Saturday, 14 August 2010
பரிதாபகரமான நிலையில் இந்தியா
பறைய ருக்கும் இங்கு தீயர்
புலைய ருக்கும் விடுதலை;
பரவ ரோடு குறவருக்கும்
மறவ ருக்கும் விடுலை;
திறமை கொண்ட தீமை யற்ற
தொழில்பு ரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலேவிடுதலை!
ஏழை யென்றும் அடிமை யென்றும்
எவனும் இல்லை ஜாதியில்,
இழிவு கொண்ட மனித ரென்பது
இந்தி யாவில் இல்லையே
வாழி கல்வி செல்வம் எய்தி
மனம கிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒருதி கர்ச
மான மாக வாழ்வமே!
இப்படியெல்லாம் சுதந்திர இந்தியாவில் நடக்கும் என்று சொல்லி சுதந்திரப் போராட்டத்தில் சகலரையும் இணைத்துக் கொண்டார்கள். சுதந்திரமும் பெற்றுக் கொண்டனர். ஆனால் இன்று நடப்பதென்ன.
பனி கொட்டும் குளிர் பிரதேசங்களில் குடிசைகளில் மக்கள் வாழுகிறார்கள். சிறார்கள் வேலைக்கு அமர்த்தப் பட்டுள்ளார்கள். அங்காடித் தெருவில் உள்ள புடவைக் கடைகளில் வேலை செய்யும் பெண்களை அண்ணாச்சிகள் (ஆண் +ஆட்சி) அறைகிறார்கள். கட்டி வைக்கிறார்கள். இப்படிப் பலவற்றை எழுதிக் கொண்டே போகலாம். வளர்ச்சியடைந்த சமுதாயங்களில் இப்படியெல்லாம் நடக்கிறதா? நகை போடாமல்தன்னும் ஒரு பெண் பகலில் கூட சுதந்திரமாக நடமாட முடியாமா? மொத்த ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள வறியோர் தொகயிலும் பார்க்க அதிக வறியோர் இந்தியாவில் உள்ளனர். சீனாவின் சிறந்த முதல் 50 செல்வந்தர்களினது மொத்தச் சொத்திலும் பார்க்க இந்தியாவின் முதல் 50 செல்வந்தர்களின் சொத்துக்கள் பல மடங்கானது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எவ்வளவு மோசமாக மக்களிடையே பகிரப்பட்டுள்ளது என்பது இதிலிருந்து தெரிகிறது.
சமூக நிலை இப்படி மோசமாக இருக்க இந்தியாவின் பாதுகாப்பு நிலை எப்படி இருக்கிறது. இந்தியா படை பலத்தில் உலகின் நான்காவது இடத்தில் இருக்கிறது.
இந்தியாவின் கிழக்குக் கரை
இந்தியாவின் கிழக்கில் மியன்மார்(பர்மா) சீனாவின் பிடிக்குள் சிக்குண்டிருக்கிறது. அங்குள்ள இந்தியர்களின் தொகை குறைந்து வருகிறது. இந்தியாவின் செல்வாக்கு அங்கு குறைந்து வர சீனாவின் செல்வாக்கு அங்கு அதிகரித்து வருகிறது. இந்து மாக்கடலில் தனது கால்பதிக்க மியன்மாரை பயன்படுத்துகிறது.
இந்தியாவிற்குத் தெற்குத் திசை வாஸ்த்து சரியில்லை
இந்தியாவின் தென் திசையில் இலங்கை இந்தியாவின் கண்களுக்குள் விரல் விட்டு ஆட்டுகிறது. இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்படுவதை தடுக்க இந்தியாவால் எதையும் செய்ய முடியவில்லை. இது பற்றி எல்லையைக் கடந்து செல்லும் மீனவர்கள் கொல்லப்படுவதை இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ணா நியாயப் படுத்துவது போல் பேசினார். எல்லையை கடக்கும் மக்கள் கைது செய்யப்படுவது தான் பொதுவாக இரு நாடுகளுக்கிடையில் நடப்பது வழ்க்கம். இதை கிருஷ்ணாவும் அறிவார். ஆனால் இந்திய மீனவர்கள் இலங்கையால் கொல்லப் படுவதை எதிர்த்து ஒரு விரலைத் தன்னும் தன்னால் அசைக்க முடியாத கையாலாகாத நிலையில் இந்தியா உள்ளது. இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அம்பாந்தோட்டையில் ஒரு பாரிய துறை முகத்துடன் ஆரம்பமாகியுள்ளது. இலங்கையில் சீனாவிற்கு இப்படி ஒரு விட்டுக் கொடுப்பைச் செய்தால்தான் இலங்கையில் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை ஒழிக்க முடியும் என்று இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் கருதினார்கள். மகன் செத்தாலும் பரவாயில்லை மருமகள் தாலி அறட்டும் என்ற இந்திய வெளியுறவுக் கொள்கை. அம்பாந்தோட்டையுடன் சீனா நிற்கவில்லை. முல்லைத் தீவு, காங்கேசன் துறை என்று இந்தியாவிற்கு மிக அண்மையாக வருகிறது சீனா. வர்த்தக அல்லது மீன் பிடி நோக்கத்துடன் கால் பதிக்கும் சீனர்கள் தருணம் வரும்போது இவை படைத்துறை நோக்கங்களுக்கானவையாக மாற்றியமைப்பர். இலங்கையில் உள்ள சீனர்கள் செம்படையினரும் தண்டிக்கப் பட்ட கைதிகளுமே. இப்போது உள்ள இலங்கை அரசு பன்னாட்டு அரங்கில் எதிர் கொள்ளும் சிக்கல்களுக்கு இந்தியாவின் உதவி தேவைப்படுகிறது. இதற்காக சிங்கள ஆட்சியாளர்கள் இந்தியாவின் நண்பர்களாக நடிக்கிறார்கள். இன்று (15-08-2010) இந்தியா சுதந்திர தினம் கொண்டாட இலங்கை அம்பாந்தோட்டைத் துறை முகத்துக்குள் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்தியாவிற்கு தண்ணி காட்டப்படுகிறது.
