Saturday, 19 February 2011

இராசாக்கள் மந்திரிகளாகி நாட்டைக் கொள்ளயடித்தால்????


மக்கள் பிரதி நிதிகள் மந்திரிகளாகி
இராசாக்கள் போல் ஆள்தல் மக்களாட்சி
இராசாக்கள் மந்திரிகளாகி
நாட்டைக் கொள்ளயடித்தால்
சானியாள் கொலைஞர் கூட்டாட்சி


ஆப்பிள் என்பது பழமுமல்ல
விசைப்பலகை என்றால்
விரைந்தோடும் மரத்துண்டல்ல
பேச்சிலில்லா மொழிகள்
இலத்தினும் சமஸ்கிருதமும்மல்ல
நினைவுத்திறன் என்றால் ஞாபக சக்தியுமல்ல
பாட் (pad)என்பது அந்த நாலு நாட்கள்
பெண்கள் அணிபவை அல்ல
சுட்டி என்றால் சின்னப் பையனுமல்ல
வெட்டுவதற்கு கத்தி தேவையில்லை
ஒட்டுவதற்கு பசை எதற்கு
சொடுக்க இரு விரல் தேவையில்லை
ஆறாம்திணையில் மொழிகள் வேறு

Friday, 18 February 2011

உளவு பார்க்க சின்னஞ் சிறு குருவி இயந்திரம்.


பதினாறு செண்டிமீட்டர் அளவுள்ள சிறு குருவி இயந்திரம் ஒன்றை அமெரிக்க பாதுகாபபுத் துறையின் பெண்டகனுக்கு உருவாக்கப் பட்டுள்ளது. நாலு மில்லியன் டொலர் செலவழித்து உருவாக்கப்பட்ட இந்தக் குருவி போர் முனையில் எதிரிகளின் கண்ணுக்குப்படாமல் அதில் பொருத்தப்பட்டுள்ள சிறு ஒளிப்பதிவுக் கருவி மூலம் எதிரியின் நிலைகளைப் படம் பிடித்துவிடும். இச்சிறு விமானம் மணிக்கு பதினொரு மைல் வேகத்தில் பறக்க வல்லது. ஏற்கனவே உள்ள சிறு உளவு விமானங்கள் காற்றாடிகளுடன் பறப்பதால் எதிரிகள் அவற்றை அடையாளம் கண்டு விடுகின்றனர். இந்தக் குருவி விமானம் சிறகடித்துப் பறக்கும். மேலும் கீழும் பக்கவாட்டிலும் பறக்க வல்லது.

இந்தச் சிறு இயந்திரக் குருவி திறந்த சாளரங்களுடாகவும் நுழையக் கூடியது. உண்மையான குருவிகள் போலவே மின்சாரக் கம்பிகளிலும் உட்காரும்.

சிறு விமானங்கள் உருவாக்கலில் இந்தக் குருவி விமானம் ஓரு புதிய பரிமாணத்தை கொண்டுவந்துள்ளது. இதை தொடர்ந்து வரும் கருவிகள் உளவுத் துறையில் பெரும் பங்கு அளிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Thursday, 17 February 2011

ஆய்வு: ஆண்களின் வெற்றிக்குப் பின்னால் பெண்கள் இல்லை


ஓவ்வொரு ஆணின் வெற்றிகளுக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கின்றாள் என்று பலகாலமாக நம்பப்பட்டு வந்தது. அதாவது அவனின் மனைவி இருக்கின்றாள், அவனது துன்பங்களிலும் இன்பங்களிலும், ஒன்றாக பங்கேற்று, அவன் துவளும்போது தன் தோள்களில் தாங்கி, அவனை தேற்றி, அவனது வெற்றிகளில், உலகம் அவனைப் பாராட்டும்போது மகிழ்கிறாள்; என்றெல்லாம் நாம் படித்திருக்கின்றோம், கேள்விப்பட்டும் இருக்கின்றோம்.

சிலர் நகைச்சுவையாகச் சொல்வார்கள் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் அவன் செய்வதைக் எப்போதும் குறை கூறிக்கொண்டு.

அமெரிக்க மனோதத்துவ விஞ்ஞான சஞ்சிகை நடாத்திய ஆய்வின் முடிபுகள் வேறு விதமகச் சொல்கின்றன.

சிலர் தங்கள் சுமைகளைக் குறைக்கவும் தங்கள் இலக்குகளை நோக்கிச் முன்னேறவும் தங்களை அறியாமல் ஒரு அயலாக்கத்தில் ஈடுபடுகிறார்கள்.
(Self regulatory outsourcing - the unconscious reliance on someone else to move your goals forward, coupled with relaxation of your own effort.) மனைவியுடன் எல்லாவற்றையும் கலந்தாலோசித்துச் செய்பவர்கள் மனைவிமார் மீது அதிகம் தங்கி இருக்க வேண்டிவருகிறது. மனைவி மீது அதிகம் தங்கி இருப்பது கணவனின் வெற்றிக்கான பாதையில் ஒரு தடையாக அமைகிறது. கணவனின் சுய முயற்ச்சி சுய சிந்தனைய மழுங்கடிக்கிறது. இது கணவனில் தங்கியிருக்கும் மனைவிக்கும் பொருந்தும். ஒருவர் தனது நடவடிக்ககளுக்கு தனது வாழ்க்கைத் துணையில் அதிகம் தங்கியிருப்பது சில நன்மைகளைச் செய்தாலும் பல தீமைகளைச் செய்கிறது. இது நாளடைவில் ஆதிக்கத்தையும் வளர்க்கிறது. சிறந்த அணுகுமுறை பின்னால் இருந்து தள்ளுவதல்ல; திரைமறைவு பக்கத் துணையாக இருப்பதே சிறந்தது. பின்னால் இருந்து தள்ளுவது நச்சரிப்பை வளர்கிறது.

