உங்களுக்கு தெரியாதது எதாவது இருந்தால் கூகிளிற்குப் போங்கள்.
உங்களுக்கு தெரிந்தது ஏதாவது இருந்தால் Facebookஇல் status update செய்யுங்கள்.
திருமணம் என்பது ஒரு வித்தியாசமான உறவு முறை. அதில் ஒருவர் எப்போதும் அடங்காதவர். மற்றவர் கணவர்.
விட்டுக்கொடுக்கும் கணவன்: தனது திமிரிலும் பார்க்க தனது பாதுகாப்பில் அதிக அக்கறை உள்ளவன்.
உலகிலேயே சிறந்த கணவன்: பக்கத்து வீட்டுக்காரியின் கணவன்.
விட்டுக் கொடுப்பது தான் வாழ்க்கை. சேலைக் கடையில் அவளை அவள் பாட்டுக்கு விட வேண்டும். பின்னர் பில்லுக்கு பணம் கொடுக்க வேண்டும்.
நூலிற்கு முகம் கொடுத்து அறிவை வளர்ப்பது அந்தக் காலம்.
முகநூலிற்குள் போய் அறிவை கெடுப்பது இந்தக்காலம்.
குற்றவாளிகளை இந்திய அரசு ஏன் தண்டிக்கிறது?
தனக்கு போட்டியாக இருப்பவர்களை அது விரும்புவதில்லை.
உனது படுக்கை அறையை ஏன் கல்லூரி வகுப்பறை போல் அமைத்திருக்கிறாய்?
அப்படி மாற்றிய பின்புதான் இலகுவாக தூக்கம் வருகிறது.
Facebook is the second most popular word that starts with ‘F’ and ends with ‘K’
நீ தூங்கும் போது நீ உளறினால் அது parasomnia எனப்படும். நீ தூங்கும் போது இன்னொருவர் உள்றினால் அது விரிவுரை எனப்படும்.
மனிதனைத் தவிர மற்ற உயிரினங்கள் Facebookஇல் இருந்தால் status update எப்படி இருக்கும்:
பெட்டை நாய்: எனது ஆறாவது மகன் தன் தந்தை யார் என்று கேட்கிறான். என்ன சொல்வதென்று தெரியவில்லை.
கரப்பான் பூச்சி: நான் தான் வீட்டில் பெரியவன். எல்லாரையும் வீட்டில் மிரட்டும் வீட்டுக்காரனின் மனைவி என்னைக் கண்டதும் மிரள்கிறாள்.
நுளம்பு: ஒரு தெரியாத்தனமாக சிவப்பு விளக்குப் பகுதியில் போய் இரத்தம் குடித்துவிட்டேன் இப்போது நான் HIV +.
ஆடு: 21-12-2012 என்ன ஈத் பண்டிகையா?
யானை: அம்மாவிற்க்கு கிரக தோச நிவர்த்திக்கு கஜ பூசை செய்யச் சொன்ன சோதிடன் மட்டும் என் துதிக்கையில் அகப்பட்டான் என்றால்.....
Saturday, 15 December 2012
Thursday, 13 December 2012
மீண்டும் வந்து வழிகாட்டு எம் தேசக் குரலே
இருப்பது எங்கென்று தெரியவில்லை
போவது எங்கென்றும் புரியவில்லை
திசை கெட்டு நிற்கின்றோம்
வழிகாட்டியின்றித் தவிக்கின்றோம்
வழிகாட்டு எம் தேசக் குரலே
மீண்டும் வந்து வழிகாட்டு எம் தேசக் குரலே
கண்களில் கண்ணீரும் வற்றிவிட்டது
அழிவில்லா இடமென ஒன்றிங்கில்லை
துயரம்தவிர வேனொன்றிங்கில்லை
வந்து உன் நகைச்சுவை மொழியால்
எம் உள்ளங்களில் உரமூட்டிக்கொடு
தமிழன் வீரத்தை மீட்டுக்கொடு
புலம் நீங்கி நிலம் புகுந்து
களமாடிய வீரக் குரலே
நம்பிக்கை ஊட்டிவிடு
சிங்கக் கொடிக்குச் சிம்மவாஹினியைச்
சம்பந்தப்படுதுகின்றனர் சிலரிங்கே
இனக்கொலைப்படை எம்மண்ணில்
இருந்துவிட்டுப் போகட்டும் என்கின்றனர்
புது டில்லியையும் வாஷிங்டனையும்
திருப்திப்படுத்திச் சில்லறைகள் வாங்க
பிள்ளையில்லாவீட்டு கிழங்கள்
பெரிதாகத் துள்ளுகின்றன
வந்திங்கு வழிகாட்டு
மதியுயர் எம் சுடரே
வந்திங்கு வழிகாட்டு
செக்கிற்கும் சிவலிங்கத்திற்கும்
வித்தியாசம் தெரியாமல்
மருண்டு நிற்கின்றனர் - பலர்
பிரிந்து நிற்கின்றனர்
மதியுரைத்த எம் நேசக்குரலே
வந்திங்கு வழிகாட்டு
நல்ல நெறி புகட்டு
புலித்தோல்கள் போர்த்திங்கு
நரிகள் வந்து ஊளையிடுகின்றன
கழுதைகள் இங்கு கானம் பாடுகின்றன
காதுகள் அடைக்கின்றன
நல்லவரை இனம் காட்டு
தலைவனின் பாசக்குரலே
இருளது அகற்று அறிவெளியூட்டு

சிரிய அதிபர் அசாத்தின் இறுதி நகர்வுகள்
10/12/2012இலன்று சிரிய அரசின் வெளியுறவுத் துறைப் பேச்சாளர் ஜிகாத் மக்திஸ்சி பதவி விலகியது சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சியின் சரிவின் தொடக்கம் என்று கருதப்படுகிறது. அசாத்தின் படைகளின் இரு போர் விமானங்களை கிளர்ச்சிக்காரர்கள் சுட்டு வீழ்த்தியதும் சிரியக் கிளர்ச்சிக்காரர்களை ஐக்கிய அமெரிக்கா அங்கீகாரம் செய்தமையும் அசாத்தின் ஆட்சிக்குப் பேரிடிகளாகும்.
