Saturday, 19 March 2011
ஜப்பான் சுனாமியும் உலகப் பொருளாதாரமும்.© 2011 Vel Tharma
ஜப்பானை சுனாமி தாக்கியதும் அணு உலைகளில் இருந்து கதிர்வீச்சுக்கள் ஏற்பட்டதும் நாம் அறிவோம். ஜப்பானை இன்னும் ஒன்று தாக்கியது பலர் அறியவில்லை. ஜப்பானை சுனாமி தாக்கியவுடன் ஜப்பானிய நாணயமான யென்னை பன்னாட்டு நாணய வர்த்தகர்கள் தாக்கத் தொடங்கினர். ஜப்பானில் நடந்த அனர்தத்தால் ஏற்பட்ட இழப்பீடுகளிற்கு பன்னாட்டுக் காப்புறுதி நிறுவனங்கள் நட்ட ஈடு வழங்கும். இதனால் பல பில்லியன் பெறுமதியான நாணயம் ஜப்பானிற்கு கைமாறும். இதனால் ஜப்பானிய நாணயத்தின் பெறுமதி அதிகரிக்கும். பெறுமதி அதிகரிக்க விருக்கும் பொருளை வாங்குவது வர்த்தகர்களின் செயல். அவர்கள் உடனே யப்பானிய நாணயமான யென்னை பெருமளவில் வாங்கினர். இதனால் யென்னின் பெறுமது பலத்த அதிகரிப்பைக் கண்டது. ஒரு நாட்டின் நாணயத்தின் பெறுமதி அதிகரித்தால் அதன் ஏற்றுமதி பாதிக்கப்படும். அமெரிக்க டொலருக்கு எதிராக ஜப்பானிய யென்னின் பெறுமதி ஒரு யென்னால் அதிகரித்தால் டொயோட்டா(Toyota) வருமானம் 30பில்லியன் யென்னாலும் ஹொண்டாவின் வருமானம் 17பில்லியன் யென்னாலும் வீழ்ச்சியடையும். தனது பொருளாதாரத்தைப் பாதுகாக்க ஜப்பான் மற்ற G-7 நாடுகளின் உதவியை நாடியது. மற்ற நாடுகள் தம்மிடமுள்ள 25பில்லியன் அமெரிக்க டொலருக்கு ஈடான யென்களை விற்று யென்னின் பெறுமதி அளவிற்கு மேலாக வளர்வதைத் தடுத்தன.
இயற்கை அனர்த்தமும் பொருளாதார வளர்ச்சியும்.
மார்ச் -11-ம் திகதி வெள்ளிக் கிழமை ஜப்பானை சுனாமி தாக்கியது. இது முன்பு நடந்த சுனாமித் தாக்குதல்களிலும் பெரியது. அமெரிக்கா ஹிரோசிமாவில் போட்ட அணுக்குண்டிலும் பார்க்க 30,000மடங்கு வலுவுள்ள சுனாமி இது. 1995-ம் ஆண்டு ஜப்பானை சுனாமி தாக்கியது. ஜப்பானின் கோபியில் நடந்த இந்த சுனாமி அனர்த்தத்தால் 100பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சொத்தழிவு ஏற்பட்டது. உலகத்தில் பொருளாதர ரீதியில் முன்றாம இடத்தில் இருக்கும் ஜப்பானின் பொருளாதரம் இதைத் தாங்கிக் கொண்டது. 1994-ம் ஆண்டு 0.9%ஆக இருந்த ஜப்பானியப் பொருளாதார வளர்ச்சி சுனாமி தாக்கிய 1995-ம் ஆண்டு 1.9%ஆக உயர்ந்தது. ஒரு நாட்டில் இயற்கை அனர்த்தம் ஏற்படும் போது அந்த நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும். ஒரு நாட்டின் ஒரு பகுதியில் இயற்கை அனர்த்தம் ஏற்பட்டால். அந்தப் பகுதியில் ஏற்பட்ட உற்பத்தி இழப்பீட்டை மற்றப் பகுதியில் ஏற்படும் அதிகரித்த உற்பத்தி அதிகரிக்கும். பல கட்டுமான வேலைகள் புதிதாக ஆரம்பிக்கும். டொயோட்டா மார்ச் -11-ம் திகதி வெள்ளிக் கிழமை ஜப்பானை சுனாமி தாக்கியதைத் தொடர்ந்து உதிரிப்பாக விநியோகங்கள் பாதிக்கப் படுவதால் தனது உற்பத்திகள் பாதிக்கப்படும் என்று முதலில் அறிவித்தது. பின்னர் மார்ச் 16-ம் திகதி தனது உற்பத்தி வழமை போல் தொடரும் என்று அறிவித்தது. சொனியின் ஆறு தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டன. இந்த உற்பத்தி வேறு இடங்களுக்கு மாற்றப்படும். இயற்கை அனர்த்தம் உற்பத்திகளை நிறுத்தாது சிறிதுகாலம் தள்ளி வைக்கும். மீள ஆரம்பிக்கும் போது முன்பு இருந்ததிலும் அதிகரித்த உற்பத்தியே ஏற்படும். இதனால் தான் முன்பு சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட 1995இல் ஜப்பானியப் பொருளாதாரம் அதற்கு முந்திய ஆண்டிலும் பார்க்க இரண்டு மடங்கிலும் அதிகரித்த வளர்ச்சியைக் கண்டது. ஆனால் 2011-03-11இலன்று ஏற்பட்ட சுனாமி ஜப்பானின் பாதிக்கப்படாத பல பகுதிகளிலும் மின் தடையை ஏறபடுத்தியுள்ளது. இது ஒரு பெரும் சவாலாக ஜாப்பானியர்களுக்கு அமையும்.
ஜப்பானிய வட்டி வீதம் ஒரு பின்னடைவு
ஒரு நாட்டின் பணப்புழக்கத்தை அதிகரிக்க அது தனது நாட்டின் வட்டி வீதத்தை குறைக்கும். ஜப்பானின் பொருளாதரத்தை மீள் கட்டி எழுப்பவும் கொள்வனவு செய்வோரின் நம்பிக்கையை அதிகரிக்கவும் அங்கு அதிக பணப்புழக்கம் தேவை. ஜப்பான் தனது வட்டி வீதத்தை குறைக்க முடியாத நிலையில் உள்ளது. அதன் தற்போதைய வட்டி வீதம் பூச்சியம்.
எரிபொருள் விலை
எரிபொருள் விலை வடக்கு ஆபிரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல் நெருக்கடிகளைத் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருகிறது. கடந்த சில ஆண்டுகளாக அதிகரிக்கும் எரிபொருள் விலைகளைச் சமாளிக்க பல நாடுகளில் அணு மின் உற்பத்திகள் அதிகரிக்கப்பட்டன. முக்கியமாக இந்தியாவிற்கு அணுத் தொழில் நுட்பத்தை விற்க அமெரிக்கா எடுத்த முயற்ச்சியும் அதிகரிக்கும் எரி பொருள் விலைகளைச் சமாளிக்கவே. அதிக மக்கள் தொகையும் அதிக பொருளாதார வளர்ச்சியும் கொண்ட சீனாவின் எரிபொருள்தேவை மிக மிக அதிகமானது. உலகிலேயா அதிக அணு உலை நிர்மாணம் சீனாவில் நடக்கிறது. சீனாவில் 27 அணு உலைகள் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மேலும் 50 அணு உலைகளை நிர்மாணிக்க சீனா திட்டமிட்டுள்ளது. ஜப்பானில் ஏற்பட்ட அனர்த்தத்தைத் தொடர்ந்து சீனா தனது அணு உலை நிர்மாணங்களை இடை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ஜேர்மனி தனது அணு மின் உற்பத்தியை இடை நிறுத்தியுள்ளது. இவையாவும் உலகச் சந்தையில் எரிபொருள்களின் விலையை மேலும் அதிகரிக்கும்.