216பேர்கள் பங்கு பற்றிய மூன்று இணைய ஆய்வுகள் இப்படி முடிக்கின்றன: The secret of success may be a spouse who stands at your side - but keep out of the way. ஒருவரின் வெற்றியின் இரகசியம் அவரது வாழ்க்கைத் துணை அவரது பக்கதில் நிற்பது - ஆனால் வழியில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

சிறந்த வாழ்க்கைத் துணை உதாரணமாக முன்னாள் பிரித்தானியப் பிரதம் மந்திரி மார்கரெட் தச்சரின் கணவர் டெனிஸ் தச்சர் காட்டப்படுகிறார். அவர் மார்கரெட்டிற்கு தனது உதவிகள் ஆலோசனைகள் அனைவற்றையும் திரைமறைவிலேயே வழங்கி வந்தார். சிறந்த இன்னொரு துணையாக இப்போதைய பிரித்தானியப் பிரதம் மந்திரி டேவிட் கமரூனின் மனைவி சமந்தா கமரூன் உதரணமாகக் காட்டப்படுகிறார்.

Wednesday, 16 February 2011

கழுத்தில் காதலன் தேவை அட்டையுடன் தெருவில் நின்ற அழகிய மாணவி



அவள் ஒரு 20வயதுக் கட்டழகி. பர்மின்ஹாம் பல்கலைக்கழகத்தில் சரித்திரம் படிக்கும் மாணவி. அவளைக் காதலன் கைவிட்டான். அதுவும் காதலர் தினத்திற்கு முதல் நாள். அந்தப் பெண் தற்கொலை செய்ய முயற்ச்சிக்கவில்லை. தேம்பி அழவில்லை. எனது காதலர் தினத்தவனாய் இரு(be my valentine) என்ற அட்டையை கழுத்தில் தொங்கவிட்டபடி பிரித்தானியாவின் பர்மின்ஹாம் தெருவில் நின்றாள்.

காதலன் தேவை என்ற அட்டையை கழுத்தில் தொங்கவிட்டபடி நின்ற ஜெமி பிரவுனுக்கு கை மேல் பலன். ஒரு நல்ல காதலன் கிடைத்தான். கிடைத்தது சாதாரணமானவன் அல்ல. 21வயதுக் கட்டழகன். பிரித்தானியாவில் பொறியியல் படிக்கும் இத்தாலிய மாணவன் டேவ் பெர்கோமி.

தனது புதுக்காதலன் ஒரு மெமையான குணங்கள் நிறைந்த கனவான் என்கிறார் ஜெமி பிரவுன்.

புதுக்காதலர்கள் இருவரும் காதலர் தினத்தை நல்ல உணவகத்தில் மெழுகுதிரியொளில் சுவையான உணவு உண்டு கொண்டாடினர். முதல் தினத்தில் முதல் முத்தம் பரிமாறப்பட்டதா என்ற கேள்விக்கு அவர்கள் இருவரும் தங்கள் வாய்களை மூடி வைத்துக் கொண்டு பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

Tuesday, 15 February 2011

எகிப்தில் நடந்ததும் நடக்கப் போவதும்


ஆட்சி மாற்றம் ஏற்படுத்தும் புரட்சியாளர்கள் கைக்குண்டுகள் கண்ணி வெடிகள் அரச வங்கிக் கொள்ளைகள் அரசியல்வாதிகள் கொலைகளுடன் ஆரம்பிப்பதுண்டு. எகிப்தில் ஆட்சிமாற்றம் சமூகவலைத்தளங்கள் கைபேசித் தகவல்கள் செய்மதித் தொலைக்காட்சிகளுடன் நடக்கிறது.
எகிப்திய மக்கள் சிறந்த மதபக்தர்கள் ஆனால் ஆட்சியில் மதம் சம்பந்தப்படுவதை விரும்புவதில்லை. எகிப்து உலகின் மிக நீண்ட கால கலாச்சாரத்தை கொண்ட சில நாடுகளில் ஒன்று. எகிப்திய மக்கள் தொகையில் இளையோரே அதிகம். மொத்த மக்கள் தொகையில் மூன்றின் இரு பங்கினர் முப்பது வயதிற்கு உட்பட்டவர்கள். அவர்கள் ஒரு இரத்தக் களரியை விரும்பியதில்லை. எதிர்க்கட்சியினருக்கு தம்மை முபாரக்கின் மகனிடம் இருந்து பாதுகாப்பதே பெரும்பாடு. அரபு நாட்டு சர்வாதிகாரிகள் தங்கள் மேற்கு நாட்டு தங்கள் மக்கள் தங்களுக்கு கீழ்படிந்து இருப்பதாகவும் தங்கள் மக்களின் மனித உரிமைகளைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்றும் கூறிவந்தனர். அரபு நாட்டு மக்கள் சர்வாதிகரிகளி குடும்ப ஆட்சிகளை ஏற்றுக் கொண்டுள்ளதாக பலகாலமாக மேற்கு நாட்டு அரச தந்திரிகள் நம்பினர். ஆனால் அதிகரிக்கும் ஊழல், வறுமை, வேலையில்லாப் பிரச்சனை அல் ஜசீராத் தொலைக்காட்சி மூலம் உலகை கண்டமை துருக்கி நாட்டின் வளர்ச்சி போன்றவை மக்களை வேறு விதமாக சிந்திக்க வைத்து விட்டது.

சமூக வலைத்தளங்களும் செய்தி ஊடகங்களும்
எகிப்திய எழுச்சிக்கு சமூகவலைத்தளங்களான fஏஸ்புக்கும் டுவிட்டரும் காரணமல்ல என்று சில அமெரிக்க விமர்சகர்கள் காட்ட முனைகிறார்கள். மேற்கத்திய பணமுதலைகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களால் மட்டுமே பன்னாட்டு ஊடக ஒழுங்கை நிலைநாட்ட முடியும் என்ற நிலைப்பாடு எகிப்தில் ஆட்டம் கண்டுவிட்டது. இதன் காரணமாக இருக்கலாம். எகிப்திய இளைஞர்கள் முபராக் ஆட்சியின் கொடூரம் சம்பந்தப்பட்ட படங்கள் காணொளிகளை சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்து பகிரங்கப்படுத்தினர்.
வால் கொனிம் (Wael Ghonim) என்ற எகிப்திய எழுச்சி ஏற்பாட்டாளர் சமூக வலைத்தளங்கள் இருந்திருக்காவிடில் இந்த எழுச்சித் தீ மூட்டப்பட்டிருக்கது என்கிறார். facebook.com/ElShaheeedஎன்ற தளத்திற்கு 819,292 இரசிகர்கள் இருக்கிறார்கள்.

