Saturday, 14 November 2009
மீண்டும் இந்தியாவின் பொய்த் தூது
இலங்கையில் தமிழ் இன அழிப்புப் போர் நடந்து கொண்டிருக்கும் வேளையில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அடிக்கடி தூதுவர்கள் வந்து கொண்டிருந்தனர். அது இலங்கையில் போர் நிறுத்தக் கோரிக்கை விடுக்க என்று வெளியில் சொல்லப் பட்டது. ஆனால் அது இலங்கை அரசின் தமிழின அழிப்புப் போரில் இலங்கை அரசின் தேவைகளை எப்படி பூர்த்தி செய்வது என்பதைப் பற்றியதாகவே உண்மையில் அமைந்தது. போரை முடிக்கவில்லை தமிழர்களை முடித்தனர்.
அண்மையில் இந்தியப் பாராளமன்றக் குழுவொன்று இலங்கை வந்தது. அது முகாம்களில் வாழும் தமிழர்களின் நலன்கள் சம்பந்தமாக என்று கூறப்பட்டது. அவர்களின் குறைபாடுகளை அறிய என்று சொல்லப் பட்டது. வன்னி முகாம்களை நேரில் பார்க்காமலே ஒரு சுவிஸ் நாட்டுப் பேராசிரியர் வன்னி முகாமகளில் சிறார்களை தடுத்து வைத்திருப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்பினார். அது சட்டவிரோதமானது என்று இடித் துரைத்தார். ஆனால் வன்னி முகாம்களில் சிறிவர்களைத் தடுத்து வைத்திருப்பது சட்ட விரோதமென்று மஹிந்த ரஜபக்சேயிற்கு பொன்னாடை போர்க்கவந்த பன்னாடைகளுக்குத் தெரியவில்லை.
சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் யாழ்ப்பாணம் ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலை அங்கு மக்கள் அச்சத்துடனேயே வாழ்கிறார்கள் என்று அறிக்கைவிட்டது ஒருவாரத்திற்கு முன். ஆனால் அது மஹிந்த ரஜபக்சேயிற்கு பொன்னாடை போர்க்கவந்த பன்னாடைகளுக்குத் தெரியவில்லை. காங்கிரஸ் பாராளமன்ற உறுப்பினர்கள் வீரகேசரிக்கு வழங்கிய பேட்டியில் இலங்கை அரசைப் புகழ்ந்து தள்ளினர். இவர்கள் இலங்கை வந்து சென்று திரும்பிய பின் இந்திய அரசிற்கு சமர்ப்பித்த அறிக்கை இன்னும் பகிரங்கப் படுத்தப் படவில்லை. இலங்கை அரசு சில வன்னிமுகாம்களில் தங்கி இருக்கும் தமிழர்களை விடுவிப்பது என்று அவர்களுக்கு தெரியாத இடங்களில் வேண்டுமென்றே நள்ளிரவில் கொண்டுபோய் இறக்கிவிட சென்னையில் கருணாநிதியைப் பாராட்டி சுவரொட்டிகள் ஒட்டப் பட்டான.
இன்று ஐரோப்பியாவில் ஒளிபரப்பான கலைஞர் தொலைக் காட்சியின் செய்தியில் இந்திய நிதி அமைச்சர் பிரணப் முகர்ஜி தமிழர் நலன்கள் குறித்து இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடாத்த இலங்கை செல்கிறார் என்று குறிப்பிட்டது. ஏன் நிதி அமைச்சர்? ஏன் வெளிவிவகார அமைச்சர் செல்லவில்லை? இந்தப் பிரணாப் சோனியாவிற்கு வேண்டியவர். இந்தப் பயணம் குடும்ப நலன் சார்ந்ததா? அல்லது இலங்கைக்கு இன்னும் நிதி உதவி செய்வது பற்றி ஆராயப் படுமா? ஆனால் கொழும்பில் இருந்து வரும் செய்திகளின்படி பிரணாப் சரத் பொன்சேக்கவின் பதவி விலகலும் அவரது அரசியல் நுழைவும் பற்றி ஆராய்வதையே முக்கிய நோக்கமாகக் கொண்டது என்று அறியப் படுகிறது. என்று முடியும் இந்தப் பொய்த் தூதுகள்?
Friday, 13 November 2009
14 வயதுப் பெண்ணாக மாறிய மனைவி
பிரித்தானியாவின் Cardiff பகுதியில் ஒரு மனைவி பதினாலு வய்துப் பெண்ணாக மாறி கணவனை காவற்துறையிடம் மாட்டவைத்துள்ளார். கணவன் ஜொள்ளுத் திலகம். அவர் வலயத்தில் (Internet) அதிக நேரம் செலவிடுவது மனைவிக்கு சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டது. அவரது கணனியைப் பார்த்திருக்கிறார் அவர் அதில் பெண்களுடன் சல்லாபிப்பதை கண்டு பிடித்து விட்டார். கணவன்David Roberts தனது கணனியில் BearShare என்னும் சமூக இணையத் தளத்தில் இளம் பெண்களுடன் தகாத வர்த்தைப் பிரயோகம் செய்தல் உடலுறவுக்கு அழைத்தல் போன்ற சில்மிஷங்களைச் செய்வதை மனைவி கண்டு பிடித்து விட்டார் மனைவி Cheryl Roberts. ஒரே வீட்டில் இருவரும் வேறு வேறு கணனிகளில் மனைவி ஒரு 14வயதுப் பெண்ணாக தனனை அரட்டை அரங்கில் தனது கணவனுக்கு அறிமுகம் செய்து கொண்டார். கணவன் தன்னை Corky என்னும் பெயரில் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.
