Saturday, 29 January 2011
செயற்கை பெற்றோல் பிரித்தானியாவில் உருவாக்கம்
தற்போதைய எரி பொருள் விலை அதிகரிப்பு உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு நாடுகள் அரபு நாடுகள் மீது பொறாமை கொள்ளவும் எரி பொருட்கள் காரணமாக அமைந்தன. இந்தபிரச்சனை ஒரு மாற்று எரிபொருளை உருவாக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியது. அவசியம் கண்டுபிடிப்பின் தந்தை என்பது ஆங்கிலப் பழமொழி. அதை இப்போது உண்மையாக்கியுள்ளனர் பிரித்தானிய விஞ்ஞானிகள்.
பிரித்தானியாவைச் சேர்ந்த ஸ்ரிபன் வொலர் ஐதரசனில் ( hydrogen) இருந்து செயற்க்கை பெற்றோலை உருவாக்கியுள்ளார்.
ஐதரசனில் ( hydrogen) இருந்து உருவாக்கப் படும் பெற்றோல் மலிவானதாகவும் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாததாகவும் இருக்கும்.
ஐதரசனில் ( hydrogen) இருந்து பெற்றோல் உருவாக்க ஒரு கலன் $1.50 மட்டுமே செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
ஐதரசனில் ( hydrogen) இருந்து பெற்றோல் தற்போது உள்ள வாகனக்களிலும் பயன்படுத்த முடியும்.
இப்போது உள்ள பெற்றோல் கரியை (carbon)கருப்பொருளாக கொண்டது ஐதரசனில் ( hydrogen) இருந்து ஐதரசனைக் கருப்பொருளாகக் கொண்டதால் சூழலுக்கு இதனால் சூழலுக்கான பாதிப்புக் குறைவு.
இப்போது ஐதரோகாபனில் ஓடும் வண்டிகளான மகிழூர்திகள் விமானங்கள் போன்றவை இந்தச் செயற்க்கைப்பெற்றோலால் ஓட முடியும்.
Oxford University யில் ஐதரசன் மூலக்கூறுகளைக் நெருக்கி ஒன்றிணைக்கும் தொழில் நுட்பத்தை உருவாக்கினர்.
இந்த செயற்கைப் பெற்றோல் பொது மக்கள் பாவனைக்கு வர இன்னும் மூன்று வருடங்கள் எடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
Thursday, 27 January 2011
மாய மான் சொல்ஹெய்ம் மீண்டும் வரப்போகிறாராம்.
இலங்கையில் பெரும் நிலப்பரப்பை தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலையில் யாழ் மாவட்டத்தில் உள்ள இலங்கை அரச படையினருக்கு தேவையான வழங்கல்களை வழங்க இலங்கை அரசு பெரும் சிரமமும் பணச்செலவும் செய்து கொண்டிருந்த வேளையில் இணைத் தலைமை நாடுகள் என்று ஒரு பன்னாட்டு கட்டப் பஞ்சாயத்துக்காரர் இலங்கையில் தலையிட வந்தனர்.