மேற்கு வாசலில் மட்டும் என்ன வாழுதாம்
இந்தியாவின் மேற்குத் திசையில் பாக்கிஸ்த்தான் இந்தியாவின் நிரந்தரமான மோசமான எதிரி. பாக்கிஸ்த்தான் பல உள்நாட்டுப் பிரச்சனைகளை எதிர் நோக்கினாலும் இந்திய எதிர்ப்பு என்ற வகையில் அது ஒன்றுபட்டு நிற்கிறது. ஒரு அணு ஆயுத நாடு பக்கிஸ்த்தான். அமெரிக்காவுடனும் சீனாவுடனும் நல்ல நட்புறவைப் பேணும் நாடு பாக்கிஸ்த்தான்.
வடக்குத் தடக்குது
வடக்கில் தீபெத்தில் இந்தியாவைத் தாக்கக் கூடிய ஏவு கணைகளை சீனா நிறுத்தி வைத்திருக்கிறது. நேப்பாளத்தில் சீன சார்பு மாவோயிஸ்டுக்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். நேப்பாளிய மன்னாராட்சியின் வீழ்ச்சியுடன் அங்கு இந்தியச் செல்வாக்கும் வீழ்ச்சியடைந்து விட்டது. நேப்பாளத்திற்கு அண்மையில் இந்தியப் பிரதமர் ஒரு சிறப்புத் தூதுவரை அனுப்பினார். அவரை நேப்பாளிய பிரதமர் சந்திக்க மறுத்துவிட்டார். இந்தியச் சிறப்புத் தூதுவர் அங்கு வருவது தனக்குத் தெரியாது என நேப்பாளிய வெளிநாட்டமைச்சர் கூறினார். அது மட்டுமா இப்படி அரசுக்களிடையான் மரபுகளை மீறி நடக்கக்கூடாது என்றும் நேப்பாளிய வெளிநாட்டமைச்சர் கூறி விட்டார். நேப்பாளத்தில் இந்திய நிலை அவ்வளவு கவலைக்கிடமானது.
இந்தியாவிற்குள் சீனப் படை
இந்தியாவில் பெருகிவரும் மாவேயிஸ்ட்டுக்களான நக்சலைட்டுக்கள் இந்தியாவிற்குள் ஒரு சீனப்படையாக செயற்படும் ஆபத்து உண்டு. இந்தியாவின் 40%மான பிரதேசத்தில் 22 மாநிலங்களின் 220 மாவட்டங்களில் நக்சலைட்டுக்களால் ஆபத்து உண்டு. இவையாவும் சீனாவிற்கு அண்மையான கிழக்குக் கரையோரங்களில்தான் அமைந்திருக்கின்றன. 1967-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் உள்ள நக்சல்பாரி என்னும் கிரமத்தில் ஆரம்பித்த இந்த இயக்கம் இப்போது பூதாகரமாக வளர்ந்துள்ளது.
பங்களாதேஸ்
பங்களாதேசையும் சீனா தனது பிடிக்குள் கொண்டு வருகிறது. பங்களா தேசப் போரின் போது இந்தியாவின் சென்னைப் பட்டாளம் முதலில் கைப்பற்றிய துறை முகமான சிட்டகொங் இப்போது சீனாவசம். அந்நியச் செலவாணியைப் பொறுத்தவரை உலக்த்தில் முதலாமிடத்தில் இருக்கும் சீனாவுடன் 159-ம் இடத்தில் இருக்கும் இந்தியாவால் போட்டி போட்டுக் கொண்டு அயல் நாடுகளுக்கு நிதி உதவி செய்து தனது நட்பாக்கிக் கொள்ள முடியாது.