தனது மனைவி என்று அறியாமலே தனனுடன் உடலுறவிற்கு வரும்படி14 வயதுப் பெண்ணாக நடித்த தன் மனைவியை அழைத்தார் David தனது பொய்ப் பெயரான Corky ஆக. மனைவி சும்மாவிடவில்லை தனது கணவரின் கணனியை காவற்துறையிடம் ஒப்படைத்தார். அத்துடன் சிறியவர்களுக்கு எதிராக துர் நடத்தையில் ஈடுபடுவோரைத் கண்காணிக்கும் பிரிவினரிடமும் முறையிட்டார்.
இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் மனைவியின் வயது 61 கணவனின் வயது 68.
அவரின் வலைக்குள் இதுவரை எப்பெண்ணும் விழாததால் அவர் நீதிமன்றத்தின் கடும் தண்டனையில் தப்பித்துக் கொண்டார். அவருக்கு மூன்று ஆண்டு சமூக சேவைப் பணி செய்யும்படி நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது.
சரத் பொன்சேக்காவால் கலக்கமடைந்துள்ள இந்தியா.
இலங்கையின் ஒரு நல்ல நண்பனாக இருக்க இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து இந்தியா முயன்றுவருகிறது. அதற்க்காக பல விட்டுக் கொடுப்புக்களை இலங்கைக்கு இந்தியா செய்து வந்தது. அந்த விட்டுக் கொடுப்புக்கள் தமிழர்களைப் பலிக்கடா ஆக்கிக் கொண்டே இருக்கின்றன.
1977இல் ஆட்சிக்கு வந்த ஜே. ஆர் ஜயவர்த்தனே அரசு இலங்கையை சிங்கப்பூர் ஆக்குகிறேன் என்று அமெரிக்கச் சார்பாக இலங்கயை மாற்றி இலங்கையில் அமெரிக்காவிற்கு சில மறைமுக இராணுவ வசதிகளைச் வழங்க முற்பட்டார். அதில் இருந்து இலங்கையை இலங்கை வாழ் தமிழர்களைப் பாவித்து அவர்களை ஆயுத பாணிகளாக்கி இந்திரா காந்தி அம்மையார் தனது வழிக்குக் கொண்டுவர முயற்சித்தார். அவர் கொல்லப்பட அதன் பின் இந்தியாவில் ஆட்சிக்கு வந்த அரசியல் கற்றுக் குட்டி ராஜீவ் காந்தி ஜே. ஆர் ஜயவர்த்தனேயால் ஏமாற்றப் பட்டு இலங்கைத் தமிழர்களின் பகையாளியாக இந்தியா மாற்றப் பட்டது. ஜே. ஆரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த பிரேமதாசா இந்திய அமைதிப் படையை இலங்கையில் இருந்து வெளியேற்ற விரும்பினார். இதற்காக அவர் விடுதலைப் புலிகளுடன் ஒத்துழைத்தார். இலங்கயின் சரித்திரத்தில் இந்தியாவால் மிகவும் வெறுக்கப் பட்ட ஒரு இலங்கை ஆட்சியாளராக பிரேமதாசா மாறினார். 1971இல்அவரை பதவியில் இருந்து தூக்க இந்தியா பலத்த முயற்ச்சி செய்தது. லலித் அத்துலத் முதலியையும் காமினி திசாநாயக்காவையும் இந்தியா தன் பக்கம் இழுத்து பிரேமதாசாவிற்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை தோல்வியடைந்து இந்தியா மூக்குடைபட்டது. லலித்தும் காமினியும் கொல்லப் பட்டனர். அசைக்க முடியாத ஆளாக உருவெடுத்த பிரேமதாசா பின்னர் தற்கொலைக் குண்டுதாரியால் கொல்லப் பட்டார்.
பிரேமதாசாவிற்குப் பின்னர் இலங்கைக்கு உதவிசெய்து நண்பனாக இருக்கும் முயற்ச்சியில் இந்தியா இறங்கியது. இன்றுவரை சீனாவிற்கும் பாக்கிஸ்த்தானிற்கும் போட்டியாக இந்தியா இலங்கைக்கு உதவி வருகிறது.
இப்போது இந்தியாவிற்கு புதிய தலையிடி. தமது சொற்களை மீறி நடக்கும் ராஜபக்சேக்களைப் பதவியில் இருந்து அகற்ற மேற்குலகம் சரத் பொன்சேக்காவைத் தெரிவு செய்தது. சரத் பொன்சேக்கா பாக்கிஸ்த்தானின் உற்ற நண்பன். அதனால் சரத் பொன்சேக்கா இலங்கைக் குடியரசுத் தலைவராக வருவதை இந்தியா விரும்பவில்லை. ஏற்கனவே இலங்கை மீது சீனாவும் பக்கிஸ்த்தானும் கணிசமான செல்வாக்கு செலுத்தி வருகின்றனர். இதற்காக ரணில் விக்கிரமசிங்கவை தனது துணைக்கு இந்தியா அழைக்கிறது. அமெரிக்கா ரணில்-சரத் கூட்டணியை விரும்புகிறது. இந்தியாவின் கையில் உள்ள சீட்டு மலையக்த தமிழர்களின் வாக்கு. ஆனால் அது துருப்புச் சீட்டு அல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு அணியில் இணைவதாயின் அந்த அணி தமிழர்களுக்கு சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய வேண்டும் அதனால் அந்த அணி சிங்களத் தீவிர வாதிகளின் எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டும். ரணில் அணியில் இந்தியாவின் வற்புறுத்தலுக்கு அமைய தமிழர் தேசியக் கூட்டமைப்பு சேர்ந்தால ரணில் மீண்டும் புலிகளுக்கு உயிர் கொடுப்பார் என்று சிங்களத் தீவிரவாதிகள் பிரச்சாரம் செய்வர். இருக்கும் நிலைமையப் பார்த்தால் இந்தியா இலங்கையின் அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு மும்முனைப் போட்டியை ஏற்படுத்த விரும்புகிறது போல் தெரிகிறது. ரணில், சரத், மஹிந்த ஆகிய மூவரும் தேர்தலில் போட்டியிடுவதை இந்தியா விரும்புகிறது போல் இருக்கிறது. இதனால் போர் வெற்றிக்கான அறுவடை வாக்குக்களை சரத்தும் மஹிந்தவும் போட்டி போட்டுக் கொண்டு பகிர்ந்து கொள்ள ரணில் தனது கட்சியான யூஎன்பியின் வழமையான வாக்கு வங்கியையும் தமிழர்களினது வாக்குக்களையும் பாவித்து வெற்றி பெறுவார் என இந்தியா கணக்குப் போடலாம்.