திசை திருப்ப வந்த மாயமான்
இலங்கையில் சமாதானம் ஏற்பட வேண்டும் என்று சொல்லி ஒரு இணைத் த(றுத)லை நாடுகள் என்று ஒரு அமைப்பு உருவாக்கப் பட்டது. இதில் நோர்வே, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ஆகியன இடம்பெற்றன. பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்தினர். இலங்கையில் அமைதி ஏற்படுத்துவது போல் பாசாங்கு செய்து தமிழர்களை ஏமாற்றிக் கொண்டனர். இந்த இணைத் தறுதலை நாடுகளில் இந்தியா பங்குபற்றாமல் திரை மறைவில் அவற்றுடன்கள்ளத் தனமாக இணைந்து செயற்பட்டது. இவர்களின் முக்கிய சதி சமாதானப் பேச்சு வார்த்தை போர் நிறுத்த உடன் படிக்கை என்று தமிழர்களின் கவனத்தை திசை திருப்புவதும் அவர்களுக்குள் பிணக்குகளை பிரிவுகளை ஏற்படுத்துவதுமாகும். இணைத்(தறு)தலைமை நாடுகளில் முக்கியமான இருவர்கள் நோர்வேயின் எரிக் சொல்ஹெய்மும் ஜப்பானின் யசூசு அக்காசியும். இவர்கள் ஏதோ நல்லவர்கள் போல தம்மைக் காட்டிக் கொண்டனர். அதில் எரிக் சொல்ஹெய்ம் தன்னை ஒரு தமிழர்களின் நண்பன் என்று பொய்யாக அடையாளம் காட்டிக் கொண்டார். இதற்காக அவர் சிங்கள பத்திரிகைகளாலும் பேரினவாதிகளாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டதுண்டு. பலதமிழர்கள் இவர்கள் இருவரையும் நடுநிலையாளர்கள் என்றே நம்பினர். பலமாக இருந்த விடுதலைப் புலிகளை எரிக் சொல்ஹெய்ம் என்ற மாய மானைக் காட்டி பேச்சு வார்த்தை மேசைக்கு வரச் செய்து கொண்டு இலங்கை தனது படையினருக்கு பயிற்சியும் பல தந்திரோபாய மாற்றங்களையும் செய்து கொண்டது. இலங்கை தனது படையில் ஆழ உடுருவும் அணி, சிறு படகுகள் மூலம் சிறு அணிகளாகச் சென்று கடற்புலிகளுடன் போரிடும் அணி போன்ற பல புதிய அணிகளையும் புதிய உத்திகளையும் ஏற்படுத்திக் கொண்டது. 2008இற்கு முன் இருந்த எறிகணைக செலுத்திகள் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் உள்ள இலக்குகளை மட்டும் தாக்கும். இவற்றை எதிர் கொள்ள விடுதலைப்புலிகள் இந்த எறிகணைச் செலுத்திகளுக்கு மிக அண்மையாகச் சென்று நின்று சண்டை போடும் போது இந்த எறிகணைச் செலுத்திகளால் எதுவும் செய்ய முடியாது. இதற்கு மாற்றாக இந்தியா ஒரு குறுகிய தூரத்தில் தாக்கக் கூடிய ஏவுகணைச் செலுத்திகளை உருவாக்கி இலங்கைக்கு வழங்கியது. இந்தத் தாயாரிப்புக்களுக்கான கால அவகாசத்தை இலங்கைக்கு வழங்கவே இணைத்தறுதலை நாடுகள் எரிக் சொஹொய்மைப் பாவித்து விடுதலைப் புலிகளைத் திசை திருப்பி சமாதானப் பேச்சு வார்த்தை மேசைக்கு அழைத்துச் சென்றது. இந்தக் காலகட்டத்தில் இணைத்தறுதலை நாடுகளும் இந்தியாவும் விடுதலைப் புலிகளையும் அதன் பன்னாட்டுக் கட்டமைப்புக்களையும் பலவீனப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்தன பல நாடுகள் விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்புக்களாகப் பிரகடனப் படுத்தின.
இலங்க அரசு ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்த் உடன்படிக்கையை மீறிய போது எரிக் சொல்ஹெய்மோ இணைத்தறுதலை நாடுகளோ பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
இலங்கை அரசு அப்பாவிப் பொதுமக்களை ஆயிரக் கணக்கில் கொன்றபோது எரிக் சொல்ஹெய்மோ இணைத்தறுதலை நாடுகளோ பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
இலங்கை அரசு தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பாவித்த போது எரிக் சொல்ஹெய்மோ இணைத்தறுதலை நாடுகளோ பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
இலங்கை அரசு மருத்துவ மனைகள் மீது குண்டு மழை பொழிந்த போது எரிக் சொல்ஹெய்மோ இணைத்தறுதலை நாடுகளோ பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
இலங்கை அரசு பாதுகாப்பு வலயம் என்று தான் அறிவித்த பிரதேசத்தில் தொடர்ந்து குண்டு மழை பொழிந்த போது எரிக் சொல்ஹெய்மோ இணைத்தறுதலை நாடுகளோ பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
இலங்கை அரசு பொது மக்களுக்கான உணவு மற்றும் மருந்துப் பொருள் விநியோகங்களை தடுத்து நிறுத்திய போது எரிக் சொல்ஹெய்மோ இணைத்தறுதலை நாடுகளோ பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
இலங்கை அரசு போர் குற்றம் புரிந்தது என்று சரவதேச மன்னிப்புச் சபை சர்வதேச் நெருக்கடிச் சபை போன்ற பல அமைப்புக்கள் தெரிவித்த போது எரிக் சொல்ஹெய்மோ இணைத்தறுதலை நாடுகளோ பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
இலங்கை அரசிடம் அகப்பட்டுள்ள தமிழர்கள் சட்ட விரோதமாகத் தடுத்து வைத்திருப்பற்றி எரிக் சொல்ஹெய்மோ இணைத்தறுதலை நாடுகளோ பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
இப்போது பன்னாட்டு அரங்கில் ஒரு பாதகமான நிலை உருவாகியுள்ளது. இலங்கை அரசின் போர் குற்றம் மனித உரிமை மீறல் போன்றவை இதன் காரணங்களாகும்.
