத் தயாரித்து வருகிறது.

Monday, 7 January 2013
வல்லரசுகளால் சிரியப் பிரச்சனை முடிவின்றித் தொடர்கிறது.
06-01-2013இலன்று சிரிய அதிபர் பஷார் அல் அசாத் தனது நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். தனது நாட்டில் கிளர்ச்சிக் காரர்களை அல் கெய்தா இயக்கத்தினருடனும் அமெரிக்காவுடனும் தொடர்புடையாவர்கள் எனக் குற்றம் சாட்டிய அவர் தான் கிளர்ச்சிக்காரர்களுடன் பேச முடியாது எனவும் அவர்களது எசமானர்களுடன் பேச விரும்புவதாகவும் தெரிவித்தார்.
அசாத்தும் இணக்கப்பாடு என்கிறார்
புது அரசமைப்பு யாப்பு, புது அரசு, இணக்கப்பாடு ஆகியவற்றை அசாத் நாட்டு மக்களுக்கு தான் ஆற்றிய உரையில் முன்மொழிந்தார். தனது நாட்டுக் கிளர்ச்சிக்காரர்களுக்கு மேற்கு நாடுகள் செய்யும் உதவியை உடன் நிறுத்த வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தார் அசாத். அவரது உரை சிரியாவின் மோதல்களை நிறுத்தாது என பலதரப்பினரும் கருத்துத் தெரிவித்தனர்.சிறுபான்மை இனக்குழுமமான அலவைற்றைச் சேர்ந்த அசாத் சுனி முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிரியாவில் ஆட்சியில் இருக்கிறார்.
அறுபதினாயிரம் பேர் உயிர்ப்பலி, ஐந்து இலட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேற்றம், பல இலட்சக் கணக்கானோர் இடப்பெயர்வு, கணக்கிடமுடியாத சொத்துக்கள் அழிப்பு ஆகிய அனர்ந்தங்களுடன் சிரிய உள்நாட்டுப் போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையும் உலக நாடுகளும் ஏதும் செய்யாமல் இருக்கின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழக ஆணையாளர் நவநீதம் பிள்ளை அம்மையார் சிரியா தொடர்பாக ஐநா பாதுகாப்புச் சபை காத்திரமாக எதையும் செய்யாதது எம்மை வெட்கத்திற்கு உள்ளாக்குகிறது என்றார். ஒரு ஆண்டுகளுக்கு முன்னர் சிரியாவின் ஆட்சியாளர்கள் பன்னாட்டு நீதிமன்றிற்கு இழுக்கப்பட வேண்டியவர்கள் என்றார் நவி பிள்ளை அம்மையார். ஆனால் இலங்கையில் இதிலும் மோசமான கொலைகள் நடந்த போது நவி பிள்ளை இந்த மாதிரி எதுவும் செய்ய முடியாமல் ஐநா பொதுச் செயலர் பான் கி மூனாலும் அவரது ஆலோசகர் விஜய் நம்பியாராலும் அடக்கப்பட்டார்.
சிரியா தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையும் அரபுநாடுகளின் சபையும் முதலில் கோஃபி அனனை சிரியாவிற்கான சமாதானத் தூதுவராக நியமித்தன. அவர் பாதுகாப்புச் சபை எதுவும் செய்யவில்லை என்று சொல்லி தனது பதவியில் இருந்து விலகிவிட்டார். அதைத் தொடர்ந்து சமாதானத் தூதுவராக நியமிக்கப்பட்ட லக்தர் பிரஹிமி பல நாடுகளுக்கு உல்லாசமாகப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். உருப்படியாக எதுவும் செய்யவில்லை.
ஐந்து நாள் பயணமாக சிரியத் தலைநகர் டமஸ்கஸ் சென்று அதிபர் பஷார் அல் அசாத்தைச் சந்தித்த லக்தர் பிரஹிமி சிரியாவில் உண்மையான மாற்றத்திற்கு அசாத்தின் பதவிக்காலம் 2014இல் முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்கிறார். அதுவரை ஒரு அசாத்தின் தரப்பில் இருந்தும் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் பிரதிநிதிகளையும் கொண்ட ஒரு இடைக்கால அரசு சிரியாவில் அமைக்கும் ஆலோசனையை பிரஹிமி முன்வைத்தார். அவரது ஆலோசனை சிரியக் கிளர்ச்சிக்காரர்களால் நிராகரிக்கப்பட்டது. 2013இல் சிரியாவிலிருந்து வெளியேறியோர் தொகை ஒரு மில்லியன்களாக அதிகரிக்கும் என்றும் மேலும் பல பத்தாயிரக்கணக்கானோம் கொல்லப்படுவார்கள் என்றும் சமாதானத் தூதுவர் லக்தர் பிரஹிமி எச்சரிக்கின்றார்.