Just-in-Time Technique உரிய நேர உற்பத்தித் தொழில் நுட்பம்.
கடந்த இருபது ஆண்டுகளாக பல தொழிற்சாலைகள் தங்கள் உற்பத்திப் பொருள்களையோ மூலப் பொருள்களையோ அதிக அளவில் இருப்பில் வைப்பதில்லை. தேவையான நேரத்தில் வாங்கி தேவையான நேரத்தில் விநியோகிக்கும் முறைமையைப் பின்பற்றுகின்றன. இவை உற்பத்திச் செலவைக் குறைக்கும். ஆனால் ஒரு இயற்கை அனர்த்தம் நிகழும் போது இந்த முறைமை பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். உற்பத்தியில் ஏற்படும் தற்காலிக நிறுத்தம் தற்காலிக தட்டுப்பாட்டை ஏற்படுத்தும். ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியைத் தொடர்ந்து Smart phoneகளிற்குத் தேவையான chips தாயாரிப்புக்கள் பாதிப்படைந்துள்ளன. ஐபோன் ஐபாட் ஆகியவற்றின் உற்பத்திகள் பாதிப்படையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
All rights, including copyright, in the content of these veltharma.blogspot.com pages are owned or controlled for these purposes by Vel Tharma. All rights reserved
Friday, 18 March 2011
சுனாமி உலை வைத்த அணு உலைக்கு மண்போடச் சிந்திக்கிறது ஜப்பான் © 2011 Vel Tharma
அணுவின் உள் பகுதியில் சேகரிக்கப்படும் சக்தியே அணு சக்தியாகும். அணுக்களை பிளந்தும் சக்தியைப் பெறலாம். அணுக்களை இணைத்தும் சக்தியைப் பெறலாம். பெரும்பாலாக அணுவைப் பிளந்தே சக்தி பெறப்படுகிறது. அணுவைப் பிளக்கும் போது நியூத்திரன்களும் வெப்பசக்தியும் வெளிவரும். யூரேனியம், புளூட்டோனியம், தோரியம் ஆகிய மூலப்பொருள்களில் இருந்து அணு சக்தி உற்பத்தி செய்யலாம். அநேகமக யுரேனியத்தில் இருந்தே அணு சக்தி பெறப்படுகிறது.
யூரேனியம் பதப்படுத்தல் மூலம் கதிரியக்கயுரேனியமாக மாற்றப் படுகிறது. பின்னர் கட்டுப்படுத்தப் பட்ட நிலையில் அது பிளக்கப் பட்டு சக்தி உருவாக்கப்படுகிறது. பதப்படுத்தப் பட்ட யுரேனியம் சிறு உருண்டைகளாக்கப் பட்டு நீளமான குழாய்களில் போடப்படும். இந்தக் குழாய்கள் Reactor எனப்படும் கலன்களில் இடப்படும். முதலில் ஒரு பகுதி யுரேனியம் பிளக்கப்பட அதிலிருந்து வெப்ப சக்தியும் நியூத்திரனும் வெளிவர, நியூத்திரன் மற்ற அணுக்களைப் பிளக்கிறது. இப்படிப்பட்ட தொடர்ச்சியான செயன்முறையால் அதிக சக்தி அதாவது வெப்பம் Reactor எனப்படும் கலன்களில் வெளிவிடப்படும். Reactor எனப்படும் கலன்களுல் நீர் குழாம் மூலம் செலுத்தப்படும். அங்குள்ள வெப்பத்தால் நீரைக் கொதிக்க வைத்து ஆவியாக்கப்படும். இந்த ஆவி பெரிய ஒரு கொதிகலனில் உள்ள நீரை கொதிக்க வைக்க அனுப்பப்படும். அந்தக் கொதிகலனில் இருந்து வெளிவரும் ஆவி சக்கரங்களைச்(Steam Turbines) சுற்ற வைக்கும். சுற்றும் சக்கரங்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.
நீர் தொடர்ச்சியாக செலுத்தப் பட்டுக் கொண்டே இருத்தல் இங்கு முக்கியம். சகல இயக்கங்களும் நிறுத்தப்பட்ட நிலையிலும் நீர் தொடர்ந்து ஓடாவிடில் வெப்ப அதிகரிப்பு ஏற்பட்டு கதிர்வீச்சு ஆரம்பிக்கும்.
Click on picture to enlarge
குழாய்களில் உள்ள யுரேனியம் அணுப்பிளவடைந்து வெப்பத்தை உருவாக்கும். அந்த வெப்பம் குழாய்களைச் சுற்ற இருக்கும் நீரைக் கொதிக்கச் செய்யும். நீராவி மின் பிறப்பாக்கிகளுக்கு அனுப்பப்படும்.
Click on picture to enlarge
அணு உலை நிறுத்தப்பட்டவுடன் கட்டுப்பாட்டுக் குழாய்கள் யுரேனியம் இருக்கும் குழாய்களிடை செருகப்படும். கட்டுப்பாட்டுக் குழாய்களூடாக தொடர்ச்சியாகப் பாயும் நீர் யுரேனியம் குழாய்கள் வெப்பமடையாமல் தடுக்கும்.
Click on picture to enlarge
ஜப்பானில் மின்சாரம் தடைபட்டதால் கட்டுப்பாட்டுக் குழாய்களூடாக நீர் தொடர்ச்சியாக செலுத்த முடியாமல் போனது.
ஜப்பானில் நடந்தது
பன்னாட்டு அணு வலுக் கண்காணிப்பகம் இரு வருடங்களுக்கு முன்பே யப்பானிய அரசிற்கு யப்பானில் உள்ள அணு உலைகள் 6.5 அளவிற்க்கு மேலான பூமி அதிர்ச்சியைத் தாங்கமாட்டாது என்று எச்சரித்திருந்தது. அதை யப்பானிய அரசு ஏற்று நடக்கவில்லை என்று இப்போது செய்திகள் கூறுகின்றன. கடந்த 35 ஆண்டுகளில் மூன்று தடவை மட்டுமே யப்பனிய அணு உலைகளின் பாது காப்புப்பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. யப்பானிய அரசு ஒரு அவசர நடவடிக்கை நிலையத்தை மட்டுமே ஏற்படுத்தி இருந்தது. அணு உலைகளின் பாதுகாப்பை மேம்படுத்தவில்லை. யப்பானிய் அணு உலைகள் 7அளவிலான பூமி அதிர்ச்சியை மட்டுமே தாங்கவல்லன. 11-ம் திகதி மார்ச் மாதம் நடந்த பூமி அதிர்ச்சியின் அளவு 9 ரிச்சர் அளவுகோலுடையது. 2008-ம் ஆண்டு யப்பானில் நடந்த G-8 நாடுகள் கூட்டத்திலும் உலகெங்கும் உள்ள அணு உலைகளின் பாதுகாப்புப் பற்றி விவாதிக்கப்பட்டது.