மொத்தத்தில் உள்ளுக்கும் சரி வெளியிலும் சரி இந்தியாவின் நிலை பரிதாபகரமானது.
இலண்டனில் தமிழ்தேசிய வானொலி அங்குரார்ப்பணம்
இலண்டனில் அனைத்துலக உயிரோடை என்னும் வானொலிச் சேவை இன்று சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. பிரித்தானியத் தமிழர் பேரவையைச் சேர்ந்த தனம் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ஆனந்தி சூரியப் பிரகாசமும், தாசியஸ் அவர்களும் உரையாற்றினார்கள்.
இந்த ஒலிபரப்பு இலண்டனில் சிற்றலை வரிசையில் 558(AM)இல் பிரித்தானிய நேரம் மாலை 6.00 மணி முதல் 9.00 மணிவரை ஏற்கனவே ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
Tel:0207 019 75 12 Mobile: 0796 323 11 95
Website: www.ilctamil.com (British Time 6.00pm to 9.00pm) www.spectrumradio.net/radio_stations/ilc_tamil.phtml
Email:
radio@ilctamil.comThis e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Friday, 13 August 2010
குறும்(பு)படம்: இயற்க்கை அனர்த்தங்கள்
சிந்து நதிக்கரை மலர்ந்தோமாம்
தென் பொதிகை மலையிலும் தவழ்ந்தோமாம்
குமரி முனையையும் கடந்தோமாம்
கதிர மலையிலும் கமழ்ந்தோமாம்
பாரெங்கும் ஏன் இங்கு அலைகிறோம்?
மலேசியாவில் ஒரு மானத் தமிழன்
மலேசியாவில் ஒரு மானத் தமிழன்
மாண்பு மிகு துணை முதல்வன்
பீனாங்கு மாநிலப் புதல்வன்
கற்றுயர்ந்த கண்ணியவான்
பேராசான் இராமசாமி
உலகத் தமிழர் தலைவன்
மானத் தமிழன் அவன்
ஈனத் தமிழனல்லன்
கோடானு கோடியாகச்
சொத்துச் சேர்க்கவில்லை
ஈழத்தவரை வைத்து
அரசியல் செய்யவில்லை
புதல்வர்க்கு பதவி கேட்டுக்
காவடியெடுக்கவில்லை
ஈழத் தமிழர் துயர்கண்டு
கொதித்தெழுகின்றான்
மானத் தமிழன் அவன்
ஈனத் தமிழனல்லன்
போர்குற்றம் கண்டு
பொங்கி எழுகின்றான்
உலக மனச்சாட்சியைத்
தட்டிக் கேட்கின்றான்
தேர்தல் கூச்சலல்ல
வாக்கு வேட்டைக்கல்ல
வாய்ச்சவாடல் செய்யவில்லை
உண்ணா விரத நாடகமாடவில்லை
மானத் தமிழன் அவன்
ஈனத் தமிழனல்லன்
மொழி பேசுவோரை
அழிந்தொழிய விட்டு
மொழிக்கு மாநாடு கூட்டி
உமிழ் நீரும் தமிழ் நீரென
தம்பட்டம் அடிப்போரே
மலேசிய மானத் தமிழனின்
கழி நீருக்குத்தன்னும்
நீர் இணையாவீரோ
Thursday, 12 August 2010
பெண்களிலும் பார்க்க ஆண்கள் சிறந்த மேலதிகாரிகள்(Bosses)
மேலதிகாரிகளாக இருக்கும் பெண்களை விட ஆண்கள் மேலானவர்கள் என்று கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது. பெண்களுக்கிடையே எடுத்த கருத்துக் கணிப்பில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் ஆண்களே சிறந்த மேலதிகாரிகள் என்று தெரிவித்துள்ளனர். www.ukjobs.net என்னும் தொழில் வாய்ப்பு இணையத்தளம் நடாத்திய கருத்துக் கணிப்பிலேயே இந்தத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
பல பெண்கள் தங்களின் மேலதிகாரி பெண் என்பதால் தாங்கள் வேலையில் இருந்து விலகியாதாகக் கூறியுள்ளனர். பெண்களின் மதிநுட்பம் சற்றும் குறைந்ததல்ல என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெண்களை சிறந்த மேலதிகாரிகளல்ல என்று சொல்பவர்கள் கொடுக்கும் காரணங்கள்:
1. ஆண்கள் நேரடியாகக் கதைப்பார்கள்
2. ஆண்கள் பணிமனை அரசியலில் பங்கெடுப்பது பெண்களோடு ஒப்பிடுகையில் குறைவு.