சிரிய அதிபர் பஷார் அல் அசாத் தன்னிடம் இருக்கும் பேரழிவு விளைவிக்கக் கூடிய படைக்கலன்களை இன்னும் பாவிக்கவில்லை. அவரது இருப்பு கேள்விக் குறியாகும் போது அவர் அவற்றைப் பாவிக்க மாட்டார் எனக் கூற முடியாது.
இரசியா சிரியாவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்திற்கான காரணங்கள்:
1. Tartus துறைமுகத்தில் படைத்தளம்
இரசியா சோவியத் ஒன்றியம் என்றிருக்கும் போது எகிப்தில் இரு கடற்படைத் தளங்களையும் சிரியாவில் ஒரு கடற்படைத்தளத்தையும் அமைத்தது. பின்னர் எகிப்தில் இருந்த தளங்கள் மூடப்பட்டு அங்கிருந்தவை சிரியாவிற்கு நகர்த்தப்பட்டன. மத்திர தரைக்கடலில் இரசியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடு சிரியா. இரசியாவிற்கு வெளியே உள்ள ஒரே ஒரு இரசியக் கடற்படைத்தளம் சிரியாவின் Tartus துறைமுகத்தில் இருக்கிறது. நவீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இருக்கக் கூடிய ஆழ்கடல் துறைமுகமான டார்டஸை இரசியா இழக்க விரும்பாது. தற்போது உள்ள சிரிய மக்களின் பெரும்பான்மையானவர்களின் மனப்பாங்கின்படி சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டால் டார்ட்டஸ் துறைமுகத்தில் இருந்து இரசியா வெளியேற்றப்படும்.
2. படைக்கலன்கள் விற்பனை
லிபியாவிலும் ஈராக்கிலும் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றங்கள் இரசியாவின் படைக்கலன்களின் விற்பனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 2010இல் சிரியாவிற்கு 1.1 பில்லியன் டாலர்கள் பெறுமதியான ஏற்றுமதியை இரசியா செய்திருந்தது. இரசியாவின் 7வது பெரிய படைக்கலன் கொள்வனவாளராக சிரியா இருக்கிறது. சிரியாவிற்கான விற்பனையை இரசியா இழக்க விரும்பவில்லை.
3. பெரும் முதலீடு
சிரியாவை நட்பு நாடாக வைத்திருக்க இரசியா தனது சிரியாவிற்கன கடனில் 9.4பில்லியன் டாலர்கள் கடனை விட்டுக் கொடுத்தது. 2009இல் சிரியாவில் இரசியா 19.4பில்லியன்கள் டாலர்கள் முதலிட்டிருந்தது.
4. நீண்ட கால நட்பு
மத்திய கிழக்கில் மிக நீண்டகால நட்பை சிரியாவும் இரசியாவும் கொண்டிருக்கின்றன. இந்த நட்பு பஷார் அல் அசாத்தின் தகப்பனார் காலத்தில் இருந்த சோவியத்-சிரிய நட்பில் இருந்து தொடர்கின்றது.
5. சிரியாவை இழந்தால் ஈரானையும் இரசிய இழக்க வேண்டிவரும்.
சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அதன் நெருங்கிய நட்பு நாடான ஈரானில் இருக்கும் ஆட்சியாளர்களும் பெரும் சவாலை எதிர் கொள்ள வேண்டி வரும். தனது அடுத்த நட்பு நாடும் படைக்கலன் கொள்வனவு நாடுமான ஈரானையும் இரசியா இழக்க விரும்பவில்லை.