Click on picture to enlarge
ஜப்பானில் தீயணைப்பு எந்திரங்கள், கலவரம் அடக்கப் பாவிக்கப் படும் நீர்ப்பாய்ச்சிகள், ஆகாயத்தில் இருந்து வான் கலங்கள் போன்றவை மூலம் அணு உலைகள் மீது நீர் ஊற்றப்பட்டன. ஊற்றப்பட்ட நீர்கள் சரியான இடத்தை அடையாததால் போதிய நீர் ஊற்றப்படவில்லை. ஊற்றப்பட்ட நீர் ஆவியாகி வெளியேறிவிட்டது. இதனால் உலை வெப்பமடைவதைத் தடுக்க முடியவில்லை.
மேலும் ஒரு ஆபத்து
பாதிக்கப்பட்ட அணு உலையில் ஏற்கனவே பாவிக்கப்பட்ட பல யுரேனியம் கொண்ட குழாய்கள் தனியான இடத்தில் நீருக்குள் வைக்கப்பட்டுள்ளன. அவையும் நீரின்றி வெப்பமடைகின்றன.
தற்கொலைக்கு ஒப்பான தியாகம் செய்ய வந்த ஊழியர்கள்
Tokiyo Electric Power Company(TEPCO)என்னும் ஜப்பானிய நிறுவனம் பாதிக்கப் பட்ட அணு உலைகளை நடாத்தி வந்தது. இப்போது TEPCO ஜப்பானிய மக்களாலும் ஊடங்கங்களாலும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்காததாலும் உலையின் கதிர் வீச்சு பற்றி சரியான தகவல்களை வெளியிடாததாலும் பலமாகக் கண்டிக்கப்படுகிறது. TEPCOஊழியர்கள் பலர் ஆபத்தான இடத்தை விட்டு விலகாமல் அங்கு தொடர்ந்து இருந்து பணியாற்றி வருகின்றனர். சில TEPCO ஊழியர்கள் தமது நாட்டு மக்களைக் காக்கும் பொருட்டு தற்கொலைக்கு ஒப்பான நடவடிக்கைகளுக்கு தயாராகின்றனர். ஆபத்தான கதிரியியக்க முள்ள அணு உலைகளுக்கு அண்மையாக உள்ள சுனாமி நீரால் பழுதடைந்த டீசல் மின்பிறப்பாக்கிகளை இயங்கச் செய்து அதனால் அணு உலைக்கான தொடர் நீர்பாய்ச்சலை உறுதி செய்யவதே இவர்களின் நோக்கம்.
விம்மி அழுத TEPCO இன் நிர்வாக இயக்குனர்
18-ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை பத்திரிகையாளர்களைச் சந்தித்த TEPCO இன் நிர்வாக இயக்குனர் அணு உலைகளில் இருந்து வெளிவரும் கதிரியக்கம் ஆபத்தானது என்று முதல் தடவையாக ஏற்றுக் கொண்டார். பத்திரிகையாளர்களுடன உரையாடிய பின்னர் அவர் விம்மி அழுதார். ஜப்பானிய அணுசக்திப் பாதுகாப்பு முகவரகம் அணு உலைகளில் இருந்து வரும் கதிர்வீச்சு தரம்-5 வகையைச் சேர்ந்தது என்பதை ஒத்துக் கொண்டார். இந்தத் தர கதிரியக்கம் உயிராபத்து விளைவிக்கக் கூடியது.
ஐக்கிய நாடுகள் சபையின் அணு சக்தி முகவரகம் முன்னர் வெளியிட்ட கருத்துப்படி அணு உலைகளில் நிலமை கவலைக்கிடம் ஆனால் இன்னும் மோசமடையவில்லை.
மண்போடும் திட்டம்
இரசிய செர்னோபிலில் 1986இல் அணு உலை வெடித்தபோது கடைசி நடவடிக்கையாக அணு உலையை மண்ணாலும் சீமெந்தாலும் மூடி கதிரியகம் தடுக்கப்பட்டது. இதையே ஜப்பானும் செய்ய யோசிக்கிறது.
© 2011-03-18 Vel Tharma
Thursday, 17 March 2011
வழக்கறிஞர்கள் பற்றிய நகைச்சுவைகள்
பாம்புகள் ஏன் வழக்கறிஞர்களைக் கடிப்பதில்லை?
தொழில்சார் பணிவன்பு (Professional courtesy)
ஒரு வழக்கறிஞர் இறந்த பின் சொர்க்கம் சென்றார். அங்கு அவருக்கு கொடுக்கப்பட்ட இருப்பிடம் அவருக்குத் திருப்தியளிக்கவில்லை. அதைப் பற்றி அங்குள்ள பொறுப்பாளரிடம் தெரிவித்தார். பொறுப்பாளர் சொன்னார் நீங்கள் இது பற்றி மேன் முறையீடு செய்யலாம் ஆனால் அதற்கு குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது எடுக்கும் என்றார். இதற்கு வேறு வழி இல்லையா என்று வழக்கறிஞர் கேட்டார். நீங்கள் நரகத்திற்குப் போய் அங்கு மேன் முறையீடு செய்யலாம். அங்கு உங்களுக்கான தீர்ப்பு ஒரு நாளில் கிடைத்து விடும் என்றார். வழக்கறிஞருக்கு ஒரே ஆச்சரியம். ஏன் அங்கு அந்த அளவு விரைவாக நடக்கிறது என்றார். அவருக்குக் கிடைத்த பதில் "அங்குதான் பெரும்பான்மையான வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் இருக்கிறார்கள்"
What kind of clothes do lawyers wear?
Lawsuits.
மருத்துவக் கழகத்தில் இனி எலிகளுக்குப் பதிலாக வழக்கறிஞர்களை மருத்துவ ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்படுவார்கள் என்று அறிவித்தல் விடுக்கப்பட்டது. அதற்கு அவர்கள் கூறிய காரணங்கள்:
1. நாட்டில் எலிகளிலும் பார்க்க அதிகமான வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள்.
2. எலிகள் கொல்லப்படும் போது மருத்துவர்கள் மகிழ்ச்சியடைவதில்லை.
3. சில செயல்களை எலிகளைக் கொண்டு செய்விப்பது சிரமமாக இருக்கிறது.
Have you heard about the lawyers' word processor?
No matter what font you select, everything come out in fine print.
நல்ல செய்தி: வழக்கறிஞர்களை ஏற்றிச் சென்ற ஒரு பேருந்து பள்ளத்தில் விழுந்ததால் அதில் இருந்த அனைவரும் இறந்து விட்டனர்.
துக்கமான செய்தி: பேருந்தில் மூன்று ஆசனங்கள் காலியாக இருந்தன.
நீதிமன்றிற்கு போகும் வழியில் ஒரு இளம் வழக்கறிஞர் இறந்து யமனுடைய உலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார். அவர் அங்கு தனது வயது 33 தான் சாகக் கூடாது என்றார். அவரை யமன் விசாரணை செய்தான்.
யமன்: நீ வழக்குகளுக்கு செலவழித்த நேரம் என்று சொல்லி அதற்கான கட்டணத்தை உனது கட்சிக்காரர்களிடம் அறவிடுவாயா?
வழக்கறிஞர்: ஆம் யம தேவா.
யமன்: அதில் உள்ள நேரங்கள் யாவற்றையும் கூட்டிப்பார் எவ்வளவு காலம் வருகிறது?
வழக்கறிஞர் தனது குறிப்பேடுகளை எடுத்து கூட்டுகிறார். பின் சொன்னார் 108 வருடங்கள்.
Where there's a will, there's a happy Lawyer!
நீதிமன்றிற்கு போகும் வழியில் ஒரு இளம் வழக்கறிஞர் இறந்து யமனுடைய உலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார். அவர் அங்கு தனது வயது 33 தான் சாகக் கூடாது என்றார். அவரை யமன் விசாரணை செய்தான்.
