Tuesday 13 September 2022

உக்ரேனின் பதிலடி இரசியாவிற்கு பேரிடியாகுமா?

 

தன் நிலத்தை பாதுகாப்பதற்கான போரைச் செய்து கொண்டிருந்த உக்ரேன் நில மீட்பு போரைத் தொடங்கிவிட்டது போல பல தாக்குதல்களை 2022 ஓகஸ்ட் மாத இறுதியில் இருந்து செய்கின்றது. இரசியா தனக்கு மிக மிக கேந்திரோபாய முக்கியத்துவமான கிறிமியா குடநாட்டின் பாது காப்பை உறுதி செய்ய கேர்சன் (Kherson) பிரதேசத்தைக் கைப்பற்றியிருந்தது. அதை மீட்கும் போரை ஆரம்பிப்போம் என சூளுரைத்து விட்டு உக்ரேனின் வட கிழக்குப் பகுதியில் இரசியா கைப்பற்றி வைத்துள்ள கார்கீவ் (Kharkiv) பகுதியில் உள்ள இரசியப் படையினரின் வழங்கலின் இதயமாக இருந்த தொடரூந்து நிலையத்தை கைப்பற்றியுள்ளது.

எதிர்பாராத தாக்குதல்

உக்ரேனியர்கள் இரசியர்கள் எதிர்பாராத இடத்தில் எதிர்பாராத வகையில் செய்த தாக்குதல் இரசியப் படைகளை நிலைகுலையச் செய்து விட்டது. பல கிராமங்களை விட்டு அவர்கள் பின்வாங்கியுள்ளனர். இஜியம், குபியங்ஸ்க் ஆகிய நகரங்களை இரசியர்கள் இழந்துள்ளமை உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இரசியப் படையினரின் வழங்கல்களுக்கு முக்கியத்துவம் மிக்க தொடரூந்து நிலையங்களைக் கொண்ட இஜியம் நகரை உக்ரேனியப் படையினர் மிகத் துரிதமாக கைப்பற்றினார்கள் என்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. T-80 போர்த்தாங்கிகள் உட்பட இரசியர்களின் 200இற்கும் அதிகமான படை வண்டிகளையும் உக்ரேனியர்கள் கைப்பற்றியுள்ளனர்.  இதனால் உக்ரேனின் கைகள் வலிமையடைந்துள்ளன. இரசியாவின் First Guards Tank Army என்னும் சிறப்புப் படையணியே தாங்கிகளையும் கைவிட்டு தப்பி ஓடியது என்பது இரசியாவிற்கு அவமானகரமான ஒன்றாக அமையும். 

மார் தட்டும் உக்ரேனும் மட்டம் தட்டப்படும் புட்டீனும்

இரசியாவின் தீவிர ஆதரவு சமூக வலைத்தள செயற்பாட்டாளரக்ளான Peter Lundstrom, Yuri Podolyaka ஆகியோர் இரசியாவிற்கு ஏற்பட்டுள்ள இழப்பை காரணம் காட்டி புட்டீனிற்கு எதிராக கருத்துகளை வெளியிடுவதாகவும் செய்திகள் வருகின்றன. 2022 செப்டம்பர் மாதம் 11-ம் திகதி உக்ரேனியப் படைத்தளபதி வலரி சலுஸ்னி பதினொரு நாட்களில் தமது படையினர் மூவாயிரம் சதுர கிலோ மீட்டரை மீளக் கைப்பற்றியுள்ளதாக மார் தட்டினார். அல் ஜசீரா கார்கீவில் இருந்து முன்னேறிச் சென்ற உக்ரேனியப் படையினர் இரசிய எல்லையில் இருந்து 50கிமீ தொலைவில் இருப்பதாகச் சொல்கின்றது. 2022 செப்டம்பர் 11-ம் திகதி ஞாயிற்றுக் கிழமை இரசிய அரச தொலைக்காட்சியின் வாராந்த செய்தி நிகழ்ச்சியில் உக்ரேனில் இரசியப் படையினர் செய்யும் “சிறப்பு நடவடிக்கையில்” (உக்ரேன் போருக்கு இரசியர்கள் கொடுத்துள்ள பெயர்) இந்த வாரம் மிகக்கடுமையான வாரமாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. புட்டீனின் படைநடவடிக்கைக்கு ஆதரவு வழங்கும் இரசிய மரபு வழித் திருச்சபையின் ஞாயிறு ஆராதனையிலும் அது எதிரொலித்தது. ஆனால் இரசிய பாதுகாப்புத்துறை இது புறமுதுகிடல் அல்ல வேறு இடத்திற்கு படையினர் நகர்ந்து தம் நிலையை வலிமையாக்கினர் எனச் சொல்கின்றது.