விமானப்படையும் ஏவுகணைகளும்
சிரிய உள்நாட்டுப் போரின் சமநிலை கிளர்ச்சிக்காரர்களிற்குச் சாதகமாக 2012 மே மாதத்தில் இருந்து மாறிவிட்டது எனப் பல படைத்துறை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதுவரை காலமும் அல் அசாத்தின் விமானப்படைகள் போர் முனையில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. ஆனால் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தக் கூடிய நிலையை கிளர்ச்சிக்காரர்கள் அடைந்துவிட்டனர். லிபியாவில் நேட்டோ சிரமப்பட்டு உருவாக்கிய விமானப் பறப்பற்ற பிரதேசம் ஒன்றை சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் தாமாகவே உருவாக்கிவிட்டார்கள். கிளர்ச்சிக்காரர்களிடம் எத்தனை சாம்(Surface to Air Missile) எனப்படும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இருக்கின்றன என்று சரியாகத் தெரியவில்லை.
சிலர் 40 ஏவுகணைகள் இருக்கலாம் எனக் கூறுகின்றனர். ஆனால் அல் அசாத்திடம் 300 விமானங்கள் இருக்கின்றன. அலெப்பே பிரதேசத்தின் சில பகுதிகளில் இருந்து பின்வாங்கிச் சென்ற அசாத்தின் படையினர் மீண்டும் தம் நிலைகளைப் பலப் படுத்திக் கொண்டு மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகின்றனர் என்று கூறப்படுகிறது.
முக்கியமடையும் ஜோர்தான்
சிரியப் போர் உக்கிரமடையும் நிலையில் ஜோர்தான் தந்திரோபாய ரீதியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் நெருங்கிய நண்பர்கள் ஆட்சியில் இருக்கும் ஜோர்தான் தன்னை சிரிய உள்நாட்டுப் போரில் ஒரு நடுநிலையாகக் காட்டிக் கொண்டு இருந்தது. ஆனால் ஐக்கிய அமெரிக்கா ஒரு சிறிய படைப் பிரிவை ஜோர்தானுக்கு அனுப்பி அல் அசாத்தின் இரசாயனப் படைக்கலன்கள் பாவிப்பதைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. ஜோர்தானில் நூறாயிரத்திற்கு மேலான சிரியர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். சிரியத் தலைநகர் டமஸ்க்கஸின் மீதான தாக்குதல்களுக்கான வழங்கல்கள் ஜோர்தானில் இருந்து இலகுவாக வழங்க முடியும். ஜோர்தானிய எல்லையில் இருந்து 100கிலோ மீற்றர் தொலைவில் டமஸ்க்கஸ் இருக்கிறது. தக்க தருணம் வரும் போது ஜோர்தான் கிளர்ச்சிக்காரர்களுக்குச் சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிளர்ச்சிக்காரர்கள் மத்தியில் புனிதப் போராளிகள்
சிரிய அரசுக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் மத்தியில் ஜபத் அல் நஸ்ரா எனப்படும் புனிதப்போராளிகளின் இயக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. இவர்களின் தற்கொலைத் தாக்குதல் பல வெற்றிகளை ஈட்டியுள்ளன. இவர்கள் மேற்குலகிற்கு எதிரானவர்கள். அல் கெய்தா இயக்கத்தினருடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படுபவர்கள். முன்னேற்பாடாக ஐக்கிய அமெரிக்கா ஜபத் அல் நஸ்ரா பயங்கரவாத அமைப்பு என பிரகடனம் செய்டு விட்டது.