யமன்: நீ வழக்குகளுக்கு செலவழித்த நேரம் என்று சொல்லி அதற்கான கட்டணத்தை உனது கட்சிக்காரர்களிடம் அறவிடுவாயா?
வழக்கறிஞர்: ஆம் யம தேவா.
யமன்: அதில் உள்ள நேரங்கள் யாவற்றையும் கூட்டிப்பார் எவ்வளவு காலம் வருகிறது?
வழக்கறிஞர் தனது குறிப்பேடுகளை எடுத்து கூட்டுகிறார். பின் சொன்னார் 108 வருடங்கள்.
Q: Do you know how to save five drowning lawyers?
A: No.
Reply: Good!
ஒரு வழக்கறிஞர் பொய் சொல்கிறார் என்பதை எப்படிக் கண்டுபிடிக்கலாம்?
அவர் உதடு அசையும் போது அவர் பொய் சொல்வார்
What do you call an honest lawyer?
An impossibility.
குத்துச் சண்டை நடுவருக்கும் வழக்கறிஞருக்கும் என்ன வித்தியாசம்?
சண்டை நீண்ட நேரம் தொடர்ந்தால் நடுவருக்கு அதிக வருமானம் கிடைக்காது. வழக்கறிஞருக்கு சண்டை தொடரத் தொடர வருமானம் அதிகரிக்கும்.
A man went to the Chamber of Commerce in a small town. Obviously distressed, he asked the man at the counter, 'Is there a criminal attorney in town?'
The man replied, 'Yes, but we can't prove it yet.'
There was the cartoon showing two people fighting over a cow. One was pulling the cow by the tail the other was pulling on the horns. Underneath was a lawyer milking the cow.
Wednesday, 16 March 2011
ஹைக்கூ: காது கொடுக்கும் மனைவி
பகலைக் குறுக்கியது
இரவை நீட்டியது
குழந்தையின் வருகை
இருவர் மனதிலும் தங்காது
ஒருவர் குறிப்பிலிருந்து மற்றவர் குறிப்பிற்கு மாறும்
கல்லூரி விரிவுரை
வீட்டின் சுவர்கள்
வாழ்க்கை இயந்திரத்தின் எண்ணை
அன்பு
பொய்கள் நிலைக்காதது
அன்புக்கு முன் சிறியது
எம் உலகம்
காதலில் வீழ்ந்தவர்க்கும்
கனவில் வாழ்பவர்க்கும்
சாத்தியமில்லாததில்லை
ஜப்பானிய அரசின் அயோக்கியத்தனமும் அணு உலைகளும்
பன்னாட்டு அணு வலுக் கண்காணிப்பகம் இரு வருடங்களுக்கு முன்பே யப்பானிய அரசிற்கு யப்பானில் உள்ள அணு உலைகள் 6.5 அளவிற்க்கு மேலான பூமி அதிர்ச்சியைத் தாங்கமாட்டாது என்று எச்சரித்திருந்தது. அதை யப்பானிய அரசு ஏற்று நடக்கவில்லை என்று இப்போது செய்திகள் கூறுகின்றன. கடந்த 35 ஆண்டுகளில் மூன்று தடவை மட்டுமே யப்பனிய அணு உலைகளின் பாது காப்புப்பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. யப்பானிய அரசு ஒரு அவசர நடவடிக்கை நிலையத்தை மட்டுமே ஏற்படுத்தி இருந்தது. அணு உலைகளின் பாதுகாப்பை மேம்படுத்தவில்லை. யப்பானிய் அணு உலைகள் 7அளவிலான பூமி அதிர்ச்சியை மட்டுமே தாங்கவல்லன. 11-ம் திகதி மார்ச் மாதம் நடந்த பூமி அதிர்ச்சியின் அளவு 9 ரிச்சர் அளவுகோலுடையது. 2008-ம் ஆண்டு யப்பானில் நடந்த G-8 நாடுகள் கூட்டத்திலும் உலகெங்கும் உள்ள அணு உலைகளின் பாதுகாப்புப் பற்றி விவாதிக்கப்பட்டது.
2009-ம் ஆண்டு யப்பானிய நீதிமன்றம் பாதுகாப்பற்ற அணு உலைகள் மூடப்படவேண்டும் என்று உத்தரவிட்டது. இதை யப்பானிய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. அமெரிக்காவும் யப்பானிய அணு உலைகளில் இலாபத்திற்காக பாதுகாப்பு பலியிடப்படுகிறது என்று தெரிவித்திருந்தது என்று விக்கிலீக் கூறுகிறது.
ரரோ கோனோ என்ற யப்பானியப் பாராளமன்ற உறுப்பினர் யப்பானிய அரசு அணு உலைகள் தொடர்பாக பல மூடி மறைப்புக்களைச் செய்கின்றது என்று குற்றம் சுமத்தியுள்ளார்.
அணு உலைகளின் தற்போதைய நிலை
புக்குஷிமாவில் உள்ள அணு உலைகளில்தான் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உலை - 1 இங்குதான் முதலில் ஐதரசன் வெடிப்பு ஏற்பட்டது. அங்கு புகுந்த சுனாமி நீர் வெப்பத் தணிப்பை ஏற்படுத்தியது
உலை - 2 இங்கும் ஐதரசன் வெடிப்பு ஏற்பட்டது. ஆனால் இங்கு போதிய அளவு நீர் உட்புகாதபடியால் வெப்ப அதிகரிப்பு ஏற்படுகிறது.
உலை - 3 இங்கும் திங்களன்று ஐதரசன் வெடிப்பு ஏற்பட்டது.
உலை - 4 இங்கு வெடிப்பு ஏற்பட்டு தீ பரவியுள்ளது. கூரை தகர்ந்து விட்டது. இங்கிருந்துதான் பாரிய ஆபத்து வரவிருக்கிறது. இங்கு வேலை செய்த இருவரைக் காணவில்லை. வெடிப்பின் போது எருந்து சாம்பலாய் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இங்கிருந்து வெளிப்பட்ட கதிரியக்கம் பற்றிச் சரியான தகவல்களை யப்பானிய அரசு வெளியிடவில்லை. இங்கு நீருக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்ட ரொட்ஸ் இப்போது வெப்பத்தை வெளிவிடுகிறது. இதனால் நீர் கொதிநிலையை அடைந்து வற்றுகிறது.
உலை - 5 ம் 6 ம் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன.
பாதிக்கப்பட்ட இடங்களில் கதிர் வீச்சு நேற்று 400எம் எஸ் வி அளவில் இருந்தது. 100இற்கு மேல் இருந்தால் உடலின் டி என் ஏ க்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் பிற்காலத்தில் பாதிக்கப்ப்பட்டவர்களுக்கு புற்று நோய் வரலாம். காற்றால் கதிர்வீச்சு 155மைல் தொலைவில் உள்ள ரோக்கியோ வரை சென்றுள்ளது. அங்கு கதிர்வீச்சு சாதாரண நிலையிலும் பார்க்க 10 மடங்காக உயர்ந்துள்ளது. குறைந்த அளவு கதிர் வீச்சிற்கு உள்ளானோர் முகம் சிவத்தல், வாந்தி, வயிற்றோட்டம், காய்ச்சல், தலையிடி போன்றவற்றால் பாதிக்கப்படுவர்.