இரசியா சிரிய ஆட்சி மாற்றத்திற்கு செய்யும் தடைகள்
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் மேற்கு நாடுகள் சிரியாவிற்கு எதிராகக் கொண்டு வந்த இரு தீர்மானங்களை இரசியா தனது வீட்டோ அதிகாரத்தைப் பாவித்து இரத்துச் செய்தது. லிபியாவில் செய்தது போல் விமானங்களில் இருந்தும் கடற்கப்பல்களில் இருந்தும் குண்டுகளை வீச மேற்கு நாடுகள் திட்டமிட்டிருந்தன. துருக்கி மீது சிரியப்படைகள் குண்டுகள் வீசியதாக ஒரு நாடகமாடி சிரியாமீதான குண்டுத் தாக்குதலுக்கு அவை வழிவகுக்கலாம் என உணர்ந்த இரசியா சிரியாவிற்கு தனது விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் அதை இயக்கும் நிபுணர்களையும் அனுப்பியது. இதனால் மேற்கு நாடுகளால் ஒரு நேரடித் தலையீட்டை சிரியாவில் செய்ய முடியவில்லை.
வல்லரசு நாடுகளிடை உள்ள பிராந்திய ஆக்கிரமிப்புப் போட்டி சிரியாவிலும் பெரும் இரத்தக் களரியை ஏற்படுத்தும்.
சிரியா தொடர்ப்பான முந்தைய பதிவு: இன மோதலாகும் சிரியக் கிளர்ச்சியும் ஐநாவின் கையாலாகத்தனமும்

Sunday, 6 January 2013
எதையாவது செய்து தொலைக்கும் ஆளும் வர்க்கங்களும் தமிழர்களும்.
ஒருவன் பிரச்சனைகளால் சூழப்பட்டிருக்கும் போது எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்படுவதுண்டு. அப்போது அவன் எதையாவது செய்து தொலைப்பான். அது பிரச்சனையை மேலும் மோசமாக்கும். இது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் பொருந்தும். இப்போது உலகெங்கும் பல ஆட்சியாளர்கள் இதையே செய்கின்றனர்,
உலகப் பொருளாதாரப் பிரச்சனை
கடந்த ஐந்து ஆண்டுகளாக உலகில் பல நாடுகளில் பொருளாதரப் பிரச்சனை மோசமாகிக் கொண்டு போகின்றது. இதை எப்படித்தீர்ப்பது என்று தெரியாமல் தவிக்கும் அதிகார வர்க்கங்கள் எதையாவது செய்து தொலைக்கின்றன. கடன் பிரச்சனையைத் தீர்க்க மேலும் கடன்படுகின்றன.
இலங்கைப் பிரச்சனையில் மேற்கு நாடுகள்.
இலங்கையைப் பொருளாதார ரீதியில் சுரண்டுவதில் சீனா முன்னேறி வருகிறது. இலங்கையில் பல திட்டங்களைச் செயற்படுத்தும் பணிகள் முறையான ஒப்பந்தக் கோரல்கள் இன்றி(bypassing tender procedures) சீன நிறுவனங்களின் கைகளுக்குப் போகின்றன. இலங்கைப் பிரச்சனையில் மேற்கு நாடுகளின் தற்போதைய முக்கிய கொள்கை இலங்கையில் வளரும் சீன ஆதிக்கத்தை தடுப்பதே. இதற்கு தமிழர்களின் பிரச்சனையும் மனித உரிமைப் பிரச்சனையையும் கையிலெடுத்துள்ளன. மேற்கு நாடுகள் அதிலும் முக்கியமாக அமெரிக்கா சிங்களவர்களை ஆத்திரப்படுத்தக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறது. சீனாவை அகற்ற வேண்டும் அத்துடன் சிங்களவர்களை ஆத்திரப்படுத்தக் கூடாது. அது மட்டுமல்ல ஆட்சியாளர்களின் மனித உரிமை மீறல்களை பன்னாட்டு அரங்குகளில் தட்டிக் கேட்பது போல் நடிக்க வேண்டும். மேலும் தமிழர் பிரச்சனை ஒரு பிரச்சனை அல்ல என்ற நிலையை உருவாக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒன்றுக்கு ஒன்று முரணான செயற்பாடுகளை எப்படி நிறைவேற்றுவது என்று தெரியாமல் தவிக்கும் மேற்குலக அதிகாரவர்க்கம் "தமிழ்த் தலைமைகளை" தமிழ்த் தேசிய எழுச்சியைக் கொச்சைப்படுத்தும் படி கட்டளையிட்டது. தமிழ்த்தலமை எனத் தம்மை நினைப்பவர்களும் இலங்கைப் பாராளமன்றத்தில் உளறிக் கொட்டுகின்றனர். சிங்களக் கொடியை அம்மனின் கொடி என்கின்றனர்.