- இலங்கையை ஒரு இனக்கொலை ஆபத்து நாடாக இனக் கொலைக்கு எதிரான பன்னாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
- 2008இல் ஐநாவின் மனித உரிமைக் கழகத்தில் இருந்து இலங்கை வெளியேற்றப் பட்டது.
- உலகத்தில் கணாமற் போவோர் வீதப்படி பார்த்தால் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது.
- உலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு மிக ஆபத்தான நாடுகளில் இலங்கையும் ஒன்று.
- இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்காக யாரும் தண்டிக்கப்படவில்லை.
- இலங்கையில் போர் குற்றம் நடந்தமைக்கான பல ஆதாரங்கள் பன்னாட்டு ஊடகங்களில் வெளிப்படுத்தப் பட்டுள்ளன.
இவற்றை பன்னாட்டு அரங்கில் அம்பலப் படுத்தி இலங்கையைத் தண்டிக்க வேண்டும் என்று பல வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் முனைப்புடன் செயற்படுகிறார்கள். இதிலிருந்து தப்ப இலங்கை சீனாவின் பக்கம் முழுமையாகச் சாய்ந்தால் அது ஆசியப் பிராந்தியத்தின் படைத்துறைச் சமநிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். போருக்குப் பின்னரான இலங்கையை பொருளாதர ரீதியில் மேற்கு நாடுகளின் பண முதலைகள் சுரண்டுவதற்கும் இந்த போர் குற்ற மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்கள் தடையாக இருக்கின்றன.
மீண்டும் கால அவகாசம்
படைத் துறைச் சமநிலை பொருளாதாரச் சுரண்டல் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு மேற்கு நாடுகள் இலங்கையைப் பாது காப்பது போன்ற பணியில் ஈடுபடத்துடிக்கின்றன. முன்பு போல ஒரு கால அவகாசம் இப்போதும் தேவைப்படுகிறது. இப்போதைய தமிழர்கள் பலம் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள். 1980களின் ஆரம்பத்தில் இலங்கையில் செய்தது போன்று வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை பல கூறுகளாக இலங்கையாலும் இந்தியாவாலும் பிரிக்க வேண்டும். இலங்கைக்கு எதிரான போர் குற்றத்தில் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் முனைப்பை திசை திருப்ப வேண்டும். இதற்கு ஒரு மாய மான் வேண்டும்.
மாய மான் தயாராகி விட்டது.
புலம் பெயர்ந்த தமிழர்களைத் திசை திருப்ப எரிக் சொல்ஹெய்ம் தாயாராகி விட்டாராம்.
- இலங்கை அரசுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் அல்லது நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்கி நிர்வகிப்பவர்களுக்கும் இடையே தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு அல்லது பேச்சுக்களை ஏற்பாடு செய்வதற்குத் தன்னால் முடியும் என்று நார்வே அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
தான் நடுநிலையாக நடந்தவன் என்று எரிக் சொல்ஹெய்ம் சொல்கிறார். வேலி அழைக்கும் ஓணான் விக்கிலீக். விக்கிலீக் தன்னை நடுநிலையானவன் என்று குறிப்பிட்து என்கிறார். அப்படி ஒன்று சொன்னதாகத் தெரியவில்லை. விக்கிலீக் தானாக எதையும் தெரிவிக்கவில்லை. பரிமாறப்பட்ட தகவல்களை வெளியிடுகிறது. இன்னும் பல தகவல்கள் வெளிவரவிருக்கின்றன.