3. ஆண்கள் இலகுவாக காரணங்களை புரிந்து கொள்வார்கள்.
4. மற்றவர்களை நச்சரிக்க மாட்டார்கள்.
5. தங்கள் மனோநிலையை(mood) அடிக்கடி மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.
6. தங்கள் வீட்டுப் பிரச்சனையை பணிமனைக்குக் கொண்டு வரமாட்டார்கள்.
7. ஆண்களுக்கு "அந்த மூன்று நாட்கள்" பிரச்சனை இல்லை.
8. பொதுவான விசயங்களைப் பகிர்ந்து கொள்வதில் ஆண்கள் திறமைசாலிகள்.
9. மற்றவர்கள் திறம்பட செயற்பட்டால் ஆண் மேலாதிகாரிகள் தமது பதவிக்கு அச்சுறுத்தல் என்று கருதுவது பெண்களோடு ஒப்பிடுகையில் குறைவு.
10. பெண்களோடு ஒப்பிடுகையில் ஆண்கள் அதிகம் நியாயப்படி நடந்து கொள்வர்.
மேலும் பெண் மேலதிகாரிகளைப் பற்றிய குற்றச் சாட்டுக்கள்:
- கூரிய நாக்குடையவர்கள்.
- போட்டி மனப்பாங்குடையவர்கள்.
- தங்கள் தோற்றம் பற்றி அதிக அக்கறை காட்டுபவர்கள்.
பிரபாகரன் பத்மநாதனை சிறைபிடிக்க முயன்றாரா?
நேற்றைய பதிவின் தொடர்ச்சி - நேற்றைய பதிவைக் காண இங்கு சொடுக்கவும்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளர்
கே பத்மநாதனின் பேட்டி தொடர்பான சந்தேகங்கள்.
- பத்மநாதன்: ஒரு கட்டத்தில் அதிகாரிகள் என்னைப் பார்த்து சிரிக்கத் தொடங்கினர். "உங்களுக்கு தற்போதைய எல்.ரி.ரி.ஈ. பற்றி எதுவும் தெரியாது" என பகிடியாக கூறினர். அவர்கள் சொன்னது சரிதான். பல வருடங்களுக்கு முந்தைய கட்டமைப்புகள் பற்றி மாத்திரமே என்னால் சொல்ல முடிந்தது. 2002 ஆம்ஆண்டுக்கு பின்னரான சூழல் குறித்து எனக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை. அதை அவர்கள் உணர்ந்துகொண்டு என்னை பார்த்து சிரித்தனர்.
சந்தேகம்: நீங்கள் தமது விடுதலை இயக்கத்திற்கு எதிராக நடக்கிறீர்கள் என்றுணர்ந்து உங்களுக்குத் தெரியாமல் பலவற்றை விடுதலைப் புலிகள் உங்களுக்கு மறைத்தார்களா? விடுதலைப் புலிகளைப் பற்றி உங்களிலும் பார்க்க இலங்கைப் புலனாய்வுத் துறைக்கு அதிகம் தெரிந்திருந்தது என்று ஏன் பெருமையுடன் சொல்கிறீர்கள்? இதனால் விடுதலைப் புலிகள் பலவீனமாகவும் அவர்களுக்குள் பல புல்லுருவிகள் இருந்தார்கள் என்றும் சொல்ல முயல்கிறீர்களா? விடுதலைப் புலிகளைப் பற்றி அவதூறான பிரச்சாரம் ஏன்? அவர்களை இப்போது நீங்கள்தான் வழிநடத்தப் போவதாகக் கூறினீர்களே?
- பத்மநாதன்: 2002 ஆம் ஆண்டு சமாதான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு போர் நிறுத்தம் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர், தலைவர் பிரபாகரன் புலிகள் அமைப்பை புதிய வழியில் மீளமைக்க முயன்றார். இவ்விடயங்கள் குறித்து நான் வன்னிக்கு வந்து அவரை சந்திக்க வேண்டும் என அவர் விரும்பினார்.....2001 ஆம் ஆண்டின் செப்டெம்பர் 11 தாக்குதல் உலகின் உலகின் பாதுகாப்பு நிலைவரத்தை மாற்றியிருந்தது. நான் அப்போது இலங்கைக்கு பயணம் செய்யும்' ரிஸ்க்' எடுக்க விரும்பவில்லை....எனவே நான் தயங்கினேன். இது எனது தலைவருக்கு (பிரபாகரனுக்கு) சினமூட்டியது.
சந்தேகம்: பிரபாகரன் கே பத்மநாதனின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டு அவரை கைது செய்து விசாரிக்க முயன்றாரா? அதற்காகத்தான் பத்மநாதனை வன்னி வரும்படி அழைத்தாரா? இதை உணர்ந்து தான் பத்மநதன் வன்னி செல்லவில்லையா?