Scud Vs Patriot
12/12/2012இலன்று அல் அசாத்தின் சிரியப்படைகள் தலைநகர் டமஸ்க்கஸில் இருந்து சிரியாவின் வடபிராந்தியத்தை நோக்கி Scud ஏவுகணைகளை வீசியதாக பெயர் குறிப்பிடாத அமெரிக்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இரசியத் தயாரிப்பான Scud ஏவுகணைகள் 1991-ம் ஆண்டு வளைகுடாப் போரின் போது ஈராக் அதிபர் சதாம் ஹுசேய்ன் பாவித்ததில் இருந்து பிரபலமாகின. சிரிய அதிபர் பஷார் அல அசாத் Scud ஏவுகணைகளைப் பாவிக்கலாம் என எதிர்பார்த்து அவற்றை விண்ணில் வைத்தே தாக்கி அழிக்கக் கூடிய Patriot ஏவுகணைகளை ஐக்கிய அமெரிக்கா துருக்கியில் ஏற்கனவே நிறுத்தி வைத்துள்ளது. சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் விமான எதிர்ப்புப்படைகலன்களை வைத்திருப்பதால் அவர்கள் மீது விமனத் தாக்குதல் நடாத்த முடியாத இடங்களில் அல் அசாத்தின் படையினர் Scud ஏவுகணைகளை வீசுவதைத் தவிர வேறு வழியில்லை.
அமெரிக்காவின் அங்கீகாரம்
12/12/2012 இரவு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா புதிதாக உருவாக்கிய சிரிய எதிர்ப்புச் சபையை அங்கீகரிப்பதாக அறிவித்தார்.
அசாத்தின் இறுதி நகர்வுகள்
சிரிய அதிபர் அசாத்தின் இறுதி நகர்வுகள் என மூன்று நடவடிக்கைகள் உள்ளன:
1. கடுமையான விமானத் தாக்குதல்கள்
2. கண்மூடித்தனமான Scud ஏவுகணைத் தாக்குதல்கள்
3. இரசாயனக் குண்டுத் தாக்குதல்கள்.
sarin gas எனப்படும் இரசாயன வாயுக்களைக் கொண்ட குண்டுகளை சிரிய அதிபர் அசாத் தயார்படுத்தி வருகிறார் என ஐக்கிய அமெரிக்கா அறிவித்தது. உடனே அதற்கு எதிரான தனது கடுமையான எச்சரிக்கையையும் வெளிவிட்டது. தமது எச்சரிக்கையைத் தொடர்ந்து அசாத் தனது இரசாயனக் குண்டுகளைத் தயார் செய்வதை நிறுத்தியுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலாளர் லியோன் பாணெற்றா தெரிவித்துள்ளார். 1997இல் உலகநாடுகள் பல செய்த இரசாயனக் குண்டுகள் பாவிப்பதற்கு எதிரான உடனபடிக்கையில் சிரியா கையொப்பமிடவில்லை. சிரியா இரசாயனக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்ளாமல் இருக்க மேற்கு நாடுகள் வழிகாட்டல்(cruise) ஏவுகணைகளை அல்லது விமானத் தாக்குதல்களை மேற்கொள்ளலாம். சிரிய அதிபர் அசாத்திற்கு இரசியா வழங்கும் ஆதரவு பெரும் வெற்றிகளைத் தரவில்லை. கிளர்ச்சிக்காரர்களின் முன்னேற்றத்தை தடுக்கும் நிலையில் இரசியா இல்லை. டமஸ்க்கஸைக் கைப்பற்றும் இறுதிப் போர் எந்நேரமும் ஆரம்பிக்கலாம். அது ஒரு கொடூரமான போராக இருக்கும்.

Scud missiles |

patriot missiles - click on it to enlarge |

Wednesday, 12 December 2012
மோசமாகும் எகிப்தும் மோசமான மோர்சியும்
அதிக இரத்தம் சிந்தாமல் ஒரு திடமான சக்தியாக எகிப்திய மக்கள் திரண்டு 18 நாட்கள் நடத்திய "புரட்சியின்" மூலம் பெப்ரவரி 11-ம்
திகதி ஹஸ்னி முபாரக்கைப் பதவியில் இருந்து விரட்டினர். ஆனால் புரட்சி
என்பது ஒரு ஆட்சியாளரை மாற்றுவதுடன் முற்றுப் பெறுவதல்ல என்பதற்கு எகிப்து
ஒரு நல்ல உதாரணமாக அமைகிறது. ஆட்சியாளருடன் ஆட்சி முறைமையும்
மாற்றப்படவேண்டும். புரட்சியை முன்னெடுத்தவர்கள் ஓரம் கட்டப்பட்டு இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் அரசியல் துறை எகிப்திய ஆட்சியைக் கைப்பற்றியது.
ஐக்கிய அமெரிக்காவின் உளவுத் துறை எகிப்தியப் படையினரை புரட்சியை எதிர்க்காமல் இருப்பதை உறுதி செய்தது. இதனால் எகிப்தியப் படைத்துறைக்கு புரட்சியாளர்களால் எந்த விதப் பாதிப்பும் ஏற்படவில்லை. எகிப்தியப் படைத்துறையின் உயர்பதவிகளில் இருப்போர் அமெரிக்காவில் பயிற்ச்சி பெற்றவர்கள்.
இசுலாமிய சகோதரத்துவ் அமைப்பும் மோர்சியும்.
இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட உறுப்பினர்களுடன் உலகிலேயே செல்வாக்கு மிகுந்த அமைப்பு. கடந்த 84 ஆண்டுகள் திரை மறைவு இயக்கமாக இருந்து வந்த இந்த அமைப்பில் பலர் மன்னர்களாலும் படைத்துறைத் தலைவர்களாலும் சிறைவாசம் அனுபவித்தனர். இது தற்போது எகிப்தில் உள்ள ஒழுங்கு படுத்தப்பட்ட மிகப்பெரிய அரசியல் அமைப்புமாகும். இது மக்களும் அரசும் இஸ்லாமிய மத வழிகாட்டலுக்கு இணங்க நடக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. புரட்சிக்குப் பின்னர் நடந்த தேர்தலில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் அரசியல் பிரிவு வெற்றி பெற்று மொகமட் மோர்சி ஆட்சிக்கு வந்தார். மற்றக் கட்சிகள் ஒரு ஒழுங்கான கட்டமைபுடன் இருக்காதமையால் மோர்சி இலகுவாக ஆட்சிக்கு வரக்கூடியதாக இருந்தது. மோர்சியின் கட்சி இசுலாமியவாதக் கட்சியாக இருந்தமையும் இலகுவான் வெற்றிக்கு வழிவகுத்தது. ஆனால் ஹஸ்னி முபாராக்கிற்கு எதிராகப் புரட்சி செய்த இளைஞர்கள் எகிப்தில் ஒரு மத சார்பற்ற ஆட்சியையும் எகிப்தை முற்போக்குப் பாதையில் புதுமைப்படுத்த விரும்பியிருந்தனர்.
மோர்சியின் பிரகடனம்
மொகமட் மோர்சி தனக்கு சாதகமான ஒரு அரசமைப்பைப் பிரகடனம் செய்ய பல எதிர்க்கட்சிகள் கிளர்ந்து எழுந்து ஆர்ப்பாட்டம் செய்தன. மோர்சியின் பிரகடனம் அவரை ஒரு சர்வாதிகாரியாக்கும் என்று எதிர்க்கட்சிகள் கண்டித்தன. அவரது பிரகடங்களின்படி மோர்சியை சட்டத்துக் அப்பால் பட்டவராக்கி அவர் எந்த ஒரு நீதி மன்றிலும் தண்டிக்கப்பட முடியாதவராக ஆக்க முயன்றது. நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் கிளம்பிய எதிர்ப்பைத் தொடர்ந்து மோர்சி டிசம்பர் 7-ம் திகதி தனது பிரகடனத்தைக் கைவிடுவதாக அறிவித்தார். ஆனால் இசுலாமிய அடிப்படைவாதிகளைக் கொண்ட அரசமைப்பு யாப்பு எழுதும் குழுவை மோர்சி புதிய அரசமைப்பு யாப்பு வரைவை எழுதப் பண்ணினார். அச்சபை முன் வைத்த புதிய வரைபு தொடர்பான மக்களின் கருத்துக் கணிப்பு அவசரம் அவசரமாக டிசெம்பர் 15-ம் திகதி நடத்தப் படும் என்று மோர்சி அறிவித்தார்.
நீதியாளர்கள் எதிர்ப்பு
மொஹமட் மோர்சியின் புதிய பிரகடனம் தொடர்பான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை தாம் எதிர்ப்பதாக எகிப்திய நிதித்துறையினரின் அமைப்பு தெரிவித்தது. எகிப்தியச் சட்டப்படி கருதுக்கணிப்பு வாக்கெடுப்பு உட்பட எல்லா தேர்தல்களும் நீதித் துறையால் மேற்பார்வை செய்யப்படவேண்டும். இது மொகமட் மோர்சிக்கு நெருக்கடியைக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து புதிய அரசமைப்பு யாப்பு உருவாகும் வரை படைத்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கண்டபடி கைது செய்யும் அதிகாரம் வழங்கினார் மொஹமட் மோர்சி. இதைத் தொடர்ந்து மோர்சிக்கு ஆதரவான இசுலாமிய அடிப்படை வாதிகளும் மதசார்பை விரும்ப்பாதவர்களுக்கும் இடையில் மோதல்கள் வெடித்தது.
பல முனைகளில் மோர்சிக்கு எதிர்ப்பு
ஒரு புறம் இசுலாமியத் தீவிரவாதிகள், ஒரு புறம் மிதமான மதவாதக் கொள்கையுடைய இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு, இன்னொரு புறம் மதசார்பற்ற முற்போக்காளர்கள், இன்னொரு புறம் எகிப்தியப் படைத்துறையினர், இன்னொரு புறம் ஐக்கிய அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகள் இப்படிப் பல தரப்பட்டவர்கள் மத்தியில் சிக்கித் தவிக்கிறார் மோர்சி.
மோசமாகும் எகிப்தியப் பொருளாதாரம்
சுற்றுலாத் துறையில் பெரிதும் தங்கியிருந்த எகிப்தியப் பொருளாதாரம் எகிப்தியப் புரட்சியின் பின்னர் பெரும் வீழ்ச்சியைக் கண்டது. பொருளாதார நெருக்கடியைத் தவிர்க்க எகிப்தி பன்னாட்டு நாணய நிதியத்திடம் கடன் பெற முயன்றது. பன்னாட்டு நாணய நிதியம் எகிப்திற்கு 4.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக வழங்க முன் வந்தது. உள்ளூர் அரசியல் நெருக்கடியால் மொஹமட் மோர்சியின் அரசு இந்தக் கடன் பெறுவதை ஒத்தி வைத்தது. இதனால் எகிப்தில் பெரும் நிதி நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோர்சி வஞ்சக எண்ணத்துடன் செயற்படுகிறாரா?