இம்முறை இந்த மாய மான் ஒரு முக மூடியைக் கழற்றி விட்டது. தான் தனி ஈழத்திற்கு ஆதரவு இல்லை என்று சொல்கிறது.
மீண்டும் ஏமாறத் தமிழர்கள் தயாரா?
Wednesday, 26 January 2011
வங்கி அட்டைகளுக்குப் பதிலாக Smart Phoneகள்
வங்கி அட்டைகள் அல்லது கடன் அட்டைகள் மூலம் பணம் செலுத்துவதற்குப் பதிலாக இனி நீங்கள் உங்கள் புத்திசாலிக் கைப்பேசிகள்(Smartphone) மூலம் பணம் செலுத்த முடியும். வங்கிகளும் கைப்பேசி நிறுவனங்களும் இணைந்து இந்த முறையை விரைவில் அறிமுகம் செய்யவிருக்கின்றன.
கடையில் உள்ள கணனி நீங்கள் செலுத்த வேண்டிய பணத்தொகையை தெரியப்படுத்தும்.
கடையில் உள்ள வாசிப்புக் கருவிக்கு(scanner) அண்மையாக உங்கள் கைப்பேசியை அசைக்க வேண்டும்.
கைப்பேசியில் உள்ள சிப்(chip)உம் உணரியும்(antenna) உரிய சமிக்ஞைகளை அனுப்பும்.
கடையில் உள்ள கணனிகள் உங்கள் கைப்பேசி பணம் செலுத்த வல்லதா என அறிந்து கொள்ளும்.
உங்கள் கைப்பேசி செலுத்தப் படவேண்டிய தொகையை காண்பிக்கும்.
அதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் நீங்கள் அதை உறுதி செய்ய வேண்டும். ( நீங்கள் விரும்பினால் கடவு இலக்கம் நீங்கள் அளித்து உறுதி செய்யலாம்)
நீங்கள் செலுத்தும் பணம் உங்கள் வங்கிக்கணக்கிலிருந்து கடையின் வங்கிக் கணக்கிற்கு மாற்றீடு செய்யப்படும். கடன் அட்டையாயின் கடன் அட்டைக் கணக்கிலிருந்து கடையின் வங்கிக் கணக்கிற்கு மாற்றீடு செய்யப்படும்.
பி. கு
யாருக்காவது Smart Phoneஇற்கான தமிழ் வார்த்தை தெரியுமா?
பான் கீ மூனின் ஆலோசனைக்குழு இலங்கை செல்லாது!!! ஆனால் செல்லத் தேவையில்லை!!!!
இலங்கைப் போர் குற்றம் தொடர்பான ஆலோசனைக் குழுவுடன் பான் கீ மூன்
இலங்கையில் நடந்த போர் குற்றம் தொடர்பாக ஒரு பன்னாட்டு மட்ட விசாரணை தேவை என சர்வதேச மன்னிப்புச் சபை, பன்னாட்டு நெருக்கடிக் குழு, ஐநா மனித உரிமைக் கழகம் ஆகியன தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இது தொடர்பான சாட்சியங்களையும் அவை முன்வைத்தன. இதை தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஐநா மனித உரிமைக் கழக ஆணையாளர் செல்வி நவநீதம் பிள்ளை, ஐநாவின் அரசியல் விவகார உதவிச் செயலாளர் லின் பஸ்கோ போன்றோரின் தொடர்ச்சியான வற்புறுத்தலைச் சமாளிக்க முடியாமல் ஐநா பொதுச் செயலர் பான் கீ மூன் அவர்கள் வேண்டா வெறுப்பாக ஒரு ஆலோசனைக் குழுவை அமைத்தார். இந்தக் குழு இலங்கைப் போர் குற்றம் தொடர்பாக விசாரணை செய்ய முடியாது. அது ஒரு எழுத்து மூலமான அறிக்கை சமர்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஆலோசனைக் குழு கொழும்பு அதிகார மையத்தை அதிர்ச்சியடையச் செய்தது.