- பத்மநாதன்: அது(பத்மநாதனுக்கு எதிரான) ஒரு சதி. காஸ்ட்ரோ, தமிழ்ச்செல்வன் ஆகியோர் அதன் பின்னால் இருந்தனர். கவலையளிக்கும் விதமாக தலைவர் அதில் ஏமாற்றப்பட்டார். நாம் எம்மை நேரடியாக தற்காத்துக்கொள்ள முடியவில்லை. தலைவர் என்னை ஓய்வெடுக்குமாறு கூறினார். அதனால் நான் ஓய்வுபெற நேரிட்டது. வெளிநாட்டு நிர்வாகங்களை காஸ்ட்ரோ முழுமையாக பொறுப்பேற்றார். எனது விசுவாசிகள் என அவர் கருதிய அனைவரையும் அவர் நீக்கினார். சில மாதங்களுக்குள் ஏறத்தாழ அனைத்தும் மாறின. புலிகளின் விசுவாசமான செயற்பாட்டாளர்கள் பலர் அவர்களின் பதவிகளிலிருந்து முறையற்ற விதமாக நீக்கப்பட்டனர்.
சந்தேகம்: கே பத்மநாதன் இனி தமது விடுதலை இயக்கத்திற்கு சரிவர மாட்டார் என அப்போதே சகலரும் உணர்ந்து விட்டார்களா? உங்களிடமிருந்து படிப்படியாக தமது பன்னாட்டு கட்டமைப்பை மீட்டெடுக்கத்தான் இந்த நகர்த்தல்கள் மேற்கொள்ளப் பட்டதா?
- பத்மநாதன்: இலங்கை புலனாய்வு அதிகாரிகள் என்னுடன் பேச ஆரம்பித்த போது எனக்கு இரு தெரிவுகள் இருந்தன. ஒன்று எதிர்ப்பது, இரண்டாவது ஒத்துழைப்பது. நான் மோதினால் நான் நீண்டகால சிறையை எதிர்நோக்க வேண்டியிருந்திருக்கும். அதனால் யாருக்கும் பலன் இருக்காது. ஆனால் நான் ஒத்துழைத்தால் நான் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வென்றெடுக்கலாம். இது எமது மக்களுக்கு சில சேவைகளையாற்றுவதற்கு வாய்ப்பை வழங்கலாம்.
சந்தேகம்: ராஜபக்சேக்கள் பலதடவை சொல்லிவிட்டார்கள் தாங்கள் கொடுப்பதைப் பெற்று அதன் மூலம் வாழப் பழகிக்கொள்ளுங்கள் என்று. இந்நிலையில் உங்களால் எதை உங்களது மக்களுக்கு பெற்றுக் கொள்ள முடியும். இந்திய விற்பன்னர்(?) கேர்னல் ஹரிகரன் தமிழர்களுக்கு Hobson choice மட்டுமே எஞ்சியுள்ளது என்று சொல்லிவிட்டார். இந்நிலையில் நீங்கள் என்ன சாதிக்கப் போகிறீர்கள்.
(சந்தேகங்கள் இன்னும் வரும்)
Wednesday, 11 August 2010
பத்மநாதன் பேட்டியில் எழும் சந்தேகங்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளர் குமரன் பத்மநாதன் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக எழுதிவரும் ஊடகவியலாளர் டி. பி. எஸ் ஜெயராஜ் என்பவருக்கு ஒரு பேட்டியை அண்மையில் வழங்கியுள்ளார். அவரது பேட்டியில் கூறப்பட்டவற்றில் சில சந்தேகங்கள் எழுந்துள்ளன.
- கே. பத்மநாதன்: நான் கைது செய்யப்பட்டபோது அதிர்ச்சியடைந்தேன். சுமார் ஒரு மணித்தியாலம் பெரும் திகைப்பாக இருந்தது. இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட போதும் கவலையடைந்தேன். ஆனால், நான் கடவுளை நம்புகிறேன். மோசமான நிலை ஏற்படலாம் என அச்சமடைந்த போதிலும் நான் அதிஷ்டசாலி. நான் கைது செய்யப்பட்டமை எனக்கு நன்மையளித்துள்ளது. துன்பப்படும் தமிழ் மக்களுக்கு சேவையாற்ற எனக்கு இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. எமது போராட்டம் இலங்கையிலுள்ள எமது மக்களை குறிப்பாக வன்னியிலுள்ள மக்களை பரிதாபகரமான நிலைக்குத் தள்ளியுள்ளது. இப்போது NERDO (வடக்கு கிழக்கு புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி அமைப்பு) ஊடாக சிறிய வழியிலேனும் என்னால் அவர்களுக்கு உதவ முடிகிறது.