பிரெஞ்சு அரசு யப்பான் மீது கடும் தாக்குதல்
யப்பானிய அணு உலைகளின் கதிர்வீச்சு இப்போது காட்டுப்படுத்த முடியாத நிலையை அடைந்து விட்டதென்று பிரெஞ்சு அரசு குற்றம் சுமத்துகிறது. உண்மையான ஆபத்தை யப்பானிய அரசு மூடி மறைக்கிறது என்றும் பிரான்ஸ் கூறுகிறது. வெறுமனவே தண்ணீரை ஊற்றுவது பிரச்சனிகளைத் தீர்க்க மாட்டது என்றும் பிரான்ஸ் கூறுகிறது.
யப்பானிய அரசின் அயோக்கியத்தை நாம் நன்கு அறிவோம்
இலங்கையில் தமிழர்களைக் கொல்ல சிங்களவர்களுக்கு உதவிய நாடுகளில் யாப்பானும் ஒன்று. 2009 மே மாதம் இலங்கையில் நடந்த இறுதிப் போரில் இலங்கைப் படையின் உயர் அதிகாரிகள் ஒரு வெளிநாட்டு முக்கிய பிரமுகரை உழங்கு வானொலியில் அழைத்துச் சென்று முள்ளிவாய்க்காலுக்குள் ஒரு சிறு பிரதேசத்தில் மூன்று இலட்சம் மக்கள் அகப்பட்டுத் தவிப்பதைக் காட்டி இச்சிறு பிரதேசத்துக்குள்தான் இந்த விடுதலைப் புலிகள் எஞ்சியுள்ளனர் என்று காட்டினார்களாம். அப்போது அந்தப் பிரமுகர் அப்படியே குண்டுகளைப் போட்டு அத்தனைபேரையும் அழித்தொழிக்கும்படி கூறினாராம். அந்தப் பிரமுகர் ஜப்பானின் யசூசு அகாசி என்று நம்பப்படுகிறது. யப்பான் இனக் கொலைக்கு உதவுவதால் 11-04-2009 இலன்று சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச் நெருக்கடி குழு, காக்கும் பொறுப்பிற்கான சர்வதேச அமைப்பு ஆகியன ஜப்பானியப் பிரதமருக்கு இலங்கையில் நடக்கவிருக்கும் மனிதப் பேரழிவை இலங்கைக்கு உதவி வழங்கும் நாடு என்ற வகையில் தடுக்கும்படி வேண்டின. ஆனால் யப்பானிய அரசு எதுவும் செய்யவில்லை. 2010ஜூனில் இலங்கை சென்ற ஜப்பானின் யசூசி அகாசி இலங்கை அரசின் ஊடகப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெலபோல் பேசியுள்ளார். அவரது பேச்சை ரம்புக்வெலதான் எழுதிக் கொடுத்தாரா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் தலையிடக்கூடாது என்று யசூசி அகாசி கூறியுள்ளார்.
புத்தமதம் போதிக்கும் கர்ம வினை இதுவா?
Tuesday, 15 March 2011
காணொளி: அழகியின் மார்பைக் கடித்ததால் உயிரை விட்டது பாம்பு
நஞ்சு நெஞ்சம் கொண்டவர்களைக் பாம்பு கடித்தால் பாம்புதான் இறக்கும் என்று நகைச்சுவைகள் பல கேட்டதுண்டு. அது உண்மையில் நடந்தது இஸ்ரேலின் ரெல் அவிவ் நகரில். அது ஒரு விளம்பரப் படப்பிடிப்பு. அதில் தன் பெரிய அழகிய மார்பைக் காட்டியபடி மாடல் அழகி ஒரிட் பொக்ஸ் கவர்ச்சிகரமாக தனது உடலை அசைத்து பாம்பால் தனது உடலைச் சுற்றியபடி நடித்துக் கொண்டிருந்தார். விளம்பரத்தின் உச்சக் கட்டமாக அழகி தனது நாக்கால் பாம்பின் வாயை நக்கி பாம்பிற்கு முத்தம் கொடுத்தார். பாம்பிற்கு அது அறவே பிடிக்கவில்லை திடீரென சீறி அழகியின் மார்பில் தன் பற்களை அழுத்திக் கடித்தது. அழகி வீல் என்று அலறினாள் உதவியாளர்கள் விரைந்து சில விநாடிப் போராட்டத்தின் பின் பாம்பையும் அழகியையும் பிரித்தனர். அழகியை அவசரமாக மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அவருக்கு ஏற்பு வலி மருந்து கொடுக்கப்பட்டது. அவர் பிழைத்துக் கொண்டார். பாவம் பாம்பு கடித்தது சிலிக்கன் உள் வைத்துத் தைத்துப் பெரிதாக்கப் பட்ட மார்பு. பாம்பு கடிக்கும் போது சிலிக்கனையும் கடித்து விட்டது. பின்னர் சிலிக்கன் நஞ்சால் பாம்பு இறந்துவிட்டது.
இதன் காணொளியை கீழே காணலாம்.
3 நாட்கள் புதையுண்டிருந்த 4 மாதக் குழந்தை உயிருடன் மீட்பு
ஜப்பானின் இஷினோமாக்கியும் சுனாமியால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்று. அங்கு தேடும் பணியில் ஈடுபட்டிருந்த ஜப்பானியப் படையினர் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட இறந்த உடல்களை மீட்டனர். அவர்கள் பணியில் ஈடுபட்டிருந்த வேளை ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது அதை அவர்கள் முதலில் நம்பவில்லை ஏதோ வேறு சத்தம் என்றே எண்ணினர். அங்கு குழந்தையின் அழுகுரல் கேட்கும் சாத்தியமில்லை. எல்லாம் சேற்றில் புதையுண்ட நிலையிலேயே இருந்தன. மீண்டும் அவர்கள் அந்த அழுகுரலைக் கேட்டபோது அவர்களுக்கு அதிர்ச்சி. மிகக்கவனமாக அந்த இடத்தைத் துப்பரவாக்கினர். ஆச்சரியம்தான் சேறுகளால் மூடப்பட்ட நிலையில் ஒரு நாலு மாதப் பெண்குழந்தை. அதை ஒரு துணியால் சுற்றி எடுத்தனர். சுனாமி அலை அடித்த போது பெற்றோரின் கையில் இருந்து வீசி எறியப்பட்ட குழந்தை உயிருடன் இருப்பதை அவர்களால் நம்பமுடியவில்லை. அதிலும் ஆச்சரியம் குழந்தைக்கு எந்த உடற்காயமும் இருக்கவில்லை. அளவற்ற மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்த தந்தையின் மகிழ்ச்சிக்கு மீண்டும் விழுந்தது இன்னொரு அடி. இன்னொரு சுனாமி வருகிறதென்ற எச்சரிக்கைதான் அது. தந்தை செய்த முதல் வேலை தன் குழந்தையை மீண்டும் படையினரிடமே ஒப்படைத்தார். ஆனால் அது விரைவில் அந்த எச்சரிக்கை மீளப் பெறப்பட்டு தந்தையுடன் குழந்தை இணைந்தது.
வாகனத்துள் ஒரு மூதாட்டி
மிதந்து கொண்டிருந்த வாகனம் ஒன்றில் 20 மணித்தியாலங்கள் அகப்பட்டிருந்த ஒரு மூதாட்டியும் உயிருடன் மீட்கப்பட்டார். இன்னொருவர் தனது வீட்டுக் கூரையின் மேல் இருந்தபடி மீட்கப்பட்டார்.