எழுச்சியின் வித்து.

எகிப்திய எழுச்சி ஏற்ப்பாட்டாளர்கள் தங்கள் எழுச்சிக்கான நாளைக் கவனமாகத் தேர்ந்தெடுத்தனர். ஜனவரி 25-ம் திகதி எகிப்திய மக்களால் மிகவும் வெறுக்கப்படும் எகிப்தியக் காவல்துறையினரின் விழாவிற்கான பொது விடுமுறை நாள். அதை எழுச்சியாளர்கள் தமது எழுச்சியின் ஆரம்ப நாளாகத் தேர்ந்தெடுத்தனர். முப்பது ஆண்டுகளாக மக்கள் அடக்கி வைத்திருந்த ஆத்திரம் வெளிப்படும் நாளாக அது அமைந்தது. எகிப்தின் எழுச்சியாளர்கள் எகிப்திய படைத்துறையினருடன் நல்ல உறவை வளர்ப்பதில் மிகக் கவனமாகச் செய்ற்பட்டனர். நீங்களும் மக்களும் ஒன்றே என்ற அடிப்படையில் அவர்கள் படைத்துறையினருடன் நடந்து கொண்டனர். அஸ்மா மஹ்பூஸ் தனது தற்கொலை முயற்ச்சியுடன் இளைஞர் போராட்டத்திற்கு அறைக்கூவல் விடுத்தாள் முகப்புத்தக மூலம். ஆரம்பத்தில் அதிக ஆரவாரம் இல்லை. ஆனால் அவள் கைது செய்யப்பட்டு எச்சரிக்கப்பட்டபின் அவளுக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. எகிப்தின் சகல தரப்பினரும் தஹ்ரீர் சதுக்கத்தில் திரளத் தொடங்கினர். இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு அலெக்சாண்ட்ரியா போன்ற நைல் நதிக் கரையோர நகரங்களின் தெருக்களில் தனது ஆதரவாளர்களை இறக்கிப் போராட வைத்தது.


முபாரக்கின் படையினர்
எழுச்சிக்காரர்களை அடக்க முபாரக் தங்கிகள் கவச வாகங்னகள் சகிதம் தனது படையினரை அனுப்பினார். படையினரைக் கண்டு மக்கல் அஞ்சவில்லை. மக்களின் உறுதிப்பாட்டைக் கண்ட படையினர் அவர்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கத் தயங்கியது. படையினர் எம்மவர் என்ற அணுகு முறையை எழுச்சிக்காரர் கையாண்டனர். விரைவில் படையினருக்கும் எழுச்சிக் காரர்களுக்கும் இடையில் நல்ல உறவு மலர்ந்தது. எகிப்தியப் படைத்துறை முபராக்கின் கட்டுப்பாட்டில் இல்லையா என்று மேற்கத்திய ஊடகங்கள் தம் வயிற்றெரிச்சலைக் கொட்டின.
முதல் தப்பி ஓடிய முபாரக்கின் மகன் கமல்
எகிப்த்திய படைத்துறையினருக்கு முபாரக்கின் மகனான கமலைப் பிடிக்காது. அவரை அறவே வெறுத்தனர். அவர் முபாரக்கிற்கு பின்னர் பதவிக்கு வருவதை படைத்துறை அதிகாரிகள் எவரும் விரும்பவில்லை. இதனால் எழுச்சி தொடங்கிய உடனேயே முபாரக் தனது மகனை இலண்டன் அனுப்பி விட்டார்.
முபாரக்கின் இமாலயத் தவறு.
எழுச்சியாளர்கள் வலைத் தளங்களையும் கைப்பேசிகளையும் பாவிக்கிறார்கள் என்பதற்காக எகிப்திய முன்னாள் அதிபர் ஹஸ்னி முபாரக் வலைத் தொடர்புகளையும் கைப்பேசிச் சேவைகளையும் துண்டித்தார். இது பலரையும் ஆத்திரமடையச் செய்தது. முபாரக்கிற்கு எதிரான எழுச்சிக்கு வலுவூட்டியது.
அரபு உலகில் ஒரு வித்தியாசமான எழுச்சி
ஒரு அமெரிக்க சார்பு சர்வாதிக்கு எதிராக ஒரு அரபு நாட்டில் இசுலாமிய அடிப்படை வாதிகள் கிளர்ந்து எழாமல் மத சார்பற்ற ஒரு எழுச்சி நடந்தது ஒரு வித்தியாசமான நிகழ்வு.
அமெரிக்கக் காய் நகர்த்தல்
எழுச்சியைக் கட்டுப்படுத்த அமெரிக்க ஆலோசனைப்படி நியமிக்கப்பட்ட துணைத் தலைவர் ஒமர் சுலைமான் ஒரு முபாரக் கையாளே. அவருடன் பேச்சு வார்த்தை நடத்தும்படி ஹிலரி கிளிண்டன் எகிப்திய மக்களைக் கேட்டுக் கொண்டார். அதை எகிப்திய மக்களை ஆத்திரபடுத்தியது. ஒமர் சுலைமான் சாட்டுக்கு சில அரச ஒட்டுக் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நாடாத்தினார். அமரிக்கக் காய் நகர்த்தல் நாய் நகர்த்தல் ஆனது. வெற்றுக் குரைப்பு மட்டுமே. ஒமர் சுலைமான் எகிப்திய மக்கள் மக்களாட்சிக்குத் தயாரில்லை என்று கூறிக்கொண்டார். மக்கள் ஆத்திரம் இன்னும் அதிகமானது. அமெரிக்கா தனது பிராந்திய தந்திரோபாயங்களை சிறிது கோட்டை விட்டுவிட்டது. ஒபாமா நிர்வாகம் துனிசியாவின் அதிபர் பென் அலிபோல் ஹஸ்னி முபாரக் பதவியிலிருந்து விரட்டப்படுவதை விரும்பவில்லை. மாறாக முபாரக் மூலமாக ஒரு ஆட்சி மாற்றத்தையும் ஆட்சி முறைமை மாற்றத்தையும் ஏறபடுத்தி தனது பிராந்திய தந்திரோபாய நலன்களை பேண முயன்றது. அந்த வகையில் அமெரிக்காவிற்கு எகிப்தில் ஏற்பட்டது படு தோல்வியே. அமெரிக்கா தன்னை நடுநிலையாளராகக் காட்ட முயன்றது. ஆனால் எழுச்சி செய்த மக்கள் மீது வீசப்பட்ட கண்ணீர்ப் புகைக் குண்டுகள் அமெரிக்காவில் செய்யப்பட்டவை. எழுச்சிக்காரர்களை மிரட்ட அவர்கள் மேல் தாழப்பறந்த f-16 விமானங்கள் அமெரிக்கத் தயாரிப்பு.


