சூளக வம்சத்தை சுடுகாடனுப்பிமகா வமசத்தை வழிகாட்டியாக்கிதமிழனைப் பகையாளியாக்கினீர்இன்று திடீர் நூடில்ஸ் அல்ல என்கிறீர்வேதியனையும் குழந்தையையும்
கொதிதாரில் போட்டு கொன்று
பௌத்தம் வாழ்க என உரக்கக் கத்தினீர்
இன்று திடீர் நூடில்ஸ் அல்ல என்கிறீர்
சோல்பரி என்றொரு பேமானி
போட்டுவைத்த சிக்கலிது
என்றோ தீர்திருக்க வேண்டியது
இன்று திடீர் நூடில்ஸ் அல்ல என்கிறீர்
ஆட்சி மொழி உம் மொழியென்றீர்
கேட்க வந்தோரை பாராளமன்று முன்
காடையரால் உதைத்துத் தள்ளினீர்
இன்று திடீர் நூடில்ஸ் அல்ல என்கிறீர்
இந்திரா காந்தியின் பேராதிக்க கொள்கை
போட்டு மூட்டிய தீ சோறு சமைக்கு முன்னே
சல்லடையாகப் பிணமாய்ச் சரிந்தார்
இன்று திடீர் நூடில்ஸ் அல்ல என்கிறீர்
ராஜீவ் காந்தியின் முட்டாள்த்தனம்
பிசைந்து தப்பும் சப்பாத்தியென
எண்ணி ஏமாந்த கதையறிவீர்
இன்று திடீர் நூடில்ஸ் அல்ல என்கிறீர்
தமிழன் கறி விற்று மகிழ்ந்த
கதை தன்னை மறந்திட்டீரோ
முள்ளிவாய்க்கால் கொள்ளியும் மறந்தீரோ
இன்று திடீர் நூடில்ஸ் அல்ல என்கிறீர்
டட்லி-செல்வா அரசை இட்லி என்றீரே
மசால வடை அரசென இகழ்ந்தீரே
டட்லியில் நல்லெண்ணை மணந்தது அறியீரோ
இன்று திடீர் நூடில்ஸ் அல்ல என்கிறீர்
புளித்துப் போன அப்பம் இது
கருகிப் போன "கவும் பணியாரம்" இது
நாறிப்போன கருவாடிது
தீர்க்க முடியா இடியப்பச் சிக்கலிது
அன்று இந்தியாவை எதிரியென்றீர்
இந்தியா உமக்கிருக்கின்றது என்கிறீர்
இந்தியா என்ற ஒரு நாடு இருக்கும் வரை
தமிழன் தலை நிமிர முடியாதென என நாமறிவோம்