அதிருப்த்தியடைந்த புட்டீனின் ஒட்டுக்குழுத்தலைவர்

புட்டீனுக்கு நெருக்கமானவரும் உக்ரேன் போரில் முக்கிய பங்கு வகிப்பவருமான செஸ்னிய தலைவர் ரமஜான் கடிரோவ் உக்ரேன் போர் இரசியா திட்டமிட்ட படி நடக்கவில்லை என்றார். அவரது செஸ்னியப் படையினர் உக்ரேன் போரில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். செஸ்னிய விடுதலைப் போரில் இரசியாவிற்கு எதிராக போர் செய்த ரமஜான் கடிரோவ் பின்னர் புட்டீனின் ஒட்டுக்குழுவாக மாறி அவருடன் இணைந்து செயற்படுகின்றார். போர் உத்திகள் மாற்றப்படவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பல மேற்கு நாட்டு ஊடகங்கள் கார்கீவ் பகுதியில் இரசியப் படையினர் பின்வாங்கியதை உறுதிப் படுத்த ரமஜான் கடிரோவின் கருத்துக்களை ஆதாரமாக முன்வைக்கின்றனர். உக்ரேன் போருக்கு எதிரான கருத்துக்களை உடைய சில உள்ளூராட்சி உறுப்பினர்கள் புட்டீன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. உக்ரேனின் கிழக்குப் பகுதியில் இரசியாவால் ஆக்கிரமிக்கப்பட்டு பின்னர் தனிநாடாகப் பிரகடனப் படுத்திய தொனெட்ஸின்(Donetsk) தலைவர் போர் நடக்கும்விதத்தால் தான் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பழிவாங்கும் தாக்குதல்கள்

கார்கீவ் பகுதியில் இருந்து பின்வாங்கிய இரசியப் படையினர் கார்கீவில் உள்ள குடிசார் உட்கட்டுமானங்கள் மீது தாக்குதல் நடத்தி பழிவாங்குவதாக உக்ரேன் குற்றம் சாட்டுகின்றது. அத்தாக்குதலில் கார்கீவில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாம். உக்ரேன் மீதான தாக்குதல்களுக்கு ஆதரவளிக்கும் இரசியர்கள் உக்ரேனிய் உட்கட்டுமானங்கள் மீதான தாக்குதலைப் பாராட்டியதுடன் அவை 2022 மார்ச் மாதத்தில் செய்திருக்க வேண்டியவை எனவும் சொல்கின்றனர்.

வான் பொய்ப்பின் தானை பொய்க்கும்

இரசியப் போர் இரசியா எதிர்பார்த்திலும் பார்க்க அதிக காலம் நீடிப்பதற்கும் இரசியா அதிக இழப்பை சந்திப்பதற்கும் இரசியாவின் வான் படை சிறப்பாக செயற்பட முடியாமை முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது. உக்ரேனிலும் பார்க்க பத்து மடங்கு வான் படை வலிமையைக் கொண்ட இரசியாவால் உக்ரேனின் வான்படையையும் அதன் வான் பாதுகாப்பையும் செயலிழக்கச் செய்ய முடியாமல் இரசியா இருக்கின்றது. இதனால் துணிவடைந்த உக்ரேனியர்கள் இரசியா கைப்பற்றிய Kherson பிராந்தியத்தை மீளக் கைப்பற்றும் படை நடவடிக்கையை 2022 ஓகஸ்ட் 30-ம் திகதி ஆரம்பித்தனர். 2022 பெப்ரவரி மாதம் இரசியா உக்ரேன் மீது படையெடுக்கும் போது இரசியாவிடம் உக்ரேனிலும் பார்க்க எண்ணிக்கையில் அதிகமான தரத்தில் உயர்வான விமானங்கள் இருந்தன. அதனால் உலகின் முன்னணி வான்படை எனப்படும் 1511 போர்விமானங்களைக் கொண்ட இரசியாவிற்கு எதிராக 98 பழைய விமானங்களைக் கொண்ட உக்ரேனால் தாக்கு பிடிக்க முடியாது என போரின் ஆரம்பத்தில் எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் போர் தொடங்கி ஆறு மாதங்கள் கடந்த நிலையில் சோவியத் ஒன்றிய காலத்து பழைய MIG-29 போர் விமானங்களில் உக்ரேனியரகள் அமெரிக்கா வழங்கிய புதிய HARM (High Speed Anti Radar missiles) ஏவுகணைகளை வெற்றிகரமாகப் பொருத்தி அவற்றை இரசியப் படை நிலைகள் மீது ஏவிவருகின்றனர். சோவியத் ஒன்றிய காலத்தில் உருவாக்கிய SU-34, SU-35 ஆகிய தாக்குதல் விமானங்களையும் MiG-29, SU-27 ஆகிய சண்டை விமானங்களையும் இப்போதும் உக்ரேன் போரில் பாவிக்கின்றது. அதே போர் விமான ங்களை இரசியா பல வகைகளிலும் மேம்படுத்தி உக்ரேன் போரில் இரசியா பாவிக்கின்றது. இரசிய போர் விமானங்கள் உக்ரேன் போரில் எதிர்பார்த்த அளவு சிறப்பாக செயற்பட முடியாமல் போனதால் படைத்துறை நிபுணர்கள் தாம் போட்டக் கணக்கு தப்பானது என ஐயப்படுகின்றனர். இதனால் எதிர் காலத்தில் உலகப் படைக்கலச் சந்தையில் இரசியப் போர் விமான விற்பனையை பாதிக்கப்படலாம்.