இறக்கத்திற்கு இரங்கவில்லை
முபாரக் தான் இறங்கிவருவது போல் சில அறிக்கைகளை விட்டார். பெப்ரவரி 10ம் திகதியன்று செப்டம்பரில் தான் பதவி விலகுவதாகவும் சொல்லிப்பார்த்தார். சம்பள உயர்வுகள் விலைக் குறைப்புக்கள் இப்படி எல்லாம் அறிவித்தார் முபாரக். மக்கள் மசியவில்லை. நீ உடனடியாகப் போய்த் தொலை என்ற அவர்களது கோரிக்கையில் இருந்து அவர்கள் இறங்க மறுத்தனர். தான் சகலவற்றிலும் வெறுப்படைந்துள்ளேன் என்றும் கூறிப்பார்த்தார் முபாரக். மக்கள் இரங்கவில்லை.
முபாரக்கிற்கு ஆதரவாக இஸ்ரேலும் சவுதியும்
அமெரிக்காவில் நெருங்கிய நண்பர்களான சவுதி அரேபிய மன்னரும் இஸ்ரேலிய அரசும் அமெரிக்காவிற்கு பல அழுத்தங்களைக் கொடுக்கத் தொடங்கின. கடைசிவரைக்கும் முபாரக் பதவி விலகக் கூடாது என்று அந்த இரு தரப்பும் வேண்டின. அமெரிக்காவிற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே தெரியும் முபாரக்கின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று. எழுச்சியாளர்களை பகைத்துக் கொண்டால் அது தனது பிராந்திய நலன்களைப் பெரிதும் பாதிக்கும் என்று உணர்ந்து கொண்டது. முபாரக் உடன் பதவி விலக வேண்டும் என்று அறைகூவல் விடுவதையும் அமெரிக்கா கவனமாகத் தவிர்த்துக் கொண்டது. அப்படிச் செய்தால் மற்ற அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரிகள் அமெரிக்காவைச் சந்தேகக் கண்ணோடு பார்த்து வேறு வகையில் சிந்திக்கத் தொடங்கிவிடுவார்கள் என்று அமெரிக்கா அஞ்சியது.

காணமற் போன எழுச்சி ஏற்பாட்டாளர்
எகிப்திய எழுச்சி ஏற்ப்பாட்டாளர்களி ஒருவரான வால் கொனிம் (Wael Ghonim) எழுச்சி தொடங்கி மூன்றாம் நாள் காணமற் போனார். அவர் காவல்துறையினரால் கடத்தப்பட்டு விசாரிக்கப்பட்டார். பின்னர் தான் விடுவிக்கப்படமைக்கு ஒபாமா காரணமாக இருக்கலாம் என்று அவர் சொல்கிறார். தனது விடுதலைக்கு கூகிள் மிகவும் பாடுபட்டது என்றும் அவர் கூறுகிறார். அவர் விடுவிக்கப்பட்ட பின் தொலைக்காட்சியில் தோன்றி தனக்கு நடந்ததையும் கூறினார். முபராக்கின் காவல்துறையினரால் கொல்லப்பட்டவர்கள் பற்றியும் கூறினார். இதன் பிறகு எழுச்சியில் மேலும் பல்லாயிரக் கணக்கானோர் இணைந்து கொண்டனர். இனி முபராக் பதவியில் இருக்க முடியாது என்று அமெரிக்கா முடிவு செய்தது. இதனால் பல மேற்கத்திய அரசியல் விமர்சகர்கள் ஒபாமா நிர்வாகம் எகிப்திய விவகாரத்தை மோசமாகக் கையாளவில்லை என்று கருதுகிறார்கள். திரை மறைவில் அமெரிக்க இறுதி நாட்களில் சில மிரட்டல்களையும் முபாரக்கிற்கு விடுத்தது. அதில் ஒன்று தனது வருடாந்த இரு பில்லியன் டொலர் உதவியை நிறுத்துவது.

இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு
எகிப்தின் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு தற்போதுள்ள ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கட்சியாகும். அது இப்போது மதசார்பற்றவரான மொகமட் அல் பரடியை (Mohamed ElBaradei) என்னும் முன்னாள் பன்னாட்டு அணுசக்தி முகவரகத்தின் தலைவரை தலைமைத்துவம் ஏற்கும்படி கேட்கிறது. இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு தமக்கு ஆட்சியைப் பிடிக்கும் எண்ணம் இல்லை என்று கூறுகின்றனர். மொகமட் அல் பரடி (Mohamed ElBaradei)தான் கேட்டுக் கொள்ளப்பட்டால் எகிப்தின் தலைவராகுவேன் என்கிறார். இசுலாமிய சகோதரத்துவ அமைப்பிற்கு 20% மான எகிப்திய மக்களின் ஆதரவே உள்ளது என்றும் கூறப்படுகிறது. ஊழலற்ற சிறந்த ஆட்சியையும் சுதந்திரத்தையும் வேண்டிச் செய்யப்பட்ட மக்கள் எழுச்சி இனி எத்திசையில் பயணிக்கப் போகிறது? இசுலாமிய சகோதரத்துவ அமைப்புக்கு இளைய தலை முறையினரின் ஆதரவு குறைவு. முப்பது வருடங்டங்களாக எதுவும் செய்யாமல் இருந்தவர்கள் என்ற குற்றச்சாட்டை இளைய தலைமுறையினர் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் மீது வைக்கின்றனர். இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு ஒரு அரசியல் கட்சியல்ல அது ஒரு transnational movement நாடுகடந்த அமைப்பு என்று சொல்வோரும் உண்டு. இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு பல நாடுகளில் செயற்படுகிறது. அது எகிப்தில் ஆட்சி மாற்றத்தையும் ஆட்சி முறை மாற்றத்தையுமே விரும்புகிறது; ஆளவிரும்பவில்லை என்றும் கூறுகின்றனர் சிலர்.