Tuesday, 11 December 2012
சீன விமானப்படையின் வலிமை
சீனா தனது மக்கள் தொகைப் பெருக்கம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றிக்கு ஏற்ப தனது ஆதிக்க நிலப்பரப்பை அகலமாக்க நினைப்பது இயற்கையானதே. ஆதிக்க நிலப்பரப்பை அகலமாக்குவதற்கு சீனா மூன்று முனைகளில் முயல்கிறது, தென் சீனக் கடல், கிழக்குச் சீனக் கடல், இந்தியாவுடனான எல்லையில் இருக்கும் அருணாச்சலப் பிரதேசம். சீனாவின் சர்ச்சைக்குரிய இந்த நோக்கத்திற்கு அதன் படை வலிமை முக்கியம். தரைப்படையைப் பொறுத்தவரை சீனா எண்ணிக்கை அளவில் உலகிலேயே அதிக அளவான படையினரைக் கொண்டுள்ளது. சீனா தனது கடற்படையையும் விமானப் படையையும் விரிவு படுத்துவதிலும் புதிய தொழில்நுட்ப மயப் படுத்துவதிலுக் அதிக கவனம் செலுத்துகிறது.
பெரும் விமானப்படை ஒத்திகை
சீன மக்கள் விடுதலைப் படையின் விமானப் படை - China’s People’s Liberation Army Air Force (PLAAF) அண்மைக்காலங்களாக பல முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை சீனா நவம்பர் மாத இறுதியில் நடாத்திய விமானப்படை ஒத்திகை எடுத்துக் காட்டியுள்ளது. பதின்நான்கு பல்வேறுபட்ட விமானப் படையணிகளில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட விமானிகள் சீன விமானப்படையின் போர் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தனர். சீன விமானப்படை வரலாற்றில் இது ஒரு பெரிய ஒத்திகையாகும். இது பதினொரு நாட்கள் நீடித்தது.
30-11-2012இல் சீனா அரங்கேற்றிய விமானப்படை ஒத்திகை பல படைத்துறை ஆய்வாளர்கள் சீன விமானப்படையின் வல்லமையை குறைத்து மதிப்பிட்டிருந்தனர் என்று நிரூபித்துள்ளது. தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலிலும் தனது அயல் நாடுகளுடன் சீன கடுமையாக முரண்பட்டிருக்கும் வேளையில் சீனா செய்த விமானப் படை ஒத்திகை முக்கியத்துவம் பெறுகிறது.
J - 10 |
சீனாவின் J-10 விமானங்கள்
J-10 விமானங்கள் வாலில்லாத delta-அசையா இறக்கை-காற்றசைவுத் தொழில் நுட்பத்தின் படி இயங்குபவை. கிடையான அசைவுக்கட்டுப்பாட்டுடையவை. இதன் அசை அதன் மூக்கின் அசைவைக் கொண்டு கட்டுப்படுத்தப்படுகிறது.
The J-10 adopts a “tailless delta-canard” aerodynamic layout, which was originally developed for the cancelled J-9 fighter. The aircraft has the horizontal control surfaces moved forward to become a canard in front of the wing. When the aircraft pitches up, instead of forcing the tail down decreasing overall lift, the canard lifts the nose, increasing the overall lift. Because the canard is picking up the fresh air stream instead of the wake behind the main wing, the aircraft can achieve better control authority with a smaller-size control surface, thus resulting in less drag and less weight.
J-10 இன் விமானி உயர்த்தப்பட்ட இருக்கையில் இருந்து விமானத்தைச் செலுத்துவதால் விமானியால் எல்லாத்திசைகளிலும் பார்க்க முடியும். J-10 விமானங்களில் ஒருவர் மட்டும் இருக்கக் கூடியவை இருவர் இருக்கக் கூடியவை என இரு வகை உண்டு. இரட்டைக் குழல்கள் கொண்ட J-10 விமானங்கள் 50.5kg 23mm குண்டுகளை வீசக் கூடியவை. ஒரு நிமிடத்திற்கு 3000முதல் 3400 குண்டுகளை சுடமுடியும். விமானத்தில் பதினொரு இடங்களில் குண்டுகள் வைக்கப்பட்டிருக்கும். J-10 விமானங்கள் குறுகிய தூரத்திற்கும் மத்திய தூரத்திற்கும் ஏவுகணைகளை விண்ணில் இருந்து விண்ணிற்கு ஏவும் திறனுடையவை. எல்லாவகையான கால நிலைகளிலும் செயற்படும் திறன் J-10 விமானங்களிற்கு உண்டு. J-10 உள்ளூரில் தயாரிக்கபப்ட்ட WP-15 turbojet engine ஆல் இயங்குகின்றன.
