ஒரு மருந்துக் கடையில் ஒரு அழகிய பெண் தனக்கு நஞ்சு வேண்டும் என்றாள். அதற்கு மருந்தாளர் நஞ்சு ஏன் வாங்குகிறாய் எனக் கேட்டார். என் கணவனைக் கொல்வதற்கு என்றாள். ஆணினவாதியான அந்த மருந்தாளர் மிகுந்த ஆத்திரப்பட்டு. காவற்துறையை அழைத்து உன்னைக் கைது செய்யப்போகிறேன் என உரத்த குரலில் சத்தமிட்டு மிரட்டினார்.
அந்த அழகி பதட்டப்படாமல் நிதானமாக தனது கைப்பையைத் திறந்து அதற்குள் இருந்த ஒரு புகைப்படத்தை வெளியே எடுத்து அந்த மருந்தாளர் முன் வைத்தாள். அதில் அவளது கணவனும் மருந்தாளரின் மனைவியும் ஒன்றாக ஒரு கட்டிலில் தம்மை மறந்த நிலையில் இருந்தனர். இப்போது அமைதியடைந்த மருந்தாளர் ஓ நீ உரிய மருந்துச் சீட்டு வைத்திருப்பதால் உனக்கு நான் நஞ்சு தருகிறேன் என்றார்.
நான்கு தீபங்கள்
ஒரு ஆலயத்தில் நான்கு தீபங்கள் ஒரு வரிசையில் ஏற்றப்பட்டிருந்தன. ஒரு தீபம் என் பெயர் அமைதி இந்த உலகில் நான் இல்லை எனச்சொல்லிவிட்டு அணைந்து போனது. இரண்டாவது தீபம் நான்தான் சமாதானம் இந்த உலகில் நான் இல்லை என்று சொல்லிவிட்டு அணைந்தது. மூன்றாவது தீபம் என்பெயர் அன்பு நான் இந்த உலகில் இல்லை எனச் சொல்லிவிட்டு அணைந்து போனது. நான்காவது தீபம் நான்தான் நம்பிக்கை நான் அணைந்தால் எல்லாமே போய்விடும் நான் இருக்கும் வரை மற்ற மூன்று தீபங்களையும் என்னால் மீண்டும் ஏற்ற முடியும் என்றது.
Saturday, 6 April 2013
Friday, 5 April 2013
கவிதை: ஏதும் அறியாமல் சிந்தையில் பிணைந்தோம்
விழியின் மொழிகள்
செய்த சத்தியப் பிரமாணங்கள்
கண்ணீரில் எழுதிய கவிதையானது
கனவின் மேடையில்
மாற்றிய மண மாலைகள்
காற்றில் வரைந்த ஓவியமானது
நினவுக் கட்டிலில்
இணைந்த உடலாசைகள்
கலைந்த மேகங்களானது
இல்லாவிடில் பெரும் பிரச்சனையாய் இருப்பதால்
எங்கு தொட்டால் என்னாகும் என்ற அறிவு தேவைப்படுவதால்
அருகிருந்தால் சுகமாய் இருப்பதால்
ரிமொட் கொன்ரூலும் பெண்ணினமே
அற்றை யாண்டில்
சாறு கொள் பூமியில்
கழுவுறு கலிங்கம் பூண்டு
எந்தையும் நுந்தையும்
ஏதும் அறியாமல்
சிந்தையில் பிணைந்தோம்
Thursday, 4 April 2013
ஒன்றாய் இணைவோம் ஓரணி நடப்போம்
சூழ் சதியங்கே வலிமையாகிட வலிமையாகிட - தமிழர்
போரணியதில் மௌனமாகிட விலகி ஒதுங்கிட
பேரழிவு அங்கே அரங்கேறிட பலவும் அழிந்திட
இடர்கள் பெருகிட மானுடர்களோடு மானுடமும் பலியானது
தீர்க்கவெனவந்தவர் அங்கே எமைத் தீர்துக்கட்டினர் - அதைக் கேட்க
ஒன்றாய் இணைவோம் ஓரணி நடப்போம்
மௌனிக்கப்பட்டது படைக்கலன்கள் மட்டுமே
மௌனித்திடுமோ தமிழ் மறவர்தம் மனச்சாட்சி
போரலை ஓயலாம் வேங்கைகள் பதுங்கலாம் - தன்மானப்
பேரலை என்றும் ஒயாது தமிழர் தலை சாயாது - என்றிட
ஒன்றாய் இணைவோம் ஓரணி நடப்போம்
பீனிக்ஸ் பறவையும் சொல்லட்டும் சொல்லட்டும்
தமிழனைப்போல் நானும் மீண்டெழுவேன் மீண்டெழுவேன் என
நீரலையும் ஆங்கே ஆர்ப்பரிக்கட்டும் ஆர்ப்பரிக்கட்டும்
தமிழரனைப்போல் நான் விழ விழ ஓயாமல் எழுவேன் என - அதற்கு
ஓன்றாய் இணைவோம் ஓரணி நடப்போம்
தாயகத் தமிழரின் போரகப் பரணியை
கருத்தில் எடுப்போம் கைகளைத் தொடுப்போம்
தடைகளை உடைப்போம் சரித்திரம் படைப்போம் - அதற்கு
ஒன்றாய் இணைவோம் ஓரணி நடப்போம்
தாரணி போற்றும் சீரணி இலண்டனில்
ஓன்றாய் இணைவோம் ஓரணி நடப்போம்
பேரணியாய் திரள்வோம் ஊரணியாய் எழுவோம்
பன்னாட்டாரின் மனக்கதைவைத் தட்டுவோம் தகர்ப்போம் - அதற்கு
ஒன்றாய் இணைவோம் ஓரணி நடப்போம்
ஒவ்வோரு நாடும் எம் நிலையறிந்திட
ஒவ்வொரு நாடும் எம்முடன் இணைந்திட
நீதியை உரைப்போம் நியாயத்தை நிலைநிறுத்துவோம்
ஈழவிடுதலையின் அடுத்த படியை இலண்டனில் கடப்போம்- அதற்கு

வட கொரியாவின் வீராப்பும் சீனாவின் சங்கடமான நிலையும்
வட - தென் கொரியாக்கள் வட கொரியாவின் கேசோங் நகரின் இணைந்து உருவாக்கிய கைத்தொழிற்பேட்டைக்கு தென் கொரிய ஊழியர்கள் செல்வதை வட கொரியா தடுத்ததைத் தொடர்ந்து கொரியத் தீபகற்பகத்தில் மீண்டும் பதட்டம் எழுந்தது. சீனா இது தொடர்பாக தனது கடும் கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.
