சிறப்புப்
படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத
உத்திகள்,
தொழில்நுட்பங்கள்,
போன்றவற்றைப் பாவித்து தனித்துவமானதும் மிக இரகசியமானதுமான
தாக்குதல்களை செய்ய சிறப்பாகப் பயிற்றுவிக்கப்பட்ட படையணியாகும். இரண்டாம் உலகப்
போரில் பங்குபற்றிய முன்னணி நாடுகள் எல்லாம் தெரிவு செய்யப்பட்ட இலக்குகள் மீது
தாக்குதல்கள் நடத்துவதற்கும் சிறப்பு படை நடவடிக்கைகளுக்கும் என சிறப்புப்
படையணிகளை அமைத்தன. தற்போது பயங்கரவாதிகள் எனக் கருதப்படும் அமைப்புக்களுக்கு
எதிராகத் தாக்குதல் செய்வதற்கும் அவர்களின் தாக்குதல்களை முறியடிப்பதற்கும் என
சிறப்புப் படையணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பல நாடுகள் ஒன்றிற்கு மேற்பட்ட சிறப்பு
படையணிகளை வைத்துள்ளன. அவை வெவ்வேறு நோக்கங்களுக்கா உருவாக்கப் பட்டுள்ளன.
கடினமான
பயிற்ச்சி
சிறப்புப்
படையணிகள் இரவு பகல் என்ற வித்தியாசமின்றி எப்படிப் பட்ட கால நிலையிலும்
எப்படிப்பட்ட மோசமான சூழலிலும் தாக்குதல் செய்யக் கூடிய வகையில் பயிற்றுவிக்கப்
படுவார்கள். அவர்களுக்கு என சிறப்பான கருவிகளும் உருவாக்கப்பட்டு வழங்கப்படும்.
நிலம்,
நீர், வானம் ஆகிய மூன்று முனைகளிலும்
செயற்படும் பயிற்ச்சி சிறப்புப் படையணிகளுக்கு வழங்கப்படும். அகப்படும் உணவை உண்டு
எந்த மோசமான உறைவிடத்திலும் தொடர்ந்து இருக்கக் கூடிய வகையிலும் சிறப்புப்
படையணிக்குப் பயிற்ச்சி வழங்கப்படும். பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாகவும்
திவிரவாதிகளைக் கைது செய்வது தொடர்பாகவும் சிறப்புப் படையணிகளுக்குப் பயிற்ச்சிக
வழங்கப்படும். சிறப்புப் படையணிகளின் தாக்குதலுக்கு உளவுத் தகவல் முக்கியமானதாகும்.
19-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சிறப்புப் படையணிகள் உருவாக்கப் பட்டன. இரண்டாம்
உலகப் போரின் போது எதிரியின் முன்னணி நிலைகளுக்குப் பின்னால் சென்று அதிரடித்
தாக்குதல்களைச் செய்து எதிரியை திணறடிக்கக் கூடிய சிறப்புப் படையணிகள் உருவாக்கப்
பட்டன. சிறப்புப் படையணிகளின் தரவரிசை:
10-இடம்:
MARCOS
-
இந்தியாவின் சிறப்புப் படையணி
சுருக்கமாக
MARCOS
என
அழைக்கப் படும் Marine
Commando Force என்னும்
இந்தியாவின்
சிறப்புப் படையணி இந்தியக் கடற்படையின் பிரிவாகும். நீரிலும் நிலத்திலும் செயற்படக்
கூடிய இந்தச் சிறப்புப் படையணி பயங்கரவாத எதிர்ப்பு,
நேரடித் தாக்குதல்,
உளவுபார்த்தல்,
அணுக்குண்டுப் பரவலாக்கத் தடுப்பு,
மரபுசாராப் போர்,
பணயக் கைதிகளை விடுவித்தல், போன்றவற்றில்
MARCOS
சிறப்புப்
படையணிக்கு பயிற்ச்சி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் கடல்சார் நிலைகளில் செயற்படக்
கூடிய வகையில் அவர்களுக்கு சிறப்புப் பயிற்ச்சிகள் வழங்கப்பட்டுள்ளது. 1985-ம் ஆண்டு உருவாக்கப் பட்ட MARCOS
இல்
இணைவது இந்தியப் படையினருக்கு இலகுவான ஒன்றல்ல. இணைந்த பின்னர் மூன்று ஆண்டுகள்
பயிற்ச்சி வழங்கப்படும். அவர்களுடைய இலக்குவாசகம் (
motto ) அச்சமில்லாச்
சிலர்
என்னும் பொருளுடைய The Few The
Fearless
என்பதாகும்.