J - 11 |
சீனாவின் J-11 விமானங்கள்
J-11 விமானங்கள் இரசியாவிடமிருந்து வாங்கிய Sukhoi Su-27விமானங்களைப் பிரதி செய்து உருவாக்கப்பட்டவை. பனிப்போர் முடிவடைந்த பின்னர் இரசியாவிடமிருந்தும் உக்ரேயினிடமிருந்தும் பல படைக்கலன்களையும் தொழில்நுட்பங்களையும் சீனா வாங்கியது. பின்னர் J11ஐ மேம்படுத்தி J-11Bரக விமாங்களை சீனா உருவாக்கியது. இதில் உள்ள முக்கிய அம்சங்கள்:
An indigenous multifunctional pulse-Doppler fire-control radar reportedly capable of tracking 6~8 targets and engaging 4 of them simultaneously;
An indigenous digital flight-control system;
A Chinese copy of the Russian OEPS-27 electro-optic search and tracking system;
A strapdown INS/GPS navigation system;
A ‘glass’ cockpit featuring four colour multifunctional displays (MFD) and a wide-angle holographic head-up display (HUD);
இரசியாவிடமிருந்து Su-35 விமானங்களை வாங்குகிறது
சீனா இரசியாவிடமிருந்து Su-35 விமானங்களை 1.5பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குகிறது. The Su-35 is a radically modernized version of the Su-27 aircraft to significantly enhance its combat effectiveness against aerial, ground and sea tagets. For better agility and takeoff/landing performance, the aircraft is provided with a canard. In terms of its aerodynamic configuration, the Su-35 is an unstable triplane (wing + horizontal tail + canard). The Su-35 chassis has been reinforced because of the increased takeoff and landing weight of the aircraft. The required stability and controllability characteristics are assured through a quadruple-redundant digual-a.nalog remote control system. The Su-35 is equipped with a newly developed wing featuring an increased relative thickness. The main Handing gear struts are modified and the nose leg is replaced with ai reinforced two-wheel strut. The aircraft is equipped with an inflightt refueling system.
சீனாவின் J-20 stealth fighter
ராடார்களுக்கு தென்படாத stealth fighter விமானங்கள் உலகில் மூன்று நாடுகளில் மட்டுமே இருக்கின்றன. சீனாவு அந்த மூன்று நாடுகளில் ஒன்றாக 2010இல் இணைந்து கொண்டது. ஆப்கானிஸ்த்தானில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஒரு அமெரிக்க stealth fighter விமானத்தை சீனா விலைக்கு வாங்கி stealth தொழில்நுட்பத்தைப் பெற்றுக் கொண்டது.
எண்ணிக்கையைக் குறைத்து தரத்தைக் கூட்டிய சீனா
சீனா கடந்த சில ஆண்டுகளில் தனது போர் விமானங்களில் எண்ணிக்கையை 3400இல் இருந்து 2600ஆகக் குறைத்துக் கொண்டது. பல முன்னணி நாடுகளும் தமது சிக்கன நடவடிக்கையாக தமது விமானங்களின் எண்ணிக்கையைக் குறைத்து தரத்திலும் தொழில் நுட்பத்திலும் மேம்பட்ட விமானங்களில் அதிக கவனம் செலுத்தின.
சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல்
முன்னாள் சோவியத் யூனியனின் வரியாக் என்னும் விமானம் தாங்கிக் கப்பலை சீனா உக்ரேயினடம் இருந்து வாங்கி திருத்த வேலைகள் செய்து புதுப்பித்து ஷி லாங் எனப் பெயரிட்டுள்ளது. ஜப்பானும் இந்தியாவும் மூன்று விமானம் தாங்கிக் கப்பல்களைக் கொண்டுள்ளன. அவற்றிற்கு ஈடு கொடுக்கும் வகையில் சீனாவும் தனது விமானம் தாங்கிக் கப்பல்களை நான்காக அதிகரிக்கவுள்ளது.
போர் முனை அனுபவம் என்று பார்க்கும் போது சீன விமானப் படை கடந்த ஐம்பது ஆண்டுகளாக எந்த ஒரு போரிலும் ஈடுபட்ட அனுபவம் சீன விமானப்படைக்கு இல்லை.
Sunday, 9 December 2012
அல் கெய்தா தளபதியைக் கொன்ற அமெரிக்க ஆளில்லா விமானம்.
ஆப்கானிஸ்த்தான் எல்லையில் உள்ள பாக்கிஸ்தானிய அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத பிரதேசத்தில் ஐக்கிய் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் நடாத்திய தாக்குதலில் அல் கெய்தாவின் தளபதிகளில் ஒருவரான அபு ஜெய்த் அல் குவைத்தி 06/12/2012 வியாழக்கிழமை கொல்லப்பட்டுள்ளார்.
46 வயது மத குருவான அல் கெய்தாவின் தளபதிகளில் ஒருவரான அபு ஜெய்த் அல் குவைத்தி ஷேக் காலித் அப்துல் ரஹ்மான் அல் ஹுசேயின் என்னும் பெயராலும் அழைக்கப்படுபவர். இவருடன் இவரது மனைவியும் கொல்லப்பட்டதாக அறியப்படுகிறது. அல் குவைத்தி தற்போதுள்ள அல் கெய்தாவின் இரண்டாம் நிலைத் தலைவர் என அறியப்படுகிறது. இவர் வீரச்சாவு அடைந்தார் என அல் கெய்தாவும் உறுதி செய்துள்ளது. வட வாரிஸ்த்தானில் உள்ள மிர் அலி நகரில் உள்ள இவரது வீட்டை அமெரிக்க ஆளில்லா விமானத்தில் இருந்து வீசப்பட்ட குண்டுகள் தரை மட்டமாக்கியபோது அல் குவைத்தியும் அவரது மனைவியும் கொல்லப்பட்டனர். அவரது மகள் காய மடைந்துள்ளார்.