விஞ்ஞான ஆய்வு: அவள் அன்பைத் தேடுகிறாள்; அவன் அதைத் தேடுகிறான். © Vel Tharma
ஆண் பெண் உறவுகள் பற்றியும் அவர்கள் இணைந்து வாழ்வதின் நோக்கம் பற்றியும் கலிபோர்னிய பல்கலைக் கழகத்தில் ஆய்வொன்று நடத்தப்பட்டது. இருபது வயதிற்கு மேற்பட்ட 200ஆண், பெண்களிடையே பேராசிரியர் பெனெலொப் ஹுவாங் தலமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
முப்பது ஆண்டுகளுக்கு நடந்த திருமணங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இப்போது நடக்கும் திருமணங்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பகுதியாகக் குறைந்துள்ளது. திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் தம்பதியினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பிரித்தானியாவில் நான்கு மில்லியன் பேர் திருமணமாகாமல் இணைந்து வாழ்கின்றனர்.
மேற்படி ஆய்வின் முடிபுகள் திருமணம் அல்லது இணைந்து வாழ்வது தொடர்பான நோக்கங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் வேறுபடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளின் முடிபுகள் Journal of Family Issuesஇல் பிரசுரிக்கப்பட்டுள்ளன. ஆய்வுகள் தெரிவிப்பன:
- வாழ்க்கைச் செலவைப் பங்கிடுதல் ஒன்றாக அதிக நேரம் செலவிடல் போன்றவற்றில் ஆண்களும் பெண்களும் ஒருமித்த கருத்துடையவர்களாகக் காணப்படுகின்றனர்.
- இணைந்து வாழ்வது அதிக உடலுறவுற்கான வாய்ப்பை அளிக்கும் என்று பெண்களிலும் பார்க்க நான்கு மடங்கு ஆண்கள் அதிகம் நம்புகின்றனர்.
- இணைந்து வாழுதல் தொடர்ச்சியானதும் உறுதியானதுமான பிணைப்புக்கு வழி வகுக்கும் என்று பெண்கள் ஆண்களிலும் பார்க்க அதிகம் நம்புகின்றனர்.
- இணைந்து வாழுதல் ஒரு திருமணம் நோக்கிய நகர்வாகவே பெண்கள் நம்புகின்றனர். ஆண்கள் அப்படி நினைப்பதில்லை
- இணைந்து வாழுதல் ஒரு உறுதியான காதலின் வெளிப்பாடு என ஆண்களிலும் பார்க்க பெண்கள் மூன்று மடங்கு அதிகம் நம்புகின்றனர்.
- இணைந்து வாழுதலில் உள்ள மிகப்பெரிய பின்னடைவு இதற்கு சட்டபூர்வ அங்கீகாரம் இல்லை என்று பெண்கள் கூறுகின்றனர். ஆனால் ஆண்கள் தங்கள் தனிவாழ்க்கையின் முடிவே மிகப்பெரிய பின்னடைவு என்று நம்புகின்றனர். சில ஆண்கள் மற்றப் பெண்களுடனான உடறுவு கொள்ளும் வாய்ப்பிற்கு இணைந்து வாழுதல் முட்டுக்கட்டையாக இருக்கிறது என்று நம்புகின்றனர்.
© 2011-03-15- Vel Tharma
Monday, 14 March 2011
பான் கீ மூனின் வெற்றி வாய்ப்பும் ஐநாவையும் அசிங்கப் படுத்தும் இந்தியக் குடும்பச் சலுகை யும் © 2011 Vel Tharma
அமெரிக்காவின் ஈராக் மீதான படையெடுப்பை சட்டவிரோதமானது என்று துணிந்து சொல்லிப் பல அரசதந்திரிகளை வியக்கச் செய்த கோபி அனன் அமர்ந்த ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் ஆசனத்தில் ஒரு உலகின் மிகப் பயங்கரமான கொரியர் என்று விமர்சிக்கப் பட்ட பான் கீ மூன் வந்து அமர்ந்தது ஒரு துக்க கரமான நிகழ்வுதான். அதிலும் துன்பகரமான நிகழ்வுகள் பான் கீ மூன் மீண்டும் ஐநா பொதுச் செயலர் பதவிக்குப் போட்டியிடப்போகிறார் என்பதும் அவர் வெற்றியடைவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது என்பதும். பான் கீ மூனின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது.
பொதுச் செயலர் தேர்வு முறை
15உறுப்பினர்களைக் கொண்ட ஐநா சபையின் பாதுகாப்புச் சபை பொதுச் செயலாளரை நியமிக்க அதைப் 192 உறுப்பினர்களைக் கொண்ட பொதுச் சபை அங்கீகரிக்க வேண்டும். பொதுச் சபையில் அமெரிக்கா, இரசியா, ஐக்கிய இராச்சியம், சீனா, பிரான்சு ஆகிய இரத்து அதிகாரம் கொண்ட ஐந்து நிரந்தர உறுப்புரிமை கொண்ட நாடுகள் உள்ளன இவற்றை P-5 என அழைப்பர். தற்போது பாது காப்புச் சபை உறுப்புரிமையுள்ள மற்ற நாடுகள் பொஸ்னியா-ஹெஜெகோவினா, பிரேசில், கபன், கொலம்பியா, ஜேர்மனி, இந்தியா, லெபனான், நைஜீரியா, போர்த்துக்கல், தென் ஆபிரிக்கா ஆகியவையாகும்.
P-5நாடுகளில் இரசியாவிற்கு பான் கீ மூன் கொசோவா விவகாரத்தில் அமெரிக்க சார்பாக நடந்து கொண்டதாக அதிருப்தி, இரசியாவிற்கும் சீனாவிற்கும் அவர் எகிப்து அதிபர் ஹஸ்னி முபராக்கை பதிவியில் இருந்து விலகச் சொன்னது பிடிக்கவில்லை. ஜோர்ஜியாவின் அப்காஜியாப் பிராந்திய விவகாரத்தில் பான் கீ மூன் இரசியாவைத் திருப்திப் படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக பிரித்தானியாவும் பிரான்சும் அதிருப்தி அடைந்திருந்தன.Aஇலங்கை அரசின் வன்னிப் படுகொலைகள் சூடானிய அரசின் டாபூர் இனக் கொலைகளுக்கு எதிராக பான கீ மூன் செயற்படவில்லை என்று மனித உரிமை அமைப்புக்கள் அவர் மீது அதிருப்தி கொண்டுள்ளன. சூடானிய மற்றும் இலங்கைப் படுகொலைகளைப் பற்றிய உண்மைகளையும் அதில் பன் கீ மூன் நடந்து கொண்ட விதங்கள் பற்றியும் பத்தி பத்தியாக எழுதலாம். ஆக மொத்தத்தில் பான் கீ மூன் இதுவரை பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர் நாடுகள் ஒவ்வொன்றையும் ஒவ்வோருகட்டத்தில் பகைத்துள்ளார். பின்னர் அவற்றை ஏதாவது ஒரு விதத்தில் திருப்திப்படுத்தியுள்ளார். அதே வேளையில் சில நாடுகளிற்கு சாதகமாகவும் நடந்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பொருளாதர சமூக அபிவிருத்திக்கான பிரதிச் செயலரான சீனாவை சேர்ந்த ஷா ஜுக்காங் ஐநாவின் ஒரு மூடிய அறைக்குள் 2010இல் பிற்பகுதியில் நடந்த கூட்டத்தில் பான் கீ மூனை வைத்து வாங்கு வாங்கென்று வாங்கியதாக இலண்டன் ரெலிகிராf பத்திரிகை தெரிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டிருந்த பான் கீ மூன் சீனாவைச் சமாதானப் படுத்தும் முயற்ச்சியில் ஈடுபட்டார். சீனாவைத் திருப்திப் படுத்த நோபல் பரிசு வென்ற சீனரான லியூ ஷியாபோவை பாராட்ட மறுத்தார் பான் கீ மூன்.