சந்தேகம் -1 கைது செய்யப் பட்ட நீங்கள் ஏன் மலேசிய நாட்டிலோ அல்லது இலங்கையிலோ நீதி மன்றத்தின் முன் நிறுத்தப் படவில்லை. மலேசியாவில் கைது செய்யப் பட்ட நீங்கள் அங்கிருந்து நீதி மன்ற ஆணியின்றி எப்படி இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டீர்கள்? உங்கள் குடும்பத்தினர் ஏன் ஆட்கொணர்வு மனு ஏதும் தாக்கல் செய்யவில்லை?
சந்தேகம் - 2: உங்களைக் கைது செய்தவர்களின் நோக்கம் என்ன என்பதை நீங்கள் இங்கு ஏன் தெளிவு படுத்தவில்லை? உங்கள் பேட்டியின் இப்பகுதியை வாசிக்கும் போது இலங்கையில் அவதிப்படும் தமிழர்களுக்கு நீங்கள் உதவுவதற்கு உங்களைப் பயன்படுத்தப் படுவதாகத் தெரிகிறது. இலங்கையில் கைது செய்யப் பட்டிருக்கும் தமிழ்ப் போராளிகளை இலங்கைஅரசு தனது செலவில் பராமரிக்க விரும்பவில்லை. அவர்களை பன்னாட்டு நிறுவனங்கள் மூலமும் பராமரிக்க விரும்பவில்லை. அப்படிச் செய்தால் போர்குற்றம் தொடர்பான சாட்சியங்கள் வெளிவரும் என்று இலங்கை அரசு அஞ்சுகிறது. ஒரே வழி வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம் பணம் கறந்து அதன் மூலம் கைது செய்யப் பட்டிருக்கும் தமிழ்ப் போராளிகளை இலங்கைஅரசு பராமரிக்க விடும்புகிறது போல் தெரிகிறது. இதற்கு உங்களை அரசு பாவிக்கிறது என்று எமக்கு நினைக்கத் தோன்றுகிறது.
- கே பத்மநாதன்: நான் மிகவும் தயைவுடன் நடத்தப்படுகிறேன். ஆரம்ப நாட்களில் சிலவகை பதற்றம் இருந்தது. ஆனால் நாட்கள் சென்றபின் நம்பிக்கையும் பரஸ்பர மரியாதையும் நிலவுகிறது.
சந்தேகம் - 3 : சரணடையவந்தவர்களைச் சுட்டுக் கொன்றதாகக் கருதப் படும் சிங்கள ஆட்சியாளர்கள் ஏன் உங்களை தயையுடன் நடாத்துகிறார்கள்? யோகி, பாலகுமார், புதுவை இரத்தினதுரை ஆகியோருக்குக் காட்டப் படாத தயை ஏன் உங்களுக்கு காட்டப் படுகிறது.
- கே. பத்மநாதன்: பாதுகாப்புச் செயலாளர் ஏனைய அதிகாரிகளுடன் அமர்ந்திருந்தார். நான் உள்ளே நுழைந்தவுடன் அவர் எழுந்து என்னுடன் கைகுலுக்கிவிட்டு 'பிளீஸ் சிட் டவுண்' என்றார். ஏனைய அதிகாரிகளை எனக்கு அறிமுகப்படுத்தினார். திரு. கோட்டாபய மிக கண்ணியமானவராக இருந்தார்.
சந்தேகம் - 4: கோட்டாபய ராஜபக்சே அவர்கள் பல ஊடகங்களுக்கு அளித்த காணொளிப் பேட்டியைப் பார்த்தவர்கள் எவரும் அவரை கண்ணியமானவராக எண்ணியதில்லை. அவர் அப்படி எதுவும் செய்ததும் இல்லை. குறிப்பாக தமிழ் மக்கள் சம்பந்தமாக அவர் கண்ணியமாக நடந்து கொண்டதே இல்லை. அப்படி இருக்க நீங்கள் ஏன் அவரை கண்ணியமானவர் என்று கூறுகிறார். விருகள் பெற்ற ஊடகவியலாளர் வித்தியாதரனை பயங்கரவாதி என்றும் அவருக்கு ஆதரவாக கதைப்பவர்கள் பயங்கரவாதி என்றும் கொக்கரித்தவர் உங்கள் கண்ணியவான். தமிழர் பகுதிகளில் உள்ள மருத்துவ மனைகள் சட்டபூர்வமாக குண்டு வீசித்தாக்கப்படவேண்டியவை என்று கூறியவர் எப்படிக் கண்ணியவான் ஆனார்?