வட - தென் கொரியாக்களின் முறுகல் நிலை தொடர்பான முந்தைய பதிவைக்காண இங்கு சொடுக்கவும்
சீனாவின் அயல் நாடும் ஒரே ஒரு நட்பு நாடும் வட கொரியாவாகும். ஆனாலும் இரு நாடுகளும் ஒன்றை ஒன்று பலத்த சந்தேகத்துடன்தான் நோக்குகின்றன. சோவியத்தின் நட்பு நாடாக இருந்த வட கொரியா 1991இல் சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் தனித்து இயங்கத் தீர்மானித்தது. ஆனாலும் பல பொருளாதாரப் பிரச்சனைய்களை வட கொரியா எதிர் நோக்க வேண்டி இருந்தது. முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கையை கடைப்பிடித்த தென் கொரியா பெரும் பொருளாதார வளர்ச்சியடைந்து ஆசியாவில் இரண்டாவது வளர்ச்சியடைந்த நாடாகியது (Developed Country). வட கொரியப் பொருளாதாரப் பிரச்சனை அங்குள்ள அரசைக் கவிழ்த்து அதுவும் தென் கொரியாவைப்போல் ஒரு அமெரிக்க ஆதரவு நாடாக மாறாமல் இருக்க சீனா வட கொரியாவிற்கு பல பொருளாதார உதவிகளைச் செய்து வருகிறது.
வட கொரிய அணுக்குண்டு வரலாறு
1961இல் சோவியத் ஒன்றியத்தின் உதவியுடன் வட கொரியா தனது அணுத் தொழில் நுட்பத்தை தொடக்கியது. 1961இல் அணுமின் உலையை வட கொரியா உருவாக்கியது. 1985இல் மேலும் அதை அபிவிருத்தி செய்தது. வட கொரியாவின் அணுத் தொழில் நுட்பத்தை விரும்பாத அமெரிக்காவும் தென் கொரியாவும் 1994இல் வட கொரியாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து வட கொரியாவின் அணுக்குண்டு உற்பத்தியை நிறுத்தி வட கொரியாவில் இரு மென்னீர் அணு உலைகளை அமைத்துக் கொடுத்தன. பின்னர் 1991இல் வட கொரியா பாக்கிஸ்த்தானிய அணு விஞ்ஞானி A Q கானிடமிருந்து யூரேனியம் பதப்படுத்தும் தொழில்நுட்பத்தைப் பெற்றுக் கொண்டது. 1998இல் ஏவுகணைத்தொழில் நுட்பத்தையும் விண்வெளிக்கு செய்மதி அனுப்பும் தொழில்நுட்பத்தையும் உருவாக்கியது. 2002இல் வட கொரியா அமெரிக்காவுடனும் தென் கொரியாவுடனும் 1994இல் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறி அணுக் குண்டுகளை உருவாக்க ஆராய்ச்சிகள் செய்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. 2003இல் வட கொரியா பன்னாட்டு அணுப்படைக்கலன் பரவலாக்கத் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது. 2006 வட கொரியா தனது முதலாவது அணுக்குண்டை வெடித்துப் பரிசோதித்தது. இதைத் தொடர்ந்து அறுவர் குழுப் பேச்சுவார்த்தை எனப்படும் அமெரிக்கா, சீனா, தென் கொரியா, இரசியா யப்பான் ஆகிய நாடுகளுடன் வட கொரியா ஒரு அணுக்குண்டு தொடர்பான பேச்சு வார்த்தையை மேற்கொண்டது. 2007வரை தொடர்ந்த இந்தப் பேச்சு வார்த்தை இறுதியில் வட கொரியா தனது அணுக்குண்டு உற்பத்தியை நிறுத்துவதாகவும் பன்னாட்டு அணுப்படைக்கலன் பரவலாக்கத் தடை ஒப்பந்தத்தில் மீளிணைவதாகவும் அறிவித்தது. பதிலாக வட கொரியாவிற்கு நிதி உதவி செய்வதாகவும் உறுதியளிக்கப்பட்டது. தொடர்ந்து 2008இல் வட கொரிய தனது அணு உலை ஒன்றை மூடியது. 2009இல் நீண்ட தூரம் பாயும் ஏவுகணைகளை உருவாக்கிய வட கொரியா அறுவர் குழுப் பேச்சுவார்த்தையில் இருந்து விலகியது. 2009 ஜூனில் வட கொரியா தனது இரண்டாவது அணுக்குண்டை வெடித்துப் பரிசோதித்தது. உலகப் பொருளாதார வீழ்ச்சியால் பல வட கொரியர்கள் வறுமையால் வாடினார்கள். இதைத் தொடர்ந்து 2012 பெப்ரவரியில் வட கொரியா தனது அணுக்குண்டு உற்பத்தியை நிறுத்தி அமெரிக்காவில் இருந்து உணவைப் பெற்றுக் கொன்டது. 2012 டிசம்பரில் வட கொரியா தனது பலதட்டு ஏவுகணையை விண்ணில் செலுத்த முயன்றது. அது இரண்டு நிமிடத்தில் வெடித்துச் சிதறியது. 2013 மார்ச்சில் வட கொரியா தனது மூன்றாவது அணுக்குண்டை வெடித்துப் பரிசோதித்தது. இதைத் தொடர்ந்து வட கொரியாவிற்கு எதிரான புதிய தடைகள் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் நிறைவேற்றப்பட்டது.