மும்பாயில் உள்ள ஐ.என்.எஸ் அபிமன்யூ பயிற்ச்சி நிலையத்தின் அவர்களது பயிற்ச்சி
ஆரம்பித்து அருணாசலப் பிரதேசத்தில் High Altitude Commando
Course
இல் பயிற்ச்சியளிக்கப்பட்டு பின்னர் ராஜஸ்த்தானில் பாலைவனப் போர்ப்பயிற்ச்சி
வழங்கப்படும். அவற்றைத் தொடர்ந்து மிஸோரமில் வனப்பகுதியில் போர் செய்வது பற்றிப்
பயிற்ச்சி வழங்கப்படும். பின்னர் அமெரிக்கா சென்று அமெரிக்காவின்
US
Navy SEAL சிறப்புப் படையணியுடன் பயிற்ச்சி பெறுவர்.
9-ம்
இடம்: இத்தாலியின் Gruppo di
Intervento Speciale
இத்தாலியின்
GIS
எனச் சுருக்கமாக அழைக்கப்படும் Gruppo di Intervento Speciale
படையணி 1977-ம் ஆண்டு உருவாக்கப் பட்டது. இது குறிதவறாமல் சுடுவதில் திறன் பெற்றது.
ஒவ்வொன்றும் நால்வரைக் கொண்ட பல குழுக்களை இது கொண்டது. குறுகிய அவகாச காலத்தில்
இது செயற்படத் தயாராகக் கூடியது. இவை மற்ற ஐரோப்பிய நட்பு நாடுகளின் சிறப்புப்
படையணிகளுடன் இணைந்து செயற்படக் கூடிய வகையில் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றவை.
8-ம்
இடம்: ஒஸ்றியாவின் EKO
Cobra
1978-ம்
ஆண்டு உருவாக்கப் பட்ட இந்தப் பயங்கரவாத எதிர்ப்புப் படையணி பல பயங்கரவாத எதிர்ப்பு
நடவடிக்கைகளை திறம்படக் கையாண்டு உலகப் புகழ் பெற்றவை. ஒரு விமானக் கடத்தலை
வானத்திலேயே வைத்து முறியடித்த பெருமை இதற்கு உண்டு. 1996-ம் ஆண்டு ஒரு விமானம்
நடுவானில் வைத்து கடத்தப்பட்டது அதில் நான்கு EKO
Cobra படையினர் பயணம் செய்வதை விமானக் கடத்தல்காரர்கள்
அறிந்திருக்கவில்லை. அந்த நால்வரும் விமானக் கடத்தல்காரர்களை மடக்கிப்
பிடித்தனர்.
7-ம்
இடம்: பிரான்சின் GIGN படையணி
GIGN
எனச் சுருக்கமாக அழைக்கப்படும் National
Gendarmerie Intervention Group என்னும் பிரான்சின் படையணி உலகின்
எந்தப்பாகத்திலும் செயற்படக்கூடிய வகையில் பயிற்ச்சி வழங்கப்பட்டவை. அதிக எண்ணிக்கை
கொண்ட படையணியை துரிதமாக நகர்த்தக் கூடிய வகையில் இவை பயிற்றுவிக்கப்பட்டவை.
6-ம்
இடம்: பாக்கிஸ்த்தானின் Special
Services Group
படையணி
உலகிலேயே
மிகவும் துணிச்சல் மிக்க படையணியாக பாக்கிஸ்த்தானின் படையணி கருதப்படுகின்றது.
1956-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படையணி அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின்
சிறப்புப் படையணிகளுக்கு ஒப்பானதாகக் கருதப்படுகின்றது. பாக்கிஸ்த்தானின் படையணி
போன்ற ஒரு துணிச்சலான படையணி எம்மிடம் இருந்தால் எம்மால் உலகத்தை வெல்ல முடியும் என
ஒரு இரசிய அதிபர் கூறியிருந்தார்.
