அரபு வசந்தத்தின் ஓர் அம்சமாக உருவான சிரிய அதிபர் பஷார் அசாதத்திற்கு எதிரான கிளர்ச்சி மார்ச மாதம் பதினைந்தாம் திகதியுடன் முன்றாம் ஆண்டு நிறைவை எட்டியுள்ளது. ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட உயிர்களைப்ப்பலி கொண்ட சிரிய உள்நாட்டுப் போர் இருபது இலட்சம் மக்களை இடப்பெயர்வுக்கும் உள்ளாக்கியது. ஐக்கிய நாடுகள் சபையின் யூனிசெப இருபத்து மூன்று இலட்சம் சிறுவர்கள் வீடின்றி உணவின்றி கல்விவசதியின்றி இருக்கின்றனர் என்கின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் பதுகாப்புச சபையின் தீர்மானங்கள் எதுவும் சிரிய மக்களுக்கு எந்த நன்மையையும் ஏற்படுத்தவில்லை என்கின்றது யூனிசெப்.
முன்றாம் ஆண்டு நிறைவான சனிக்கிழமை சிரிய அரச படைகள் சிரிய லெபனானிய எல்லையில் உள்ள யப்லவூட் நகரத்தைக் கைப்பற்றியதாக சிரிய அரசு அறிவித்துள்ளது. யப்லவூட் நகரம் சிரிய லெபனானிய எல்லைப் பிரதேசத்தில் சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் வசம் இருந்த கடைசி நகரமாகும். லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பு சிரிய படைகளுடன் இணைந்து போராடுவதால் சிரிய லெபனானிய எல்லைப் பிரதேசம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தாகும். ஹிஸ்புல்லா அமைப்புப் போராளிகளும் சிரியாவின் அரச படைகளும் இணைந்தே இந்தத் தாக்குதலை வெற்றிகரமாகச செய்தன.
சிரிய லெபனானிய எல்லையில் உள்ள யப்லவூட் நகரத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து லெபனானில் உள்ள சிரியக் கிளர்ச்சிக்கு ஆதரவானவர்கள் தாக்குதல்களை மேற்கொள்ளலாம் என்ற அச்சத்தால் லெபனானில் பதட்டம் உருவாகியுள்ளது.
தலைநகர் டமஸ்கஸ் உட்படப் பல முக்கிய நிலைகளில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுததியுள்ள சிரிய அரச படைகளுக்கு யாப்லவூட் நகரத்தைக் கைப்பற்றியமை இன்னும் ஒரு கேந்திர முக்கியத்துவ வெற்றியாகும். சிரியக் கிளரச்சிப் படைகளுக்கு யாப்லவூட் நகர் ஒரு முக்கிய வழங்கற்பாதையாகவும் இருந்தது.
மூன்றாம் ஆண்டு நிறைவைப் பற்றி ஏதும் சொல்லாத சிரிய அரச ஊடகங்கள் சிரியா யாப்லவூட் நகரைக் கைப்பற்றியதை பெரிது படுத்தி அறிவித்தன. ஹிஸ்புல்லாவிற்கு எதிராக சிரியக் கிளர்ச்சிப் படைகள் செய்த பல கார் வெடிகுண்டுத் தாக்குதல்களுக்கான தயாரிப்பு வேலைகள் லாப்வூட் நகரிலேயே செய்யப்பட்டன. ஆனால் சிரியக் கிளர்ச்சிப் படையினர் யாப்லாவூட் நகரைத் தாம் இன்னும் இழந்துவிடவில்லை என்கின்றனர்.
சிரியக் கிளர்ச்சி என்பது நித்திய கண்டம் தீர்க்காயுசு என்பதாகும்.
Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...

-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...