இலங்கைப் பிரச்சனையில் இந்திய ஆளும் வர்க்கம்
இலங்கையில் தமிழர்கள் முற்றாக அடக்கி ஒடுக்கப்பட வேண்டும், இலங்கையில் தமிழர்கள் மீண்டும் ஒரு போராட்டம் ஆரம்பிக்கக் கூடாது என்பதை தனது தலையாய கொள்கையாக கொண்டது இந்திய ஆளும் வர்க்கம். புது டில்லியைப் பொறுத்தவரை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதுதான் இந்திய ஆளும் வர்க்கத்தின் கொள்கை. இந்தியாவிற்கு இலங்கையில் சீன ஆதிக்கம் பற்றிய கரிசனை உண்டு. ஆனால் அது எனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை எதிரிக்குச் சகுனப் பிழையாகட்டும் என்ற கொள்கையுடன் இருக்கிறது. தமிழர்கள் பிரச்சனையில் தெளிவாக இருக்கும் இந்தியா தனது பிராந்திய அரசியல் பிரச்சனையில் குழம்பிப் போயிருக்கிறது. மேற்குலகுடன் சேர்ந்து இலங்கை அரசுக்கு எதிரான மனித உரிமைமீறல்களை கண்டிப்பது போல் தானும் நடிப்பதா அல்லது இலங்கை அரசிற்கு பன்னாட்டு அரங்கில் உதவி செய்வதா என்பது பற்றி இந்திய ஆளும் வர்க்கம் குழம்பிப் போய் இருக்கிறது.
2012 நவம்பர் 1-ம் திகதி ஜெனிவா நகரில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழகத்தின் இலங்கை தொடர்பான காலாந்தர மாநாட்டில் உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி இலங்கையில் அதன் அரசியலமைப்பிற்கான 13வது திருத்தம் நிறைவேற்றப்படவேண்டும், வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடாத்தப்பட வேண்டும் மனித உரிமை மீறல்களுக்கான நம்பகரமான விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்று முழங்கினார். பின்னர் நவம்பர் 5 - ம் திகதி ஒரு குத்துக் கரணம் அடித்து அந்தப் பரிந்துரைகளை இறுதி அறிக்கையில் இருந்து இந்தியா நீக்கி விட்டது. ஈழத் தமிழர்களுக்கு எதிராக இந்தியா கடந்த பல ஆண்டுகளாக செய்துவரும் திருகுதாளங்களைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு இது ஆச்சரியமளிக்கவில்லை. ஆனால் பல மேற்கு நாட்டு ராசதந்திரிகள் தமது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர். அங்கு இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில்ஒரு பெரிய டீல் நடந்திருக்கிறது என்று பலரும் கருதினர். இந்தியா பன்னாட்டு அரங்கில் இலங்கையில் இராசதந்திரக் கைக்கூலியாகவே செயற்படுகிறது.
இலங்கை ஆளும் வர்க்கம்
இலங்கை அரசின் 19 படையணிகளுள் 14 படையணிகள் தமிழர் தாயகப் பிரதேசத்தில் நிலை கொண்டுள்ளன. தமிழர் பிரதேசத்தில் நிலை கொண்டுள்ள படையினரின் எண்ணிக்கை 84,000 இற்கும் 90,000 ஆயிரத்திற்கும் இடையில் இருக்கலாம் எனப்படுகிறது. இந்தப்படையின் எண்ணிக்கை தேவைக்கும் அதிகமானது என இலங்கை ஆட்சியாளர்களுக்கு நன்கு தெரியும். ஆனால் இவர்களை சிங்களப் பகுதிக்கு நகர்த்தினால் அவர்கள் அங்கும் தமது அடக்கு முறையைக் காட்டுவார்கள் என்பதால் இலங்கை அரசிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தமிழர் பகுதியில் நிலை கொண்டிருக்கும் படையினருக்கு முறையான பொழுது போக்கு நடவடிக்கைகளையும் இலங்கை அரசால் செய்ய முடியவில்லை. அதற்கும் நிறையச் செலவிட வேண்டிவரும். எதையாவது செய்து தொலைப்பதற்காக அவர்களை தமிழ் மாணவர்களுக்கு சிங்களம் போதிக்க வைக்கிறது இலங்கை ஆளும் வர்க்கம். இதனால் தமிழர் பிரதேசத்தை சிங்கள மயமாக்கும் இலங்கை இந்தியக் கொள்கையையும் நிறைவேற்றலாம் என நினைக்கின்றனர் இலங்கை இந்திய ஆட்சியாளர்கள்.

Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...