5-ம் இடம்: அமெரிக்காவின் Delta Force படையணி
அமெரிக்காவின் டெல்டா படையணி உலகப்புகழ் பெற்றது. களம்பல கண்டது. அமெரிக்காவின் சிறப்புப் படையணிகளில் இயற்திறன் (aptitude) மிக்கவர்களை தெரிந்தெடுத்து இப்படையணியில் இணைத்துள்ளனர். ஈரானில் மாணவர்கள் அமெரிக்கர்களைப் பணயக் கைதிகளாக 1979-,ம் ஆண்டு வைத்திருந்தபோது அவர்களை மீட்க முயன்ற படை நடவடிக்கை உலங்கு வானூர்திகள் பழுதடைந்ததால் தோல்வியில் முடிவடைந்தது. மேலும் கிரெனடாவிலும் சோமாலியாவிலும் டெல்டா படையணியின் முயற்ச்சிகள் தோல்வியில் முடிவடைந்தன. தொழில்நுட்பமும் பயிற்ச்சியும் டெல்டா படையணியை உலகின் முன்னணிப் படையணியாகத் திகழ வைக்கின்றது.
4-ம்
இடம்: இஸ்ரேலின் Shayetet 13 படையணி
இஸ்ரேலின்
கடற்படையின் ஒரு பிரிவான Shayetet
13 படையணி நீருக்குகீழ் போர் புரிவதிலும் சிறப்புப்
பயிற்ச்சி வழங்கப்பட்ட படையணியாகும். 1972-ம் ஆண்டு மியூனிச் ஒலிம்பிக்கில்
இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களைக் கொன்ற பலஸ்த்தீனியர்களை வேட்டையாடியதில் இது உலகப்
புகழ் பெற்றது. நாசவேலைகள் செய்வதில் இது உலகின் முன்னணிப் படையணியாகும். காசா
நிலப்பரப்பில் செயற்படும் காமாஸ் போராளிகளுக்கு இரகசியமாக படைக்கலன்களை எடுத்துச்
செல்லும் கப்பல்களை இடை மறித்துத் தாக்குவதில் பல தடவைகள் வெற்றிகளைக் இது கண்டது.
இஸ்ரேலிய உளவுத் துறையின் சிறந்த செயற்பாடு இந்தப் படையணியின் பல வெற்றிகளுக்கு
உறுதுணையாக இருந்தது.
மூன்றாம்
இடம்: இரசியாவின் Alpha
Group படையணி
பயிற்ச்சி
தொழில்நுட்பம் தெரிவு ஆகியவற்றால் இரசியாவின் Alpha
Group படையணி
சிறந்த படையணியாகக் கருதப் படுகின்றது. சோவியத் ஒன்றியம்
1970களில்
ஆப்கானிஸ்த்தானை ஆக்கிரமித்த போது அதிபர் மாளிகைக்குள் இந்தப் படையணி நுழைந்து
அங்கு இருந்த எல்லோரையும் கொன்று குவித்தது.
இரண்டாம்
இடம்: அமெரிக்காவின் Navy
SEALs படையணி
பாக்கிஸ்த்தானிற்குள்
புகுந்து பின் லாடனைக் கொன்றதன் மூலம் உலகப் புகழ் பெற்றது அமெரிக்கக் கடற்படையின்
சீல் படையணி. இது
2013-ம் ஆண்டு சோமாலிய அல் ஷபாப் அமைப்பினருக்கு எதிராக கடல்
வழியாகப் போய் இறங்கி தரைவழி நகர்ந்து அதிகாலையில் நடத்திய தாக்குதல் தோல்வியில்
முடிவடைந்தது. சிறுநீர் கழிக்க தமது முகாமில் இருந்து வெளியே வந்த ஒரு அல் ஷபாப்
போராளி இவர்களின் நகர்வுகளை அவதானித்துக் கலவரப் படாமல் உட் சென்று தனது நண்பர்களை
துயிலெழுப்புத் திருப்பித் தாக்கியதால் சீல் படையினர் தலை தெறிக்கப் பின்வாங்கி
ஓடினர்.
முதலாம்
இடம்: பிரித்தானிய SAS
படையணி
அமெரிக்காவின்
படையணியிலும் பார்க்க பிரித்தானியப்படையணி சிறந்ததா என்ற கேள்வி எழுவது நியாயம்.