ஆரம்பத்தில் முரண்பட்ட இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு
காவல் துறையின் விழா நாளான ஜனவரி 25இல் காவல் துறையினருடன் இணைந்து கொண்டாடாமல் அவர்களை எதிர்க்கக் கூடாது என்று முதலில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் ஒரு தலைவர் எஸ்ஸாம் அல் எரியன் தெரிவித்திருந்தது இங்கு கவனிக்கக்தக்கது.
இஸ்ரேலின் அச்சம்
வடக்கில் ஹிஸ்புல்லா மேற்கில் ஹமாஸ் போன்றவற்றுடன் தெற்கில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு ஆதிக்கம் செய்வதை இஸ்ரேல் மிகுந்த அச்சத்துடன் பார்க்கத் தொடங்கியது. இஸ்ரேல் ஒமர் சுலைமான் தலைமையில் மீண்டும் ஒரு சர்வாதிகார ஆட்சி எகிப்தில் நடப்பதையே விரும்புகிறது. உடன் எகிப்தில் அமையும் அரசு அல்லது அதைத் தொடர்ந்து வரும் அரசு ஒரு தீவிர இசுலாமிய சார்பு அரசாக அமைந்தால் தனது இருப்புக்கு ஆபத்து என்று இஸ்ரேல் அஞ்சுகிறது. சிலர் எகிப்து இன்னொரு பாக்கிஸ்தானாக உருவாகுமோ என்றும் அஞ்சுகின்றனர். இப்போதுள்ள நிலவரப்படை இஸ்ரேலும் சவுதி அரேபியாவும் அமெரிக்கா எகிப்திய விவகாரத்தை கையாண்ட விதத்தில் மிகுந்த அதிருப்தி கொண்டுள்ளன.
தலை போனது வால்கள் நிறைய உண்டு
முபராக்கின் மந்திரி சபை இப்போதும் செயற்படுகிறது. ஊழலும் கொடுமையும் நிறைந்த பிராந்திய கவர்னர்கள் 29பேர் இன்றும் உள்ளனர். எகிப்திய அரச இயந்திரம் இப்போதும் முபாரக்கின் அடியாட்கள் பலரைக் கொண்டுள்ளது.

தற்போதைய நிலை
அரசியலமைப்பு இரத்துச் செய்யப்பட்டுள்ளது. பாராளமன்றம் கலைக்கப்பட்டுவிட்டது. உச்ச படைத்துறைச் சபை (Supreme Military Council) இப்போது 75வயதான பாதுகாப்புத் துறை அமைச்சரும் முபராக்கின் நீண்டநாள் ஆதரவாளருமான முஹமட் தந்தாவியின் தலைமையில் செயற்படுகிறது. இப்போதைய எகிப்தின் அதிபர் அவர்தான். தரிக் அல் பிஸ்ரி என்னும் கல்விமான் தலைமையில் அமைக்கப் பட்ட குழு புதிய அரசியல் அமைப்பை வரையும் பணியில் ஈடுபட்டுள்ளது. முபராககின் மந்திரி சபை இப்போதும் செய்ற்படுகிறது. பல மந்திரிகள் மீது மக்களுக்கும் அவர்களின் கீழ் வேலை செய்யும் அதிகாரிகளுக்கும் பலத்த வெறுப்பு உண்டு. பத்து நாடக்ளுக்குள் அரசமைப்புச் சட்டம் வரையப்பட்டு அது இரண்டு மாதங்களில் மக்களி அங்கீகாரத்துக்கான வாக்கெடுப்பு நடாத்தப்படும்.

வேலை நிறுத்தங்கள்
இச் சந்தர்ப்பத்தை பாவித்து காவல் துறை உடபட பல அரச ஊழியர்கள் அதிக ஊதியம் கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட முயன்றனர். இவர்கள் முபராக் ஆதரவாளர்களே. புதிய இராணுவ ஆட்சியாளர்கள் வேலை நிறுத்தத்தை சட்ட விரோதமாக்கியுள்ளனர்.

வறுமை
எகிப்திய மக்களில் 40%மானோர் நாளொன்றிற்கு $2 வருமானம் மட்டுமே பெறுகின்றனர். எழுச்சியால் எகிப்தியப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும் வருமானம் கொடுக்கும் சுற்றுலாத் துறை மிக மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ளது.
மாற்றுத் தலைமை
வால் கொனிம் (Wael Ghonim)ஐ துரோகி என்றும் உளவாளி என்றும் குற்றம் சாட்டப்படுவதுண்டு. இது எழுச்சியாளர்களுக்குள் பல பிரிவினர் உண்டு என்பதைக் காட்டுகிறது. சரியான மாற்றுத் தலைமை இல்லாமை இப்போதைய எகிப்தின் பெரும் பிரச்சனை. உட்பூசல் இன்றி ஒற்றுமையாக பலதரப்பட்ட பிரிவினர்களை ஒன்றிணைக்க வேண்டியதும் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப வேண்டியதும்இப்போது பெரும் பிரச்சனை. எகிப்திய எழுச்சியில் படைத்துறையினர் நடந்த விதம் மிகவும் ஆச்சரியப்படவைத்ததோடு மிக மிக பாராட்டப்டட வேண்டிய ஒன்றுமாகும். எகிப்தியப் பல்கலைக்கழக அரசறிவியல் பேராசிரியர் முஸ்தபா ஒல்வி கூறுகிறார் "எகிப்தின் சமூக அரசியல் கட்டமைப்பு பெரிதும் மாறி விட்டது. இப்போது இளைஞர்கள் இதில் பெரும் பங்கு வகிக்கிறார்கள். அவர்கள் ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளார்கள். இதை நிச்சயம் எகிப்திய படைத்துறையினர் கருத்தில் கொண்டு நாட்டை சரியான பாதையில் இட்டுச் செல்வார்கள்." பேராசிரியர் முஸ்தபா ஒல்வியின் கூற்றை உறுதி செய்யும் வகையில் பல படைத்துறை உயர் அதிகாரிகள் பல இளைஞர் அமைப்புக்களின் தலைவர்களையும் பிரதிநிதிகளையும் சந்தித்து வருகின்றனர். படைத்துறையிலும் அரச இயந்திரங்களிலும் பல தலைகள் இனி உருளலாம்.
பலரும் படைத்துறையினருக்கு எகிப்தை சரியான பாதையில் இட்டுச் செல்வதைத்தவிர வேறு வழியில்லை என்று கருதுகின்றனர். இப்போது எழுச்சியை அரங்கேற்றி வெற்றி கண்ட மதசார்பற்ற எகிப்திய இளைஞர்களின் பெரு முயற்ச்சி வீண்போனால் இசுலாமிய அடிப்படைவாதிகள் கை ஓங்கலாம். அப்படி ஒன்று மேற்குலகம் தனது முக்கிய வர்தகப்பாதையான சூயஸ் கால்வாய் ஓரத்தில் நடப்பதை அறவே விரும்பாது. எகிப்தில் நடந்த இரத்தக் களரியற்ற ஆனால் பல இலடசம் மக்கள் பலத்தசிரமத்துக்குள்ளான எழுச்சி மக்களை ஒரு விடிவை நோக்கி எடுத்துச் செல்லவிட்டால் புனிதப்போர்வாதிகளின் கை அரபு நாடுகளில் ஓங்கும் என்பதை மேற்குலகம் அறியும். பண உதவி, நோபல் பரிசு என்பவற்றுடன் அமெரிக்கா மீள நுழையுமா? காமால் நாசருக்குப்பின் அதுதான் நடந்தது.