அல் குவைத்தை வெற்றிகரமாக கொலை செய்ததன் மூலம் அமெரிக்கா தனது தொழில்நுட்ப மேன்மையையும் உளவுத் திறமையையும் நிரூபித்துள்ளது என்று கருதப்படுகிறது. ஒசாமா பின் லாடனின் படு கொலையின் பின்னர் பல அல் கெய்தாப் போராளித் தலைவர்களை ஆப்-பாக் எல்லையிலும் சூடானிலும் அமெரிக்கா கொன்றுள்ளது.
குவைத்தில் பிறந்த மத குரு அல் குவைத்தி சிறந்த பேச்சாளராவார். ரம்ழான் பாடங்கள் என்னும் அவரது உரையடங்கிய காணொளிப்பதிவு அல் கெய்தா போராளிகள் மத்தியில் பிரபலமானது. குவைத் அரசின் மதத் துறையில் பணிபுரிந்த அல் குவைத்தி தன்னை ஒரு புனிதப் போராளியாக அல் கெய்தாவில் இணைத்துக் கொண்டார்.
2012-ம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் அபு யாஹியா அல் லிபி (Abu Yahya al-Libi) கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அல் குவைத்தி இரண்டாம் நிலத் தலைவர் பதவியை ஏற்றிருந்தார்.
அண்மைக் காலங்களாக அமெரிக்கா தனது தீவிரவாதிகளுக்கான போரில் ஆளில்லா விமனங்களைப் பாவித்து வருகிறது. ஆரம்பத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் வேவு நடவடிக்கைகளிலும் பாவிக்கப்பட்ட வேவு விமானங்கள் இப்போது மேலும் நவீன மயப்படுத்தப்பட்டு தாக்குதல்களுக்கும் பயன்படுத்தப் படுகின்றன. ஆப்க்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானின் வட பகுதியிலும் 2006-ம் ஆண்டிலிருந்து அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளைக் கொன்றுள்ளன. பாக்கிஸ்த்தானில் அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்களால் பல அப்பாவி மக்களும் கொல்லப்பட்டுள்ளனர். பாக்கிஸ்த்தான் அமெரிக்காவிடம் பலதடவை திரை மறைவில் இந்த ஆளில்லாப் போர் விமானங்களின் பாவனையை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது. பாக்கிஸ்தானிடமும் பல ஆளில்லாப் போர் விமானங்கள் இருக்கின்றன. இப்போதுள்ள அதன் இரு ஆளில்லாப் போர் விமானங்கள் அணிகளை பாக்கிஸ்த்தான் ஆறு அணிகளாக உயர்த்த எண்ணியுள்ளது என்று முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அமெரிக்காவின் உளவுத் துறையான சிஐஏ பல நாடுகளில் ஆளில்லா விமானத் தளங்களை அமைத்து பல சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இச் செயற்பாடுகள் அமெரிக்க சட்ட வரம்பிற்கு உட்படாதது. அதனால் இவை பல மனித உரிமை மீறல்களைப் புரிகிறது. அல் கெய்தா இயகக்த்திற்கு அமெரிக்க ஆளில்லா விமானங்கள் பலத்த இழப்புக்களை

திருமாவளவன் எந்த உலகத்தில் இருக்கிறார்?
"ஈழத்தில் மீண்டும் சிங்கள இனவெறி ஆட்டம்! இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!" இப்படிவிடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தோழர் திருமாவளவன் திருவாய் மலர்ந்து அருளியுள்ளார். அது மட்டுமல்ல தோழர் அவர்கள் அண்மையில் பிரித்தானியாவிற்கு சென்ற போது "ஈழத் தமிழர்களுக்கு இந்தியா பல கொடுமைகளைச் செய்துள்ளது. ஆனால் இந்தியாவை ஈழத் தமிழர்கள் வெறுக்கக் கூடாது." என்றும் போதித்துள்ளார்.
இந்தியா ஈழத் தமிழர்களுக்கு அள்ளி வைப்பதும் கொள்ளி வைப்பதும் இன்று நேற்று நடப்பதல்ல. நீண்ட காலமாகத் தொடர்கிறது. இதுபற்றிய விபரத்தைக்காண இந்த இணைப்பில் சொடுக்கவும்: என்று முடியும் இந்த இந்தியத் துரோகம்?
இந்திய மைய அரசின்மீது தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கே வெறுப்பு அதிகரித்துக் கொண்டு போகும் வேளையில், இந்திய மைய அரசு பல முனைகளில் தனது தமிழின விரோத செயற்பாடுகளை அரங்கேற்றும் வேளையில் தோழர் திருமாவளவன் ஈழத் தமிழர்கள் இந்தியாவை வெறுக்கக் கூடாது என்கிறார். இந்தியா தமிழர்களுக்குச் சாதகமாக ஏதாவது ஒன்றைச் செய்தால் அதை வைத்து நாம் இந்தியாவை வெறுப்பதை நிறுத்தலாம்.