வட கொரியாவின் மூன்றாவது அணுக்குண்டு வெடிப்பைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்கா தென் கொரியாவில் தனது படைபலத்தை அதிகரித்து வருகிறது. அமெரிக்கா தனது படை நகர்த்தல்கள் எதையும் இரகசியமாகச் செய்யவில்லை. வட தென் கொரிய முறுகல் நிலை ஒரு புறம் கிழக்குச் சீனக் கடலில் சீன ஜப்பான் முறுகல் மறுபுறம் யப்பானியக் கடலும் மஞ்சள் கடலும் கொதி நிலையில் இருக்கையில் ஒரு தவறான படை நடவடிக்கை பெரும் மோதலை உருவாக்காமல் இருக்கவே ஐக்கிய அமெரிக்கா தனது தென் கொரியாவைப் பாதுகாக்கும் படை நகர்த்தல்களைப் பகிரங்கமாகச் செய்து வருகிறது. அமெரிக்காவின் நவீனரக விமானங்கள் தனகு கிழக்குக் கொல்லைப் புறத்தில் நடமாடுவதை சீனா விரும்பவில்லை. ஆனால் வட கொரியா ஒரு அணுக்குண்டு நாடாக மாறுவதை அமெரிக்கா ஒரு போதும் அனுமதிக்காது. வட கொரியாவின் அணுக்குண்டு உற்பத்தியை சீனா தடுக்காமல் இருப்பது பல படைத்துறை வல்லுனர்களை ஆச்சரியதில் ஆழ்த்தியுள்ளது.
வடகொரியாவைத் தடுக்காத சீனா
அமெரிக்கா மீது அணுக்குண்டுத் தாக்குதல் நடத்தப்போவதாக வட கொரியா விடுத்த மிரட்டல் சீனாவைச் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. வட கொரிய சீன நாடுகளுக்கும் இடையில் நட்பு ஒப்ப்னதமும் செய்யப்பட்டுள்ளது. வட கொரியாவின் அண்மைக்கால நடவடிக்கைகள் பலா சீனாவை அதிருப்திக்கும் ஆத்திரத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. வட கொரியாவையும் தனது பகை நாடாக மாற்ற சீனா விரும்பவில்லை. சீனாவை சுற்று பல எதிரி நாடுகள் சீனாவிற்கு இருக்கின்றன. ஜப்பான், வியட்னாம், பிலிப்பைன்ஸ் உடபடப் பல நாடுகளுடன் கிழக்குச் சீனக் கடலிலும் தென் சீனக் கடலிலும் கடுமையான முறுகல் நிலையில் சீனா இருக்கிறது. வட கொரியா தென் கொரியாவாலும் அமெரிக்காவாலும் ஆக்கிரமிக்கப்பட்டோ அல்லது ஒரு உள்நாட்டுப் புரட்சியின் மூலமோ வட கொரியா அமெரிக்க சார்பு ஆட்சியாளர்களின் கைகளுக்குப் போவதையும் சீனா விரும்பவில்லை. கடந்த காலங்களில் சீனாவின் பல ஆலோசனைகளை வட கொரியா நிராகரித்திருந்தது. முக்கியமாக தனது நாட்டின் பொருளாதாரக கொள்கைகளை ஒத்த பொருளாதாரக் கொள்கையை வட கொரியாவில் கடைப்பிடிக்கும் படி சீனா வட கொரியாவிற்கு ஆலோசனை வழங்கியது ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. சீனா வட கொரியாவிற்கு வழங்கும் உதவிகளை நிறுத்தினால் வட கொரிய ஆட்சி கவிழ்ந்து விடும். சீனாவால் வட கொரியாவை அடக்க முடியும் என மேற்கு ஐரோப்பிய நாடுகளும் வட அமெரிக்க நாடுகளும் உறுதியாக நம்புகின்றன. ஆனால் சங்கடத்தில் சீனா!!!!

Wednesday, 3 April 2013
விஞ்ஞானி: ஆணினம் அழியப் போகிறது பெண்ணினம் ஆளப்ப்போகிறது
ஆண்களினதும் பெண்களினதும் DNA களின் செயற்பாட்டுப் போக்குகளை வைத்து ஆய்வு செய்த பிரபல ஒஸ்ரேலிய விஞ்ஞானியான பேராசிரியர் கிரேவ்ஸ் உலகில் ஆண் இனம் அழியப் போகிறது என்கிறார்.