ஆனால் பல படைத்துறை நிபுணர்கள் SAS
படையணியை முதல் தரப் படையணியாக ஏற்றுக் கொண்டுள்ளனர். பிரித்தானிய வான் படையில்
இருந்து தெரிவு செய்யப்படுபவர்களால் நிரப்பப்படுவது இப்படையணி. 1941-ம் ஆண்டு இது
உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது எதிரியின் படையணிக்குப் பின்புறம்
சென்று பல தாக்குதல்களை வெற்றிகரமாகச் செய்தது. பாரமிக்க படைக்கலன்களைச் சுமந்தபடி
தொடர்ந்து இருபது மணித்தியாலத்தில் நாற்பது மைலைக் கடத்தல் இதன் முதற்
பயிற்ச்சியாகும். பாரத்தைத் தாங்கியபடி ஒரு மணித்தியாலத்தில் இரண்டு மைல்கள்
நீந்திச் செல்ல வேண்டும். பின்னர் விமானம் மூலம் காட்டுக்குள் இறக்கப்பட்டு
திசையறிதல் கடினமான சூழலில் இயங்குதல் போன்றவற்றில் பயிற்ச்சியளிக்கப்படும்.
இறுதியாக மன வலிமை பற்றி அறிய 36 மணித்தியாலம் தொடர் நேர்முகப் பரிட்சை நடத்தப்
படும். பின்னரே தொடர் பயிற்ச்சி வழங்கப்படும். இவர்களுக்கான பயிற்ச்சியை
வழங்குவதில் பிரித்தானிய உளவுத்துறையினர் முக்கிய பங்கு வகிக்கின்றார்கள்.
1980-ம் ஆண்டு இலண்டனில் உள்ள ஈரானியத் தூதுவரகத்தைக் கைப்பற்றிய
தீவிரவாதிகளிடமிருந்து பயணக் கைதிகளை மிகத் துரிதமாகச் செயற்பட்டு தீவிரவாதிகளைக்
கொன்றது இதன் மிகப்பெரிய வெற்றியாகும். ஐக்கிய நாடுகளின் சமாதானப் படையில் இருந்த
பிரித்தானியர்களை 2000-ம் ஆண்டு சீரா லியோனில் தீவிரவாதிகள்
பணயக் கைதிகளாக பிடித்தனர். அவர்களின் முகாமிற்குள் துணிகரமாக உலங்கு வானூர்திகளில்
இருந்து கயிறு மூலம் இறங்கிய SAS
படையினர் ஒரு உயிரிழப்புடன் பணயக் கைதிகளை மீட்டனர். ஆர்ஜெண்டீனாவிற்கு எதிரான
போக்லண்ட் போரின் போது SAS
படையினர் ஆர்ஜெண்டீனாவின் போர் விமானத் தளத்தில் இருந்து ஐந்து மைல்
தொலவில் தரையிறங்கி ஆர்ஜெண்டீனிய விமானங்களை கைக்குண்டுகளாலும் துப்ப்பாக்கிளாலும்
அழித்தனர். இந்த நடவடிக்கையின் போது உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. அதே போல சதாம்
ஹுசேய்னின் ஸ்கட் ஏவுகணைகளையும் அழித்தொழித்தனர்.
ஒரு கருத்துக் கணிப்பெடுப்பும் SAS
படையணியை உலகின் தலை சிறந்த படையணி எனத் தெரிவிக்கின்றது. SAS படையணியும் அமெரிக்காவின் சீல் படையணியும் பல சந்தர்ப்பங்களில் இணைந்து செயற்படுவதுண்டு. இரு படையணிகளும் அமெரிக்கப் பூர்வீகக் குடிகளின் கத்திச் சண்டை நிபுணர்களிடமிருந்து கத்திச் சண்டை பயிற்ச்சி பெற்றுள்ளன.
Sayoc Kali என்னும் பிலிப்பைன்ஸ் தற்பாதுகாப்புச் சண்டை, இஸ்ரேலியப் படையினர் ஜூடோ, மற்போர், குத்துச் சண்டை ஆகியவற்றில் உள்ள நுடபங்களை இணைத்து உருவாக்கிய Krav Maga சண்டை, புரூஸ் லீ மூலம் பிரபலமான சீனத் தற்பாதுகாப்பான Jeet Kune Do ஆகியவற்றில் பயிற்ச்சி பெற்றிருக்கின்றார்கள்.