வானாதிக்கம் செய்ய முடியாத இரசியா

2022 பெப்ரவரி மாதம் இரசியா உக்ரேன் மீது படையெடுக்கும் போது இரசியாவிடம் உக்ரேனிலும் பார்க்க எண்ணிக்கையில் அதிகமான தரத்தில் உயர்வான விமானங்கள் இருந்தன. அதனால் உலகின் முன்னணி வான்படை எனப்படும் 1511 போர்விமானங்களைக் கொண்ட இரசியாவிற்கு எதிராக 98 பழைய விமானங்களைக் கொண்ட உக்ரேனால் தாக்கு பிடிக்க முடியாது என போரின் ஆரம்பத்தில் எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் போர் தொடங்கி ஆறு மாதங்கள் கடந்த நிலையில் சோவியத் ஒன்றிய காலத்து பழைய MIG-29 போர் விமானங்களில் உக்ரேனியரகள் அமெரிக்கா வழங்கிய புதிய HARM (High Speed Anti Radar missiles) ஏவுகணைகளை வெற்றிகரமாகப் பொருத்தி அவற்றை இரசியப் படை நிலைகள் மீது ஏவிவருகின்றனர். சோவியத் ஒன்றிய காலத்தில் உருவாக்கிய SU-34, SU-35 ஆகிய தாக்குதல் விமானங்களையும் MiG-29, SU-27 ஆகிய சண்டை விமானங்களையும் இப்போதும் உக்ரேன் போரில் பாவிக்கின்றது. அதே போர் விமான ங்களை இரசியா பல வகைகளிலும் மேம்படுத்தி உக்ரேன் போரில் இரசியா பாவிக்கின்றது. இரசிய போர் விமானங்கள் உக்ரேன் போரில் எதிர்பார்த்த அளவு சிறப்பாக செயற்பட முடியாமல் போனதால் படைத்துறை நிபுணர்கள் தாம் போட்டக் கணக்கு தப்பானது என ஐயப்படுகின்றனர். இதனால் எதிர் காலத்தில் உலகப் படைக்கலச் சந்தையில் இரசியப் போர் விமான விற்பனையை பாதிக்கப்படலாம். 1967-ம் ஆண்டு அரபு-இஸ்ரேல் போர், 1971 பங்களாதேசப் போர் ஆகியவற்றை வான் மேலாதிக்கத்தாலேயே வெற்றி கொள்ளப்பட்டது. 1991-ம் ஆண்டு குவைத்தை ஈராக் ஆக்கிரமித்த போது நேட்டோ படையினர் ஓரு சில மணித்தியாலங்களுக்குள் ஈராக்கினதும் குவைத்தினதும் வான்பரப்பை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இரசியா உக்ரேனின் 127,484 சதுர கிலோ மீட்டரைக் கைப்பற்றியுள்ள நிலையில் வெறும் மூவாயிரம் சதுர கிமீட்டரை (உக்ரேன் அதிபர் ஆறாயிரம் சகிமீ என்கின்றார்) உக்ரேனியப் படையினர் மீளக் கைப்பற்றியமை அவர்களின் வெற்றியின் தொடக்கம் என்றோ இரசியாவிற்கு பேரிழப்பு என்றோ இப்போது சொல்ல முடியாது. மேலும் பிரதேசங்களை உக்ரேன் கைப்பற்றிய பின்னர்தான் போரின் போக்கைப் பற்றி எதையும் உறுதியாகச் சொல்ல முடியும்.


Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...