தேர்தலில் தான் தோல்வியுறும் நிலை ஏற்படுமாயின் ராஜபக்சே குடும்பம் இலங்கையை இன்னொரு மியன்மார்(பர்மா) ஆக மாற்றலாம். அது இந்தியாவிற்கு தலையிடி அல்ல தலைதெறிக்கும் நிலையாகக் கூட இருக்கலாம்.
Thursday, 12 November 2009
கே. பத்மநாதன் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் நடுவில்
இந்திய அமைதிப் படையின் கொலைகள் கொள்ளைகள் கற்பழிப்புக்கள் போன்ற அட்டூழியங்கள் தாங்க முடியாமல் அவர்களை வெளியேற்ற விடுதலைப் புலிகள் பெரும்பிரயத்தனம் செய்தனர். அப்போது இலங்கையின் குடியரசுத் தலைவராக இருந்த ரணசிங்க பிரேமதாச இந்தியப் படை இலங்கையில் இருக்கக்கூடாது என்று சிங்களத் தேசிய வாதிகளால் நெருக்கடிக்குள்ளானார். அவரும் இந்தியப் படையை வெளியேற்றுவதையே விரும்பினார். இதனால் இந்தியப் படைகளை வெளியேற்ற பிரேமதாச புலிகளுக்கு உதவிதாகவும் அவரால் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் பணம் போன்றவை வழங்கப் பட்டதாகவும் உறுதியாக நம்பப் படுகிறது.
ராஜீவ் காந்தி கொலையில் இலங்கையும் பங்களிப்புச் செய்ததா என்பதற்கு இந்தியா விடைகாணத் துடிக்கிறது. இலங்கைத் தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு இந்தியா எந்த அளவு உதவி செய்தது என்பதை அறிய இலங்கை தவிக்கிறது. இதற்கு அகப் பட்டவர் கே. பத்மநாதன். இந்த இரகசியங்கள் விடுதலைப் புலிகளின் உயர் மட்டத்தினருக்கு மட்டுமே தெரிந்த பரம இரகசியம். விடுதலைப் புலிகளின் தளபதி கிட்டுவை நடுக்கடலில் வைத்து இந்தியா கைது செய்ய முயன்றதும் இதற்காகவே.
இதுவரை கே. பத்மநாதனை இந்தியாவிறகு அனுப்பவோ அல்ல இந்திய உளவுத்துறையை பத்மநாதனை விசாரிக்க அனுமதித்ததாகவோ தகவல் இல்லை. ஆனால் பாக்கிஸ்த்தானியர் இலங்கை வந்து பாக்கிஸ்த்தானியாவில் நடந்த இலங்கைத் துடுப்பாட்டக் காரர்கள் மீதான தாக்குதலுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்பது பற்றித் தகவல்கள் வெளிவந்தன. பத்மநாதனை விசாரிப்பது சம்பந்தமாக இலங்கை இந்தியாவிடையே முரண்பாடு ஏற்பட்டதா?
இந்தியாவிறகு பத்மநாதனை அனுப்பினால் அவர் நீதி மன்றத்தில் நிச்சயம் நிறுத்தப் பட்டே ஆகவேண்டும். அப்படி நிறுத்தினால் அவரை கட்த்தியதின் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளிவந்து விடும். அவருக்கு இலங்கையில் செய்த சித்திரவதைகள் வெளிவரும். இதற்க்காகத்தான் அவரை இலங்கை இந்தியாவிற்கு அனுப்புவதை இலங்கை தவிர்க்கிறது.
இந்திய உளவுத் துறை பத்மநாதனை இதுவரை விசாரிக்கவில்லை என்பது நம்பமுடியாத ஒன்று. அவரை விசாரித்ததில் கிடைத்த உண்மைகள் அதிகாரத்தில் இருந்தோருக்கும் இருப்போருக்கும் சாதகமானதாக இல்லாததால் அவர் விசாரணை தொடர்பாக வெளியிடவில்லையா?
பத்மநாதனை இதுவரை இலங்கை நீதிமன்றில் நிறுத்தாது ஏன்? அவரை இதுவரை எந்த மனித உரிமைகள் அமைப்போ அல்லது சட்டத்துறையினரோ சந்திக்காதது ஏன்? அவருக்காக எவரும் ஆட்கொணர்வு மனு தாக்குதல் செய்யாதது ஏன்.? அவரின் தடுத்து வைப்பு சர்வ தேச மனித உரிமை நியமங்களுக்கு எதிரானது என்பது பற்றி எவரும் கருத்து தெரிவிக்காதது ஏன்? தமிழ்த் தேசியத்துக்கு சார்பானவர்கள் கூட அவரை மறந்துவிட்டனரா?