The inherent fragility of the male sex chromosome, the Y sex chromosome, means that men are sliding towards extinction. இயல்பாகவே ஆண்களின் குரோமொசொம்மின் அழியக்கூடியதன்மை அவர்கள் அழிவை நோக்கிச் சரிகிறார்கள் என்கிறார் கன்பெரா பல்கைலைக்கழகப் பெண் விஞ்ஞானியான பேராசிரியர் கிரேவ்ஸ்.
பெண்களின் x குரோமொசொம்மில் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆரோக்கியமான ஜீன்கள் இருக்கின்றன. பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்களின் Y குரோமோசோமிலும் இப்படி ஆயிரம் ஆரோக்கியமான ஜீன்கள் இருந்தனவாம். ஆனால் இப்போது அவை நூறாகக் குறைந்துவிட்டன. இவற்றில் SRY geneகள் தான் ஒரு கரு ஆணா பெண்ணா என்பதைத் தீர்மானிப்பவை.
பெண்களின் x குரோசோம்கள் ஒன்றுடன் ஒன்று நட்பானவை ஒன்றில் உள்ள குறைபாடுகளை அவை தாமாகவே திருத்திக்கொள்ளும். ஆனால் ஆண்களின் Y குரோமொசோம்கள் அப்படியல்ல. தங்களின் பழுதுகளை அவை திருத்திக் கொள்வதில்லை. இதானால் பழுதடைந்து அழியக்கூடியவை. இதனால் அவற்றின் அழிவை நோக்கிய சரிவு தடுக்க முடியாதவை.
ஆனால் ஆண்கள் மகிழ்ச்சியடையக்கூடிய செய்தி என்ன வென்றால் ஆணினம் அழிவதற்கு இன்னும் ஐம்பது இலட்சம் ஆண்டுகள் எடுக்கும்.
ஆனால் University College London இன் பேராசிரியர் Chris Mason இதை வேறுவிதமாகப்பார்க்கிறார். Y குரோமொச்சொம் முற்றாக அழியாமல் வேறுவிதமாகக் கூர்ப்படைந்து வேறு ஒரு விதமான உயிரினம் உருவாகும் என்கிறார் அவர். (அந்தப் புதிய உயிரினம் புடவைக் கடையில் கோபம் கொள்ளாமல் பொறுமையாக இருந்து வாங்கியவற்றிற்கு எல்லாம் பணம் செலுத்துமோ?)

Tuesday, 2 April 2013
பல முனைகளில் சீனா பாதுகாப்பு இரகசியங்களைத் திருடுகிறது.
அமெரிக்கப் பாதுகாப்புத்துறையின் ஒப்பந்தக்காரர் பெஞ்சமின் பிஷப் அமெரிக்க பாதுகாப்பு இரகசியங்களை திருடி தன்னிலும் அரைப்பங்கு வயதுடைய தனது காதலிக்கு கொடுத்தமை தொடர்ப்பாக கைது செய்யப்பட்டது சீனா மற்ற நாடுகளின் பாதுகாப்பு இரகசியங்களை பல முனைகளில் திருடுகிறது என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
எனக்கு 59 உனக்கு 27
பெஞமின் பிஷப் அமெரிக்காவின் பசுபிக் பிராந்தியத்தில் எதிரிகளைக் கையாளும் முறைமை தொடர்பான ஒப்பந்த வேலைகளைச் செய்தவர். 59வயதான பெஞமின் பிஷப் 2011இல் அமெரிக்காவில் உள்ள ஹவாயில் நடந்த ஒரு பாதுகாப்புத்துறை தொடர்பான மாநாட்டில் 27வயதான சீன மாணவியைச் சந்தித்தார். அன்றிலிருந்து அவர்கள் இருவரும் காதலர்களானார்கள். சீன மாணவியின் பெயர் இதுவரை வெளிவிடப்படவில்லை பெஞமின் பிஷப் எதிராக நடக்கும் வழக்கில் அவர் நபர் - 1 எனவே குறிப்பிடப்பட்டுள்ளார். சீன மாணவி மாணவ அனுமதிப்பத்திரத்தில் அமெரிக்காவில் வசித்தவர். பெஞ்சமின் பிஷப் அமெரிக்க பசுபிக் கட்டளையகத்தில் lieutenant colonel in the U.S. Army Reserve ஆகப் பணிபுரிந்தவர்.
பெஞ்சமின் பிஷப்பின் வீட்டைச் சோதனையிட்ட போது அமெரிக்கப் படைத்துறையின் பல இரகசிய தகவல்களடங்கிய பத்திரங்களை கண்டெடுத்தனர்.
2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் தாய்வானைச் சேர்ந்த Ko-Suen Moo என்பவர் அமெரிக்காவில் F-16 jet engine and cruise missiles போன்றவற்றை வாங்க முயன்றமைக்காக கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் தான் சீனாவிற்காகவே இவற்றை வாங்க முயன்றாதாகவும் ஒப்புக் கொண்டார்.
Noshir Gowadia என்னும் இன்னொருவர் அமெரிக்க விமானப்படையின் B-2 விமானங்களின் உந்து முறைமைக்கு ((propulsion system) பொறுப்பானவர். இவரும் வெளிநாடுகளுக்கு இரகசியங்களை விற்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். இவர் சீனாவிடமிருந்து $110,000 ஐப் பெற்றது கண்டறியப்பட்டது.