விமல் வீரவன்சவின் வீராப்பு
ஐநா ஆலோசனைச் சபையைக் கலைக்காவிடில் கொழும்பில் உள்ள ஐநா பணிமனையை ஆக்கிரமித்து அங்குள்ளோரை பணயக் கைதிகாளப் வைத்திருப்போம் என்று அரசாங்கதின் ஒரு அமைச்சரான விமல் வீரவன்ச பகிரங்க அறிக்கையை விட்டார்.
ஐநாவின் பொய்நா
விமல் வீரவன்சவின் அறிக்கை தொடர்பாக ஊடகவியலாளர்கள் பான் கீமுனின் உதவியாளர்களிடம் வினவியபோது:
- அவர் வெளியிட்ட தகவல்களை பத்திரிகைகள் பிழையாக பிரசுரித்திருக்கலாம்.
- அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம்.
- இலங்கை ஒரு காந்தீய வழி ஒத்துழையாமையை செய்யலாம் அதற்க்காக இலங்கையைப் பாராட்ட வேண்டும்
தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஐநா மனித உரிமைக் கழக ஆணையாளர் செல்வி நவநீதம் பிள்ளை இப்போது இலங்கை மனித உரிமை மீறல்கள் பற்றி மறந்து விட்டார் போல் தெரிகிறது.
கடந்த சில வாரங்களாக ஐநா ஆலோசனைச் சபையை இலங்கை சென்று உண்மைகளைக் கண்டறியுமா என்ற கேள்வி பலமாக அடிபட்டது. இலங்கை திரைமறைவில் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு பகிரங்கமாக வரலாம் என்று அறிவித்தது. ஆனால் ஐநா ஆலோசனைச் சபையை எந்த விசாரணையையும் மேற் கொள்ள முடியாது என்றும் வேண்டுமானால் இலங்கை அரசு அமைத்த நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கலாம் என்று தெரிவித்தது.
நேற்று ஐநா செயலதிபர் பான் கீ மூனின் பேச்சாளர் Inner City Press இற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிய தகவலில்:
- Regarding your questions about the possible travel of the advisory panel, we have the following to say:
- Discussions are ongoing. The Panel wants to engage with Sri Lankan actors relevant to the question of accountability. A visit would be useful but is not essential for the Panel to provide advice to the Secretary-General. என்று தெரிவித்துள்ளார்.
ஐநா ஆலோசனைச் சபை இலங்கை செல்வது பற்றி இப்போதும் பேச்சு வார்த்தை நடக்கிறதாம். ஐநா ஆலோசனைச் சபை வகைசொல்லல் என்ற பிரச்சனைபற்றி இலங்கையின் நடவடிக்கையாளர்களை ஈடுபடுத்த விரும்புகிறதாம். ஐநா செயலதிபருக்கு ஆலோசனை வழங்க இலங்கைக்கு செல்வது பயனுள்ளதாம் ஆனால் தேவையற்றதாம்.
பயனுள்ளவை எல்லாம் தேவையானவையே என்பதை ஐநா அதிகாரிகள் ஏன் அறிந்திருக்கவில்லை?
ஐநா ஆலோசனை சபை ஆரம்பித்ததில் இருந்து இலங்கை அதைக் கடுமையாக விமர்சித்து வந்தது. அவர்கள் இலங்கைக்கு வருவதை இலங்கை ஆட்சியாளர்கள் விரும்பவே இல்லை. அதைப் பகிரங்கமாக அறிவித்து ஐநா ஆலோசனை சபை இலங்கை வரக்கூடாது என்று சொன்னால் இலங்கை பற்றி மனித உரிமை அமைப்புக்கள் கடுமையாக விமர்சிக்கும். இதைத் தடுக்க ஐநா அதிகாரிகளும் இலங்கையும் இணைந்து ஆடும் நாடகமா இது?
இலங்கையில் நடந்த போர் குற்றம் தொடர்பாக போர் நடந்த இடத்தைப் பார்வையிடாமலும் பாதிக்கப் பட்டவர்களை நேரில் சந்திக்காமலும் ஆலோசனை சொல்லப் போகிறார்கள்.
தேறாத ஐநா
அண்மைக்காலங்களில் ஐநா ஒரு தேறாத நிறுவனமாக மாறிக் கொண்டிருக்கிறது.