பத்மநாதனுக்குப் பின்னால் பல மர்மங்கள்! என்று வெளியாகும்?
Wednesday, 11 November 2009
திரைக்கு வருகிறது: உலகின் மிக நீண்ட திரைப்படம்
நீண்ட திரைப்படம் என்றவுடன் எமக்கு நினைவுக்கு வருவபவை சேரனின் ஆட்டோகிரF உம், டைட்டானிக் திரைப் படங்களும்தான். உலகின் மிக நீண்ட திரைபடம் அடுத்த ஆண்டு ஜனவரியில் திரைக்கு வருகிறது. நீட்சி என்றால் சும்மா சாதாரண நீட்சியல்ல. மெகாசீரியல் நீட்சி. மொத்த நேரம் 150 மணித்தியாலங்கள். ஜெரார்ட் கோரண்ட் என்பவர் வழங்கும் இத் திரைப்படம் பார்த்து முடிக்க ஒருநாளைக்கு எட்டு மணித்தியாலப்படி 19 நாட்களுக்கு மேல் எடுக்கலாம். அது மட்டுமல்ல இது ஒரு சத்தம் இல்லாத படம். படத்தின் பெயர் சினிமேற்றன்.
பிரான்சில் தயாரிக்கப் பட்ட இப்படம் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெறவிருக்கிறது. ஒவ்வொரு கட்டமும் மூன்று நிமிடங்களும் இருபது விநாடிகளும் கொண்ட இரண்டாயிரத்து ஐநூறு கட்டங்களைக் கொண்டது இப்படம்.
மிகவும் போரடிக்கும் படமாக இது அமையும் என்கிறார்கள்.
இத்திரைப் படம் பற்றிய பத்திரிகைக் குறிப்புக்கள்:
Each gets exactly three minutes and 25 seconds to express themselves – silently– on the themes of life,
The director’s favourite involves a seven-month-old baby being... babylike. But the scene, Courant excitedly claims, “shows the whole spectrum of human emotions”. In 1985, he filmed
Some do absolutely nothing, including the actress Nicoletta Braschi who sits “like a statue”.
Tuesday, 10 November 2009
ரணில் போடும் நிபந்தனைகள் பற்றி ஒரு பார்வை
இலங்கை அரசியலுக்கு அவரது மாமனார் ஜே ஆர் ஜயவர்தனேயால் அறிமுகம் செய்யப் பட்டவர் ரணில் விக்கிரமசிங்க. இவர்தான் இலங்கையில் பிரதான அரசியல் கட்சியான யுஎன்பி (UNP)எனப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர். இவர் தலைமையில் இதுவரை ஐக்கிய தேசியக் கட்சி எதனையும் சாதிக்கவில்லை. UNP ஐ அதன் குடும்ப ஆதிக்கங்களுக்காக Uncle Nephew Party என்று மற்றக் கட்சிகளால் கிண்டல் செய்யப்படுவது உண்டு. சிலர் சிங்களத்தில் ஒவுன்கே நாதாகே பக்சய - உங்கள் உறவினர்களின் கட்சி என்றும் கிண்டல் அடிப்பர்.
இப்போது போரில் வெற்றியடைந்த(?) ராஜபக்சே குடும்பம் சிங்கள் மக்கள் மத்தியில் பெரிய செல்வாக்குப் பெற்றிருப்பதாக கூறப் படுகிறது. இதனால் பாராளமன்றத் தேர்தல் குடியரசுத் தலைவர் தேர்தலை உடன் நடத்த ராஜபக்சே குடும்பம் தீர்மானித்தது. அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலில் மஹிந்த ராஜபக்சே எதிர்த்து ரணில் போட்டியிட்டால் அவர் தோல்வி அடைவது நிச்சய்ம்.
போர் வெற்றி மமதையும் சீன ஆதரவும் இலங்கையை ஆளும் ராஜபக்சே குடும்பத்தை மற்ற நாடுகளினது சொற் கேட்காமல் நடத்தத் தூண்டியது. இதனால் டெல்லிக்கும் வஷிங்டனுக்கும் ரணில் ஒரு செல்லப் பிள்ளையானார். ராஜபக்சேயின் பெரும் சொத்து போர் வெற்றி. அதில் பெரும் பங்கு சரத் பொன்சேகா என்னும் படைத்தலைவர்ருக்கு உரியது என்று பலரும் கருதுகிறார்கள். இதை விரும்பாத ராஜபக்சே குடும்பம் சரத் பொன்சேக்காவை ஓரம் கட்டத் தொடங்கியது. அதன் உச்சக் கட்டமாக அண்மையில் நடந்த இலன்கைப் படைகளின் 60-ம் ஆண்டு விழாவில் சரத் பொன்சேக்கா ஆற்றிய உரையை அரச ஊடகங்கள் முற்றாக இருட்டடிப்புச் செய்தன. அதிருப்தி அடைந்தார் சரத் பொன்சேக்கா.