அமெரிக்கா தாயாரிக்கும் புதிய படைத்துறை உபகரணங்கள் ஆராய்ச்சிக்களுக்காகப் பெரும் செலவு செய்து உருவாக்கப்படுகின்றன. அவை மிகவும் புதியரக ட்தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கும். சீனா இத்துறையில் பல ஆண்டுகல் பின் தங்கிய நிலையில் இருக்கிறது. இந்த இடைவெளியை அமெரிக்கத் தொழில்நுட்பங்களைத் திருடுவதன் மூலம் விரைவில் நிரப்ப முடியும்.
இணையவெளி ஊடுருவல்கள் செய்யப்பட்டு வர்த்தகரீதியான தகவல்களும் திருடப்படுகின்றன. ஒரு நிறுவனம் பெரும் தொகப் பணம் செலவழித்து கண்டுபிடித்த தொழில்நுட்பங்களை மற்ற நிறுவனங்கள் இணையவெளியூடாகத் திருடி விடுகின்றன. பல அமெரிக்க நிறுவங்களின் தொழில்நுட்ப இரகசியங்கள் பல சீனாவில் இருந்து திருடப்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
சீனாவிடம் "இணையவெளி நீலப் படைப்பிரிவு" என்ற பெயரில் இணையவெளி நிபுணர்களைக் கொண்ட ஒரு படைப் பிரிவு உண்டு. இவை "இரவு யாளி" என்னும் பெயரில் பிரித்தானியாவிற்கு எதிராக ஒரு படை நடவடிக்கையை மேற் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்கவிற்கு பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் லொக்கீட் நிறுவனத்தின் கணனிகள் தொடர் ஊடுருவல் முயற்ச்சிகளுக்கு உள்ளாகி வருகிறது. முழுக்க முழுக்க கூகிளின் இணையத் தளம் போல் போலியான ஒரு இணையத்தளத்தை சீனாவில் உருவாக்கி அதில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினர் உண்மை என நம்பி உள் நுழைந்து தமது மின்னஞ்சல்களின் கடவுச்சொற்களை பதிந்தனர். இதனால் பல இரகசியங்கள் திருடப்பட்டன. இணையவெளிப் போர்முனையில் சீனா முன்னணியில் இருக்கிறது என்று ஐக்கிய அமெரிக்கா அஞ்சுகிறது. இதனால் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை தனது இணையவெளிப் போர் முறைமைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளதாக 27-01-2013இலன்று செய்திகள் வெளிவந்தன.
பெஞ்சமின் பிஷப் விவகாரத்தின் பின்னர் சீனா இணைய வெளியூடாகவும் மரபுவழியாகவும் அமெரிக்க படைத்துறை மற்றும் தொழில்நுட்பத்துறை இரகசியங்களைத் திருடுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Monday, 1 April 2013
பார்ப்பனர்கள் மத்தியில் ஈழ விடுதலை பற்றிய கருத்து
முகநூலில்(Facebook) ஐயர்களும் ஐயங்கர்களும் The Iyer - Iyengar Network என்னும் பெயரில் ஒரு குழு அமைத்து வைத்திருக்கிறார்கள். பதின்மூவாயிரத்திற்கு மேல் உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவில் ஈழ விடுதலையைப் பற்றி தெரிவிக்கும் கருத்துக்கள் பார்ப்பனர்கள் மத்தியிலான ஒரு கருத்துக் கணிப்பாக எடுத்துக் கொள்ள முடியும்.
நிறையப் பெரிசுகள் இங்கு கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
The Iyer - Iyengar Network என்னும் குழுவில் "சுப்பிரமணிய சுவாமி, சோ, இந்து ராம் போன்றோர் வாழும் நாட்டைத் தமிழ்நாடு என்று அழைக்க முடியாது. ஒன்றில் இந்த தெருநாய்களை தமிழ்நாட்டில் இருந்து விரட்ட வேண்டும் அல்லது தமிழ்நாட்டின் பெயரை மாற்ற வேண்டும்" என்று ஒரு வாசகத்தை நிலைக்கூற்றாக எழுதினார். பார்ப்பனர்கள் எல்லோரும் வரிந்து கட்டிக் கொண்டு இதைக் கடுமையாகத் தாக்கத் தொடங்கி விட்டார்கள். ஒருவர் கூட இந்த மூவரின் கருத்துக்கள் தவறானவை என்று கூறவில்லை. அவர்களின் கூற்றில் இருந்து ஒன்றை உறுதியாகக் கூறலாம்: எல்லாப் பார்ப்பனர்களும் ஈழ விடுதலை தொடர்பாக இந்த மூவரின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறார்கள்.
சோ, சுவாமி, ராம் ஆகியோரைத் தாக்கி எழுதியவரை சூத்திரன் பறையன் பத்தாயிரம் அப்பனுக்குப் பிறந்தவன் என்றெல்லாம் தாக்கி எழுதினார்கள்:
தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு ஈழம்பற்றிக் கதைக்க அருகதை இல்லை என்றார்கள்:
ஈழவிடுதலைக்கு உதவியதற்காக எம் ஜி இராமச்சத்திரனையும் அதிகாரப் பசி கொண்ட அரசியல்வாதி எனத் தாக்கி எழுதினார்கள்:
பன்னாட்டு சமூகம் எஞ்சி இருப்பவர்களையும் கொன்றொழிக்க இலங்கைக்கு உதவ வேண்டும் என்றார்கள்:
இந்து ராம் சிங்களவர்களை எப்போதும் பாராட்டிக் கொண்டே இருப்பார். சோ விடுதலைப் புலிகளை ஒழித்ததன் மூலம் ராஜப்க்சே இந்தியாவிற்கு பல உதவிகளைச் செய்துள்ளார் அவரைப் பாராட்ட வேண்டும் என்றார். சுவாமி ராஜபக்சவிற்கு பாரத்ரத்னா விருது வழங்க வேண்டும் என்றார். ஆனால் இவர்கள் விடுதலைப் புலிகளை ஒழித்தமைக்காக ராஜபக்சவிற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்கிறார்கள்.