எஸ் எம் கிருஷ்ணாவின் மொக்கை: ஐநாவில் கப்பலேறிய இந்தியாவின் மானம்.



இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா இந்தியாவின் பெருமையை உலகிற்கு பறைசாற்றி இந்தியாவையும் ஒரு வல்லரசாக்கும் எண்ணத்துடன் அமெரிக்கப் பயணத்தை மேற்கொண்டார். ஐக்கிய நாடுகளின் பாது காப்புச் சபையிலும் அவர் பங்கு பற்று உரையாற்றுவது அவரது பயணத்தின் நோக்கம்.

ஐக்கிய நாடுகள் சபையில் பெருமை மிகு இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா உரையாற்றுகிறார் அதாவது சில காகிதங்களை வைத்து வாசிக்கிறார். அங்கு அவர் ஆற்றும் முதலாவது உரை. அவரது உரை போர்த்துகீசியா சம்பந்தமாகப் போய் கொண்டிருக்கிறது. அவர் சுமார் மூன்று நிமிடங்கள் உரையாற்றுகிறார். திடீரென்று ஐநாவிற்கான இந்தியப் பிரதிநிதி ஹர்தீப் சிங் பூரி எஸ் எம் கிருஷ்ணாவிடம் சென்று வேறு காகிதங்களைக் கொடுத்து முதலில் இருந்து மீண்டும் தொடங்கவும் என்று கூறுகிறார். இப்போது எஸ் எம் கிருஷ்ணா மஹாத்மா காந்தியின் வாசகத்துடன் தனது உரையை வாசிக்கிறார்.

நடந்தது இதுதான்.
ஐக்கிய நாடுகள் சபையில் ஒருவர் ஆற்றும் உரையை அச்சடித்து மற்ற உறுப்பினர்களுக்கு வழ்ங்குவார்கள். போர்த்துக்கீசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஆற்றிய உரை அப்படி வழங்கப்பட்டபோது அது எஸ் எம் கிருஷ்ணா உரையாற்ற வைத்திருந்த காகிதங்களுக்கு மேல் வைக்கப்பட்டது. உரையாற்ற அழைக்கப்பட்ட போது எஸ் எம் கிருஷ்ணா தன்முன்னால் இருந்த காகிதங்களை எடுத்துச் சென்று மேல் உள்ள காகிதத்தை வாசிக்கத் தொடங்கிவிட்டார். அது போர்துக்கீசிய உரை என்பதை அறியாமல். இங்கு கேள்வி என்னவென்றால் ஏன் அல்லது ஹர்தீப் சிங் பூரி அந்த உரை வேறு என்பதை உணர மூன்று நிமிடம் எடுத்தது. ஹர்தீப் சிங் பூரி சொல்லியிருக்காவிட்டால் எஸ் எம் கிருஷ்ணா முழுவதையும் வாசித்திருப்பாரா? தான் என்ன பேசப்போகிறேன் என்று அறியாமல் எஸ் எம் கிருஷ்ணா வெறும் வாசிப்பாளராக மட்டும் அங்கு சென்றாரா? உரைத் தயாரிப்பில் அவர் எந்தப் பங்கும் வகிக்கவில்லையா? இங்கு இரு போர்த்துக்கீசிய மொழி பேசும் நாடுகள் இருப்பதையிட்டு நான் பெருமை அடைகிறேன் என்று அவர் வாசிக்கும் போது(On a more personal note, allow me to express my profound satisfaction regarding the happy coincidence of having two members of the Portuguese Speaking Countries (CPLP), Brazil and Portugal, together here today,") அவர் ஏன் இது தனது உரை என உணரவில்லை? அல்லது அவர் மது போதையில் இருந்தாரா?

கிருஷ்ணா உரையாற்றமுன் போர்த்துக்கீசிய அமைச்சர் உரையாற்றியிருந்தார். அவர் பேசியதை கிருஷ்ணா காதில் வாங்கவில்லையா?

பின்னர் இதுபற்றி கிருஷ்ணா தெரிவித்த கருத்து இன்னும் வேடிக்கையானது: "இதில் எந்தத் தவறும் இல்லை. என்முன் பல பல காகிதங்கள் இருந்தன, தவறுதலாக பிழையான உரையை எடுக்கப்பட்டுவிட்டது." There was nothing wrong in it. There were so many papers spread in front of me so by mistake the wrong speech was taken out.

இப்படிப்பட்டவர்கள் வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்குமிடத்து இன்னும் எத்தனை மீனவர்களையும் இலங்கைக் கடற்படை கொல்லலாம்.


கிருணாவின் மொக்கையை காணொளியில் கீழுள்ள இணைப்பில் காணலாம்.
இரண்டு மணிதியாலமும் ஐம்பத்தைந்து நிமிடமும் கொண்ட இந்தக் காணொளியில் அவரது மொக்கை உரை 1-08 இல் ஆரம்பமாகிறது. கீழே சொடுக்கவும்.