அமெரிக்க மாமா சரத் பொன்சேக்காவின் அதிருப்தியைச் சாதகமாக்க எண்ணினார். சரத்-ரணில் கூட்டணியை உருவாக்கினார். இப்போது சரத் பொன்சேக்கா எதிர்க் கட்சிகளின் கூட்டணியின் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப் படுவாதாகத் தகவல்கள் வருகின்றன. இது ரணிலைச் சற்று சிந்திக்க வைத்திருக்கிறது. ரணிலுக்கு முன்னால் நல்ல உதாரணம் இருக்கிறது. அதுதான் சந்திரிகா பண்டாரநாயக்கா. அவரது குடும்பச் சொத்தாக சிறிலாங்கா சுதந்திரக் கட்சியை அவர் கருதினார். இரு முறை குடியரசுத் தலைவராக இருந்தவர் சந்திரிக்கா. இலங்கையின் அரசியல் அமைப்புப்படி எவரும் மூன்றாவது முறையாக குடியரசுத் தலைவை பதவிக்குப் போட்டியிட முடியாது என்பதால் மூன்றாம் முறை மஹிந்த ராஜபக்சேயை தனது கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியடையச் செய்தார். ஆனால் மஹிந்த சந்திரிக்காவை முற்று முழுதாக அரசியல் செல்லாக் காசு ஆக்கிவிட்டார். இதே கதி தனக்கும் ஏற்படக் கூடாது என்பது ரணில் விக்கிரமசிங்கவின் எதிர்பார்ப்பு. அதற்காக அவர் முன்னாள் படைத் தளபதி சரத் பொன்சேக்காவை எதிர்க் கட்சிகளின் கூட்டணிசார்பில் நிறுத்த அவர் சில நிபந்தனைகளை விதிக்கிறார்:
- தொலையடா குடியரசுத் தலைமையை: சரத் பொன்சேக்கா குடியரசுத் தலைவராகப் போட்டியிட்டு வென்ற பின் குடியரசுத் தலைவர் முறைமையை நாட்டில் இருந்து ஒழித்துக் கட்டவேண்டும். ( சரத் தனக்கு தானே குழிபறிக்க வேண்டும். எந்த மடையன் இதற்கு ஒத்துக் கொள்வான்? பிறகு சரத் பொன்சேக்கா யார்?)
- காபந்து அரசாங்கம்: சரத் பொன்சேக்கா குடியரசுத் தலைவராகப் போட்டியிட்டு வென்ற பின் ஒரு காபந்து அரசு அமைத்து அதற்கு பிரதம மந்திரியாக ரனில் விக்கிரம சிங்கவை நியமிக்க வேண்டும்.
- தமிழர் பிரச்சனைத் தீர்வு: தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மந்திரிப் பதவிகள் கொடுத்து தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணப் படவேண்டும். ஏற்கனவே கருணாவிற்கு மந்திரிப்பதவி கொடுத்தாகி விட்டது. தமிழர் பிரச்சனை தீர்ந்ததா? மந்திரிப் பதவியால் பிரச்சனை தீர்ந்து விடக்கூடிய பிரச்சனையா தமிழர் பிரச்சனை. ரணில் சாதுரியமாக சிங்கள மக்கள் கெட்ட வார்த்தை எனக் கருதும் "அதிகாரப் பரவலாக்கல்" என்பதைப் பற்றியே குறிப்பிடவில்லை. எவன் சொன்னான் தமிழர் பிரச்சனைக்கு அதிகாரப் பரவலாக்கல்தான் தீர்வு என்று?
- ஜேவிபி இற்கு மந்திரிப் பதவிகள். தம்மைக் கம்யூனிஸ்ட்டுக்கள் என்று கூறும் தீவிர பேரினவாதக் கட்சியான ஜனதா விமுக்திப் பெரமுனைக்கு சரத் பொன்சேக்கா மந்திரிப்பதவிகள் கொடுப்பதாக் முன்கூட்டியே அறிவிக்க வேண்டுமாம். ஜேவிபீ தாம் பதவிக்காக ஓடும் கட்சி அல்ல என்கிறார்களே. அந்த தியாகிகளுக்கு ஏன் பதவிகள்?
- 17-ம் திருத்தம்: இலங்கை அரசியல் அமைப்பிற்கான 17வது திருத்தத்தை அமூல் படுத்த வேண்டும். இதன்படி அரசியல் அமைப்புச் சபை உருவாக்கி அச்சபை பிரதம நீதி அரசர், தேர்தல் ஆணையாளர், சட்டமா அதிபர், காவற்துறை மாஅதிபர் ஆகிய முக்கிய பதவிகளுக்கு நியமனம் செய்யும். பிறகு யார் நாட்டை நடத்துவது?
வென்று கொடுத்து விட்டு விலகுவது தான் சரத் பொன்சேக்காவின் வேலையா?
Facebook இல் பெண்ணைத் தொடர்ந்தவருக்கு வாழ்நாள் தடை
பிரித்தானியாவின் மன்செஸ்ரர் பகுதியில் 20 வயதான கல்லூரி மாணவிக்கு நாளொன்றுக்கு 30 தகவல்கள் அனுப்பித் தொல்லை கொடுத்தவர் வாழ் நாளில் அப்பெண்ணிடம் தொடர்பு கொள்வதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளார். ஜேசன் சிமித் என்பவர் அலெக்ஸ்சாண்ரா ஸ்காலெற் என்னும் பெண்ணை விரும்பினார். அவரது விடுப்பத்திற்கு அவர் மறுத்ததால் அவருக்கு மிரட்டல் தகவல்களை அனுப்பிக்கொண்டே இருந்தார். உன் முகத்தை கத்தியால் சீவுவேன், உன் தாயைக் கற்பழிப்பேன், தந்தையைக் கொல்வேன் எனப் பலதரப்பட்ட மிரட்டல்கள் ஜேசன் சிமித்தால் விடுக்கப் பட்டது. அவரது தொடர்புகளை அலெக்ஸ்சாண்ரா ஸ்காலெற் துண்டித்த போதும் அவர் வேறு வேறு விதமாக 40 வகைகளில் புதுப் புது கணக்குகளைத் திறந்து அலெக்ஸ்சாண்ரா ஸ்காலெற்றை மிரட்டிக் கொண்டே இருந்தார். ஆரம்பத்தில் அலெக்ஸ்சாண்ரா ஸ்காலெற்றின் தொலைபேசிக்கு நாளொன்றிற்கு 30 தடவை ஜேசன் சிமித்தால் அழைப்புக்கள் விடுக்கப் பட்டது.