ஈழத் தமிழர்களை இவர்கள் எப்படி நினைக்கிறார்கள்? ஈழத்தில் தமிழர்கள் இந்தியாவில் இருந்து பிழைப்புத் தேடிப் போனவர்கள். அவர்கள் அங்கு தனிநாடு கேட்கக்கூடாது. கேட்டால் தோலை உரித்து விடுவார்கள்:
தமிழனுக்கு எதிரி தமிழனுக்குள்ளே தமிழ் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

Sunday, 31 March 2013
மிரட்டும் வட கொரியாவும் மீசை முறுக்கும் அமெரிக்காவும்
முப்பது வயதான கொரிய உச்சத் தலைவர் (Supreme Leader) கிம் ஜொங் உன் ஓர் அணுப்படைக்கலன் போரிற்கு உலகை இட்டுச் செல்வாரா என்ற அச்சம் தோன்றியுள்ளது. நீண்ட தூரம் பாயும் ஏவுகணைகள் புதிதாக உருவாக்கப்பட்ட அணுப் படைகலன்களை வைத்துக் கொண்டு கிம் ஜொங் உன் சும்மா மிரட்டுகிறாரா அல்லது போருக்குத் தயாராகிறாரா என்று தெரியாமல் தென் கொரியா தவிக்கிறது.
வட - தென் கொரிய முறுகலின் பின்னணி
1910இல் இருந்து 1945வரை ஜப்பானிய அட்டூழிய ஆட்சிக்குக் கீழ் இருந்த கொரியாவை ஜப்பானிடம் இருந்து அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் பிடுங்கிப் பங்கு போட்டுக் கொண்டன. கொரியா வட கொரியா தென் கொரியா என இரு நாடுகளாகப் பிரிந்தன. 1950இல் அமெரிக்காவிற்காகவும் சோவியத்திற்காகவும் இரு கொரியாக்களும் பலமாக மோதிக் கொண்டன. இருபது இலட்சம் பேர் பலியாகினர். 1953-ல் போர் முடிவுக்கு வந்தது. பின்னர் இரு நாட்டுக்கும் இடையில் தொடர்ந்து முறுகல் நிலை இருந்து வருகிறது. தென் கொரியா பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சி கண்டு ஆசியாவில் உள்ள அபிவிருத்தி அடைந்த இரண்டு நாடுகளில்( மற்றது ஜப்பான்) ஒன்றாகத் திகழ்கிறது. இரு கொரியாக்களும் ஒன்றை ஒன்று பெரும் பகையாளிகளாகக் கருதுகின்றன. மோசமான பொருளாதரத்தைக் கொண்ட வட கொரியா தனது படை வலிமையை பெருக்கிக் கொண்டே இருக்கிறது. நீண்ட தூர ஏவுகணைகளையும் வட கொரியா பரிசோதித்து வெற்றிகண்டுள்ளது. தென் கொரியா அமெரிக்காவிடமிருந்து பெருமளவு படைக்கலனகளை வாங்கி வைத்திருப்பதுடன் அமெரிக்காவுடன் மிக நெருங்கிய உறவைப் பேணுகிறது. தென் கொரியாவில் அமெரிக்க படைத்தளமும் இருக்கிறது. 1953இன் பின்னர் மிகவும் கொதி நிலையில் இருக்கும் எல்லையாக வட-தென் கொரிய எல்லை இருந்து வருகிறது. வட கொரியா தனது நாட்டின் பொருளாதாரப் பிரச்சனையை தனது படைபலப் பெருக்கத்தால் மறைத்து வருகிறது எனப்படுகிறது. இப்படிப் போட்டியுள்ள இரு நாடுகளில் ஒன்று அணுக் குண்டு தயாரித்தமை உலகை உலுக்கியுள்ளது. வட கொரியாவின் அணுக்குண்டு தயாரிப்பைத் தொடர்ந்து அதன் மீது அமெரிக்காவும் தென் கொரியாவும் பொருளாதாரத் தடையை விதித்தன. இது வட கொரியாவை மேலும் ஆத்திரப்படுத்தியது.
மிரட்டல் மேல் மிரட்டல்! மிரட்டலோ மிரட்டல்!!