போட்டியிட யாரும் முன்வரவில்லை
பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்புரிமை கொண்ட நாடுகள் எவையும் இதுவரை பான் கீ மூனிற்கு போட்டியாக எவரையும் முன் மொழிந்ததாகத் தெரியவில்லை. தெரியாத தேவதையிலும் பார்க்க தெரிந்த பேய் பரவாயில்லை என்று அவை கருதுவது போல் தெரிகிறது. மேற்கத்திய ஐநா அரசதந்திரிகள் ஒருவர் “It’s not as if he’s lightning in a bottle, but we can live with him.” என்று தெரிவித்ததாகச் செய்திகள் வந்துள்ளன.
பான் கீ மூனைப் பற்றி மோசமான விமர்சனங்கள்
- உலக நெருக்கடிகளிற்கு ஐநாவின் செயற்பாடுகள் தேவைப் படும் நேரங்களில் பான் கீ மூன் அமைதியாக இருப்பதாகவும், உலக நிதி நெருக்கடி ஏற்பட்ட வேளையில் தனது தலைமைத்துவத்தை வெளிக்காட்டவில்லை என்றும் நோர்வேயின் ஐநாவிற்கான நிரந்தரப் பிரதிநிதி மோனா ஜூல் குற்றம் சுமத்தியிருந்தார். ஒரு அமெரிக்க ஊடகம் இவரை உலகின் மிக ஆபத்தான கொரியநாட்டவர் என்று வர்ணித்தது.
- பான் கீ முனிற்கு முன்னர் இருந்த கோபி அனன் அவர்கள் சிறந்த தோற்றமும் தெளிவான பேச்சுத் திறனும் கொண்டவர். அவரைத் தொடர்ந்து வந்த பான் கீ மூன் ஒரு தெரியாத நகரத்தில் பணப்பையைத் தொலைத்த பயணி போல் எப்போது காட்சியளிப்பார். புன்னகைக்கவே மாட்டார். பான் கீ மூனின் பேச்சு தம்மை நித்திரை கொள்ளச் செய்வதாகப் பல ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
- "பான் கீ மூனின் செயற்பாடுகளிற்கு எதிராக கலையும் அமைதி" என்ற தலைப்பிட்டு 22-07-2010இல் ஒரு செய்தி அவர் பதவி ஏற்றதைத் தொடர்ந்து வெளிவந்தது. அதில் பான் கீ மூனின் மோசமான ஆங்கில அறிவும் அவரது தொடர்பாடல் திறமையின்மையும் அவரது முதற் பேச்சிலேயா வெளிப்பட்டு விட்டதாம். இதன் பின்னர் அவருக்கு ஆங்கிலப் பயிற்ச்சியும் தொடர்பாடல் பயிற்ச்சியும் வழ்ங்கியும் போதிய முன்னேற்றம் கிடைக்கவில்லை. பின்னர் தொலைக்காட்சிகளில் தோன்றுவதை தவிர்க்குமாறு இவருக்கு ஆலோசனை வழங்கப் பட்டது. இதனால் பாவம் இவரது பேச்சாளர் பர்ஹன் ஹக் பலதடவைகள் நிரூபர்களால் வறுத்தெடுக்கப்பட்டார்.
- பான் கீ மூனிற்கு சுவீடனைச் சேர்ந்த உதவிப் பொதுச் செயலாளர் இங்கா பிரித் ஆலெனியஸ் (under-secretary general Inga-Britt Ahlenius) அவர்கள் எழுதிய இரகசிய உள்ளகக் கடிதம் இப்போது வெளிவந்துள்ளது. அப்பெண்மணி ஐநா பொதுச் செயலகம் "அழுகத்" தொடங்கிவிட்டது துண்டுகளாக் விழப் போகிறது, ஐநா தேவையற்ற ஒன்றாகப் போகிறது என்று தான் மனவருத்தத்துடன் தெரிவிக்கிறேன் என்றார்.
- 2009 டிசம்பரில் கொப்பெனஹின்னில் நடந்த உலக வெப்பமயமாதல் மாநாட்டிலும் பான் கீ மூனின் தலைமைத்துவத் திறமையின்னமை நன்கு வெளிப்பட்டது. பான் கீ மூனின் இரண்டாம் பதவிக்காலத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்த சிலர் இந்த மாநாட்டின் பின்னர் தம் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர்.
- ஐநாவைப்பற்றி பல புத்தகங்கள் எழுதிய நியூ யோர்க் பல்கலைக் கழக அரசியற் துறைப் பேராசிரியர் தோமஸ் வைஸ் அவர்கள் இதுவரை இருந்த ஐநா பொதுச் செயலர்களுள் பான் கீ முன் மிக மோச மானவர் என்று குறிப்பிடுகிறார்.
மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் பிலிப்பே பலோப்பியன் பான் கீ மூனைக் கடுமையாக விமர்சிப்பவர்களில் ஒருவர். மனித உரிமைக் கண்காணிப்பகம் இந்த ஜனவரியில் வெளியிட்ட அறிக்கையில் பான் கீ மூன் மனித உரிமை மீறுபவர்களை கண்டிப்பதில்லை என்ற குற்றச் சாட்டைத் தெரிவித்தது. இந்த அறிக்கையை வெளியிட்ட பிலிப்பே பலோப்பியன் பான கீ மூன் இரண்டாம் முறை தெரிவு செய்யப் படத் தகுதியற்றவர் என்றார். 2010 நவம்பரில் பான் கீ மூன் சீனா சென்று சீனத் தலைவரைச் சந்தித்த போது சீனாவின் மனித உரிமை மீறல்களைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்காததையிட்டு பிலிப்பே பலோப்பியன் தனது கவலையையும் வெளியிட்டார்.
அமைதியான அரசதந்திரி
பான் கீ மூன் அமைதியாக இருந்து காரியத்தைச் சாதிப்பவர். அவர் பகிரங்கமாக கருத்துரைப்பது குறைவு என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். ஜப்பானிய அரசதந்திரி ஒருவர் ஒரு படி மேலே சென்று பான் கீ மூன் ஒரு யோகி போன்றவர் என்றார். யோகி என்ன செய்கிறார் என்பதுதான் முக்கியம். அவரது பேச்சல்ல என்றார். ஆனால் மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் பிலிப்பே பலோப்பியன் பான் கீ மூன் தனது செய்ற்பாடின்மையை அமைதியான அரசதந்திரம் என்னும் போர்வைக்குள் மூடி மறைக்கிறார் என்கிறார்.
பான் கீ மூன் இப்போது பாதுகாப்புச் சபையின் தற்காலிக உறுப்புரிமை கொண்ட பொஸ்னியா-ஹெஜெகோவினா, பிரேசில், கபன், கொலம்பியா, ஜேர்மனி, இந்தியா, லெபனான், நைஜீரியா, போர்த்துக்கல், தென் ஆபிரிக்கா வற்றை தம் வசப்படுத்தும் முயற்ச்சியில் இறங்கியுள்ளார். அந்த நாடுகளுக்கு பயணங்களையும் மேற்கொண்டு வருகிறார்.