அலெக்ஸ்சாண்ரா ஸ்காலெற் எல்லாவற்றையும் பொறுக்க முடியாமல் நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் ஜேசன் சிமித்திற்கு ஒருவருட ஒந்திவைக்க்ப் பட்ட சிறைத்தண்டனை விதித்து வாழ்நாளில் அப்பெண்ணுடன் தொர்புகொள்ளக் கூடாது என்று தடையும் விதித்ததுடன் அவரை மனநல சிகிச்சைக்கு உட்படுத்தும் படியும் பணித்தது.
ஒத்திக்கு ஒத்தி நெத்திக்கு நெத்தி - பக்சராஜா சேக்காபொன்னா
பல கோடி செலவழிச்சு
பல்லாயிரம் சாகடிச்சு
பாலர்களைச் சிதறடிச்சு
போரை வென்றவன்
நான்தாண்டா பக்சராஜா
ஒத்திக்கு ஒத்தி வாறியாடா
நெத்திக்கு நெத்தி மோதுவோமா
பதர்ப் பயலே பக்சராஜா
சந்திரிக்காவை ஒரம் கட்டி
ரத்வத்தைகளை நாறடிச்சு
சுதந்திரக் கட்சியை சொத்தாக்கி
குளறுபடி செய்தவனே பக்சராஜா
என்கிட்டே மோதிறியே பக்ச ராஜா
ஒத்திக்கு ஒத்தி வாறியாடா
நெத்திக்கு நெத்தி மோதுவோம்டா
பதர்ப் பயலே பக்சராஜா
கெட்டவன் நீ சுட்டவன் நீ
கேவலமானவனே பக்சராஜா
என்னெண்டு நினைச்சாயடா பக்சராஜா
மம பெல்லக் கப்பனவா பக்சராஜா -- (see below)
என்கிட்டே மோதிறியே பக்ச ராஜா
ஒத்திக்கு ஒத்தி வாறியாடா
நெத்திக்கு நெத்தி மோதுவோம்டா
பதர்ப் பயலே பக்சராஜா
பொய்யடிச்சு புளுகடிச்சு
சரணடைய வந்தவங்களைச் சாகடிச்சு
போரிலே வென்றவன் நாண்டா பக்சராஜா
ஒயா நிக்காங் ஹிட்டியா பக்சராஜா
என்கிட்டே மோதிறியே பக்ச ராஜா
ஒத்திக்கு ஒத்தி வாறியாடா
நெத்திக்கு நெத்தி மோதுவோம்டா
பதர்ப் பயலே பக்சராஜா
===
அரும்பத விளக்கம்
மம பெல்லக் கப்பனவா - நான் கழுத்து அறுப்பேன்
ஒயா நிக்காங் ஹிட்டியா - நீ சும்மா இருந்தாய்
Monday, 9 November 2009
Facebook மோகத்தால் பிடிபட்ட திருடன்
அமெரிக்காவில் உள்ள பெனிசிலேவினியா மாநிலத்தில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த திருடன் தந்து விபரீத ஆசையால் பிடிபட்டான்.
திருடச் சென்றவன் அகப்பட்ட இரு விலை உயர்ந்த வைரமோதிரங்களைச் சுருட்டிக் கொண்டான். அத்துடன் நிற்கவில்லை வீட்டில் இருந்த கணனியைக் கண்டதும் அவனுக்கு தனது Facebook பக்கத்தைப் பார்த்தால் என்ன என்ற ஆசை வந்து விட்டது. தனது பாவானயாளர் பெயரையும் கடவுச் சொல்லையும் (user name & password) பதிந்து தனது Facebook பக்கத்திற்கு சென்று அங்கு சில நேரம் செலவிட்டான் ஆனால் முக்கியமான ஒன்றை மறந்துவிட்டான். செல்லும் போது வெளியேறவும் ( lock out) என்பதைச் சொடுக்காமல் சென்றுவிட்டான்.
வீடுவந்து பார்த்தவர்கள் அவனது Facebook பக்கதில் உள்ள சுயதகவல் மூலம் திருடன் பற்றிய தகவல்களை காவல் துறைக்குக் கொடுத்ததால் கவற்துறையினர் அவனை இலகுவாகக் கைது செய்தனர்.
வட்டுக் கோட்டைத் தீர்மான போர்வையில் ஊடுருவும் உளவாளிகள்
உலகின் பல பகுதிகளிலும் இப்போது வட்டுக்கோட்டைத் தீர்மானம் தொடர்பாக கருத்து கணிப்பு வாக்கெடுப்புக்கள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்வாக்கெடுப்பு கட்சி சார்பற்றவர்களால் நடாத்தப் படவேண்டும் என்று வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் நினைப்பதால் புதியவர்கள் இதில் ஈடுபடுத்தப் படுகின்றனர்.
வட்டுக் கோட்டைத் தீர்மானம்.
1976-ம் ஆண்டு மே மாதம் 14ம் திகதி யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் உள்ள பண்ணாகம் என்னும் இடத்தில் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் அறிஞர்களும் ஒன்று கூடி இலங்கைத் தமிழர்களுக்கு தனியான அரசு ஒன்று அமைக்க எடுத்த தீர்மானமாகும். இதைக் காண இங்கு சொடுக்கவும்: வட்டுக்கோட்டை.