- 1994-ல் நடைபெற்ற ருவாண்டா இனப்படுகொலையை தடுத்து நிறுத்தத் தவறியது.
- ஸ்ரெப்ரெனிகா படுகொலையைத் தடுக்கத் தவறியது
- சூடான் இனப்படுகொலையைத் தடுக்கத் தவறியது
- இலங்கையில் ஒரு நாளில் மட்டும் 25000 கொல்லப்பட்ட போது கைகட்டி நின்றது.
ஆலோசனைச் சபையின் அறிக்கையில் இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவிக்கப் படுமா?????
Tuesday, 25 January 2011
நகைச்சுவை: டெல்லி மந்திர சபையில் மின்குமிழ்(bulb) மாற்றம்.
இந்திய மத்திய அரசின் மந்திரசபை அங்கு ஒரு மின்குமிழ் (bulb) பழுதடைந்துவிட்டது. அதை மாற்ற எத்தனை பேர் தேவைப்படுவார்கள்? என்ன அமளிதுமளி நடக்கும்.
மந்திர சபையில் உள்ள பலருக்கு மின்குமிழ் மாற்றத் தெரியாது.
ஒரு மந்திரி சொன்னார் மின்குமிழ் மாற்றத் தேவையில்லை என்று.
ஒரு மந்திரி சொன்னார் மின்குமிழை மாற்றுபவர் தேசத் துரோகி என்று.
ஒரு மந்திரி சொன்னார் மின்குமிழ் பழுதடைந்ததிற்கு பாக்கிஸ்த்தான் காரணம் என்று.
ஒரு மந்திரி சொன்னார் மின்குமிழ் பழுதடைந்ததிற்கு காவிப் பயங்கர வாதிகள்தான் காரணம் என்று.ஒரு மந்திரி சொன்னார் மின்குமிழ் பழுதடைந்ததிற்கு சீனாதான் காரணம் என்று.ஒரு மந்திரி சொன்னார் மின்குமிழ் பழுதடைந்ததிற்கு நக்சலைட்கள் காரணம் என்று.ஒரு மந்திரி சொன்னார் மின்குமிழ் பழுதடைந்ததிற்கு இசுலாமியத் தீவிரவாதிகள் காரண்ம என்றுஒரு மந்திரி சொன்னார் மின்குமிழ் பழுதடைந்ததிற்கு விடுதலைப்புலிகளின் ஊருடுவல் காரணம் என்று.ஒரு மந்திரி சொன்னார் நாட்டையே இருட்டில் தானே வைத்திருக்கிறோம் இது என்ன பெரிய வேலை என்று.
ஒரு மந்திரி சொன்னார் மீண்டும் ஒளி வர 1.72இலட்சம் கோடிக்கு கேள்விப் பத்திரங்கள் கோரப்படவேண்டும் என்று.
பிரதம மந்திரி மட்டும் தொலை பேசியில் மின்குமிழ் பழுதடைந்தால் என்ன செய்ய வேண்டும் என்று அமெரிக்காவின் பெண்டகனுடன் ஆலோசனை செய்து கொண்டிருந்தார்.
சென்னையில் கலைஞர் கருணாநிதி மின்னொளி அற்ற நாட்டில் பொன்னொளி ஏற்றிய எம் கூட்டணி ஆட்சி என்று முரசொலியில் கவிதை எழுதினார்.
ஆய்வு: குறுந்தகவல்கள்(Text messages) பெண்களை அதிகம் கவருகிறதாம்.
சிவப்பு ரோசாப்பூ, பரிசுப் பொருள்கள், சுவையான உணவகத்தில் சாப்பாடு போன்றவற்றை விட நல்ல கைப்பேசி அல்லது சமூக வலைத்தளங்களூடாக அனுப்பும் குறுந்தகவல்கள் பெண்களை அதிகம் கவர்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆய்வுசெய்யப்பட்ட பெண்களில் 80% மானோர் பாரம்பரிய காதல் தெரிவிக்கும் முறையான சிவப்பு ரோசாப்பூ, பரிசுப் பொருள்கள், சுவையான உணவகத்தில் சாப்பாடு ஆகியவற்றிலும் பார்க்க குறுந்தகவல்கள் அவர்களை ஆண்களிடம் ஈர்ப்படையச் செய்கின்றனவாம்.