காலணிக் கத்தி, இருட்டிலும் பார்க்கக் கூடிய கண்ணாடிகள், சூரிய ஒளியில் இருந்து மின்சாரம்பெறும் கருவிகள், மிகவும் சிரமமான இடங்களில் ஏறவும் இறங்கவும் கூடிய கயிறுகள், தொடர்பாடல் கருவிகள் GPS என்னும் வழிகாட்டிக் கருவிகள் சிறப்புப்படையணிகளிடம் அவசியம் இருக்க வேண்டியவையாகும். தேவை ஏற்படின் சாதாரண ஆட்களைப் போல் மாறக்கூடிய உடைகளும் அவர்கள் வைத்திருப்பர். அமெரிக்காவின் Green Berets என்னும் சிறப்புப் படையணி கலாச்சாரம், மொழி, மனோதத்துவம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றது. பிரித்தானியாவின் Special Boat Service
என்ற சிறப்புப் படையணி பிரித்தானியக் கடற்படையின் ஒரு பிரிவாகும். இதுவும் SAS படையணிக்கு ஈடான சிறப்புப்படையணியாகும். சிறப்புப்
படையணை தொடர்பாகவும் பல் வேறுபட்ட படைத்துறை நிபுணர்கள் பல் வேறு தரவரிசைப்
பட்டியலைத் தயாரித்துள்ளனர். சீனாவின் படையணிகள் ஏதும் இடம்பெறாமை ஆச்சரியப்பட
வைக்கின்றது. சீனா நீண்ட காலமாகப் போர் முனைகளில் செயற்படாமையும் அதன் இரகசியம்
பேணலும் காரணமாக இருக்கலாம். போலாந்தின் JW GROM
படையணியும் ஒரு சிறந்த படையணியாகக் கருதப்படுகின்றது. அது இதுவரை உயிழப்பு எதையும்
சந்திக்காதது பெருமைக்கு உரியதாகும். அதனால் ஒரு நிபுணர் அதை ஐந்தாவது சிறந்த
படையணி என்கின்றார். போலாந்தின் சிறப்பு படையணியினர் ஒவ்வொருவரும் இரண்டுக்கு
மேற்பட்ட மொழிகளை பேசக் கூடியவர்களாகப் பயிற்ச்சியளிக்கப் பட்டுள்ளனர். பல ஐரோப்பிய
நாடுகள் 1972-ம்
ஆண்டு மியூனிச் ஒலிம்பிக்கில் இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை பலஸ்த்தீனியப்
போராளிகள் கொன்ற பின்னர் தமது சிறப்புப் படையணிகளை பயங்கரவாத எதிர்ப்புப் படையணியாக
உருவாக்கின. ஆனால் பிரித்தானியா தனது படையணியை இரண்டாம் உலகப் போரின் போது
மரபுவழிப் படையணிகளுக்கு எதிராகச் செயற்பட உருவாக்கியது. எண்ணிக்கை அடிப்படையில்
அதிகமான படையினரை கொண்ட படையணிகளுக்கு எதிராகப் போராட உருவாக்கப்பட்டது. அமெரிக்கப்
படை தனது சிறப்புப் படையணியை இரண்டாம் உலகப் போரின் போது உருவாக்கினாலும் பல படை
நடவடிக்கைகள் வியட்னாம் போரின் போதே செய்யப்பட்டன். சிறப்புப் படையணிகளின்
வரலாற்றில் மிக மோசமான தோல்வி அமெரிக்கா 1993-ம் ஆண்டு சோமாலியாவில் சந்தித்த
தோல்வியாகும் முதல் இறங்கிய படையணி எதிர்பாராத எதிர்ப்பைச் சந்தித்து மாட்டிக்
கொண்டது. அதை இறக்கிய உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டது. முதற் சென்ற
படையணியை மீட்கச் சென்ற படையணியையும் மீட்க வேண்டிய நிலை உருவானது. இரண்டாவது
உலங்கு வானூர்தியும் சுட்டு வீழ்த்தப்பட்டது. அவர்களை இறுதியில் மீட்டது ஐக்கிய
நாடுகளின் சமாதானப் பணிக்கு சோமாலிய சென்றிருந்த பாக்கிஸ்த்தானின் படையினரே.
அமெரிக்காவின் சிறப்புப் படையணிக்கு மிகவும் உறு துணையாக அதன் ஆளில்லாப் போர்
விமானங்களும் செய்மதித் தொடர்பாடல்
GPS என்னும் இடம் அறியும் முறைமை பக்க வலுவாகும். அமெரிக்கப் படையின்
துரித தொழில் நுட்ப வளர்ச்சி அதன் படையணிகளின் தரத்தை எதிர்காலத்தில் மேலும்
உயர்த்தும்.
பயங்கரவாத
எதிர்ப்புக்கு என்று உருவாக்கப் பட்ட பல சிறப்புப் படையணிகள் தற்போது எல்லை தாண்டிய
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.
No comments:
Post a Comment