இந்தியாவின் இராசதந்திர விபச்சாரம்
2012இல் மார்ச்சில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழக் கூட்டத்தில் ஐக்கிய அமெரிக்காவின் பலத்த வற்புறுத்தல்களின் பின்னர் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்து. அதும் சும்மா ஆதரிக்கவில்லை. தீர்மானத்தின் கடுமைப் போக்கை குறைத்த பின்னரே ஆதரித்தது. 2012 நவம்பர் முதலாம் திகதி மனித உரிமைக் கழகத்தில் நடந்த இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான இலங்கை பற்றிய மீளாய்வுக் கூட்டத்தில் இந்தியா உரையாற்றும் போது அரசியலமைப்பிற்கான 13வது திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டும், வடக்கு மாகாணத்திற்கான தேர்தல் நடாத்தப்படவேண்டும், வடக்குக் கிழக்கில் படைகளை அகற்றுதல், உயர்பாதுகாப்பு வலயங்களைக் குறைத்தல், காணிப்பிரச்சனை தீர்த்தல், மனித உரிமை மீறல்கள் தொடர்பான நம்பகரமான விசாரணை, மீளிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுதல் போன்ற பரிந்துரைகளைச் செய்ததார். நவம்பர் 5-ம் திகதி சமர்ப்பித்த இறுதி அறிக்கையில் தனது பரிந்துரைகளை நீக்கிவிட்டது. இது ஜெனிவா மனித உரிமைக் கழகத்தில் இருந்தவர்களை உலுக்கிவிட்டது. அங்கிருந்த பலரும் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் ஏதோ ஒரு இரகசிய உடன்பாடு ஏற்பட்டிருக்க வேண்டும் என்றே நம்புகின்றனர். கொழும்பில் உள்ள சிங்கள ஆய்வாளர்களையும் இது ஆச்சரியப்படுத்தியது. அமெரிக்கா சுவிஸ்லாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் சில நாடுகள் முன்னுக்குப் பின்னர் முரணாக நடந்து கொள்கின்றன என்று இந்தியாவை மறைமுகமாகச் சாடினர்.
ஆட்சி மாறினாலும் கொள்கை மாறாது.
இப்படி இருக்கும் போது தோழர் திருமாவளவன் எம்மை இந்தியாவை விரும்பச் சொல்கிறார். முன்பு சிலர் காங்கிரசு ஆட்சி போனபின்னர் இந்தியா ஈழத் தமிழர்களுக்குச் சாதமாக நடக்கும் என்றனர். ஆனால் சுஸ்மா சுவராஜும் மஹிந்த ராஜபக்சவும் இரகசியப் பேச்சு வார்த்தை நடாத்தியமையும் மஹிந்த இந்தியாவிற்கு அழைக்கப்பட்டு பௌத்த மநாட்டை தொடக்கி வைக்க பாரதிய ஜனதா கட்சி ஏற்பாடு செய்தமையும் அந்த நம்பிக்கையைத் தகர்த்து விட்டது. இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் அதன் வெள்யுறவுக் கொள்கை பாதுகாப்புக் கொள்கை போன்றவற்றிம் மாற்றம் ஏற்படாது என்பதை தோழர் திருமாவளவன் உடபடப் பலர் புரிந்து கொள்ள வேண்டும்.
நவம்பர் 27-ம் திகதி மாவிரர் நாளை ஒட்டி இலங்கையில் நடந்தவை பற்றி தோழர் திருமாவளவன் இப்படிக் கூறுகிறார்:
தோழர் திருமாவளவன் பற்றிய முன்னைய பதிவு: திருமாவளவனும் திசை மாறிவிட்டாரா?

- ராஜபக்சவின் போர்க் குற்றங்கள் ஒவ்வொரு நாளும் அம்பலப்பட்டுவரும் நிலையில், சர்வதேச நாடுகளின் அழுத்தம் அதிகரித்துவரும் சூழலில் மீண்டும் இனவெறி நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டிருப்பது எதற்கும் கட்டுப்படாத அதன் போக்கையே காட்டுகிறது.ஏற்கனவே போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லையென ஐ.நா. உள் அறிக்கை ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில் மேலும் மேலும் தமிழர்கள் வேட்டையாடப்படுவதை வேடிக்கை பார்க்கக் கூடாது.எனவே, இந்திய அரசு உடனடியாக இலங்கை அரசை எச்சரிக்க வேண்டுமெனவும், பொய்க்குற்றச்சாட்டுகளின்பேரில் கைது செய்யப்படிருக்கும் மாணவர்களையும் தமிழ் மக்களையும் விடுவிக்க வலியுறுத்த வேண்டும் என்றும் இந்தியப் பேரரசை விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.
தோழர் திருமாவளவன் பற்றிய முன்னைய பதிவு: திருமாவளவனும் திசை மாறிவிட்டாரா?
Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...