ஐநாவில் இந்திய மொக்கை

இலங்கையில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களைக் கொல்ல உதவிய இந்தியாவிற்கு இதுவும் வேணும் இன்னும் வேணும்.

பாக்கிஸ்த்தானிய பதுகாப்புத்துறை இணையம் இப்படிக்கிண்டலடித்தது:
"Maybe Portugal has outsourced its speech to Bangalore," read one message on social networking site.

பிரித்தானியப் பத்திரிகை வாசகர் இப்படிக் கூறினார்:
Reading another delegate's speech and not realising it after 3-minutes shows that Krishna didn't have a read through beforehand, never wrote it himself and would read anything put in front of him. Just another UN representative who is coasting through to the end of the month when they get their massive pay cheque.
இன்னொருவர் கருத்து:
India's political show is run by bureaucrats,civil servants. Politicians are only fighting when in the government for minister posts and influential portfolios, so they can earn lots of monies for their children and family. (இங்கு இவர் சின்ன வீடுகளை விட்டிட்டார்.)

ஐநா சபையில் நீண்ட நேர உரை யாற்றிய பெருமை இந்தியாவின் வி கே கிருஷ்னமெனனுக்கு உண்டு. 23-01-1957இல் 7மணித்தியாலம் 48 நிமிடம் உரையாற்றிய பின்னர் மயங்கி விழுந்தார். அவர் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின் மீண்டும் வந்து உரையாற்றினார் மேலும் ஒரு மணித்தியாலம்.


பாது காப்புச் சபையில் இந்தியாவிற்கு நிரந்தர இடம்.
பாது காப்புச் சபையில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் தேடிச் சென்றவர் ஐநாவின் சரித்திரத்தில் ஒரு மொக்கை உரையாற்றிய பெருமையை நிரந்தரமாகப் பெற்றுக் கொண்டார்.

எகிப்தின் முபாரக் நகைச்சுவைகள்



பதவியில் இருந்து விரட்டப்பட்ட எகிப்தின் முன்னாள் அதிபர் ஹொஸ்னி முபாரக் பற்றி பல நகைச்சுவைகள் உலாவுகின்றன. அவற்றில் சில:

முபராக்கிற்கும் பராக்(ஒபாமா)விற்கும் என்ன வித்தியாசம்?
முபாராக்கிற்கு இப்போதும் இருக்கும் ஆதரவாளர்கள் தாங்கள் முபராக்கின் ஆதரவாளர்கள் என்று சொல்ல வெட்கப்படுவதில்லை. donkey to mubarak , where are all your baracks.




படங்கள்: நன்றி, வெளியுறவுக்கொள்கை இணையத்தளம்.

எகிப்தில் முபாரக்கிற்கு எதிரான ஆர்ப்பட்டம தொடங்கியவுடன். பராக் ஒபாமா தனது Facebook relationship status ஐ "It's Complicated." என்று மாற்றிவிட்டார்.


முபாரக்கிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய வலைத்தளங்களூடாக அழைப்பு விடுக்கப்பட்டு பலர் தெருவில் இறங்கிப் போராடினார்கள். இதனால் ஆத்திரமடைந்த முபராக் இணையத் தொடர்புகளையும் கைப்பேசித் தொடர்புகளையும் துண்டித்தார். இணையத்தில் பலானபடம் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் கைப்பேசியில் கடலை போட்டுக்கொண்டிருந்தவர்களும் இதனால் பெரும் ஆத்திரம் அடைந்து அவர்களும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்து போராடினார்கள். வேறு வழியின்றி முபராக் பதவி விலக வேண்டி வந்தது.


எகிப்திய மக்கள் ஏன் திடீரென்று களத்தில் இறங்கி முபராக்கிற்கு எதிராகப் போராடினார்கள்? அவர் வயதானவர் ஆனதால் எந்த நேரமும் இறக்கலாம். அவர் இறந்தால் அவரது மொக்கை மகன் ஆட்சிக்கு வந்து தொலைத்து விடுவான் என்று அஞ்சியே மக்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர். இதனால் முதல் நாள் ஆர்ப்பாட்டத்துடனேயே முபராக் தன்மகனை இலண்டனுக்கு அனுப்பிவைத்து விட்டார். கழுதை கெட்டால் குட்டிச் சுவர். சர்வாதிகாரி சரிந்தால் இலண்டன்.


முபாரக் இறந்தபின் நரகத்திற்குப் போனார் அவரை அங்கு ஈரானிய முன்னாள் மன்னர் ஷா சந்தித்து உன்னை எப்படிக் கொன்றார்கள்? துப்பாக்கியால் சுட்டா? தற்கொலைத் தாக்குதலா? படைத்துறை சதிப்புரட்சியா? என்று கேட்டார்? அதற்கு முபாரக் கொடுத்த பதில்: Facebook.

Monday, 14 February 2011

சைவக் கோழியின் முட்டை சாப்பிட்டால் ஆரோக்கியம்.


கோழி முட்டை ஒரு காலத்தில் நல்ல ஆரோக்கியமான உணவாகக் கருதப்பட்டது. பின்னர் அது கெடுதலான கொழுப்பு நிறைந்தது என்று கூறப்பட்டது. இப்போது கதை மீண்டும் மாறிவிட்டது.

அமெரிக்க அரசு நடாத்திய ஆய்வின் படி இப்போது உள்ள கோழி முட்டைகள் பத்து ஆண்டுகளுக்கு முன் இருந்த கோழி முட்டைகளிலும் பார்க்க 13% கொழுப்பு (
cholesterol) குறைந்தவை என்றும் 64% விட்டமின் D அதிகம் கொண்டவை என்றும் அறியப்பட்டுள்ளது. இதற்கான காரணம் இப்போது கோழிகளுக்கு பண்ணைகளில் கொடுக்கப்படும் உணவில் அரசுகள் செய்துள்ள கட்டுப்பாடுகளாகும். முன்பு கோழுகளுக்கு மிருகங்களின் எலும்பில் செய்த உணவுகள் கொடுக்கப்பட்டன. இப்போது அவை தடை செய்யப்பட்டுள்ளன. இப்போது பண்ணைகளில் கோழிகளுக்கு சோழம் கோதுமை கொண்ட புரோட்டீன் நிறைந்த உணவுகள் கொடுத்து வளர்க்கப்படுவதால் கோழிகள் இடும் முட்டைகளும் ஆரோக்கியமானவையாகின்றன.