உடுருவிய உளவாளிகள்
அண்மையில் தொலைக் காட்சி ஒன்றில் தோன்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள் புலம் பெயர்ந்த மக்களின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது தமக்குப் பைத்தியம் பிடித்துவிடும் என்றும் இங்கிருப்பதிலும் பார்க்க(ஐரோப்பா) இலங்கையில் சிங்களவனி சிறையில் இருக்கலாம் என்றார். அந்த அளவிற்கு ஐரோப்பவில் உளவுத்துறைகள் கைவரிசையைக் காட்டத் தொடங்கிவிட்டன.
எண்பதுகளின் முற்பகுதியில் பல குழுக்கள் தனி ஈழம் என்ற குரலுடன் உருவாகியது போல் வெளிநாடுகளில் பல குழுக்கள் உருவாகுவதும். ஏற்கனவே இருக்கும் தமிழ் அமைப்புக்களில் யார் உண்மையான தமிழின உணர்வாளர் யார் உளவாளர் என்று அறிய முடியாத நிலை தமிழர்காள் வாழும் வெளிநாடுகளில் உருவாகிவிட்டது.
தமிழர்களின் ஆயுத பலத்தை மழுங்கடித்த ஆரிய-சிங்களக் கூட்டமைப்பு தமிழர்களின் பலம் புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளில் மையங் கொண்டிருப்பதை உணர்ந்து கொண்டு அங்கு தமது கவனத்தை திருப்பியது. பிரித்தானியாவிற்கு மட்டும் மூவர் கொண்ட நூறு குழுக்கள் அனுப்பப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது. வட்டுக்கோட்டை தீர்மானவாக்கெடுப்பில் தீவிர மாக செயற்படும் ஒருவர் தமிழர் போராட்டம் தொடர்பாக ஒரு நூலை வெளியிட்டுள்ளார். அந்நூலின் அறிமுகம் என்ற போர்வையில் அவர் ஒரு பிரித்தானியத் தொலைக்காட்சியில் தோன்றினார். அவர் தனது புத்தகம் எழுதுவதற்கு டெல்லி சென்று பல இந்திய அதிகாரிகளை நேர்காணல் செய்ததாக தெரிவித்தார். இலங்கைத் தமிழர் ஒருவர் டெல்லி சென்று அதிகாரிகளை நேர்காணல் செய்வது என்பது இயலாத காரியம். இவருக்கு மட்டும் எப்படி அது சாத்தியமானது. இவர் எழுதிய புத்தகம் வர்த்தக ரீதியில் வெற்றி பெறுவது என்பது அவர் புத்தகத்தைப் பார்க்கும் போது சாத்திய மற்றது என்பது புலப்படும். இருந்தும் இவர் இதைச் செய்கின்றார் என்பதால் இவர் பின்னால் ஒரு அமைப்பு இருக்கிறது என்று ஊகிக்கலாம். இவர் தான் இப்புத்தகத்தைப் பற்றி தொலைக்காட்சியில் குறிப்பிடும்போது இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்திருந்தால் தமிழர்கள் பிரச்சனை தீர்த்திருக்கும் என்று குறிப்பிட்டார். இவர் இப்படி குறிப்பிட்டது இந்திய அமைதிப்படை யாழ்ப்பாணம் மருத்துவ மனைக்குள் புகுந்து அங்கு வேலை செய்து கொண்டிருந்த மருத்துவர்களையிம் தாதிகளையும் கையெடுத்து கும்பிட்டு மன்றாடியதையும் பொருட்படுத்தாமல் சுட்டுக் கொன்ற நினைவு தினத்தன்று. இந்தியப் படை தீர்க்க வந்ததா தமிழர்களைத் தீர்த்துக் கட்ட வந்ததா என்பது நாம் யாவரும் அறிவோம். இந்தியா செய்த அட்டுழியங்கள் இலங்கை சுதந்திரம் அடைந்த நாட்களில் இருந்தே நடக்கின்றன.
தமிழர்கள் அரசியல் கட்சி அடிப்படையில் இரு பெரும் கட்சிகளாகப் பிரிந்து நின்றனர். இந்தியத் தமிழர்கள் தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் கீழும் இலங்கைத் தமிழர்கள் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் கீழும் செயற்பட்டனர். இவற்றின் தலைவர்களாக முறையே செ. தொண்டமானும் ஜி. ஜி. பொன்னம்பலமும் இருந்தனர். சிங்கள ஆதிக்கம் தமிழர்கள் மீது அதிகரித்து வருவதை உணர்ந்த பொன்னம்பலம் அவர்கள் தமிழர்களை ஒரு பலம் வாயந்த நிலைக்கு கொண்டுவரும் முகமாக தோட்டத் தொழிலாளர் காங்கிரசையும் இலங்கைத் தமிழ் காங்கிரசையும் ஒன்றாக இணைக்கும் திட்டத்தை தொண்டமானிடம் முன்வைத்தார். இந்த ஆலோசனை தொண்டமானுக்குப் பிடித்திருந்தாலும் அவர் இதைப்பற்றி அப்போது இந்தியப் பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு அவர்களிடம் ஆலோசனை கேட்டார். பேரினவாதியான நேரு தமிழர்கள் ஒரு பலமான சக்தியாக இலங்கையில் உருவாகுவதை விரும்பாமல் நீ பெரும்பான்மை சமூகமான சிங்கள சமூகத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்று பணித்தார். தொண்டமானும் அதையே ஏற்றுக் கொண்டு தான் பெரும்பான்மை இனத்துடன் ஒத்துழைக்கப் போவதாக பொன்னம்பலத்திடம் தெரிவித்தார். இதனால் இலங்கைத்தமிழர்கள் மூன்றாந்தர நிலைக்குத் தள்ளப்படுவதால் பொன்னம் பலம் மிக ஆத்திரம் அடைந்தார். இப்போது சிங்களவர் விழித்துக் கொண்டனர். இரு தமிழ் பிரிவுகள் பின்னர் ஒன்றிணைந்து பெரும் சக்தியாக உருவெடுப்பதைத் தடுக்க இந்தியத் தமிழர்களின் வாக்குரிமை பறிக்கும் சட்டத்தை பாராளமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்க்க வேண்டும் என இலங்கைத் தமிழ் காங்கிரசில் இருந்து எஸ் ஜே வி செல்வநாயகம் தலைமையில் ஒரு பிரிவு பொன்னம்பலத்திற்கு எதிராக எழுந்தது. அவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியை உருவாக்கினர். இந்தியத் தமிழர்களின் வாக்குரிமை போனது. இலங்கைத் தமிழர்கள் இரு பிரிவாகினர். இத்தனைக்கும் காரணம் அந்த ஆரியப் பேய்கள்.