- கே பாத்மநாதன்: "நுழைவாயிலில் நான் புத்தர் சிலையை கண்டேன், பாதுகாப்பாகவும் அமைதியாகவும் உணர்கிறேன்".....கடந்த ஜுன் மாதம் இலங்கைக்கு வந்த 9 பேர் கொண்ட புலம்பெயர் தமிழர் தூதுக்குழுவொன்றிடமும் நான் இந்த புத்தர் சிலை பற்றி சொன்னேன். எனது வீட்டு சூழல் காரணமாகவும் எனது மனைவியின் மத நம்பிக்கை காரணமாகவும் எனக்கு புத்த வழிபாடு, ஆலயங்கள் பரீட்சியமானவை. எனவே புத்தர் சிலையை கண்டமை உணர்வு ரீதியில் எனக்கு உதவியது. இது தான் உண்மை. அதற்காக அவர்கள் என்னை தாக்க விரும்பினால் அதை செய்யட்டும். நான் புத்தருக்கோ பௌத்தத்திற்கோ எதிரானவன் அல்லன்.
(தொடரும்)
Tuesday, 10 August 2010
ஹைக்கூ கவிதைகள் - விமான நிலைய முத்தம்
பசித்தவன் முன் பழம்
மூன்று மாதம் பிரிந்து சென்றவள்
விமான நிலையத்தில் கொடுத்தாள் முத்தம்
நோன்புக் கஞ்சி
எல்லைப்பிரச்சனை
சூரியனுக்கும் எல்லைப் பிரச்சனை
சுற்றிவர போட்டான் ஒரு வேலி
பரி வட்டம்
யாருக்கு வேண்டும்
புத்திசாலிகளுக்குத் தேவையில்லாதது
மூடர்கள் ஏற்காதது
அறிவுரை
ஆதிக்கம்
நியாயத்தின் பற்றாக்குறை
தர்க்கத்தின் வரட்சி
மிரட்டல்
கனவு காண்
வரையறுக்கப்பட்ட கனவு
வெற்றிக்கான வழி
இலக்கு
முற்றும் திறந்தது
முகமூடி கிழித்தெறியும்
முழுமனதும் திறந்துவிடும்
உண்மைக் காதல்
ஆஸ்த்மா மருந்தால் புற்று நோய் ஆபத்து
ஆண் ஆஸ்த்மா நோயாளிகள் பாவிக்கும் ஆஸ்த்மா உள்ளுறிஞ்சிகளால்(Asthma Inhalers) புற்று நோய் ஏற்படும் ஆபத்து அதிகரிப்பதாக ஆராச்சியாளர்கள் எச்சரித்துள்ளார்கள். ஆஸ்த்மாவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் ஆஸ்த்மா உள்ளுறிஞ்சிகள்(Asthma Inhalers)இல் இருக்கும் steroid மருந்து prostrate cancer வரும் சாத்தியத்தை 40% அதிகரிகிறது என்று ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Broncholidator என்னும் மருந்தை ஆஸ்த்மா உள்ளுறிஞ்சிகளாகப்(Asthma Inhalers) பாவிப்பவர்களுக்கு புற்று நோய் வரும் ஆபத்து 36% அதிகம் என்றும் ஆராச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மெல்பேர்னில் prostrate cancer நோயுடைய 1179 ஆண்களிடையே நடாத்தப் பட்ட ஆய்விலிருந்தே இந்த முடிவிகள் பெறப்பட்டன. அதுமட்டுமல்ல ஆஸ்த்துமா நோயாளி ஒருவருக்கு புற்று நோய் வரும் ஆபத்து ஆஸ்த்மா நோய் இல்லாதவர்களிலும் பார்க்க 25% அதிகம்.
சிலர் இந்த ஆராச்சிகள் ஆரம்ப நிலையில்தான் உள்ளன என்றும் இதற்கான மேலதிக ஆராச்சிகள் தேவை என்றும் கூறுகின்றனர். பிரித்தானிய வைத்தியர் எலைன் விக்கேர்ஸ் அவர்கள் இப்போது ஆஸ்த்மா உள்ளுறிஞ்சிகள்(Asthma Inhalers) பாவிப்பவர்கள் அதை உடனடியாக நிறுத்தத் தேவையில்லை என்றும் கூறுகிறார்.
Monday, 9 August 2010
விஞ்ஞானி:அழிவிலிருந்து தப்ப பூமியிலிருந்து நாம் வெளியேற வேண்டும்
மனித குலம் அழிவிலிருந்து தப்புவதற்கு இந்த பூமியிலிருந்து இன்னும் இரு நூறு வருடங்களுக்குள் வெளியேற வேண்டும் என்று பிரபல விஞ்ஞானி ஸ்ரிfஅன் ஹோக்கிங் (Stephen Hawking) தெரிவித்துள்ளார். பூமியிலிருந்து வெளியேறி வேறு சூரியக் குடும்பத்தில் உள்ள கிரகங்களில் குடியேற வேண்டுமாம். அடுத்த இரு நூறு வருடங்களுக்குள் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னரும் மனித குலம் அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டது என்ரு அவர் தெரிவித்தார். அதற்கு ஒரு உதாரணமாக 1963-ம் ஆண்டில் ஏற்பட்ட அணு ஆயுத நெருக்கடியைக் குறிப்பிடுகிறார் ஸ்ரிfஅன் ஹோக்கிங் (Stephen Hawking).