வட கொரியாவின் அணுக்குண்டு உருவாக்கம் இரு பயங்களைத் தோற்றுவித்தது. சிறிய ரக அணுக்குண்டுகளை உருவாக்கி அதை வட கொரியா சில நாடுகளுக்கு விற்க முயலலாம். அது சில தீவிரவாதக் குழுக்களின் கைகளில் போய்ச் சேரலாம். மற்றது வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல்களை மேற்கொள்ளலாம். ஆனால் இப்போது வட கொரியா புதிதாக ஒரு மிரட்டலை விடுக்கிறது. கிம் ஜொங் உன் அமெரிக்க வரைபடத்தை வைத்து அமெரிக்காமீது எப்படி அணுக்குண்டுத் தாக்குதலை நடாத்துவது என்று தனது படைத்துறையின் உயர் அதிகாரிகளுடன் திட்டமிடுவது போன்ற படங்களை வெளிவிட்டது வட கொரியா. அந்தப் படம் "Plan for the strategic forces to target mainland U.S." என்ற தலைப்புடன் காணப்பட்டது. அத்துடன் வட கொரியப்படைகள் நீரிலும் நிலத்திலும் பயணிக்கும் படகுகளான hovercrafts இல் ஒத்திகை செய்யும் படங்களும் வெளிவிடப்பட்டுள்ளன. இவற்றைத் தொடர்ந்து ஒரு போர் அச்சம் கொரியக் குடாநாட்டை ஆட்டிப் படைக்கிறது. இந்தப் பயத் தீயில் மேலும் எண்ணெய் ஊற்றுவது போல30-03-2013-ம் திகதி கொரிய மக்களை ஒரு செய் அல்லது செத்து மடி போருக்குத் தயாராகும் படி கிம் ஜொங் உன் அறைகூவல் விடுத்ததுடன் தென் கொரியாவுடன் ஒரு போர்ப்பிரகடன நிலை நிலவுவதாகவும் அறிவித்தார். 11-03-2013ம் திகதி 1953 ஆண்டு முடிவடைந்த கொரியப் போரின் பின்னர் தென் கொரியாவுடன் செய்து கொண்ட படைநடவடிக்கை நிறுத்த உடன்படிக்கை செல்லுபடியற்றது என்றும் வட கொரியா அறிவித்தது. தமது போர் தென் கொரியாவிற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதாக இல்லாமல் அமெரிக்காவிற்கு எதிரானதாக அமெரிக்க நிலத்திலேயே நடக்கும் போராக இருக்கும் என்றும் மிரட்டியது வட கொரியா.
பழக்கப்பட்ட தென் கொரியர்கள்
தென் கொரியா வட கொரியாவின் மிரட்டல்கள் எதுவும் தமக்கு புதிதல்ல என்றது. தென் கொரியாவில் உள்ள இரு நாடுகளும் இணைந்து செயற்படும் Kaesong Industrial complex இல் வழமை போல் அலுவல்கள் நடைபெறுவதாக தென் கொரியா சொல்கிறது. தென் கொரிய மக்கள் இது போன்ற பல மிரட்டல்களுக்கு கடந்த அறுபது ஆண்டுகளாக நன்கு பழக்கப்பட்டவர்கள் என்கின்றனர் படைத்துறை ஆய்வாளர்கள். ஆனால் வட கொரியா பொறுப்பற்ற ஆத்திர மூட்டும் நடவடிக்கைகளில் அமெரிக்காவும் தென் கொரியாவும் ஈடுபட்டால் தாம் முழுப்பலத்தையும் பாவித்து இரு நாடுகள் மீதும் மூர்க்கத்தனமாகத் தாக்குதல்களை நடாத்துவோம் என்கிறது. தனது ஏவுகணைகள் அமெரிக்காவிலும், தென் கொரியாவிலும், பசுபிக்கிலும் உள்ள அமெரிக்கப் படை நிலைகளை இலக்கு வைத்து தயார் நிலையில் இருக்கிறது என்றும் சொல்கிறது வட கொரியா.
கொரியாவிற்கு எதிரான ஐநா சபைத் தீர்மானங்கள்
Resolution 1718 (October 14, 2006)
The Security Council, acting under Chapter VII of the UN Charter, unanimously imposed sanctions on North Korea, in reaction of Pyongyang's nuclear test. After arduous negotiations, this softer version establishes an embargo on military and technological materials, as well as luxury goods, but does not include reference to military intervention as the US proposed initially. Furthermore, the resolution demands the freezing of North Korea's financial assets with the exception of funds necessary to meet basic needs.
Resolution 1695 (July 15, 2006)
In this resolution, the Security Council explicitly condemns the Democratic People's Republic of Korea (DPRK) nuclear weapons program. While calling for a diplomatic solution to the situation, the Council demands that the DPRK cuts back its missile launches, which jeopardize peace and security in the region. In addition, the 1695 resolution bans all member states from transactions with North Korean involving material, technology or financial resources transfer connected to DPRK's missiles or weapons of mass destruction programs.
Resolution 1540 (April 28, 2004)
Resolution 1540 affirms that proliferation of nuclear, chemical and biological weapons, as well as their means of delivery, constitutes a threat to international peace and security? The Security Council urges all States to take additional effective measures to prevent proliferation, including nuclear, chemical or biological weapons and their means of delivery.
Resolution 825 (May 11, 1993)
The Security Council adopted a resolution calling upon North Korea to reconsider withdrawing from the Treaty on Non-proliferation of Nuclear Weapons. The resolution urges North Korea to honor its non-proliferation obligations under the Treaty.
வடகொரியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையை சீனா சரிவரக் கடைப்பிடிக்காமல் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு உண்டு. வட கொரியாவும் சீனாவும் நெருங்கிய நட்பு நாடுகள் ஆனால் வட கொரியா அணுக்குண்டுகளை உருவாக்குவதைச் சீனா விரும்பவில்லை. அது தனது பிராந்தியத்தில் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் என சீனா கருதுகிறது. ஜப்பான் வட கொரியா தென் கொரியாவிற்கு எதிராகத் தாக்குதலை தான் கடுமையாக எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளது.