மனோதத்துவ நிபுணர் கலாநிதி பெலிஸா வ்ரனிச் குறுந்தகவல்கள் ஒரு நீண்டகாலமாக ஒன்றாக இருந்ததைப் போன்ற ஒரு போலியான உணர்வை ஏற்படுத்துகிறதாம். இந்தக் கவர்ச்சி பெண்களை படுக்கை வரைக்கும் இட்டுச் செல்லுமாம். நேரில் தெரிவிக்கும் கருத்துக்களிலும் பார்க்க குறுந்தகவல்களால் தெரிவிக்கப்படுபவை அதிக கவர்ச்சியையும் உணர்ச்சியையும் தூண்டுமாம்.
இது மட்டுமல்ல ஆண் பெண் உறவுகளை முறிப்பதிலும் குறுந்தகவல்கள் முன்னணி வகிக்கின்றன. 30% ஆண்கள் தங்கள் காதலிகளுக்கு குறுந்தகவல்கள் மூலமாக காதலை முறிக்கும் எண்ணத்தை தெரிவிக்கின்றனராம்.
Monday, 24 January 2011
Sunday, 23 January 2011
அதிகரிக்கும் விவாகரத்துக்களுக்கு Facebookபோன்ற சமூகவலைத்தளங்கள் மேல் குற்றச் சாட்டு.
பிரித்தானியாவின் முன்னணி விவாகரத்து சட்டவியலாளர் ஒருவர் தான் கடந்த ஒன்பது மாதங்களாக கையாண்ட சகல விவாகரத்துக்களும் சமூக வலைத்தளங்கள் காரணமாக அமைந்திருந்தது என்று தெரிவித்துள்ளார்.
திருமணமானவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் பிறருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு விரசமான உரையாடல் செய்வதமை விவாகரத்துக்களுக்கு காரணமாக சட்டத்தின் முன் வைக்கப்படுகின்றனவாம்.
Second Life, Illicit Encounters, Friends Reunited போன்ற சமூக வலைத்தளங்கள் கணவன் அல்லது மனைவிக்கு துரோகம் செய்யத் தூண்டுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Hart Scales & Hodges Solicitors இன் எமா பட்டேல் தான் கடந்த ஒன்பது மாதங்களில் கையாண்ட 30 விவாகரத்துக்களுக்கு Facebook காரணம் என்று சொல்கிறார்.
தமது கணவன் அல்லது மனைவி சமூக வலைத்தளத்தில் மற்றவர்களுடன் தகவல் பரிமாற்றம் அரட்டை அடித்தலை கடவுச்சொற்களைத் திருடி உளவு பார்த்து விடுகின்றனர். இது மண முறிவில் முடிவடைகிறது. இவை விவாகரத்துக்களுக்கு சாட்சியமாகவும் முன்வைக்கப்படுகின்றன.
ஒரு உண்மைச் சம்பவங்கள்
அவர்கள் நல்ல அழகிய நல்ல பொருத்தாமான நல்ல ஒற்றுமையான இளம் தம்பதியினர். கணவனுக்கு அவனுடன் வேலைசெய்யும் திருமணமாகாத ஒரு இளம் அழகி சரச வார்த்தைகளில் Facebookஇல் தகவல்கள் அனுப்புவதுண்டு. கணவனும் பதில் அனுப்புவதுண்டு. கணவனின் கடவுச்சொல்லைப்பெற்ற மனைவி இந்த தகவல் பரிமாற்றத்தை அறிந்து கொண்டாள். விளைவு மண முறிவு.
இன்னொரு 36வயது மூன்று பிள்ளைகளின் தாய். அவள் எந்த தகாத உறவிலும் ஈடுபடவில்லை. செய்தது வெறும் தகவல் பரிமாற்றங்கள்தான். கணவன் இதை அறிந்து மணமுறிவு செய்து விட்டான்.
பிரித்தானியாவின் முன்னள் பிரதம மந்திரியின் மைத்துனி தனது Facebookஇல் திருமணமானவள் என்பதை தனியாள் என்று மாற்றியாதால் பெரும் சிரமத்துக்குள்ளானார்.
Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...