மனித குலம் முன்பு எப்போதும் இல்லாத அளவு நெருக்கடி நிறைந்த ஒரு காலகட்டத்தில் உள்ளது என்கிறார் ஸ்ரிfஅன் ஹோக்கிங் (Stephen Hawking). மட்டுப்படுத்தப் பட்ட வளங்களைக் கொண்ட இந்தப் பூமியில் தொழில் நுட்ப வளர்ச்சியானது நல்லவற்றையும் கூடாதவற்றையும் ஏற்படுத்துகிறது என்று அவர் கவலையடைகிறார். ஆனால் எமது மரபியல்பு சுயநோக்கம் கொண்ட்தாக இருக்கிறது என்று மேலும் அவர் தெரிவிக்கிறார்.
மனிதர்கள் ஒளியிலும் பார்க்க வேகமாகப் பிரயாணிக்கும் வல்லமை பெறுவார்கள் என்று ஸ்ரிfஅன் ஹோக்கிங் (Stephen Hawking) நம்புகிறார். இந்த வல்லமை மனிதனுக்கு காலத்தை வெல்லும் வாய்ப்பைக் கொடுக்கும் என்கிறார் அவர்.
எமது அடுத்த தலை முறை வேறு கிரகங்களிற்கு அகதிகளாகப் போக வேண்டிய தலைவிதியா?
இது தொடர்பான காணொளி:
படுக்கை அறைக் காட்சியில் கோபப்பட்ட டைட்டானிக் நாயகி கேற் வின்ஸ்லெற்
திரைப்படத்தின் இயக்குனரின் மனைவி கதாநாயகி. கதாநாயகின் முன்னாள் காதலன் என்று கருதப்படுபவர் கதாநாயகன். மிக மிக நெருக்கமான படுக்கைக் காட்சி. இயக்குனர் "கட்" சொல்ல முன்னரே கதாநாயகி கோபம் கொண்டு காட்சியிப் பதிவிலிருந்து வெளியேறிவிட்டார். இயக்குனர் சாம் மெண்டிஸ், கதாநாயகி கேற் வின்ஸ்லெற் என்னும் புகழ்பெற்ற டைட்டானிக் திரைப்படத்தின் நாயகி, காதாநாயகன் லியனாடொ டி கப்றியோ என்னும் டைட்டானிக் திரைப்படத்தின் நாயகன். தனது மனைவியும் அவரது முன்னாள் காதலனும் படுக்கையில் சல்லாபிப்பதை கவனமாக பதட்டமின்றிப் பார்த்துக் கொண்டிருந்தார் இயக்குனர். இயக்குனர் தன் மனைவியைப் பிரியப் போவதாகவும் ஒரு செய்தி. கேற் வின்ஸ்லெற் தனது கண்முன் தான் இன்னொருவனுடன் சல்லாபிப்பதை தனது கணவர் பார்த்துக் கொண்டிருப்பதை சகிக்க முடியாமல் கோபப்பட்டாராம். இயக்குனர் எப்படி கட்டிலில் சல்லாபிப்பது போல் நடிப்பது என்று கதாநாயகிக்கு விளக்கம் கொடுப்பதை கதாநாயகியால் பொறுக்க முடியாமல் இருந்ததாம். இத்தனைக்கும் கதாநாயகனாக நடிக்கும் லியனாடோ பலமுறை இது வெறும் நடிப்புத்தான் என்று கூறியதையும் கேற் வின்ஸ்லெற் ஏற்றுக் கொள்ளவில்லை.
கேற் வின்ஸ்லெற் முதலில் முதலில் ஜிம் திரெப்லெடொன் என்பவரை மணந்து அவர்களுக்கு ஒன்பது வயது மாயா என்னும் மகள் இருக்கிறார். பின்னர் இயக்குனர் சாம் மெண்டிஸைத் திருமணம் செய்து ஒரு மகனும் உண்டு. இப்போது சாம் மெண்டிஸும் கேற் வின்ஸ்லெறும் பிரியப் போகிறார்கள்.
கேற் வின்ஸ்லெற் எப்போது திருமணமாகி தம்பதிகளாக வாழ்வதையே விரும்புபவர் என்று லியனாடோ கூறுகிறார். லியனாடோவிற்கு திருமணத்தில் அக்கறையில்லை. அவர் இப்போது ஒரு இஸ்ரேலிய மாதிரி அழகி பார் ரfஏலியுடன் நெருக்கமாக இருக்கிறார். அவரையும் திருமணம் செய்யப் போவதில்லை
Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...