Sunday, 8 November 2009
சரத் பொன்சேக்கா விசாரணை - அமெரிக்க நாடகமா?
இலங்கையைச் சீனப் பிடியில் இருந்து விடுவிக்க அமெரிக்கா முயல்கிறது. சரத் பொன்சேக்காவை விசாரிக்க அமெரிக்கா எடுத்த முயற்ச்சியும் அதை அவர் தவிர்த்து இலங்கைக்கு பறந்ததும் அவர்மீதான சிங்கள மக்களின் நம்பிக்கையையும் பற்றையும் மேலும் அதிகரித்துள்ளது. இப்படி ஒரு செல்வாக்கை உருவாக்கத்தான் அமெரிக்கா சரத் பொன்சேக்காவை விசாரிப்பது என்ற நாடகம் ஆடியதா? அவர் அமெரிக்கவில் இருந்து பறந்த பின்னர் தொடர்ந்து அவரிடம் இருந்து எப்படித் தகவல் அறிவது என்றோ அல்லது அவர் அமெரிக்க உள் துறையுடன் ஒத்துழைக்காததால் அவரது அமெரிக்க வதிவிட உரிமை பறிக்கப் படும் என்றோ அமெரிக்கத் தரப்பில் இருந்து எதுவும் தெரிவிக்கப் படவில்லை.
சரத் பொன்சேக்கா அமெரிக்காவில் இருந்து வந்தவுடன் ராஜபக்சே சகோதரர்கள் சரத் பொன்சேக்காவிற்குப் பாதுகாப்பு அதிகரிப்பது என்ற போர்வையில் அவருக்கு கஜபா படையணியினரை (Gajaba Regiment) அவரைச் சுற்றி வளைத்துவிட்டனர். அவருக்கு இதுவரை சிங்க படையணியினர்(Singhe Regiment) பாதுகாப்பு வழங்கி வந்தனர். அதை அகற்றும் படியும் உத்தரவிடப் பட்டது. ஆனால் சரத் சிங்கப் படையணியை தொடர்ந்து தனக்குப் பாதுகாப்பு வழங்கும்படி உத்தரவு இட்டுள்ளார். இப்போது சரத்தைச் சுற்றிவர இரு ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட படையணிகள்! அதுமட்டுமல்ல சரத்திற்கு சார்பான படையணிகளும் இருக்கின்றன என்பதும் மிகவும் கவனிக்கப் படவேண்டியது. இப்போது கஜபா படையணி சரத்தின் நடவடிக்கைகளை உளவு பார்க்கிறது.
சரத் பொன்சேக்கா அமெரிக்காவில் இருக்கும்போதே அவர் யூஎன்பி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடன் செய்மதி காணொளித் தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டுள்ளார். இவர்களுக்கு இடையிலான பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடிவடைந்து அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சரத் பொன்சேக்காவை நிறுத்துவது என்று அமெரிக்க ஆசியுடன் திரைமறைவில் முடிவு செய்யப் பட்டது. இந்த எதிர்க் கட்சிகள் கூட்டமைப்பில் யூஎன்பி, மங்கள சமரசிங்கவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி(மஹாஜன), இலங்கை முஸ்லிக் காங்கிரஸ், மேலக மக்கள் முன்னணி எனப் படும் கொழும்புத் தமிழர் கட்சி ஆகியன இடம் பெறுகின்றன. இது அமெரிக்கா உருவாக்கிய கூட்டணியா?
எதிர் கட்சிகள் என்று பார்த்தால் அதில் யூ என் பி எனப்படும் ஐக்கிய தேசியக் கட்சி மேற்குலக சார்பானது. அமெரிக்கா சரத் பொன்சேக்காவையும் யூஎன்பியையும் இணைத்துவிட்டது. இதனால் சரத் பொன்சேக்காவை சிங்களப் பேரினவாதக் கட்சிகளான ஜனதா விமுக்தி பெரமுனைக்கும் ஜாதிக ஹெல உருமயவுக்கும் அறவே பிடிக்காமல் போகலாம். அதனால் அது தீவிர சிங்களவர்களின் வாக்குகளை சரத்-யூஎன்பி கூட்டணிக்கு எதிராக திருப்பலாம். அடுத்த தேர்தல் மேடைகளில் அமெரிக்கா கடுமையாக அடி படப் போகிறது.
Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...