இணையவெளித்தாக்குதல்கள்
தென் கொரியாவின் ஒளிபரப்புத் துறையிலும் மார்ச் மாத நடுப்பகுதியில் வடகொரியா வெற்றீகரமான இணைய வெளித்தாக்குதல்களை மேற்கொண்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. தென் கொரியா வட கொரியா விவகாரத்தில் எப்போதும் பொறுமையையே கடைப்பிடித்து வருகிறது. வட-தென்கொரியப் போர் தனது பொருளாதார வளர்ச்சிக்கு உதவாது என்பதை அது உணர்ந்து செயற்படுகிறது. 26-03-2010-ம் திகதி Cheonan என்னும் தென் கொரியக் கடற்படைக் கப்பல் ஒன்று நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. விசாரணையின் பின்னர் அது வட கொரியாவின் செயல் என்று அறிந்தும் தென் கொரியா பதிலடி கொடுக்கவில்லை.
சொல் என்றும் செயல் என்றும்
அமெரிக்க படைத்துறையினர் வட கொரியத் தலைநகர் பியோங்யாங்கில் இருந்து தொடர்ச்சியாக வரும் மிரட்டல்களைத் தாம் கரிசனையுடன் கவனிப்பதாகவும் அந்த மிரட்டல்கள் ஆத்திரமூட்டுவதாகவும் மோதல்களை உருவாக்கும் தொனியில் அமைந்துள்ளவை என்றும் கூறுகின்றனர். அமெரிக்கா தனது வலிமை மிக்க படையணியைக் கொரியத் தீபகற்பகத்திற்கு நகர்த்துகிறது. பல அமெரிக்க கதுவி தவிர்ப்பு போர் விமானங்களான B-2 stealth bombers தென் கொரியாவில் நிலைகொண்டுள்ளன. வட கொரியா என்ன சொல்கிறது என்பதிலும் பார்க்க அது என்ன செய்கிறது என்பதிலேயே நாம் அதிக கவனம் செலுத்துகிறோம் என்கிறது அமெரிக்கா. கொரியத் தலைவர் தனது மக்களிடையும் படைத்துறையினரிடமும் தனது செல்வாக்கை உயர்த்த செய்யும் நடவடிக்கைகளாக தாம் கருதுவதாக அமெரிக்கா சொல்கிறது. வட கொரியா அதன் அதிபர் கிம் ஜொங் உன் படையினருடன் காணப்படும் பல படங்கள் பிரச்சார் நோக்கங்களுடன் போலியாக உருவாக்கப்பட்டவை என்கின்றனர் அமெரிக்கப் படைத்துறையினர். வேறு இடங்களில் எடுக்கப்பட்ட படங்களை தென் கொரிய எல்லையில் எடுத்த படங்களாகச் சித்தரிக்கப்பட்டனவாம்.
நிதானமாக அணுகும் அமெரிக்கா
ஒரு அணுக்குண்டை ஏவுகணையில் பொருத்தி செலுத்தும் திறன் வட கொரியாவிடம் இன்னும் இல்லை என்றும் அத் திறனைப் பெறுவதற்கு இன்னும் சிலகாலம் எடுக்கும் என்கின்றனர் அமெரிக்கப் படைத்துறை வல்லுனர்கள். வட கொரிய விவகாரத்தை மன அமைதியுடனும் நிதானத்துடனும் தாம் அணுகுவதாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறை சொல்கிறது. அமெரிக்கா தென் கொரியாவைப் பாதுகாக்க என்றும் தயாராக இருப்பதாகவும் உறுதிபடக் கூறியுள்ளது அமெரிக்கா.
சதிக் கோட்பாட்டாளர்கள் வேறுவிதமாகப் பார்க்கிறார்கள்.
ஈராக்கில் போர் தொடுப்பதற்காக அமெரிக்காதான் வேண்டுமென்றே 9/11 இரட்டைக் கோபுரத் தாக்குதலை உருவாக்கியது என்று சொல்லும் சதிக் கோட்பாட்டாளர்கள் வட கொரியாவைத் தாக்கி அதன் அணுக்குண்டு உற்பத்தித் திறனை அழிப்பதற்காக கொரியத் தீபகற்பகத்தில் ஒரு போர்ச்சூழலை உருவாக்குகிறார்கள் என்கிறார்கள்.
வட கொரியா தாக்குப்படும்
வட கொரியாவின் படைத்துறைத் தொழில்நுட்ப வளர்ச்சி அமெரிக்காவிற்கும் அதன் நெருங்கிய நட்பு நாடான தென் கொரியாவிற்கும் ஏற்புடையதல்ல. சீனாவைத் தனிமைப்படுத்துவதற்கு வட கொரியாமீதான தாக்குதலும் அங்கு ஏற்படுத்தும் ஆட்சியாளர் மாற்றமும் மிகவும் அவசியம். வட கொரியா தாக்குப்படுவது நடக்காது என்று சொல்ல முடியாது. இன்னும் ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவைத் தனது அணுக்குண்டுகளால் தாக்கும் திறனை வட கொரியா பெற்றுவிடும். அப்படி ஒரு நிலைமை ஏற்பட அமெரிக்கா அனுமதிக்காது. தென் கொரியாவை ஏவுகணைக் கவசம் (Missile Shield) தொழில்நுட்பத்தின் மூலம் முழுமையாகப் பாதுகாத்துவிட்டு வட கொரியாமீது தாக்குதல் தொடுக்கப்படலாம்.

- "We will first target and dissolve mainland United States, Hawaii and Guam, and United States military based in South Korea. And the (South Korean presidential office) will be burned to the ground," என்கிறது வட கொரியா.

Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...