பான் கீ மூனும் இந்தியாவும்
பான் கீ மூனிற்கும் இதியாவிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. அவர் இந்தியாவில் கொரிய அரசதந்திரியாகப் பணியாற்றியவர். அவரது இளைய மகள் சித்தார்த் சட்டர்ஜி என்னும் இந்தியப் படைத்துறையைச் சேர்ந்தவரை மணம் முடித்துள்ளார். அவரது பிரதம ஆலோசகர் விஜய் நம்பியார் என்னும் இந்தியர் (தமிழர்களால் பெரிதும் வெறுக்கப்படும் ஒருவர்). சரியான நேரத்தில் இந்தியா பாதுகாப்புச் சபையின் தற்காலிக உறுப்புரிமையைப் பெற்றுள்ளது. இந்தியாவின் உறுப்புரிமை 2012 வரை இருக்கும். பாதுகாப்புச் சபையில் இந்தியா தனக்குச் சாதமாக வாக்களிக்க பான் கீ மூன் இந்தியாவிற்கு என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி இங்கு எழலாம். இதற்கான பதில் இந்தியாவின் ஐநாவிற்கான நிரந்தர உறுப்பினர் ஹர்தீப் சிங் பூரியின் மனைவி லக்ஷ்மி பூரிக்கு ஐநாவின் பெண்கள் அமைப்பில் பிரதிப் பொதுச் செயலாளர் பதவியை பான் கீ மூன் வழங்கியதில் இருக்கிறதா? ஹர்தீப் சிங் பூரியின் மனைவி லக்ஷ்மி பூரிக்கு ஐநாவின் பெண்கள் அமைப்பில் பிரதிப் பொதுச் செயலாளர் பதவி வழங்கியது ஒரு முறை கேடான செயல் இல்லையா என்றும், இது இந்தியா தனக்கு வாக்களிக்க பான் கீ மூன் செய்த வேலையா என்றும் Inner City Press சந்தேகம் எழுப்பியுள்ளது. ஏற்கனவே தனது இந்திய மருமகனுக்கு பான் கீ மூன் பதவி உயர்வு வழங்கியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பான் கீ மூனின் மருமகன் சித்தார்த்தை சட்டர்ஜீ ஐநாவின் திட்டச் சேவைகளில் நியமித்தது ஒரு பதவி உயர்வு அல்ல என ஐநா பேச்சாளர் தெரிவித்தார். ஆனால் சித்தார்த் சட்டர்ஜீ செயற்படாமல் இருந்தமைக்காக அவர் அங்கு ஒரு தளபாடம் போல் இருக்கிறார் என்று விமர்சிக்கப்பட்டார். சித்தார்த் எந்த தகமையில் நியமிக்கப்பட்டார் அவரது தகமைகள் என்ன என்ற கேள்விகளுக்கு ஐநா பதிலளிக்கவில்லை. சித்தார்த்திற்கு ஐநா செலவில் அடிப்படை கணிதக் கல்வியும் புகட்டப்பட்டது. பான் கீ மூனின் இரண்டாம் ஆட்டத்திற்கு மருமகன் தடையாக அமையாலாம் என்பதால் அவர் இப்போது அப்பதவியில் இருந்து விலகியுள்ளார் என்று அறிய்பப்படுகிறது.
இதுவரை இருந்த எட்டு ஐநா பொதுச் செயலாளர்களுள் பான் கீ மூனே தீவிர அமெரிக்க விசுவாசி. அவரது நாடான தென் கொரியா அமெரிக்காவுடன் நல்ல உறவை வைத்துள்ளது. இது பான் கீ மூனின் மீள் தெரிவு செய்யப்படும் வாய்ப்புக்களை அதிகரிக்கும்.
© 2011-03-14- Vel Tharma
Sunday, 13 March 2011
கணக்காளர்கள் பற்றிய நகைச்சுவைகள் © 2011 Vel Tharma
கணக்காளர்கள் எல்லாரும் மன்மதக் குஞ்சுகளா?
ஆம்! நல்லா பிகர் மெயின்ரெயின் பண்ணுவாங்க.
ஒரு கணக்காளர் இறந்தபின் யமனுடைய உலகத்திற்கு விசாரணைக்காக் கொண்டு செல்லப்பட்டார். காரணம்? யமன் சித்திர புத்தினராரின் கணக்குக்குப்படி கணகாளரின் வயது 47வருடங்கள்; கணக்காளரின் time sheets(வேலைநேரப் பதிவுகள்) அனைத்தையும் கூட்டினால் 123 வருடங்கள் இதுபற்றி நான் விசாரிக்க வேண்டும் என்றான்.
இது அந்த மாதிரிப் பகிடி
How accountants do it...
Accountants do it by the book.
Accountants do it within budget.
Accountants do it to the bottom line.
Accountants do it with double entries.
Accountants do it between spreadsheets.
Accountants are Certified to do it in Public.
Accountants do it without losing their balance.
கணக்காளருக்கும் சட்டவாளருக்கும் என்ன வித்தியாசம்?
கணக்காளருக்குத் தெரியும் தான் boring என்று.
ஒரு கணக்காளரான இளம் பெண்ணை கரெக்ட் பண்ணச் சொல்ல வேண்டியவை.
Pick-Up Lines to use on Accounting Chicks
- You've got a lovely pair of W-2's.
- Please, baby, let me withhold you.
- Nice assets.
- Lady, you make my pants file for an extension.
- In my office, I.R.S.(வருமான வரி இலாகா) stands for I'm Really Sexy.(
- Let's fill out a 1040 - you are a 10 and I'm a 40.
- If I help you screw Uncle Sam, can I be next?
- Technically, having sex with me is like a charitable gift.
- You're entitled to a $5,000 tax break on your municipal bond income... now let's do it.
- You're the kind of girl I could take home to mother - which is good, since I still live with her.
கணக்காளர்கள் ஏன் நாவல் புத்தகங்கள் வாசிப்பதில்லை?
ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு மூலையில் மட்டும் இலக்கம் இருக்கும் - பக்க எண்.
கணக்காளர்கள் போரடிப்பார்கள்( Accountants are boring)
ஒரு இளம் பெண்ணைப் பரிசோதனை செய்த மருத்துவர் நீ இன்னும் ஆறு மாதங்கள் மட்டுமே வாழ்வாய் என்றார். ஒரு மாற்று வழியும் இல்லையா நான் நீண்டகாலம் வாழ என்று கேட்டாள் அவள். அதற்கு மருத்துவர் சொன்னார் மருத்துவத்தில் வழியில்லை ஆனால் எனது ஆலோசனை நீ ஒரு கணக்காளரை திருமணம் செய்து கொள் என்றார். அது எப்படி எனக்கு உதவும். அதற்கு மருத்துவர் நீ ஒரு கணக்காளரோடு ஆறு மாதம் வாழ்ந்தால் ஆறு வருடங்கள் போல் இருக்கும் என்றார்.
அந்தக் கணக்காளரான இளஞன் தன் காதலியை Natural History museum அழைத்துச் சென்றான். காதலி ஒரு டைனோடரின் எலும்புக் கூட்டை வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் போது கணக்காளர் சொன்னான் இந்த டைனோசர் இரண்டு மில்லியன் வருடங்களும் பத்து மாதங்களும் பழமையானது என்றான். உங்களுக்கு எப்படித் தெரியும் என்றாள் காதலி. நான் பத்து மாதங்களுக்கு முன் இங்கு வந்த போது இது இரண்டு மில்லியன் வருடங்கள் பழமையானது என்று எழுதப் பட்டிருந்தது என்றான் கணக்காளர்.
கணக்காளரின் மனைவிக்கு நித்திரை வராவிட்டால் என்ன செய்வாள்?
தனது கணவனிடம் அவன் வேலையைப் பற்றிச் சொல்லச் சொல்லுவாள்.
© 2011 March 14th Vel Tharma
Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...