ஒரு நடுத்தர அளவான முட்டையில் 100மில்லி கிராம் கொழுப்பு(cholesterol) இருக்கிறது. இது நாளாந்தம் ஒருவர் உட் கொள்ளக் கூடிய 300மில்லி கிராம் கொழுப்பிலும் பார்க்கக் குறைவானது.

ஒரு வருடத்திற்கு முன்னர் கனடிய அரசு செய்த ஆய்வின் பிரகாரம் முட்டை உண்பது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் கொழுப்பைக் குறைக்கும் என்று கூறப்பட்டது. முட்டை சமிபாடடையும்போது எமது உடலுள் உருவாகும் புரதம் Ace inhibitors எனப்படும் இரத்த அழுத்தம் குறைக்கும் மருந்தைப் போல் செயற்படுகிறதாம். இதனால் தினமும் முட்டை உண்ணுதல் இரத்த அழுத்தத்தை குறக்க உதவுமாம் என்றது கனடிய அரசு.

பிரித்தானிய சறே(Surrey) பல்கலைக்கழகத்தின் ஆய்வின் படி காலையில் ஒன்று அல்லது இரண்டு முட்டை உண்டால் அது எமது உடலின் புரதச் சத்துத் தேவையைப் பூர்த்தி செய்து வயிற்றுப் பசியைக் குறைக்கிறது. இதனால் நாம் அதிகம் உண்பதைக் குறைக்கிறோம். இதனால் எமது எடை குறைக்க முட்டை உண்ணுதல் உதவுகிறது. 12 வாரங்களாக சிலருக்கு தொடர்ந்து காலை உணவில் இரண்டு முட்டைகள் சேர்த்து உண்டவர்களினது எடை குறைந்திருப்பதை ஆய்வில் கண்டனர்.

காதலர் தின SMS விடுதூது


சில காதலர் தினக் குறுந்தகவல்கள்:

இன்று மட்டு மல்லடி
எம் காதலர் தினம்
365 நாளும் எம் தினம்.

இன்று மொட்டாகி
நாளை மலராகி
இனிய கனியாகும்
எம் காதல்

இது எஸ் எம் எஸ்
என் உள்ளக் காவியம்
எனக்கு நீ வேண்டும்

சிலர் கண்களால் காதல் செய்வர்
சிலர் கைகளால் காதல் செய்வர்
சில உதடுகளால் காதல் செய்வர்
சிலர் உடம்பால் காதல் செய்வர்
நாம் செய்வது இதயத்தால்

இது குறுந்தகவல் அல்ல
என் இதயக் கிடக்கை

நிலம் உனக்கு
வானம் உனக்கு
கடலும் உனக்கு
எதுவும் உனக்கு
என்றும் நீ எனக்கு

When u feel sadness in your HEART,
darkness in your EYES,
paleness on your FACE,
it shows you are suffering from lack of vitamin “ME“.
Happy Valentine’s Day

Within you I lose myself...
Without you I find myself
Wanting to be lost again.

No poems no fancy words I just want the world to know that I LOVE YOU my Princess with all my heart. Happy Valentines Day.

U r unique
U r caring and
U r the Best.And I am d luckiest to have U in my life!
Happy Valentine's Day my sweet heart!

I ask God for a rose n he gave me flowers;
I ask God for water n he gave me an ocean;
I ask God for an angel n he gave me the best love ever!

In School, They Taught Me That
1 hour = 60 Mints
1 Min = 60 Secs
But They Never Told Me That
1 Sec Without You = 100 Years

When i look at you,
i cannot deny there is God,
cause only God could have created some one
as wonderful n beautiful as you

My Heart To You Is Given,
Oh Dear, Do Give Yours To Me.

If i reached for your hand , will u hold it ?
If i hold out my arms, will u hug me ?
If i go for your lips, will u kiss me ?
If i capture ur heart , will u love me ??

Without Love -- days are sad day,
moan day, tears day, waste day,
thirst day, fright day, shatter day.
So be in love everyday...
Wish you a Happy Valentine's Day.

To Give Pleasure To
A Single Heart By A
Single Act Is Better
Than A Thousand
Heads Bowing In Prayer

சிரிக்க:
The Best VALENTINE Gift this YEAR is to gift ONIONS,
bcoz
1)Got colour of Love (Pink)
2)High Market Value.
3)U can see tears of happiness.

Sardar: Will you marry , after i die .
Wife : No i will live with my sister.
Wife : Will u marry , after i die .
Sardar: No i will also live with your sister.


One day one boy and girl came late to school.
Teacher Asked Girl why were they late,
Girl: Sir i lost my 1 rupee coin on the way while i was coming to school, i searched for that for that i got late.
Teacher asked the boy why were u late,
Boy replied:i was standing on that coin to hide.

விநோதமான வலைத்தளப் பெயர்கள்.


வலைத்தளங்களுக்கு ஒரு பெயர் வைக்க அது விபரீதமாக முடிவதுண்டு. அப்படி வைத்த சில விநோதமான வலைத்தளப் பெயர்கள்:

1. Experts Exchange, a knowledge base where programmers can exchange advice and views at
www.expertsexchange.com. There is actually another completely unrelated site at http://www.expertsexchange.com/


2. A site called 'Who Represents' where you can find the name of the agent that represents a celebrity. Their domain name... wait for it... is
www.whorepresents.com (whore-விலைமகள்)


3. Looking for a pen? Look no further than Pen Island at
www.penisland.net (penis-ஆணுறுப்பு)


4. Need a therapist? Try Therapist Finder at
www.therapistfinder.com(இதை the rapist founder கற்பழிப்பவன் கிடைக்குமிடம் என்றும் பொருள்படும்)


5. Italian Power Generator company...
www.powergenitalia.com (genital-பிறப்புறுப்பு)


6. And now, we have the Mole Station Native Nursery, based in New South Wales:
www.molestationnursery.com (molest - பாலியல் தொலை கொடுத்தல்)


7 . Then, of course, there's these brainless art designers, and their whacky website:
www.speedofart.com

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...